நாளைய இயக்குநர் ஃபைனல்க்கு போறதுகு முன்னால அதனோட 3ஆம் பாக செலக்ஷனுக்கான விளம்பரம் பற்றி சின்னதா ஒரு விமர்சனம். கே பாக்யராஜ் ரெடி ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன் அப்டினு சொல்லி சில டயலாக் பேசறார்.. இந்தியாவின் சிறந்த திரைக்கதை ஆசிரியரும், பல வெள்ளி விழாப்படங்களின் இயக்குநருமான அவர் இந்த 2 நிமிட விளம்பரப்படத்துல சோபிக்க முடியலைங்கறதைப்பார்த்தா வருத்தமா இருக்கு, ரொம்ப செயற்கையான முக பாவனைகள்.
ஃபைனல் நிகழ்ச்சிக்கு பல வி ஐ பி கள் எல்லாம் வந்திருந்தாங்க. பாலு மகேந்திரா,பாண்டிராஜ் என பல வி ஐ பி களை பார்க்க முடிந்தது. இவங்க எல்லாம் அந்த நிகழ்ச்சியை பார்க்கறதால படைப்பாளிகளுக்கு இன்னும் படம் எடுக்க ஊக்குவிப்பா அமையும்.
ஹாய் மதன் வந்ததும் சொன்ன ஒரு பஞ்ச் நல்லா இருந்தது. இந்த ஃபைனல்ல யார் வின் பண்ணப்போறாங்கன்னு நிறையப்பேர் கேட்கறாங்க.ஏற்கனவே வின் பண்ணுனவங்க தான் இங்கே வந்திருக்காங்க என்று அவர் சொன்னதும் அனைவரும் ஒரு புத்துணர்ச்சியோடு கிளாப்ஸ்..
1. திருப்பூர் ராம் - சைனா டீ ( காமெடி சப்ஜெக்ட் )
ஒப்பனிங்க் ஷாட்டே டெர்மினேட்டர் டீக்கடைல ஆரம்பிக்குது. புது வகை டீத்தூள் விற்கும் ஆள் கடைக்கு வர்றான். பணம் எதுவும் வேணாம், ஒரு டீ போட்டு கஸ்டமருக்கு குடுங்கங்கறான்.அது போலவே செஞ்சா டீ குடுத்தவன் ஆள் அவுட்.
பதறிப்போன டீக்கடை ஓனர் டெட்பாடியை வண்டில வெச்சு எடுத்துட்டுப்பொறாரு.. ஒரு மறைவான இடத்துல அவரை டிஸ்போஸ் பண்ணிட்டு அவங்க ரிட்டர்ன் ஆகறப்ப போலீஸ் பார்த்துடுது. டீ குடிச்சு செத்துப்போனதா நம்பப்படும் ஆள் உண்மைல சாகலை. மயக்கம். கடன் தொல்லை தாங்காம விஷம் குடிச்சவர் அந்த டீயை குடிச்சதாலதான் பிழைச்சாரு..
இப்போ அந்த டீக்கு ஏக கிராக்கி.
கேட்க ரொம்ப சாதாரண கதையா தெரியும் ,ஆனா விஷூவலா பார்க்கறப்ப செமயா இருந்தது.
மனம் கவர்ந்த சில வசனங்கள்
1. நல்ல காலம் பொறக்குது, நல்ல காலம் பொறக்குது
யோவ் , குடுகுடுப்பை,வாத்தியத்துக்கே வக்கில்லாம தானே வாயால வாசிக்கறே.!!?
2. ஊர்ல இருக்கற எல்லாருமே எங்க கடைல தான் டீ குடிப்பாங்க./.
அடேய், ஊர்ல மொத்தமே 32 பேர்தான்.
3. இந்த பஞ்சாயத்து என்னா சொல்லுதுன்னா போஸ்ட் மார்ட்டம் பண்ணீயே ஆகனும்..
ஆமாமா.. நானும் அதை ஆமோதிக்கிறேன், போஸ்ட் மார்ட்டம் பண்ணீயே ஆகனும்.. யோவ். ஒரு சந்தேகம். போஸ்ட் மார்ட்டம்னா என்ன?
4. விஷத்தை முறியடிக்கும் டீ இது .. விலை ரூ 50
இந்தாய்யா ரூ 500
4. விஷத்தை முறியடிக்கும் டீ இது .. விலை ரூ 50
இந்தாய்யா ரூ 500
இதுல நடிச்ச எல்லாருமே ஒரு கிராமத்து ஆளுங்க, நேட்டிவிட்டி இருந்தது.. பார்வையாளர்களிடையே நல்ல வர்வேற்பு பெற்ற இந்தப்படம் ஏனோ ஜட்ஜூங்களை அவ்வளவா கவரலை.. ஆனா அதை ஓப்பனா கமெண்ட்டி இருக்க தேவஃஇ இல்லை. ஏன்னா ஃபைனல் என்பதால் யார் வின்னர் என்ற சஸ்பென்ஸை கடைசி வரை மெயிண்டெயின் பண்ண வேணாமா?
2. . ரவிகுமார் - ஜீரோ கிமீ ( ஃபேண்ட்டசி)
வேலை வெட்டி இல்லாத ஹீரோ எதேச்சையா திருப்பூர் டூ சென்னை போக ஒரு மாயாஜால ரூட் கண்டுபிடிக்கறாரு.. அதாவது குறிப்பிட்ட இடத்துல ஆள் உள்ளே போனா அடுத்த செகண்ட் அவர் சென்னைல இருப்பார். உடனே அந்த இடத்தை விலைக்கு வாங்கறார்..
தனது பாரம்பரியம் மிக்க வீட்டை விக்கறார். ஜோசியர் தான் அந்த வீடு ராசி இல்லைன்னு ஐடியா குடுக்கறார். வீட்டை வித்து கிடைச்ச பணத்துல தான் இந்த மேஜிக் இடம் வாங்கறார். வாங்கி ட்ராவல் ஏஜென்சி நடத்தறார்.. செம காசு.. ரூ 500 டிக்கெட்.. திடீர்னு ஹைவெஸ் டிபார்ட்மெண்ட்ல வந்து அந்த இடத்தை அபகரிச்சுக்கறாங்க..
ஹீரோவோட வீட்டை விலைக்கு வாங்குன சேட்டு ராசி இல்லைன்னு ஓ சி ல அதை ரிட்டர்ன் பண்ணிடறாரு. இப்போ தன் வீட்டுக்கு போற ஹீரோ பரண்ல அமெரிக்கா போற மேஜிக் ரூட் கண்டு பிடிக்கறார்..
அப்பாவின் சொத்து விற்கக்கூடாதுங்கற மறைமுகமான நீதியோட ,அட, இப்படி நடந்தா எவ்வலவு நல்லாருக்கும் என பார்வையாளர்களை ஏங்க வைத்த ஒன் லைன் கற்பனை. வெல்டன் ரவிக்குமார்.
இந்த படம் முதல் பரிசு வாங்கலைன்னாலும் நிச்சயம் 2 வது அல்லது 3 வது பரிசு வாங்குவது நிச்சயம்.. மொத்தம் 9 படம் . இந்த வாரம் 3 படம். இனி 6 படம் வர இருக்குது.
3. தீபக் - ஆசை
ஒரு தூக்கு தண்டனைக்கைதியின் கடைசி நிமிடங்கள் எப்படி இருக்கும்? என்பதுதான் படத்தோட ஒன்லைன்.. ஆனானப்பட்ட ஆட்டோ சங்கர் ஆகட்டும், வீரப்பன் ஆகட்டும் அவங்களோட கடைசி நிமிடங்களை பார்க்கும்போது நமக்கு இரக்கம் வரத்தான் செய்யுது. அது மனித மன இயல்பு..
சின்ன வயதில் 13 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் பண்ணுன கொடூரமான ஆள் கேஸ் நடந்து தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுகையில் தனது கடைசி ஆசையாக தனது மகளிடம் மன்னிப்பு கேட்டதாக சொல்ல சொல்கிறார்.
இதே போல் 8 தூக்கு தண்டனை களின் கடைசி ஆசையை நிறைவேற்றும் அசைன்மெண்ட் எடுத்துக்கொண்ட ஒருவர் அதை நிறைவேற்றுகிறார். இதான் கதை..
மனம் கவர்ந்த வசனங்கள்
1. சோத்துல உப்பே இல்லையே? சாகப்போறவனுக்கு சொரணை இருக்கக்கூடாதுன்னு போடாம விட்டுட்டீங்களா?
2. மனுஷனுக்கு தோணும் ஆசை தான் அவன் தப்பு பண்ணக்காரணம்.. ஆசைப்படாத மனுஷனே உலகத்துல கிடையாது..
இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்
1. தூக்குதண்டனைக்கைதிகளின் கடைசி ஆசையை நிறைவேற்றும் கேரக்டர்ல நடிக்கறவர் “ என் பேரு அகிலன்” அப்டின்னு சொல்றப்ப தன் நெஞ்சுல கை வெச்சு சொல்றாரு.. இது 25 வருடங்களுக்கு முன்னால் நாடகங்களில் கையாளப்பட்ட பாணி.. அதுவும் 4 டைம் அதே மாதிரி சொல்றப்ப இயக்குநரின் அனுபவம் இன்மை தெரிகிறது..
2. தூக்கு தண்டனை கைதி தன் மக கிட்டே மன்னிப்பு கேட்கறதா சொன்னது தன்னால் கெடுக்கப்பட்ட பெண் மூலம் பிறந்த வாரிசா? அல்லது இது வேறா? என்பது தெளிவா சொல்லப்படலை.. ஒரு வேளை தான் கெடுக்கப்பட்டதால் பிறந்த பொண்ணு கிட்டே மன்னிப்பு கேட்பதாக சொல்லி இருந்தால் கதையில் இன்னும் அழுத்தம் கூடி இருக்கும்..
இந்தப்படம் பார்க்க உருக்கமா இருந்தாலும் லாஜிக் மிஸ்டேக்ஸ், கதை கரு ஆகிய விஷயங்களில் சராசரி எனும் நிலை தான்..

25 comments:
ஆஹா ! நான் தான் முதலா?
நீங்கள் செலக்ட் பண்ற படங்களுக்கு நான் பயங்கர ரசிகையாகிக் கொண்டு இருக்கிறேன்.
ஏன் சிபி நீங்கள் குறும்படம் எடுக்க முயற்சி செய்யலாமே? அதற்குரிய தகுதி உங்களுக்கு இருப்பதாக நான் கருதுகிறேன்
ஆகா! வடைய மிஸ் பண்ணிட்டேனா?
இந்த 3 கதைகளின் விமர்சனத்தின் படி எனக்கு இரண்டாவது கதை பிடிச்சிருக்கு...
நாளைய இயக்குனர் இந்த நிகழ்ச்சி பார்க்கனும் பார்க்கனும்னு நெனச்சி மறந்து போயிடுவேன்.. அடுத்த வாரமாவது கண்டிப்பா பார்க்கனும்..
அப்புறம் அந்த புகைப்படம் பிடிக்கற அந்த பொண்னோட போட்டோ ரொம்ப அருமையா இருக்கு...
குறும்படங்களைப் பற்றிய விரிவான படைப்பு....
அடுத்து மெகா சீரியலுக்கு விமர்சனமா ?
அருமை ...
நாளைய இயக்குனர் விமர்ச்சனம் நன்று
குறும்படங்களைப் பற்றிய விரிவான படைப்பு...
அந்த புகைப்படம் பிடிக்கற அந்த பொண்னோட போட்டோ ரொம்ப அருமை...
நீ நடத்துடா அண்ணா உன் காட்டுல இப்போ அடைமழை....!!!
வந்தாச்சு.. ஓட்டு போட்டாச்சு..
அட!!!!!!!!!!!!!
நிகழ்ச்சியை தவற விட்ட குறையை நீக்கி விட்டீர்கள்
அசத்தல்
படங்கள் அருமை. முதல் படம் அழகாக வித்யாசமா எடுக்கப்பட்டிருக்கு, பகிர்வுக்கு நன்றி.
பாஸ் குறும்படம் எடுக்கலாம்ன்னு இருக்கேன்.ஏதாவது உங்ககிட்ட நல்ல கதைக்கரு இருந்தா சொல்லுங்க..பண்ணிரலாம். :)
Thanks anne!
வணக்கம் பாஸ்,
ஆணி அதிகம், ஆனாலும் இப்போ வந்திட்டேன்.
உங்கள் பாணியில் விமர்சனம் அழகாக இருந்தாலும்,
இங்கே நீங்கள் விமர்சித்துள்ள படங்களைப் பார்க்க முடியலையே என்று ஒரு குறை மனதினுள் உள்ளது,
அதனைப் போக்கும் வகையில் ஏதாவது வீடியோ படங்களை இங்கே பகிர முடியாதா?
வாசிச்சேன், வாக்கிட்டேன்... நன்றி
good review
விமர்சனம்...படங்கள் தூள் சி பி...
முடிந்தால் படம் எந்த ஊர்...பெண்கள் பெயர்(?)..எல்லாம் பகிரவும்...
டீக்கடை வச்சு பண்ண காமெடி சப்ஜெக்ட் செமையா இருந்துச்சு... மத்தபடி 2 கதையும் முக்கியமா தூக்கு தண்டனை கைதி கதையும் சுத்தமா எடுபடல...
நல்ல விமர்சனம்
பட்டாம்பூச்சி கண்கள் அற்புதம்...
புத்தகக்கட்லில் மிதக்கும் கப்பல அருமை.
அனைத்துப் படங்களுக்கும் பாராட்டுக்கள்.
Link to this episode
http://tamil.techsatish.net/file/naalaiya-iyyakunar-38/
எனது குறும்படத்திற்கான உங்களின் விமர்சனம் படித்தேன் நன்றாக இருக்கிறது.
மிக்க நன்றி!
Post a Comment