கேரியர் அன்லிமிடட் -1 : சவால்களை வரவேற்போம்!
- பிரிட்டோ
(எவ்விதப் பணிச் சூழலைக் கொண்ட இளைஞர்களையும் பக்குவப்படுத்த முனையும் வழிகாட்டித் தொடர்)
நீங்கள் எடுக்கும் எல்லா முடிவுகளும் சரியானதுதானா? எல்லா பிரச்னைகளுக்கான தீர்வையும் உங்களால் எப்போதும் சரியாக கண்டறிய முடிகிறதா?
'ஆம்' என்று சொன்னால், கங்கிராட்ஸ்... நீங்கள் நன்றாக பொய் சொல்கிறீர்கள்!
உண்மை என்னவென்றால், பெரிய பெரிய (அரசியல்/தொழில்) தலைவர்கள் கூட சில நேரம் தடுமாறும் இடம் அது.
சரியான முடிவு எடுக்கும் திறன், அனுபவத்தால் வருகிறது. அந்த அனுபவமோ, தவறான முடிவு எடுத்ததால் வருகிறது.
சவால்களை வரவேற்போம்..!
பிரபல சோப்பு தயாரிப்பு நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகள் கூட்டம். இதுவரை அவர்கள் சந்தித்திராத புதுப் பிரச்னை. தீர்வு காண வேண்டும்.
ஒரு கஸ்டமர் தன் வீட்டின் அருகில் உள்ள ஒரு கடைக்கு போய் இவர்கள் தயாரித்த சோப்பை வாங்கி இருக்கிறார். சோப்பு பாக்கெட்டில் சோப்பு இல்லை. காலியாக இருந்திருக்கிறது. கம்பெனிக்கு போன் செய்து புகார் செய்துவிட்டார்.
"ப்ச்.. அவர் பொய் சொல்றார்பா," என்று இதை அலட்சியமாக ஒதுக்கி விட்டு, சமோசா சாப்பிட போகவில்லை அந்த சோப்பு கம்பெனி நிர்வாக அதிகாரி. மீட்டிங் கூட்டினார்.
சகலமும் இயந்திரமயம் ஆக்கப்பட்ட சோப்பு தொழிற்சாலை அது. சோப்பு தயாராகி, வரிசையாக வந்து, தானாகவே பேக் செய்யப்பட்டு தானாகவே பெரிய அட்டைப் பெட்டிகளில் அடுக்கப்படும்படியாக இருந்தது அவர்கள் இயந்திர அமைப்பு.
தயாரித்து பேக் செய்யப்பட்டு வெளியே வரும் ஒவ்வொரு சோப்பு பாக்கெட்டிலும் சோப்பு இருப்பதை உறுதி செய்ய என்ன செய்யலாம் என்று முடிவு செய்யத்தான் இந்த அதிகாரிகளின் அவசர மீட்டிங்.
மீட்டிங்கில், புதிதாக வேறு பேக்கிங் இயந்திரங்கள் வாங்கலாம், சோப்புகள் அடுக்கிய அட்டைப் பெட்டியை கடைகளுக்கு அனுப்பும் முன் வேலையாட்களை வைத்து எடை போட்டு பார்த்து அனுப்பலாம் உள்ளிட்ட பல யோசனைகள் முன்வைக்கப்பட்டன. அதற்காக புதிதாக வேலைக்கு எடுக்கப்பட வேண்டிய ஆட்களும் செலவினங்களும் பரிசீலிக்கப்பட்டன.
இறுதியில் அங்கே வேலை பார்க்கும் ஒரு சாதாரண தொழிலாளி சொன்ன யோசனையை அமல்படுத்தினார்கள். என்ன அது?
சோப்பு பாக்கெட்டுகள் அட்டைப்பெட்டியை அடையும் இடத்துக்கு அருகில் ஒரு மேசையை வைத்தார்கள். அதன் மீது ஒரு பெரிய சைஸ் டேபிள் ஃபேனை வைத்தார்கள். பாக்கெட்டில் சோப்பு இல்லாவிட்டால், காலி பாக்கெட் காற்றில் பறந்துவிடும். சோப் இருக்கும் பாக்கெட்டுகள் மட்டுமே அட்டைப் பெட்டியை வந்தடையும்.
மிக எளிமையான யோசனை. ஆனால் பெரிய செலவில்லாமல், பிரச்னைக்கு தீர்வு தருகிறது.இந்த யோசனை ஏன் மற்ற அதிகாரிகளுக்கு உடனே தோன்றவில்லை..?காரணம், அவசரம்.
பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்ற பதற்றமே அவர்கள் கண்ணை மறைத்துவிட்டது. அவசரப்பட்டு புது இயந்திரமோ, வேலையாட்கள் நியமனமோ செய்திருந்தால் எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டிருக்கும்?
பல நேரங்களில் பிரச்னைக்கான தீர்வு மிக எளிதானதாக இருக்கும்.
பிரச்னையை சரியாக புரிந்து கொண்டாலே பாதி பிரச்னை தீர்ந்த மாதிரி தான். பின்னர் பதற்றப்படாமல் அதை அணுகினால், தீர்வு கிடைப்பது எளிதாகிறது.
பிரச்னையை சரியாக புரிந்து கொண்டாலே பாதி பிரச்னை தீர்ந்த மாதிரி தான். பின்னர் பதற்றப்படாமல் அதை அணுகினால், தீர்வு கிடைப்பது எளிதாகிறது.
பிரச்னை என்பது ஒரு சவால். அதற்கான தீர்வு தேடுவதை நம்மை மேம்படுத்திக் கொள்ளக் கிடைத்த ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டால், தினம் தினம் நம்மை மேம்படுத்திக் கொண்டே இருக்கலாம்.
சவால்கள் கூடக் கூட உங்களது தீர்வு காணும் திறன் கூடும். புத்தி கூராகும்; வாழ்க்கை நேராகும்.
நன்றி - நாணயம் விகடன்
நன்றி - நாணயம் விகடன்
20 comments:
1st
எண்டாலும் சுடு சோறு எனக்குத் தான்..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
குழந்தைகளுக்கான நுண் அறிவு வளர்க்கும்(fine movement) இலகு கருவி (உள்ளுர் கண்டுபிடிப்பு)
கடைசியில் மிக அருமையான கதை போட்டு கலக்கிடிங்க
ஃஃஃஃநீங்கள் எடுக்கும் எல்லா முடிவுகளும் சரியானதுதானா? எல்லா பிரச்னைகளுக்கான தீர்வையும் உங்களால் எப்போதும் சரியாக கண்டறிய முடிகிறதா?ஃஃஃஃஃ
சிக்கலான கெள்வியொடு ஆரம்பித்து தீர்த்து வைத்த பதிவு...
பாவம் சுடு சோத்தை சுதாக்கே கொடுங்க
பிரச்னையை சரியாக புரிந்து கொண்டாலே பாதி பிரச்னை தீர்ந்த மாதிரி தான். பின்னர் பதற்றப்படாமல் அதை அணுகினால், தீர்வு கிடைப்பது எளிதாகிறது.
சகோ நலமா?....வழிகாட்டித் தொடர் அருமை சகோ... ...பிரச்சனைகள் பாதி நம் குழப்பத்தாலும், பதட்டத் தாலும் தான் வருகிறது என்பதை அழகாய் சொன்ன விளக்கக்கதையும் நன்றாக இருந்தது... உங்கள் வார்த்தை பிரயோகமும் தூள்
வட வாங்கலாம்னு வந்தா அதுக்குள்ளா அபேசா சரி ஓகே பாஸ் நான் படிச்சுட்டு வர்றேன்
வணக்கம் சி பி!
நான் இப்போது பிசி யாக இருக்கிறேன்! அதனால் அவசரமாக உங்களுக்கு ஒரு வாழ்த்தினைச் சொல்லிவிட்டுப் போகிறேன்!
“ நாளை ஞாயிற்றுக்கிழமை, 10 இலட்சம் ஹிட்ஸ் களைக் கடக்க இருக்கும் , அன்பு நண்பன் சி பி க்கு எனது முற்கூட்டிய வாழ்த்துக்கள்! “
( இந்த 10 இலட்சம் எண்ணிக்கையானது, ஹிட்ஸ் கவுண்டரின் அடிப்படையிலேயே கூறுகிறேன்! ஆனால் ப்ளாக்கரின் STATES அடிப்படையில், நீங்கள் பத்து லட்சத்தை தொட்டிருக்ககூடும் என்பது எனது எதிர்பார்ப்பாகும்! ஏனென்றால், ப்ளாக் ஆரம்பித்த முதல் நாளிலேயே யாரும் ஹிட்ஸ் கவுண்டரைப் பொருத்திவிடுவதில்லைத்தானே!
எப்படியோ, இப்போது நீங்கள் வந்து உண்மை சொன்னால் மட்டுமே, அனைத்தும் தெளிவாகும் )
காத்திருக்கிறேன் சி பி !
அண்ணே உங்களால மட்டும் எப்படி முடியிதுன்னு தெரியல வெளுத்து வாங்குறிங்க.
good post thala
நல்ல பதிவு அண்ணா
இதை தொடர்ச்சியாக எழுதுங்கள்
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
வணக்கம் சி பி!
நான் இப்போது பிசி யாக இருக்கிறேன்! அதனால் அவசரமாக உங்களுக்கு ஒரு வாழ்த்தினைச் சொல்லிவிட்டுப் போகிறேன்!
“ நாளை ஞாயிற்றுக்கிழமை, 10 இலட்சம் ஹிட்ஸ் களைக் கடக்க இருக்கும் , அன்பு நண்பன் சி பி க்கு எனது முற்கூட்டிய வாழ்த்துக்கள்! “
( இந்த 10 இலட்சம் எண்ணிக்கையானது, ஹிட்ஸ் கவுண்டரின் அடிப்படையிலேயே கூறுகிறேன்! ஆனால் ப்ளாக்கரின் STATES அடிப்படையில், நீங்கள் பத்து லட்சத்தை தொட்டிருக்ககூடும் என்பது எனது எதிர்பார்ப்பாகும்! ஏனென்றால், ப்ளாக் ஆரம்பித்த முதல் நாளிலேயே யாரும் ஹிட்ஸ் கவுண்டரைப் பொருத்திவிடுவதில்லைத்தானே!
எப்படியோ, இப்போது நீங்கள் வந்து உண்மை சொன்னால் மட்டுமே, அனைத்தும் தெளிவாகும் )
காத்திருக்கிறேன் சி பி !
>>>
அட அப்படியா சிபி சார் நானும் வாழ்த்துக்களை சொல்லிக்கிறேனுங்கோ சார்.
பயனுள்ள இடுகை தல! வாழ்த்துகள்!
அப்பாலே, பத்து லட்சம் ஹிட்ஸ்? அட்றா சக்கை! எல்லாம் கடுமையான உழைப்புக்குக் கிடைத்த வெகுமானம் தல! தொடரட்டும்!
வாட் ஹேப்பன்ட் டு தமிழ்மணம்? ஓட்டுப்போட முடியலியே? :-(
பத்து இலட்சம் ஹிட்ஸை தாண்டவிருக்கும் நம்ம சிபி அவர்களுக்கு பதிவர் சார்பில் பாராட்டு விழா நடத்தப்படவேண்டும். சிபி அவர்கள் இதன் மொத்த செலவையும் ஏற்க வேண்டும்.
தோல்வியைப் பற்றி பயந்து எந்த முயற்சியிலும் அடி எடுத்து வைக்க தயங்குபவர்களே, எந்த அனுபவமும் பெறாமல், முடிவு எடுக்கும் திறனும் குறைந்து காணப் படுகிறார்கள்.வாழ்த்துக்கள் லட்சாதிபதியானதற்க்கு!!
அன்பின் சிபி - பத்து இலட்சத்திற்கு நல்வாழ்த்துகள் - விகடனின் கட்டுரை பகிர்ந்தமைக்கு நன்றி - உண்மை இதுதான் - பிரச்னைக்குத் தீர்வு காண - தொடர்புடைய அனைவரையும் அழைத்து, கலந்தாலோசித்து - முடிவு எடுக்க வேண்டும். நல்வாழ்த்துகள் சிபி - நட்புடன் சீனா
mannikkavum paththu latchaathibathiyaanatharkku
பிரச்சினைகளை, எப்படிப் புரிந்துணர்வுடன் தீர்ப்பது தொடர்பான அருமையான டிப்ஸ் வழங்கியிருக்கிறீங்க..
இளைஞர்கள் அனைவருக்கும் இக் காலத்தில் தேவையான பதிவு.
Post a Comment