Thursday, August 11, 2011

ரொமான்ஸ் ரகசியங்கள் !

ரொமான்ஸ் ரகசியங்கள் !


 ஆண், பெண்ணின் காதல் வாழ்க்கைக்கு முக்கியமான இரண்டு அடிப்படை விஷயங்களைச் சொல்கிறார்கள் நிபுணர்கள். ஒன்று... பேச்சு. மற்றொன்று... தொடுதல்!

'ஸ்வீட் நத்திங்ஸ்' (Sweet nothings) என்பார்கள். காதலிக்கும் பருவத்தில் காதலர்கள் கண்டதையும் பேசிக்கொண்டே இருப்பார்கள். பார்த்த சினிமா, கேட்ட பாடல், ஜோக்குகள், பிடித்த மழை, பிடிக்காத மனிதர்கள்... என்று இந்தப் பேச்சுதான், காதல் என்கிற நீண்ட உறவின் ஆரம்பம். செல்போன் வந்துவிட்ட பிறகு. அர்த்தமற்ற ஸ்வீட்டான பேச்சுகளுக்கு அளவே இல்லா மல் போய்விட்டது.; அதுதான் காதலின் நெருக்கத்தையும் வளர்க்கிறது!

கணவனும் மனைவியும் முதல் இரண்டு வருடங்களிலேயே பேசி முடித்துவிடுகிறார்கள். அதற்குப் பிறகு பேசுவதற்கு ஏதும் இல்லாமல், அல்லது பேசப் பிடிக்காமல் மௌனமே அவர்களின் உறவை ஆக்கிரமிக் கிறது’ என்கிறது ஒரு தியரி. நம் சமூகத்தில் உள்ள பல தம்பதிகளைக் கவனித்துப் பார்த்தால்... இதில் இருக்கும் உண்மை விளங்கும். வாழ்க்கையின் சம்பிரதாயக் கடமை களை செய்து முடிப்பதில்தான் பெரும்பாலும் கவனமாக இருப்பார்கள். அவர்களுக்கு இடையே கண்ணுக்குத் தெரியாத சுவர் ஒன்று இருக்கும்.
 
'ஒரே ஒரு துணையுடன் வாழ்க்கை முழுக்க வாழ்வதா... அது எப்படி சாத்தியம்?' என்று நம்மூர் ஜோடிகளைப் பார்த்து ஆச்சர்யப்படுகிறார்கள் மேல்நாட்டினர். பேச்சு, உடல் உறவு, மனப்பகிர்வுகள் குறைந்து போகும் நிலையில்... அந்த உறவை விவாகரத்தின் மூலம் துண்டித்து விட்டு, புதிய உறவுகளைத் தேடுவது அவர்களின் வழக்கம். ஆனால், நம்முடைய கலாசாரம் வேறு. ஒருவனுக்கு ஒருத்தி, காதல் உணர்வு, குடும்பப் பாசம், கடமை உணர்வுகள் எல்லாம் கலந்தது நம்மூர் ரொமான்ஸ்! ப்ளஸ், மைனஸ் இரண்டுமே இதில் உண்டு.

காதலிக்கும் பருவத்தில், பேச்சிலிருந்து ஆரம்பிக்கும் உறவு, இன்பம் தரும் ஸ்பரிசங்களாக மெள்ள அடுத்த கட்டத்துக்கு நகர்கிறது. அகஸ்மாத் தாகப் பட்டுக் கொள்ளும் விரல்கள், உடலின் கவர்ச்சிகரமான பாகங்கள் ஒன்றை ஒன்று உரசிக் கொள்வதெல்லாம் அந்தப் பருவத்தின் கிக்கான விஷயங்கள். அதிலும் முதல் முத்தம் என்பது ஆண், பெண்ணை பரவச நிலைக்கே எடுத்துச் செல்கிறது. 'தினமும் மூன்று முறையாவது உதட்டோடு முத்தமிட்டுக் கொள்ளும் ஜோடிகளால் நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க முடிகிறது' என்கிறது அறிவியல் உண்மை.

துரதிருஷ்டவசமாக நம்மூரில் இந்தத் 'தொடுதல்’ எனும் அற்புதமான விஷயம், வெகு சீக்கிரம் ஜோடிகளிடமிருந்து விடுபட்டு விடுகிறது. 'தொடுதல்’ என்றால் உடலுறவு அல்ல; அது சில நிமிடங்களில் முடிந்து போகிற 'பேஸிக் இன்ஸ்டிங்க்ட்' (Basic Instinct). ஆனால், தொடுதல் எப்போதும் நிகழக் கூடியது. முத்தமிடுவது, அணைப்பது, விரல்களைப் பின்னிக் கொள்வது, உச்சி முகர்வது, கிள்ளுவது, வருடுவது, இடுப்பை அணைத்துக் கொள்வது என்று எல்லாமே அந்தத் தொடுதலில் வருகிறது.

காலம் காலமாக பெண்களை அடுப் படியில் அடிமையாகவே வைத்திருந்த மனோபாவத்தில் இருக்கும் இந்திய ஆண்களுக்கு, பெண்களை எப்படி அணுகுவது என்பது பெரும் பிரச்னை.

அமெரிக்காவில் சாஃப்ட்வேர் தொழி லில் இருந்துவிட்டு, படம் இயக்கும் ஆசையுடன் இப்போது கோடம்பாக் கத்தில் செட்டிலாகியிருக்கும் ஒரு நண்பர் சொன்னார்... ''தமிழ் சினிமாவின் ஹீரோக்களைப் பாருங்கள்... அவர் களுக்கு ஒரு பெண்ணிடம் எப்படிப் பேசுவது, எப்படி அணுகுவது போன்ற வற்றைப் பற்றிப் பெரிய பிரச்னை இருக் கிறது. அந்தக் கால எம்.ஜி.ஆரிடம் இருந்து இப்போதைய சிம்பு வரை பெண்களுக்கு அட்வைஸ் செய்வதையே காலம் காலமாகச் செய்து வருகிறார்கள். அல்லது மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறார்கள்.

'இப்படித்தான் இருக்க வேணும் பொம்பள’ என்று பாடினார் எம்.ஜி.ஆர். இன்றைய ஹீரோவோ 'தலையில கல்லைத் தூக்கிப் போட்டு கொன்னுடுவேன். மரியாதையா காதலிச் சுடு’ என்று பெண்ணை மிரட்டுகிறான். மற்றொருவன் 'அமெரிக்க மாப்பிள்ளை கிடைச்சா விட்டுட்டுப் போயிட்டே இருப்பீங்கடி...’ என்று பிதற்றுகிறான். இதில் உச்சகட்டமாக காதலிக்கவில்லை என்பதற் காக கதாநாயகியின் மீது கோர்ட்டில் வழக்கே போட்டு விடுகிறான் மற்றொரு ஹீரோ.

பெண் என்பவள் ஒரு சக மனுஷி, அவளிடம் நிதானமாக, அன்பாகப் பேச முடியும், விவாதிக்க முடியும் என்று ஏன் இவர்களுக்குத் தோணுவதில்லை?’' என்று அந்த இயக்குநர் கேட்டபோது, அதிலிருக்கும் நியாயத்தை உணர முடிந்தது.

நம் ஆண்களுக்கு பெண்ணிடம் பேசவேண்டிய மென்மொழியே தெரியாமல் போகிறது. பகிரங்க ரொமான்ஸ் ரகசியங்களான இந்தப் பேச்சும், சின்ன சின்ன ஸ்பரிசங்களும் கணவன் ஜாதிகளுக்குப் புரியாமல் போகிறது.

பெண்களும் இந்தத் தொடுதல், கட்டிப்பிடித்தல், முத்தமிடுதல் போன்ற நல்ல உறவுக்கான அடிப்படை விஷயங்களில் கட்டுப்பெட்டித்தனமாகவும், தொட்டாற்சிணுங்கியாகவும் இருக்கிறார்கள் என்பது மற்றொரு பிரச்னை.

தொடுதல் என்கிற 'ஹீலிங் டச்’ மிக அற்புதமான பல சிக்கல்களைத் தீர்க்கக் கூடிய மருத்துவம். அது ஒருவகையான மஸாஜ்தான். ஆதாமைக் கடவுள் தொட்டு ஆசீர்வதிப்பது போல்தான் பிரபல ஓவியத்தை வரைந்தார், இத்தாலிய நாட்டைச் சேர்ந்த ஓவியர் மைக்கேல் ஆஞ்சலோ. நவீன மருத்துவத்தின் தந்தை என்று போற்றப்படும் கிரேக்க நாட்டைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் ஹிப்போகிரேட்ஸ்... 'மஸாஜ் மற்றும் தொடுதல் ஆகியவை பெரும்பாலான நோய்களைத் தீர்க்கின்றன' என்று பிரசாரமே செய் தவர்.

'ஹீலிங் டச்’ எனப்படும் தொடுதல் மருத்துவம் உலகமெங்கும் மிகவும் பிரபலமானது. மனிதர்கள் ஒருவரை ஒருவர் உணர்வுப்பூர்வமாகத் தொடும்போது... மூளையில் 'எண்டோர்ஃபின்’ (Endorphin)எனும் ரசாயனம் சுரந்து உற்சாகமூட்டு வதாகக் கண்டறிந்திருக்கிறார்கள்.

ஆதலினால் அன்புக்குரிய ஜோடிகளே... நிறைய பேசுங்கள். அவை அர்த்தமற்ற பேச்சாகக்கூட இருக் கட்டும், பேசுங்கள். அதேபோல் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தொடுங்கள். தழுவுங்கள், முத்த மிடுங்கள், கரங்களைக் கோர்த்துக் கொள்ளுங்கள். இந்த இரண்டு ரகசியங்களையும் கடைப்பிடித்தால்... உங்கள் ரொமான்ஸ் நாளுக்கு நாள் வளரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

'தொடுதல் எனும் காதலுணர்வால், மனிதர்கள் கவிஞர்கள் ஆகிறார்கள்' என்றார் தத்துவ அறிஞர் பிளாட்டோ. கவிஞர்களாக மட்டுமல்ல, அவர்கள் நல்ல காதலர்களாகவும் ஆகிறார்கள்!

18 comments:

Unknown said...

அண்ணே ஒரு நாளைக்கு உங்களுக்கு எத்தன ஓட்டு தான் போடுறது...மரியாதையா அக்கவுண்ட்ல பணத்த போடு ராஸ்கல்!

Unknown said...

அண்ணே பாடம் சூப்பர்...நன்றி ஹிஹி!

கோகுல் said...

வணக்கம் ஹீலிங் டச் டாக்டர் சிபி.
ரொமான்சுக்கு தேவையான ரகசியங்கள் தான்.

KANA VARO said...

விக்கியுலகம் said...
அண்ணே ஒரு நாளைக்கு உங்களுக்கு எத்தன ஓட்டு தான் போடுறது...மரியாதையா அக்கவுண்ட்ல பணத்த போடு ராஸ்கல்//

I like this.

Menaga Sathia said...

பகிர்வுக்கு நன்றி!!

சக்தி கல்வி மையம் said...

மாப்ள.. ஒரு நாளைக்கு உங்களுக்கு எத்தன ஓட்டு தான் போடுறது...மரியாதையா அக்கவுண்ட்ல பணத்த போடு ராஸ்கல்!

சுதா SJ said...

ஹி ஹி
நல்லாத்தான் இருக்கு,
சூப்பர் பாஸ்

Anonymous said...

சூப்ப௫ங்கோ!!!! சிறந்த பதிவு...

Mohamed Faaique said...

சூப்பர் பதிவு தல...
தேவையான பதிவு....
பகிர்ந்தமைக்கு நன்றி

தமிழ்வாசி பிரகாஷ் said...

விக்கியுலகம் said...
அண்ணே ஒரு நாளைக்கு உங்களுக்கு எத்தன ஓட்டு தான் போடுறது...மரியாதையா அக்கவுண்ட்ல பணத்த போடு ராஸ்கல்!///\\

சேம் பிளட்... ஹே,,,ஹீ,,,

சசிகுமார் said...

கலக்குறீங்க

செல்ல நாய்க்குட்டி மனசு said...

நீங்க ஏன் இந்த டாபிக் ல தனித்தொடர் எழுதக் கூடாது .உங்கள் அனுபவம் பலருக்கு வழி காட்டலாமே!

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

அடேங்கப்பா....

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

10,24,12

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அண்ணே அப்படியே ராஜ்டீவில டெய்லி நைட்டு 10 மணிக்கு டைம் வாங்கிடுங்கண்ணே....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அண்ணே ஒரு நாளைக்கு உங்களுக்கு எத்தன ஓட்டு தான் போடுறது...மரியாதையா அக்கவுண்ட்ல பணத்த போடு ராஸ்கல்!

ராஜி said...

Avasiyamana, arthamula, avasiyamana padhivu
vazhukal cp sir.

இராஜராஜேஸ்வரி said...

அர்த்தமுள்ள பகிர்வு.