பதிவுலகில் பெண் எழுத்து என்றாலே பெரும்பாலும் பலர் என்னத்தை இவங்க எழுதிடப்போறாங்க?சமையல் குறிப்பு, கோலம் போடறது எப்படி? மீறிப்போனா காதல் கவிதைகள் எழுதுவாங்க.. என்றெல்லாம் தவறான கருத்துக்களைத்தான் கொண்டுள்ளனர்.. அவர்கள் எண்ணங்களை எல்லாம் தவிடு பொடி ஆக்கியது பெண் பதிவர்களின் பங்களிப்பும் ,அவர்கள் காட்டிய எழுச்சியும்....
1.மனதோடு மட்டும் -கௌசல்யா -
இவர் ஆரம்பத்திலேயே போல்டாக சொல்லி விட்டார்.. சார் என் எழுத்துக்கள் மக்களுக்குப்பயன் அளித்தால் போதும்.. அதனால் என் ஃபோட்டோக்கள் எதுவும் பப்ளிஷ் ஆகக்கூடாது என கிட்டத்தட்ட மிரட்டினார்.. இவரது பாடி லேங்குவேஜ் அசாதாரணமான ஒரு அரசியல் தலைவரை நினைவு படுத்தினாலும். ( டேய் சி பி அருவா அருவா ) அவரது பேச்சுக்கள் உண்மையை பட்டவர்த்தனமாக, எந்த வித மேல் பூச்சும் இன்று வெளிப்படுத்தியது.. (அக்கா ,மன்னிச்சுக்கங்கக்கா)
நான் (அதாவது அக்கா.. ) என் பிளாக்கில் பெரும்பாலும் தம்பதிகளுக்கான ஆலோசனைகளை மட்டுமே வழங்கி வருகிறேன்.. ஆரம்பத்தில் சுமாராகப்போன தளம் இப்போ பரவாயில்லை.. போகிறது.. பலர் தங்கள் அனுபவங்களை எனக்கு மெயில் பண்ணி ஆலோசனை கேட்கிறார்கள்.. நான் அவர்களுக்கு பதில் அளிக்கிறேன்.. அதையே பதிவா போடறேன்..
( அக்காவுக்கு எம்புட்டு சவுகர்யம்.. பதிவு போட சரக்கில்லாம எங்கேயும் தேட வேண்டியதில்லை.. 100க்கு 98 பேர் சம்சாரம் கூட சண்டை போட்டுட்டுத்தான் இருப்பான்.. சண்டையே போடாம இருந்தா அது சம்சாரமா? ஆஹா டைட்டில் பிரமாதமா இருக்கே.. நோட் பண்றா.. நோட் பண்றா.. _)
என்னால பலர் பயன் பெறுகிறார்கள்.. தம்பதிகளுக்குள் வரும் மனத்தாங்கல்களை நான் தீர்த்து வைக்கிறேன்..
பதிவை படித்தவர்கள் தங்களின் சில தவறுகளை திருத்திகொண்டதாக / குறைத்துகொண்டதாக சொல்லும்போது மனதிற்கு நிறைவை கொடுப்பதால் தொடர்ந்து அத்தொடரை தொடருகிறேன்..
( இதுக்காகவே அக்கா தளத்துல போய் மைனஸ் ஓட்டு போடனும் ம் ம்.. நாம ஏதாவது சாக்கு சொல்லி சம்சாரத்தை கழட்டி விடலாம்னு பார்த்தா இவங்க விட மாட்டாங்க போல இருக்கே.. ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் )
கழுகு என்ற தளத்தை பற்றி நிறைய பேசினாங்க...விழிப்புணர்வு பதிவு ஏதோ ஒன்று , இரண்டு நம்ம தளத்தில் எழுதுவோம், ஆனா அதற்கென்றே இருக்கும் தளம் கழுகு. அப்டின்னார்..
அப்புறம் அக்கா நைஸா பலா பட்டறை சங்கர் சார்ட்ட மெயில் ஐ டி வாங்கி சார் உங்க கட்டுரை ஒண்ணு கழுகுக்கு தேவைப்படுதுன்னார்.. அவரும் ஓக்கே ரெடி பண்றேன்னார்.... இப்படியே பல முக்கிய பதிவர்களிடம் மெயில் ஐ டி , ஃபோன் நெம்பர் வாங்குனாங்க,..... என் பக்கம் வரவே இல்ல.. நானும் வெட்கத்தை விட்டு அவங்க கிட்டே கேட்டேன்.. (நமக்குத்தான் வெட்கமே இல்லையெ அதை ஏன் விடனும்னு யாரும் கேட்றாதீங்க.. )
”அக்கா அப்போ நானு? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. ” அதுக்கு அவ்ங்க சொன்னாங்க..” தம்பி.. கழுகு ஒரு சமூக விழிப்புணர்வு தளம்.. ஏதோ அதுக்குன்னு ஒரு இமேஜ் இருக்கு.. வாசகர் வட்டம் இருக்கு.. நீ எழுதி இருக்கற பேரையும் கெடுத்துடாதே” ன்னார்..
( இதுக்கு எதுவும் நான் கேட்காமயே இருந்திருக்கலாம்.. இது வீடியோவுல வேற ரெக்கார்டு ஆகிடுச்சு.. அவைக்குறிப்புல இருந்து நீக்கச்சொன்னா அண்ணன் உணவு உலகம் முடியாதுன்னுட்டார்.. ஹூம்.. போற பக்கம் எல்லாம் சொம்பு வாங்கனும்கறது நம்ம தலை எழுத்து போல.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)
இம்சை அரசன் பாபுவின் அன்புத்தங்கையும்,லேப் டாப் மனோவின் பாச மலர்த்தங்கையும்,வெறும்பய ஜெயந்தின் முதல் தங்கையும் ஆன ஸ்மைலி ராணி & அழுகாச்சி காவியம் கல்பனா அடுத்து பேச எழுந்தாங்க..
முதல்ல பெயர்க்காரணம்.. இவர் ஒரு கவிதை தன்னோட அப்பாவைப்பற்றி எழுதி இருக்காங்க.. அந்த கவிதை பலராலும் பாராட்டப்பட்டாலும் சிலரால் கிண்டல் செய்யப்பட்டு அழுகாச்சிக்காவியம் ஆனார்.. அந்த கவிதையை எப்போ படிச்சாலும் அழுதுடுவாராம்.. ஹய்யோ ஹய்யோ ..
இவர் நன்பர்களுக்கு மெசேஜ் அனுப்பும்போது ஓகே என 2 வார்த்தை டைப் பண்ணிட்டு 8 ஸ்மைலி போட்டு அனுப்புவாராம்....இவர் ஒரு அப்பள பிரியை.. இது எப்படித்தெரிஞ்சுதுன்னா லஞ்ச்ல ஓசி சாப்பாடு சாப்பிடறப்ப நான் பார்த்தவரையே அவர் மட்டும் ஆறு அப்பளம் சாப்பிட்டார்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்.
ஆறு மனமே ஆறு.. அவங்க அபேஸ் பண்ணுன அப்பளம் ஆறு ( சிச்சுவேஷன் சாங்க்)
கல்பனா-
என் பிளாக் பேரு அறிவியல் . எனக்கு இன்னொரு பிளாக்கும் இருக்கு.. பேரு..நான் ரசித்தவை ரசிக்க வாருங்கள் என்னோடு
எனக்கே உரித்தான " என் தேடல்கள் " உங்களுக்காக ..... அப்டின்னாங்க.. ஹலோ மேடம்.. என்ன சொன்னீங்க .. புரியல.. இன்னொரு முறை சொல்லுங்க.. என கூட்டத்தில் ஒருவர் கிண்டல் அடித்தார்.. அவர் ரிப்பீட்டினதும் உங்க பிளாக் பேர் இவ்வளவு நீளமா வெச்சதுக்காகவே உங்களுக்கு அவார்டு தரனும்னாங்க.. ஹா ஹா
அப்புறம் அவர் படித்த கவிதை.. பாதி படிச்சதுமே டி வி சீரியல் ஹீரோயின் ஆகிட்டாங்க..
இனிப்புபால் புகட்டி
இதழ் படபடத்த
எனை முதற் கையில் ஏந்தி
சிரிக்கையில் சிரித்து,
அழுகையில் அன்பால்
எனை அரவணைத்தாயே..!!
கைபிடித்து தோழனாய்
நீ நடக்கையில்
தெருக்கள் சுற்றியும்
உலகம் இனித்தே !!
அன்று
சத்தமிடும் சந்தையிலே
சனமிடையே - என்
மனம் வேண்டுவனக்கு
மௌன பட்டியல்
போட்டாயே !!!
வருடலின் தாலாட்டில்
அணைப்புதனை
கர்வங்கொண்டு
பெருமிதத்தில்
உன்னருகே
உறங்கிய நாட்கள் நெருடுதே..!!
பதினாலுவயசுல
ஆளாகி நின்னவள
பதறாம கண்ணெழுதி
(கல்பானாவின் அப்பா) |
உச்சி மோர்ந்து
ஊரே மெச்ச
விழா தொடுத்த
கனம் மறக்குமோ..??!!
பார்பவையனைத்தும்
உன் சாயல் கொண்டுள்ளதே...
என் முக'வரி உள்ளுட்டு!!
தும்மலுக்கு இசைமீட்டி ரசித்தாயே
விம்மலோடு - இன்று
என் விழிகள் உன் இல்லாமையால்..
"உன்ன விட்டு போறேன் பாரு"- என்ற
என் வெகுளி சொல்லுக்கு உடைந்தையே !!
ஆனால் இன்றோ நீ ???
ஏன்ப்பா.........!!!???
இறந்தார் மீள்வரா
ஐயத்திற்கு
சுற்றம் உரைத்தது..!
'நாடு பொறுக்குமா?'
இருப்பினும்
வாழ்கிறாயே
என் சிந்தையில்..!!
உனக்கு
என்றும் ஐயம் - வேண்டாம் அப்பா
நீ உருக
காதலித்த இதயம்
பொக்கிஷமாய்
தாயுருவில்!!!
இவங்க சொந்த ஊரு விருது நகராம்.. கவிதைக்கு விருது உண்டோ இல்லையோ இவங்க அழுகைக்கு விருது உண்டு..
3.
இவர் பேசுனது........
3.
ஜோஸபின் பாபா
இவர் பேரே இவர் ஒரு சீரியஸ் பதிவர்னு சொல்லிடுச்சு.பொதுவா பதிவர்கள் யார் எழுதுனாலும் அவங்களோட வாழ்க்கைத்துணை அவ்வளவா அதை விரும்ப மாட்டாங்க.. ஏன்னா தன்னை, தன் குடும்பத்தை கவனிக்காம பிளாக்கை கவனிக்கறாங்கலேன்னு ஒரு எண்ணம் உணடு.. ஆனா இவரோட கணவர் ரொம்ப வித்தியாசம்.. அவர் மனைவிக்கு ரொம்ப ஹெல்ப்பா இருக்கார்.. மனைவியை பார்க்கும் பார்வையிலேயே அவரது கண்களீல் பெருமிதம் மிளிர்ந்ததை கண்டேன்.. காட் பிளஸ் தெம் .. (LET GOD BLESS THEM)இவர் பேசுனது........
வலைப்பதிவு என்பது அறிவாளிகளால் உருவாக்கபடுவது எழுதப்படுவது என்பதிலும் தாண்டி உண்மை உரைக்கும் இதயத்தால் பேசும் நபர்கள் கொண்டு வழி நடத்தி செல்வதே. ஒரு வலைப்பதிவில் பலவும் வீட்சியும் அதன் தணிக்கையற்ற செய்தி வெளியிடலும் கட்டுபாடற்ற சுதந்திரமான படைப்பு ஆகும்.
வலைப்பதிவுகள் என்பது ஒரு பொழுது போக்கு என்பதையும் தாண்டி சமூக வளர்ச்சிக்கு எடுத்து செல்லவேண்டும். உதாரணமாக திருநெல்வேலி மக்களின் உயிருக்கு எந்த நேரவும் ஆபத்து விளவிக்கும் கூடன்குளம் அணு-உலை போன்ற வற்றின் செய்தியே மக்கள் மத்தியில் கொண்டு செல்ல உதவ வேண்டும்.
வலைப்பதிவுகள், பொழுது போக்கு அம்சம் என்பதை கடந்து கருத்துரையாடலுக்கு , மாற்று ஊடகமாகவும், தகவல்களை சிறப்பாக பறிமாறி கொள்ள, சமூக சீர்திருத்தம் என பல நிலைகளில் பங்கு ஆற்றுகின்றது. வலைப்பதிவுகள் என்றாலே நாட்குறிப்பீடு என்று ஒரு பொதுவான எண்ணம் உண்டு. ஆனால் வலைப்பதிவுகள் என்பது 3 வகையாக பிரிக்கலாம், நாட்குறிப்புப் பேடு(diary) வகை சார்ந்தது, நோட்டு புத்தகம்(note book)வகை மற்றும் ‘தேடி தேர்ந்து எடுக்க தகுந்தது’ (filter blog) என 3 ஆக வேர்படுத்தலாம்.
வலைத் தளத்தின் ஒரு பாகமான வலைப்பதிவுகளை பொழுது போக்கு அம்சம் என்பதை கடந்து ஈழம் என்ற தங்கள் அடையாளத்தை பேணவும், வெகுசன ஊடங்களால் உண்மையான செய்திகள் அரசியல் காரணங்களால் மறுக்கப் பட்ட போதும் மழுங்கடிக்கப் பட்ட போதும் தங்கள் ஒருவருக்கு ஒருவர் கருத்துக்களை பறிமாற வலைப்பதிவுகள் உலகில் பல நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ள ஈழ தமிழர்களை உதவியது என்று ஆய்வு முடிவில் எட்டியுள்ளேன். மேலும் நிலைத்தை தன் உடமை உறவுகளை இழந்த ம்க்கள் தங்கள் வலைப்பதிவு வழியாக தங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள ஈழம் என்ற தங்கள் அடையாளத்தை வாழ்வை பதிவு செய்ய வலைப்பதிவுகள் பெரிதும் பயண்படுத்துகின்றனர்.
ஊடகத்தின் பணியான அடி நிலை மக்களின் செய்தியை பெருவதிலும் அதை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதிலும் பெரிதும் பங்கு ஆற்றுகின்றது என்றால் மிகையாகாது. என் நிலத்தின் நடக்கும் நிகழ்வுகளை உதாரணமாக எடுத்து கொண்டால் என் பிறந்த ஊரில் நடந்த சபரிமலை ஆபத்து என்பது எங்கோ ஒரு மூலையில் குடியிருக்கும் பத்திர்க்கையாளர்களை விட அந்த மண்ணின் மக்களுக்கு பெரிதும் தெரிந்திருக்கலாம். இது வலைப்பதிவாக வரும் சூழலில் உண்மைக்கு வலு சிறப்பு சேர்க்கின்றது.
அடுத்தாக நம் செய்திகளை மிகவும் துரிதமாக மிகை குறைந்த செலவில் ஒரு கூட்டம் ஜெனங்களிடம் ஒரே நேரம் கொண்டு சேர்க்க இயல்கின்றது.
வலைப்பதிவுகள் பொழுது போக்கு அம்சம் என்பதையும் கடந்து அவன் சிந்தனை நிலையை தட்டி எழுப்பும் சூழல் உருவாக்குகின்றது.
13 வருடங்களுக்கு முன்பு நான் சென்ற வீடல்ல இன்று என்னுடையது. இன்று நான் வாழ்ந்த அறை என் மேசை கட்டில் ஏன் நான் இந்த உலகை நோக்கிய என் அறைகள் அதன் சன்னல்கள் எல்லாம் என்னில் இருந்து பிரித்தெடுக்கபட்டதாக உண்ர்ந்தேன். என் வீடு என் குழந்தைகள் கணவர் என்று இருக்கும் போது என்னில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட நிலம் இடம் உறவு சார்ந்த வேதனைகளை என் உணர்வுகளை பங்கிட இயல்கின்றது என்பதும் இதன் சிறப்பே.
இவர் இதை பேசறப்ப அழுதுட்டார்.. இலங்கை அகதிகளின் மனக்குமுறல்கள் இவரது பேச்சில் வெளிப்பட்டது..
4. chella நாய்க்குட்டி -ரூஃபினா.இவர் தன்னோட சோக நினைவுகளை பகிர்ந்துக்கிட்டார்.. என்னோட அப்பா இறந்துட்டார்.. அதை என் பிளாக்ல தகவலாவும்,அஞ்சலியாவும் போட்டிருந்தேன்.. அதை பார்த்துட்டு அவரோட ஸ்டூடண்ட்ஸ் காண்டாக்ட் பண்ணி தகவலுக்கு நன்றி சொன்னார்.. எங்கெங்கோ இருக்கற சொந்தங்கலை நண்பர்களை இணைக்கற பாலமா பிளாக் இருக்கு..
அப்டீன்னார்..
4. கொஞ்சம் வெட்டி பேச்சு - சித்ரா
இவரைப்பற்றி நான் சொல்லவேண்டியது எதுவுமே இல்லை.. ஒரு பெண் பதிவர் எப்படி இருக்கனும்கறதுக்கு இவர் ஒரு முன் உதாரணம்.. இவரை தாக்கி எழுதுனாக்கூட சிரிச்சிக்கிட்டே திட்டுவாரு.. சிரிக்காத சித்ராவை யாராலும் பார்க்கவே முடியாது.. எதுக்கெடுத்தாலும் சிரிப்புதான்.. ஆனா பேசறப்ப கொஞ்சம் சீரியஸ் ஆனார்.. ” நான் ஒரு முறை நடு நிசி நாய்கள் பட விமர்சனத்துக்கு கமெண்ட் போட்டேன்.. அந்த விமர்சனம் எழுதுனவர் என்னோட ஃபேமிலி ஃபிரண்ட்.. ஆனா ஒருத்த தனி மெயில்ல 18+ பதிவுக்கு வழக்கமா நீங்க கமெண்ட் போட மாட்டேங்களே.. இதுக்கு மட்டும் ஏன்? அப்டின்னு கேட்கறாங்க.. ஒரு பெண் பதிவர் தன்னோட கருத்தை சுதந்திரமா தெரிவிக்க முடியறதில்லை.. எத்தனை எதிர்ப்புகள்.. எல்லாவற்றையும் தாண்டித்தான் நாங்க செயல்பட வேண்டி இருக்கு.. அப்டின்னு சலிச்சுக்கிட்டார்.. ( ஒரு உபரித்தகவல்.. அப்டி மெயில் அனுப்பிக்கேட்ட பதிவர்.. 6 எழுத்தில் பிளாக் நேம், 9 எழுத்தில் அவர் பெயரும் கொண்டவர் )
தொடரும்
48 comments:
அங்க வந்து வெங்காயம் வெட்டுனாங்களா?
பெண் பிளாக்ல எழுதுறாஙக்னு சொன்னாலே லேசா நமுட்டு சிரிப்பு சிரிக்கும் போக்கு இனியவது மாறுமா?!
@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
தயவு செய்து பெண் பதிவர்கள் யாரும் ரமேஷ் பிளாக்கில் போய் மைனஸ் ஓட்டு போடவேண்டாம். அவர் மப்பில் இருக்கும்போது இப்படி கமெண்ட் போட்டுட்டார்.. தெளிஞ்சதும் மன்னிப்பு கேட்பார்.. பொறுத்திருக்கவும்
ஒரு பெண் பதிவர் தன்னோட கருத்தை சுதந்திரமா தெரிவிக்க முடியறதில்லை.. எத்தனை எதிர்ப்புகள்.. எல்லாவற்றையும் தாண்டித்தான் நாங்க செயல்பட வேண்டி இருக்கு.. அப்டின்னு சலிச்சுக்கிட்டார்
>>>
ரொம்ப கரெக்டாதான் சொல்லி சித்ரா அக்கா இருக்காங்க. ஆண்கள் எதை பத்தி வேணுமினாலும் எழுதலாம், தான் பார்க்குற சினிமா, வழியும் வழிசல், அடிக்கும் பீர், கலந்துக்கும் தண்ணி பார்ட்டி, பொண்டாட்டிக்கிட்ட அடிவாங்குறது, பசங்க கிட்ட பல்ப் வாங்குறதுனு. ஆனால், பெண் பதிவர்கள் சினிமா பத்தி எழுதுனா கிண்டல், வீட்டுக்காரர் கிட்ட போட்ட சண்டைய எழுதுனா கேலியான கமெண்ட்னு. மொத்தத்துல பளாக்குல எழுதுறேனு சொன்னாலே, அங்க போகாதே, இங்க கமெண்ட் போடாதே, இதை எழுதாதேனு, நிஜ பேருல எழுதாதே, உன் ஐடெண்டிஃபையப் பத்தி சொல்லாதேனு நூறு அட்வைசு வருது. அடிக்கடி ஒரு தளத்துக்குப் போயி கமெண்ட் போட்டா என்னமோ இருக்குனு நமுட்டு சிரிப்பு வேற. இதையெல்லாம் தாண்டித்தான் எழுதுறோம்.
ஏற்கெனவே பெண்கள்கிட்ட ரொம்ப நல்ல பேரு ?.........நடக்கட்டும் !?
நம்மாலதான் சந்திக்க முடியல பாஸ் ...
ரொம்ப நல்ல பேரு வாங்கியிருக்கிங்க சி பி சார் .
படிக்க படிக்க துண்டுகிறது உங்கள் அனுபவம் தொடர்க அண்ணே
நீங்க ஆடுற டான்ஸ் நல்லா இருக்குங்க..
செல்லுமிடமெங்கும் செம்பு வாங்கும் அண்ணன் வாழ்க!
ஹ ..ஹா ..போட்டு தாக்குங்க மக்கா ..
அந்த 6 எழுத்து ப்ளாக் - அட்ராசக்க
9 எழுத்து பதிவர் - செந்தில்குமார்
எப்புடி?
வணக்கம் சி பி !
நல்லதொரு பதிவைப் படித்த திருப்தி! எமது சமூகத்திலும் சரி, வலையுலகிலும் சரி பெண்களின் நிலை மிகவும் பரிதாபகரமானது! சகோதரி ராஜியின் பின்னூட்டமும் இதையே, எடுத்துச் சொல்கிறது!
தங்களுக்கு சுதந்திரம் இல்லை என்று, பலதடவைகள் பல பெண் பதிவர்கள் குமுறியதைப் பார்த்தேன்! இப்போது பல பதிவர்கள் வலையுலகைவிட்டே போய்விட்டார்கள்!
எமது சமூகம் எப்போது திருந்தும் என்றே தெரியவில்லை! ஆ ஊ என்றால் கலாச்சாரம் கலாச்சாரம் என்று உயிரை வாங்குவார்கள்!
எத்தனையோ திறமைமிக்க பெண்கள் , தங்கள் திறமைகளை மூட்டைகட்டி வைத்துவிட்டு, குடும்பம் பிள்ளைகள் என்று மாடாய் உழைக்கிறார்கள்!
ஆனால், ஆங்கிலப் பெண்மணிகள் உள்ளிட்ட மேற்குலகப் பெண்கள் எவ்வளவோ சாதிக்கிறார்கள்!
அந்த நாடுகள் வல்லரசாகவும், பணம்படைத்தவர்களாகவும், தொழில்னுட்ப உச்சத்திலும், நாள்தோறும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறான்!
ஆனால் எங்களுக்கு மட்டும் ஆயிரத்தியெட்டு சாபக்கேடுகள்!
மாத்தியோசியுங்கப்பா!
என்னவென்று நினைத்தீர்கள் சிபி?எல்லோரும் பாரதி கண்ட புதுமைப் பெண்கள்!
நல்ல பதிவு
2வது படத்தில் உள்ள உங்கள் டான்ஸ் சூப்பரோ சூப்பர்.
பெண் பிளாக்ல எழுதுறாஙக்னு சொன்னாலே லேசா நமுட்டு சிரிப்பு சிரிக்கும் போக்கு இனியவது மாறுமா?!
June 23, 2011 7:04 PM/////
கண்டிப்பாக மாறும் ராஜி! அதுக்கு உங்களுக்கு மனதைரியம் வேணும்! கண்டபடி விமர்சிப்பவர்களின் விமர்சனங்களைப் புறந்தள்ளவேண்டும்!
திருமணமாகாத பெண்களுக்கு பெற்றோரும், திருமணமான பெண்களுக்கு கணவனும், தைரியம் கொடுத்தால், ஊக்கமளித்தால், ஆதரவு கொடுத்தால், வேறு எவரைப் பற்றியும் கவலைப் படத்தேவையில்லை!
நிறையவே சாதிக்கலாம்!
சுதந்திரமாய் எழுதமுடியாத சூழல் உள்ளது உண்மையே.
சுதந்திரம் என்கிற பெயரில் எதைவேண்டுமானாலும் எழுதக்கூடாது என்பதும் கவனிக்கத்தக்கது.
சுதந்திரமாய் எழுதமுடியாத சூழல் உள்ளது உண்மையே.
சுதந்திரம் என்கிற பெயரில் எதைவேண்டுமானாலும் எழுதக்கூடாது என்பதும் கவனிக்கத்தக்கது.
காமெடி...மிஸ் ஆகிடுச்சு.....அடுத்த பதிவை எதிர் பார்க்கிறேன்..நகைச்சுவையோடு..
ரொம்ப நல்ல பகிர்வு சிபி. நீங்க வந்ததா ரூஃபினா சொன்னாங்க.. அவங்க ஃபோட்டோ சூப்பர், மைக் மோஹினி மாதிரி இருக்காங்க..:))சித்து , கௌசி., கல்பனா., ஜோசபினுகும் வாழ்த்துக்கள்>:)
அருமையான பகிர்வு அண்ணே...
சி பி அண்ணே,நான் காலையில போட்ட பதிவு வெறும் காமெடிக்கே என்றாலும்,நக்கல் கூடி இருந்திருந்தால் மன்னிக்கவும்...
அதை திருத்தி மீள் பதிவிட்டேன்..உங்கள் பெருந்தன்மையை காட்டி இருந்தீர்கள் கமென்ட்டில்....
நன்றிகள் பாஸ்
தூரத்துல இருந்து பார்த்தா பாரதி ராஜா மாதிரி இருக்கீங்க பாஸ்.. (கிட்ட இருக்குர போட்டோவ பாக்குர தில்லு எனக்கு கிடையாது ஹி...ஹி...)
பதிவுலகில் பெண்கள் ஆண்கள் என்ற நிலை மாறி மனிதர்கள் என்ற நிலையில் சமஉரிமை வேண்டும். அதீத பாதுகாப்பு,பாசம் என்று படம் காட்டி பெண்களின் உண்மையான நிலையை மறுக்கலாகாது. பெண்களும் கூட சும்மா பம்மாத்து பண்ணி பீடா விடக்கூடாது. என் நிலையில் என் எழுத்தை பல போதும் ஊக்கப்படுத்துவதும் ரசிப்பதும் ஆண்களே!////// அழகாக எழுத்து நண்பா செந்தில்ஆனாலும் வீரபெண் அழுததை சொல்லலாமா!!!ஹி...ஹி..
தலைவரே, அப்படியே அரசியல்வாதியாகுறீங்க பாருங்க., எல்லோரையும் அரவணைக்கிறத சொன்னேன், நடதுங்கன்னே ...
நான் பெண்களின் எழுத்திற்கு ஆதரவு தருபவன்.
அய்.. ஆசையா இருக்கு. சென்னையில பதிவர் சந்திப்பு எப்போங்க???
ஒரு பெண் பதிவராக இதுவரை எனக்கு எந்த பிரச்சனையும் வந்ததில்லை. உங்கள் பதிவு சுவாரசியமாய் இருந்தது. சென்னையில் எப்போ?
பெண் பதிவர்கள் பேசியதை புட்டு புட்டு வச்சிருக்கிங்க... அவங்ககிட்ட கைத்தட்டல்கள் வாங்கிட்டிங்க.
மிக நல்ல விடயம்(லண்டனில் பதிவர் சந்திப்பு வைக்கும் ஐடியா இல்லையா...)இதில் பெண் பதிவர்..ஆண் பதிவர் என்ற பாகு பாடில்லாமல் "பதிவர்" என்று மட்டும் பார்க்கும் நிலை வர வேண்டும் ..ஏற்கனவே ஓரளவு வந்து விட்டது என் நினைக்கிறேன்..
உங்க ப்லாக்ல ஒரு வித்தியாசமான பதிவு.பகிர்விற்கு நன்றி
பதிவர் சந்திப்பினை அருமையாகத் தொகுத்து வைத்திருந்து, ஒவ்வோர் பாகத்தில் ஒவ்வோர் சிற்பம்சங்களோடு வெளியிட்டிருக்கிறீங்க சகோ..
பெண் பதிவர்கள் பற்றிய இப் பதிவின் மூலம், எமது சகோதரிகளின் பல்வேறு தள நிலை வடிவிலான படைப்பம்சங்களை இனங்காண முடிந்திருக்கிறது.
ஓட்ட வடை சொல்வது போல எமது சமுதாயத்தில் படைப்புக்களை, ஆண்- பெண் வேற்றுமை ஏதுமின்றி, பொதுவான படைப்பாளியின் படைப்பாக நோக்கும் நிலை உருவாக வேண்டும்,
அப்போது தான் புதிய வடிவில் பல காத்திரமான படைப்புக்கள் உருவாகுவதற்கான வழி பிறந்து கொள்ளும். எழுத்துக்களை விமர்சியுங்கள்,
எழுத்தாளரை விமர்சிக்காதீர்கள் எனும் நிலை எப்போது தோன்றுகிறதோ,
அப்போது தான் பெண் பதிவர்களின் எழுத்துக்களுக்கான வீரியம் அதிகமாகும்.
உங்க ப்ளோகில் டாப் பதிவு இந்த தொடர் பதிவு பாஸ்
அசத்தல்
நல்ல பல பயனுள்ள தகவல்களை மிகவும் நகைச்சுவையாக எடுத்து கூறியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.
போன இடத்திலும் சொம்பா?
வாழ்த்துக்கள்.
செந்தில்குமார் உண்மையில் உங்கள் பதிவுகளை எல்லாம் நான் படிப்பதே இல்லை.. இதற்காக நான் போலியாக வருத்தம் எல்லாம் தெரிவித்து கொள்ளமாட்டேன். உங்கள் பதிவின் தலைப்பே அதை கடந்துசெல்ல தூண்டும். ஆனால் இந்த பதிவர் சந்திப்பு பதிவுகள் நான்கையும் படித்தேன், உங்கள் எழுத்து நடையில் நல்லதொரு நகைச்சுவை இருக்கிறது சில சமயம் அதுவே உங்களுக்கு எதிரியாக இருக்கிறது என்பதையும் நினைவுபடுத்துகிறேன். வாழ்த்துக்கள் நன்றி
பதிவர்கள் சந்திப்பு
கலாட்டா கல்யாணம் போல கலகலன்னு போய்கிட்டு இருந்தது...
டக்குன்னு பாசமலர் ஆயிருச்சு.
அடுத்து ரத்த சரித்திரமா?
வாழ்த்துக்கள் சிபி.
அருமையாக, சீரியசாக எழுதியிருக்கிறீர்கள்.
நன்றி.
பதிவர் சந்திப்பு பெண்கள் பக்கம். அட்ராசக்க பெண்களுக்கு இட ஒதுக்கீடு. ஆமா சொல்லவே இல்லை எப்ப கட்சி ஆரம்பிக்க போறீங்க?
சிபி அண்ணே நல்லா பந்தி போட்டு பகிர்ந்து கொடுத்திருக்கீங்க...
பெண் பதிவர்கள் பற்றி சொல்லனும்னு தோணுது...
முதல்ல ஒரு வட்டத்த போட்டுக்கிட்டு எழுதாதீங்க...
நீங்களும் எல்லா வர்ணனைகளையும் எழுதலாம் ....அதேநேரம் சில நாதாரிகள் உங்களை தவறாக சித்தரிப்பார்கள் என்று தோன்றினால் கமன்ட் மொடறேசியன் வைத்து எழுதலாம்...
இன்னொரு விஷயம் என்னன்னா ஆண் வெளிப்படையா எழுதறான் கலாசாரம்ங்கற அழகிய மிருகத்தை தள்ளி வச்சிட்டு எழுதறான்...
நீங்களும் அப்படி எழுதுங்க...இதில் ஆணென்ன பெண்ணென்ன!
-இவை யாவும் என் தாழ்மையான கருத்துக்கள்.
ஒரு சின்ன விஷயம் சிபி, எங்க அப்பா இறந்து 35 ஆண்டுகள் கழித்து அவர் மாணவர் என் ப்ளாக் பார்த்து காண்டாக்ட் பண்ணினார் அது தான் முக்கியம்.
ரொம்ப அழுதுட்டிங்கலோ
செம கலகலப்பான சந்திப்பா இருந்திருக்குதே.. வீடியோ வெளியீடு எப்போ :-)
வெகுஜனப் பத்திரிகைகள் கணக்காக தலைப்புகளை மிகவும் கவர்கிற மாதிரி போட்டாலும் ஒரே பாணியிலான எழுத்துக்கள் என்பதால் உங்கள் தளத்தைப் பார்த்துவிட்டுக் கடந்துவிடுவது சமீபகாலமாக வழக்கம். ஆனால் திருநெல்வேலி பதிவர் சந்திப்பு பற்றிய பதிவுகள் அத்தனையையும் படித்து வருகிறேன். மிகத் தெளிவான விரிவான தகவல்களுடன் கூடிய தொகுப்பாக இருக்கிறது. உங்கள் பாணியை மாற்றிக்கொண்டு நீங்கள் எழுத ஆரம்பித்திருப்பது வரவேற்கத்தக்கது.நல்ல கற்பனை வளம் உள்ள உங்கள் எழுத்து ஒரு சிறிய வட்டத்திற்குள் மாட்டிக்கொள்ளவேண்டாம். சகல விஷயங்களையும் எழுதுங்கள், வாழ்த்துக்கள்.
லேட்ட வந்தாலும் வந்டுட்டோமில்ல.
நகைச்சுவையான சந்திப்பு.
ஒரு மெகா சீரியலோட எல்லா எபிசோடையும் மொத்தமா பாத்த எஃபக்ட்டு.................
////// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அங்க வந்து வெங்காயம் வெட்டுனாங்களா?
////////
விட்ட அந்த ஹோட்டல் கிச்சன்லதான் மீட்டிங் நடந்துச்சான்னு கேப்பானுங்க போல?
/////சி.பி.செந்தில்குமார் said...
@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
தயவு செய்து பெண் பதிவர்கள் யாரும் ரமேஷ் பிளாக்கில் போய் மைனஸ் ஓட்டு போடவேண்டாம். அவர் மப்பில் இருக்கும்போது இப்படி கமெண்ட் போட்டுட்டார்.. தெளிஞ்சதும் மன்னிப்பு கேட்பார்.. பொறுத்திருக்கவும்
////////
ஓஹோ இது வேறயா?
பர்ஸ்ட்டு போட்டோவுல யாரையோ மெரட்டுற மாதிரி இருக்கே, உங்க வயசென்ன அங்கிள்னு யாராவது கேட்டுட்டாங்களா?
This meet sounds like a healthy community building event. Keep it up.
Post a Comment