Monday, August 15, 2011

கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை - கொஞ்சும் காதல் ,மிஞ்சும் சோகம் - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjsWWqrOn-4TpRXWH-CZdIqGIcxggVuYbVcbKAOKyy-VwkVeBJzNrwDbDHoDz_uQJXNdOMzvkfDOiECzSd_VI4VQEoyKC5yG5NgCIjP1HyPdfc1437WuDJTaNpuPkXTQr5VkYFdZy9ohtvx/s1600/Konjam-Veyil-Konjam-Mazhai.jpgபள்ளிப்பருவக்காதலை  அழகி ,ஆட்டோகிராஃப் ,வைகாசி பொறந்தாச்சு மாதிரி நேர்த்தியான திரைக்கதையில் சொன்னவர்களும் உண்டு, லாஜிக் கோளாறுகளால் சொதப்பியவர்களும் உண்டு. முதல் பாதியில் எதார்த்தமாய் காதல் கதை சொல்லி விட்டு பின் பாதியில் குழப்பமான மன நிலையில் எழுதப்பட்ட திரைக்கதையால் வெற்றியை ஹேர்  (HAIR) இழையில் தவற விட்ட புது இயக்குநர் எழுதிய கதை..

காதல் படம் மாதிரி பஸ்ல ஆரம்பிக்குது கதை.. ஹீரோயின் தன் கணவனுடன் பஸ்ல வர்றா.. ஒரு பஸ்ஸ்டேண்ட்ல ஹீரோவைப்பார்க்கறா. அவனும் அவளைப்பார்த்துடறான். கரெக்ட்டா நந்தி மாதிரி, சிவ பூஜைல கரடி மாதிரி புருஷன் வந்து இழுத்துட்டு போயிடறான்.. இப்போ ஃபிளாஸ்பேக்.

ஸ்கூல்ல படிக்கறப்பவே ஹீரோ ஹீரோயின் லவ் பண்றாங்க. வழக்கம் போல் பெண் வீட்டில் எதிர்ப்பு.. மாமாவின் மிரட்டலுக்கு பயந்து பஞ்சாயத்தில் ஹீரோயின் ஹீரோவை காதலிக்கவில்லை என்று சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம். வெறுத்துப்போன ஹீரோ பட்டணம் வர்றார்.. அங்கே அவர் எங்கே தங்கி இருக்காரோ, அதுக்குப்பக்கத்து வீட்ல கல்யாணம் ஆன தன் முன்னாள் காதலி. 




http://www.kollytalk.com/wp-content/gallery/konjam-veyil-konjam-mazhai/konjam-veyil-konjam-mazhai-11.jpg
இதுக்குப்பிறகுதான் இயக்குநருக்கு குழப்பமே! கதையை எப்படி கொண்டு போறது? கில்மா கதை ஆக்கிடலாமா? கடைசி வரை காதல் போராட்டக்கதையாவே முடிச்சிடலாமா?என பயங்கரமா குழம்பி நம்ம பொறுமையை சோதிக்கறார்,. 

ஹீரோ புதுமுகம் தேஜ். பாஸ் மார்க் வாங்கவே ரொம்ப கஷ்டப்படுகிறார்.. 

ஹீரோயின் கீர்த்திகா நிலா போல் வட்ட முகம்.. ரொம்ப சுமாரான ஃபிகர் தான் 40 மார்க் தான் தேறும். அவரை விட அவரது பள்ளித்தோழியாக வரும் ஃபிகர் 55 மார்க் வாங்கி முன்னிலையில் இருக்கிறார். பேசாம அவரையே ஹீரோயினாக போட்டிருக்கலாம்.ஆனால் அதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது,, ஹீரோயினுக்குத்தேவையான முக்கிய அம்சமான செழுமை அவரிடம் இல்லை. 

ஹீரோயின் கணவனாக வரும் இயக்குநர் கவனிக்க வைக்கிறார். ஆனால் அவர் பாத்ரூம் காண்ட்ராக்டராக வரும் காட்சிகளில் , பப்ளிக் டாய்லெட் முன் சேர் போட்டு அமர்ந்து வாழை இலையில் மனைவியை பரிமார சொல்லி சாப்பிடும் காட்சி , அதை தொடர்ந்து வரும்  வசனங்கள் உவ்வே ரகம். என்ன தான் வில்லனின் கேரக்டரை எஸ்டாபிளிஸ் பண்ண எடுக்கப்பட்ட சீன் என்றாலும் இது போன்ற ஒரு வல்காரிட்டி சீனை சென்சாரில் எப்படி விட்டார்கள் என்றே தெரியவில்லை.. வெரி பேடு


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV0Yb6byNs9HrPWJJ8qR-CPXRr4QJsXbYBwA_kS4QcgU-aRZ6IuFz5F2D2eOmPEwqSdr4DFJGqy27LLMLf4tfWQzmnaqR7j5EThwdCNJRsF3aTAN-Sp5EuwOumbwqYaus4roPBMQNoXQub/s1600/Konjam_Veyil_Konjam_Mazhai_Stills_04.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. காதலர்கள் இருவரும் தத்தம் காதல் கடிதங்களை அவர்களுக்குள் சொல்லிக்கொள்ளாமல் எதேச்சையாக சோளக்கொல்லை பொம்மைக்குள் பத்திரப்படுத்துவது..

2. ஹீரோயின் தோழியாக வருபவர் தன்னை தூதுக்கு அணுகும் ஹீரோவை தன்னை ரூட் விடுவதாக நினைத்து கிளுகிளுப்படைவது.

3.ஹீரோ - ஹீரோயின் சந்திப்புகள், டூயட் சீன்கள் எல்லாமே ஒரு வித கண்ணியத்துடன் எடுத்தது.

4. ஹீரோ - ஹீரோயின் பள்ளியில் படிக்கும்போது நடக்கும் கல கல சம்பவங்கள்





https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjofPWBHQz7x4QQB7IRei4RZMnEQDQFux3TfIWWYYMFKd-u_IGCBy72HnuYcf4pX19-v3pDRKJ_auWqUnbTcF0b2tIgKcu19RSdPHOubmrj7NfH52pOAolVMTEmeOpkeixpmJn6yupij9eJ/s1600/Konjam_Veyil_Konjam_Mazhai_Wallpapers_01.jpg
இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்

1. பிரபல பத்திரிக்கையில் பணி புரியும் ஹீரோ கழுத்தில் கம்பெனி டேக் மாட்டி இருக்கும்போது ஆக்சிடெண்ட் ஆகுது, ஆனா யாரும் அவர் ஆஃபீஸுக்கு இன்ஃபார்ம் பண்னலை.. அது எப்படி?

2. ஹீரோவிடம் செல்ஃபோன் இருந்தும் ஹீரோவின் ஃபிரண்ட் ஹீரோவோட லேண்ட் லைன் நெம்பர்க்கு ஃபோன் பண்ணி ஃபோனை எடுத்தது யார்னே தெரியாம லொட லொட என்று உளறி வில்லனுக்கு உண்மைகளை வலியனா தெரிவிப்பது..

3. கொஞ்சம் கூட மன திருப்தியே இல்லாமல் வலுவந்தமாக கட்டிய குடிகாரக்கணவனை ஹீரோயின்  கில்மாவுக்கு அழைப்பதும் அதற்கு வில்லன் மறுப்பதும் படு பத்தாம்பசலித்தனமான சீன்.

4. வில்லன் கம் கணவனான இயக்குநர் ,ஹீரோயினிடம் மழையில் மாட்டியதும் 1008 இடம் ஒதுங்க இருந்தும் ஹீரோ வேலை செய்யும் ஆஃபீசுக்கு போலாம் என்பதும் அதைத்தொடர்ந்து வரும் காட்சிகளும்..

5. மன நிலை பாதிக்கப்பட்ட ஹீரோ மேப் பார்த்து வந்த மாதிரி கரெக்ட்டாக சிட்டீ டூ வில்லேஜ் அதுவும் காதலர்களாக இருந்தபோது சந்தித்த இடத்துக்கு வந்து உயிரை விடுவது..

6. லவ் லெட்டர்ஸை சோளக்கொல்லை பொம்மைல ஒளிச்சு வைக்கும் ஐடியா ஓக்கே.. ஆனா மழை வந்தா இங்க் பேனாவுல எழுதப்பட்ட எழுத்துக்கள் நனைஞ்சிடாதா? பாலிதீன் பேப்பர்ல வெச்சு அங்கே வெச்சிருக்கலாமே?




http://mimg.sulekha.com/tamil/konjam-veyil-konjam-mazhai/events/konjam-veyil-konjam-mazhai/konjam-veyil-konjam-mazhai-movie-event-photos076.jpg

தேடி தேடிப்பார்த்ததில் வசனங்களில் நினைவில் நின்றவை


1. நான் இப்பால், நீ அப்பால், நமக்கிடையே ஏன் தாழ்ப்பாழ்?

2. காமத்துப்பால் பற்றி இப்போ பாடம் எடுக்கப்போறேன்.. யாருக்காவது அது பற்றி தெரியுமா?

சார்.. எங்களுக்கு கிராமத்துப்பால் தான் தெரியும்..

3. சார்.. நான் சொல்றேன்.. மேரேஜ் ஆனதும் சொம்புல நிறைய பால் ஊற்றி பொண்ணுகிட்டே கொடுத்து மாப்ளைக்கு தரச்சொல்வாங்க, அதானே காமத்துப்பால்?

4. இந்த லவ் லெட்டரை படிச்சதும் கிழிச்சுப்போட்டுடு..

அது எப்படி? எனக்காக நைட் பூரா விழிச்சிருந்து நீ எழுதுனதை சடக்னு கிழிக்கறது?

5. பொண்ணோட காதல் ஆணோட காதலை விட ஆழம் ஆனது,ஆணுக்கு சட்னு காதல் வரும் , பட்னு அது போயிடும், ஆனா பொண்ணுக்கு அப்படி இல்லை.. அவ்வளவு சீக்கிரம் காதல் வராது வந்தா அதை மாற்றவே முடியாது.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5hPFghPfaSNgjRNNTPDmfz7XCov_o4XFwNog6JxfaRwZSi5h3-4nn1l38Xm7ZGGt-EW8ykrmyRE-x_q5MBtdcLnL9WMrDfmH4ARK45DTTI5COv0on0Bz3ky_VACwNvK2F7PxuK1xcTqA/s1600/konjam-veyyil-konjam-mazhai-heroyin-hot-stills+%252810%2529.jpg

இந்தப்படம் லோ பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படு சுமாரான படம்.. இந்தப்படத்து மூலமா டைரக்டர் கம் வில்லனுக்கு இனி வில்லனா நடிக்க சான்ஸ் வரலாம்.

மற்றபடி படம் 10 உடன் ஒன்று தான்.. 11..

எல்லா செண்டர்லயும் 10 நாள் தாண்டாது..

ஈரோடு சங்கீதா தியேட்டர்ல வெள்ளிக்கிழமை படம் போட்டாங்க, திங்கட்கிழமை எடுத்துட்டாங்க.

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 35

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - சுமார்

சி.பி கமெண்ட்  - இந்தப்படம் நீங்க பார்க்க முடியாது, ஏன்னா எந்த தியேட்டர்லயும் இப்போ ஓடலை.மீறி ஓடுனா நீங்க மாட்டிக்காதீங்க..

27 comments:

பன்னிக்குட்டி ராம்சாமி said...

படம் தேறாதா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஹீரோயின் தோழி படத்தையாவது போட்டிருக்கலாம்.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஹீரோயின் முகத்துல சுவலட்சுமி சாயல் தெரியல?

Unknown said...

இனிய சுகந்திர தின வாழ்த்துக்கள் நண்பா

சி.பி.செந்தில்குமார் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

ஆமா, முகத்துல + தேகத்துல சில பாகத்துல ,உங்க யூகத்துல

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சி.பி.செந்தில்குமார் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி

ஆமா, முகத்துல + தேகத்துல சில பாகத்துல ,உங்க யூகத்துல
////////

நான் முகத்த மட்டும்தான் சொன்னேன்....!

FARHAN said...

சுகந்திர தின வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

ஆனா நீங்க சிங்கிள் மீனிங்க்ல பேசுனதே இல்லையே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சி.பி.செந்தில்குமார் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி

ஆனா நீங்க சிங்கிள் மீனிங்க்ல பேசுனதே இல்லையே?
///////

இந்த பிகர்லாம் டபுள்மீனிங்குக்கு ஒர்த்தா?

சி.பி.செந்தில்குமார் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

இது ஒரு ஃபிகரா? ( இதெல்லாம் ஒரு ஃபிகரா?ன்னு கேட்டா யாராவது சண்டைக்கு வந்துடுவாங்க)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சி.பி.செந்தில்குமார் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி

இது ஒரு ஃபிகரா? ( இதெல்லாம் ஒரு ஃபிகரா?ன்னு கேட்டா யாராவது சண்டைக்கு வந்துடுவாங்க)
//////

ஏன் இதுக்கும் ஆள் இருக்கா? (விட்டா நீங்களே வேற ஐடில வந்து சண்ட போடுவீங்க போல இருக்கே?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நாளை ஒரு கில்மா படவிமர்சனம் போடுறேன்னு சொன்னீங்களே அது இதுதானா? இப்படி ஒரு பிகர வெச்சுக்கிட்டு அது கில்மா படம்னு சொன்னா நாடு தாங்குமா? இதுக்காக வெயிட்டிங் வேற.....

சி.பி.செந்தில்குமார் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

இது கொல்மா படம்..

கில்மா மேட்டரும் சரி, கில்மா பட விமர்சனமும் சரி நைட் தான். வெயிட் ப்ளீஸ்

சத்யா said...

35 மார்க்னா அப்ப படம் தேறாது. நன்றி முன்னெச்சரிக்கை முத்தண்ணா... :-))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////சி.பி.செந்தில்குமார் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி

இது கொல்மா படம்..

கில்மா மேட்டரும் சரி, கில்மா பட விமர்சனமும் சரி நைட் தான். வெயிட் ப்ளீஸ்
///////

அப்படின்னா சரி, இந்தப் படம்லாம் எடுக்கும் போதே இதெல்லாம் எப்படிஓடும்னு தோனாது? புது இயக்குனர் வேற, முழுத் திரைக்கதையும் இல்லாம எப்படி தயாரிப்பாளர் சம்மதிச்சார்?

சி.பி.செந்தில்குமார் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

நான் ஒரு அமைப்பு ஏற்படுத்தலாம்னு இருக்கேன். அதுல ஸ்க்ரிப்டை படிச்சுப்பார்த்து இது தேறும், தேறாதுன்னு சொல்லி அதுக்கு ஒரு சர்வீஸ் சார்ஜ் வாங்கிக்கறது. நேரம் காலம், பண விரயம் மிச்சம். .

செங்கோவி said...

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சி.பி.செந்தில்குமார் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி

நான் ஒரு அமைப்பு ஏற்படுத்தலாம்னு இருக்கேன். அதுல ஸ்க்ரிப்டை படிச்சுப்பார்த்து இது தேறும், தேறாதுன்னு சொல்லி அதுக்கு ஒரு சர்வீஸ் சார்ஜ் வாங்கிக்கறது. நேரம் காலம், பண விரயம் மிச்சம். .
///////

நல்ல ஐடியா சிபி.... ஆரம்பத்துல ஃப்ரியா செஞ்சு கொடுத்து எஸ்டாப்ளீஷ் பண்ணிக்கிட்டு ப்ரொபசனலா ஆரம்பிச்சிடலாம்......!

சி.பி.செந்தில்குமார் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

ஆனா தயாரிப்பாளர்கள் சங்கம் இதுக்கு வரவேற்பு, இயக்குநர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு.. எவனோ ஒருத்தன் எங்க உழைப்பை விமர்சிப்பதா?ன்னு ..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சி.பி.செந்தில்குமார் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி

ஆனா தயாரிப்பாளர்கள் சங்கம் இதுக்கு வரவேற்பு, இயக்குநர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு.. எவனோ ஒருத்தன் எங்க உழைப்பை விமர்சிப்பதா?ன்னு ..
///////

எவனோ ஒருத்தனா இல்லாம அவங்கள்ல ஒருத்தரா இருந்து செய்யலாம்....

சி.பி.செந்தில்குமார் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

aahaa ஆஹா அழகிய வரி! முயற்சிக்கிறேன்

M.R said...

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

காட்டான் said...

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.... இப்பிடியான படங்கள் இஞ்ச தியேட்டர்ல வராது தப்பிச்சோமையா...

காட்டான் குழ போட்டான்...

Unknown said...

""தண்ணீர் விட்டோ வளர்த்தோம்சர்வேசா - இப்பயிரை கண்ணீரால் காத்தோம்!'' -என்ற பாரதியின் வரிகளுடன்..

அனைவருக்கும் எமது இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..

சுதா SJ said...

அடச்சே ஏமாத்திட்டாங்களே..
விளம்பரங்களைப்பார்த்து
அழகி போல் அசத்தல் படமா இருக்கும்
என்று நினைச்சேன். ^_^

KANA VARO said...

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். ஆனாலும் மைந்தனை ரொம்ப ஏமாத்திட்டீங்க

Saravanaa said...

55 mark figur still yen podalai?...