வெங்காயம் பட விமர்சனத்திற்கு அதன் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் பதில் அனுப்பி உள்ளார். அவருக்கு என் நன்றிகள்.... பட விமர்சனம் படிக்க
வெங்காயம் - நித்யானந்தா வகையறாக்களுக்கு ஆப்பு - சினிமா விமர்சனம்
வணக்கம் நான் சங்ககிரி ராச்குமார்,நல்ல விமர்சனத்திற்க்கு நன்றி.
பல்பு கம்பனி ஓனர் நண்பர் சிபிக்கு என் பதில்கள்
பல்பு:
1க்கு முடிந்த அளவுக்கு ப்ளாஸ்பேக் காட்சிகளுக்கு கொசுவத்தி சுருளையே பயன்படுத்தி இருக்கேன்.இன்னும் என்னதான் செய்ய
2:கயிறை அருத்து கிட்டு நேத்தே ஓடிட்டான் இன்னிக்கு நல்லா கட்டுங்க”னு சொல்வாங்க கவனிக்கலயா
3:நம்ம ஊரு வீரப்பன் சத்திரத்து போலீஸ் ஸ்டேசன்ல இருக்கற போலீஸ் எல்லாம் காக்க காக்க சூர்யா மாதிரி வெரப்பா மக்கள பயமுறித்தி கிட்டே தான் இருக்காங்களா நண்பா..போய் பாருங்க நண்பா தமாசா இருப்பாங்க
4: மோப்ப நாய இழுத்து கிட்டே ஓடிகிட்டே இருக்கற போலீச பாத்தே பழகிட்டோம் நண்பா நம்ம ஊரு போலிசுங்க பிரச்சன முடிஞ்ச பிறகு தான வருவாங்க நம்ம ஆளு முன்னாடியே வராரே போதாதா
5:மொரட்டு தாடி வச்சுக்கிட்டு பைப் சிகரெட் வச்சு கிட்டு கண்ண அகல விரிச்சு கட்ட கொரல்ல பேசர கர்சியல் வில்லன் மாதிரியே வேனுமா நண்பா நித்யானந்தா அப்படியா இருக்காரு
6:எல்லா அப்பாவும் சிபி அண்ணான மாதிரி சைக்காலஜி படிக்கலயே .அது உண்மை சம்பவம் நண்பா end title ல விளக்கமா போட்டிருக்கோம் பாருங்க
7:10 அடி தூரத்துல இருக்குற எதோ ஒரு ஆஸ்பத்திரியா இல்ல பல கிலோ மீட்டர் தூரம் இருக்கற ஜி.ஹெச்சானு சிபி அண்ணன் முடிவு பண்ண முடியாது அந்த கூத்தாடி மனனிலைல இருந்து பாருங்க ..புரியும்
8 வது பல்பு நீங்க தர வேண்டாம் அண்ணா அது ஏற்கன்வே என் கிட்ட இருக்கு அது நான் பன்னின தப்பு தான்.ஒரு சில பெண்கள் அந்த காட்சில தியேட்டர விட்டு ஓடிட்டாங்க அதனால கட் பண்ணிட்டேன்.வேனும்னா என் தங்கச்சி ய கூட்டிட்டு போய் பாருங்க அப்போ புரியும்.
சி.பி யின் பதில் - பொதுவாக ஒரு படைப்பாளிக்கு தன் படைப்பு பற்றிய விமர்சனத்தில் கோபம் அதிகம் வரும். ஆனால் பொறுமையாக பதில் அளித்த நண்பருக்கு நன்றி. துக்ளக் இதழில் முதலில் எல்லாம் பட விமர்சனம் போட்டு இயக்குநருக்கு ஒரு கேள்வி என கேட்பார்கள், அதற்கு சம்பந்தப்பட்ட இயக்குநர்கள் பதில் அளிப்பார்கள்.. நாளடைவில் சில இயக்குநர்கள் தங்களை கேள்வி கேட்பதை விரும்பாததால் அந்த பகுதி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.. இவர் பதில் கொடுத்திருப்பது நல்லதொரு ஆரம்பம்.. ஆரோக்கியமான விஷயம்!!!
டிஸ்கி - இயக்குநர் என்னை அண்ணா என அழைத்ததை மட்டும் ஆட்சேபித்து தம்பி என அழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் ஹி ஹி
40 comments:
முதல் முதலாக
nallaayirukkungka vimarsanam...
vaalththukkal..
இன்னும் நீங்க கேள்வி கேட்கணும்னா யோசிக்கனும். ரிப்ளை வர ஆரம்பிச்சிருசே..
point 5,6.......
haahhhhhaaaaaa
sipi is being noticed. ushaar !!
அப்பாடா...இனி உங்க பல்புகள் ப்யூஸ் தான் .இனி நீங்க போடற விமர்சனதிற்கு எல்லா இயக்குனர்களும் வருவாங்க..இனிமேல் உங்க ரேஞ்சு தனிதான்...
அவரு அண்ணா(அன்னா அல்ல!) நெனப்புல இருந்திருப்பாரோ....ஆமாம் உனக்கு ரிவார்டு கொடுததாருன்னியே இதானா தம்பி!
உங்களை தாத்தா என அழைத்திருக்க வேண்டும்
இன்று என் வலையில் ..
பல்சுவை வலைதளம் விருது
இதை இதை இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். நான் டிஸ்ட்ரிபியுட்டர்ஸ் அன்ட் தியேட்டர் ஓனர்ஸ்தான் உங்களை வசமா கவனிப்பாங்கன்னு பார்த்தேன். இயக்குநர் வந்துட்டார். உசாரய்யா...உசாரு... அடுத்து கூட்டமா தியே.ஓனர்ஸ் மற்றும் விநியோகஸ்தர்கள் போர்க்கொடியுடன் ஈரோட்டை நோக்கி படையெடுப்பதாய் கேள்விப்பட்டேன்.
இதை இதை இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். நான் டிஸ்ட்ரிபியுட்டர்ஸ் அன்ட் தியேட்டர் ஓனர்ஸ்தான் உங்களை வசமா கவனிப்பாங்கன்னு பார்த்தேன். இயக்குநர் வந்துட்டார். உசாரய்யா...உசாரு... அடுத்து கூட்டமா தியே.ஓனர்ஸ் மற்றும் விநியோகஸ்தர்கள் போர்க்கொடியுடன் ஈரோட்டை நோக்கி படையெடுப்பதாய் கேள்விப்பட்டேன்.
ரைட்டு.
நீங்க பெரிய ஆளுதான் தல :-)
கண்டிப்பாக நல்ல மாற்றம். விமர்சகர்களுக்கு கிடைத்த நல்ல முன்னேற்றம். ஆக இனி சினிமா விமர்சனம் எழுதுபவர்களும் இயக்குனரை கண்டபடி திட்டி எழுதாமல் ஆக்க பூர்வமான கருத்துக்களை முன் வைத்தால் இயக்குனர்களும் அந்த தவறை மீண்டும் செய்யாமல் இருப்பார். கூடிய விரைவில் இந்த மாற்றம் வரும் என எதிர்பார்க்கிறோம் ஆனால் அனைத்தும் நம் விமர்சன பதிவர்கள் கையில் தான் உள்ளது. இயக்குனர்கள் செய்யும் தவறை சரியான முறையில் சுட்டி காட்டுங்கள்.
வாழ்த்துக்கள் சிபி சார் எவ்வளவோ பேர் சினிமா விமர்சனம் எழுதினாலும் உங்களை பெரும்பாலானவர்களுக்கு பிடிக்க காரணம் உங்களின் எழுத்து நடை மற்றும் இயக்குனருடன் நீங்கள் கேட்கும் சரியான கேள்விகளே வாழ்த்துக்கள்.
இயக்குனர்..அவன் கெடக்குறான் வெங்காயம்னு உங்கள மனதுக்குள் திட்டியிருப்பாரோ? :)
எலேய் அண்ணா இன்னைக்கும் தமிழ்மணம் ஏழாவது நான்தானா..?
நல்ல டைரக்டர் [[மனுஷன்]] பொறுப்பா பதில் சொல்லி இருக்காரே....!!!
இதே இடத்தில் டி ஆரா இருந்தா உன்னை கடிச்ச துப்பி இருப்பார் ஹே ஹே ஹே ஹே...தப்பிச்சிட்டேடா அண்ணா...!!!
வெங்காயம் பட விமர்சனத்திற்கு அதன் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் பதில் அனுப்பி உள்ளார். அவருக்கு என் நன்றிகள்.... பட விமர்சனம் படிக்க
>>>
இயக்குனர் பதி மட்டும்தான் அனுப்பினாரா?! சுமோ, ஆட்டோ அனுப்பி இருந்தால் நல்லா இருக்கும்.
தமிழ்வாசி - Prakash said...
இன்னும் நீங்க கேள்வி கேட்கணும்னா யோசிக்கனும். ரிப்ளை வர ஆரம்பிச்சிருசே..//
அட நீங்க வேற, இந்த ராஸ்கல் ஊர் ஊரா போயி எல்லார்கிட்டேயும் நொங்கு வாங்கிட்டு வர்றது எனக்குல்ல தெரியும் ஹி ஹி....
விக்கியுலகம் said...
அவரு அண்ணா(அன்னா அல்ல!) நெனப்புல இருந்திருப்பாரோ....ஆமாம் உனக்கு ரிவார்டு கொடுததாருன்னியே இதானா தம்பி!//
நாசமாபோச்சு போ......!
முதல் அடி உங்களுக்கு சிபி சார் !? இது தொடருமா?!(ஆண்டவா! இது தொடரனுமே)
அந்த இயக்குனர் ரொம்ப நல்லவரு
போல/ அதனால நீங்க தப்பிச்சிங்க்.
வெரும்ன பதில் சொல்லிட்டு போயிட்டாரு. எல்லாருமே அப்படி இருக்கமாட்டாங்க/;
இயக்குனரின் பதில்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவே இருக்கின்றது.
ஆனால் படம் பார்க்கும் அனைவருக்கும் இது ரீச் ஆகுமா?
இதையெல்லாம் திரைக்கதையில் விளக்க முற்பட்டிருக்க வேண்டும் என நினைக்கின்றேன்.
ரிப்ளை வர ஆரம்பிச்சிடுச்சா ......அப்ப இனி நிறைய வரும் ?!
@ vidivelli
// nallaayirukkungka vimarsanam...
vaalththukkal //
இது விமர்சனமா?!?
அடங்கப்பா சாமி!
அட்ரா சக்க! அட்ரா சக்க!
நம்ம கட பக்கம் வர்றதேல்லை ராஸ்கல்.. பிச்சிபுடுவேன் பிச்சு..
SUPER THAMPI!!! :-)
நல்ல ஆக்கப்பூர்வமான முன்னேற்றம்.. வாழ்த்துக்கள் தல..
/// t.r;ஆ இருந்தா கடிச்சு துப்பி இருப்பாரு...////
/// பதில் மட்டுமா அனுப்ப்பி இருக்காரு?? ஆட்டோ, சுமோ அனுப்பி இருந்தா நல்லா இருக்குமே///
ரிப்பீட்டு
நல்ல மனுஷன் இயக்குனர், பொறுமையாக பதில் கொடுத்திருக்கார் ....
நன்று!
கேள்வி பதில் இரண்டுமே நன்று.
இயக்குநரின் பொறுப்பான மற்றும் பொறுமையான பதில்களுக்கு பாராட்டுக்கள்.
நல்ல ஆரம்பம்.வாழ்த்துக்கள் செந்தில்குமார்.
ஆஹா..சினிமா டைரக்டர்களும் சிபியை கும்ம ஆரம்பிச்சுட்டாங்களே..
நம்ம குரு ரேஞ்சே வேற...
சிபி சும்மா விடாதீங்க. படத்தை இன்னொரு தடவை பார்த்திட்டு அடுத்த ரவுண்டு கேள்வி பதில் சுற்றை ஆரம்பிக்கலாம்.
நல்ல ஆரம்பம்...
ஒரு வலைப்பதிவர் விமர்சனத்திற்கு ஒரு இயக்குனர் எழுதிய முதல் கடிதம் என நினைக்கிறேன்.முன்னேற்றத்திற்கு சந்தோசம்
உங்களின் எழுத்துக்கள் பிரபலங்களால் வாசிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பது இதன் மூலம் வெகுவாக தெரிகிறது. உங்கள் பொருப்பும் இன்னும் அதிகம் கூடியிருக்கிறது..
வாழ்த்துக்கள்
Post a Comment