Friday, July 29, 2011

கவுதம் வாசுதேவ் மேனன் - ன் சிஷ்யை அஞ்சனா வின் வெப்பம் - சினிமா விமர்சனம்

http://www.cinehour.com/gallery/actresses/movieposters/movieposters/Veppam%20Movie%20Wallpapers/19665910Veppam-Movie-Wallpapers-5.jpg 

ஒரு பெண் இயக்குநர் என்றால் மென்மையான உணர்வுகளுக்கு மதிப்பளித்து அன்பு, உறவு , காதல் ஆகிய உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் படமாக ,மனித நேயத்தை வளர்த்தும் விதமாக பிரமாதமான ட்ரீட்மெண்ட்டுடன் படம் எடுப்பார் என்று நம்பி போனால்........

ஆரண்ய காண்டம் படத்தில் வருவது போல் இதிலும் 2 தாதா கும்பல் ,கஞ்சா சரக்கு , கை மாறுது, சேசிங்க் தட் துரோகி.. ஆள், அடி தடி வெட்டு குத்து , ரத்தம் ரண களம்.. உஷ் அப்பா.. சாமி முடியலப்பா..

கார்த்திக் குமார்,நானி,நித்யா மேணன் ( 180 பட  ஹீரோயின் ), பிந்து மாதவி ( 2 பேர் அல்ல ஒரு ஃபிகர் தான்) என 2 லவ் ஜோடிகள் இருந்தும் படத்துல ரொம்னான்ஸூக்கெல்லாம் நேரம் ரொம்ப கம்மிதான்.. 

http://searchandhra.com/english/wp-content/uploads/2010/09/Bindu-Madhavi-Hot-Photo-Gallery-1-2.jpg

பொறுப்பில்லாத அப்பா,எப்போதும் நோய்வாய்ப்பட்ட நிலையில் அம்மா,அவர்களுக்கு 2 பசங்க .பெரிய பையன் ஏம்மா எப்போ பாரு படுக்கைலயே கிடக்கே?எப்போ உனக்கு சரி ஆகும்? என கேட்க அம்மா விஷம் சாப்பிடுகிறாள் ( ரெடியா பீரோல ஸ்டாக் வெச்சிருக்கா.. அதுல விஷம்னு லேபிள் வேற ) 

அம்மா சொர்க்கத்துக்கு டிக்கெட் வாங்குனதும் அண்ணன் தம்பி 2 பேரும் கடத்தல், தாதா கும்பல்ல எப்டி மாட்றாங்க.. எப்டி அப்பாவையே போட்டுத்தள்ளறாங்க என்பதே கதை.. தில்லு இருக்கறவங்க தியேட்டர்ல போய் பாருங்கப்பா.

ஓபனிங்க் ஷாட்ல ஏரியல் வியூல ஹீரோயின் கடல்ல விழுந்து தற்கொலை பண்ணிக்கற மாதிரி பில்டப்பு.. நல்ல ஒளிப்பதிவு. ஆனா கடைசில பார்த்தா கஞ்சா பொட்டணத்தை கரைக்கவாம்.. போடாங்க்.... அந்த அரைக்கிலோ கஞ்சாவை கடற்கரைல கரைச்சா கரையாதா? மெனக்கெட்டு கடல்ல அரை கிலோ மீட்டர் போகனுமா? சஸ்பென்ஸாம்.. அவ்வ்வ்வ்

ஆனா ஒரு பிளஸ் இருக்கறதை ஒத்துக்கனும்.. இயக்குநர் அஞ்சனா மணி ரத்னம், அல்லது ஸ்ரீராமின் ரசிகை போல . பாடல் காட்சிகளில் கேமரா கோணங்களில் கலக்கறார்.ஹீரோயின்க்கு தரப்பட்ட தனிப்பாடலில் ஹஸ்கி வாய்சில் செம கிக் பாட்டு . அந்தப்பாடலில் ரசித்த வரிகள் - தேகம் இருக்கும் வரை தாகம் இருக்குமடா.. ( என்னே ஒரு அரிய கண்டு பிடிப்பு?!!)


ஜெராக்ஸ் கடைல வேலை பார்க்கும் ஃபிகராக வரும் நித்யாமேணன் நல்ல நடிப்பு.. ஆனால் 180 படத்தில் இருந்த ஃபிரஸ்நெஸ், இளமைத்துடிப்பு இதில் மிஸ்ஸிங்க் ( துடிப்பு கம்மிங்கறியே? ஸ்டெதஸ்கோப் வெச்சு பார்த்தியா? ராஸ்கல்ல்.ஸ். )

பிந்து மாதவி அந்த மாதிரி பெண்ணாக வந்தாலும் நல்ல காதலுக்காக ஏங்குபவராக நடிக்கிறார். ஆனால் அவர் காதலனிடம் கூட உதட்டை கடித்து மடக்கி, கண்ணை ஒரு மாதிரி பண்ணி ஏன் அவரும் கஷ்டப்பட்டு நம்மையும் கஷ்டப்படுத்துகிறார்னு புரியல,. அனா அவரோட அங்க லட்சணம், வளைவுகள் அழகு.. ( அதானே பார்த்தேன் )

2 ஹீரோக்களும் பாஸ் மார்க் வாங்க கூடிய நடிப்பு ( அடப்பாவி.. ஒரே லைன் தானா? ஆம்பளைங்களுக்கு?)




http://chennaionline.com/film/Photofeature/images/Veppam-Movie/07-Veppam-Movie-Stills.jpg

அஞ்சனாவின் வசனங்கள் நெஞ்சில் நின்றவை

1. அம்மா இறந்த பிறகு என் வாழ்க்கை கல்லை கட்டி கிணற்றில் விட்டது போல் ஆகிடுச்சு. 

2. ஜெயிக்கனும்னா நெஞ்சை நிமிர்த்து மோதனும்,பயத்தை விட்டுடனும்.

3. டேய்.. ஃபிகரைப்பார்த்து சாப்டாச்சா?ன்னு கேட்கற ஆளை பார்த்திருக்கேன். நீ என்னடா குளிச்சிட்டியா?ன்னு கேட்கறே? ( முழுகாம இருக்காளோ?ன்னு செக்கிங்கோ என்னவோ? )

4.  எதுக்காக என் மனைவிக்கு பூவை வீசிப்போட்டே?

யோவ்.. உன் மனைவின்னு எனக்கு தெரியாதுய்யா. முதல்ல தாலி கட்டுய்யா.. 



5. உங்கண்ணனுக்கு அடிக்கடி கோபம் வருது. அவருக்கு ஒரு மேரேஜ் பண்ணி வெச்சுட்டா எல்லாம் சரி ஆகிடும்னு நினைக்கிறேன்.. ( அப்புறம் மேரேஜ் பண்ணி வெச்சவன் மேல கோபம் வருமே பரவால்லியா? )

6. எவரு செத்தாலும் தொழில் செத்துடக்கூடாதுய்யா.. ( வெட்டியானா இருப்பார் போல. )

7. என்னை கொலை செய்ய ஆள் ஏற்பாடு பண்ணி இருக்காங்களாம்.விஜி சொன்னா.. 



அய்யய்யோ. உடனே ஜோதிக்கு போனை போடு.. 

ஏற்பாடு பண்ணுனதே  ஜோதி தானாம்..



http://c563066.r66.cf2.rackcdn.com/wp-content/uploads/2011/06/South-Indian-Actress-Bindu-Madhavi-In-Telugu-film-Veppam-Movie-stills-5-580x866.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. அழுகின்ற காதலியின் கண்ணீரை தன் உதடு ஒத்தடத்தால் துடைக்கும் காதலன், அதை படமாக்கிய விதம்.. செம 

2. படத்தின் 'மழை வரும் மழைத்துளி எனது விழிகளில் தெரியுதே' என்ற பாடல்கள் காதலர்களிடமும், 'ஏய் ராணி நான் மகாராணி நீ தான் என் அடிமை ' என்ற குத்துப்பாடல் இளைஞர்களிடமும் வரவேற்பை பெறும் விதத்தில் படம் ஆக்கியது.. 

3. படத்தின் தன்மையை கருதி தேவையற்ற காமெடி டிராக் சேர்த்தாமல் விட்டது.. 

http://www.indianactressphotos.net/photo.axd?t=n&fy=n&fx=n&s=&r=0&f=743cb0ef-75f1-49f1-9b8d-8c10011a76f9

இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்


1. ஒயின் ஷாப்பில் அப்பா மப்பில் பயங்கி கிடக்கிறார் என்ற தகவல் வந்ததும் ஏன் அப்படி ஒரு பதட்டம்? மப்பில் இருப்பவர்கள் மயங்கி விழுவதும்,பாத்டப்பில் இருப்பவர்கள் நனைந்து கிடப்பதும் காலம் காலமாக நடப்பது தானே?ரொம்ப ஓவர் பில்டப் அந்த சீன்.. 

2. என்னதான் அந்நியோன்யமான ஃபிரண்ட்ஸ் என்றாலும் இப்படியா நண்பர் எதிரிலேயே காதலியுடன் ரொமான்ஸ் பண்ணுவாங்க?பார்க்கற நமக்குதான் கூச்சம் இருக்கு.. அவங்களுக்கு? ம்ஹூம்.

3. ஹீரோக்கள் 2 பேரையும் காட்டும்போது ஒண்ணா அவங்க தண்ணி அடிக்கறாங்க, இல்லை தம் அடிக்கறாங்க. 2 பேருக்கும் வேற வேலையே கிடையாதா? ( ஒரு பெண் இயக்குநர் கூட அப்படி எடுக்கனுமா?)

4. சொர்ணாக்கா மாதிரி வர்ற ரவுடி பொம்பள கேரக்டர் வலியனா திணிக்கப்பட்ட கேரக்டர்.. பிம்ப்பை அவர் மாமாப்பயலே என திட்டும்போதே  அவன் இருடி ஒரு நாள் உனக்கு ஆப்பு இருக்கு என கறுவுகிறான்.. அப்பவே தெரிஞ்சிடுது இவன் தான் அவளை கொலைபண்ணப்போறான்னு. அப்புறம் என்ன சஸ்பென்ஸ் ஏண்டிக்கிடக்கு?

5. ஹீரோ காதலியை சிவப்பு விளக்கு பகுதியில் இருந்து மீட்டு வருவதற்காகத்தான் கடத்தல் தொழில் செய்யறான் என்பது தெளிவாக சொல்லப்படவில்லை

இந்தப்படம் ஏ, பி சி , டி ஈ எஃப் என எல்லா செண்டர்களிலும் 7 நாட்கள் தான் ஓடும்..

ஈரோட்டில் ஆனூர், வி எஸ் பி ஆகிய 2 தியேட்டர்களில் படம் ஓடுது. நான் ஆனூர்ல பார்த்தேன்

எதிர்பார்க்கப்படும் விகடன் விமர்சனம் மார்க் - 38

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்கிங்க் - சுமார்

சி.பி கமெண்ட் - வேணாங்கோ, விட்டுடுங்கோ
http://www.cinemagupshup.com/wp-content/uploads/2011/04/nitya-menon.jpg

டிஸ்கி - தயாரிப்பாளரான கெளதம் இப்படத்தை பார்த்துவிட்டு " இப்படம் ஒரு பெண் இயக்குனர் இயக்கிய படம் மாதிரி தெரியவில்லை. படம் ரொம்ப ROUGH ஆக இருக்கிறது " என சொன்னாராம். பட ரிசல்ட்டும் அப்படித்தான் ரஃப் & டஃப்.

இயக்குநராக நடு நிசி நாய்களில் அடி வாங்கிய வர் தயாரிப்பளராக மீண்டும் சறுக்கி இருக்கிறார்..

28 comments:

நிரூபன் said...

வணக்கம் பாஸ், இந்த வெப்பத்திலும், எம்மைக் குளிர்விக்க வெப்ப விமர்சனமா;-))
இருங்கள் படிச்சிட்டு வாரேன்

நிரூபன் said...

கவுதம் வாசுதேவ் மேனன் - ன் சிஷ்யை அஞ்சனா //

நல்ல வேளை படத்திற்கு நித்தியா...சிஷ்யை.......தா. என்று வைக்காமல் விட்டு விட்டார்கள்;-)))

நிரூபன் said...

ஒரு பெண் இயக்குநர் என்றால் மென்மையான உணர்வுகளுக்கு மதிப்பளித்து அன்பு, உறவு , காதல் ஆகிய உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் படமாக ,மனித நேயத்தை வளர்த்தும் விதமாக பிரமாதமான ட்ரீட்மெண்ட்டுடன் படம் எடுப்பார் என்று நம்பி போனால்........//

ஆகா...நம்ம பாஸோடை பாக்கட் மணிக்கு ஆப்படிச்சிட்டாங்களா(((((:-

நிரூபன் said...

எப்போ பாரு படுக்கைலயே கிடக்கே?எப்போ உனக்கு சரி ஆகும்? என கேட்க அம்மா விஷம் சாப்பிடுகிறாள் ( ரெடியா பீரோல ஸ்டாக் வெச்சிருக்கா.. அதுல விஷம்னு லேபிள் வேற )//

ஹா...ஹா...தமிழ் சினிமாவின் தொன்று தொட்டு வரும் பாரம்பரிய பண்பு, இந்தப் படத்தில் மட்டும் மாறி விடுமா?

நிரூபன் said...

ஓபனிங்க் ஷாட்ல ஏரியல் வியூல ஹீரோயின் கடல்ல விழுந்து தற்கொலை பண்ணிக்கற மாதிரி பில்டப்பு.. நல்ல ஒளிப்பதிவு. ஆனா கடைசில பார்த்தா கஞ்சா பொட்டணத்தை கரைக்கவாம்.. போடாங்க்.... அந்த அரைக்கிலோ கஞ்சாவை கடற்கரைல கரைச்சா கரையாதா? மெனக்கெட்டு கடல்ல அரை கிலோ மீட்டர் போகனுமா? சஸ்பென்ஸாம்.. அவ்வ்வ்வ்//

யோ....ஞாபக சக்திக்கு என்ன வல்லாரை கீரையா சாப்புடுறீங்க..
படத்தை அப்படியே வைத்த கண் வாங்காமல் பார்த்து வந்து எழுதுறீங்களே;-))))

Shiva sky said...

30 ரூபா மிச்ச படுத்திய அண்ணன் வாழ்க

நிரூபன் said...

அழுகின்ற காதலியின் கண்ணீரை தன் உதடு ஒத்தடத்தால் துடைக்கும் காதலன், அதை படமாக்கிய விதம்.. செம //

விமர்சனத்திலும் கவி நடை
சிபியின் தமிழ்ப் புலமை வாழ்க!

செங்கோவி said...

கௌதமுக்கு நேரம் சரியில்லை போல..’யோஹம்’ இல்லை!

நிரூபன் said...

ஒயின் ஷாப்பில் அப்பா மப்பில் பயங்கி கிடக்கிறார் என்ற தகவல் வந்ததும் ஏன் அப்படி ஒரு பதட்டம்? மப்பில் இருப்பவர்கள் மயங்கி விழுவதும்,பாத்டப்பில் இருப்பவர்கள் நனைந்து கிடப்பதும் காலம் காலமாக நடப்பது தானே?ரொம்ப ஓவர் பில்டப் அந்த சீன்.. //

பாஸ், நீங்கள் ஒரு இயக்குனராக உருவாகுவதற்குரிய நம்பிக்கை ஒளி தூரத்தே தென்படுகின்றது, தொடர்ந்தும் கலக்குங்கள்.

நிரூபன் said...

நமது பணத்தைச் சேமிக்கும் நோக்கில் முப்பது ரூபா கொடுத்துப் படம் பார்த்து, காத்திரமான விமர்சனத்தை வழங்கிய அண்ணன் வாழ்க!

Indy said...

படம் சூப்பர் !! நான் நீங்க போட்டிருக்கற படத்தை சொன்னேன்.

காட்டான் said...

மாப்பிள நல்லாதான்யா பாத்திருக்கிறீங்க... படம் எங்களையும் பார்க்கட்டுமெண்டு போட்டுவிட்டிருக்கிறீரே..இதுதான்யா எனக்கு பிடிச்சது உங்கள்ல...!

காட்டான் குழ போட்டான்...

காட்டான் said...

மாப்பிள நல்லாதான்யா பாத்திருக்கிறீங்க... படம் எங்களையும் பார்க்கட்டுமெண்டு போட்டுவிட்டிருக்கிறீரே..இதுதான்யா எனக்கு பிடிச்சது உங்கள்ல...!

காட்டான் குழ போட்டான்...

சக்தி கல்வி மையம் said...

படம் பாக்கலாமா?

Unknown said...

TQ TQ TQ....ESCAPE

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
Unknown said...

ஹிஹி இரவை கூலாக்கும் சி பி அண்ணனுக்கு நன்றிகள் கோடான கோடி!!

கோவை நேரம் said...

அடடா ..வெப்பம் சுட்டுவிட்டதே....இனி பார்ப்போம்...ஹி..ஹி ஹி நெவெர் ......

தமிழ்வாசி பிரகாஷ் said...

வெப்பம் சுடுமா?

Unknown said...

குட்
சூடான படத்துக்கு சூப்பர் விமர்சனம்...

settaikkaran said...

ஒரு உண்டியல் வச்சு, அது மேலே சி.பி.எஸ்-னு எழுதி வைக்கப்போறேன். உங்க விமர்சனம் படிச்சுப்புட்டு, ’இந்தப் படத்தைப் பார்க்கக் கூடாது,’ன்னு முடிவெடுக்கிறபோது, அதுலே ஒரு ஐம்பது ரூபா போட்டு வச்சா, மாசக்கடைசியிலே ஒரு தொகை தேறும்போலிருக்குது தல! :-)

பொ.முருகன் said...

எப்படி சாமீ இந்தப் படங்களையெல்லாம் உக்காந்து பாக்குறிங்க,

rajamelaiyur said...

Office ku mattam potdudu padam paka ponatha manager keta solren erunka. . .n erunka. . .

Thabo Sivagurunathan said...

சூப்பர் .....செம பிகருங்க போட்டோ !

மாய உலகம் said...

விமர்சனம் விலாசல் பகிர்வு சூப்பர்

மாய உலகம் said...

இன்று எனது வலைப்பதிவில்


நவீனகால பிளாக் பெல்ட் கட்ட பொம்மன் ..

நண்பர்களே வந்து கண்டுகளித்து கருத்துகளை கூறுங்கள்


http://maayaulagam-4u.blogspot.com

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சூப்பர் ஸ்டில்சுங்கோ..............

டக்கால்டி said...

Itha 3 naal munnaadiye pottirukka koodaathu...Naangalum parthirukka maatom la... mokka padam sir...