நாட்ல பல ஜோதிட சிகாமணிகள் அப்பாவி ஜனங்களை ஏமாத்தி தங்களோட வயிற்றுப்பசியையும், உடல் பசியையும், பெண் இச்சைகளையும் தீர்த்துக்கறாங்க,அதே போல சில சாமியார்கள்!!!அவங்களுக்கெல்லாம் சவுக்கடி கொடுக்கற மாதிரியான பெரியாரிச கொள்கைகள் முழங்கும் படம் தான் இந்த லோ பட்ஜெட் படம்..
சிட்டிசன், சாமுராய் ,ரமணா டைப்ல் இதுவும் ஆட்களை கடத்தி வெச்சு சமூகத்தை தன் வசம் திருப்ப யத்தனிக்கற இளைஞர்கள் கதை தான், ஆனா இதுல டிமாண்ட்ஸ் எல்லாம் கிடையாது.. ஜோதிடர்களால், சாமியார்களால் பாதிக்கப்பட்ட வாரிசுகள் எல்லாருமே பொடுசு அல்லது விடலைப்பசங்க என்பதுதான் படத்தின் பலமும், பலஹீனமும்..
இயக்குநரின் எண்ணம், கதை KNOT எதுவும் தப்பில்லை. எங்கே ஸ்லிப் ஆகிட்டார்னா சொல்ல வந்த கதையை தேங்காய் உடைச்ச மாதிரி சொல்லாம கடத்தல் கேஸை கண்டு பிடிக்க கிராமத்துக்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கம் ஹீரோ, அவருக்கு ஒரு காதலி , அவங்க காதல் எப்படி நிறைவேறுதுன்னு கொஞ்சம் ரூட் மாறிப்போறதால படத்தோட பேசிக் கெட்டுடுது..
அப்புறம் இந்த மாதிரி டகால்டி வேலை பண்ற ஜோதிடர்களை பொடிப்பசங்க எப்படி கடத்தி இருக்க முடியும்?கறதை பார்வையாளனுக்கு சந்தேகமே வராத மாதிரி காட்ட தவறியது திரைக்கதையின் பலஹீனம்..
படத்தில் சாட்டையடி வசனங்கள்
1. ஹீரோ - ஏய்.. உன் மனசுல என்ன நினைச்சிட்டிருக்கே? நான் PC தெரியுமில்லை? ( P C = POLICE)
யோவ்,, நான் M B C தெரியுமில்லை ( MOST BACKWARD COMMUNITY)
2. இந்த சாமியார்கள் காணாமப்போனதைப்பற்றி கவர்மெண்ட் ஏன் இவ்வளவு கவலைப்படுது? அவனுங்க என்ன நாட்டுக்கு சுதந்திரமா வாங்கிக்கொடுத்தாங்க?
3. பல குடும்பங்களை குட்டிச்சுவர் பண்ணி அந்த காசுல இவனுங்க பங்களா கட்டிக்கிட்டாங்க..
4. நான் ஏன் தான் இவ்வளவு அழகாப்பிறந்தேனோ தெரியல..
டேய்.. மேட்டர்க்கு வா!
அவ என்னை லவ் பண்றா - ன்னு நினைக்கறேன்..
5. ரேடியோ நியூஸ் - அவர்களை தீவிரவாதிகள் கடத்திச்சென்றிருக்கலாம் என தெரிகிறது
கடத்தப்பட்ட ஜோதிடர்கள் - டேய் டேய்.. நாங்க அந்த அளவெல்லாம் ஒர்த் இல்லைடா.. நல்லா தேடிப்பாருங்கடா. பக்கத்துல தான் எங்கேயாவது இருப்போம்..
6. சாமி கும்பிட்டதா சொன்னே! ஆனா நெற்றில திருநீறே இல்லையே?
அடப்பாவி, உனக்கு மூளையே இல்லையா? இப்படியா என்னை மாட்டி விடுவே?
7. ஹீரோயின் - எல்லாரும் இருக்கறப்ப திட்டறது, தனிமைல இருக்கறப்ப கொஞ்சறது இதானே ஆம்பளைங்க புத்தி?
8. யாருமே இல்லாத இடத்துல பேசிட்டு இருக்கறது, தன்னைப்போல சிரிக்கறது இதுதான் காதலா?
9. ஏய்.. இது நீ சுட்ட பணியாரம் மாதிரி தெரில, உங்கம்மா சுட்டதை நீ சுட்டுட்டு வந்துட்டே!!! சரியா ?
10. நீங்க 4 பேரும் பெரிய ஜோசியக்காரங்க தானே? உங்க 4 பேரையும் கடத்திட்டு வந்து வெச்சிருக்கோம்,உங்கள்ல யார் முதல்ல சாகறாங்கன்னு ஜோசியம் பார்த்து சொல்லுங்க பார்ப்போம்..
11. ரத்தத்துக்கும் ஜோசியத்துக்கும் சம்பந்தம் இருக்குன்னு சயின்ஸ் சொல்லுது.. செவ்வாய் தோஷம் இருக்கற ஜாதகப்பையனுக்கு செவ்வாய் தோஷம் உள்ள பொண்ணுதான் கட்டனும்..
12. நல்ல நேரமா பார்த்து எல்லா குழந்தைகளையும் ஆபரேஷன் பண்ணி எடுத்திட்டா அப்போ அவங்க வாழ்க்கைல கெட்ட நேரமே வராதா?
13. ட்வின்ஸ்ல 2 குழந்தைகளும் ஒரே நேரத்துல பிறந்தாலும், அவங்க தலை எழுத்து வேற வேற மாதிரி இருக்கே? அது எப்படி?
14. ஜோசியர்கள் சொல்றபடி எதாவது எதேச்சையா நடந்தாக்கூட அவங்களை தலையில தூக்கி வெச்சு கொண்டாடறோம். ஆனா அவங்க சொன்னபடி நடக்கலைன்னா அவங்களை நாம் ஏன் தட்டிக்கேக்கறது இல்லை.. ?
15. செவ்வாய் தோஷமும், நல்ல ஜாதகமும் சேராதுன்னு சொல்றீங்களே எத்தனையோ லவ்வர்ஸ் சேரலையா? அவங்கள்ல எத்தனை பேரு ஜாதகம் பார்த்து சேர்ந்தாங்க?
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
1. படத்தின் 90% கேரக்டர்கள் புது முகங்கள், கிராமத்து ஆட்களை சரியாக வேலை வாங்குவது.. அழகு
2. கூத்தாடியாக வருபவரின் நடிப்பு செம.. அவர் ஊரெல்லாம் கிட்டத்தட்ட பிச்சை எடுக்கும் காட்சி உருக்கம்.
3. போலீஸ் இன்ஸ்பெக்டராக வருபவர் ( அலெக்சாண்டர் )சாதா டிரஸ்ஸில் கிராமத்தானாகவும் , போலீஸ் யூனிஃபார்மில் மிடுக்கு ஏறுவதும் செம க்யூட்.
4. அரைக்கிறுக்கா... உனக்கிருக்கா பாடல் செம மெலோடி.. சூப்பர் ஹிட் பாடலை எடுத்த விதமும் ஓக்கே.. அந்த பாடலில் ஆங்காங்கே ஃப்ரீசிங்க் ஷாட்ஸ் யூஸ் பண்ணியது அழகு.
5. ஹீரோயின் பவினா மொக்கை ஃபிகராக இருந்தாலும் போகப்போக அவரது முகம் பழகி விடுகிறது. அவரது எதார்த்தமான நடிப்பும் ஓக்கே.
6. சத்யராஜை ஒரே ஒரு சீனில் நடிக்க வைத்து அவர் தான் பட ஹீரோ என்பது மாதிரி போஸ்டர்களில் செய்த மார்க்கெட்டிங்க் டெக்னிக் .
இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்
1. கதை சொல்லும் உத்தியில் இயக்குநர் தடுமாறியது ஏன்? ஃபிளாஸ்பேக் காட்சிகள் ஓவர், சாமான்யன் எது ஃபிளாஸ்பேக்,? எது இப்போ நடக்கற கதை?ன்னு தெரிஞ்சுக்க ரொம்பவே தடுமாறுகிறான்.
2. கடத்தப்பட்ட 4 பெரை ஒரு கல் தூணில் சாதாரண கயிற்றால் பொடியனுங்க கட்டி வைக்கறானுங்க. .. அந்த கல் கரடு முரடா இருக்கு. அந்த கயிறை 10 டைம் மேலேயும் கீழேயும் தேய்ச்சாலே கயிறு அறுந்துடுமே? கண்காணிக்க ஆள் இல்லாத பட்சத்துல அவங்க ஏன் தப்பிக்க முயற்சி செய்யலை?
3. ஊர்ல போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்டேஷன்ல இருக்கற நேரம் கொஞ்சம் தான், முக்காவாசி நேரம் அவர் மொக்கை ஃபிகர் மோஹனா பின்னால தான் சுத்திட்டு இருக்கார்.. இப்படி இருந்தா எப்படி அவர் மேல மக்களுக்கு மரியாதையும், பயமும் வரும்?
4. இன்வெஸ்டிகேஷன் பண்ண வந்த இன்ஸ்பெக்டர் எந்த துப்பையும் கண்டுபிடிக்கலையே? அவர் என்ன துப்பு கெட்ட மனுஷனா?
5. க்ளைமாக்ஸ்ல ஹீரோயினை கில்மா பண்ண ட்ரை பண்ணும் மந்திரவாதி கம் பூசாரி ரொம்ப விபரம் இல்லாதவனா இருக்கானே? இம்புட்டு அப்பாவியாவா வில்லன் இருப்பான்?
6. பெற்றோர்களுக்கு தங்கள் பெண்ணின் ஒவ்வொரு அசைவுக்கும் அர்த்தம் உடனே தெரிஞ்சிடும்.. ஹீரோயின் சாமியார்ட்ட இருந்து கண்ணீரோட வந்து அடம் பண்றா.. அங்கே போக மாட்டேன்னு, அவங்களுக்கு அது கூடவா புரியாது?
7. வெளியூரில் தன் மகனை ஹாஸ்பிடலில் ட்ரீட்மெண்ட்க்கு சேர்த்தும் கூத்தாடிக்கலைஞர் ஏன் ஜி ஹெச்சில் சேர்த்தவில்லை? கைல பணம் இல்லைன்னா அங்கே சேர்க்கலாமே?
8. நர பலிக்காக சிறுவனை கடத்தும் காட்சியும், அதன் பின் வரும் பலி காட்சியும் இன்னும் ஆழமாக சொல்லப்பட்டிருக்க வேண்டாமா?
எல்லா செண்ட்டர்களிலும் 10 நாட்கள் தான் ஓடும்..
எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் விமர்சனம் மார்க் - 39
எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - ஓக்கே
சி.பி கமெண்ட் - பகுத்தறிவாளர்கள், ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் பார்க்கலாம்.
ஈரோடு ஆனூர் தியேட்டரில் படம் பார்த்தேன்
4. இன்வெஸ்டிகேஷன் பண்ண வந்த இன்ஸ்பெக்டர் எந்த துப்பையும் கண்டுபிடிக்கலையே? அவர் என்ன துப்பு கெட்ட மனுஷனா?
5. க்ளைமாக்ஸ்ல ஹீரோயினை கில்மா பண்ண ட்ரை பண்ணும் மந்திரவாதி கம் பூசாரி ரொம்ப விபரம் இல்லாதவனா இருக்கானே? இம்புட்டு அப்பாவியாவா வில்லன் இருப்பான்?
6. பெற்றோர்களுக்கு தங்கள் பெண்ணின் ஒவ்வொரு அசைவுக்கும் அர்த்தம் உடனே தெரிஞ்சிடும்.. ஹீரோயின் சாமியார்ட்ட இருந்து கண்ணீரோட வந்து அடம் பண்றா.. அங்கே போக மாட்டேன்னு, அவங்களுக்கு அது கூடவா புரியாது?
7. வெளியூரில் தன் மகனை ஹாஸ்பிடலில் ட்ரீட்மெண்ட்க்கு சேர்த்தும் கூத்தாடிக்கலைஞர் ஏன் ஜி ஹெச்சில் சேர்த்தவில்லை? கைல பணம் இல்லைன்னா அங்கே சேர்க்கலாமே?
8. நர பலிக்காக சிறுவனை கடத்தும் காட்சியும், அதன் பின் வரும் பலி காட்சியும் இன்னும் ஆழமாக சொல்லப்பட்டிருக்க வேண்டாமா?
எல்லா செண்ட்டர்களிலும் 10 நாட்கள் தான் ஓடும்..
எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் விமர்சனம் மார்க் - 39
எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - ஓக்கே
சி.பி கமெண்ட் - பகுத்தறிவாளர்கள், ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் பார்க்கலாம்.
ஈரோடு ஆனூர் தியேட்டரில் படம் பார்த்தேன்
34 comments:
வடை
பஜ்ஜி
போண்டா,
படிச்சுட்டு வரேன்
படம் ரிலீஸ் ஆகி 6 நாள் கழிச்சு படம் பார்த்து இருக்கீங்க,சரி கில்மா படம்னா முதல் ஷோ பார்த்து இருபிங்க..#
//படம் ரிலீஸ் ஆகி 6 நாள் கழிச்சு படம் பார்த்து இருக்கீங்க,சரி கில்மா படம்னா முதல் ஷோ பார்த்து இருபிங்க..//
அவரே அதெல்லாம் மறந்து கம்முனு இருக்காரு நீங்க சும்மா இருக்க மாட்டீங்களே ஹீ ஹீ
இவ்வளவு விபரமாகச் சொன்னதற்கு thanks
வழக்கம் போல் கலக்கல்...
நல்லாயிருக்குங்க..
வெங்காயமா?
வழக்கம் போல் கலக்கல்...சி பி..
ஹிஹி, ஜோசியத்தைக் கிண்டல் பண்ணியிருக்காங்களா? அப்போ நாளைக்கு ஈவ்னிங் ஷோதான் பாக்கணும். ஏன்னா, நாளைக்கு 1:30 லேருந்து 3:00 வரைக்கும் ராவுகாலம் - குருவாரமில்லையா தல..? :-))
அப்பாலே, ஏன் வெங்காயம்னு பேர் வச்சாங்கன்னு நீங்க போட்டிருக்கிற சில படங்களைப் பார்த்தாலே தெரியுது. நல்லா உரிச்சிருக்காங்க போல...!
அசத்தலான விமர்சனம்....ஏனப்பா நீ கொடுத்த காசுக்கு கண்ணுல தண்ணி வரவசானுங்களா இல்லையா.....ஏன்னா படம் பேரு வெங்காயம்னு சொன்னியே...அதான் கேட்டேன் ஹிஹி!
நன்றி மாப்பிள இப்ப உங்கட விமர்சனம் பாத்திட்டுட்தான் படம் பார்கலாமான்னு முடிவெடுக்கிறன்...
காட்டான் குழ போட்டான்...
சி.பி. அண்ணா விமர்சனம் பார்த்தால் படம் பார்க்கலாமா... வேண்டாமான்னு முடிவு பண்ணிடலாம்.
நல்ல விமர்சனம்.
நல்ல நறுக் வசனங்கள்தாம்!
அப்போ படம் பார்க்கலாமின்னு சொல்றீங்களா?
நல்ல நாட்..ஜஸ்ட் மிஸ்-னு சொல்லுங்க..
”இயக்குனர் பல்பு வாங்கிய இடங்கள்” இதற்கு என்ன அர்த்தம் சார் ?
கலக்கல் விமர்சனம் தல!!ஹிஹி வருங்கால சிபியானந்தா சுவாமிகளுக்கும் பொருந்தும்!
suppr
உங்கள் கொமண்டே படத்தின் முழு சாராம்சத்தையும் ஒற்றை வரியில் சொல்லிட்டுதே.
நாவாந்துறையில் நடந்தது என்ன? ஆதாரங்களுடன் கள அறிக்கை
இருந்தாலும் முதல் பத்தியில் உங்கள் ஆத்ம நண்பர் ஆர.கே.சதீஷ்குமாரை இந்த அளவிற்கு கேவலப்படுத்தி இருக்கக்கூடாது... தப்பு பண்ணிட்டீங்க சிபி... ஒழுங்கா காலைல அவருக்கு போன் பண்ணி மன்னிப்பு கேளுங்க...
வணக்கம் நான் சங்ககிரி ராச்குமார்,நல்ல விமர்சனத்திக்கு நன்றி.
பல்பு கம்பனி ஓனர் நண்பர் சிபிக்கு என் பதில்கள்
பல்பு:1க்கு
முடிந்த அளவுக்கு ப்ளாஸ்பேக் காட்சிகளுக்கு கொசுவத்தி சுருளையே பயன்படுத்தி இருக்கேன்.இன்னும் என்னதான் செய்ய
2:கயிறை அருத்து கிட்டு நேத்தே ஓடிட்டான் இன்னிக்கு நல்லா கட்டுங்க”னு சொல்வாங்க கவனிக்கலயா
3:நம்ம ஊரு வீரப்பன் சத்திரத்து போலீஸ் ஸ்டேசன்ல இருக்கற போலீஸ் எல்லாம் காக்க காக்க சூர்யா மாதிரி வெரப்பா மக்கள பயமுறித்தி கிட்டே தான் இருக்காங்களா நண்பா..போய் பாருங்க நண்பா தமாசா இருப்பாங்க
4: மோப்ப நாய இழுத்து கிட்டே ஓடிகிட்டே இருக்கற போலீச பாத்தே பழகிட்டோம் நண்பா நம்ம ஊரு போலிசுங்க பிரச்சன முடிஞ்ச பிறகு தான வருவாங்க நம்ம ஆளு முன்னாடியே வராரே போதாதா
5:மொரட்டு தாடி வச்சுக்கிட்டு பைப் சிகரெட் வச்சு கிட்டு கண்ண அகல விரிச்சு கட்ட கொரல்ல பேசர கர்சியல் வில்லன் மாதிரியே வேனுமா நண்பா நித்யானந்தா அப்படியா இருக்காரு
6:எல்லா அப்பாவும் சிபி அண்ணான மாதிரி சைக்காலஜி படிக்கலயே .அது உண்மை சம்பவம் நண்பா end title ல விளக்கமா போட்டிருக்கோம் பாருங்க
7:10 அடி தூரத்துல இருக்குற எதோ ஒரு ஆஸ்பத்திரியா இல்ல பல கிலோ மீட்டர் தூரம் இருக்கற ஜி.ஹெச்சானு சிபி அண்ணன் முடிவு பண்ண முடியாது அந்த கூத்தாடி மனனிலைல இருந்து பாருங்க ..புரியும்
8 வது பல்பு நீங்க தர வேண்டாம் அண்ணா அது ஏற்கன்வே என் கிட்ட இருக்கு அது நான் பன்னின தப்பு தான்.ஒரு சில பெண்கள் அந்த காட்சில தியேட்டர விட்டு ஓடிட்டாங்க அதனால கட் பண்ணிட்டேன்.வேனும்னா என் தங்கச்சி அபிராமிய கூட்டிட்டு போய் பாருங்க அப்போ புரியும்
மூடனம்பிக்கை உள்ளவர்கள் இந்த படத்தை பார்த்து தெளிவு பெற்று விட்டால் உங்களுக்கு ஏதாவது வருமானம் பாதிக்கிறதா அண்ணா(சைடு பிஸ்னஸ் எதாவது...?) சிபி கமெண்ட ஏன் இப்படி எதிர்மறையாக இருக்கிறது..
நல்ல விமர்சனம்.
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
ஹீரோயின் பேரு பவினா தானே.அப்புறம் ... உங்காளு மோஹனா பேரை யும் யூஸ் பண்ணிகிட்டீங்களே ......எப்பூடி..?நாங்களும் சிபிஐ தான் மக்கா ...ஹி..ஹி..ஹி
ஹலோ சிபி சார். எங்கே போயிட்டீங்க. இங்க raaku சாரின் கணைகளுக்கு எதிர் அஸ்திரங்கள் எங்கே????
வெங்காயத்தை ரொம்பத்தான் தோலுரிச்சுட்டீங்க.
எத்தனைதான் படமெடுத்தாலும் சில முட்டாள்தனமான நரபலி போன்ற நம்பிக்கைகளை முழுவதும் நீக்க முடியவில்லை.
raaku said
//சிபி கமெண்ட ஏன் இப்படி எதிர்மறையாக இருக்கிறது//
@ raaku
cool sir. சிபி கமெண்ட் எப்போதும் நெகடிவ்வாக இருக்காது.
// இருந்தாலும் முதல் பத்தியில் உங்கள் ஆத்ம நண்பர் ஆர.கே.சதீஷ்குமாரை இந்த அளவிற்கு கேவலப்படுத்தி இருக்கக்கூடாது... தப்பு பண்ணிட்டீங்க சிபி... ஒழுங்கா காலைல அவருக்கு போன் பண்ணி மன்னிப்பு கேளுங்க... //
நான் Philosophy பிரபாகரன் கருத்தை வழிமொழிகிறேன். R.K.S கிட்ட மன்னிப்பு கேட்டீங்களா?
Post a Comment