Saturday, June 18, 2011

சீரக குழம்பு வைப்பது எப்படி?லெமன் ரைஸ்,புளி சாதம்,தக்காளி சாதம் வெரைட்டிஸ் சமையல் குறிப்புகள்



1. எலுமிச்சம்பழ சாத மிக்ஸ் 

தேவையானவை: வேர்க்கடலை, நல்லெண்ணெய் - தலா ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு - 2 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 3 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, முந்திரி - 10, கறிவேப்பிலை - சிறிதளவு, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, கீறிய பச்சை மிளகாய் - 1.

எலுமிச்சம்பழ சாதம் செய்ய: எலுமிச்சைச் சாறு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு... காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கிள்ளிய காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும். இதில் முந்திரி, வேர்க்கடலை சேர்த்து வறுத்து... மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கலந்தால் எலுமிச்சம்பழ சாத மிக்ஸ் ரெடி!  

எலுமிச்சம்பழ சாதம் தேவைப்படும்போது, சாதத்தை உதிராக வடித்து... அதில் எலுமிச்சம்பழச் சாறு, உப்பு, எலுமிச்சம்பழ சாத மிக்ஸ் கலந்து பரிமாறவும்.
ஒரு வாரம் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

2. .புளிக் காய்ச்சல் 

தேவையானவை: புளி - பெரிய எலுமிச்சம்பழ அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, கறிவேப்பிலை, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், வெல்லம் - சிறிதளவு, வறுத்த வேர்க்கடலை (அ) முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு.

வறுத்துப் பொடிக்க: கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், தனியா - அரை டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, எள் - ஒரு டீஸ்பூன் (விருப்பப்பட்டால்) இவற்றை வெறும் கடாயில் சிவக்க வறுத்துப் பொடிக்கவும்.

செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்த மிளகாயை கிள்ளிப் போட்டு, சிவந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து  வறுக்கவும். வேர்க்கடலை (அ) முந்திரி,  கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து, கெட்டியான புளிக் கரைசலை விடவும். இதில் உப்பு, மஞ்சள்தூள், வெல்லம் போட்டு, நன்றாக கொதித்ததும் வறுத்துப் பொடித்த பொடியை சேர்க்கவும்.  மேலாக எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.

வெளியூர் பயணத்தின்போது இதை கையோடு எடுத்து சென்றால்,  தேவையானபோது உதிரான சாதத்தில் கலந்து கொள்ளலாம்.

குறிப்பு: வறுத்துப் பொடிக்கும்போது, சிறிது ஜாதிக்காயை உடைத்து, வறுத்துப் பொடித்து சேர்க்கலாம். ஜீரணத்துக்கு மிகவும் நல்லது. ஒரு மாதம் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.

3. தக்காளி சாத மிக்ஸ் 

 தேவையானவை: பழுத்த தக்காளி - 10, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன், கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: தக்காளியில் மூழ்கும்வரை தண்ணீர் விட்டு, 5 நிமிடம் கொதிக்க வைத்து, ஆறியதும் தோல் நீக்கி, மிக்ஸியில் அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, அரைத்த தக்காளி விழுதைச் சேர்க்கவும். மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடவும். எண்ணெய் பிரிந்து வரத் தொடங்கியதும் இறக்கி, சேமித்து வைக்கவும்.

இந்த மிக்ஸை ஒரு வாரம் வரை வைத்திருந்து பயன் படுத்தலாம். தேவைப்படும் போது, சாதத்தை உதிராக வடித்து தக்காளி மிக்ஸை கலந்து சாப்பிடலாம்.

4.  சீரக குழம்பு

தேவையானவை: சீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, கடுகு, குழம்பு மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம் - 2 டீஸ்பூன், கெட்டியான புளிக் கரைசல் - 50 கிராம், மஞ்சள்தூள், வெல்லம், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, சீரகத்தைப் போட்டு பொரிக்கவும். காய்ந்த மிளகாயை கிள்ளி சேர்த்து, புளிக் கரைசலை ஊற்றவும். உப்பு, மஞ்சள்தூள், வெல்லம், குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து, நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு... கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை தாளித்துச் சேர்க்கவும்.

குழம்பு வடகத்தை தாளித்தும் சேர்க்கலாம். ஆறிய சாதத்தில் இந்தக் குழம்பை விட்டு, நெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிட லாம். தயிர் சாதத்துக்கும் தொட்டுக் கொள்ளலாம். ஒரு வாரம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

5.  பஜ்ஜி மிக்ஸ் 

தேவையானவை: கடலைப்பருப்பு - 200 கிராம், பச்சரிசி - 50 கிராம், பெருங்காயத்தூள் - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 8, சோடா உப்பு - ஒரு சிட்டிகை, விருப்பமான காய் (வாழைக்காய், வெங்காயம், கத்திரிக்காய், பீர்க்கங்காய், உருளைக்கிழங்கு, கேரட்), எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பச்சரிசி, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்து சேமித்து வைத்துக் கொள்ளவும். இதுதான் பஜ்ஜி மாவு.

பஜ்ஜி தேவைப்படும்போது, ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு பஜ்ஜி மாவு, உப்பு, சோடா உப்பு ஆகியவற்றை சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைக்கவும். விருப்பமான ஏதாவது ஒரு காயை நன்றாக சீவி, ஒவ்வொரு துண்டாக மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்

குறிப்பு: சோடா உப்புக்கு பதிலாக, ஒரு டேபிள்ஸ்பூன் புளித்த தோசை மாவை பஜ்ஜி மாவுடன் சேர்த்தாலும் உப்பலாக வரும்.  இரண்டு வாரம் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.


நன்றி - அவள் விகடன்


டிஸ்கி - இன்று தான் நெல்லை சந்திப்பு,குற்றாலம் டூர் முடிந்து வந்தேன்.இனிமேல் தான் அவை பற்றி எழுதனும்.மேலும் ,அவன் இவன் ,ரதி நிர்வேதம்,அநாகரீகம் படங்கள் விமர்சனமும்.. பொறுத்திருக்க.. ஹி ஹி

18 comments:

கூடல் பாலா said...

முதல் பந்தி ...

கூடல் பாலா said...

கண்டிப்பா கல்யாணத்துக்கு அப்புறமா உதவும் !?

கூடல் பாலா said...

நெல்லை பதிவர் சந்திப்பு தகவல்களை அனைவரும் ஆவலுடன் எதிர் பார்க்கிறோம் ...

கடம்பவன குயில் said...

நாளை தானே ஞாயிற்றுக்கிழமை. இன்றைக்கே சமையலை ஆரம்பிச்சுட்டீங்களே.

கடம்பவன குயில் said...

அவன் இவனுக்கு நிறையபேர் விமர்சனம் எழுதிட்டாங்க. ஆனாலும் உங்க விமர்சனத்திற்காகத்தான் நிறையபேர் வெயிட்டிங் நான் உட்பட.

test said...

அண்ணன் வீட்ல அடிவாங்கினா நல்ல பிள்ளையா சமைக்க ஆரம்பிச்சிடுவாராம்!:-)

செல்ல நாய்க்குட்டி மனசு said...

i am the 600 th

ராஜி said...

சிபிசார் வீட்டுல திங்கள் காலை வரை சிபிபாகமா? ம் ம் நடக்கட்டும், நடக்கட்டும்.

ஹேமா said...

சிபி...சமையல் குறிப்புகள் எப்போதும் அருமையா இருக்கு.சீரகக் குழம்பு புதுசு எனக்கு.சமைச்சுப் பாக்கிறேன் !

உலக சினிமா ரசிகன் said...

அவன் இவன் பற்றி தங்கள் பதிவைக்காணக்காத்திருக்கிறேன்.

குற்றாலம் எப்படி...
நல்ல தண்ணியா??????

உலக சினிமா ரசிகன் said...

அதென்னெ எலுமிச்சை பழ சாதம்...
இனானி மொழியில எழுதியிருப்பதாலே புரியல...
லெமன் ரைஸ்ன்னு டமில்ல எழுதினாத்தான் எங்க மாதிரி டமிலனுக்கு புரியும்.

Unknown said...

பகிர்வுக்கு நன்றி

காங்கேயம் P.நந்தகுமார் said...

நெல்லை பதிவர் சந்திப்பு, குற்றால டூர், அவன் இவன், என அனைத்தையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
கவி அழகன் said...

பதிவெழுதும் பொறுப்பை உங்க மனைவிட்ட கொடுத்திட்டிங்களா ஒரே சமையல் குறிப்பாய் வருகுது

நிரூபன் said...

என் டையிறியில் இந்தக் குறிப்பினைப் பதிந்து வைக்கிறேன்,
பிற் காலத்தில்- திருமணமானதும் சமைத்துக் கொடுக்க ஈசியாக இருக்குமல்லவா.

Angel said...

பஜ்ஜி மாவோடு புளித்த தோசை மாவு சேர்த்து (உங்கள் குறிப்பு பார்த்து தான் )
வெங்காய பஜ்ஜி செய்தேன் .டேஸ்டா க்ரிஸ்பியா வந்தது .
(YOUR COOKERY TIPS ARE REALLY USEFUL BCOS I DONT GET ANY TAMIL MAGAZINES IN OUR CITY .)

N.H. Narasimma Prasad said...

சமையல் குறிப்புக்கு ரொம்ப நன்றி அண்ணே.