சாணக்யன் செல்லும் இடம் எல்லாம் அறிவுடன் செல்கிறான்,மன்னன் செல்லும் இடம் ஆள் பலத்துடன் செல்கிறான்,இயக்குநர் ஹரி மட்டும் அரிவாளுடன் தான் ஸ்டோரி டிஸ்கஷனுக்கே போவார் போல....ஒரே ரணகளம்,வெட்டு குத்து,லாரி,அடியாட்கள், தாதா கோஷ்டி மோதல்கள்..உஷ் அப்பா. சாமி.. முடியல..
ராஜ்கிரண் ஊர் பெரிய மனுஷன் கம் கட்டப் பஞ்சாயத்து பார்ட்டி அண்ணன் அழகிரி மாதிரி..அவர் பார்த்து ஜெயிக்க வைத்த எம் எல் ஏ பிரகாஷ் ஊழல் பண்ணி விடுகிறார் ஆ ராசா மாதிரி.. சொத்துக்களை மக்களுக்கே எழுத வைத்து தன்னை அவமானப்படுத்திய ராஜ்கிரணை பிரகாஷ்ராஜ் 45 தடவை டேய் என உறுமி பழி வாங்கத்துடிக்கிறார்...அவரை காப்பாற்றுவது ராஜ்கிரணின் மகன் தனுஷ்..
இந்தப்படம் பத்தோட 11 ஆகப்போயிடக்கூடாதுங்கறதுக்காக இடையிடையே ஒரு காதல் வித் தமனா.. கார்த்தி- ரஞ்சனி கல்யாணத்தால் ஏற்பட்ட சோகமோ என்னமோ தமனா ஈரோடு மஞ்சள் கிழங்கு மாதிரி இருந்தவர் காய்ந்து போன பாரியூர் வாழை மட்டை மாதிரி டல்லடிக்கிறார்..அதுவும் பாடல் காட்சிகளில் அவர் காட்டும் அதீத உற்சாகம் அதீத செயற்கை..
ஓப்பனிங்க் சீன்ல இயக்குநர் கோட்டை விட்டுட்டார்.. அதாவது தண்டவாளத்துல பாம்,ஹீரோ தடுக்கனும்,இந்த சீன்ல ஹீரோ சுள்ளான் படத்துல வர்ற மாதிரி செம பில்டப்போட வந்து ஒற்றைக்கையால ரயிலை நிறுத்துவார்னு பார்த்தா ப்ச். சிவப்புக்கலர் கொடியை காட்டி நிறுத்தறார்.. இதெல்லாம் சிவாஜி கால ஒயிட் &பிளாக் பச்சை விளக்குலயே பார்த்தாச்சு பாஸ்..
கஞ்சா கறுப்பு சைக்கிள் பெண்ட் எடுக்கறேன்னு சொல்லிட்டு என்னமோ பண்றாரே. அதான் காமெடியாம் ஹய்யோ ஹய்யோ.. (இயக்குநர் பேட்டி ஒன்றில் - என் படங்கள் குடும்பத்தோட உக்காந்து பார்க்கற மாதிரி இருக்கும்)
படத்தில் வேங்கையாய் சீறிய வசனங்கள்
1. அப்பா.. எதுக்கு என் ஃபோட்டோ கேட்கறீங்க? என் பேர்ல ஏதாவது சொத்து எழுதி வைக்கப்போறீங்களா?
இல்லை. பாஸ்போர்ட் எடுத்து உன்னை வெளிநாடு அனுப்ப போறோம்.. அப்போதான் நீ அடி தடி எதுக்கும் போக மாட்டே.... ( ஏன் ஃபாரீன்ல போய் ஃபைட் போட மாட்டாரா?)
2. விட்றா.. விட்றா..
பளார்.. பளார்.
எதுக்குடா என்னை அறைஞ்சே?
நீதானே விட்றா விட்றான்னு கத்துனே..? அதான் விட்டேன்
3. சரி.. சரி.. வா, மாரியப்பன் உன்னை தேடுவான். அவன் கிட்டே போவோம்..
யார் அந்த மாரியப்பன்?
என் சித்தப்பன் தான்..
4. ஊர்ல இருக்கறப்ப கண்ட கண்ட பசங்களோட எல்லாம் தண்ணி அடிச்சது தப்பா போச்சு.. இப்போ ஆளாளுக்கு மாமா,மச்சான்னு கூப்பிட்டு மானத்தை வாங்கறானுங்க...
5. சோகத்துலயே பெரிய சோகம் புத்திர சோகம் தான்..
6. டேய்.. ஒண்ணு சொல்லட்டா.அவ சின்ன வயசுல எப்படி பிச்சை போட்டாளோ அதே மாதிரி தான் இப்போவும் பிச்சை போடறா..
அடப்பாவி,பிச்சைஎடுக்கறவங்க வேணா விதம் விதமா எடுப்பாங்க,ஆனா பிச்சை போடறவங்க எல்லாரும் ஒரே மாதிரிதான் போடுவாங்க..
7. பல எருமைகளை மெயிண்ட்டெயின் பண்ணவேண்டி இருக்கு,இந்த மாசம் ஒரு மூட்டை புண்ணாக்கு அதிகம் வாங்கு.
8. ஈ ரோட்ல நின்னு திரிச்சு திரிச்சு அதையே பரஞ்சா எப்படி?
ஹலோ.. ஈரோட்ல இருந்தா நாங்க எல்லாம் ஈரோடுன்னுதான் சொல்லுவோம்.. உங்களை மாதிரி திருச்சின்னு சொல்ல மாட்டோம்..
9. அவளுக்கு ஓமனக்குட்டன்ன்னு ஒரு அண்ணனும் ,கோமணக்குட்டன்னு ஒரு அப்பாவும் இருக்காங்க போல..
10. டேய்.. நீங்க எல்லாம் போதைக்கு குடிக்கறவனுங்க,நாங்க எல்லாம் டயட்க்காக குடிக்கறவங்க..
புரியலையே?
உடம்பு குண்டா இருக்கறவங்க ஒல்லி ஆக கொள்ளு சாப்பிடற மாதிரி, ஒல்லியா இருக்கறவங்க உடம்பை தேத்த பீர் சாப்பிடறாங்க.
11. தினமும் பல முறை கண்ணாடில நம்ம முகத்தை பார்க்கறோம்,அப்போ தோணாதது யாரோ ஒருவர் நாம் அழகா இருக்கறதா சொன்ன பின்னாடி கண்ணாடில நம்மை நாமே புதுசா பார்ப்போம்.. யூ ஆர் பியூட்டிஃபுல்னு அவன் சொன்ன பின்னாடி தான் நம்ம அழகே நமக்கு தெரியுது..
12. ஏய்.. என்ன நடக்குது அங்கே?
ம்.. ஆடு ,மாடு, பூனை, நாய் எல்லாம் நடக்குது... ( அரதப்பழசான ஆனந்த விகடன் ஜோக் ரிட்டர்ன் பை வெ சீதாராமன் 1987)
13. பூமித்தாயிடம் இருந்து மண்ணைக்களவாடறதும், பெத்த தாயிடம் இருந்து கற்பை களவாடறதும் ஒண்ணுதான்...
14. செல்வத்தை பார்த்து சாரி.. சொல்லப்போறியா?
இல்லை, சரின்னு சொல்லப்போறேன்.. காதலுக்கு..
15. ஏய்.. எதுக்குடி பஸ்ல எழுதப்பட்டிருக்கும் குறளை பார்த்துட்டு சிரிக்கறே?
(செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை.)
என் ஆள் செல்வத்தை நினைச்சுத்தான்..
16. ஒரு நிமிஷம்.. பதறாதீங்க.. நீங்க பதறுனா எதிரி போட்ட திட்டத்துல பாதி வெற்றி அடைஞ்ச மாதிரி..
17. டிரங்க்கன் டிரைவிங்க்னு எதுக்குய்யா எங்களைப்பிடிக்கறீங்க? டாஸ்மாக் வாசல் டூ வீடு வரை குடிகாரர்களை டிராப் பண்ணறதுக்குன்னே ஒரு தனி பஸ் விடுங்கய்யா..
18. பிரகாஷ்ராஜ் பேசும் கேவலமான பஞ்ச் டயலாக் - பருப்புல உயர்ந்தது முந்திரி.. பதவில உயர்ந்தது மந்திரி.. ( படம் பார்த்தவரை போதும் நீ எந்திரி)
19. நானே தனியா வந்திருக்கேன்.. நீ உன் ஆளுங்களோட தானே இருக்கே.. ஏன் பயப்படறே? ( நீ ஹீரோ.. அப்டித்தான் வருவே.. )
20. எதுக்குடி என்னை ஏமாத்துனே?
அண்ணே,இன்னைக்கு ஏப்ரல் 1.. இன்னைக்குத்தான் லவ் ரிசல்ட் சொல்றதா அவ சொல்லி இருக்கா.. நான் உன்னை ஏமாத்திட்டா ,அவ உன்னை ஏமாத்தமாட்டா.. ஏன்னா ஏப்ரல் 1 ல யாரும் 2 வது தடவை ஏமாற மாட்டாங்க..
21. என் காதலை என்னால மறக்கவும் முடியலை, மறுக்கவும் முடியல..
22. உலகத்துலயே கொடுமையான விஷயம் என்னான்னா ஒருத்தன் தன் மனைவி முன்னிலையில் மற்றவர்களால் அவமானப்படுவதுதான்.. (எனக்கென்ன தோணுதுன்னா ஒரு ஆண் பெரும்பாலும் மனைவியாலதான் அவமானப்படுத்தப்படறான்னு ஹி ஹி )
23. கோவத்துக்காக அரிவாள் எடுத்தா தப்பு,ஆனா காவலுக்காக அரிவாள் எடுத்தா அது தப்பில்லை.. ( மவனே.. இனி எந்தப்படத்துலயும் எவனாவது அரிவாள் எடுத்தீங்க.. _ ஆடியன்ஸ்.. )
24. இங்கே பாருடி.. கூட்டமா வாழ்ந்தாத்தான் அது குடும்பம்.. 2 பேர் மட்டும் வாழ்ந்தா... அது வாழ்க்கையே இல்லை..
25. நீங்க சொல்ற ஆளுங்களுக்கு மக்கள் ஓட்டு போடறாங்க.. நீங்க ம்னு சொன்னா இந்த சோப்பு வாங்க மாட்டாங்களா?
26. இந்த ஆட்டத்துக்கு பேர் என்ன?
செக்ஸ்....
யோவ்.. இது செஸ்யா..
27. ஏய்... என்ன பண்றே?அய்யா கோழியைத்தானே பிடிக்கச்சொன்னாரு?
எனக்குப்பிடிச்ச கோழியை நான் பிடிக்கறேன்...
28. பழி வாங்க எத்தனையோ வழி முறைகள் இருக்கு.. என் காதல் தானா கிடைச்சது?
29.. உடம்பை வித்து பிழைக்கற பொண்ணு கிட்டே போய் பணம் கொடுத்து ஒருத்தனை காதலிக்கற மாதிரி நடின்னா அவ கூட காரியை துப்புவா.. ஆனா நீ என்னை லவ் பண்றேன்னு சொல்லி ஏமாத்திட்டியேடி..
30. கெட்டவங்க எல்லாரும் சேர்ந்து நல்லவங்களை அழிச்சிட முடியும்னா எதுக்கு சாமி? எதுக்கு கோயில்?
31. ஒரு நண்பனுக்கு நண்பனா நடக்கலாம், ஒரு எதிரிக்கு எதிரியா நடக்கலாம், ஆனா ஒரு துரோகிக்கு துரோகியா மட்டும் நடந்துக்கக்கூடாது..
32.. அம்மா.. தேவை இல்லாம அழுது என்னை கோழை ஆக்காதே..
33. நீ இருந்தா என்னால சாக முடியாது,நீ இல்லாம போனா என்னால வாழ முடியாது..
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
1. படத்தில் அடியாட்கள் என்ற பெயரில் 1279 பேருக்கு வேலை கொடுத்து ,சம்பளம்,பேட்டா கொடுத்து மெயிண்ட்டெயின் செய்தது..
2. அரிவாள் செய்யும் கலைஞர்கள், அரிவாள் தீட்டும் கலைஞர்களுக்கு மறுவாழ்வு அளித்தது..
3. வாகனங்கள் 89 டாட்டா சுமோ, 34 லாரி, 12 ஜீப் பொன்ற வாகனங்களை யூஸ்செய்ததின் மூலம் பல வாகன ஓட்டிகளுக்கு வாழ்வு கொடுத்தது..
4, பிரகாஷ்ராஜ் மாதிரி ஜைஜாண்டிக்கான ஆளை தனுஷ் மாதிரி சப்ப பசங்க எல்லாம் சாதாரணமா ஜெயிக்கற மாதிரி காட்டி ஒல்லிப்பசங்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டியது
5. காலங்காத்தால மறைஞ்சிருக்கும் வெண்ணிலா போல என்னைப்பார்த்ததும் ஒளிஞ்சிக்கறியே பெண்ணே... , மற்றும் என்ன சொல்லிப்போறே நீ எப்போ சொல்லப்போறே?,உன்னை மட்டும் பிடிச்சது கண்ணை மட்டும் பிடிச்சது என 3 ஹிட் பாடல்களை தேவி பிரசாத் மூலம் ரெடி பண்ணுனது..
இயக்குநரிடம் சில கேள்விகள்
1. தமனாவுக்கு 8 வயசுல தொடைல சூடு போட்டுடறாங்க.. ( நோ பதட்டம் படத்துல தான் )அது 23 வயசுலயும் காயம் ஆறாம தழும்பு அப்படியேவா இருக்கும்?
2. கஞ்சா கறுப்பு காமெடி சீன் சாரி காம நெடி சீன் எடுக்கும்போது உங்க மனசுல குற்ற உணர்ச்சியே வர்லையா? இப்படி கேவலமா சீன் எடுக்கறமேன்னு..?
3. மனிதனின் மனதில் உள்ள மென்மையான உணர்வுகள், பாசிட்டிவ் குணங்களே உங்க கண்ணுக்கு தெரியாதா?
4. ஒரு கிராமம்னா அங்கே இருக்கறவங்களுக்கு அடி தடி வெட்டு குத்து தவிர வேற வேலையே இருக்காதா?
5. படத்துல ஹீரோவைத்தவிர எல்லாருமே படு முட்டாளுங்களா இருக்காங்களே அது ஏன்?
இந்தப்படம் கமெர்ஷியலா போட்ட முதலீட்டை எடுத்துடும்னாலும், ஒரு நல்ல சினிமா ரசிகனா இந்தப்படம் ஓடிடக்கூடாதுன்னு வேண்டிக்கறேன்.. அப்படி ஓடிட்டா ஆளாளுக்கு இதை மோசமான முன்னுதாரணமா எடுத்துக்கிட்டு மறுபடி இதே மாதிரி மசாலாக்குப்பைகளைத்தான் எடுப்பாங்க..
ஏ, பி செண்ட்டர்களில் 25 நாட்கள், சி செண்ட்டர்களில் 15 நாட்கள் ஓடும்..
எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 40
எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க்கிங்க் - ஓக்கே
சி.பி கமெண்ட் - அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஈரோடு அபிராமி,ஆனூர்,சங்கீதா ,லட்சுமி என 4 தியேட்டரில் இந்த படம் ஓடுது.. (ரிசல்ட் தெரியும் முன் வசூலை அள்ளீக்க இது ஒரு குறுக்கு வழி ஐடியா.. )
நான் அபிராமில பார்த்தேன்.. காரணம் உங்களுக்கே தெரியும். என் பொண்ணு பேரு அபிராமி... .
டிஸ்கி- தமனா படத்தில் சரியில்லை என சொன்னீங்க, ஆனா இங்கே பார்க்க நல்லாத்தானே இருக்காங்க? என கமெண்ட் போடுபவர்களுக்கு - நான் வேங்கை ஸ்டில்ஸில் எடுக்காமல் தமனாவின் ஆல்ப ஸ்டில்லிலிருந்து எடுத்தேன் ஹி ஹி
டிஸ்கி- தமனா படத்தில் சரியில்லை என சொன்னீங்க, ஆனா இங்கே பார்க்க நல்லாத்தானே இருக்காங்க? என கமெண்ட் போடுபவர்களுக்கு - நான் வேங்கை ஸ்டில்ஸில் எடுக்காமல் தமனாவின் ஆல்ப ஸ்டில்லிலிருந்து எடுத்தேன் ஹி ஹி
34 comments:
ரைட்டு..
படம் ஓடுமா ? ஓடாதா? உங்களுக்கே #டவுட்டு,,
இப்பவே கண்ணு கட்டுதப்பா
ஏய்.. எதுக்குடி பஸ்ல எழுதப்பட்டிருக்கும் குறளை பார்த்துட்டு சிரிக்கறே?
(செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை.)
என் ஆள் செல்வத்தை நினைச்சுத்தான்..
>>>>
திருவள்ளுவர் இப்போ இருந்தார்னா எழுத்தாணியாலே தலையில குட்டிக்கிட்டு இருந்திருப்பார்.
//கஞ்சா கறுப்பு காமெடி சீன் சாரி காம நெடி சீன் எடுக்கும்போது உங்க மனசுல குற்ற உணர்ச்சியே வர்லையா? இப்படி கேவலமா சீன் எடுக்கறமேன்னு..?//
நல்லவர் சிபி அண்ணன் வாழ்க வளர்க :)
//உலகத்துலயே கொடுமையான விஷயம் என்னான்னா ஒருத்தன் தன் மனைவி முன்னிலையில் மற்றவர்களால் அவமானப்படுவதுதான்.. (எனக்கென்ன தோணுதுன்னா ஒரு ஆண் பெரும்பாலும் மனைவியாலதான் அவமானப்படுத்தப்படறான்னு ஹி ஹி ) //
அப்படியானே :)
//தமனா ஈரோடு மஞ்சள் கிழங்கு மாதிரி இருந்தவர் காய்ந்து போன பாரியூர் வாழை மட்டை மாதிரி டல்லடிக்கிறார்..//
அது உங்க கண்ணுல ஏதாவது பிரச்சினையானே இல்ல நெஜமாலுமேவா ??
ஆஹா..அண்ணன் முந்திக்கிட்டாரே..நம்ம விமர்சனம் நைட்டு தான்.
தமன்னா எப்பவுமே எனக்கு டல்லாத் தான்யா தெரிவாங்க...நீங்க இப்போ தான் கண்டுபிடிச்சீங்களா.
நடு நிலையான விமர்சனம் ....
அப்போ வேங்கை ஸ்பீடா ஓடிடும் தியேட்டரை விட்டு என்று சொல்கிறீர்களா????
அப்போ வேங்கை ஸ்பீடா ஓடிடும் தியேட்டரை விட்டு என்று சொல்கிறீர்களா????
தேங்க்ஸ் பாஸ் , தனுசுக்காக இந்த படம் பாக்கலாம் என்று இருந்தேன்
பட செய்தி சொல்லி தப்பிக்க வைச்சதுக்கு
பிரகாஷ்ராஜ் பேசும் கேவலமான பஞ்ச் டயலாக் - பருப்புல உயர்ந்தது முந்திரி.. பதவில உயர்ந்தது மந்திரி.. ( படம் பார்த்தவரை போதும் நீ எந்திரி)
>>>>
அப்பவும், தன் முயர்ற்சியில் சற்றும் சளைக்காத விக்கிரமாதித்தன் போல, பாதியிலேயே எந்திரிச்சு வராம, கிளைமேக்ஸ் வரை பார்த்துட்டு வந்தீங்க.
நல்லா எண்ணி எண்ணி படம் பார்த்து இருக்கீங்க அண்ணே.
நீங்க இங்க இருக்க வேண்டிய ஆளே இல்லை புள்ளியியல் இலாகால இருக்க வேண்டியவரு.
விமர்சனம் சூப்பரு அப்புறம் தமன்னா படங்களும் ஹி ஹி ஹி ....
தமனாவுக்கு 8 வயசுல தொடைல சூடு போட்டுடறாங்க.. ( நோ பதட்டம் படத்துல தான் )அது 23 வயசுலயும் காயம் ஆறாம தழும்பு அப்படியேவா இருக்கும்?
>>
சூடு போட்ட காயம் நாளடைவில ஆறிடும். ஆனால், கடைசிவரை தழும்பு மட்டும் அப்படியேதான் இருக்கும்.
ஈரோடு அபிராமி,ஆனூர்,சங்கீதா ,லட்சுமி என 4 தியேட்டரில் இந்த படம் ஓடுது..
>>>
பாப்பா காசை வீணக்குறாதுமில்லாம, செண்டிமெண்ட் வேற. பாப்பா பெருசான பின்னாடி, உங்க வருமான கணக்கு வழக்குலாம் கேட்கனுமினு சாமிய வேண்டிக்குறேன்.
தமனா படத்தில் சரியில்லை என சொன்னீங்க, ஆனா இங்கே பார்க்க நல்லாத்தானே இருக்காங்க?
ரைட்டு....
நிறைய வசனங்கள் நிறைய போட்டு அசத்தியிருக்கிங்க...
அந்த திறமை நமக்கு இல்லீங்க...
அப்போ வேங்கை பாயல ...அப்படிதானே ...
Sun picture escape a?
" இயக்குனர் 'பல்பு'வாங்கிய இடங்கள்" காணோமே.....
முழு படமும் பல்பா...???????
ஐ.....நம்ம தனுஷோட படோம்லே.நல்லத்தான் இருக்கும்.
இப்பவாச்சும் நடிகை படத்த போட்டிங்களே....
படம் பார்திங்களே.... நொந்த நூடில்ஸ் ஆணிங்களா? இல்லை வெந்து நூடில்ஸ் ஆணிங்களா?
அப்போ படம் பார்க்கலாம்னு சொல்றீங்க,பார்த்துடுவோம்...
படங்கள் கண்ணுக்கு நிறைவா இருந்துச்சு. இப்டியே போனா..உங்க ப்ளாக்கை படிக்கறதை விட படத்தை பார்க்கத்தான் கூட்டம் வரும்..nice pictures..
ஹரி சொந்தமா அருவா பாக்டரி வச்சிருக்காரோ?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
////// தண்டவாளத்துல பாம்,ஹீரோ தடுக்கனும்,இந்த சீன்ல ஹீரோ சுள்ளான் படத்துல வர்ற மாதிரி செம பில்டப்போட வந்து ஒற்றைக்கையால ரயிலை நிறுத்துவார்னு பார்த்தா ப்ச். சிவப்புக்கலர் கொடியை காட்டி நிறுத்தறார்.. இதெல்லாம் சிவாஜி கால ஒயிட் &பிளாக் பச்சை விளக்குலயே பார்த்தாச்சு பாஸ்.. //////
ok right cp... but this is tamil cinema ruls
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
மனித நேயம் கொண்ட தமிழரே எம் பாவம் தீர்ப்போம் வாருங்கள்
Thamanna soodu/////
neenga soodu munna pinna vaangirindha theriyum
விமர்சனம் விமர்சனம் விமர்சனம் விமர்சனம்
கிழிக்கபடுகிறது நிழல் முகங்களின் நிஜங்கள் விமர்சனமாக....போதுமாய்யா...!
படங்கள் ரொம்ப அழகாக மனதை கொள்ளை கொள்ளும் விதமாக இருக்கு செந்தில்குமார்....
யோவ்.. யாருயா நீரு... தமன்னா இந்த படதுலே தான் பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரி பாவடை தாவணிலை வர்றாங்க... அது பொறுக்காதே உங்களுக்கு...!!!
என்ன பண்றது இந்த தெலுங்கு பக்கம் போனலே இப்படிதான்... மறந்துடுவாங்க...!!! :P
”வேங்கை” பட டைட்டிலுக்கு காரணம் சொல்லவேயில்லையே ! !
(காரணம் வேறு தனியா சொல்லணுமாக்கும் என யோசிக்காதீங்க)
காரியை துப்பிருவாங்களா? என்ன தலை இன்னைக்கு நிறைய ஸ்பெல்லிங் மிஸ்டேக்கு
Post a Comment