நம்ம ஆளுங்க பண்ற பெரிய தப்பே ஒரு படத்தை எப்படி மார்க்கெட் பண்றதுங்கற டெக்னிக் தெரியாம சொதப்பறதுதான்,படத்தை எடுக்க தெரியாம எடுத்து சொதப்பறதைக்கூட தாங்கிக்கலாம்,ஆனா ஒரு படத்தை ரிலீஸ் பண்றப்போ அது என்ன மாதிரி படம்கறதை தெளிவா சொல்லாம குழப்பிடறதுதான் தாங்க முடியாத கொடுமை
பிரமாதமான படம்னு சொல்ல முடியாட்டியும்,ஓரளவு சுமாரான சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் தான் இது. ஆனா மாஸ் ஓப்பனிங்க்க்கு ஆசப்பட்டு இந்தப்பட போஸ்ட்டர் டிசைன்களில்,விளம்பரங்களில் இது ஒரு கில்மா படம்ங்கற மாதிரி ஒரு பில்டப்பை தேவை இல்லாம தூண்டி விட்டுட்டாங்க. (சரி. விட்டுத்தள்ளு.. எதுக்கு எமோஷனல் ஆகறே?)
பிரசாந்த் நடிச்ச அப்பு படத்துல பிரகாஷ்ராஜ் அரவாணி கேரக்டர்ல வருவாரே, அந்த கெட்டப்ல வில்லன்,இவன் ஒரு சைக்கோ கொலைகாரன்.. பெண் போல மேக்கப்,உடை போட்டுக்கிட்டு பெண்களை கொலை பண்ணி கிணத்துல போட்டுடறான்.அவன் ஏன் அந்த கொலைகளை பண்றான், என்ன மேட்டர்?அப்டிங்கறதை படம் பார்த்து தெரிஞ்சுக்குங்க. (ஏன்னா கடைசி வரை எனக்கு காரணம் தெரியலை. இந்த லட்சனத்துல எம் ஏ ஹிந்தியாம் )
மர்டர் முதல் பாகத்துல பாலிவுட் ஏஞ்சலினா ஜூலின்னு தன்னைத்தானே அழைச்சுக்கற( !!!!) மல்லிகா ஷெராவத் கூட கில்மா பண்ணுனாரே. அவர் தான் இதுல ஹீரோ..(emraan hashmi), ஹீரோயின் Jacqueline Fernandez, தயாரிப்பு - மகேஷ்பட்
வில்லனோட வீட்ல பாத்ரூம்ல ரத்தக்கறை பார்த்துட்டு ரேஷ்மா அலறுதே அந்த சீன் செம. பின்னணி இசை இளையராஜா மாதிரியே போட்டிருக்காங்க.. அவர் படத்திலிருந்து சுட்டுட்டாங்களோ என்னவோ?
வில்லனை பெண் போலீஸ் உயர் அதிகாரி விசாரிக்கும் சீன் அப்படியே பேசிக் இன்ஸ்டிங்க்ட் ல இருந்து சுட்டுட்டாங்க.
ஆனா படத்துல பாராட்ட வேண்டிய நடிப்பு வில்லனுக்குத்தான். செமயான ,மிரட்டலான நடிப்பு.. ஆனா திருநங்கையா வர்றவங்க கிட்டே இந்த அளவு கம்பீரம் வருமா? பெண்மையின் நளினமும், அந்த தளுக்கும் மிஸ்ஸிங்க்.. ஒரு வேளை பாத்திரத்தின் சைக்கோத்தனம், கொடூரம் இவற்றை உயர்த்திக்காட்ட வேண்டி இயக்குநர் அப்படி கேரக்டரைசேஷன் பண்ணீட்டாரோ?என்னவோ?
இயக்குநரிடம் சில கேள்விகள்
1. வில்லன் ஒரு பாழுங்கிணத்துல பிணங்களை சேமிக்கிறான். (அதென்னா டெட் பாடி பேங்க்கா?)2 நாள் ஆனாலே செம ஸ்மெல் அடிக்குமே பல நாட்களா பிண வாடை அக்கம் பக்கம் அடிக்காதா?
2.ஹீரோயினை கண்டபடி தாக்கி (கிட்டத்தட்ட கஜினி படத்துல அசின் அடி வாங்கற மாதிரி )20 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லா கிணற்றுல தூக்கிப்போடறாரே. பாப்பாவுக்கு சின்னதா கால் எலும்பு கூட முறியலையே ஏன்?
3. சரி. அந்த லாஜிக் தான் போகட்டும் கீழே விழுந்த ஹீரோயின் 47 பிணங்கள் தன்னை சுற்றி இருக்கறதை பார்த்ததும் பயத்துல இயக்குநர் சொல்லிக்கொடுத்தபடி அலறுது ஓக்கே. ஆனா ஸ்மெல் தாங்காம முகத்தை ,அட்லீஸ்ட் மூக்கைக்கூட பொத்திக்காம இருக்கே அது எப்படி?அதுவும் 9 மணீ நேரமா.
4. வில்லனை விசாரனை பண்ண ஒரு பெண் அதிகாரி தெனாவெட்டா சேர்ல உக்காந்து போஸ் கொடுக்கறாங்க. கொஞ்சம் கூட பாதுகாப்பே இல்லாம அப்படித்தான் அசால்ட்டா ஒரு கொலைக்கைதி அதுவும் சைக்கோவை விசாரிப்பாங்களா?(அவனை சேரோட கட்டிப்போட்டல்ல விசாரிக்கனும்?)
5. வில்லன் அந்த லேடி ஆஃபீசரை பாய்ஞ்சு கை விலங்கால கழுத்தை நெரிக்கும்போது அந்த ஆஃபீசர் தப்பிச்சா போதும்னு பாக்குதே ஒழிய ஒரு போலீஸ் ஆஃபீசருக்கான பாடி லேங்குவேஜ் இல்லையே?
6. க்ளைமாக்ஸ்ல வில்லன், ஹீரோ ஃபைட் ரொம்ப கொடூரம். ஹீரோவைப்போட்டு சட்னி ஆக்க்குன பின்னாடியும்,அண்ணன் அசால்ட்டா எந்திரிச்சு வர்றாரே அது எப்படி?அதே போல செத்துட்டதா நினைச்ச வில்லன் மறுபடி பாய்ஞ்சு வந்து தாக்கறார்.
7. எந்த ஊர் போலீஸ் ஃபங்க்ஹேர் ஸ்டைல் வெச்சுக்க பர்மிஷன் கொடுத்தது?
போலீஸ் விசாரனை நடைபெறும்போது வசனகர்த்தா நெஞ்சில் நிற்கிறார்
இந்த வண்டி யாருது?
வில்லன் - என் மாமாவுது.
அவர் பேர் என்ன?
ஞாபகம் இல்ல. அவர் பேரு டைரில எழுதி வெசிருக்கேன்.. ஆனா டைரி வீட்ல வெச்சுட்டு வந்துட்டேன்.
சரி.. வீட்டு அட்ரஸ் சொல்லு.
சாரி.. அதுவும் எனக்கு ஞாபகம் இல்லை.
என்னது?உன் வீட்டு அட்ரஸ் கூட உனக்கு ஞாபகம் இல்லையா?
--------------
ஹீரோ - இந்தா. நீ கம்ப்பெனி கொடுத்ததுக்கு பரிசா இந்த ஒரு லட்சம் எடுத்துட்டு கிளம்பு.
என்ன இவ்வளவு தர்றே.?பிளாக் மணியா?
அதைப்பற்றி உனக்கு என்ன?
-------------
நீ இப்போ யார் கிட்டே பேசிட்டு இருந்தே? உன் பாய் ஃபிரண்டா? (BOY FRIEND)
இல்லை..
அப்போ பாய்ல படுக்கற ஃபிரண்டா?
------------
கில்மா ரசிகர்களை சூடேத்துற மாதிரி படத்தோட ஓப்பனிங்க்ல சம்பந்தமே இல்லாம 2 கில்மா சீன்கள் உண்டு. ஆனா சென்சார் விதிகளூக்குட்பட்டது. நம் எதிர்பார்ப்புக்கு அப்பாற்பட்டது. அடக்கி வாசி அண்ணாத்தே.
ஈரோடு ஸ்ரீநிவாசா,ஸ்ரீ லட்சுமி ஆகிய 2 தியேட்டரில் படம் ஓடுது. நான் ஸ்ரீநிவாசா தியேட்டர்ல தான் படம் பார்த்தேன்.
சி .பி . கமெண்ட் - க்ரைம் ரசிகர்கள் பார்க்கலாம் ,
15 comments:
இந்த படத்துக்கெல்லாம் ஆனந்த விகடன் மார்க் போடமாட்டானகளா மாப்ள.. நீ ரெகமண்ட் பண்ணேன்..
அருமையான விமர்சனம்
// !* வேடந்தாங்கல் - கருன் *! said...
இந்த படத்துக்கெல்லாம் ஆனந்த விகடன் மார்க் போடமாட்டானகளா மாப்ள.. நீ ரெகமண்ட் பண்ணேன்.///
ஆசையப் பாரு
//எந்த ஊர் போலீஸ் ஃபங்க்ஹேர் ஸ்டைல் வெச்சுக்க பர்மிஷன் கொடுத்தது?//
எந்த ஊர் போலீஸ் தொப்ப வெச்சுக்க பர்மிஷன் கொடுத்தது?# டவுடு
அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா
சிபிக்கு ஹிந்தி தெரியுமா
அப்புறம் இவங்க சிங்கள நடிகை#
அப்போ யூடியூப்லயே பார்த்துக்கறேன்..
அண்ணே ஹீரோயின் சூப்பெரா இருக்காங்க
இந்த படம் ஒரு கொரிய படம் "The Chaser".
ஒரு இயக்குனரிடம் கேட்க வேண்டிய நியாயமான கேள்விகள் உங்கள் விமர்சனத்தில்...
Next what movie?
ஒரு படம் விடுறதில்ல!!!! Gud review as usual... :)
ஹம் இஸ் பிலிம்கோ டவுன்லோடு கர்கே தேக்கேங்கே, லேக்கின் கில்மா கேலியே நஹி ! ! !
சிபியின் ட்ரேட் மார்க் விமரிசனம்!
அருமையான விமர்சனம்
Post a Comment