1. மங்காத்தா படத்தில் ஏன் காமெடி சீனே வைக்கலை?
ரம்மிக்குத்தான் ஜோக்கர் தேவை,மங்காத்தாவுக்கு எதுக்கு ஜோக்கர்? அதான் கிங்க் மேக்கரே இருக்காரே?
----------------------
2. அம்மா இப்படி சொல்லுவார்னு யாருமே எதிர்பார்க்கலை.
ஏன்?
தன்னோட போயஸ் தோட்ட பங்களாவுலயே சட்டசபையை கூட்டிடலாமா?ன்னு கேட்டாராம்#இமேஜினேஷன்
------------------------
3. ஆத்துல குதிக்கப்போன உன் மனைவியை ஏன் தடுத்தே?அவ மேல அவ்வளவு பாசமா?
ச்சே ,ச்சே,ஊர் மக்கள் பாவம்,குடி தண்ணீர்க்கு சிரமப்படுவாங்களே?
----------------------------
4. டாக்டர்,சாப்பாட்டை வாய்ல வைக்க முடியலைன்னு சொன்னதுக்கு ஏன் எம்ப்டி காப்ஸ்யூல்ஸ் தர்றீங்க?
சாப்பாட்டை இதுக்குள்ள வெச்சு விழுங்கிடுங்க
-----------------------------
5. மாண்டலின் சீனிவாஸை மீரா ஜாஸ்மின் லவ் பண்றாராமே?
ஆமா அவரு மாண்டலின் வாசிக்கிற நேரத்தை விட மீரா ஜாஸ்மினை நேசிக்கற நேரம் தான் அதிகமாம்
6. வாழ்க்கையின் எல்லா கேள்விகளூக்கும் நாம் பதில் தெரிந்து கொள்ளும்போது கடவுள் கொஸ்டீன் பேப்பரை மாத்திடறார்#சுடுகாட்டில் சிந்தித்தது
----------------------------
7. அதிமுகவுடன் கூட்டணி அமைக்க சோனியா ட்ரை பண்றாராமே?
உளறாதே,சோனியா அகர்வாலுக்கு டி வி ல நடிக்கவே நேரம் சரியா இருக்கு,அரசியல்க்கு வர நோ டைம்
------------------------
8. நான் நிர்வாணமாக நடிப்பதாகசொல்லப்பட்டது வெறும் புரளி, நம்ப வேண்டாம்.
ஐஸ் மேடம்,நீங்க டிரஸ் போட்டுட்டு வர்றப்பவே எவன் உங்க நடிப்பை ரசிச்சான்?
------------------------
9. உனக்கு அதிர்ஷ்ட மச்சம் 6 இருக்குடா மாப்ளே.
. உனக்கெப்பிடிடா தெரியும்?
அதான் உன் மனைவி கூடப்பிறந்தவங்க 6 பேர்னியே?#மச்சினி ராக்ஸ்
------------------------
10. டியர்,என்னைபார்க்கறப்ப உன் மனசுக்கு செம கிக்கா இருக்கா?
ஆமா,ஆனா பார்த்த பிறகு உங்கண்ணன் குடுக்கறதும்செம கிக்கா தான் இருக்கு#ஹூம் செம உதை
-------------------------------
a
டிஸ்கி -மக்களே வரும் வெள்ளிகிழமை அன்று சென்னை, மதுரை, கோவில்பட்டி, ஈரோடு, கோயம்புத்தூர், கோபி,விருதுநகர் இன்னும் ஊர்களில் இருந்தெல்லாம் பதிவர்கள் நெல்லை நோக்கி வராங்க.....!
பதிவுலகம் மூலமாக முகம் தெரிந்தும் தெரியாமலும் நட்புகள் கொண்டாடி வருகிறோம். பின்னூட்டங்கள் மற்றும் நம்மை தொடருவதின் மூலம் பலர் நம்மை பற்றி அறிந்திருப்பார்கள். அப்படி அறிந்தவர்கள் தெரிந்தவர்களாக மாற உதவுகிறது 'பதிவர்கள் சந்திப்பு'.
அது போன்ற ஒரு சந்திப்பு இங்கே திருநெல்வேலியில் நடைபெற இருக்கிறது. 'உணவு உலகம்' திரு சங்கரலிங்கம் அண்ணன் அவர்கள் தலைமையில் வரும் 17.06.2011 வெள்ளி அன்று, பதிவர்கள் சந்திப்புக்கு ஏற்பாடுகள் செய்துள்ளோம். இது தொடர்பாக அவரது மெயிலுக்கு பத்தாம் தேதிக்குள் வருகையை குறித்து பதிவு செய்ய சொல்லி இருந்தோம்....பத்து பேர் முதல் பதினைந்து பேர் வருவார்கள் என்ற நினைத்தோம். ஆனால் வருவதாக விருப்பம் தெரிவித்து வந்த மெயில்களை பார்த்து பிரமித்துவிட்டோம். எங்களின் பொறுப்பு கூடியதாக உணரும் அதே நேரம் மிகவும் சந்தோசமாக அந்நாளை எதிர்பார்க்கிறோம்.
இடம்: மிதிலா ஹால்,A/C.
ஹோட்டல் ஜானகிராம்,
மதுரை ரோடு,
திருநெல்வேலி சந்திப்பு.
நாள்: 17.06.2011
நேரம்: காலை 10.00 மணி
நிகழ்ச்சி நிரல்
காலை 10௦.00 மணி --- வரவேற்புரை, பதிவர்கள் ஒரு சுய அறிமுகம்
காலை 11 .00 மணி --- செல்வாவின் நகைச்சுவை நேரம்
அதன்பின்னர் கலந்துரையாடல், அது முடிந்ததும் 1 மணிக்கு மதிய உணவு இத்துடன் சந்திப்பு நிறைவு பெறுகிறது.
இந்த பதிவர்கள் சந்திப்பில் ஒரு சிறந்த ஒன்றாக சிறிய சமூக சேவை ஒன்றினை செய்யலாம் என்று யோசித்து வைத்துள்ளோம்...வரும் நண்பர்களின் ஒத்திசைவுக்கு பின் செயல் படுத்தப்படும்.....!
நிகழும் நிகழ்வுகளை பதிவுலக நண்பர்கள் ஆன்லைனில் கண்டுகளிக்க நாற்று நிரூபன் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளார். புகைப்படம் எடுக்க போடோகிராபர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது , அதில் கலந்து கொள்ள விருப்பம் இல்லாதவர்கள் தவிர்த்துவிடலாம், கட்டாயம் இல்லை.
அப்புறம் முக்கியமாக, பதிவர்கள் சந்திப்பு என்று சொன்னாலும், உண்மையில் இது ஒரு குடும்ப விழா...விரும்பம் உள்ளவர்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ளலாம்.
இம்சைஅரசன் - பாபு
அட்ரா சக்க - செந்தில்குமார்
ஜயவேல் - சண்முக வேலாயுதம்
ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ரத்னவேல் நடராஜன்
அன்புடன் எ.மு.ஞானேந்திரன்
நெல்லை நண்பன் - ராம்குமார்
நாய்க்குட்டி மனசு ரூபினா
ஜோசபின் பாபா இவர்கள் அனைவரும் வருகிறார்கள்...இவர்கள் தவிர மற்றவர்கள் கன்பர்ம் செய்து, சொல்வதாக இருக்கிறார்கள். மேலும் வர விருப்பம் இருக்கிறவர்கள், உணவுஉலகம் ஐடிக்கு மெயில் பண்ணுங்கள்...முக்கியமாக நெல்லையில் வேறு யாரும் பதிவர்கள் இருக்கிறார்களா என தெரியவில்லை...அப்படி இருந்தால் அவசியம் தொடர்பு கொள்ளவும்.
அவரது செல் எண் 9442201331.
அப்புறம் ஒண்ணச் சொல்லியே ஆகணும் - குற்றாலம்
தென்பொதிகைச் சாரலில் அமைந்துள்ளது குற்றால மலை, இதில் சுமார் 2,000க்கும் மேற்பட்ட மூலிகை செடிகள் உள்ளன.....இந்த செடிகள் மீது பட்டு விழும் மழைத்துளிகள் பின்னர் அருவியாக ஓடி வருவதால் அருவி நீரில் அந்த மூலிகை செடிகளின் மருத்துவ குணமும் கலந்து வருகிறது என்பதும் அதில் நீராடுவதால் உடலுக்கு ஆரோக்கியம் என்பது தனிச் சிறப்பு.
இப்போது சீசன் களைகட்ட தொடங்கிவிட்டது. தென் மேற்கு பருவக்காற்று குளிர்ச்சியாக வீசி, குற்றாலத்தில் சாரல் மழையை பெய்வித்து கொண்டிருக்கிறது .....!! அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது .....
வெள்ளிகிழமை பதிவர் சந்திப்பு என்றால் சனி, ஞாயிறு இரண்டு தினங்களும் மூலிகை கலந்து வரும் அருவிகளில் நீராடி அற்புதமான அனுபவத்தை பெற ஒரு நல்ல சந்தர்ப்பம். இது போன்ற சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது அனுபவித்து கொள்ளவேண்டும்...! (அவரவர் சொந்த செலவில்...?!) என்ன நான் சொல்றது...?! சரி தானே.....?!!
தேங்க்ஸ் டு மனதோடு மட்டும் கௌசல்யா,
25 comments:
vadai no :3
இவர்கள் தவிர மற்றவர்கள் புதன்கிழமை(நாளை)//
இந்த பதிவை நீங்க போட்டது வியாழகிழமை..hehe
நெல்லையில் பதிவர்கள் சந்திப்பு கோலாகலம் நாளை .ஒரு முக்கியமான நாள்தான் .....Enjoy...
HAI NAAN 3 VADHA VANTHUTEYN
//
அம்மா இப்படி சொல்லுவார்னு யாருமே எதிர்பார்க்கலை.
ஏன்?
தன்னோட போயஸ் தோட்ட பங்களாவுலயே சட்டசபையை கூட்டிடலாமா?ன்னு கேட்டாராம்#
//
over இமேஜினேஷன்
இன்று எனது வலையில்
அவன்-இவன் திரைவிமர்சனம்
YENAKKU ROMBA AVALAGA IRRUKKU INDHA SANTHIPPIL KALANTHIDA BUT I AM NOW IN SAUDIARABIA. KALANTHUKOLVORKELLAM ENNODA VALTHUKKAL.. KANDIPPAGA PHOTO UPLOAD SEIYAUM
அதென்னங்க 100.00 மணி... ஹி,,,ஹி..
”விமர்சகன் ஒட்டகம் போன்றவன். பூக்களை விட்டு விட்டு முட்களை மேய்பவன்.” வைரமுத்து
///2. அம்மா இப்படி சொல்லுவார்னு யாருமே எதிர்பார்க்கலை.
ஏன்?
தன்னோட போயஸ் தோட்ட பங்களாவுலயே சட்டசபையை கூட்டிடலாமா?ன்னு கேட்டாராம்/// ஹிஹிஹி அம்மையார் செஞ்சாலும் செய்வாங்க ...))
பதிவர் சந்திப்பு சிறப்புற வாழ்த்துக்கள் .....
ரம்மிக்குத்தான் ஜோக்கர் தேவை,மங்காத்தாவுக்கு எதுக்கு ஜோக்கர்? அதான் கிங்க் மேக்கரே இருக்காரே?//
உட்கார்ந்து யோசிக்கிறீங்களா...
ஹி...ஹி....
3. ஆத்துல குதிக்கப்போன உன் மனைவியை ஏன் தடுத்தே?அவ மேல அவ்வளவு பாசமா?
ச்சே ,ச்சே,ஊர் மக்கள் பாவம்,குடி தண்ணீர்க்கு சிரமப்படுவாங்களே?//
பாஸ், சிம்பிள் அன் சுவீற்....
அருமையான காமெடி...
ஹி.,,,
பதிவர் சந்திப்பு மகிழ்ச்சியாக நடைபெற வாழ்த்துக்கள்.
வாழ்க்கையின் எல்லா கேள்விகளூக்கும் நாம் பதில் தெரிந்து கொள்ளும்போது கடவுள் கொஸ்டீன் பேப்பரை மாத்திடறார்#சுடுகாட்டில் சிந்தித்தது//
அவ்.....என்ன ஒரு கொலை வெறி...
டியர்,என்னைபார்க்கறப்ப உன் மனசுக்கு செம கிக்கா இருக்கா?
ஆமா,ஆனா பார்த்த பிறகு உங்கண்ணன் குடுக்கறதும்செம கிக்கா தான் இருக்கு#ஹூம் செம உதை//
எப்பிடியெல்லாம் யோசிக்கிறாங்க..
காமெடி டுவிட்ஸ் அனைத்தும் சூப்பர்.
பதிவர் சந்திப்பு இனிதாய் அமைய வாழ்த்துக்கள்.
என்ன பாஸ் எங்க தலைய கமெண்ட் பண்ணத வன்மையாக கண்டிக்கிறேன்....ஹி ஹி ஹி....அப்புறம் எங்க ஊர்ல பதிவர் சந்திப்பு நல்ல முறையில் நடக்க இறைவனிடம் வேண்டி கொள்கிறேன்....சிபி எப்போவும் கலக்கல்.....
வாழ்க்கையின் எல்லா கேள்விகளூக்கும் நாம் பதில் தெரிந்து கொள்ளும்போது கடவுள் கொஸ்டீன் பேப்பரை மாத்திடறார்#சுடுகாட்டில் சிந்தித்தது
சுடுகாட்டில் கூட ஜோக் சிந்திக்க உங்களால தான் முடியும்
பதிவர் சந்திப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள்.
ALL JOKES SUPER. SEMA KALAKKAL
tamilmanam seventh me thaan
மாப்ள... நாளை சினிமாக்கு போகாம நெல்லையா?
9)பத்தினிக்கதைகள் படிப்பீரே
மச்சினி கிடைத்தால் விடுவீரோ!
(ஜெயகாந்தன்)
நெல்லைக்குப்போய் இருட்டுக்கடை அல்வா சாப்பிட்டு,குற்றாலத்தில் குளித்துவிட்டுக் ’குளு குளு ந்னு வாங்க!
பதிவர் சந்திப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள்! சி பி யின் காமெடிகளும் அருமை! மங்காத்தா..... ஹா ஹா ஹா!!!!!!
வழக்கம் போல் விறுவிறுப்பாய் இருந்தது.
நெல்லையின் பெருமைகளில் ஒன்றாய் பதிவர்களின் சங்கமமும் விளங்க வாழ்த்துக்கள்.
Post a Comment