Wednesday, July 20, 2011

அபார்ஷனின் எல்லைக்கோட்டில் சென்னை பெண் பதிவர் -கண்ணீர் சம்பவம்




சென்னை பெண் பதிவர் பற்றிய உண்மை சம்பவத்தை முதல் பாகத்தில் படிக்காதவர்கள் இங்கே க்ளிக்கி படிக்கவும்

மேலும் வாசிக்கவாசலில் முபாரக்கை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த மாளவிகா


”என்ன வேணும்?எதுவா இருந்தாலும் அவர் இருக்கும்போது வா. “

ஏய்.. உன் கிட்டே கொஞ்சம் பேசனும். கதவை திற

“ஏன்..? என் கிட்டே பேசற மேட்டரை அவர் இருக்கறப்ப பேச முடியாதா?”

வாக்குவாதம் முற்றுகிறது.. பக்கத்து வீட்டில் எட்டிப்பார்க்கிறார்கள்..தேவையற்ற சிக்கல் எதற்கு? என்று நினைத்த மாளவிகா கதவின் சேஃப்டி சங்கிலியை விடுவித்து அவனை உள்ளே அனுமதிக்கிறார்.

” ஏண்டி.. உனக்கு எவ்வளவு கொழுப்பு இருந்தா உன் புருஷன் கிட்டே என்னை போட்டுக்குடுப்பே..உன் புருஷன் பெரிய இவன் மாதிரி உன் ஃபிரண்டுக்கு சப்போர்ட் பண்றான்..?அவ அப்படி இருக்க மாட்டா அப்டின்னு சர்ட்டிஃபிகேட் தர்றான்? அவ்வளவு டீட்டெயிலா அவளைப்பற்றி அவனுக்கு எப்படி தெரியும்? அவளை அவன் வெச்சிருக்கானா? 

”டேய். வார்த்தையை அளந்து பேசு. அவ என் கணவனுக்கு தங்கை மாதிரி ...”


“அப்டின்னு நீ நினைக்கறே.. உன் புருஷன் என்ன நினைக்கறானோ?”


 தன் தோழியை அன்புக்கணவனோடு சம்பந்தப்படுத்திப்பேசியதைக்கண்டு கொதிப்படைந்த மாளவிகா முபாரக்கை ஆவேசமாக வெளியே தள்ள  முயற்சிக்கிறார்.கோபம் அடைந்த முபாரக் மாளவிகா கர்ப்பவதி என்பதையும்,5 வருட சிநேகிதி என்பதையும், நண்பனின் மனைவி என்பதையும் மறந்து அவரை ஆவேசமாக பிடனியைப்பிடித்து தள்ளுகிறார்.. எதிர்பாராத அந்த தாக்குதலில் நிலை குலைந்த மாளவிகா வேகமாக டைனிங்க் டேபிள் மேல் போய் விழுகிறார்..


 அவரது வயிற்றில் அடிபட்டதில் மயக்கம் அடைகிறார்.. உடனே பயந்து போன முபாரக் வேகமாக அறையை விட்டு வெளியேறுகிறான்.. உண்மையான மனித நேயம் உள்ளவனாக இருந்தால் அட்லீஸ்ட் யாருக்காவது தகவலாவது சொல்லி காப்பாற்றி இருக்கலாம்..



20 நிமிடம் மயக்க நிலையில் இருந்து தானாக எழுந்த மாளவிகா ரத்தப்போக்கு (BLEEDING)ஏற்பட்டிருப்பது கண்டு பதட்டம் அடைந்து தன் கணவருக்கு ஃபோன் செய்ய லைன் கிடைக்காததால் பின்  குடும்ப நண்பர் ஒருவருக்கு ஃபோன் செய்து நிலைமையை சொல்லி அழைத்தார்..

அவரால் நகரக்கூட முடியவைல்லை.. அரை மயக்கத்தில் அப்படியே கிடந்தார்.. மீண்டும் 25 நிமிடங்கள் கழித்தே வந்த குடும்ப நண்பர் அவரை ஆட்டோவில் ஹாஸ்பிடல் அழைத்து சென்றார்..

மாளவிகாவின் கணவருக்கு விபரம் தெரிவிக்கப்பட்டு ,அவர் பதறி அடித்துக்கொண்டு ஹாஸ்பிடல் ஓடி வந்தார்..

கர்ப்பப்பையின் வாய் கிழிந்து விட்டது என்றும் 2 நாட்கள் தையல் போட்டு பின் அசையாமல் கால்களை மட்டும் மேலே தூக்கிய நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டது..

Socotra Dragon Tree,( Socotra, is a small archipelago of four islands in Yemen)
Socotra_dragon_tree.jpg


2 நாட்கள் நரக வேதனைக்குப்பிறகு கிட்டத்தட்ட அபார்ஷன் நிலை வரை சென்று  மீண்டு வந்தார். அதற்குப்பின் 27 நாட்கள் ஹாஸ்பிடல்ல் சிகிச்சை பெற்றார்..

முபாரக் மீது வழக்கு தொடரப்பட்டது.. அட்டெம்ப்ட்  ரேப் கேஸ் போடப்பட்டது..

தனிமையில் இருந்த பெண்ணிடம் தகராறு, கர்ப்பவதி ஆன பெண்ணிடம் கரு கலையும் விதம் தாக்கியது,கற்பழிப்பு முயற்சி என 3 பிரிவுகளில் கேஸ் போடப்பட்டது..

மாளவிகா மயக்க நிலையில் இருந்த போது கற்பழிப்பு நடந்திருக்க வாய்ப்பு இருக்கிறது என்ற சந்தேக அடிப்படையில் அப்படி ஒரு கேஸ் போடப்பட்டது..

ஆனால் மெடிக்கல் ரிப்போர்ட் கற்பழிப்போ , அதற்கான முயற்சிகளோ எதுவும் நடக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது..

முபாரக் ஹாஸ்பிடல் செலவு ரூ 3 லட்சம் கட்டி விட வேண்டும் எனவும் இனி மாளவிகா விஷயத்தில் தலையிடக்கூடாது எனவும் , ஏதாவது ஆபத்து வந்தால் அதற்கு முபாரக் தான் பொறுப்பு எனவும் போலீஸ் ஸ்டேஷனில் எழுதி வாங்கப்பட்டது..



இப்போது தாயும் ,வயிற்றில் வளரும் சேயும் நலம். 

இருந்தாலும் மோசமான சகவாசத்தால் அந்த குடும்பத்துக்கு நேர்ந்த மன உளைச்சல்கள்......

1. மெடிக்கல் ரிப்போர்ட் வரும் வரை தன் மனைவி மானபங்கப்படுத்தப்பட்டிருப்பாரா? என்ற சந்தேகம் + வருத்தம் இவற்றின் கலவையாக  மன உளைச்சலுக்கு ஆளான கணவன்.


2. சொந்த வீட்டிலேயே இந்த சம்பவம் நடந்ததால் இனி அங்கே குடி இருக்க முடியாது என்பதால் அவசர அவசரமாக காலி செய்து வேறு இடம் பார்த்து குடி போக வேண்டிய அலைச்சல்.


3. மாளவிகா  32 நாட்கள் ஹாஸ்பிடலில் படுத்த படுக்கையாக  கிடந்த நிலை..





இந்த சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்

1. வேலைக்கு செல்லும் பெண்கள் என்னதான் பழக்கமான ,நம்பிக்கையான நபர் என்றாலும்  தானே தனியாக பஸ்ஸிலோ,ஆட்டோவிலோ ,வண்டியிலோ, நடந்தே செல்வதே நல்லது.. கணவனின் நண்பன் என்பதற்காக டபுள்ஸ் போனால் இக்கட்டான நேரங்களில் அதை மிஸ் யூஸ் பண்ண வாய்ப்பு அதிகம்..

2. சந்தர்ப்பங்கள் ,எப்படி வேண்டுமானாலும் மனிதனின் மனதை மாற்றும் வல்லமை படைத்தது என்பதால்  நட்பு  வட்டாரத்தை ஆண்கள் வீட்டுக்கு வெளியே  வைத்துக்கொள்வதே நல்லது.. ( எல்லா ஆண்களும்  கெட்டவர்கள் அல்லதான்.. எந்த புற்றில் எந்தப்பாம்பு இருக்குமோ யார் கண்டது? ஏன் ரிஸ்க்? )

3. தனிக்குடித்தனத்துக்கு ஆசைப்படும் பெண்கள் பிரைவஸிக்கு ஆசைப்படுகிறார்கள்.. ஆனால் பெற்றோருடன் கூட்டுகுடும்பமாக இருந்தால் எப்போதும் ஆட்கள் வீட்டில் இருந்தால் இந்த மாதிரி சம்பவங்கள் தவிர்க்கப்படலாம்..

4. இவர் கூட ரொம்ப நாளாக பழகி இருக்கேன்.. இவர் அப்படி பண்ணமாட்டார்.. நல்லவர் என எப்போதும் யாரையும் நினைக்க வேண்டாம்.. உதாரணமாக 20 வயதில் ஒருவருக்கு 36 சைஸ் பேண்ட் எடுத்தால் 30 வயசில் அவர் பேண்ட் சைஸ் 38 அல்லது 40 என மாறலாம்.. அதே போல் தான் மனித மனமும் நல்லவராக இருப்பவர் எப்போதும் நல்லவராகவே இருக்க வாய்ப்பில்லை.. உடை அளவு மாறுவது போல மனித மனமும் மாறும் தன்மையது... இன்று நல்லவனாக இருப்பவன் நாளை கெட்டவனாக மாறலாம்.. எல்லோரிடமும் , எப்போதும் ஜாக்கிரதையாக இருப்பதே நல்லது..

5. இந்தப்பதிவின் நோக்கம் ஆண்களை கெட்டவர்கள் என லேபிள் பொருத்த அல்ல.. ஒரு பெண்ணின் வாழ்வில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு மற்றவர்களுக்கு ஒரு வார்னிங்க் தரவே...

6. சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம்  மனைவியை சந்தேகப்படும் கணவன் களூக்கு மத்தியில் இப்படி ஒரு இக்கட்டான சூழலிலும் தன் மனைவியை விட்டுக்கொடுக்காமல் அவருக்கு ஆதரவாக  வாதாடி அவருடன் மகிழ்ச்சியான வாழ்வை வாழும் சாந்தனு அவர்களுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

7. மேலும் இந்த சம்பவத்தை போலீசில் புகார் கொடுக்க வேண்டும் என ஆணித்தரமாக வாதாடி நீதி கிடைக்கப்போராடிய அறிவுமதிக்கு வாழ்த்துக்கள். அறிவுமதி - மாளவிகா இருவரின் 20 வருட நட்பின் ஆழத்துக்கு இந்த சம்பவம் மேலும் மெருகு சேர்த்திருக்கிறது .. அவர்கள் நட்பு தொடர வாழ்த்துக்கள்


டிஸ்கி - 1. சிலர் தனி மெயிலில் முபாரக் பேரை மட்டும் ஏன் உண்மையாக வெளியிட்டீர்கள்? பெண்கள் பெயர் மட்டும் ஏன் புனைப்பெயர்? என்று கேட்கிறார்கள்.. பாதிக்கப்பட்ட பெண்கள் மனம் மீண்டும் மீண்டும் காயப்படக்கூடாது என்பதற்காகத்தான் அவர்கள் உண்மையான பெயர் தெரிவிக்கப்படவில்லை.. முபாரக் மாதிரி ஒரு கறுப்பு ஆட்டின் முகமூடியை கிழிக்க அவனது உண்மையான பெயர் சொல்வதில் தப்பு இல்லை.. மேலும் முபாரக்கின் மனைவிக்கும் இந்த மேட்டர் மெயில் அனுப்பப்பட்டுள்ளது..


டிஸ்கி  - 2  -இந்தப்பதிவுக்கு கமெண்ட் போடுபவர்கள் பாதிக்கப்பட்ட பெண்கள் மனம் கோணாதவாறும் ,மாளவிகாவின் கணவர் மனம் பாதிக்கப்படாதது போலும் நாகரீகமாக, நாசூக்காக கமெண்ட் போடவும்.. ஏன் எனில் மிக வற்புறுத்தலுக்குப்பிறகே இந்த சம்பவம் பதிவு போட அனுமதி கிடத்தது.. நீங்கள் போடும் சின்ன தவறான வார்த்தை கூட அவர்கள் மனதை புண்படுத்த வாய்ப்புள்ளது.. உலகிலேயே மென்மையானது மனித மனம் தான். நாம் அதை காயப்படுத்தலாமா?

61 comments:

முத்தரசு said...

வந்துட்டோம்லே

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

அன்புடன் வணக்கம்,

//தாயும் சேயும் நலம்..//

இது போதும் நண்பரே..

அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய அருமையான படைப்பு..

வாழ்த்துக்கள்

http://sivaayasivaa.blogspot.com

சிவயசிவ

பன்னிக்குட்டி ராம்சாமி said...

உங்கள் முயற்சிக்குத் தலைவணங்குகிறேன் நண்பா! நாங்கள் சொல்ல நினைத்ததையே நீங்கள் சொல்லிவிட்டீர்கள்!

கோகுல் said...

எந்த புற்றில் எந்த பாம்பு இருக்குமோ?
யார் கண்டது?
எல்லோருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய பதிவு.நன்றி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Thanks for sharing

Mohamed Faaique said...

நல்ல பதிவு நன்பரே!!! எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ!!!! சரியான விஷயம்தான்..

சசிகுமார் said...

இந்த தவறுக்கு முழு முதற் காரணம் நண்பன் என்ற போர்வையில் இருந்த நாயை உள்ளே விட்டது தான். நண்பர்களே சிபி சொல்வது போல உங்க நட்பு வட்டத்தை வீட்டிற்கு வெளியையே விட்டு விடுங்கள். இது போன்ற சம்பவங்கள் பெரும்பாலும் நடப்பது கணவனின் நண்பர்கள் மூலமாக தான் என மறக்க வேண்டாம்.

ஆகவே இது போன்ற சம்பவம் நடக்காமல் இருப்பது உங்கள் கையில் தான் உள்ளது....

சிபி நல்ல பதிவு நண்பா... அனைவருக்கும் விழிப்புணர்வு வேண்டும். குறிப்பாக ஆண்களுக்கு

foreignkaran said...

half story is taken from fsiblog and half story is taken from several masala films.

Anonymous said...

Good one. A definite lesson.

test said...

நல்ல முயற்சி பாஸ்! அவசியமான பதிவு!

ரேவா said...

வணக்கம் சகோ... முழுப் பதிவும் படித்தாகி விட்டது.... சந்தர்ப்பமே ஒருவனை நல்லவனாகவும், கெட்டவனாகவும் மாற்றுகிறது.... நீங்கள் பதிவில் கோர்த்த வார்த்தைகள் அருமை... இங்கு ஒரு ஆண் தப்பு செய்தாலும், ஒரு கணவன் என்ற இன்னொரு ஆண் மூலம் தோழி மாளவிகாவிற்கு சரியான அறுதல் கிடைத்திருக்கிறது...இங்கே பாராட்டப் படவேண்டியவர் தோழியின் கணவரே... என்ன தான் ஒரு ஆண் என்ன தவறுகள் வேண்டுமானாலும் செய்யலாம், ஆனால் ஒரு பெண் என்றால் இப்படித் தான் என்ற வரையறைக்குள்ளே வாழ்ந்து பழக்கப் பட்டவர்கள்(நிர்பந்திக்கப பட்டவர்கள்), ஆனாலும் இங்கே நடந்தவைகளை சரியாய் புரிந்து, சந்தேகத்திற்கு இடம் கொடுக்காமல், அன்போடு செயல் பட்ட அந்த தோழியின் கணவருக்கு வாழ்த்துக்கள்...நீங்கள் குறிப்பிட்ட காரணங்களுள் எனக்கு மிகவும் பிடிச்சது தனிக்குடும்பம் ஆசையால், அவதிப்படும் பெண்கள், இது உண்மை தான், பெரியவர்கள் இருக்கும் போது, பார்வையிலே அடுத்தவரை எடைபோடும் திறன் அவர்களுக்கு, அவர்களது அனுபவம் கற்று தந்திருக்கும்.அவர்களை விட்டு விலக விலக பிரச்சனைகள் நம்ம நெருங்கத்தான் செய்யும் .மற்ற படி இந்த பதிவு அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை தான்....உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் சகோ,,,,, வார்த்தை கையாடல் அருமை.....

Unknown said...

என்று தணியும் இந்த உடல் சம்பந்தப்பட்டு ஏற்படும் அவலங்கள்!

Anonymous said...

அந்த ஓநாயை(முபாரக் ) நாலு வருஷம் ஜெயிலுக்க போட்டிருக்க வேண்டும் !

வைகை said...

அவன் மீது கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்திருக்கலாம்...வெளியில் வந்திருக்க முடியாது! புரிதல் கொண்ட கணவனாக இருந்ததால் பிரச்னை இல்லை... இல்லையென்றால் முடிவு வேறாக இருக்கும்! வெளியிட சம்மதம் சொன்னதற்கு அவர்களுக்கு பாராட்டுக்கள்..உங்களுக்கும்!

கவி அழகன் said...

இப்படி ஒரு பதிவ உங்கள் தளத்தில் எதிபார்கவில்லை

மனம் வருந்தும் நிலையில் பெண்கள்

Unknown said...

நல்ல விழிப்புணர்வு பதிவு அண்ணா

வளர்க உங்கள் சமூக பங்களிப்பு

RAMA RAVI (RAMVI) said...

நல்ல விழிப்புணர்வு பதிவு.
மாளவிகாவின் குடும்ப நன்மைக்காக இறைவனை வேண்டுகிறேன்.
பகிர்வுக்கு நன்றி.

'பரிவை' சே.குமார் said...

அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது கணவரும் இந்த துரதிஷ்ட சம்பவத்தில் இருந்து மீண்டு வந்து வர இருக்கும் தங்கள் குழந்தையுடன் சந்தோஷமாக இருக்க பிரார்த்திப்போம்.

ஆமினா said...

மாளவிகாவின் கணவருக்கு என் பாராட்டுக்களை சொல்லிடுங்க.

முத்தரசு said...

இந்த மாதிரி உள்ள நாய்களை அதுவும் நண்பன் என்று போர்வைக்குள் உள்ள ஓநாய்களை சுட்டு தள்ளனும்யா

முத்தரசு said...

@??.??????

ஆமாம் தோழரே

முத்தரசு said...

கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்

2,3,4 - ரொம்பவும் சரியே

மாலதி said...

எல்லோருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய பதிவு.நன்றி

செங்கோவி said...

//தாயும் சேயும் நலம்//

பதறிக் கொண்டே படித்தேன். இதைப் பார்த்த பின் தான் நிம்மதி.

இந்தப் பதிவு கொடுக்கும் படிப்பினையை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

sathishsangkavi.blogspot.com said...

அனைவரும் அறிய வேண்டிய பதிவு சிபி....

ராஜி said...

நல்ல பதிவை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. நண்பன் என்ற போர்வையில் உள்நுழைந்து, கயமை செய்தவனுக்கு சில நாட்களாவது சிறைத்தண்டனை கிடைத்திருந்தால் மனதிற்கு இதமளித்திறுக்கும். என்ன செய்வது இறைவனின் தீர்ப்பு வரும்வரை நாம் பொறுத்துதான் போகவேண்டியுள்ளது சில சமயங்களில்.
நல்ல கணவன அமைந்ததால், அத்தோழியின் குடும்ப வாழ்வு சீராக போய்க்கொண்டு இருக்கிறது. இதுவே, முபாரக் போன்ற, கோணல் புத்தியுள்ள கணவன் அமைந்திருந்தால், தோழியின் எதிர்கால வாழ்வு??!! நினைத்து பார்க்கவே கொடுமையாக உள்ளதே.

அத்தோழியின் இல்லறம் இனிதொரு சிறுப்பிரச்சனையுமின்றி, நீடிக்க வேண்டியும், முபாரக்கிற்கு சிறு தண்டனையை அளிக்க வேண்டியும் இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ரைட்டு...

ராஜி said...

முபாரக் போன்ற ஒரு சில ஆண்களாலும், இதுப்போன்ற நிகழ்வுகளாலும் ஆண்கள் எல்லோருமே அயோக்கியர்கள் என்ற மாயை பரவலாக நம்பப்படுகிறது.ஆனால், மாளவிகா விஷயத்தில் அவளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியவன் ஓர் ஆண்மகனென்றால், கற்பிழந்தவளோ என்னவோ என்ற குறுகுறுப்புக்கு மதிப்பளிக்காமல்,அவளை மருத்துவமனையில் சேர்த்து தாயாய் தாங்கி, சட்டரீதியான் நடவைக்கைக்கும் ஈடுக்குடுத்தாரே அவரும் ஆண்மகன்தான்.
அவரைப் பாராட்டி ஒரு வரி சேர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
என்ன நடந்துச்சோ யார் கண்டாங்க?னு தன் இனப்பற்றினால் குதர்க்கமா யோசிக்காம, ஒரு பெண் பட்ட துயரத்தை, பதிவிட்டதற்கு உங்க தைரியத்துக்கு பாராட்டுக்கள்.
அப்புறம் மாளவிக்காக பரிஞ்சு பேசுன அத்துனை சகோதரருக்கும் இங்கே நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன்.

ஒரு பெண்ணை சீண்டி அழவைத்து வேடிக்கைப் பார்ப்பது ஆண்சமூகமென்றாலும்,
அத்துயரைத் துடைத்து ஆறுதல் சொல்ல முதல் அடியெடுத்துவைப்பதும் ஆண்கள்சமூகமே
பிரச்சனையை சரியான கோணத்தில் புரிந்துக் கொண்ட அனைத்து ஆண்மக்களுக்கும் நன்றி!
இந்தப்பதிவைப் படிச்சுட்டு தப்பு சய்யும் ஒரு சில ஆண்களில் ஒருத்தனாவது திருந்தினாலே போதும். திருந்துவாங்களா?

அம்பாளடியாள் said...

நட்புக்கு இலக்கணம் தெரியாத சில -------------------இதுகளால
உண்மையான நல்ல நண்பர்களோடுகூட ஓடும் புளியும்
மாதிரிப் பிளங்கவேண்டிய அவல நிலைதான் உள்ளது அன்றுதொட்டு
இன்றுவரைப் பெண்களுக்கு. இதை என்றுமே மாற்றமுடியாது.
வேதனைக்குரிய பகிர்வு இது .இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு
பழைய அமைதியும் சந்தோசமும் கிட்டப் பிரார்த்திக்கின்றேன்.நன்றி
சகோதரரே பகிர்வுக்கு.

சுஜா கவிதைகள் said...

அவசியமான பதிவு......பெண்கள் நடப்பதை வெளியில் சொல்ல தயங்குவதால் தான் ஆண்கள் மேலும் தவறுகளை அதிகபடுத்தி கொண்டே போவார்கள் .....அந்த பெண் வெளியிட அனுமதி கொடுத்தது வரவேற்கப்பட வேண்டிய விஷயம் ........அழகாய் எழுதி பதிவிட்ட உங்களுக்கும் ஒரு சபாஷ் ...........

M.R said...

மனம் வருந்த கூடிய ஒரு விஷயம் .

விழிப்புணர்வு பகிர்வு நண்பரே .

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
தமிழ்வாசி பிரகாஷ் said...

சி பி கோட்டையில் நல்ல விழிப்புணர்வு பதிவு...

Amudhavan said...

தமிழ்மணத்தில் நட்சத்திரப்பதிவர் ஆனதும் ஒரு ஆழமான பதிவை எழுதியிருக்கிறீர்கள். அவ்வப்போது இம்மாதிரி பதிவுகள்-அவை சீரியஸாகத்தான் இருக்கவேண்டுமென்பதில்லை, நகைச்சுவையாகவும் இருக்கட்டும் ஆனால் துக்கடாக்களாக இல்லாமல் கட்டுரை வடிவில் எழுதுங்கள். உண்மையில் நகைச்சுவையாகத் தமிழில் எழுதுபவர்கள் குறைவாகவே இருக்கிறார்கள்.அந்தக் குறையைப் போக்கும்விதமாக எழுதுங்கள்.
இந்தப்பெண் மீது பரிதாபமாக இருக்கிறது. ஒரு பாவமும் அறியாத அந்தப்பெண்ணுக்கு எதற்காக அத்தனை தண்டனை...?

rajamelaiyur said...

நல்ல விழிப்புணர்வு பதிவு

Kanchana Radhakrishnan said...

விழிப்புணர்வு பதிவு

செல்ல நாய்க்குட்டி மனசு said...

பாராட்டுக்கள் சிபி,
கற்றுக் கொள்ளவேண்டிய பாடங்களில் நாலாவது 100 % உண்மை. இன்றைய கால கட்டத்தில் எவரையும் கொஞ்சமேனும் சந்தேகத்தோடு பார்ப்பது தான் பாதுகாப்பு

மாய உலகம் said...

உறவுகளை விட பக்கத்துவீட்டுக்காரர்கள் மிகவும் முக்கியம் என மறைமுகமாக இந்த சம்பவம் உணர்த்துகிறது... ஏனெனில் இது போல் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க அவர்கள் உதவிக்கு வரலாம்.... ஆனால் எங்கே !பக்கத்துவீட்டுக்காரர்கள் எப்போ அடுத்தவீட்டுக்கு கெட்டதுநடக்கும் என எதிர்பார்க்கும் கேவலமான சமூகம் தானே இங்கே....இருந்தாலும் தப்பு செய்தவனுக்கு தண்டனை கிடைத்துவிட்டது....அதனால் மனதை தேற்றிக்கொள்ளலாம்

settaikkaran said...

நல்ல இடுகை தல! எச்சரிக்கையுணர்வு மிக அவசியம். நட்புகளுக்கு எல்லை வகுப்பதும் அதை விட அவசியம்.

(தமிழ்மணம் நட்சத்திரம் ஆனதற்கு வாழ்த்துகள். இந்த இழையில் சொல்ல நேர்ந்ததைப் பொருட்படுத்த மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன்....)

ஹேமா said...

சிபி...நடசத்திரமா ஜொலிக்கிறீங்க.தொடராகப் பதிவுகள் வாசிக்கிறேன்.வாழ்த்துகள் !

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

கடவுள் இனியாவது அவர்களுக்கு நிம்மதியும் மகிழ்ச்சியும் கொடுக்கட்டும்

ஆகுலன் said...

இவ்வளவு பிரச்னைகளை தாண்டி அவர்கள் நலமாக வாழ்கிறார்கள் என்பதே எனது சந்தோஷம்...அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்....

ILA (a) இளா said...

மூன்று என்னும் சங்கிலிப்பதிவுக்கு அழைத்திருக்கேன்.

ILA (a) இளா said...

நீங்க சொன்ன 4வது கருத்துல 100% உடன்படுகிறேன்.

Unknown said...

சிபி உண்மையில் ஒரு அவதானமான பதிவு அண்ணே..
இவ்வாறு கூட எழுத முடியும்னு நிருபிச்சும் இருக்கீங்க...
பெண்கள் அவதானமா இருப்பது நல்லது!

Anonymous said...

வித்தியாச சி பி ...பிடித்திருந்தது...

சாந்தி மாரியப்பன் said...

பாதிக்கப்பட்டவங்க இந்த மனஉளைச்சல்லேர்ந்து சீக்கிரம் மீண்டு வரட்டும்..

KANA VARO said...

வாசிக்கும் போது ஏதோ கண்கலங்க கூடிய படம் பார்த்த உணர்வு, உங்கள் பணி தொடரட்டும்.

மாதேவி said...

நல்ல விழிப்புணர்வுப் பதிவு.

virutcham said...

வெளி மனிதர்களோடு ஏற்படுத்திக் கொள்ளும் நட்பில் பலரும் ஒரு எல்லை வைப்பதில்லை. கண்மூடித்தனமான நம்பிக்கை கூடவே dependency உருவாக்கிக் கொள்கிறார்கள். சின்ன வேலைக்குக் கூட நண்பர்களை சார்ந்து இருத்தல் எனக்கு அவசரமா ஒரு வேலை இருக்கு நீ கொஞ்சம் போய் பாரு என்று தன் குடும்பத்தை அவர்களிடம் விட்டுச் செல்லுதல் என்று இவர்களாக ஏற்படுத்திக் கொடுக்கும் இடம் பல பிரச்சனைகளுக்குக் காரணம். இந்த பெண் விஷயத்திலும் அது தான் நடந்து இருக்கிறது.

எனக்கு பட்டென்று மனதில் பட்ட இன்னொரு விஷயம் கர்ப்பத்தின் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் பெண் தீம் பார்க்கில் போய் தண்ணீர் போன்ற விளையாட்டுக்களில் எல்லாம விளையாடியது. அதுவும் கணவன் ஊரில் இல்லாத போது.
அவர்கள் வீட்டில் ஒரு பெரியவர்களாவது இருந்திருந்தால் முதலில் அங்கெல்லாம் போகவே அனுமதித்து இருக்க மாட்டார்கள். குறிப்பிட்ட சில மாதங்களுக்கு பைக்கில் போவதை வெளி உணவு உண்பதை எல்லாமே தவிர்க்க சொல்லி இருப்பார்கள். இந்த குடும்பத்துக்கு ஒரு பெரியவர்கள் அல்லது அனுபவப்பட்ட உறவுகள் என்று யாருமே அருகிலோ, தொலை பேசித் தொடர்பிலோ கூட இல்லையோ என்று தோன்றுகிறது.

தனிமரம் said...

அவசியமான பதிவு சி.பி

”தளிர் சுரேஷ்” said...

அட சி.பி பக்கங்களில் இப்படி ஒரு அட்டகாசமான பதிவா? நல்ல விழிப்புணர்வை வெளிப்படுத்தும் பதிவு. வாழ்த்துக்கள்

VELU.G said...

நல்ல பதிவு

நட்சத்திர பதிவிற்கு வாழ்த்துக்கள்

Geetha6 said...

நட்பு வட்டாறத்தை ஆண்கள் வீட்டுக்கு வெளியே வைத்து கொள்வது நல்லது.சந்தர்ப்பங்கள்
மனித வாழ்கையை எப்படி வேண்டும்மானாலும் தீர்மானிக்கும்
என்பதை உணர்த்தும் பதிவு இது.! நன்றி !!! வாழ்த்துக்கள்.
விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய பதிவு!
இதே போல் நடுங்க வைக்கும் நட்பு பற்றி உண்மை சம்பவம் என் ப்ளோகில் எழுதிஉள்ளேன்!!சென்று பாருங்க !!
http://udtgeeth.blogspot.com/2010/06/blog-post_08.html

கிருபாநந்தினி said...

செந்தில்ண்ணே! உங்க ஜோக்குகளை நிறையப் படிச்சிருக்கேன்; சிரிச்சிருக்கேன். இப்ப இப்படி ஒரு உருக்கமான பதிவைப் போட்டு அழ வெச்சிட்டீங்களேண்ணே! கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்னு கொடுத்திருக்கிற ஒவ்வொரு குறிப்பும் அட்சர லட்சம் பெறும்ணே! அப்புறம் ராஜியோட கமெண்ட்: \\ஒரு பெண்ணை சீண்டி அழவைத்து வேடிக்கைப் பார்ப்பது ஆண் சமூகமென்றாலும்,
அத்துயரைத் துடைத்து ஆறுதல் சொல்ல முதல் அடியெடுத்து வைப்பதும் ஆண்கள் சமூகமே!\\ கரெக்டா சொன்னீங்கக்கா! நான் இதைத்தான் பின்னூட்டமா போடணும்னு நினைச்சேன். நீங்க சொல்லிட்டீங்க. உங்க வாய்க்கு சக்கரைதான் போடணும்.

Menaga Sathia said...

அவசியமுள்ள விழிப்புணர்வு பதிவு!! இப்போழுது அவர்கள் நலமுடன் வாழ்வது சந்தோஷமா இருக்கு,வாழ்த்துக்கள்!!

Lali said...

மிக சிறந்த வார்த்தைகளை யார் மனமும் புண்படாத வகையில் கோர்த்து எழுதி இருக்கிறீர்கள், மாளவிகா, சாந்தனு அவர்களுக்கும் நன்றி, மற்றும் இனிமையான வாழ்க்கை தொடர வாழ்த்துக்கள்
http://karadipommai.blogspot.com/

நிரூபன் said...
This comment has been removed by the author.
நிரூபன் said...

உண்மைச் சம்பவத்தை அதன் யதார்த்த நடையில் நின்றும் பிறழாத வண்ணம் படைக்கும் பக்குவம் எல்லோருக்கும் கைவரப் பெறுவதில்லை. ஆனால் அந்தப் பக்குவம், உங்களின் இந்த கிரைம் ஸ்டோரியில் தெரிகிறது.

கதையுடன் சேர்த்து, வாழ்க்கையில் அனைவரும் தெளிவடைந்து நிதானமாக ஒவ்வோர் அடிகளையும் எடுத்து வைக்கும் வண்ணம் தத்துவ விளக்கமா கருத்துக்களையும் முடிவில் தந்திருக்கிறீங்க.

கர்ப்பப்பை கிழியும் வண்ணம், ஒரு மாசமான பெண்ணின் மீது தன் அடக்கு முறையினை- கோபத்தினைப் பிரயோகிக்கும் இரக்கமற்ற ஆணினை இக் கதையில் சுட்டி,கோபத்தின் போது பொறுமை அவசியம் எனும் வகையிலும், விழிப்புணர்வைத் தரும் வகையிலும் இப் படைப்பினைத் தந்திருக்கிறீங்க.

Indy said...

@foreignkaran

ரொம்ப சரி. இந்த பதிவுக்கு பின்னூட்டம் போட்டவங்களை நினைச்சால் தான் ரொம்ப பரிதாபமா இருக்கு.

prabhadamu said...

மிக்க நன்றி :(


விழிப்புணர்வு & இந்த வலைப்பதிவு காலத்திற்க்கு ஏற்ற அவசியமான பதிவு :)