‘எந்த ஒரு விஷயமும் தர முடியாத சில உணர்வுகளை, காதலால மட்டும்தான் தரமுடியும். அதுல மகிழ்ச்சி, கொண்டாட்டம், ஏக்கம், துக்கம், தவிப்பு, மவுனம்னு ஆயிரம் இருக்கு.
சி பி - வா”ரணம்” 1000 கால் (CALL) பை காதலி
மவுனம் கூட சுகமான உணர்வுதான். காதலுக்கான மவுனத்துக்கு இன்னும் அடர்த்தி அதிகம். அந்த வலியை, சுகமான ரணத்தை எந்த வார்த்தை கொண்டும் வரையறுக்க முடியாது. அது, உயிரை கையிலெடுத்து வீசியும் விளையாடும், திரும்ப உடலுக்குள்ள புகுத்தி பூட்டியும் விளையாடும். அது அற்புத விளையாட்டு. அந்த காதல் விளையாட்டை தமிழ் சினிமா வெவ்வேறு திரைக்கதைகள்ல நிறைய சொல்லியிருக்கு.
சி.பி - ஆமா,தமிழ் சினிமால காதல் சப்ஜெக்ட் தான் 60 % ஹிட்ஸ் ஆகுது
ஏன், ‘அழகி’ இன்னும் எல்லார் நெஞ்சிலும் வாழ்ந்திட்டுதானே இருக்கா. அப்படியொரு காதலை, இன்னொரு கோணத்துல சொல்ற படம்தான், ‘களவாடிய பொழுதுகள்’’ என்கிறார் தங்கர் பச்சான்.
சி.பி - இன்னொரு கோணம்னா ஷூட்டிங்க் அரக்கோணமா? கும்பகோணமா?
நிருபர் -தலைப்பே கவித்துவமா இருக்கே?
தங்கர்பச்சான் - கதையும் அப்படியானதுதான். எல்லாருக்குள்ளும் காதல் இருக்கு. வெற்றி பெறுகிற காதல் குழந்தை, குட்டியோட முடிஞ்சு போகுது. அதுல அதுக்கு மேல என்ன இருக்க முடியும்?
நிறைவேறாத காதல்தானே காவியத் தன்மை அடையுதுன்னு சொல்றோம். இந்த படத்து சம்பவங்கள், உரையாடல்கள், கதாபாத்திரங்களை தாண்டிச் செல்லாத ஆணும் பெண்ணும் அரிதாகத்தான் இருப்பாங்க. 99 சதவீதம் பேர், இந்த படத்துல நான் காண்பிச்சிருக்கிற வாழ்க்கையை தொட்டுட்டுதான் போயிருப்பாங்க. அப்படியொரு பொழுது எல்லாருக்குமே வாய்ச்சிருக்கு/வாய்ச்சிருக்கும். அதுதான் கதை.
சி.பி - நீங்க சொல்றதைப்பார்த்தா பிரபு தேவா - நயன் தாரா - ரம்லத் கதை மாதிரியே இருக்கே? அதான் அண்ணன் பாத்திரத்தோட ஒன்றிட்டாரோ?
நிருபர் ‘அழகி’ மாதிரி இன்னொரு காதல் கதைன்னு சொல்லலாமா?
தங்கர்பச்சான் - சொல்லலாம். ‘அழகி’யில வேறொரு வாழ்க்கை இருந்தது. இதுல, நகரப் பின்னணியில கதை சொல்லியிருக்கேன். எல்லாமே நவீனத்துவம் ஆகிட்ட பிறகு காதலும் அப்படி ஆகிப்போச்சு. காதலி/காதலன் முகம் தேடி தவிக்கிற தவிப்பு இருக்கே.., அது அப்படியிருக்கும். ஒரு காலத்துல முகம் தேடி ஓடினோம். அதுல உயிர்ப்பு இருந்தது. இன்னைக்கு அமெரிக்காவுல இருக்கிற காதலியை வெப் கேம்ல பார்த்துக்கிட்டே பேசிக்கிட்டிருக்கிறான்.
இதனால 98 சதவீத காதல் கசந்துபோயிடுது. அப்பலாம் காதல் தோல்வியை வேதனையோடு ஏற்றுக்கொள்ற பக்குவமும் இருந்தது. இன்னைக்கு அதுவும் இல்லை. நீயில்லைன்னா, அவன்/அவள்ங்ற மாதிரி போயிட்டிருக்கு. இப்படியொரு நவீன வாழ்க்கையில காதலுக்கு என்ன மரியாதை இருக்குங்கறதை சொல்றேன். அதாவது நவீனத்தை, தமிழ்ப் பண்பாட்டு கூறுகளோட, நம்ம கலாசாரப் பின்னணியில சொல்ற படமாகவும் இது இருக்கும்.
சி.பி - எனக்கென்னவோ இந்தப்படத்துக்கு அவார்டு கிடைக்கும்னு தோணுது ஹி ஹி
நிருபர் - பிரபுதேவா & பூமிகா ஜோடி எப்படி?
சி.பி - அண்னன் என்ன கேட்க வர்றார்னா 2 பேருக்கும் பாடி கெமிஸ்ட்ரி எப்படி?ன்னு ..
தங்கர்பச்சான் -பிரபுதேவா திறமையான கலைஞன். ஆனா, அவரை வெறும் நடனக் கலைஞரா மட்டுமே நாம் பார்க்கிறோம். இந்த படத்துல, கதாபாத்திரமாவே வாழ்ந்திருக்கிறார்னு நானே சொன்னா, நல்லா இருக்காது. கல்லூரி மாணவனா, பெரிய நிறுவனத்துல வேலை பார்க்கிறவரா, டாக்ஸி டிரைவரா... இப்படி பலவிதமா வர்றார் பிரபுதேவா. ரொம்ப சிறப்பா நடிச்சிருக்கார். அதே போல பூமிகாவுக்கு ஒரு வெள்ளைப் பேப்பர்ல கதையை எழுதி அனுப்பினேன். படிச்சதுமே நான் நடிக்கிறேன்னு சொல்லி, கதாபாத்திரமாகவே ஆகிட்டாங்க.
சி.பி - ஆமாமா, பூமிகா ரொம்ப பிஸி ஆர்ட்டிஸ்ட் ஆச்சா.. எல்லா ஷூட்டிங்கையும் கேன்சல் பண்ணீட்டு நடிச்சாங்களாம்.. அவ்வ்வ்வ்வ்
நிருபர் - பிரகாஷ்ராஜும் இருக்காரே?
தங்கர்பச்சான் -ஆமா. மசாலா படங்கள்ல அவரை பார்த்ததுக்கும் இதுல பார்க்கிறதுக்கும் அவரது நடிப்பு வித்தியாசப்படும். சில இடங்கள்ல வசனம் இல்லாமலே முகத்துல கொண்டு வந்திருக்கார் பாருங்க உணர்வுகளை... அவ்வளவு சிறப்பா இருக்கு. இந்தப் படத்தோட ஆணிவேரே இவர்தான்.
சி.பி - அய்யோ.. படத்துல தேவை இல்லாத ஆணிங்க நிறையா இருக்கும் போல இருக்கே?
நிருபர் - அடுத்து?
தங்கர்பச்சான் -‘மீண்டும் மழைக்காலம்’னு ஒரு படம் பண்ண இருக்கிறேன். யார் யார் நடிக்கிறாங்கன்னு இன்னும் முடிவு பண்ணலை.
சி.பி - நீங்களே இன்னும் முடிவு பண்ணலையா? டேட்ஸ் கேட்ட பிறகு அவங்க முடிவு பண்ணலையா?
நன்றி -தினகரன்
10 comments:
ரைட்டு...
மாப்ள தமிழ்மனம்தான் வேலை செய்யலையே..
இப்பவும் ஒரு நாளைக்கு மூணு ஷோவா ?
ஒரு மனுஷன் மீண்டும் பொழச்சி வந்து இருக்கான் ஒரு பிஞ்ச மூஞ்சியோட!.....பாராட்டறத விட்டு புட்டு கலாய்கிறியா ராஸ்கல்!
வந்தேன் வாத்தியாரே
எந்த ஒரு விஷயமும் தர முடியாத சில உணர்வுகளை, காதலால மட்டும்தான் தரமுடியும். அதுல மகிழ்ச்சி, கொண்டாட்டம், ஏக்கம், துக்கம், தவிப்பு, மவுனம்னு ஆயிரம் இருக்கு..............
முற்றிலும் உண்மை..
உங்களையும் மீறி உங்களின் கவித்துவம் ஆரம்பத்தில் வெளிப்பட்டது. ஐயையோ ராங் ரூட்ல போறோமேன்னு உங்க பாதைக்கு திரும்பிட்டீங்க
எந்த ஒரு விஷயமும் தர முடியாத சில உணர்வுகளை, காதலால மட்டும்தான் தரமுடியும். அதுல மகிழ்ச்சி, கொண்டாட்டம், ஏக்கம், துக்கம், தவிப்பு, மவுனம்னு ஆயிரம் இருக்கு.//
நான் அப்பவே நினைச்சேன், வாரா வாரம் ஆன்மீகப் பதிவு வரும் போதே, சிபி முனிவராகுவதற்கான வாய்ப்புக்கள் நிறைய வருதே என்று நினைத்தேன்.
அது இனி நிரூபணமாகிடும் போல இருக்கே.
நாய்க்குட்டி மனசு -அக்கா சொன்னதை நான் ஆமோதிக்கின்றேன்! சி.பி நீங்கள் இன்னும் கனவு காண வேண்டும்!
சி.பி - அய்யோ.. படத்துல தேவை இல்லாத ஆணிங்க நிறையா இருக்கும் போல இருக்கே?//
அதுக்காக கீழே ஒரு படத்தை அரை குறையாகப் போட்டு மனசை கிளறி விட்டு இப்படிச் சொல்லலாமா.
ஹி....ஹி...
சிபி நண்பருக்கு" நல்ல "மூடு போலிருக்கு
Post a Comment