ராஜபக்ஷேவுக்கு இது சம்மட்டி அடி!
மக்கள் மனச்சாட்சியைச் சொன்ன உள்ளாட்சித் தேர்தல்!
கிட்டத்தட்ட 28 ஆண்டுகளாக அனுபவித்த வலியை, உள்ளாட்சித் தேர்தல் முடிவில் வலிமையுடன் காட்டி இருக்கிறார்கள் ஈழத் தமிழர்கள்!
இலங்கையில் கடந்த 23-ம் தேதி வடக்கு மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, சாவகச்சேரிஆகிய மூன்று நகர சபைகள், 10 பிரதேச சபைகள், கிளிநொச்சியின் பச்சிலைப்பள்ளி, கரைச்சி, பூநகரி, முல்லைத் தீவின் துணுக்காய் உள்பட 17 உள்ளாட்சி அமைப்புகளில் 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு’ வெற்றி பெற்றுள் ளது. கிழக்கில் திருகோணமலை மாவட் டத்தின் திருகோணமலை நகர் - புறநகர், அம்பாறை மாவட்டத்தின் திருக்கோயில், காரைத் தீவு ஆகிய மூன்று பிரதேச சபைகளிலும் தமிழர் கூட்டமைப்புக்கே வெற்றி.
யாழ்ப்பாணத்தின் தீவகப் பகுதியில், வேலணை, ஊர்க் காவல் துறை, நெடுந் தீவு ஆகிய பிரதேச சபைகளில், அதிபர் ராஜபக்ஷேவின் கூட்டணியில் இருக்கும் டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி. கட்சி வெற்றி பெற்றுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில், சிங்களர்கள் கணிசமாக வசிக்கும் செருவில, குச்சவெளி ஆகிய பிரதேச சபைகளை மட்டுமே ராஜபக்ஷே கட்சி கைப்பற்றி உள்ளது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் (கருணாவின் முன்னாள் சகாவான) பிள்ளையானின் டி.எம்.வி.பி. கட்சிக்கு, ஈழ மக்கள் நான்காவது இடத்தையே அளித்தனர். அம்பாறை மாவட்டத்தின் காரை தீவுப் பிரதேச சபையில் 1.57 சதவிகித வாக்குகளும், திருக்கோயில் சபையில் 5.28 சதவிகித வாக்குகளையும் மட்டுமே அந்தக் கட்சி பெற்றுள்ளது.
யாழ் தீவகம் எனப்படும் நெடுந் தீவு, புங்குடு தீவு, காரைநகர், இழுவை தீவு, மண்டைத் தீவு, வேலணை, ஊர்க் காவல் துறை ஆகிய ஏழு தீவுகளிலும் நீண்ட காலமாக டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி. ஆயுதக் குழுவின் ஆதிக்கம்தான் இருந்தது.
எந்தத் தேர்தலானாலும், அவர்களை மீறி யாரும் பிரசாரத்துக்குக்கூட அங்கு போக முடியாது. 2002 நாடாளுமன்றத் தேர்தலில், விடுதலைப் புலிகளின் முன்முயற்சியால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெயரில், நான்கு தமிழர் கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. அப்போது, யாழ்குடா நாட்டில் இருந்து தீவகப் பகுதியை நோக்கி, கூட்டமைப்பினர் பிரசாரத்துக்காகச் சென்றபோது, அல்லைப்பிட்டி என்ற ஊரில் அவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர்.
இந்தத் தாக்குதலில், கூட்டமைப்பின் துணைத் தலைவர் மாவை சேனாதிராசாவுக்கு மண்டை உடைந்தது. சிவாஜிலிங்கத்தின் கை முறிக்கப்பட்டது. இப்படியான வரலாறுகொண்ட தீவகப் பகுதியில், இந்த முறையும் கூட்டமைப்பினர் முறையான பிரசாரத்துக்குச் செல்ல முடியாதபடி, ஆயுதக் குழுவின் அடக்குமுறைகள் தொடரவே செய்தன.
கூடவே, சிங்கள ராணுவத்தின் முழு ஒத்துழைப்பும் இவர்களுக்குக் கிடைத்தது. தீவகப் பகுதியின் முன்னாள் ராணுவ கமாண்டரும், இப்போது கிழக்கு மாகாணத்தின் ஆளுநருமான நிகால் ஜெயவிக்கிரம என்பவரை, கூட்டணியின் பிரசாரத்துக்கு உதவும் பணியில் ஈடுபடுத்தினார் ராஜபக்ஷே. இவ்வளவையும் மீறி, தீவகத்தின் காரை நகர் பிரதேச சபையை தமிழர் கூட்டமைப்பு கைப்பற்றியது.
மொத்த யாழ்குடாப் பகுதிகளிலும் எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும் என்பதில், ராஜபக்ஷே அரசு சகல இயந்திரங்களையும் களத்தில் இறக்கியது. தமிழகத்தின் திருமங்கலம் பாணியில், பணம், இலவசப் பொருள்களைக் கொடுத்து, வாக்காளர்களை மயக்க ஏதேதோ செய்தனர்.
மகிந்தவின் தம்பியும் அமைச்சருமான பசில் ராஜபக்ஷே, 13 அமைச்சர்கள்கொண்ட ஒரு படையுடன் இரு மாதங்களாக யாழ்ப்பாணம் பகுதியில் முகாமிட்டு இருந்தார். இவர் அடித்த தேர்தல் ஸ்டன்ட்கள், இந்திய அரசியல் வாதிகளே மூக்கில் விரல்வைக்கக்கூடியவை!
ஆனால் தமிழர் கூட்டமைப்பின்வேட்பாளர்களுக்குப் பிரசாரக் கூட்டம் நடத்த ராணுவ அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். மீறி நடத்தியவர்கள் மீது சிவில் உடையில் வந்த ராணுவம் தாக்கியது. இதுபற்றி, நீதியான, சுதந்திரமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம், மனித உரிமைகளுக்கான மையம் போன்ற நடுநிலை அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. 'ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்த வேண்டும்’ என வலியுறுத்தின. ஆனா லும், ராஜபக்ஷே கட்சி கூட்டணியினரின் வன்முறைகள் நின்ற பாடில்லை.
இந்தச் சூழலில், ஈழ மக்கள் வாக்களிக்க வருவார்களா என்ற சந்தேகம் எழ... அதை மீறி, நொந்துகிடக்கும் அந்த மக்கள் வாக்களித்து தமது தெளிவான முடிவைக் காட்டிவிட்டனர்.
''போர் முடிந்த ஈழத்தில் மேம்பாடுபற்றி மட்டுமே அரசாங்கம் பேசுகிறது. ஈழ மக்களுக்கு அரசியல் அதிகாரமும் வேண்டும் என்கிறோம். அதே சமயம், இலங்கை அதிபரின் மீது யுத்தக் குற்ற விசாரணை நடத்த வேண்டும் என உலக நாடுகளும் வலியுறுத்தின. இந்த இரண்டையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பதைத்தான் எமது மக்கள் இந்த உள்ளாட்சி சபைத் தேர்தலில் உறுதியாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள்!'' என்கிறார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணைச் செயலாளரும் யாழ்ப்பாண எம்.பி-யுமான சுரேஷ் பிரேமச்சந்திரன்.
உண்மைதான், 'ஈழம் வேண்டுமா, வேண்டாமா?’ என உலகம் அறிய ஐ.நா. சபை வாக்கெடுப்புநடத்த வேண்டும்!
நன்றி - ஜூ வி
நன்றி - ஜூ வி
19 comments:
ரியாஸ் வந்தாச்சு
வடை தின்னாச்சு
சதீசும் வந்தாச்சு..
இத்துப்போன...அப்படி
ஈழத் தமிழரின் நிலையை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளீர்கள் நன்றிகள் பல கோடி
ராஜபக்சே விரைவிலேயே வெறும் பக்சே ஆகப் போகிறான் ........இருக்குடி ஆப்பே
என்னத்த சொன்னாலும் அவர்கள் இபோ திருந்தமாட்டார்கள்... ஐக்கிய தேசிய கட்சிக்கு இப்ப ஒரு நோஞ்சாந்தான் தலைவர் இவரை தூக்கிபோட்டு வேறு ஒருவரை கொண்டு வராவிட்டால்..!! பக்சேக்கள் ராஜ்ஜியத்தில் உய்யலாலாதானிங்கோ...
காட்டான் குழ போட்டான்..
பாஸ் ,இந்த பதிவை பார்த்தவுடன் எனக்கு அதிர்ச்சி கலந்த சந்தோசம், ஏனென்டால் அந்த இரண்டாவது போட்டோ இருக்கே அது தான் நான் பன்னிரண்டு வருடங்களாக படித்த பாடசாலை......முக்கியமாக வட்டுக்கோட்டை தீர்மானம் என்று சொல்வார்களே அது இந்த பள்ளி முன்றலில் தான் முன்மொழியப்பட்டது. அத்தோடு தமிழர்கள் சார்பில் இலங்கையின் முதலாவது எதிர்க்கட்சி தலைவர் அமிர்தலிங்கம் அவர்கள் படித்தது இந்த பள்ளியில் தான்... தமிழீழத்துக்கு என்று ஒரு வரலாறு உருவாகுமாயின் இந்த பள்ளி தான் முன்பக்கத்தில் இடம் பிடிக்கும்...
சுதந்திரமில்லாத,ஜனநாயக பாதுகாப்பு இல்லாத நிலையிலும் கூட மக்கள் தங்கள் எண்ணங்களை உலகிற்கு வெளிப்படுத்தியிருப்பது வரவேற்க தக்கது.
ராஜபக்சேவும் அவருக்கு துணை போன அயோக்கியர்களும் தண்டிக்கப்படுவது நிச்சயம்.
ராஜபக்சேவுக்கு தூக்கு உறுதி
நல்லதே நடக்கட்டும்..
இனியாவது தமிழனுக்கு நல்லது நடந்தால் சரி :-)
சிபி....இதனால் பெரிய மாற்றங்களோ நன்மையோ இல்லையென்றாலும் இக்கட்டான சூழ்நிலையிலும் தங்கள் மனநிலையை வெளிக்காட்டியது தமிழர்களுக்கு என்ன தேவை என்பதைச் சொல்லியிருக்கிறது உலகிற்கு !
நன்றி எங்கள் பக்கம் உங்கள் பார்வைக்கு
வந்தேன்.
தோற்றுப்போன ராஜபட்சேவும், இற்றுப்போன அவர் எலக்ஷன் டெக்னிக்குகளும்//
ஆகா...என்னம்மா தலைப்பு வைக்கிறாங்க.
ஈழத்துத் தேர்தல் முடிவுகள் பற்றிய அருமையான காத்திரமான பார்வை.
ராஜ்பக்சேவின் அல்லக்கை எட்டப்பன்களுக்கு ஒரு இடம் கூட கிடைக்காமல் செய்திருந்தால்
இன்னும் சந்தோஸமாக இருந்திருக்கும்.காரணம் என்னவென்று தெரியவில்லை.
Thanks
Post a Comment