பெட்ரோல் விலையுயர்வு: செலவைக் குறைக்க சிக்கன வழிகள்!
வருமானம் உயர்கிறதோ இல்லையோ, பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது அடிக்கடி நடக்கும் விஷயமாகி விட்டது. சென்ற வருடத்தில் 11 மாத காலத்தில் 11 முறை, சராசரியாக மாதத்துக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. மொத்தமாக ஒரு லிட்டருக்கு 15 ரூபாய் வரை விலை உயர்ந்திருக்கிறது.
அதாவது பெட்ரோலின் விலை கடந்த ஒரு வருடத்தில் சுமார் 28% அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்விலிருந்து பாதிப் படையாமல் இருக்க இரண்டே வழிகள்தான் உண்டு. ஒன்று, இரண்டு சக்கர, நான்கு சக்கர வண்டிகளைப் பயன்படுத்தாமல் இருப்பது.
டயர் பராமரிப்பு :
டயர்களின் காற்றழுத்தத்தை வாரத்துக்கு ஒருமுறையாவது செக் செய்ய வேண்டும். காற்றில் என்ன இருக்கிறது என்று அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம். காற்றின் அழுத்தத் துக்கும் வண்டியின் வேகத்துக்கும் தொடர்பு இருக்கிறது. அழுத்தம் குறைவாக இருந்தால் வண்டி குறைவான வேகத்தில் செல்லும். அதனால், எரிபொருள் அதிக மாகவே செலவாகும். டயர்கள் தேய்ந்து போயிருந்தால் உடன டியாக மாற்றவும். தேய்ந்த டயர் களைக் கொண்டு வண்டியை வேகமாக ஓட்ட முடியாது. சரியாக பிரேக்கும் பிடிக்காது.சிக்னலில் சிக்கனம்:
சில நிமிடங்களாவது காத்திருக்க வேண்டிய சிக்னல்களில் என்ஜினை ஆஃப் செய்து விட்டால் தேவையில் லாமல் எரிபொருள் வீணாகாது. பச்சை விளக்கு எரிவதற்கு பத்து வினாடிகளுக்கு முன்பு மீண்டும் என்ஜினை ஆன் செய்யலாம். இரவில் சிக்னலில் நிற்கும்போது முன்புற விளக்குகளை அணைப் பதால்கூட எரிபொருள் மிச்சமாகும்.ஏர்கன்டிஷன் :
கார்களில் பிரயாணம் செய்யும் போது ஏ.சி-யை பயன்படுத்துவதற்கு 8% எரிபொருள் தேவைப்படுகிறது. இதனால் தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்தலாம். அதிக டிராஃபிக் உள்ள சாலையில் ஏ.சி-யைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. பிற வாகனங்களிலிருந்து வெளிவரும் வெப்பத்தினால், நமது வாகன ஏ.சி-யின் வேலையும் அதிகரிக்கும். இதனால் எரிபொருளின் தேவையும் அதிகமாகும். முக்கியமாக கார் கண்ணாடிகளை முழுவதுமாக மூடவும். நன்றாக கூல் ஆகிவிட்டால் ஆஃப் செய்து கொள்ளலாம். ஏற்கெனவே இருக்கும் குளிர்ச்சியை வைத்தே கொஞ்ச நேரம் தாக்குப் பிடிக்கலாம்.வேகம் :
வாகனங்களில் உள்ள ஒவ்வொரு கியருக்கும் ஒரு வேகம் இருக்கிறது. சிலர் டாப் கியரில் மெதுவாகவும், இரண்டாவது கியரில் வேகமாகவும் செல்வார்கள். எந்த வாகனமாக இருந்தாலும் டாப் கியரில் என்ஜின் முழுமையான திறனில் இயங்கும்., எரிபொருளும் வீணாகாது. 'எக்கனாமிக் ஸ்பீட்’ லிமிட்டை கடைப்பிடிப்பது நல்லது. தேவை என்ன?
சிலர் மாதத்துக்கு ஒருமுறை மட்டுமே காரை பயன்படுத்து வார்கள். ஆனால் அவர்களின் பெட்ரோல் டாங்க் எப்போதும் நிறைந்தே இருக்கும். ஒரு ஐந்து லிட்டர் தீர்ந்துவிட்டால் உடனே போய் டேங்கை ஃபில் பண்ணிக் கொண்டு வந்து ஷெட்டில் நிறுத்தி விடுவார்கள். இது தேவையில்லாதது. அப்படி நீண்ட நாளைக்கு பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பெட்ரோல் அல்லது டீசலின் தரமானது குறைந்து விடும். இதனால் வண்டியின் வேகம் அதனுடைய முழுத்திறனில் இயங்காது.ஓவர் லோடு :
தேவையில்லாமல் கார்களில் லோடு ஏற்ற வேண்டாம். உங்கள் காரில் 50 கிலோ எடை கூடினால் 2% பெட்ரோல் அதிகமாக தேவைப்படும். பெட்ரோல் டேங்கை ஃபில் செய்தபடியே வண்டி ஓட்டுவதும் ஓவர் லோடுதான். இதனால் கூட எரிபொருள் தேவை அதிகரிக்கிறது. எனவே, பாதி அளவு நிரப்பப்பட்ட பெட்ரோல் டேங்குடன் வண்டி ஓட்டுவது நல்லது. நன்றி: மோட்டார் விகடன்.
28 comments:
வடை எனக்கா?
ஹ ஹ ஹ ஆஹா வடை கிடைத்துவிட்டது
நல்ல தகவல்கள் .. அனைவரும் அறிய வேண்டிய ஒன்று
மோட்டார் சிபிக்கு நன்றி!
நல்ல நல்ல நல்ல தகவல்கள்
அண்ணாதே எங்க இருந்தது இந்த தகவல் எடுத்திங்க
எத்தனை விகடன் இருக்கிறது என்பதையே உங்கள் பதிவுகளை பார்த்து தான் தெரிந்து கொண்டேன் ஹி ஹி
தகவல் பயனுள்ளதாகவே இருக்கிறது
நல்ல தகவல், ஆமா நான் வண்டி வாங்குனது உங்களுக்கு எப்பிடி தெரிஞ்சது!!??
பயனுள்ள தகவல்...எப்படியோ செலவு குறைஞ்சா போதும்...
நல்ல தகவல்கள் .. அனைவரும் அறிய வேண்டிய ஒன்று
tamil manan 5
என்ன தல பதிவர் சந்திப்ப பத்தி எழுதுவீங்கன்னு பார்த்தா மோட்டார் விகடன் எழுதியிருக்கீங்க
Timely Advice.
Hats off!
உண்மையில் தேவையான ஒரு பகிர்வு. நன்றிகள்.
எதிர்கால சந்ததிக்காக குறைந்த பட்சம் நான் கட்டாயம் கடைபிடிக்க வேண்டியது ...நல்ல பகிரு பாஸ்.........
thanks to motor vikatan
சிலர் 20 அடி தூரத்தில் இருக்கும் கடைக்கே 2 வீலர் எடுத்துட்டு போவாங்க. அதமாதிரி செய்யாமல் அருகில் இருக்கும் 1கிமீ தூரம் வரை உள்ள கடைகளுக்கு நடந்து சென்று வரலாம். உடலுக்கும் நல்லது. பர்சுக்கும் நல்லது.
அண்ணே இந்த மாதிரியெல்லாம் இருந்தா பெட்ரோல் சிக்கனம் தான். ஆனா யாரு இருப்பா?
டேய் மூதேவி இன்னுமா நீ தூங்கல ராஸ்கல்....?
மோட்டார் சிபிக்கு நன்றி!//
அந்த நாதாரி எதோ உள்குத்து வச்சி எழுதி இருக்கான்யா டுபுக்கு......
மோட்டார் சிபிக்கு நன்றி!//
அந்த நாதாரி எதோ உள்குத்து வச்சி எழுதி இருக்கான்யா டுபுக்கு......
மோட்டார் சிபிக்கு நன்றி!//
அந்த நாதாரி எதோ உள்குத்து வச்சி எழுதி இருக்கான்யா டுபுக்கு......
மோட்டார் சிபிக்கு நன்றி!//
அந்த நாதாரி எதோ உள்குத்து வச்சி எழுதி இருக்கான்யா டுபுக்கு......
என்னை எதுக்குடா குற்றாலத்துல தனியா விட்டுட்டு ஓடினே கொன்னியா....?
டேய் இன்னில இருந்து பத்து நாள் உனக்கு மைனஸ் ஓட்டுதான் போடுவேன் என்ன வேணுமோ செய்துக்கோ, ராஸ்கல், எவ்வளவு அருமையா இன்னைக்கு ஐந்தருவி'ல குளிச்சொம் தெரியுமா....மிஸ் பண்ணிட்டியேடா ம்ஹும் நீயெல்லாம் ஒரு மனுஷனாடா....
பெட்ரோல் தீர்ந்துடுச்சு’னு சொல்லி, ரோட்டுல போரவங்கள வண்டிய தள்ள வைக்கலாம்...(ஆத்துல தள்ளி விட்டா நான் பொருப்பல்ல...)
வண்டி ஓட்டுவோருக்கு, வாழ்க்கையிச் செலவினைப் பட்ஜெட்டினுள் உள்ளடக்குவதற்கேற்ற அருமையான தகவல்கள் சகோ.
பகிர்விற்கு நன்றி.
Post a Comment