முனி -2 காஞ்சனா - சினிமா விமர்சனம் : பொதுவாக கதை, வசனம் ,டைரக்ஷன் பொறுப்பு ஏற்பவர்களே அந்த படத்துக்கு ஹீரோவாகவும் நடிக்க முற்பட்டால் காட்சிக்கு காட்சி ஹீரோவை சுற்றியே கதை போகற மாதிரி தான் படம் பண்ணுவாங்க ,கே.பாக்யராஜ்,டி ராஜேந்தர்,ஆர் பார்த்திபன் முதல் அமீர் வரை ஏகப்பட்ட உதாரணங்களை சொல்ல முடியும்.. அந்த லிஸ்ட்டில் ராகவா லாரென்ஸூம் சேர்ந்துட்டார்..
ஓப்பனிங்க் ஃபைட் 13 நிமிஷங்கள் போடும்போதே லைட்டா ஒரு பயம்.. எங்கே ராகவா லாரென்ஸ் மாஸ் ஹீரோ சேர்க்கு குறி வைக்கிறாரோன்னு.. அந்த ஃபைட் முடிஞ்சதும் ஒரு ஓப்பனிங்க் சாங்க் வேற.. அட ஆண்டவா..!!!!!!!!!
(அநேகமா இந்தப்படம் தெலுங்குல செம ஹிட் ஆகிடும்னு நினைக்கிறேன் ஹி ஹி )
மாற்றுத்திறனாளிகளை கவுரவப்படுத்த 1008 வழிகள் இருக்கும்போது,லாரன்ஸ் ஏன் தேவை இல்லாமல் நடனக்காட்சிகளில் அவங்களை ஆட விட்டு அவங்களையும் கஷ்டப்படுத்தி நம்மையும் கஷ்டப்பட வைக்கிறாரோ? (IT IS NOT A BOOST UP)
பேய்க்கதை சொல்லவே குலை நடுங்க வைக்கும் அளவு பயம் உள்ள ஒரு பயந்தாங்கொள்ளியின் உடலில் ஒரு பேய் புகுந்தால்....!!!இது தான் படத்தின் ஒன் லைன்.. முனி படத்தில் ஒர்க் அவுட் ஆன இந்த ஃபார்முலாவை கெட்டியாகப்பிடித்துக்கொண்ட லாரன்ஸ் வித்தியாசப்படுத்திக்காட்ட திருநங்கை ஃபிளாஸ்பேக்கை வலியனா புகுத்தி இருக்கிறார்.
ஈரோடு என் கே கே பி ராஜா மாதிரி வில்லன் அடுத்தவங்க இடத்தை ஆட்டையைப்போட நினைக்கற ஆளு.. தன் மகளுக்கு ஹாஸ்பிடல் கட்டித்தர வெச்சிருந்த நிலத்துல ஆக்ரமிப்பு நடந்ததால நியாயம் கேட்கப்போனவரு வில்லன் குரூப்பால கொலை செய்யப்படறாரு .. அவர் தான் பேயா வந்து நம்ம உயிரை சாரி.. வில்லன்களோட உயிரை லாரன்ஸ் உருவத்துல எடுக்கறாரு.
ஆரம்பக்கட்டங்களில் கோவை சரளாவுடன்,வாண்டுகளுடன் இவர் அடிக்கும் பய லூட்டிகள் தியேட்டரை கலகலப்படுத்துகிறது,ஆனால் அது ரொம்ப நேரம் தொடரும்போது அலுப்பை ஏற்படுத்துகிறது.பேய்குப்பயப்பாதாய் சொல்லும் ஹீரோ வாண்டுகளிடம் பேய்க்கதை சொல்லும் நடிப்பு செம..
ராத்திரி அவர் படுக்கப்போறப்ப கட்டிலை சுற்றி 14 ஜோடி செருப்புகள், 8 விளக்குமாறுகள் ( # கவுண்ட் டவுன் கண்ணாயிரம் )இவற்றை பாதுகாப்புக்காக சுற்றிப்போட்டு விட்டு அனுமார் படம் போட்ட பெட்ஷீட்டை போர்த்தி படுப்பது கலக்கல் காமெடி.
அண்ணியின் தங்கையை ரூட் போடும் ஹீரோ அண்ணியே அதற்கு பர்மிஷன் தரும்போது செம கொண்டாட்டம் ஆகிறார் ( நாமளும் தான் )
வசனத்தில் தேவை இல்லாமல் டபுள் மீனிங்க் டயலாக்ஸ் ஆங்காங்கே..
ஒரு திகில் கம் பேய்ப்படத்தில் கூட இந்தளவு வசனத்துக்கு முக்கியத்துவம் குடுத்திருப்பது புதுசு..
கருத்தில் நின்ற காமெடி வசனங்கள்-ல் மனதில் நின்றவை
1. யாராலும் அவனை அடிக்க முடியலையா?இதோ நான் போறேன்..
பாஸ்.. கொஞ்சம் முன்னாடியே போய் இருந்தா நாங்களாவது அடி வாங்காம தப்பி இருப்போம் அல்ல?
2. பொதுவா பொண்ணுங்க முந்தானையை மூடி மூடி பாதுகாப்பாங்க.. ஆனா பேய் வந்த பெண்களைப்பாருங்க.. முந்தானை விலகறதை கண்டுக்காம அவங்க பாட்டுக்கு ஆடிக்கிட்டே இருப்பாங்க.. அப்போ பேய் இருக்கறது நிஜம் தானே? ( இப்போ இருக்கற 27 ஹீரோயின்கள் முந்தானை பற்றியோ ,எந்த ஆணைப்பற்றியோ கவலையே படறதில்லை.. அதுக்காக அவங்களை பேய்னு சொல்ல முடியுமா? டவுட்டு )
3. டேய்.. நாயே ..பேய்க்கதை சொல்றப்ப ரீ ரிக்கார்டிங்க் எல்லாம் எதுக்கு?கதை மட்டும் சொன்னா போதாதா? ஏன் பயமுறுத்துறே?
அது சரி.. ஒரு த்ரில் இருக்க வேணாமா?
த்ரில் இருக்கும், நான் இருப்பேனா?
4. அண்ணே.. அண்ணே. நாய் கத்துது..
டேய் நாயே.. நாய்னா கத்தத்தாண்டா செய்யும்?
அய்யோ.. அது பேய் மாதிரி கத்துது....
5. அதானே.. எலி ஏன் . அ.............மா போகுதேன்னு பார்த்தேன்
எப்பவாவது எலி டிரஸ் போட்டு போய் பார்த்திருக்கியா?
பழமொழி சொன்னா அனுபவிக்கனும், ஆராயக்கூடாதுன்னு கமல் சொல்லி இருக்கார்..
6. ஏண்டி இப்படி அரை குறையா டிரஸ் பண்ணிட்டு வந்திருக்கே?
அக்கா, உன் வீட்டுக்கு வர்றதாலதான் இந்த அளவு நாகரீகமா டிரஸ் பண்ணிட்டு வந்திருக்கேன்..
7. ஆஹா .. நீங்க எனக்கு அண்ணி.. அவ என் கனவுக்கன்னி..
8. என் அத்தை பொண்ணே.. உன் அடக்கம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. ஹி ஹி இதே மாதிரி டிரஸ் பண்ணிட்டு வா..
9. டேய்.. ஏண்டா உன் கிட்டே இருந்து பேடு ஸ்மெல் வருது?
ஹா ஹா ஐ ஆம் ப்ளே டுடே இன் நியூ ப்ளேகிரவுண்டு.. ( டபுள் மீனிங்க் )
10. ஹீரோயின் - நான் ரொம்ப மாடர்ன்.. எது செஞ்சாலும் மாடர்னாத்தான் செய்வோம்.. ( டபுள் மீனிங்க் )
11. ஏய்.. ஹிந்தி மட்டும் பேசாதே. எனக்கு அது சுத்தமா பிடிக்காது..
ஏன்?
எனக்கு ஹிந்தி தெரியாது..
12. ஏங்க ,சத்தம் இல்லாம என் கூட வாங்க, நம்ம வீட்ல குதிரை ஆடுது..
ஏண்டி, அது என்ன மைக்கேல் ஜாக்சனா? ஆட
அய்யோ.. விழுந்துட்டேனே.. ஏய். நான் கீழே விழுந்ததை யார் கிட்டேயும் சொல்லாதே..
ம்க்கும், ரொம்ப முக்கியமாக்கும்..
13. ஏம்மா என்னா கோலம் இது ?
இன்னைக்கு ஆயுத பூஜை.. அம்மா புடவை கட்டச்சொன்னாங்க..
ஆஹா.. உன் அடக்க ஒடுக்கம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. ஹி ஹி எல்லாமே தெரியுது
14. இந்தாங்க தேங்காய்,, இதை ஒரே அடில அடிங்க பார்க்கலாம்.. 2 அல்லது 3 அடி ஆகும்னு நினைக்கறேன்..
அடியே, தேங்காயா இருந்தாலும் ,மாங்காயா இருந்தாலும் ஒரே அடிதான் ..
ஆஹா சூப்பர் மாமா.. ( டபுள் மீனிங்க் )
15. உடம்பு சரி இல்லைன்னு சொன்னாங்க, ஆனா உடம்பு மட்டும் குறையவே இல்லையே?
16. சுவாமி.. பேயைக்கண்டு பிடிக்க சுலபமா க்ளியரா ரூட் போட்டுத்தர்ற நீங்க அப்டியே பேயை ஓட்டறதுக்கு மட்டும் எஸ் ஆகறீங்களே?
17. நாலு பேர் நல்லாருக்கனும்னா ஒருத்தர் செத்தா தப்பில்லை..
யார்டா அந்த 4 பேர்?
நான் ,மனைவி, என் பசங்க 2 பேர். ( எஸ் வி சேகரின் தத்துப்பிள்ளை நாடக சுடல்)
18. அடப்பாவி.. எங்கே உன் வேட்டி ?
ஆவிக்கு பிடிக்காதுன்னு வேட்டியை கழட்டி வீசி..
19. ஏப்பா.. ஜவுளிகடைக்காரரே.. நல்லா காஸ்ட்லியான புடவை எடுத்துப்போடப்பா.. ரூ 500 ஆக இருந்தாலும் பரவாயில்லை.. இப்போ நான் போட்டிருக்கறது ரோட்டோரமா கடைல வாங்குனது.. ரூ 150.. எப்பூடி?
20. ஏய்.. நான் சொன்னதெல்லாம் சமஜா? ( புரிஞ்சுதா?)
கோவை சரளா - அய்யோ. சமைஞ்சிட்டேன்...
21. ஏம்ப்பா.. உங்களுக்கெல்லாம் தர்கால வேலை இல்ல? அங்கே போய் நமாஸ் பண்ணாம இங்கே வந்து தமாஷ் பண்ணிட்டு
22. ஆம்பளையா பிறந்தா அவன் சிவன் , பொம்பளையா பிறந்தா அவ சக்தி .ரெண்டும் கலந்து பிறந்தா அர்த்தநாரீஸ்வரர்..
23. இந்த உலகத்துலேயே பெரிய விஷயமா நான் நினைக்கறது உரியவங்களுக்கு நன்றி சொல்றது.....
ஹீரோயினுக்கு ஹீரோ மேல் காதல் இருக்கான்னு செக் பண்ண ஹீரோ ஒரு கேவலமான ஐடியா வெச்சிருக்காரு.. எல்லாரும் நல்லா நோட் பண்ணிக்குங்கப்பா..
அதாவது ஹீரோயினை டூர் கூட்டிட்டுப்போகனும்.. அங்கே ஹீரோயினை விட படு கேவலமா இருக்கற 2 மொக்கை ஃபிகருங்க கூட குத்தாட்டம் போடனும்.. அதைப்பார்த்து பொறாமைப்படும் ஹீரோயின் கோபமா வந்து கன்னத்துல பளார்னு ஒண்ணு குடுக்கறா.. அப்புறம் வெட்கப்பட்டுக்கிட்டே ஹீரோவின் கன்னத்துல கிஸ் ஒண்ணு குடுக்கறா..
இந்த சீன்ல லாரன்ஸை க்ளோஸ் அப்ல முத்தம் தந்த சகிப்புத்தன்மைக்காவே
லக்ஷ்மிராய்க்கு சம்பளத்துல 2 லட்சம் சேர்த்து தரனும். படத்தைப்பார்த்து யாரும் அப்படி ட்ரை பண்ணாதீங்கப்பா.. இருக்கற ஃபிகரும் ஓடிப்போயிடும்..
பேய் பயத்தில் ஹீரோ அம்மா மேல் (கோவை சரளா ) விழுவதைக்கூட ஏத்துக்கலாம்.. அண்ணி இடுப்புல குழந்தை மாதிரி தாவி ஏறுவதெல்லாம் அந்த எஸ் ஏ சூர்யாவுக்கே அடுக்காதுப்பா..
பாடல்கள் 3 தேறுகிறது.. காயே கறுப்பக்கா கட்சி முட்டும் நெல்லிக்கா செம டப்பாங்குத்து.. கறுப்புப்பேரழகா கண்ணூக்குள்ள நிக்குறியே பாட்டு ஓக்கே .. ஆனா அதற்கான லக்ஷ்மிராய் உடை வடிவமைப்பை பார்த்தால் டோனி கிரிக்கெட் ஆடுவதையே விட்டு விடும் அபாயம் இருக்கு..
அப்புறம் லாரன்ஸ் டேன்ஸ் பேட்டர்னை மாற்றுவது நல்லது.. ஒரே மாதிரி ஸ்டெப்கள் போர் அடிக்குது...
இயக்குநர் சபாஷ் பெறும் இடங்கள்
1. பொதுவா பேய்ப்படம்னா இடைவேளை வரை திகிலா கொண்டுபோய்ட்டு செகண்ட் ஆஃப்ல ஃபிளாஸ்பேக் போயிடுவாங்க.. இதுல கடைசி 20 நிமிஷம் வரை மெயின் கதைக்கே போகாம காமெடியா கொண்டு போக முயன்றது...
2. ராகவாவிடம் திடீர் என்று பெண் தன்மை வருவதும் அவரிடம் நடை மாறுவதும்.. நுட்பமான பாடி லேங்குவேஜ்..
3. பாட்டு சீன் 3 முடிஞ்சதும் நைஸா ஹீரோயினை கழட்டி விட்டுட்டு கதைக்கு வந்தது..
4. கோவை சரளா, அண்ணி ( டி வி நடிகை) 2 கேரக்டர்களின் பயத்தை வைத்தே பாதிப்படத்தை காமெடியாக ஓட்டியது.
5. படத்தில் திகில் அல்லது காமெடி என இரண்டில் ஒன்றை ஒவ்வொரு சீனிலும் மெயிண்ட்டெயின் செஞ்சது ( கடைசி 20 நிமிடம் தவிர )
இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்
1. பேய் இருக்கான்னு செக் பண்ண மிட் நைட்ல ஹால்க்கு வரும் கோவை சரளா மகனும்,மருமகளும் உள்ள பெட்ரூமை தட்றாங்க.. அடுத்த 3 வது செகண்டே மருமக ஆஜர்.. அது எப்படி? கட்டிலை விட்டு இறங்கி நடந்து வந்து திறக்க மினிமம் 13 செகண்டாவது ஆகுமே?
2. பூசாரி பூஜிக்கப்பட்ட ஒரு எலுமிச்சைப்பழம் தந்து இதை அறைல உங்களூக்குப்பக்கத்துல வெச்சுக்குங்க பேய் வராதுங்கறார்.. ஆனா பேய் அதே ரூம்க்கு வந்து அந்த எலுமிச்சைப்பழத்தை வெளில போடுன்னு சொல்லுது.. அப்ப மட்டும் வரலாமா?
3. பூஜை ரூமுக்குள்ள அமானுஷ்ய சக்தி எப்படி வரும்?
4. பூசாரி பசு வீட்டுக்குள்ள வந்தா பேய் வீட்ல இல்லைன்னு அர்த்தம், மிரண்டு வீட்டை விட்டு வெளியே ஓடிட்டா பேய் வீட்ல இருக்குன்னு அர்த்தம்னு சொல்றாரே?அப்போ பசு பேய் இருக்கற அறை வரை ஓடி அப்புறமா ஏன் வெளில ஓடி வருது..?அதுக்குத்தான் பேய்னா பயம் ஆச்சே?
5. ஜவுளிக்கடைல துணி எடுக்கறப்ப ஹீரோ சிவப்புக்கலர் சேலை எடுக்கறார்.. எனக்கு சுத்தமா அந்த கலர் பிடிக்காதுன்னு அண்ணி சொல்றாங்க.. ஆனா அதுக்கு அடுத்த ஷாட்லயே அண்ணி சிவப்புக்கலர் புடவை, சிவப்புக்கலர் ஜாக்கெட் போட்டுட்டு வர்றாங்க.. அது போக படம் பூரா 3 டைம் அதே கலர் டிரஸ்ல வர்றாங்க.. எப்படி?
6. பெண் வேடத்தில் சரத் குமார் வருவதெல்லாம் சரி.. அவர் ஃபைட் போடும்போது கண்ணியமான கேமிரா கோணங்கள் வைத்திருக்கலாமே?
7. ஒரு சீன்ல நடுக்கூடத்துல பேய்க்கு ஒரு டெஸ்ட் வைக்கறாங்க.. அப்ப்போ பேய் ரத்தத்தை டேஸ்ட் பண்ணுது நாக்கால.. அது நாயா? பேயா?
ஏ செண்ட்டர்ல படம் சுமாரா 25 நாட்கள் வரை போகும், பி ,சி ஆகிய சென்ட்டர்கள்ல 40 நாட்கள் வரை ஓடிடும்..
ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 41
குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - ஓக்கே
சி பி கமெண்ட் - நாட் சூப்பர், நாட் பேடு..
ஈரோடு ராயல். ஸ்ரீ கிருஷ்ணா ஆகிய தியேட்டர்களில் படம் ஓடுது. நான் ராயல்ல பார்த்தேன்....
36 comments:
Me the first?
அப்ப படம் பிளாப் ன்னு சொல்றீங்க..
so?
hit?
senthil,doha
one time achum paakkalama
பதிவுல விமர்சனத்தை விட படங்கள் செம ஹாட் மச்சி...
கடைசி ஸ்டில்ல லட்சு சிம்ரனை ஞாபகப்படுத்துகிறார்!
எங்கடா இந்த புள்ள திருந்திடுமோன்னு நெனச்சேன்..சேச்சே சான்சே இல்ல....ஹிஹி விமர்சனம் புதிய ஸ்டைல்ல இருக்கு நன்றி
யப்பா!எவ்வளவு பெரிய விமரிசனம்!
//எப்பா! எவ்வளவு பெரிய விமர்சனம்,//
எவ்வளவு பெரிய போட்டோக்கள்
நல்ல விமர்சனம் நண்பா
கலக்கல்..
தல, விமர்சனத்தை அப்பாலிக்கா படிக்கிறேன். முதல்லே, லட்சுமிராய், தேவதர்ஷிணி படத்துக்காக ஒரு பெரிய "தேங்க்ஸ்!". ஹிஹிஹி!
அப்போ படம் தேறாதா?
லட்சுமி ராய் பத்தி இன்னும் கொஞ்சம் சொல்லுங்கண்ணே.
படங்கள பாத்தவுடனே பேயரஞ்ச மாறி ஆயிட்டேன்ன்ன்
Horror movies'la ellam logic paarka koodathunu solvanga, sir!
சிகப்பு சேலை எத்தனை தடவை கட்டி வந்தார்கள் என்ற ஆராய்ச்சி சிபி சி பி ஐக்கு போலாமோ என்று தோனுகிறது
ஏன் சிபி நீங்க படத்துல லாரன்ஸ் எத்தனை கலர்ல ட்ரஸ் போட்டுட்டு வந்தார்னு பார்த்தீங்க ?
ஆகா மீண்டும் சிபி தன் பழைய பாணிக்கு வந்து விட்டார்...
விமர்சனமும் வழக்கம் போல் அருமை....
Apa padam pakalam
me the 21st
எப்படி என்ன்டாலும் 1st ஆ வந்திட்டமெள்ள
"போட்டோஸ்" நல்லாருக்கு, தாங்க்ஸ்!!!!!!!!!!(Thanks!)
மாய உலகம் said...
படங்கள பாத்தவுடனே பேயரஞ்ச மாறி ஆயிட்டேன்!///நீங்களுமா???
ஷர்புதீன் said...
//எப்பா! எவ்வளவு பெரிய விமர்சனம்,//
///எவ்வளவு பெரிய போட்டோக்கள்!!!!///
////எவ்வளவு பெரிய .................?!
///உன் அடக்க ஒடுக்கம்?!எனக்குப் பிடிச்சிருக்கு!ஹி!ஹி!"எல்லாமே" தெரியுது!!///
உங்கள் கணிப்பு சரியே... படம் கடந்த வாரம் தெலுங்கில் வெளியாகி ஆல்ரெடி ஹிட்...
இராஜராஜேஸ்வரி said...
பேய் மாதிரி கத்தற நாய் நல்லா இருக்குது.///வேணுமா??????
.நல்ல விமர்சனம்....ஆமா..நீங்க படம் பாக்கவே மாட்டிங்க்களா..?
திருட்டு தட்டில் பார்த்துட்டு மிச்சத்த கதைப்பம்....கனக்க படம்.........
நல்ல இருந்தது..
மைக்ரோசொப்க்கு ஒரு நேரடி விசிட்...(பகுதி2)
photos are class. Photos add very good value to this post, keep rocking
நான் விமர்சனத்த படிக்கவே இல்ல ஆனா சூப்பரா இருக்கு
அதோட இருக்குற படங்கள் எல்லாம்
அது எப்படி சார் ஹீரோயின் களை போட்டா எடுக்கறப்ப மட்டும் எதாவது விசேச கேமரா கொண்டு போவீங்களா
படம் எல்லாம் தெளிவா இருக்கு
சரி சரி - வூட்டுக்குப் பக்கத்துல ஓடுது - போய்ப் பாத்துடறேன்
நானும்,காஞ்சனாவும்,175 ஜிகினா நிமிஷங்களும்//
இவ்ளோ நாளும் நாமெல்லாம் பரங்கி மலை ஜோதியும், செந்திலும் என்று தான் நாமெல்லாம் நெனைச்சுக்கிட்டிருந்தோம். ஆனால் இப்போ ஒரு புதுப் பெயரைச் செந்தில் அவிழ்த்து விடுறாரே. இப்படி எத்தினை பெயர்கள் இனி வரப் போகுதோ. அவனுக்குத் தான் வெளிச்சம்;-))
பொதுவாக கதை, வசனம் ,டைரக்ஷன் பொறுப்பு ஏற்பவர்களே அந்த படத்துக்கு ஹீரோவாகவும் நடிக்க முற்பட்டால் காட்சிக்கு காட்சி ஹீரோவை சுற்றியே கதை போகற மாதிரி தான் படம் பண்ணுவாங்க//
சைட் கப்பிங்கில் நம்ம எஸ் ஜே. சூர்யாவைத் தவற வுட்டிட்டீங்களே.
டயலாக்ஸ்//
அப்பத் தானே படம் கலக்கால ஓடும் பாஸ்.
படம் சுமார் என்றாலும், நீங்கள் இங்கே பகிர்ந்திருக்கும் ஸ்டில்களுக்காகப் படத்தினைப் பல முறை பார்க்க வேண்டும் போல இருக்கிறதே.
நடுநிலமையுடன் கூடிய கலக்கலான விமர்சனம். வழமை போல உங்களின் விமர்சனம் படம் பற்றிய பன்முகப்பட்ட பார்வையினைத் தந்திருக்கிறது.
padam na padhu rasikanum araya kudadhu its good flim all are watch in thaters
Post a Comment