தமிழ் சினிமாவை அடுத்த தளத்துக்கும், புதிய ரசனைக்கும் கொண்டு சென்றது பாலச்சந்தர், பாரதிராஜா,மகேந்திரன் என்றால் முதன்முறையாக இந்தியாவை , பாலிவுட்டை தமிழ்நாட்டின் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது, உலகளாவிய சந்தையை கொண்டு வந்தது மணிரத்னம் என்றால் அது மிகை இல்லை..
எந்த ஒரு இயக்குநரிடமும் அசிஸ்டெண்ட்டாக ஒர்க் பண்ணாமல் டைரக்ட்டாக ஃபீல்டில் இறங்கி டைரக்ட் பண்ணி ஹிட் கொடுத்த முதல் டைரக்டர் என்ற பெருமையையும், தமிழ் சினிமா வசனங்களின் பிடியில் கிடந்த போது காட்சிகளுக்கு முக்கியத்துவம் தந்து விசுவல் டேஸ்ட்டை புதிய பாணியில் தந்த அளவில் இவர் முக்கியத்துவம் பெறுகிறார்.
இவரது எல்லா படங்களிலும் மழை,குதிரை கண்டிப்பாக இடம் பெற்று விடும். இவர் படங்களில் வசனங்கள் சி செண்ட்டர் ரசிகர்களுக்குப்புரிவதில்லை என்ற குறையும் உண்டு. ஒளிப்பதிவில் இவர் தனி கவனம் கொள்வார்.
ஜூன் 2, 1956 இல் பிறந்த இவர் இந்திய அளவில் அறியப்படும் தமிழ் இயக்குனர்களுள் ஒருவர். காதல், தீவிரவாதம் ஆகியவற்றை நகர் வாழ் நடுத்தர மக்களை பின்னணியாக கொண்டு சொல்வது இவருடைய பாணி. ஏ. ஆர். ரகுமானை திரையிசைக்கு அறிமுகம் செய்தவரும் இவரே.
ஜம்னாலால் பஜாஜ் மேலாண்மை பள்ளியில் படித்துவிட்டு, சென்னையில் உள்ள டி.வி.எஸ் நிறுவனத்தில் பணியாற்றியவர். யாரிடமும் உதவி இயக்குநராக பணி செய்யாமல், தன் முதல் படமாகிய "பல்லவி அனுபல்லவி" படத்தினை இயக்கினார். சென்னையில், மனைவி சுஹாசினி மற்றும் மகன் நந்தனுடன் வாழ்கின்றார் மணிரத்னம்.
இவருடைய படங்கள் சுருக்கமான வசனங்களுக்கும் நேர்த்தியான தொழில்நுட்பத்திற்கும் பெயர் பெற்றவை. இவர் எடுத்த திரைப்படங்கள் அனைத்தும இளையராஜா மற்றும் ஏ. ஆர். ரஹ்மான் இருவரின் இசையமைப்பில் வெளியாகியுள்ளன. இவரது முதல் திரைப்படமான பல்லவி அனுபல்லவி முதல் தளபதி வரை இளையராஜா இசையிலும், ரோஜா முதல் இன்று வரை ஏ. ஆர். ரஹ்மான் இசையிலும் வெளியாகியுள்ளன.
1. (கன்னடம்)- பல்லவி அனுபல்லவி (1983) -பிரபல இயக்குனரான மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளிவந்த கன்னட மொழி திரைப்படமாகும். மணிரத்தினம் இயக்கிய முதல் திரைப்படம் இதுவாகும். இத்திரைப்படத்தில் பிரபல இந்தி திரைப்பட கதாநாயகன் அனில் கபூர் கதாநாயகனாகவும், நடிகை லட்சுமி கதாநாயகியாவும் நடித்துள்ளார்கள். இப்படத்தின் ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திரா ஆவார் மற்றும் இளையராஜா இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.இப்படத்தின் சிறந்த திரைக்கதைக்காக மணிரத்தினம் கர்நாடக அரசின் மாநில விருதைப் பெற்றார். இப்படம் தமிழில் பிரியா ஓ பிரியா என்று மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்டது.
2. 1984 - உணரு (மலையாளம்) -இந்தப்படம் மணிரத்னம் பாணி எல்லாம் இல்லாமல் அந்த கால கட்ட மலையாளப்பட பாணியில் எடுக்கப்பட்டது.
3.1985 - இதய கோவில் -மதர்லேண்ட் பிக்சார்ஸ்சின் கோவைத்தம்பியின் உதய கீதம் வெள்ளி விழா கண்ட நேரம்,பெரும் எதிர்பார்ப்புகளுடன் வந்த இதய கோவில் தோல்வியைத்தழுவினாலும் பி செண்ட்டர்களில் 40 நாட்கள் ஓடின, பாடல்கள் சூப்பர் ஹிட்
1.கூட்டத்திலே கோவில் புறா - எஸ்.பி பாலசுப்பிரமணியம்
2. நான் பாடும் மொஉன ராகம் - எஸ்.பி பாலசுப்பிரமணியம்
3.இதயம் ஒரு கோவில் (Male) - எஸ்.பி பாலசுப்பிரமணியம்
4.இதயம் ஒரு கோவில் - இளையராஜா, எஸ்.ஞானகி
5.பாட்டு தலைவன் - எஸ்.பி பாலசுப்பிரமணியம்
6.யார் வீட்டு ரோஜா - எஸ்.பி பாலசுப்பிரமணியம்
7.வானுயர்ந்த - எஸ்.பி பாலசுப்பிரமணியம்
8.ஊரோரமா ஆத்துப்பக்கம் தென்னந்தோப்பு - இளையராஜா
4. 1985 - பகல் நிலவு - சத்யராஜின் மார்க்கெட்டை ஒரு புரட்டு புரட்டிய படம்.. இதில் அவரது வித்தியாசமான நடிப்பு பரவலாக பேசப்பட்டது.வில்லன்கள் என்றால் பக்கம் பக்கம் வசனம் பேசியே பார்த்தகண்களுக்கு புதுமையான அனுபவமாக இது அமைந்தது.. விமர்சன ரீதியில் பெரும் பாராட்டைப்பெற்றாலும் வசூல் பிரமாதம் என சொல்ல முடியாது.
5.1986 - மௌன ராகம் - கார்த்திக்கிற்கு வாழ்வில் மறக்க முடியாத படம். அவர் வரும் காட்சிகள் குறைவு என்றாலும் சுறு சுறு , துறு துறு நடிப்புக்கு பாடமாக இருந்தது.. படத்தின் கதைச்சுருக்கம்
பெற்றோர்களின் வற்புறுத்தலுக்கு ஏற்ப சந்திரகுமாரை (மோகன்) மணந்து கொள்ளும் திவ்யா (ரேவதி) தனது காதலனை இழந்த பழைய நினைவுகளை மறக்க முடியாது தனது கணவரின் கைகளில் இருந்து விலகிச்செல்ல விவாகரத்துக் கேட்கின்றார்.அவரின் விருப்பத்திற்கேற்றாற் போல விவாகரத்துப் பெற்றுத் தருகின்றார் சந்திரகுமார்.நீதிமன்றத்தின் தீர்ப்பின் பேரில் ஒரு ஆண்டு காலத்தில் ஒன்றாக வாழ்கின்றனர்.இக்கால கட்டத்தில் இருவருக்கும் ஏற்படும் காதல் இருவரையும் ஒன்று சேர்க்கின்றது.
மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையா? பாடல் உட்பட எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட்.. இது ஈரோடு பிரபா தியேட்டரில் 40 நாட்கள் ஓடின
6.1987 - நாயகன் - தமிழ் சினிமாவின் போக்கு,கமலின் வாழ்க்கை,மணிரத்னத்தின் மார்க்கெட் வால்யூ எல்லாவற்றையும் ஒரு புரட்டு புரட்டிய படம்.மேலும் இத்திரைப்படம் டைம் வார இதழின் உலகின் நூறு சிறந்த திரைப்படங்களிள் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.இத்திரைப்படத்தில் சிறந்த நடிகருக்கான 1988 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட தேசிய விருதினை கமலஹாசன் பெற்றுக்கொண்டார்.
"நீங்க நல்லவரா கெட்டவரா" என்று மகளின் கேள்விக்கு கமலின் பதிலான “தெரியல” எனும் வார்த்தையும் சூழ்நிலைக்கேற்ற வசனமாக அமைந்தது.நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல எனும் பதில் செம ஹிட் ஆனது..
பாடல்கள் செம ஹிட் . நிலா அது வானத்து மேலே, நீ ஒரு காதல் சங்கீதம்.. தென்பாண்டி சீமையிலே ..லோட்டஸ் விருது- சிறந்த நடிகர் - கமலஹாசன்வென்ற விருது - சில்வர் லோட்டஸ் விருது- சிறந்த ஒளிப்பதிவு- பி.சி. ஸ்ரீராம்வென்ற விருது - சில்வர் லோட்டஸ் விருது- சிறந்த கலை இயக்கம் - தோட்டா தரணி
இந்தப்படம் ஆஸ்கார் விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்டது என விளம்பரம் செய்யப்பட்டது. ஆனால் காட் ஃபாதர் படத்தின் ரீ மேக் என்பதால் நோ சான்ஸ்.. இது ஈரோடு ஆனூர் தியேட்டரில் 90 நாட்கள் ஓடின.
7. 1988 - அக்னி நட்சத்திரம் - படம் பார்த்த ஆடியன்ஸ் தியேட்டர் விட்டு வெளியே போகும்போதே பாதிப்பேர் அடுத்த ஷோவுக்கு ரிப்பீட் ஆடியன்ஸாக லைனில் நின்றார்களாம். அந்த அளவு இது மெகா ஹிட் .கதை சிங்கிள் லைனில் வைத்துக்கொண்டு ட்ரீட்மெண்ட்டில் புகுந்து விளையாடிய படம். பிரபுவும், கார்த்திக்கும் சந்திக்கும் ஒவ்வொரு சீனும் பொறி பறக்கும்.. அப்போ ஒரு பேக் கிரவுண்ட் மியூசிக் வரும்.. கலக்கல் ரகம்.. மணிரத்னம் படத்தில் முதல் வசூல் மழை பொழிந்த படம் இது தான்..
அமலாவின் இடையை இந்த அளவு அழகியல் நேர்த்தியோடு இதற்கு முன் யாரும் காட்டியதே இல்லை.. நிரோஷா என்ற சுமார் ஃபிகரைக்கூட குளத்தில் குளிக்க விட்டு இளமை பொங்க படம் ஆக்கினார்.. பிரபுவும் சரி,கார்த்திக்கும் சரி இது போல் ஒரு வெற்றியை இதற்குப்பின் பெறவே இல்லை.படத்தில் ஃபேமஸான வசனம்.
1.நான் ஒரு நல்ல அப்பாவாக இல்லாம போய் இருக்க்கலாம், ஆனா உனக்கு நல்ல கனவனா இருந்திருக்கேன்
2. நீங்க நல்லா அப்பாவாத்தான் நடந்துக்க முடியல, அட்லீஸ்ட் எங்கம்மாவுக்கு நல்ல புருஷனாவாவது நடந்தீங்களா?
இந்தப்படம் ஈரோடு ஆனூர் தியேட்டரில் 100 நாட்கள் ஓடியது
8. 1989 - கீதாஞ்சலி (தெலுங்கு) -இதயத்தை திருடாதே (தமிழ்) -
ஒரு காதல் கதை இந்த ஓட்டம் ஓடும் என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். நாகார்ஜூன் -கிரிஜா நடிப்பில் வெளிவந்த படம்,படம் முழுக்க செம ஜாலியாக போகும். ஓடிப்போலாமா என்ற வசனம் செம ஹிட்.. அந்த கால கட்டத்தில் எல்லா இளைஞர்களும் ஃபிகர்களைப்பார்த்து கிண்டலாக அப்படி கேட்க தொடங்கினர்.
ஓ பிரியா பிரியா,காட்டுக்குள்ளே, உட்பட 7 சூப்பர் ஹிட் பாடல்கள்.ஒளிப்பதிவு கண்களில் ஒத்திக்கொள்ளும்படி இருந்தது.ஈரோடு தேவி அபிராமியில் 120 நாட்கள் ஓடியது..
9. 1990 - அஞ்சலி - குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்கள் எல்லா வயது ரசிகர்களும் பார்க்கும் வண்ணம் எடுக்க முடியும் என்று சர்வசாதாரணமாக நிரூபித்தார்.
சில்வர் லோட்டஸ் விருது- சிறந்த குழந்தை நட்சத்திரம்- ஷாமிலி, தருண்- சில்வர் லோட்டஸ் விருது- சிறந்த ஒலிப்பதிவு- பாண்டு ரங்கன் சில்வர் லோட்டஸ் விருது- சிறந்த வட்டாரத் திரைப்படம்
- அஞ்சலி - மணிரத்னம் என 3 விருதுகள்.சூப்பர் ஹிட் பாடல்கள் பை இளையராஜா 1.வானம் நமக்கு 2. மொட்ட மாடி 3. இரவு நிலவு- எஸ்.ஜானகி 4. அஞ்சலி அஞ்சலி 5. சம்திங் சம்திங் 6. ராத்திரி நேரத்தில்- எஸ்.பி. பாலசுப்பிரமணியம் 7. வேகம் வேகம்- உஷா உதுப்
இதில் வேகம் வேகம் பாடல் மட்டும் ஈ டி பட இன்ஸ்பிரேஷன் என சொல்லப்பட்டது.. க்ளைமாக்சில் பேபி ஷாம்லியின் நடிப்பு கிளாஸிக். ரகுவரன்,ரேவதியின் நடிப்பில் இந்தப்படம் ஒரு மைல்கல்.
இரு குழந்தைகளுக்குத் தாயானவர் தனது மூன்றாம் குழந்தை மனநோயால் பாதிப்படைந்த குழந்தை என்பதனை அறியாமல் இருக்கின்றார். மூன்றாவதாக குழந்தை பிறக்கவுமில்லை என்ற கணவனின் கூற்றை ஏற்ற தாய் பின்னைய காலங்களில் அக்குழந்தையினைப் பற்றிய தகவல்களைப் பெறுகின்றார். தங்களுடனேயே அக்குழந்தையினை வளரவேண்டுமென்று அவர்கள் வாழும் இடத்திற்கே அழைத்தும் செல்கின்றனர். அங்கு வளரும் அச்சிறிய குழந்தையும் அவளின் சகோதரர்களால் ஆதரவு வழங்கப்படாமல் பின்னர் அவர்களின் அரவணைப்பைப் பெறுகின்றது.க்ளைமாக்சில் நெகடிவ் முடிவு..ஈரோடு அபிராமி தியேட்டரில் 60 நாட்கள் ஓடியது
10. தளபதி - 1991 கமல் நடிப்பில் நாயகன் உருவான போதே ரஜினியை வைத்தும் எடுப்பார் என பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது.இந்தப்படம் தான் தமிழ் சினிமாவில் மிக அதிக எதிர்பார்ப்பில் உருவான படம் ( இப்போ எந்திரன்). இந்தப்படம் ரிலீசின் போது ஈரோடு அபிராமி தியேட்டரில் பால்கனி டிக்கெட் விலை ரூ 6 .ஆனால் பிளாக்கில் ரூ 90க்கு விற்கப்பட்டது.. கிட்டத்தட்ட 15 மடங்கு.. இது பர பரப்பாக பேசப்பட்டது..
இந்தப்படத்தில் இருந்துதான் மணி பாரத இதிகாசங்களில் இருந்து கதைக்கரு எடுக்க ஆரம்பித்தார்.. மகாபாரதக்கதையில் வரும் துரியோதணன்-கர்ணன் நட்பு தான் அடிப்படை.. அதற்கு மாடர்ன் கலர் கொடுத்தார்..
சூப்பர் ஹிட் பாடல்கள் ஆடியோ சேல்சில் பின்னி எடுத்தது.
1.யமுனை ஆற்றிலே - எஸ்.பி பாலசுப்பிரமணியம், ஸ்வர்ணலதா
2. சுந்தரி கண்ணால் - எஸ்.பி பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி
3. புத்தம் புது பூ - யேசுதாஸ், எஸ். ஜானகிசின்னத் தாயவள் - எஸ். ஜானகி
4. மார்கழிதான் - எஸ்.பி பாலசுப்பிரமணியம், ஸ்வர்ணலதா, குழு
5. ராக்கம்மா கையத்தட்டு -எஸ்.பி பாலசுப்பிரமணியம், ஸ்வர்ணலதா
6.காட்டுக்குயிலு - எஸ்.பி பாலசுப்பிரமணியம், யேசுதாஸ்
பட ரிலீசுக்கு முன்பிருந்த ஆர்வம் படரிலீசுக்குப்பின் வரவில்லை. ஓவர் வன்முறை முக்கிய காரணம். இந்தப்படத்தில் 2 பாடல் காட்சி தவிர படம் முழுக்க ரஜினி சிரிக்காமல் இறுக்கமான முகத்துடனே வருவார்.. ரஜினிக்கு முக்கியமான படம்.அர்விந்த்சாமி இதில் தான் அறிமுகம். கலெக்டராக வருவார் .
தொடரும்
நன்றி - விக்கி பீடியா ஃபார் புள்ளி விபரங்கள்
34 comments:
வடை
நான் மணி சார் ரசிகன் ...எப்படி முடிக்க போறீங்க குரு
அருமையான கட்டுரை நண்பா....!
இதை போனவாரமே போட்டிருக்கலாமே? (அது சரி, தமிழ்மணத்தவிட அதிக ஹிட்ஸ் வாங்குறது அட்ரா சக்கதான்னு பேசிக்கிறாங்க..... அதுனால எதுக்கும் இங்க இருந்து தமிழ்மணத்துக்கு ஒரு லிங் கொடுத்துடுங்க)
90-கள் வரை அருமையாக போய்க் கொண்டிருந்தார், ஆனால் ரோஜாவில் இருந்து நாடு முழுமைக்கும் படம் எடுக்கனும் என்ற குறுகிய (?) வட்டத்திற்குள் சிக்கிக் கொண்டார். அதனாலேயே உயிரே, ஆயுத எழுத்து, ராவணன் போன்ற படங்களை ரசிக்க முடியவில்லை.
மணிரத்தினம் சொந்தமாக ஒரு கதைக்கருவை வைத்து படம் எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இன்னும் உள்ளது. எத்தனையோ அருமையான கதைக்களங்கள் உள்ளன, அவற்றை விட்டு விட்டு குறுகிய வட்டத்திற்குள்ளேயே இருக்கிறார்.
நாங்கள் மணியிடம் இருந்து எதிர்பார்ப்பது, மௌனராகம், கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற படங்களைத்தான்...
மணிரத்தினத்தின் படங்களை வரிசையாக அசை போடுகிறது இந்தக் கட்டுரை. வழமை போல் எழுத்து நடை, புள்ளி விபரங்கள், ஸ்டில்ஸ் எல்லாம் டாப்கிளாஸ்....!
என்ன இது புது ட்ரெண்டு...
இது போன்ற கட்டுரைகள் எழுத நேரம் எடுக்கும், ஆனால் தொடர்ந்து எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன்!
எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த இயக்குனர். விரிவான பகிர்வுக்கு நன்றி
@பன்னிக்குட்டி ராம்சாமி
ரோஜா ஆல் இந்தியா ஹிட் ஆனதால் மார்க்கெட்டிங்க் பர்போஸ் மணீரத்னம் என்ற அழகிய ரசனைக்காரரை பிஸ்னெஸ்மேன் ஆக்கியது.. பணம் பார்க்க ஆசைப்படுபவர் கலைத்தன்மையை அவரை அறியாமலேயே இழப்பார்..
வாவ் ...........நான் எதிர் பார்த்தது இந்த மாதிரி ஒரு பதிவ தான் .............. ஆன்லைன் ல ஏகப்பட்ட படம் இருக்கு ............ பட் எது நல்ல படம் எது மொக்க படம் னு .....தெரியாம ஒரே குழப்பம் .............இன்னைக்கு உங்க புண்ணியத்துல "பகல் நிலவு" பாக்க போறேன் ........தேங்க்ஸ் டூ வாசன் ஐ கேர் ...........சாரி தேங்க்ஸ் டூ சி.பி.செந்தில்குமார்
அழகிய ஆராய்ச்சி
சி பி சிங்கம் கலக்குது.... நானும் ஒரு புள்ளிவிவரம் போட்டிருக்கேன் பாருங்க.
இதயக்கோயில் சுமாராக ஓடிய படம்தான் ஆனாலும் பாடல்கட்சிகளின் ரம்யம் இன்னும் என் கண்முன்னால் நிற்கிறது,படத்தை ஓட வைக்க வேண்டும் என்பதற்காக,கவுண்டமணி பாகவதராக நடித்த காட்சிகள் பின்னால் சேர்க்கப்பட்டன.
தலைப்பில் சந்தேகம் தொனிக்கிறதே தல? :-)
சந்தேகமே வேண்டாம். மணிரத்னம் நிச்சயம் ஒரு சகாப்தம் தான்!
மணிரத்னத்தைப் போலவே இந்தியில் இயக்குனர் சேகர்கபூரும் யாரிடமும் உதவியாளராகப் பணியாற்றாமல் நேரடியாக வந்து வெற்றி இயக்குனரானவர்.
மௌனராகம், நாயகன் இவையிரண்டும் மணிரத்னத்துக்கு மட்டுமல்ல; தமிழ் சினிமாவுக்கே மைல்கற்கள். ரோஜா, பம்பாய் கொஞ்சம் sur-realism வகையைச் சார்ந்தவை என்றாலும், அவரது குறிக்கோள் பாராட்டத்தக்கது. ’தளபதி’ பேராசை! :-)
’திருடா திருடா," ’உயிரே’ இசையை மட்டும் நம்பி எடுத்த படங்களோ என்ற சந்தேகம் எனக்கு உண்டு. ’இருவர்’ ’ராவணன்,’ போன்ற படங்கள் அவருக்குள்ளிருந்த rebellion-ஐ வெளிக்காட்டினாலும், அவை ஓவர் வீம்பு என்பது எனது கருத்து. விமர்சனங்களுக்கு ஆளானாலும் ’இதெல்லாம் ஒரு படமா?’ என்று கேட்கிற அளவுக்கு அவர் படம் எடுப்பதில்லை. தொழில்நுட்பத்தை உபயோகப்படுத்துவதில் அவருக்கு இருந்த ஈடுபாட்டை ’பகல் நிலவு’ படத்திலேயே அறியலாம்.
ஒரு குறையுண்டு! எளிமையான, நேரடியான கதைகளை எடுத்து விட்டு, திடீரென்று பிரம்மாண்டம் பிரம்மாண்டம் என்று அலைந்து ’உள்ளதும் போச்சு நொள்ளச்சாமி,’ என்று ஆன பிரியதர்ஷன், மஹேஷ் பட் போன்ற இயக்குனர்களின் பலவீனம் மணிரத்னத்திடமும் தெரிகிறது. மற்றபடி, தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய இயக்குனர்தான் மணி..! சூப்பர் அலசல் தல...!
குட், சூப்பர், கலக்கல் .. இன்னும் என்ன சொல்லுறதுன்னு தெர்ல
நீங்க ஒரு மினி விக்கி பீடியா தல...
உங்க ட்விட்டர் பொல்லொவ் பட்டன் கொஞ்சம் தகராறு பண்ணுது கொஞ்சம் செக் பண்ணுங்க தல..
ஸ்பெல்லிங் மிஸ்டேக் தல
நான் நேரா ட்விட்டர் போய் பொல்லொவ் பண்ணிக்கிட்டேன்..
சரியா படிக்கமுடியல..அங்கங்கே பாண்ட் மிஸ்டேக்கா இருக்கு...
ஆஹா....ஒரு சகாப்தத்தைப்பற்றிய ஆராய்ச்சி மற்றொரு வளரும் இயக்குநர் சகாப்த்தத்தால் நடத்தப்படுகிறது.
நானும் உங்களையும் உங்கள் படங்களைப்பற்றியும் எதிர்காலத்தில் ஆராய்ச்சி செய்வேன் என்று என் உள்ளுணர்வு சொல்கிறது கொழுந்தனாரே. அட்வான்ஸ்டு கங்ராஜூலேசன்.(பெண்களின் உள்ளுணர்வு என்றுமே பொய்ப்பதில்லை என்று நீங்கள்தான் டுவிஸ்ட்டில் சொல்லியிருக்கிறீர்கள்.)
தமிழ மனம் ஏழாவது ஓட்டு..
மணிரத்னம் முரளி என்ற நடிகடிரின் தந்தையிடம் அசிஸ்டெண்டாக கன்னடப் படங்களில் பணியாற்றியுள்ளார்.
அதனால்தான் அவரது முதல் படம் கன்னடத்தில் வந்தது.
மணிரத்னம் நல்ல இயக்குநர் தான் ஒரு காலத்தில்.
எப்போது தமிழுக்கும் இந்திக்கும் பொருத்தாகா படம் ‘செய்ய’ ஆரம்பித்தாரோ அத்துடன் அவரது கலைத்தன்மை காலி ஆகியது.
நல்ல அலசல் சிபி..தொடருங்கள்.
ஆமாங்க, உரிமைகளுக்காக போராடும் ஓர் பெண்ணை உயிரே படத்தில் கவர்ச்சி நடனம் ஆடலாம் என்று புரட்சி செய்தவரும் இவருதாங்கோ!!
இவர் ஈழம் பற்றி அரைவேக்காட்டுத்தனமா ஒரு படம் எடுத்ததையும் நாங்க மறக்கலீங்கோ.
எனக்கு மணிரத்னத்தினம் பற்றி இவ்வளவு திரியாது தகவலுக்கு நன்றி..
எனது கனா.................
இளையராஜாவை சகாப்தம் என்று சொன்னால் ஏற்று கொள்ளலாம். மணிரத்தினம் சகாப்தம் என்றெல்லாம் ஒன்றுமில்லை. மணியை பிடிக்கும் ரோஜா படம் வரை, அதன் பிறகு அவர் எடுக்கும் படங்களில் தெளிவில்லை என்று தான் நான் நினக்கிறேன். எனக்கு அஞ்சலி திரைப்படமே பிடிக்கவில்லை. எல்லாம் அறிவு ஜீவி குழந்தைகள்.. குழந்தைகள் உலகம் என்றால், அது பசங்க படம் தான்.
என்னையா இப்பவருகிற மணிரத்தினத்தின் படங்களை விரிவாக விமர்சிபீர் என நம்புகிறேன் அடுத்த பதிவில்..!?
காட்டான் குழ போட்டான்...
என்னையா இப்பவருகிற மணிரத்தினத்தின் படங்களை விரிவாக விமர்சிபீர் என நம்புகிறேன் அடுத்த பதிவில்..!?
காட்டான் குழ போட்டான்...
அண்ணே அருமையா சொல்லி இருக்கீங்க...பல தகவல்கள் உள்ளது நன்றி!....தனிப்பட்டு தெரிந்து கொண்டு இருந்தவர் தன்னை பெரிய அறிவு ஜீவியாக காட்டிக்கொள்ள முயன்று தோற்று வருகிறார்....!
அருமையான கதம்பம்..தகவலுக்கு நன்றி
வணக்கம் பாஸ், உங்களிடமிருந்து ஒரு வித்தியாசமான இடுகை. இருங்கோ படித்து விட்டு பின்னூட்டங்களுடன் வருகிறேன்.
super
முதல் முதலில் உதவி இயக்குனராக பணி ஆற்றாமல் இயக்குனரானவர் மகேந்திரன் தான்... முள்ளும் மலரும் 1978இல் மணிரத்னம் இல்லை
Post a Comment