Wednesday, August 03, 2011

ஸ்டாலின் கைது...பின்னணியில் சசிகலாவா? திவாகரனா? ஜூ வி கட்டுரை

ஸ்டாலின் கைது... காரணம் திவாகரனா?

சிக்கலில் டெல்டா போலீஸ்

'விபத்தில் இறந்த ஒரு மாணவ​னின் மரணத்துக்கு, தி.மு.க-வின் சமச்சீர்கல்விப் போராட்டம்தான் காரணம்!’ என்று குற்றம் சாட்டி, கைது களேபரம் நடத்தி இருக்கிறது தமிழக போலீஸ். இதில், முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலினும் கை​தாக... தமிழகம் முழுவதும் மறியல் நடத்தித் திமிலோகப்படுத்திவிட்டது தி.மு.க.! 

கடந்த 29-ம் தேதி 'சமச்சீர் பாடப் புத்தகங்களை உடனே வழங்க வேண்டும்’ என்று தி.மு.க. சார்பில் தமிழகம் முழுக்க ஆர்ப்பாட்டம்... திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களும் வகுப்புகளைப் புறக்கணித்து, தி.மு.க-வினரோடு ஆர்ப்பாட்டம் செய்துவிட்டு வீடுகளுக்குப் புறப்பட்டனர். 

தஞ்சாவூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து ஒன்றில் சில மாணவர்கள் ஏறினர். சற்று நேரத்தில், மஞ்சக்கொல்லை என்கிற இடத்தில் லாரி ஒன்று மோதி, அந்தப் பேருந்து கவிழ்ந்ததில், 12 பேருக்கு காயம். விஜய் என்கிற மாணவன் மட்டும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தான்.
இதற்கிடையில், மன்னார்​குடியில் வாக்காளருக்கு நன்றி அறிவிப்பு பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்தார் ஸ்டாலின். வழியில் கொரடாச்சேரி அருகே, பேருந்து விபத்தில் பலியான மாணவன் விஜய்யின் வீட்டுக்குச் சென்று ஆறுதல் கூறிவிட்டு, திருத்துறைப்பூண்டிக்குக் கிளம்பினார்.


ஆனால், ஆலத்தம்பாடி என்ற இடத்தில் ஸ்டாலின் காரை போலீஸ் வாகனங்கள் வழிமறித்தன. தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. ரவிக்குமார், திரூவாரூர் எஸ்.பி. தினகரன் ஆகியோர் ஸ்டாலினுடன்இருந்த திருவாரூர் தி.மு.க, மாவட்டச் செயலாளர் கலைவாணனைக் கைது செய்ய முயன்றனர். 

காரணம் இல்லாமல் கைது செய்யப்படுவதாக, ஸ்டாலின் மற்றும் தி.மு.க-வினர் சாலை மறியல் செய்தனர். உடனே ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள் போலீஸ் வேனில் ஏற்றப்பட்டு, திருவாரூர் வர்த்தக சங்கக் கட்டடத்தில் தங்கவைக்கப்பட்டனர். இந்தத் தகவல் பரவியதும், தமிழகம் முழுக்க தி.மு.க-வினர் போராட்டத்தில் இறங்க... சற்று நேரத்தில், 'கலைவாணன் மட்டும்தான் கைது’ எனக் கூறி, ஸ்டாலின் உள்ளிட்ட மற்றவர்கள் விடுவிக்கப்பட்டனர்!


கைதான பூண்டி கலைவா​ணனிடம் பேசினோம். ''பொய் வழக்குப் போட, ஒரு அளவு இல்லை​யா? மாணவன் விஜய் விபத்தில் இறந்ததற்கும், எங்கள் மீது வழக்குப் போடுவதற்கும் என்ன சம்பந்தம்? இனி யாரும் இடி விழுந்து இறந்தால்கூட, எங்களைத்தான் கை காட்டுவார்கள்போல் தெரிகிறது!'' என்றார் சீறலாக.


அன்று இரவு மன்னார்குடிப் பொதுக் கூட்டத்தில் பேசிய டி.ஆர்.பாலு, ''விபத்து நடந்த அன்று கலைவாணன் ஊரில்தான் இருந்தார். அப்போது ஏன் அவரைக் கைது செய்யவில்லை? ஸ்டாலின் வந்த பிறகு கைது செய்து, பிரச்னையை வேண்டும் என்றே தூண்டி இருக்கிறது காவல் துறை. 'ஸ்டாலினைக் கைது செய்தால் நடப்பதே வேறு’ எனத் தொண்டர்கள் முழங்கியதால், பயந்துபோய் விடுதலை செய்துவிட்டனர்!'' என்றார்.


அடுத்துப் பேசிய ஸ்டாலின், ''எங்கள் காரை வழிமறித்த போலீஸார் கலைவாணனை 'விசாரணைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்’ என்றனர். 'வாரன்ட் இருக்கிறதா? யார் புகார் கொடுத்தது?’ என்று கேட்டபோது, பதில் சொல்லவில்லை. இந்த நிகழ்ச்சி​யைத் தடுக்க வேண்டும் என்பதற்காகப் போடப்பட்ட திட்டம்தான் அது. முடிந்ததா? நாம் 2016-ல் ஆட்சியைப் பிடிப்போம். போகிற போக்கைப் பார்த்தால், அதற்கு முன்பே தேர்தல் வரும்போலத் தெரிகிறது!'' என்று பேசினார்.


ஸ்டாலின் கைது குறித்துப் பேசும் உள்ளூர் அரசியல் புள்ளிகள் சிலர், ''தமிழகத்தில் அமோக வெற்றியை அ.தி.மு.க. அடைந்தாலும், சசிகலாவின் சொந்த ஊரான மன்னார்குடியில் தோல்வி அடைந்தது. சசிகலாவின் சகோதரர் திவாகரன் இதில் ரொம்பவே அப்செட். அவரை இன்னும் வெறுப்பாக்கும் விதமாகத்தான் திருவாரூரில் நடத்த வேண்டிய நன்றி அறிவிப்புக் கூட்டத்தை, மன்னார்குடியில் நடத்தத் திட்டமிட்டது தி.மு.க. இதில் கடுப்பான திவாகரன், கார்டன் வரை ஆதங்கத்தைக் கொண்டு போனதால்தான் ஸ்டாலின் கைது வரை போனது!'' என்றனர்.


திவாகரன் தரப்பில் பேசியபோது, ''அன்று பள்ளி நடந்து இருந்தால், மாணவன் விஜய் விபத்தில் சிக்கி இருக்க மாட்டான். எனவே, ஒரு மாணவனின் சாவுக்குக் காரணமானவர்கள், அதை மறைப்பதற்கே திவாகரன் பேரை இதில் இழுக்கிறார்கள்!'' என்றனர்.


நிலைமையை சரவர சமாளிக்கத் தவறியதாக, சம்பவம் நடந்த மறு நாளே விழுப்புரம் மாவட்டத்துக்குத் தூக்கி அடிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் எஸ்.பி-யான தினகரனிடம்


''கொரடாச்சேரி பெருமாளகரத்தில் இருக்கும் பாஸ்கர் என்பவர் புகார் தந்தார். அதன் அடிப்படையில்தான் திருவாரூர் மாவட்ட தி.மு.க செயலாளர் பூண்டி கலைவாணன் உட்பட ஏழு பேர் மீது, 'பள்ளி மாணவர்களை மிரட்டுதல், பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் அத்து மீறி நுழைதல், சட்ட விரோதமாக செயல்படுதல், மறியல் செய்தல்’ என நான்கு வழக்குகள் பதிவாகின. 

கலைவாணனை விசாரணைக்கு அழைத்தபோது, ஸ்டாலின் உள்ளிட்டவர்கள், 'எங்களையும் அழைத்துச் செல்லுங்கள்’ என்றனர். 'வழக்கு கலைவாணன் மீது மட்டும்தான். அவரை ஒப்படையுங்கள்’ என்றோம். அதற்கு மறுப்புத் தெரிவித்து, சாலை மறியல் செய்தார்கள். அதனால்தான் அனைவரையும் வேனில் ஏற்றி, திருவாரூர் கொண்டுவந்தோம்!'' என்றவரிடம், டிரான்ஸ்ஃபர் குறித்துக் கேட்டோம்.


''அரசுப் பணியில் டிரான்ஸ்ஃபர் என்பது வழக்கம்​தானே... டிரான்ஸ்ஃபருக்கும் இந்த விவகாரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை!'' என்றார்!
நிஜமாவா?

மேலும் சில கேள்வி பதில்கள்


1. பாகிஸ்தானில் இருந்து வந்த இளம் அழகு அமைச்சர் ஹீனா, 'இந்தியாவுடன் நட்புறவுகொள்ளவே ஆசைப்படுகிறோம்’ என்கிறாரே?
பாகிஸ்தானில் இருந்து வந்த எத்தனையோ பேர் இதே வார்த்தையைச் சொல்லிப் போன கதைகள் உண்டு. ஆனால், அப்போது எல்லாம் கிடைக்காத பிரபல்யம் ஹீனாவுக்குக் கிடைத்து இருக்கிறது. 34 வயதான ஹீனா ரப்பானியை, இந்தி நடிகை தீபிகா படுகோனுடன் ஒப்பிட்டு எழுதியது டெல்லி பத்திரிகை ஒன்று.

ராபர்ட்டோ கவாலி கூலிங் கிளாஸ், முத்து நகைகள், ஹெர்மன் பர்கின் கைப்பை... என ஹீனா வித்தியாசமாக இருந்தார். பிரிவினைவாதத் தலைவர்கள் சையது ஜிலானி, மிர்வைஸ் உமர் ஃபரூக் ஆகியோரை சந்தித்ததன் மூலம்  எல்லாவற்றிலும் தான் வித்தியாசமானவர் என்றும் காட்டிக்கொன்டார்.

மற்றபடி 'நட்புறவு’ என்பதெல்லாம் 'அழகான’ பொய்!

 .
2முதல்வர் மம்தா பானர்ஜி அணுகுமுறையும், முதல்வர் ஜெயலலிதா அணுகுமுறையும் எப்படி? 


''என்னுடைய உடலை சிதையில் வைக்கும்போது, நான் கட்டியிருக்கும் சேலை தவிர வேறு எந்த சொத்தும் எனக்கு இருக்காது!'' என்று கொல்கத்​தாவில் கடந்த வாரம் நடந்த கூட்டத்தில் பகிரங்கமாக அறிவித்திருக்கிறார் மம்தா பானர்ஜி. படிக்கப் பெருமையாகவும்... ஏக்கமாகவும் இருக்கிறது!


3புதிய பொருளாதாரக் கொள்கையே ஊழலுக்குக் காரணம் என பிருந்தா காரத் குற்றம் சாட்டி உள்ளாரே? 


அதிகப்படியான ஊழலுக்கு அதுதான் காரணம்!

புதிய பொருளாதாரக் கொள்கை காரணமாக, அளவுக்கு அதிகமான பணம் கடந்த பத்து ஆண்டு​களில் இந்தியாவுக்குள் நுழைந்தது ஊழல்வாதிகளுக்கு வசதியாகிப்போனது.

இந்திய பிரதமராக இருந்த ராஜீவ் மீதான போஃபர்ஸ் வழக்கு 60 கோடிதான். 1996 ஜெ. மீது போடப்​பட்ட வழக்கு 66 கோடிதான். ஆனால், இன்று வார்டு கவுன்சிலர்களே இதைவிடப் பல மடங்கு பணம்வைத்து இருக்கிறார்கள். வெளியில் இருந்து உள்ளே நுழையும் பணம், ஊழல்வாதிகள் கையை இன்னும் அதிகமாக ஊறவைக்கிறது என்பது உண்மைதான்!


4
ராமதாஸ் அமைக்க நினைக்கும் மூன்றாவது அணி முயற்சி வெற்றி பெறுமா? 

ஏதாவது ஒரு பிரச்னையின் அடிப்படையில் மூன்றாவது அணி அமைத்தால், வெற்றி பெறும் வாய்ப்பு உண்டு. தான், தலைமை ஏற்க வேண்டும் என்ற காரணத்துக்காக மூன்றாவது அணி அமைத்​​தால், பலன் பூஜ்ஜியமாகத்தான் இருக்கும். பொதுவாக மூன்றாவது அணி வெற்றி பெறாது என்பதற்கு, தமிழகத்திலும் மத்திய அரசிலும் பல எடுத்துக்காட்டுகள் உண்டு. ராமதாஸைப் பொறுத்த வரை, அடுத்த தேர்தல் வரை இந்த கோஷத்தை எழுப்பி, கடைசி நேரத்தில் ஏதாவது கூட்டணியில் சேர்ந்துவிடுவார்!

 5
தி.மு.க-வுடன் ம.தி.மு.க-வை இணைத்தால், அரசியல் களம் சூடு பிடிக்குமா? 


இனி ஒரு முறை கருணாநிதியின் முகமூடியாக மாற வைகோ விரும்ப மாட்டார். உங்கள் ஆசை நிறைவேறினால், தி.மு.க-வின் இன்றைய தவறுகளுக்கு தன்னிலை விளக்கம் கொடுப்பதில் வைகோ விரயமாவார்!



6எத்தனை பொதுக்குழு கூடினாலும், தி.மு.க-வில் மிக மூத்தவரான பேராசிரியர் அன்பழகனை (ஒரு முறையாவது) தலைவர் ஆக்க வேண்டும் என யாருமே பேசுவது இல்லையே, ஏன்? 


அன்பழகனும் நெடுஞ்செழியனும் அண்ணா​மலைப் பல்கலைக்கழகத்தில் இருந்து ஒன்றாக வந்தவர்கள். நண்பர்கள் இருவருக்கும் தலைமைப் பதவி வசப்படவில்லை. இரண்டு பேருமே மக்களை வசியப்படுத்தும் பேச்சாளர்களே தவிர... செயல் வீரர்கள் அல்ல என்பதை தி.மு.க. தொண்டன் அறிவான்.


இப்போது இருக்கும் பொதுச் செயலாளர் பொறுப்​பையே முறையாக கவனிக்காதவருக்கு, தலைவர் பதவி எப்படி தரப்படும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?


7இலங்கைப் பிரச்னைக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனி மாநாடு நடத்துகிறதே? 


தனியாக ஒரு மாநாடு நடத்தலாம் என்ற முடிவுக்கு வரவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 30 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது. இப்போதும் அவர்களிடம் குழப்பம் மட்டுமே தொடர்கிறது.

'ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் பிரிந்துபோகும் தன்மையுடன்கூடிய சுய நிர்ணய உரிமை உண்டு. இதை ஏற்காதவர்கள் மார்க்சியவாதிகளும் அல்ல. ஜனநாயகவாதிகளும் அல்ல’ என்றார் லெனின். ஆனால், அதற்கு எதிர் திசையில் பிரகாஷ் காரத்தும் ச.தமிழ்ச்செல்வனும் வேகவேகமாக நடக்​கிறார்கள்!


8ஜெயலலிதாவுக்குப் பழிவாங்கும் எண்ணம் இல்லை என்கிறாரே சோ?
உண்மைதான். கடந்த தி.மு.க. ஆட்சியிலும் கோலோச்சிய பல ஐ.ஏ.எஸ்-களுக்கு இப்போதும் முக்கிய இடம் கொடுத்துள்ளார். திகிலில் உறைய​வைத்த ஒரு வழக்கில் இருந்து தி.மு.க. வி.ஐ.பி-யைக் காத்த மனிதரை தனக்குப் பக்கத்திலேயேவைத்துக்​ கொண்டுள்ளார் முதல்வர். இப்படிப்​பட்ட ஜெயல​லிதாவை பழிவாங்கும் எண்ணம்​கொண்டவராக எப்படிச் சொல்ல முடியும்?


9யார் வீட்டுக்கு ரெய்டு போனாலும் முக்கியமானது எதுவும் கிடைப்பதில்லையே ஏன்? 


முன்கூட்டியே தகவல் தெரிந்துவிட்டால் எப்படி இருக்கும்? சமீபத்தில் நடந்த ஒரு ரெய்டில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிக்கும் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கும் முன்கூட்டியே தகவல் போய்விட்டது. வீட்டை இரண்டு பேருமே பளிச்செனத் துடைத்துவைத்தனர். அதிகாரிகளுக்குள் கருங்காலிகளும் கன்னக்கோல்களும் இருக்கும் வரை... ரெய்டுகள் வேஸ்ட்!


 நன்றி - ஜூ வி

15 comments:

ராஜி said...

1, 2, 3,4,5, இருங்க எண்ணிட்டு சாரி படிச்சுட்டு வரேன்.

தமிழ்வாசி பிரகாஷ் said...

6,7,8,9,10, ஹி....ஹி... நானும் படிச்சிட்டு வரேன்.

Arul Kumar P அருள் குமார் P said...

cps உங்க டிவீட்டர் ஆனந்த விகடன்ல வந்து இருக்கு ,பாத்தீங்களா...?

ராஜி said...

8ஜெயலலிதாவுக்குப் பழிவாங்கும் எண்ணம் இல்லை என்கிறாரே சோ?
உண்மைதான். கடந்த தி.மு.க. ஆட்சியிலும் கோலோச்சிய பல ஐ.ஏ.எஸ்-களுக்கு இப்போதும் முக்கிய இடம் கொடுத்துள்ளார். திகிலில் உறைய​வைத்த ஒரு வழக்கில் இருந்து தி.மு.க. வி.ஐ.பி-யைக் காத்த மனிதரை தனக்குப் பக்கத்திலேயேவைத்துக்​ கொண்டுள்ளார் முதல்வர். இப்படிப்​பட்ட ஜெயல​லிதாவை பழிவாங்கும் எண்ணம்​கொண்டவராக எப்படிச் சொல்ல முடியும்?
>>
கரெக்ட்தானே. அம்மாவுக்கு பழிவாங்கும் எண்ணம் துளிக்கூட இல்லைன்னுதான் கடந்த ரெண்டு மாசமா பிள்ளைங்க படிப்புல தெரியுதே.

சக்தி கல்வி மையம் said...

raittu,,

Unknown said...

அண்ணே பகிர்வுக்கு நன்றிண்ணே!

செங்கோவி said...

ரைட்டு!

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

கெட்ட பசங்களா அடிப்பதை - இது ரஜினி அவர் சிறந்த என்ன மீண்டும் என்று ஆச்சரியம் இல்லை. இந்த நட்சத்திர உங்கள் திரைகளில் பொழுபோக்கு கொண்டிருக்கும் என்பதால் அது ஒரு நேரத்தில் உள்ளது, ஆனால் காத்திருக்க முடிந்துவிட்டது, இங்கே அவர் தான். மேலும் வாசிக்க இங்கே சொடுக்கவும்
http://bit.ly/n9GwsR

rajamelaiyur said...

Ramados matter very true

இராஜராஜேஸ்வரி said...

நட்புறவு என்னும் அழகான பொய்.
அழகி சொன்னதல்லவா.

MANO நாஞ்சில் மனோ said...

அண்ணே என்னால அழுகைய நிறுத்த முடியல அண்ணே [[ராஸ்கல் எத்தனை தடைவைடா கமெண்ட்ஸ் போடுறது]]]

Unknown said...

சமச்சீர் கல்வி அம்மாவின் கவுரவ பிரச்சனை,மாணவர்களின் பிரச்சனை அல்ல,வாழ்க அம்மா கவுரவம்.

Anonymous said...

8வது கேள்விக்கு பதில். இப்போ நடக்கிறத பார்த்தாலே புரியுது

ஆமினா said...

9வது கேள்விக்கான பதில் சூப்பர்