Tuesday, August 16, 2011

சகாக்கள் - சினிமா விமர்சனம்


http://www.ariviththal.net/events/uploads/4816.jpg

சூர்யா காதலே நிம்மதின்னு ஒரு படம் பண்ணுனார். ஹீரோ ஹீரோயின் 2 பேரும் காதலிக்கவே மாட்டாங்க, ஆனால் மத்தவங்க எல்லாம் அவங்க 2 பேரும் காதலிக்கறதா நினைச்சுக்குவாங்க,வெறுத்துப்போய் 2 பேரும்  நிஜமாவே காதலிக்க ஆரம்பிச்சுடுவாங்க.. அதே கதையை கொஞ்சம் தூசு தட்டி இயக்குநர் ஒரு படம் பண்ணி இருக்கார்.அந்தப்படமே ஓடலை! இது மட்டும் ஓடவா போகுது?

ஹீரோ ஹீரோயினை பஸ் ஸ்டாப்ல பார்க்கறார், உடனே லவ்வாகுது, ஆனா ஹீரோயின் அவரை கண்டுக்கவே இல்லை. ஃபிரண்ட்ஸ் கிட்டே எல்லாம் லவ்வற மாதிரி இவரே வாலி அஜித் சிம்ரன் கிட்டே சோனா கதையை எடுத்து விடுவது மாதிரி இவரும் கற்பனையா சம்பவங்களைஅள்ளி விடறாரு, இந்த மேட்டர் ஹீரோயினுக்கு தெரிய வரும்போது. இடைவேளை

http://www.thedipaar.com/pictures/resize_20110615040616.jpg

அப்பத்தான் டைரக்டருக்கு நாம சகாக்கள்னு டைட்டில் வெச்சது நினைவு வருது, உடனே ஹீரோ ஹீரோயின் காதலுக்கு எப்படி உதவறாங்க, காதலர்கள் சேர்ந்தாங்களா? சோர்ந்தாங்களா? என்பதை தில் உள்ளவங்க டி வி ல பார்த்து தெரிஞ்சுக்கோங்க.....

ஹீரோ புதுமுகம் மீசை தாடி வெச்ச அப்பாஸ் கணக்கா  இருக்கார்.. தேறுவது ரொம்ப கஷ்டம்.  ஹீரோயின் அத்வைதா (அழகர்சாமியின் குதிரை)லட்சணமா, குடும்பப்பாங்கா இருக்கார். சான்ஸ் இருக்கு..




http://www.cinemaexpress.com/Images/article/2011/3/1/sagakkal.jpg

பாஸ்கர் சக்தியின்  பேனாவில் மனதில் பதிந்த வசனங்கள்

1.  சார்.. வாங்க , என்ன சாப்பிடறீங்க?

வெண்ணிற ஆடை முர்த்தி - அதை விடுங்க, நான் எதை கொடுத்தாலும் சாப்பிடுவேன். 


2.  வெண்ணிற ஆடை முர்த்தி - நானும் அந்தக்காலத்துல பல புதுமுகங்களை அறிமுகப்படுத்தி இருக்கேன்.பாதாளப்பேட்டை பைரவில இருந்து,கன்னிச்சுரங்கம் காஞ்சனா வரை பல பேரை புதுசா ..

 3. கண்டக்டர் சார். ஆலமரம் 1.

ஆலமரம் நிக்காது.. 

ஆலமரம் அங்கேயே தான் நிக்கும் பஸ் தான் அங்கே நிக்கனும்.. 

ஏம்மா, உன் கூட ரோதனையா போச்சு.. 

யூ ஆர் எ பப்ளிக் சர்வெண்ட் யூ நோ?

ஆமாம்மா, உன் பாவாடை , தாவணியை கழட்டிக்குடு, துவைச்சு பப்ளிக் சர்வீஸ் பண்றேன்.. 

4.  பொண்ணு நிறைய யோசிக்குதே..?

ஏன் இந்த இத்துப்போனவனை செலக்ட் பண்ணுனோம்னா?

5. ஆணின் காதல் இன்ஸ்டண்ட் காஃபி மாதிரி,டேஸ்ட் சீக்கிரம் போயிடும்,பெண்ணின் காதல் மலைத்தேன் மாதிரி 50 வருஷம் ஆனாலும் கெடாம இருக்கும்





http://www.kodambakkamtoday.com/wp-content/uploads/2010/08/saghakkal-9-300x199.jpg
6. வெண்ணிற ஆடை முர்த்தி - இந்தப்பொண்ணுக்கு மட்டும் அழகு ஏன் இப்படி பீறிட்டிக்கிட்டு வருது?!!!!!!!!

7. உங்க ஊர்ல சாப்பாடு எப்படி இருக்கும்..?

ஓ. பிரமாதமா.....


அது உங்க முகத்தைப்பார்த்தாலே தெரியுதுங்க. 

8.  நம்ம ஊர்ல மேரேஜ்க்குப்பிறகு தன் மனைவியை லவ் பண்ணும் ஆளே கிடையாதுங்க. 

9. ஏண்டா என்னை காட்டிக்குடுத்தே?

 தனியா அடி வாங்க பயமா இருந்துச்சு

10. காதலிக்கற மனசு காதலை மட்டும் தான் யோசிக்கும் , மத்த எதைப்பற்றியும்  அதுக்கு கவலை இல்லை.. 

11.  டேய், நீ கேட்கறப்ப எல்லாம் 50,   100ன்னு குடுத்துட்டுத்தானே இருந்தேன், ஏண்டா கட்சி மாறுனே?

இயக்குநர் பல காட்சிகளில் நாடோடிகள், காதல், சுப்ரமணிய புரம் என கலந்து கட்டி அடிக்கிறார்.யுகபாரதியின் பாடல்களில் நீ எனை நினைக்கையிலே புரை ஏறுது, நான் உன்னை நினைக்கையிலே மனம் தடுமாறுது அழகு கவிதை வரிகள்



http://img1.dinamalar.com/cini/CinevilaGallery/17221789149.jpg

இயக்குநரிடம் பொதுவா விமர்சனம் எழுதும்போது ஏன் இந்த காட்சிகள்னு 5 கேள்விகள் கேட்பது பழக்கம். இந்தப்படத்துல அதுக்குப்பதிலா ஏன் இந்த மாதிரி படம்?ன்னு கேட்கலாம்..


 லாஜிக் மீறல்கள்


1. ஹீரோ தனது காதலியை எங்கே முதல் முறை மீட் பண்ணேன் என ஒரு கற்பனை கதை  சொல்வார், அதில் ஹீரோயின் ஆண் டாய்லெட்டில் தெரியாமல் போவது போலவும், இவர் வெளியே காவலுக்கு நிற்பது போலவும் ஒரு சீன் வருது, மகா மட்டம்.. எந்த ஊரில் ஹை க்ளாஸ் ஃபிகர்  இலவச பப்ளிக் டாய்லெட் போகுது? அப்டியே போனாலும் ஆண், பெண் வித்தியாசம் தெரியாம போயிடுமா?


2. ஹீரோ  காதலை சொல்லும்போது ஹீரோயின் வேண்டா வெறுப்பாய் யோசிப்பவர், பின் ஓக்கே சொல்லி அடுத்த செகண்டே ஆரத்தழுவுவது எப்படி?

3. ஹீரோவுக்கு தேவை இல்லாமல் எப்போதும் 2 ஃபிரண்ட்ஸ் கூடவே இருக்காங்களே? எதுக்கு ? ( நல்ல வேளை டூயட் பாடறப்ப நைஸா கழட்டி விட்டுடறாங்க )

4. ஹீரோவுக்கு 20 வயசு போலவும் , ஹீரோயினுக்கு 28 வயசு போலவும்  முகங்கள் சொல்லுது.. ஹீரோ செலக்‌ஷன் ல கோட்டை விட்டுட்டீங்களா?

5. ஹீரோயின் தன் தோழியை ஹாஸ்பிடலில் சேர்த்து நைட் வீட்டுக்கு வர லேட் ஆகும் என அப்பாவுக்கு ஏன் ஃபோன் பண்ணி சொல்லலை?




http://tamildigitalcinema.com/wp-content/uploads/2010/08/sagakkal.jpg

 இந்தப்படம் எல்லா செண்ட்டர்களிலும் 7 நாட்கள் தான் ஓடும்..

எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 34

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க்கிங்க்  - ம்ஹூம்

சி .பி கமெண்ட் - அய்யய்யோ...

ஈரோடு மாணிக்கம் தியேட்டர்ல இந்த குப்பைப்படத்தை பார்த்தேன்

http://3.bp.blogspot.com/-xrmh_YClcuM/TfTs_JedZTI/AAAAAAAAFec/SBtZOs9n7FM/s1600/26.jpgடிஸ்கி - அத்வைதாவிடம் பர்சனலா ஒரு கேள்வி, லிப்ஸ்டிக் போடாமயே உங்க உதடு நல்லாத்தான் இருக்கு, எதுக்கு வாடாமல்லி கலர்ல கேவலமான டார்க் ஷேடோல போடறீங்க? 

29 comments:

ம.தி.சுதா said...

ஐஐஐ சுடு சோறு..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
ஜனாதிபதியையே மதிக்காதா ஜனநாயக நாடு இந்தியா தான்.

ம.தி.சுதா said...

காதலே நிம்மதி பாட்டுகள் சூப்பருப்பா... இது ????

ம.தி.சுதா said...

பாஸ்கர் சக்தி வசனங்கள் தூக்குமோ தெரியல..

ம.தி.சுதா said...

வாக்குப் போட வேணாமா இணைய்யா..

KANA VARO said...

Tamilla ivvalavu padam vanthukonde irukkaa..?

சுதா SJ said...

அவ்வ்
அவ்வளோ மோசமாவா இருக்கு இந்த படம்,
ஹீரோயின் சூப்பர் பாஸ்
அம்புட்டு அழகா இருக்கு

Anonymous said...

லிப்ஸ்டிக் டிப்ஸ் சூப்பர்

Anonymous said...

நல்ல விமர்சனம் சி பி...எனக்கு ஓரளவு படம் பிடித்திருந்தது...

கூடல் பாலா said...

அணு உலைக்கெதிரான போராட்டத்தில் பிசியாக இருப்பதால் பிறகு வருகிறேன் ....

Mathuran said...

நல்ல வேளை.. இங்க எந்த தியேட்டர்லயும் இந்த படம் ஓடல்ல

Anonymous said...

சகாக்கள் சாகடிக்கறாங்க......

vettha.(kovaikavi) said...

''..புது முகம் மீசை தாடி வெச்ச அப்பாஸ் போல இருக்கார் தேறுவது ரெம்பக் கடினம்... I agree with you...
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

கவிதை வீதி... // சௌந்தர் // said...

என்னங்க இப்படி சொல்லிட்டிங்க...

குறையொன்றுமில்லை. said...

இந்தப்படம் 7 நாட்கள் தான் ஓடும், விகடன் மார்க் 34 எல்லாம் பாத்தும்
கூடவா படம் பாக்கபோனீங்க?

சக்தி கல்வி மையம் said...

மாப்ள ரைட்டு..

செங்கோவி said...

ரெண்டு ஃபிகரு ஃபோட்டோ போட்டிடுக்கீங்க..அதுல ஒன்னு அத்வைதான்னா இன்னொன்னு யாரு?

இராஜராஜேஸ்வரி said...

ஓட்டுகள் போட்டாயிற்று.

rajamelaiyur said...

50 rupess save paneteka

ராஜி said...

சி .பி கமெண்ட் - அய்யய்யோ...

ஈரோடு மாணிக்கம் தியேட்டர்ல இந்த குப்பைப்படத்தை பார்த்தேன்
>>
அந்த குப்பை படத்தையும் பொறுமையா முழுசா உக்காந்து பார்த்துட்டுதான் வந்தீங்களா?

Menaga Sathia said...

அப்போ படம் டப்பாவா????

Kavi said...

இந்தப்பட ஹீரோ (Sanjeev) ஏற்கனவே குளிர்100° என்ற படத்தில ஹீரோவா நடிச்சிருக்காரு..

Saravanaa said...

Diolague ivlodhan therucha boss?

Sivakumar said...

தான் பார்த்து நொந்து எல்லாரையும் அலெர்ட் ஆக்கிய அண்ணன் சிபி வாழ்க!

குரங்குபெடல் said...

அந்தப்படமே ஓடலை! இது மட்டும் ஓடவா போகுது?

ரொம்ப ஓவருய்யா சொல்லிபுட்டேன் . . .

உலக சினிமா ரசிகன் said...

இந்தப்படத்தை தமிழ்மக்கள் பார்க்கவிடாமல் சதி செய்த சிபி வாழ்க.

Jj said...

nice..
please visit www.tamilrange.com

M (Real Santhanam Fanz) said...

எதோ உங்க புண்ணியத்துல இந்த படத்துல இருந்து தப்பிச்சோம்....

ஜெயிக்கபோறது விஜய்யா, அஜித்தா, சூர்யாவா? - ஒரு எக்ஸ்க்ளுசிவ் அலசல்

உங்க கமெண்டும் ஓட்டும் அவசியம் சார்...

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

Rise of the apes - விமர்சனம் - http://castrokarthi.blogspot.com