
நமக்குப்பிடித்த கலைஞன் (கவனிக்க - கலைஞர் அல்ல) கம் படைப்பாளி மிக பிரமாதமான படைப்பு ஒன்றை அளிக்கும்போது மனம் குதூகலம் அடைந்து அவருக்கு கை குலுக்க கை கொடுப்போம்.அதே படைப்பாளி எப்போதாவது சறுக்க நேரிட்டால் அவருக்கு ஆதரவுக்கரம் கொடுத்து ஆறுதல் வரம் அளிப்போம். அப்படி ஆறுதல் தர வேண்டிய அளவிலான ஒரு சறுக்கல் படம் தான் பாலா எனும் கம்பீர யானையின் அவன் இவன் .
தொடர்ந்து ஒரே விதமான படங்களை தரும் படைப்பாளி விமர்சகர்களின் வேண்டுகோளுக்கிணங்க தனது பாணியிலிருந்து விலகி வித்தியாசமான படம் தர முற்படுகையில் அவரையும் அறியாமல் அப்படம் மக்கள் ரசனையை விட்டு விலகி விட நேர்வது உண்டு.. அப்படி ஒரு விலகல் படம் தான் இது..
கதை ரொம்ப சிம்ப்பிள்.. வளர்ப்புத்தந்தையை அவமானப்படுத்திய,கொலை செய்த வில்லனை கொடூரமாக கொலை செய்யும் இரண்டு மகன்களின் கதை.அந்த 2 பசங்களுக்கும் உண்டான காதல்,அவர்களுக்கிடையே யான உறவு என்று படம் ரொம்ப சாதாரண திசையில் செல்கிறது..
படத்தில் முதல் பாராட்டு விஷாலுக்குத்தான்.. என்னா ஒரு பாடி லேங்குவேஜ்.. என்னா ஒரு நளினம்.. கமல் மாதிரி பரத நாட்டியக்கலைஞர் பெண்மையின் நளினத்தை கொண்டுவருவது சிரமமான விஷயம் இல்லை.. விஷால் மாதிரி ஆண்மை மிளிரும் பாடி பில்டர்ஸ் பெண்மையின் நளினத்தை , கிட்டத்தட்ட திருநங்கை மாதிரி ஒரு லாவகத்தை முகத்தில்,உடல் மொழியில் கொண்டு வந்தது அபாரம். இந்த ஆண்டின் சிறந்த நடிகர் விருது நிச்சயம்..

ஆர்யா மட்டும் என்ன? அசால்ட்டாக நடிப்பதில் அவரை அடிச்சுக்க ஆள் ஏது?சம்பட்டைத்தலையா.. சட்டித்தலையா என்று கவுண்டமணி செந்திலைத்திட்டுவது போல அவரது கெட்டப் இருந்தாலும் மைனஸ்ஸையே ப்ளஸ் ஆகும் ரசவாத வித்தையை தன்னகத்தே கொண்டுள்ள ஆர்யா ஆங்காங்கே கோல் அடிக்கிறார்.. பாத்திரத்தின் தன்மை கருதி பல இடங்களில் விஷாலுடனான கம்பைண்டு சீனில் அண்டர் ப்ளே ஆக்டிங்க்கில் அசத்துகிறார்..
இருவரது வளர்ப்புத்தந்தையாக வருபவரின் நடிப்பும் குறிப்பிடத்தக்கதே.. (ஜி எம் குமார்)பாத்திரத்தின் தன்மை கருதியும்,திரைக்கதையின் தேவை கருதியும் அவர் துகில் உரியப்பட்டு வில்லனால் சித்திரவதை செய்யப்படும் காட்சிகளில் நடித்தது செம துணிச்சல் தான்..
ஹீரோயின்களில் ஆர்யாவின் ஜோடியாக வரும் மதுஷாலினியின் நடிப்பு சுமார் ரகமே... அவரது ஃபேஸ்கட் வசீகரம் கம்மி..
ஆனால் விஷாலுக்கு ஜோடியாக போலீஸ் கான்ஸ்டபிளாக வருபவர் (ஜனனி அய்யர்) கண்களால் கவிதை சொல்கிறார்.. கிட்டத்தட்ட லைலா வின் வெகுளித்தன காப்பி என்றாலும் அவரது பாடி லேங்குவேஜ் அழகு..
ஒரு காட்சியில் விஷாலும், இவரும் போட்டி போட்டுக்கொண்டு காதல் பார்வைகளை பகிர்வதும்,விருந்து பரிமாறும்போது பார்வைகளை பரிமாறுவதும் காதலர்கள் காணக்கண் கோடி வேண்டும்..


பாலாவின் காமெடி வசனங்கள் ( விளிம்பு நிலை மனிதர்களின் உரையாடல் என்பதால் கண்ணியம் குறைவாக இருந்தாலும் அதுவும் ஒரு கலாச்சாரப்பதிவே)
1. டேய்,, அநாதை நாயே..
ஆமா.. இவரு மட்டும் 4 பொண்டாட்டி,5 வைப்பாட்டி வெச்சிருக்காரு..
2. அடப்பாவி.. எப்படி என் வீட்டுக்குள்ள வந்தே? இந்த அர்த்த ஜாமத்துல?
ம்.. ஏறிக்குதிச்சு.. பின்னே காலிங்க் பெல் அடிச்சு எந்த திருடனாவது வருவானா?
3. எங்கேடி போறீங்க?
ம். காலேஜ்க்கு..
எனக்குத்தெரியாத காலேஜா? ஓ.. டுட்டோரியல் காலேஜா?
4. ஏண்டி.. நான் தெரியாம தான் கேட்கறேன்.. ஆம்பளைங்க பேண்ட்ல ஜிப் இருக்கறது ஓக்கே.. பொம்பள புள்ளைங்க பேண்ட்ல எதுக்குடி ஜிப்?
5. என்னை இப்போ யாரும் ஃபோட்டோ பிடிக்காதீங்க.. நான் மேக்கப்ல வேற இல்ல..
6. அந்த கோமாளிப்பையன் என்னையே பார்க்கறான் (செல்வா மன்னிக்க)
விடுடி.. அவனாவது உன்னைப்பார்க்கறானே? சந்தோஷப்படு..
7. டேய்.. என் கண்ணுல இருந்து கண்ணீர் வர வெச்சுட்டீங்கடா..
டி எஸ் பி சார்.. கண்ல இருந்து தண்ணி தான் வரும்... பின்னே மூ********மா வரும்?
8. ஏம்மா.. கூப்பிட்டதும் உடனே ஓடோடி வர்றதுக்கு நான் என்ன உன் புருஷனா?
9. பாப்பா.. என் தலையே வெடிச்சுடும் போல இருக்கு.. உன் பேண்ட்ல ஜிப் இருக்கா ? இல்லையா? என்பதை மட்டும் சொல்லிடு..
10. சரி.. உன் பேரென்னடி?
தேன் மொழி.. தேனு....
ஓ.. நக்கனும்னு நினைப்பீங்களோ.... ( படிக்கும்போது விரசமாக இருந்தாலும் காட்சி அமைப்பில் அப்படி இல்லை)

11. அம்பிகா.. - டேய்.. சரக்கு அடி வேணாம்கலை.. அம்மாவுக்கு கொஞ்சம் மிச்சம் வைடா.. இப்போவெல்லாம் சரக்கு அடிக்கலைன்னா தூக்கமே வரமாட்டேங்குது./.
12. போலீஸ்- ஆள் பார்க்க எப்படி இருந்தான்..?
கருப்பா இருந்தாலும் களையா தான் இருந்தான்,,,,
13. என்னா இது சலூன் பக்கம் பொம்பள புள்ளா?.. ஏம்மா கட்டிங்க்கா? ஷேவிங்க்கா? ( இந்த வசனத்தில் இன்னும் கண்ணியம் காட்டி இருக்கலாம்)
14. டேய்.. என்னமோ உழைச்சு சம்பாதிச்ச மாதிரி யோசிக்கறே.. நீ திருடனதைத்தானே தாரை வார்க்கப்போறே?
15. டேய்.. சுமங்கலியோட சாபம் உங்களை சும்மா விடாது..
அட போடா.. அவளுக்கு 2 புருஷன்.. அதும் இல்லாம அவ வயசுக்கு வர்றதுக்கு முன்னாடியே பல கை பட்டவ..
14. அதுக்குத்தாண்டா நானும் சொல்றேன்.. அவ நமக்கு எதுக்கு?
அடப்பாவி .. நமக்குன்னு ஏன் என்னையும் சேர்க்கறே?
15. டேய்... ஒரு கோடி ரூபா சரக்கு.. ஒரு டீயும் ,பன்னும் வாங்கிக்கொடுத்து கரெக்ட் பண்ணலாம்னு பார்க்கறாங்கடா.. ஏமாந்துடாதே?
16. எதுக்குடா லேடீஸ் காலேஜ் பஸ் ஸாப் பக்கம் ஜீப் வர்ற மாதிரி பண்ணுனீங்க..?
உள்ளே போறது உறுதி ஆகிடுச்சு.. அண்ணி முகத்தை கடைசியா ஒரு தடவை பார்த்துட்டு போயிடறோம்..
17. என்னது பிளேடு முழுங்கிட்டானா?
டாக்டர்.. என் குடல் ஃபுல்லா நீங்க உருவு உருவுன்னு உருவுனாலும் ஒரு பிளேடு எடுக்க முடியாது.. ( டபுள் மீனிங்க் டயலாக் யூ டூ பாலா)
18. இன்ஸ்பெக்டர்.. அவன் பிளேடு முழுங்கலை.. ஹி ஈஸ் எ லையர் (HE IS A LIEAR)
என்ன டாக்டர் சொல்றீங்க? அவன் ஒரு லாயரா? (LAWER)
(கிரேசி மோகன் பாணி வசனம்)
19. சூர்யா - அகரம் ஃபவுண்டேஷன் மூலமா ஏழைகளுக்கு படிப்புக்கு உதவி செய்யறோம்..
ஆர்யா- அண்ணன் தம்பி ரெண்டு பேரும் கோடிக்கணக்குல சம்பாதிக்கறீங்களே.. கொடுத்தா என்னவாம்..?
20. டேய்.. மாப்ளே.. நீ பெரிய நடிகன்டா.. த்ரிஷா உனக்குத்தான்..
21. ராத்திரி தூங்கறப்பக்கூட பவுடர் அடிச்சுட்டு, செண்ட் போட்டுக்கிட்டு தான் அவன் தூங்குவான்..
22. டேய்.. நாயே.. நல்ல படம் ஓடிட்டு இருக்கறப்ப எதுக்கு நடுவுல தேவை இல்லாம பிட் படம் ஓட்டிட்டு இருக்கே?
23. யோவ்.... உன் அரண்மனையை வித்து ஒரு படம் எடுக்கப்போறேன்.. அதுல கதை ,வசனம்,வெட்டிங்க்,ஒட்டிங்க் ,புட்டிங்க் எல்லாம் நீ தான், நான் டைரக்சன் மட்டும்,,
24. ஆர்யா - எனக்கு அவனை பிடிக்கும்,.. ஆனா அதை வெளில காண்பிச்சுக்க மாட்டேன்.. அவனுக்கு மட்டும் தான் நடிக்கத்தெரியுமா?
25. டேய்.. போதும்டா.. அப்பனை மாதிரி எக்ஸ்ட்ரா பிட்டுப்போடாதே.. இத்தோட நிறுத்திக்கோ..
26. உனக்கு என்ன வேணும் மவனே.....
என்ன வேணும்னே தெரில .. நீ என்ன சாமி.. ?
(ஆனந்த விகடனில் வந்த கவிதையின் உல்டா வடிவம் .
ஒரிஜினல் கவிதை - என்ன வரம் வேண்டும் என கடவுள் கேட்டார்.. பக்தனுக்கு என்ன வரம் வேண்டும் என்பதே தெரியவைல்லை.. நீ என்ன கடவுள் என்றேன்.. )

இயக்குநர் பாலா சபாஷ் பெறும் இடங்கள்
1. விஷாலின் பாத்திரப்படைப்பும், அவர் மூலம் இப்படியும் ஒரு நடிப்பை வர வைக்க முடியும் என்ற தன்னம்பிக்கையும்..
2. ரவுடி,கேடிகளுக்கு போலீஸ் அழைப்பு விடுத்து விருந்து வைத்து வேண்டுகோள் விடுக்கும் காமெடி சீன்..
3. காட்டு சிறுக்கி காட்டு சிறுக்கி காத்துக்கிடக்கேன் வாடி பாடல் படமாக்கப்பட்ட விதம்..
4. சக்சஸ் சக்சஸ் என்று கத்திக்கொண்டே அந்த சின்னப்பையன் லேடி கான்ஸ்டபிளை கட்டிப்பிடிக்கும் சீன் , தியேட்டரில் செம் ஆரவாரம்..
5. சூர்யா வேடிக்கை பார்க்க விஷால் காட்டும் நவரச நடிப்பை வேடிக்கை பார்க்கும் காதலியின் முகத்தில் தோன்றும் பெருமித உணர்வு காதலனின் நடிப்பை விட பிரமாதமாக படம் ஆக்கியது..

இயக்குநர் சறுக்கிய இடங்கள்
1. மூளையை கழற்றி மூலையில் வைத்து விட்டுப்பார்க்க வேண்டிய காமெடிப்படமாக இருந்தாலும் இயக்குநர் தாராளமாக தவிர்த்திருக்கவேண்டிய பல கட்டங்கள் உண்டு.. அதில் முக்கியமானது படத்துக்கும் விஷாலின் மாறுகண் கேரக்டருக்கும் சம்பந்தமே இல்லை.. தேவையே இல்லாமல் அவரை ஏன் சிரமப்படுத்த வேண்டும்?
2. எந்த காதலனாவது காதலியை கலாட்டா பண்ணுவதாக நினைத்து மற்றவர் முன்னிலையில் காதலியை குட்டிக்கரணம் அடிக்க சொல்வானா? அப்படி சொன்னால் அவன் நல்ல காதலனா? ( காதலியின் முந்தானை காற்றில் விலகினாலே பரிதவிப்பவன் தானே உண்மையான காதலன்? )
3. பாலா டச் வேண்டும் என்பதற்காக க்ளைமாக்ஸில் அந்த கொடூரமான துரத்தல் காட்சியும், அப்பா கேரக்டர் ஆடை இல்லாமல் தூக்கில் தொங்க விடப்படுதல் .. தேவையற்ற திணிப்பு..
4. இடைவேளை வரை காமெடியாக போகும் திரைக்கதை அதற்குப்பின் சீரியசாகப்போக வேண்டிய சூழ்நிலையில் பாலா பதட்டத்தில் பல காட்சிகளை ரெண்டும் கெட்டானாக காமெடி+ சோகம் மிக்ஸிங்க்காய் அமைத்தது..
5. வில்லனின் பாடி லேங்குவேஜ் கேப்டன் பிரபாகரன் மன்சூர் அலிகானின் நடிப்பை காப்பி அடித்தது..


இந்தப்படம் வசனங்களில் அத்துமீறல், காட்சி அமைப்பில் ஒரு பத்து நிமிடங்கள் பெண்கள் முகம் சுளிக்கும்படியாக இருப்பதால் குடும்பத்துடன் பார்ப்பதை தவிர்ப்பது நல்லது.. ( ஆனா எல்லாரும் தனித்தனியா போய் பார்க்கலாம்)
கமர்ஷியலாக இந்தப்படம் ஓடாது.. அதிகபட்சம் 25 நாட்கள் ஓடலாம்.. ஏ செண்ட்டரை விட பி சி செண்ட்டரில் தான் எடுபடும்...
எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 40
எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க்கிங்க் - ஓக்கே
சி.பி கமெண்ட் - காமெடி ரசிகர்கள்,பாலா அபிமானிகள் மட்டும் பார்க்கலாம் (கதையைப்பறி கவலைப்படாதவர்களும் )
ஈரோடு அபிராமி,சண்டிகா என 2 தியேட்டர்களில் படம் ஓடுது.. நான் அபிராமியில் பார்த்தேன்.. (ஏன்னா என் பொண்ணு பேரு அபிராமி.. )
46 comments:
என்னம்மா விமர்சனம் பண்ற..நீ எடுக்கப்போற படத்துக்கு கண்டிப்பா என் விமர்சனம் உண்டு நண்பா!
என்னனே பழைய படத்துக்கு விமர்சனம் எழுதிருக்கீங்க ?
உங்கள் விமர்சனம் படம் பார்த்த மாதிரியே ஒரு பிரமையை ஏற்படுத்துகிறது, சூப்பர் தல.
வணக்கம் சி பி! இருங்க படிச்சுட்டு வர்ரேன்!
உங்க விமர்சனம் டாப் டக்கர்....
பின்னே அஞ்சு வருஷமா ஒரு படத்தை எடுக்கிறவரு ஒரே வருஷத்துல எடுத்தா அப்படி இப்படித்தான் இருக்கும் ........
இனி நீங்கள் விகடனை பின்பற்றவேண்டிய அவசியம் இல்லை , ஏனென்றால் உங்கள் விமர்சனம் விகடன் விமர்சனத்தை விட தரமானதாக உள்ளது ....(சத்தியமா கிண்டல் இல்லை )
டேய் படம் பார்க்கணும்னு சொல்றியா பார்க்காதேன்னு சொல்றியா எதையாவது ஒன்னு சொல்லுடா நாதாரி....
மவனே நீ என்னைக்கு படம் எடுக்குறியோ அன்னைக்கு இருக்குடி உனக்கு ஆப்பும், கரண்டியும்....
@MANO நாஞ்சில் மனோ
அன்புத்தம்பி ,மனோ.. தயவு செய்து இன்றாவது பதிவை படித்து விட்டு கமெண்ட் போடவும் ஹி ஹி
ச்சே தமிழ்மணம் ஏழாவது ஓட்டு தெரியாம போட்டுட்டேனே.....சரி சரி பிழச்சி போ போ....
சி பி கமெண்ட் - ரைட்டு
யோ... படம் பார்த்த்தியா இல்ல ரெக்கார்டு செய்தாய எல்லா வசனமும் இங்க இருக்குன்னு கேட்டேன்...
சி பி, ஒரு கலைஞன் அல்லது ஒரு படைப்பாளி, ஒவ்வொரு சந்தர்ப்பத்தில், தனது அடுத்த அடியினை எடுத்து வைக்கிறான்! அது அவன் தனது பயணத்தில் ஒருபடி முன்னேறும் இடமாக இருக்கிறது!
அப்படி தான், இந்தச் சந்தர்ப்பத்தில், அல்லது இன்ன காலப்பகுதியில், தான் தனது அடுத்த கட்ட நகர்வை மேற்கொண்டதாக, எல்லாக் கலைஞர்களும் உணர்ந்து கொள்வார்களோ இல்லையோ எனக்குத் தெரியாது!
இப்போ நாம எக்ஸாமில பாஸ் பண்ணியிருப்போம்! அது தெரியாமா நாம பாட்டுக்கு, ஏதோ ஒரு வேலையில மூழ்கியிருப்போம்!
அப்போது ஒருத்தர் ஓடிவந்து, நீ எக்ஸாமில பாஸாகிட்டே என்று கூவிக்கொண்டு வரும் போது, நாம் திடுக்குற்று, அதிர்ச்சியாகி, ஆனந்தமடைவோம்!
அப்படி ஒரு ஆனந்த அதிர்ச்சிதான் இன்று உங்களுக்கு நான் சொல்லப் போவது! நீங்கள் எனது நண்பர் என்பதால், நான் இப்படி சொல்லவில்லை அல்லது உங்களுக்கு ஐஸ் வைக்கவில்லை!
ஒரு கலைஞன், தனது அடுத்தகட்ட நகர்வை மேற்கொள்ளும் போது, ஒரு நல்ல ரசிகன் அதனைக் கண்டறிந்து சொல்ல்வேண்டியது, ரசிகனின் கடமையும் உரிமையும் ஆகும்!
அந்த வகையில், இந்தப் பட விமர்சனத்தின் மூலம், உங்கள் விமர்சன வரலாற்றில் ,நீங்கள் அடுத்த படி முன்னேறியிருக்கிறீர்கள் சி பி! கன்கிரஜுலேஷன்ஸ்!
ஆம் இன்றைய நாள் உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான திருப்புமுனையான நாளாக அமையட்டும்!
நீங்கள் எந்தப் படத்துக்கு விமர்சனம் எழுதுகிறீர்களோ , அதுவாகவே மாறிவிடுவது உங்கள் தனித்துவம் மட்டுமல்லாது, அப்படி மாறமுடிவது உங்களது திறமையும் கூட!
ஒரு கில்மாப் படத்துக்கு விமர்சனம் எழுதும் போது, உங்கள் வாக்கியங்கள் கிளுகிளுப்பாக இருக்கும் , ஒரு கலகலப்பான காமெடிப் படத்துக்கு விமர்சனம் எழுதும் போது, அதே கலகலப்பும் காமெடியும் உங்கள் விமர்சனத்தில் இருக்கும்! உதாரணமாக மாப்பிள்ளை படத்துக்கு நீங்கள் எழுதிய விமர்சனம், அவ்வளவு சுவாரசியமானது! என்றைக்குமே மறக்க முடியாதது!
இது பாலவின் படம்! பாலவின் இயல்பு, அவரது படங்களின் இயல்பு அனைத்துமே உங்கள் விமர்சனத்தில் புலப்படுகிறது!
உங்களின் வார்த்தைப் பிரயோகங்கள் கூட பாலாவை கண்முன்னால் நிறுத்துகிறது! உதாரணமாக - ” குறிப்பிடத்தக்கதே.....” என்ற வார்த்தை நீங்கள் அதிகம் பயன்படுத்துவதில்லை! இன்று பாலாவுக்காக போட்டிருக்கிறீர்கள்!
பாலாவின் படங்களில் இருக்கும் ‘ டெப்த் “ உங்கள் விமர்சனத்திலும் உண்டு!
இது ஒரு தரமான விமர்சனம்! ஒரு வசனத்தில் கிரேசி மோகனின் சாயல் இருப்பதை கண்டுபிடித்தது, பாலாவின் காமெடிகளில் கண்ணியம் குறைவாக இருப்பதை எடுத்துக்காட்டிய விதம், கட்டிங்கா? ஷேவிங்கா? வசனத்தில் , பாலா இன்னும் கொஞ்சம் கண்ணியம் காட்டியிருக்கலாம் என்று ஆலோசனை சொன்ன விதம், விளிம்புநிலை மனிதர்கள் போன்ற அபூர்வ வார்த்தைகளின் பிரயோகம் என சி பி மிளிரும் இடங்கள் பல!
மொத்தத்தில், அவன் இவன் படத்தின் மூலம் பாலா கொஞ்சம் பின்னோக்கிப் போக, சிறந்த விமர்சனத்தின் மூலம் சி பி ஒருபடி முன்னேறி இருக்கிறார்! வாழ்த்துக்கள் நண்பா!
( நீங்கள் விமர்சனம் எழுதுவதில் - குமுதம் விகடனை நெருங்கிவருவதாக மூன்று மாதங்களுக்கு முன்னரே நான் சுட்டிக்காட்டியிருந்ததை, இவ்விடத்தில் நினைவுபடுத்துகிறேன்! )
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
மிக்க நன்றி நண்பா.. இதுவரை இவ்வளவு விரிவான பாராட்டு கமெண்ட்டை நான் கண்டதில்லை மிக்க நன்றி..
@விக்கியுலகம்
வாழ்க்கைலயே முதல் முறையா தக்காளி என்னை பாராட்டிட்டான் ஹா ஹா
@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
தாத்தாக்கள்,பாட்டிகள் பழசுதான் என்பதற்காக நாம் பாசம் கொள்ளாமல் இருக்கிறோமா? என்ன?
விமர்சனமா?
படம் பார்க்கலாமா? வேணாமா?
@koodal bala
என்னை திட்டினாலே நன்றி சொல்வேன்.. பாராட்டி இருக்கிறீர்கள். நன்றி சொல்ல உமக்கு வார்த்தை இல்லை எமக்கு
அண்ணன் ரொம்ப சீரியஸா விமர்சனம் எழுதி இருக்காரே.
Padam pakalama? Vayndama?
இன்னும் படம் பார்கவில்லை.. பார்க்கவா வேண்டாமா?.
நல்ல அலசல்..
மிக அருமையான , அரிய, நிஜ நிகழ்ச்சி இது. தயவு செய்து அனைவரும் படிக்கவும்...
http://www.livingextra.com/2011/06/blog-post_21.html
உங்கள் விமர்சனம் நன்று....பாலா படம் என்பதால் ஏற்பட்ட எதிர்பார்பினால் படம் எடுபடவில்லை என்பதுதான் நிஜம்...இதுவே ஒரு புதுமுக இயக்குனர் படம் என்றால்...அவரை ஹ ஹா ஒ ஓ.. என புகழ்ந்திருப்பார்கள்..
இதைவிட இன்னம் விரிவாய், தரமாய்,நடுநிலையோடு யாராலும் விமர்சனம் செய்ய இயலாது. ஓ.வ.நாராயணன் சார் சொன்ன மாதிரி நீங்க எங்கேயோ.....போய்ட்டீங்க. வாழ்த்துக்கள்.
புது பத்மம் ரிலீஸ்ன்னு சொன்னாலே உங்க விமர்சனம் தான் எதிர்பார்ப்பாக இருக்கு ....நல்ல விமர்சனம் ..இதில் பாலாவின் மேல் நீங்க மதிப்பு வைத்திருப்பது தெரியுது
செம விமர்சனம் சிபி......... !
/////// ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
( நீங்கள் விமர்சனம் எழுதுவதில் - குமுதம் விகடனை நெருங்கிவருவதாக மூன்று மாதங்களுக்கு முன்னரே நான் சுட்டிக்காட்டியிருந்ததை, இவ்விடத்தில் நினைவுபடுத்துகிறேன்! )////////
அதற்குப் பலமாதங்கள் முன்பே நான் இதைக் கூறி இருந்தேன்..........
//////விக்கியுலகம் said...
என்னம்மா விமர்சனம் பண்ற..நீ எடுக்கப்போற படத்துக்கு கண்டிப்பா என் விமர்சனம் உண்டு நண்பா!//////
நாங்க மட்டும் சும்மா விட்ருவமா?
////படைப்பாளி மிக பிரமாதமான படைப்பு ஒன்றை அளிக்கும்போது மனம் குதூகலம் அடைந்து அவருக்கு கை குலுக்க கை கொடுப்போம்.அதே படைப்பாளி எப்போதாவது சறுக்க நேரிட்டால் அவருக்கு ஆதரவுக்கரம் கொடுத்து ஆறுதல் வரம் அளிப்போம். அப்படி ஆறுதல் தர வேண்டிய அளவிலான ஒரு சறுக்கல் படம் தான் பாலா எனும் கம்பீர யானையின் அவன் இவன் .//// ஆரம்பமே அசத்தல் பாஸ்...
உங்கள் விமர்சனம் அதிர்ச்சியளித்தது.மணிரத்னம் திருடா..திருடா..வெளியிட்டபோது ஹிந்து பத்திரிக்கை
"இண்டலிஜென்ஸ் அரகன்ஸ்"
என்று விமர்சித்தது.
தவறை திருத்தி மணிரத்னம் சாதனை புரிந்தது வரலாறு.
இப்படம் வெற்றி பெற்றால் பாலா பேரரசாகும் ஆபத்திருக்கிறது.
விமர்சனக்கருத்தில்தான் எனக்கு உடன்பாடில்லை.நடையை பாராட்டி நண்பர் ஓ.வ.நா பின்னூட்டத்தை நானும் வழி மொழிகிறேன்.
பாலச்சந்தரின் தப்புத்தாளங்களை ரசித்தேன்.
அவரது தில்லுமுல்லுவையும் ரசித்தேன்.
காமெடி படம் எடுக்க வேண்டுமென்றால் அப்படி எடுக்க வேண்டும்.
பாலா பிதாமகனை அப்படியே காப்பியடித்து மீண்டும் உல்டா செய்து அவன் இவன் என்று ரசிகர்களை ஏமாற்றி காசு பார்த்து விட்டார்.
ரசிகனின் வயிறு எரிய வைத்தவர்கள் வாழ்ந்ததாக வரலாறே கிடையாது.
எளிமையா இருக்கு நண்பா இது போல விமர்சனத்துக்கு இவ்ளோ நாள் காத்து இருந்தேன். ஆளாளுக்கு விமர்சனம் எழுதறேன்னு சொல்லி குழப்பி விட்டுடாங்க. un தெளிவான இயல்பான விமர்சனத்திற்கு மிக்க நன்றி நண்பா....
அண்ணா அவன் இவன் படத்தை நீங்கள் விமர்ச்சித்த விதம் படத்தை நேரில் பார்த்ததை போன்ற பிரமிப்பை ஏற்படுத்தியது. எப்படி படத்தில் வரும் வசனங்களையெல்லாம் உங்கள் இதய சட்டத்தில் படம் பிடித்து அதை அப்படியே காபி செய்யும் உங்களை எப்படி பாராட்டுவது என்னவென்று புகழ்வது என அகராதியில் தேடிக்கொண்டிருக்கிறேன். அந்த அளவிற்கு விமர்ச்சனம் இருந்தது. இது வஞ்சக புகழ்ச்சியல்ல என் நெஞ்சக புகழ்ச்சி!
அண்ணா அவன் இவன் படத்தை நீங்கள் விமர்ச்சித்த விதம் படத்தை நேரில் பார்த்ததை போன்ற பிரமிப்பை ஏற்படுத்தியது. எப்படி படத்தில் வரும் வசனங்களையெல்லாம் உங்கள் இதய சட்டத்தில் படம் பிடித்து அதை அப்படியே காபி செய்யும் உங்களை எப்படி பாராட்டுவது என்னவென்று புகழ்வது என அகராதியில் தேடிக்கொண்டிருக்கிறேன். அந்த அளவிற்கு விமர்ச்சனம் இருந்தது. இது வஞ்சக புகழ்ச்சியல்ல என் நெஞ்சக புகழ்ச்சி!
அண்ணா அவன் இவன் படத்தை நீங்கள் விமர்ச்சித்த விதம் படத்தை நேரில் பார்த்ததை போன்ற பிரமிப்பை ஏற்படுத்தியது. எப்படி படத்தில் வரும் வசனங்களையெல்லாம் உங்கள் இதய சட்டத்தில் படம் பிடித்து அதை அப்படியே காபி செய்யும் உங்களை எப்படி பாராட்டுவது என்னவென்று புகழ்வது என அகராதியில் தேடிக்கொண்டிருக்கிறேன். அந்த அளவிற்கு விமர்ச்சனம் இருந்தது. இது வஞ்சக புகழ்ச்சியல்ல என் நெஞ்சக புகழ்ச்சி!
அண்ணா அவன் இவன் படத்தை நீங்கள் விமர்ச்சித்த விதம் படத்தை நேரில் பார்த்ததை போன்ற பிரமிப்பை ஏற்படுத்தியது. எப்படி படத்தில் வரும் வசனங்களையெல்லாம் உங்கள் இதய சட்டத்தில் படம் பிடித்து அதை அப்படியே காபி செய்யும் உங்களை எப்படி பாராட்டுவது என்னவென்று புகழ்வது என அகராதியில் தேடிக்கொண்டிருக்கிறேன். அந்த அளவிற்கு விமர்ச்சனம் இருந்தது. இது வஞ்சக புகழ்ச்சியல்ல என் நெஞ்சக புகழ்ச்சி!
அண்ணா அவன் இவன் படத்தை நீங்கள் விமர்ச்சித்த விதம் படத்தை நேரில் பார்த்ததை போன்ற பிரமிப்பை ஏற்படுத்தியது. எப்படி படத்தில் வரும் வசனங்களையெல்லாம் உங்கள் இதய சட்டத்தில் படம் பிடித்து அதை அப்படியே காபி செய்யும் உங்களை எப்படி பாராட்டுவது என்னவென்று புகழ்வது என அகராதியில் தேடிக்கொண்டிருக்கிறேன். அந்த அளவிற்கு விமர்ச்சனம் இருந்தது. இது வஞ்சக புகழ்ச்சியல்ல என் நெஞ்சக புகழ்ச்சி!
அவன் இவன் படத்திற்கான உங்கள் விமரிசனம் அருமை! வழக்கமான உங்கள் விமரிசனத்திலிருந்து மாறுபட்டு அருமையாக எழுதியுள்ளிர்கள் சூப்பர்.சி.பி வாழ்த்துக்கள்! அன்புடன் சா. சுரேஷ்
நல்ல விமர்சனம் அண்ணே.
சகோ ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னதை நானும் வழிமொழிகிறேன். இயக்குனராக வேண்டும் என்ற உங்கள் கனவு பலிக்க கடவுளை மனமுருகி வேண்டிக்குறேன்.(அப்பதானே நாங்க போடுற விமர்சனத்துல மாட்டிக்கிட்டு விழி பிடுங்கி பதில் சொல்ல முடியாமல் திணறுரதை பார்க்கனும் நு நிறையப் பேர் ஆவலாக உள்ளோம்.)
சிபி, உங்களின் வழமையான பாணியிலிருந்தும் விலகி வித்தியாசமான ஒரு, நடையில் இந்த விமர்சனத்தை வழங்கியிருக்கிறீங்க.
உங்களின் எழுத்துல வாழ்வில் ஓட்ட வடை கூறுவது போல இந்த விமர்சனம் ஒரு திருப்பு முனையாக அமையும் என்பதில் ஐயமில்லை.
வாழ்த்துக்கள் சிபி!
தொடர்ந்தும் பயணியுங்கள்!
ஓட்ட வடையின் பின்னூட்டக் கருத்துக்களை நானும் வழி மொழிகிறேன்.
ஆமா ஸார்,.. எ;ல்லோரும் சொல்ரது போல, உங்க விமர்சனம் இந்த வாட்டி சூப்பரோ சூப்பர்... நிறைய போட்டோ போட்டிருக்கீங்கள்ள... ஜனனி அய்யர்..அய்யோ.....அட.... அட.... அட்ரா சக்க...
//10. சரி.. உன் பேரென்னடி?
தேன் மொழி.. தேனு....
ஓ.. நக்கனும்னு நினைப்பீங்களோ.... (படிக்கும்போது விரசமாக இருந்தாலும் காட்சி அமைப்பில் அப்படி இல்லை)//---
இந்த இடத்தில் வரும் வசனம் இதுவல்ல. நக்கினா (ல்) இனிப்பீங்களோ? என்பது தான் சரியான வசனம். இது போன்ற படங்களை டிடிஎஸ் ஒலி தொழில் நுட்பம் கொண்ட திரையரங்கில் பார்ப்பதைத் தவிர்ப்பது நல்லது.
hai,
Your review is good. But i suspect you that you might have seen this movie in DVD since memorising all the dialogues in theatre is not possible or you should have seen this movie more than once....ha ha ha..Gud Job man... keep it up...
Post a Comment