Saturday, July 02, 2011

ஸ்டைலிஷா டிரைவிங்க் செய்வது எப்படி?

நீங்கள் காரோட்ட லைசென்ஸ் வைத்திருக்கலாம். காரும் நன்றாக ஓட்டத் தெரிந்திருக்கலாம். ஆனால், தவறிழைக்காமல் கார் ஓட்டுகிறீர்களா என்று கண்டுபிடிப்பது எப்படி? அதற்காக, காரைக் கையில் கொடுத்து, 'தவறு செய்யாமல் கார் ஓட்டுங்கள் பார்ப்போம்’ என்று ரிஸ்க் எடுக்க முடியாது! 


ஆனால், டிரைவிங் சிமுலேட்டரில் உட்கார வைத்தால், நீங்கள் எப்படிப்பட்ட டிரைவர் என்பதைக் கண்டுபிடித்துவிட முடியும். இது உங்களைக் குற்றம் கண்டுபிடிப்பதற்காக அல்ல... உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்து கொள்ளவும், உண்மையில் கார் ஓட்டும்போது இன்னும் கவனமாக இருக்கவும் டிரைவிங் சிமுலேட்டரில் பயிற்சி எடுப்பது நல்லதுதான்.

கார் ஓட்டக் கற்றுக்கொண்டு இருப்பவர்களுக்கும், ஏற்கெனவே கற்றுக் கொண்டவர்களுக்கும் தினசரி அரை மணி நேரம் வீதம் மொத்தம் 5 மணி நேரம் பயிற்சி வகுப்புகள் எடுக்கிறது சென்னை அண்ணா சாலையில் இருக்கும் AASI அமைப்பு (ஆட்டோமொபைல் அசோஸியேஷன் ஆஃப் சவுத் இந்தியா). டிரைவிங் சிமுலேட்டர் மூலம் பயிற்றுவிக்கப்படும் இந்த கோர்ஸை முடித்துவிட்டால், சாலையில் காரோட்டும்போது பயம், படபடப்பு போன்ற டென்ஷன் இல்லாமல், தன்னம்பிக்கையுடன் இருக்க இந்தப் பயிற்சி நிச்சயம் உதவும். 

'எனக்கு நன்றாக காரோட்டத் தெரியும்’ என்று சவால் விட்ட சிலரை டிரைவிங் சிமுலேட்டரில் அமர வைத்து ஓட்டிக் காட்டச் சொன்னபோது....

''நான் கார் டிரைவிங் முறையா முடிச்சவன். இந்த சிமுலேட்டர்ல ஓட்டினா எந்தத் தப்பும் இல்லாமல் ஓட்டுவேன்'' என்று கூறிவிட்டு முதலில் களம் இறங்கினார் சரவணன். உட்கார்ந்த உடனே கியர் மாற்றி கிளம்பியவர் இரண்டே நிமிடங்களில் ஒரு காரில் மோதினார் (ஸ்கிரீனில்தான்). இருந்தாலும். இரண்டாவது முறையும் முயல... மீண்டும் ஒரு அட்டாக். மூன்றாவதாக, மெதுவாக ஓட்டியபடி செல்ல... கிட்டத்தட்ட நான்கு கிலோ மீட்டர் வரை எந்த சிக்கலும் இல்லாமல் சென்று பயணத்தை நிறைவு செய்தார்.


''நான் ஓட்டுனர் பயிற்சி நிறுவனம் ஒன்றில் வேலையில் இருக்கிறேன். நிறைய பேருக்குப் பலதரப்பட்ட கார்களை வைத்து டிரைவிங் சொல்லிக் கொடுக்கிறேன். ஆனால், இந்த சிமுலேட்டரில் உட்கார்ந்து ஓட்டிய பிறகுதான் தவறு செய்வது தெரிகிறது'' என்று நல்ல பிள்ளையாக ஒப்புக்கொண்டார் சரவணன்.

ஒரு சாஃப்ட்வேர் நிறுவனத்தில் மேலாளராக இருக்கும் லட்சுமி ஒருவித நடுக்கத்தோடு வந்தமர்ந்தாலும், இரண்டு மூன்று சிக்னல் வரை மிகச் சரியாக டிரைவ் செய்தார். 20 கி.மீ தூரம் எந்தத் தடங்கலும் இல்லாமல் ஓட்டிச் சென்றவர், சிமுலேட்டரில் இருந்து மனமில்லாமல் இறங்கினார். ''எப்பவுமே பரபரப்பா, வேகமாதான் காரை டிரைவ் பண்ணுவோம்.

 

ஆனா, இங்க எந்தவிதமான டென்ஷனும் இல்லாம கவனமா நான் ஓட்டினதாலதான் இவ்வளவு தூரமும் எந்த ஒரு இன்ஸிடன்ட்லேயும் மாட்டாம வந்திருக்கேன். ஸோ, மித வேகம் மிக நன்று!'' என சீரியஸாக லெக்சர் கொடுத்தார்.

அடுத்ததாக களம் இறங்கினார் சீனு (சாஃப்ட்வேர் டீம் லீடர்), சிமுலேட்டரில் உட்கார்ந்த உடனே கடமை கண்ணாயிரமாக சீட் பெல்ட்டை மாட்டியவர், சீட்டை அட்ஜஸ்ட் செய்தபடி, ''நான் டிராஃபிக்லதான் கார் ஓட்டுவேன்'' என அடம்பிடிக்க... சிமுலேட்டர் டிரெய்னர் சோமநாதன் டிராஃபிக் ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்துத் தந்தார். ஆரம்பத்தில் அழகாக கார் ஓட்டியவர், இரண்டாவது கியர் மாற்றிப் போகும்போதே ஒரு திருப்பத்தில் இருந்து ஒரு கார் வர... பயந்து போய் சட்டென பிரேக் போட்டார். 

எல்லோரும் 'சபாஷ்’ என அவரைத் தட்டிக்கொடுக்க... சிறிது நேரத்தில் அவருடைய டார்கெட் தூரத்தை நிறைவு செய்தார். ஆனால், அவர் இரண்டாவது கியரைத் தாண்டவே இல்லை என்பதுதான் இதில் முக்கியமான விஷயம்.

''என்னோட ஃப்ரெண்ட்ஸ்கூட சிட்டியில காரை டிரைவ் செய்யும்போது, டாப் கியர் வரைக்கும் நல்ல ஸ்பீட்ல ஓட்டி இருக்கேன். இப்போதான் புரியுது, அது எவ்வளவு பெரிய தவறுன்னு! சிட்டி டிராஃபிக்ல நிதானமான வேகத்துல போனாலே போதும். நம்மை நாம பாதுகாத்துக்கணும்னா கவனமா இருக்கணும்ங்கறதைத் தெரிஞ்சுக்கிட்டேன்'' என்றா£ர் சீனு.

பயங்கர பில்டப்போடு சிமுலேட்டரில் ஏறினார், சென்னை எத்திராஜ் கல்லூரி மாணவியான சாய்கிருபா. ''நானும் சிட்டி டிராஃபிக்லதான் ஓட்டுவேன். எனக்கு ரிஸ்க் எடுக்கறதெல்லாம் ரஸ்க் சாப்பிடுற மாதிரி!'' என டயலாக் விட்டபடி சிமுலேட்டரில் அமர்ந்தார். ''கியர் ஒழுங்காக அமைந்தாலும், சடர்ன் டிராஃபிக் மற்றும் சிக்னலைக் கவனிக்காமல் சென்றதால், இரண்டு முறை விபத்து ஏற்படுத்தினார். 

இருந்தாலும், ''வீராங்கனைக்கு இதெல்லாம் சகஜம்ப்பா!'' என்றபடி மீண்டும் ஸ்பீடு எடுத்து 10 கி.மீ வரை சென்று ''வெற்றி வெற்றி'' என சந்தோஷக் கூச்சலிட்டார்.

சிமுலேட்டர் டிரெய்னரான சோமநாதன் இதன் செயல்பாடுகள் பற்றி நம்மிடம் விளக்கினார்.

'புதிதாக கார் ஓட்டக் கற்றுக் கொள்பவர்களுக்குத்தான் இந்த சிமுலேட்டர். ஆனால், கார் ஓட்டுவதில் ஏற்படும் தவறுகளைக் களைவதற்காக கற்றுக்கொள்ள வருபவர்கள் அதிகம்.

இதில் காரில் உள்ள அனைத்து அம்சங்களும் இருப்பதால், உண்மையாகவே காரோட்டுவது போன்ற ஃபீல் இருக்கும். முன் பக்கம் ரோடு அமைந்திருக்கும் வழியைப் போலவே, மானிட்டரில் ஒவ்வொரு பாதையும் அமைந்திருக்கும். அதனால், ஏற்கெனவே டிரைவிங் தெரிந்திருந்தாலும் இதில் பழகுவதன் மூலம் நமது டிரைவிங் ஸ்டைலை மெருகேற்றலாம்!'' என்று கூறி முடித்தார்.


thanx-motor vikatan

23 comments:

சக்தி கல்வி மையம் said...

raittu..

சக்தி கல்வி மையம் said...

மாப்ள..

MANO நாஞ்சில் மனோ said...

டேய் நாயே உன்னை வச்சி ஒருத்தன் லைசென்சே இல்லாம வண்டி ஓட்டிட்டு போனானே அதை கவனிச்சியா ராஸ்கல்...???

MANO நாஞ்சில் மனோ said...

மூதேவி மூதேவி, வண்டி ஓட்டத்தெரியாதவன் காருலதானேடா நாம குற்றாலமே போனோம் ஹே ஹே ஹே ஹே மாட்டிக்கிட்டியா....???

Shiva sky said...

k

MANO நாஞ்சில் மனோ said...

டேய் அண்ணே எனக்கு கார் ஓட்ட கத்து குடுடா டுபுக்கு......!

Shiva sky said...

kk

MANO நாஞ்சில் மனோ said...

விக்கி எங்கேடா போனான் ஆளையே காணோம் ராஸ்கல்....???

சசிகுமார் said...

சிபி பதிவில் மிகப்பெரிய மாற்றம் நம்பவே முடியல நன்றி - மோட்டார் விகடன் இப்போ thanx- motor vikadan ஆச்சு ஹி ஹி ஹி

Unknown said...

எனக்கே எனக்கா இந்த பதிவ போட்ட மாதிரி இருக்கு அண்ணா ...ஹி ஹி இப்ப தான் ட்ரிவிங் கத்துகிறேன் நான்

அம்பாளடியாள் said...

என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள்.....

கூடல் பாலா said...

OK

rajamelaiyur said...

Very useful post

rajamelaiyur said...

I think you drive only cycle. . .correct a?

கடம்பவன குயில் said...

சரி சரி கார் ஓட்ட கத்துக்கொடுத்துட்டீங்க. அடுத்தது என்ன? aircraft தானே. நாங்க ரெடி. Flight ரெடியா?

கடம்பவன குயில் said...

சரி சரி கார் ஓட்ட கத்துக்கொடுத்துட்டீங்க. அடுத்தது என்ன? aircraft தானே. நாங்க ரெடி. Flight ரெடியா?

RAMA RAVI (RAMVI) said...

நான் two wheeler தான்..கார் ஒட்ட தெரியாது. இப்ப இருக்கிற டிரபிக்கில பேசாம வீட்டிலேயே இருக்கலாம் போல இருக்கு..but நல்ல பதிவு புதியயதாக கார் ஒட்டுவதற்க்கான சிமுலேடர் பற்றி தெரிந்து கொண்டேன்..

Unknown said...

நல்ல பதிவு.. படங்கள் அருமை

Unknown said...

அண்ணே நான் காரோட்ட கத்துகிட்டதே ஒரு தனிக்கதை....சீக்கிரத்துல பதிவா போட்டு பல பேர கொல்லப்போறேன் ஹிஹி!

செல்ல நாய்க்குட்டி மனசு said...

இப்போ தான் கார் ஓட்டக் கத்துக்கிட்டு இருக்கேன். 50 :50 காலையில டிரைவர், மாலையில் நான் இதே போல நல்ல டிப்ஸ் வந்தா நன்றியுடன் போடுங்கள்

தமிழ்வாசி பிரகாஷ் said...

சி.பி, பஸ், ட்விட்டர் நல்லா ஒட்டுறார், ஆனா கார் நல்லா ஒட்டுவாரா?

Unknown said...

புதுமையான,பயனுள்ள தகவல்.நன்றி,விகனுக்கும்,உங்களுக்கும்.

shunmuga said...

சிபி - அதில் பழக கட்டணம் எவ்வள்வு ?
என்று சொல்லவில்லையே ?