Wednesday, June 22, 2011

நெல்லையில் நான் ஆற்றிய உரை (இவர் பெரிய டீ மாஸ்டரு..!!) நெல்லை பதிவர் சந்திப்பு பாகம் 3

 


இடம் இருந்து வலமாக முதல் நபர் புது பதிவர்,பெயர் சொல்ல விரும்பவில்லை (PVS),சி.பி ,கோமாளி செல்வா,கூலிங்க் க்ளாஸ் மணி வண்ணன் (வம்பை விலைக்கு வாங்குவோம்ல), வலைச்சரம் சீனா,தாதா தமிழ்வாசி பிரகாஷ்,அவரால் மிரட்டப்படுவது ரசிகன் ஷர்புதீன்

ஜாலியாகபோய்க்கொண்டிருந்த பதிவர் சந்திப்பு நான் பேச எழுந்த போது ஒரு மவுன அலை அரங்கில் நிலவியது.. வீட்டில் மாப்பிள்ளை பார்த்துட்டாங்க.. இனி நம்ம காதல் அவ்வளவு தான் என்று காதலி சொன்னதும் காதலனிடம் ஏற்படும் இறுக்கம் போலவும்,வேலையை விட்டு டெர்மினேட் செய்யப்பட்ட ஊழியரின் கடைசி நாள் பணி நடக்கும்போது ஏற்படும் சங்கடம் போலவும்,சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது யாராவது பசியுடன் நம்மை கை ஏந்தும்போது நம் வயிற்றுக்குள் தோன்றும் அழுகை போலவும் அரங்கில் ஒரு அசாதாரணமான அச்சுறுத்தும் அமைதி பரவியது.. 

பதிவுலகில் நான் வந்ததிலிருந்து இன்று வரை எனக்கு ஏற்பட்ட எதிர்ப்புகள்,அப்போது நான் அவற்றால் பாதிக்கப்படாதது போல் வெளியே காட்டுக்கொண்டு உள்ளுக்குள் அழுது கொண்ட சம்பவங்களை நினைவு கூற முடிவு செய்தேன்..

மன பாரங்களை உள்ளுக்குள் இருத்தி வைக்கும் வரை அவை நனைந்த பஞ்சு மூட்டை போல கனமாகவும்,யாரிடமாவது கொட்டித்தீர்த்தால் அது காற்றில் பறக்கும் தூசி போலவும் எளிதாகிவிடும் என்பதால் நான் எல்லாவற்றையும் ஓப்பனாக பேசி விட துணிந்தேன்..


1. என் மேல் வைக்கப்பட்ட முதல் குற்றச்சாட்டு - நான் ஹிட்சுக்காக எழுதுகிறேன் என்பது..

ஒரு பையன் ஸ்கூ;ல்லயோ,காலேஜ்லயோ படிக்கறான்னா அவனும்,அவனோட பெற்றோர்களும் அவன் முதல் ரேங்க் வாங்கனும்னு நினைப்பாங்களா? ஏதோ படிச்சா போதும்னு நினைப்பாங்களா?

எல்லாருக்கும் தான் முன்னணில இருக்கனும், தான் பாராட்டுப்பெற வேண்டும் என எண்ணம் இருக்கும்.அது தான் எனக்கும் இருக்கு.. நீ எந்த வேலை செஞ்சாலும் அதுல பெஸ்ட்டா இரு.. என்பதே எனது கொள்கை.. இதுல என்ன தப்பு இருக்கு..?

நான் பொழுது போக்குக்குத்தான் எழுதறேன்.. எனக்கு எந்த வெறியும் இல்லைன்னு  சொல்றவங்க தாராளமா அப்படி இருந்துக்கலாம்.. நான் கேட்கலையே.. எனக்கு எது சரின்னு படுதோ அதை நான் செய்யறேன்.. உங்களுக்கு எது சரின்னு படுதோ அதை நீங்க செய்ங்க.. அடுத்தவனை குறை சொல்லாதீங்க.. 

பதிவுலகுல என்ன பதிவு போட்டா மக்களுக்கு யூஸ் ஆகும்னு பார்த்து பதிவு போடுங்க.. அவன் என்ன பண்றான், இவன் என்ன சொல்றான், இவனை போட்டு தாக்குவோம்னு ஏன் நினைக்கறீங்க.. அவங்கவங்க வேலையை அவங்கவங்க பாருங்க..
2. நான் ஆனந்த விகடன் குரூப்  பத்திரிக்கைகளிடம் இருந்து  பதிவுகளை காப்பி பேஸ்ட் பண்றேன் என்பது.. 

அமரர் சுஜாதா கற்றதும் ,பெற்றதும்ல அவருக்குப்பிடிச்ச ,அவர் படிச்ச நல்ல படைப்புகளை பகிர்ந்துக்கிட்டாரு.. எழுத்தாளர் சாவி என்னைக்கவர்ந்த படைப்புகள்னு ஒரு தொடர் எழுதுனாரு..
அவங்களோட கம்ப்பேர் பண்ண எனக்கு தகுதி இல்லை.. ஆனா அதே மாதிரி நான் எனக்குப்பிடிச்ச ,மக்களுக்குப்பயன் அளிக்கும் என நான் நினைக்கும் படைப்புகளை காப்பி பேஸ்ட் பண்றேன்.. இதுல என்ன தப்பு?

ஆனந்த விகடனின் சேல்ஸ் 8 லட்சம், நம் வலை உலகை ஆக்ரமித்திருக்கும் படைப்பாளிகள் 1789 பேர்.. படிப்பாளிகள் சுமார்  10,000 பேர்.. அதில் என் தளத்திற்கு வந்து படிப்பவர்கள் சுமார் 1000 டூ 2000 பேர் மட்டுமே.. அப்படி இருக்கும்போது நான் காப்பி பேஸ்ட் செய்து பதிவு போட்டால் அதனால் பத்திரிக்கை  சேல்ஸே குறைஞ்சிடும் என்பதும்,அதனால் விகடனில் படிக்க சுவராஸ்யம் இல்லாமல் போய் விடும் என்பதும் கேலிக்கூத்து.. எத்தனை பேர் அவள் விகடன், சக்தி விகடன்,நாணயம் விகடன் வாங்கறாங்க? அப்படி வாங்காதவங்க வந்து படிக்கறாங்க.. பயன் உள்ளதா சொல்றாங்க.. உங்களுக்கு ஏன் கஷ்டமா இருக்கு..?

3. கில்மா படங்களின் விமர்சனம் போடறார் என்ற குற்றச்சாட்டு..

சீன் படம் என்று அழைக்கப்படும் கில்மா பட விமர்சனங்கள் போடறாதல சமூகமே சீரழிஞ்சிடுச்சு.. சி.பி சமுதாயத்தையே கெடுத்துட்டாரு என்பவர்களே.. 
a
 
 பேசுவது ஸ்ரீவில்லிப்புத்தூர் ரத்னவேல்,உணவு உலகம்,வலைச்சரம் சீனா,பலா பட்டறை சங்கர்
 
என் கில்மா பட விமர்சங்களில் ஆபாசமான வர்ணனையோ,உணர்ச்சியை தூண்டும் எழுத்துக்களோ இருந்ததுண்டா..?சீன் படம் பார்க்கப்போகும் ஆண் எப்படி சங்கடப்பட்டுக்கிட்டே தியேட்டருக்குப்போறான் என்பதை காமெடியாகத்தான் சொல்வேன்.. 

சரி , நான் கலாச்சாரக்காவலர்களை ஒன்று கேட்கிறேன்.. நான் அந்த மாதிரி பட விமர்சனங்கள் இதுவரை 19 போஸ்ட் போட்டிருக்கிறேன்.. அந்த பட விமர்சனங்கள் 1500 பேர் படித்தார்கள்.. பல பதிவர்கள் என் பிளாக் லிங்க் குடுத்து இங்கே போய்ப்பார்.. எவ்வளவு மொக்கையா பதிவு போடறான் என சொல்லி மேலும் 2000 பேர் படிக்க காரணம் ஆகிறீர்களே.. உங்களிடம் ஒரு கேள்வி.. 

நான் எத்தனையோ நல்ல போஸ்ட் போட்டேன்.. புது வருட பிறப்பன்று புத்தாண்டில் நாம் எடுக்க வேண்டிய சபதங்கள் என்னும் விழிப்புணர்வு பதிவு போட்டேன்.. அது 180 பேர் மட்டும் தான் படிச்சாங்க.. அதுக்கு லிங்க் கொடுக்க வேண்டியது தானே..? சி .பி நல்ல பதிவு போட்டிருக்கான் இதை போய் படிச்சுப்பாருங்கன்னு ஏன் சொல்லலை..? 


இந்த சமுதாயம் நல்லாருக்கனும்னு நீங்க உண்மையிலேயே நினைச்சா நான் போட்ட 500 நல்ல பதிவுகளை பாராட்டி லிங்க் குடுங்க.. அப்போ நான் தப்பான பதிவு போட்டா தட்டி கேட்டா அதுல ஒரு நியாயம் இருக்கு.. உண்மையான நண்பன்னா என்ன செய்யனும்?நல்ல பதிவு போடறப்ப பாராட்டனும், மோசமான பதிவு போடறப்ப தட்டிக்கேட்கனும்.. நீங்க என்ன பண்றீங்க.. அண்ணன் எப்போ சறுக்குவான், எப்போ திண்ணையை விட்டு துரத்தலாம்னு பார்க்கறீங்க..?

இப்படி குறை சொல்றவங்களை தனி மெயில்ல நீங்க அந்த மாதிரி படங்கள் பார்ப்பீங்களா?ன்னு கேட்டா ஹி ஹி பார்ப்பேன் , ஆனா பப்ளிக்கா வெளில சொல்ல மாட்டேன்.. அப்டீங்கறார்.
 


4. நடிகைகளின்  கிளாமர் ஸ்டில்களை போட்டு ஹிட்ஸ் ஏற்றிக்கிறார்.. குடும்பப்பொண்ணுங்களை,காலேஜ் பொண்ணுங்களை ஸ்டில்ஸ் ஸா போடறார்..

 ஆரம்பத்தில் ஒரு கவர்ச்சிக்காக நடிகைகளின் கிளாமர் ஸ்டில்ஸ் போட்டேன்.. அதற்கு எதிர்ப்பு வந்ததும் காலேஜ்,ஸ்கூல் விழாக்களில் பெண்கள் படம் இடம் பெற்றதை கூகுள்-ல் இருந்து எடுத்துப்போட்டேன் . இப்போ அதற்கும் எதிர்ப்பு வருகிறது.. இவற்றில் நியாயம் இருப்பதாக நான் நினைப்பதால் இனி என் தளத்தில் ஓவர் கிளாமரான நடிகைகள் ஸ்டில்ஸோ, குடும்பப்பெண்களின்  ஸ்டில்ஸோ இடம் பெறாது என்று சொல்லிக்கொள்கிறேன்.. அதற்குப்பதிலாக இயற்கை காட்சிகள், வித்தியாசமான ரசனை  தூண்டும் படங்கள் போடலாம்னு இருக்கேன்..

5. பதிவுக்கும் ,உள்ளடக்கத்துக்கும் சம்பந்தமே இல்லாமல் டைட்டில் வைக்கிறாரே..?

 ஒரு சினிமாவுக்கு போஸ்டர் எப்படி முக்கியமோ, ஒரு நாவல் அல்லது கவிதைத்தொகுப்புக்கு அட்டைப்படம் எப்படியோ அப்படித்தான் ஒரு பதிவுக்கு டைட்டில் முக்கியம்.. ஒரு வாசகனை நம் தளத்திற்கு அழைத்து வர அது ஒரு கீ வோர்டு.. அது கிளாமராக வைப்பதில் தப்பு இல்லை.. ஒவ்வொரு முறை ஆட்சியாளர்கள் வாக்குறுதி அளிக்கும்போது கவர்ச்சிகரமாக,பொய்யான வாக்குறுதி கொடுத்து நம்மை ஏமாற்ற வில்லையா?அதை நாம் சகித்துக்கொண்டு மீண்டும் மீண்டும் அவர்களை அரியணையில் மாற்றி மாற்றி உட்கார வைப்பதில்லையா?

6. இவரிடம் சரக்கு தீர்ந்து விட்டது.... அதனால் தான் காப்பி பேஸ்ட் பதிவு போடறார்..

நான் பத்திரிக்கை உலகில் 18 வருடங்களாக படைப்புகள் எழுதி வருகிறேன்.. இதுவரை நான் எழுதிய ஜோக்குகள் மட்டும் ஒரு லட்சத்து எட்டாயிரத்து அறுநூறு.. அவற்றில் பத்திரிக்கைகளில் பிரசுரமான படைப்புகள் மட்டும் 9780... தினமும் 10 ஜோக் என்று போட்டாலே நான் 3 வருடங்களுக்கு  பதிவு போடுவேன்.. சரக்கு  இல்லாமல் அல்ல.. தொடர்ந்து ஜோக்காக  போட்டால் போர் அடித்து விடும் என்பதால் தான் வெவ்வேறு சப்ஜெக்ட்ஸ் போடறேன்..


7. சினிமா விமர்சனம் எழுதினால் கேவலமா?

 சினிமா விமர்சனம் எழுதினால் கேவலம் என சிலர் சொல்றாங்க..  ரொம்ப சீப்பா பார்க்கறாங்க.. சினிமா விமர்சனம் எழுதுவது தான் பதிவு போடறதுலயே  ரொம்ப சிரமம்.ஒரு மொக்கைப்படத்தை ரெண்டரை மணி நேரம் உட்கார்ந்து பார்க்கனும்,அதை நினைவு வெச்சுக்கிட்டு ஒரு மணி நேரம் டைப் பண்ணனும்..
அந்தப்படம் கம்ர்ஷியல் ஹிட்டா? இல்லையா? என்பதை கணிக்கனும்,விகடன் மார்க் எவ்வளவு போடுவாங்க என போடனும்.. 


சினிமா விமர்சனத்தில் எதற்கு வசனங்களை ப்போடறீங்கன்னு கேட்டாங்க.. 

பதிவுலகில் ஏற்கனவே சினிமா விமர்சனம் எழுதுவதில் வல்லவர்களான கேபிள் சங்கர்,ஜாக்கிசேகர்,உண்மைத்தமிழன், அதிஷா மற்றும் பலரது விமர்சன நடையில் இருந்து மாறவும், தனித்திருக்கவும், எனக்கென ஒரு அடையாளத்தினை ஏற்படுத்தவும் அந்த வசனங்கள் எழுதும் உத்தியை கொண்டு வந்தேன்..

இதற்கு மேல் ஏதாவது கேள்விகள் என்னை கேட்க வேண்டுமானால் கேளுங்கள் பதில் சொல்கிறேன்.. 


- தொடரும்.. 

டிஸ்கி - பாகம் 4 -ல் பெண் பதிவர்கள்  6 பேர் என்ன பேசினார்கள் என்பதும், பாகம் 5 இல் மீதி உள்ள பதிவர்களின் பேச்சும் இடம் பெறும்

87 comments:

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வரவர பொறுப்பே இல்லாம போச்சுய்யா.. தமிழ்மணத்துல கூட இணைக்காம அப்படி என்னய்யா வெட்டி முறிக்கிறீரு......?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னய்யா இது உங்க பதிவு தமிழ்மணத்துக்குள்ள போகவே மாட்டேங்கிது? என்ன பண்ணி வெச்சீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

7 பாய்ண்டையும் பாத்தா ஒரு முடிவோட பிரிப்பேர் பண்ணிட்டுத்தான் போயிருப்பீங்க போல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ப்ளாக் ஓனரு இன்னிக்கும் கில்மா படம் பாக்க போய்ட்டாரா? வழக்கமா வெள்ளிக்கெழமதானே போவாரு?

சி.பி.செந்தில்குமார் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

சின்னத்தம்பி பிரபு டயலாக் - தானா வருது சார்.. ஹி ஹி

போளூர் தயாநிதி said...

அழகிய படங்களுடன் மற்றுமொரு பதிவு.

சி.பி.செந்தில்குமார் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

என் பேரைக்கெடுக்க வெளியாட்கள் யாரும் வேணாம்யா .. நீங்க, விக்கி தக்காளி, லேப் டாப் மனோ நீங்க 3 பேரும் போதும்..

Unknown said...

என் வருத்தம் எல்லாம் காணாம போச்சி, அங்கே வர முடியலயேன்னு வருத்தப்பட்டுகிட்டு இருந்தேன்.

உங்க பதிவில் மூலமா நான் அங்கே இருக்குற மாதிரியே பீல் பண்றேன்.

நன்றி அண்ணே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அது என்ன சின்னத்தம்பி டயலாக்கு? (ஆமா இது என்ன புதுசா சார்? என்ன சாரு கூட கோர்த்துவிட்டு மாட்டிவிட பாக்குறீங்களா? பிச்சிபுடுவேன் பிச்சி........!)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////சி.பி.செந்தில்குமார் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி

என் பேரைக்கெடுக்க வெளியாட்கள் யாரும் வேணாம்யா .. நீங்க, விக்கி தக்காளி, லேப் டாப் மனோ நீங்க 3 பேரும் போதும்..///////

யோவ் உங்க பேரு ஒண்ணும் தெரியாத அப்பாவி பிகரா... கெடுக்கறதுக்கு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஒலகத்துலேயே கில்மா படத்துக்கு வெமர்சனம் எழுதுற ஆளு இவரு ஒருத்தர்தான், அதையும் கண்டதையும் சொல்லி கெடுத்துடுவானுங்க போல இருக்கே? அப்புறம் தக்காளி, மனோ மாதிரி ஆளுகள்லாம் என்னதான் பண்றது?

THOPPITHOPPI said...

அருமையான பதில்கள்

THOPPITHOPPI said...

//7 பாய்ண்டையும் பாத்தா ஒரு முடிவோட பிரிப்பேர் பண்ணிட்டுத்தான் போயிருப்பீங்க போல?//

//
ஒலகத்துலேயே கில்மா படத்துக்கு வெமர்சனம் எழுதுற ஆளு இவரு ஒருத்தர்தான், அதையும் கண்டதையும் சொல்லி கெடுத்துடுவானுங்க போல இருக்கே? அப்புறம் தக்காளி, மனோ மாதிரி ஆளுகள்லாம் என்னதான் பண்றது?//

hahaha.........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தமிழ்மணத்துல ஓட்டுப்போடவே முடியல, பெரிய இடத்துல பகைச்சுக்காதீங்கன்னு அப்பவே சொன்னேன், கேட்டாத்தானே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எங்கே மறுபடியும் ப்ளாக் ஓனரைக் காணோம், வெளிய போய்ட்டாரா? கில்மா படத்துக்குலாம் இண்டர்வல் விடமாட்டாங்களே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இவரு பதிவ கூட படிச்சிடலாம் போல தமிழ்மணத்தோட மல்லுக்கட்ட முடியலப்பா..... ஒரு ஓட்டுக்கு நான் எவ்வளவு நேரமா போராடிக்கிட்டு இருக்கேன்......?

பன்னிக்குட்டி ராம்சாமி said...
This comment has been removed by the author.
Shiva sky said...

உங்கள் மனக்குமறலை கூட காமெடி யா..சொன்னிங்களே...இது ஒன்றே போதும்..உங்கள் படைப்பு திறனுக்கு....! வாழ்த்துக்கள்.

Shiva sky said...

உங்கள் ஒவ்வொரு பதிவையும்..ஆவலோடு எதிர் பார்க்கும்..உங்கள் விசிறி.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இன்னும் குற்றாலம் மேட்டர் வரலியே ஏன்?

Shiva sky said...
This comment has been removed by the author.
பன்னிக்குட்டி ராம்சாமி said...

///எனக்கு எது சரின்னு படுதோ அதை செய்யறேன். உங்களுக்கு சரின்னு எது படுதோ அதை நீங்க செய்ங்க.. அடுத்தவனை குறை சொல்லாதீங்க..////

அடுத்தவனை குறை சொல்றதுதான் சில பேருக்கு சரின்னு படுது, என்ன பண்றது.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சிபி, இப்ப நமீதா என்ன பண்ணிட்டு இருக்காங்க?

Anonymous said...

ஹ ஹா ஹா ., அங்க ஆத்துன உரை பத்தாது னு இங்க வேறையா ( உங்கள் கருத்துகள் உண்மையானது தான் சார் )

சி.பி.செந்தில்குமார் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி


ராம்சாமி எங்கிருந்தாலும் வந்து அழித்த கமெண்ட்டை ,மீண்டும் போடவும்..

Shiva sky said...

மைந்தனின் மனதில் உள்ளதை போல ....தூற்றுவோர் தூற்றட்டும் ..போற்றுவோர் போற்றட்டும்...உங்கள் நடையிலேயே... எழுதுங்கள்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// சி.பி.செந்தில்குமார் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி


ராம்சாமி எங்கிருந்தாலும் வந்து அழித்த கமெண்ட்டை ,மீண்டும் போடவும்..///////

சிபி, இப்ப நமீதா என்ன பண்ணிட்டு இருக்காங்க?

இதுதான் அது......(இது தேவையா?)

கூடல் பாலா said...

நீங்கள் சொல்வது அனைத்தும் கிட்டத்தட்ட உண்மைதான் .நான் பதிவு எழுத ஆரம்பிப்பதற்கு முன்பாக "புத்தாண்டில் நாம் எடுக்கவேண்டிய சபதங்கள்" என்னும் தங்கள் பதிவை என்னுடைய முக நூல் சுவரில் பகிர்ந்திருந்தேன் .ஆனால் அதை ஒரே ஒரு நபர்தான் படித்திருந்தார் .அதுகூட நான்தான் .180 ல் ஒருவன் நான் !

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////////இடம் இருந்து வலமாக முதல் நபர் புது பதிவர், பெயர் சொல்ல விரும்பவில்லை////////

நீங்க விரும்பலையா அவர் விரும்பலையா?

சி.பி.செந்தில்குமார் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

உங்களை மாதிரி எகனை மொகைனையான ஆள் கிட்ட சொல்ல விரும்பலை.. எகனை மொகைனையான அப்டின்னா என்ன அர்த்தம்னு கேட்காதீங்க.. உங்க பேரு தான் கெடும் ஹி ஹி

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
உங்களது நிறைய கொள்கைகளை நான் ஒத்துக் கொள்கிறேன்.
வாழ்த்துக்கள்.

நிரூபன் said...

இனிய மாலை வணக்கங்கள் சிபி!
ஆணழகன், அல்வா மன்னன்!
கன்னியரின் கனவு கில்மா தலைவன்....

இப்படியெல்லாம் உங்க போட்டோவைப் பார்த்ததும் சொல்ல ஆசை தான்,
ஆனால் செருப்பு வருமோ என்று பயமாக இருக்கு பாஸ்.

நிரூபன் said...

தாதா தமிழ்வாசி பிரகாஷ்,அவரால் மிரட்டப்படுவது ரசிகன் ஷர்புதீன்//

ஆஹா....பிரகாஷ் நம்ம அருவா மனோ கண்ணில மாட்டலையா.
ஹி...ஹி...

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
அது என்ன சின்னத்தம்பி டயலாக்கு? (ஆமா இது என்ன புதுசா சார்? என்ன சாரு கூட கோர்த்துவிட்டு மாட்டிவிட பாக்குறீங்களா? பிச்சிபுடுவேன் பிச்சி........!)///

ஒழுங்கு மரியாதையா ஐயான்னு கூப்புடுயா?

நிரூபன் said...

னி நம்ம காதல் அவ்வளவு தான் என்று காதலி சொன்னதும் காதலனிடம் ஏற்படும் இறுக்கம் போலவும்,வேலையை விட்டு டெர்மினேட் செய்யப்பட்ட ஊழியரின் கடைசி நாள் பணி நடக்கும்போது ஏற்படும் சங்கடம் போலவும்,சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது யாராவது பசியுடன் நம்மை கை ஏந்தும்போது நம் வயிற்றுக்குள் தோன்றும் அழுகை போலவும் அரங்கில் ஒரு அசாதாரணமான அச்சுறுத்தும் அமைதி பரவியது.. //

சிபி இவ்வளவு கோபத்தை உண்டாக்கும் விடயத்தைக் கூட இலக்கிய ரசனையுடன்/
இலக்கிய நயத்துடன் அழகாக வர்ணித்திருக்கிறீங்க.

நிரூபன் said...

னி நம்ம காதல் அவ்வளவு தான் என்று காதலி சொன்னதும் காதலனிடம் ஏற்படும் இறுக்கம் போலவும்,வேலையை விட்டு டெர்மினேட் செய்யப்பட்ட ஊழியரின் கடைசி நாள் பணி நடக்கும்போது ஏற்படும் சங்கடம் போலவும்,சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது யாராவது பசியுடன் நம்மை கை ஏந்தும்போது நம் வயிற்றுக்குள் தோன்றும் அழுகை போலவும் அரங்கில் ஒரு அசாதாரணமான அச்சுறுத்தும் அமைதி பரவியது.. //

சிபி இவ்வளவு கோபத்தை உண்டாக்கும் விடயத்தைக் கூட இலக்கிய ரசனையுடன்/
இலக்கிய நயத்துடன் அழகாக வர்ணித்திருக்கிறீங்க.

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
வரவர பொறுப்பே இல்லாம போச்சுய்யா.. தமிழ்மணத்துல கூட இணைக்காம அப்படி என்னய்யா வெட்டி முறிக்கிறீரு......?///

அட விடு பன்னி..அநாகரீகம் படம் பார்க்க போயிருப்பாரு?

நிரூபன் said...

மன பாரங்களை உள்ளுக்குள் இருத்தி வைக்கும் வரை அவை நனைந்த பஞ்சு மூட்டை போல கனமாகவும்,யாரிடமாவது கொட்டித்தீர்த்தால் அது காற்றில் பறக்கும் தூசி போலவும் எளிதாகிவிடும் என்பதால் நான் எல்லாவற்றையும் ஓப்பனாக பேசி விட துணிந்தேன்..//

சிபி செந்தில்குமார் எனும் இளைஞனிடம்,
நகைச்சுவை உணர்வினையும் தாண்டிப் பொதிந்திருக்கும் இலக்கிய ரசனைக்கு எடுத்துக்காட்டாக இவ் வரிகள் அமைந்து கொள்கின்றன.

வெகு விரைவில் எம் ஆவலைத் தீர்க்கும் வகையில் சிபி ஓர் இலக்கியப் பதிவு தருவார் என நினைக்கிறேன்.

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
சிபி, இப்ப நமீதா என்ன பண்ணிட்டு இருக்காங்க?//

அவசியம் தெரியனுமா?

நிரூபன் said...

பதிவுலகுல என்ன பதிவு போட்டா மக்களுக்கு யூஸ் ஆகும்னு பார்த்து பதிவு போடுங்க.. அவன் என்ன பண்றான், இவன் என்ன சொல்றான், இவனை போட்டு தாக்குவோம்னு ஏன் நினைக்கறீங்க.. அவங்கவங்க வேலையை அவங்கவங்க பாருங்க..//

பலருக்கு நெத்தியடி கொடுக்கும் வசனம்,.,

பல நேரங்களில் பொறுமை சாலியாக இருந்து, தக்க நேரத்தில் பதிலுரைத்துள்ளீர்கள்.

வைகை said...

பதிவுலக மாமேதை சிரிப்புபோலிஸ் இல்லாத இந்த சந்திப்பை நான் கண்டிக்கிறேன் :)

நிரூபன் said...

6. இவரிடம் சரக்கு தீர்ந்து விட்டது.... அதனால் தான் காப்பி பேஸ்ட் பதிவு போடறார்..

நான் பத்திரிக்கை உலகில் 18 வருடங்களாக படைப்புகள் எழுதி வருகிறேன்.. இதுவரை நான் எழுதிய ஜோக்குகள் மட்டும் ஒரு லட்சத்து எட்டாயிரத்து அறுநூறு.. அவற்றில் பத்திரிக்கைகளில் பிரசுரமான படைப்புகள் மட்டும் 9780... தினமும் 10 ஜோக் என்று போட்டாலே நான் 3 வருடங்களுக்கு பதிவு போடுவேன்.. //

சபாஷ் சிபி,
உங்களின் மறு பக்கத்தைப் பலரின் சீண்டல்கள் மூலம் நாமும் அறிந்து கொண்டோம் என்பதில் சந்தோசம்,
கூடவே இப்படி ஒரு மென்மையான அடக்கமான,
அடிக்கடி மன்னிப்புக் கேட்கும் பதுங்கும் புலியிடம் இவ்வளவு திறமைகளா என மலைப்பாகவும் இருக்கிறது.

நிரூபன் said...

உங்களினைப் பற்றிய பல விடயங்களை அறியாதோருக்கும்,
குற்றங் கண்டு பிடிப்போருக்கும் சாட்டையடியாக இப் பதிவு அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

தமிழ்வாசி பிரகாஷ் said...

OPEN HEART STATEMENT. SUPER C. P

தமிழ்வாசி பிரகாஷ் said...

enna thatha prakash'aa..... eduraa antha aruvaala......

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வைகை said...

பதிவுலக மாமேதை சிரிப்புபோலிஸ் இல்லாத இந்த சந்திப்பை நான் கண்டிக்கிறேன் :)//

நானும் கண்டிக்கிறேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வாழும் வள்ளல் சிபி வாழ்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

48

சசிகுமார் said...

என் மேலே கூட பயங்கர கோபம் போல எப்பா பதிவர் சந்திப்புக்கு வரல வந்திருந்தா என் கதை அவ்ளோ தான் திரும்பி ஊரு வந்து சேர்ந்திருக்க முடியாதுன்னு நினைக்கிறேன் ஹா ஹா ஹா.

எது எப்படியோ மனதில் உள்ள குழப்பங்களை வெளியில் கொட்டி விட்டால் மனது லேசாகிவிடும். இனி நிம்மதியாக பதிவெழுதலாம் கலக்குங்க சிபி.

எனக்கும் இது போன்ற ஒரு பிரச்சினை எழுந்தது ஒரு பதிவுல வாசகர்கள் கிட்டயே தீர்ப்பு சொல்ல சொல்லி விட்டுட்டேன் அன்றிலிருந்து இன்றுவரை குழப்பம் ஏதுமின்றி பதிவு எழுதுகிறேன்.

இனி அடிச்சு ஆடு மாப்ள.....

Jana said...

சிபியின் ஆன்மீக தாகம், பதிவுகள் பற்றி யாரும் பேசலையா?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

வணக்கம் சி பி!

உங்கள் பதிவைப் படித்து மனசு வலித்த முதலாவது சந்தர்ப்பம் இதுதான்! உங்களது வலிகளை எனது வலிகளாகவே நான் பார்க்கிறேன்!

இதற்கு முன்னர், உங்களைப் பலர் சீண்டிய போதெல்லாம், நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று மறுக்க மறுக்க நான் அவர்களுக்கு எதிராக உள்குத்துப் பதிவுகள் போட்டேன்! காரணம் உங்களுக்கு அது மன ஆறுதலாக இருக்கட்டும் என்பதால்!

ஒரு கலைஞனின் மனது எவ்வளவு மென்மையானது என்பதை நாம் அனைவரும் அறிவோம்! பிழைகளைச் சுட்டிக்காட்டுவதில் தவறில்லை! ஆனால் அது ஒருவனை அழிக்கும் அளவிற்கு இருக்கக்கூடாது!

சி பி, உங்களை எங்களைக் குறை கூறியவர்கள், குற்றம் கண்டுபிடித்தவர்கள, மைனஸ் ஓட்டுப் போட்டவர்கள், வேறு பெயரில் ப்ளாக் தொடங்கி விமர்சித்தவர்கள் என அனைவருமே இன்று காணாமல் போய்விட்டனர்!

ஆனால் நீங்கள் இருக்கிறீர்கள்! சாதிக்கிறீர்கள்! நான் என்னுடைய பதிவிலே குறிப்பிட்டது போல, உங்களது அயராத உழைப்புத்தான் உங்களது வெற்றிக்கு காரணம்!

உங்கள் மனசிலிருந்ததைக் கொட்டிவிட்டீர்கள்! இவ்வளவு பிரச்சனைகளையும் மனசில் வைத்துக்கொண்டா தினம் தினம் ஜோக்குகள் சொல்லி எம்மை சிரிக்க வைக்கிறீர்கள?

வைரமுத்து அவர்கள் சங்கமம் படத்தில் எழுதியா பாட்டுத்தான் நினைவுக்கு வருகிறது

“ ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்! தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான் “

சி பி , உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், உங்களிடம் ஏற்கனவே சொல்லியும் இருக்கிறேன்!

பதிவுலகில் எனக்கு அனைவரும் நண்பர்களே என்றாலும், நீங்களும், அண்ணன் பன்னிக்குட்டி ராம்சாமியும் என்னிரு கண்கள் போன்றவர்கள்!

உங்களுக்காக நான் எதுவேண்டுமானாலும் செய்வேன்! என்றைக்குமே எங்களின் ஆதரவும் அன்பும் உங்களுக்கு இருக்கும் !

மகிழ்ச்சியாக இருங்கள் சி பி! நீங்கள் இன்னமும் சாதிக்க எவ்வளவோ இருக்கு!

சி.பி.செந்தில்குமார் said...

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

புரிந்துணர்வுக்கும், பரிந்துரைக்கும் நன்றி நண்பா..

சி.பி.செந்தில்குமார் said...

@சசிகுமார்

நண்பா.. தனி மெயிலில் பல முறை நீங்கள் அறிவுரை கூறி இருக்கிறீர்கள்.. உங்களை நான் சொலவில்லை.. உங்கள் மீது எனக்கு கோபம் என்றால் எப்படி தினமும் உங்கள் தளத்துக்கு வருவேன்?

சுதா SJ said...

என்னைபோன்ற புதிய வலை எழுத்தாளர்களுக்கு பயன் உள்ள பதிவு,
படங்கள் அசத்தல்,
அடுத்தது எப்போ பாஸ்
நானும் தொடர்கிறேன்..................

கேரளாக்காரன் said...

Clean clear and genuine statement. Super

Unknown said...

விட்டா இதையே ஒரு நாலஞ்சு மாசத்துக்கு எழுதுவாரு போலேயே

Unknown said...

///இடமிருந்து வலமாக புதுபதிவர் ///



அவர் பெயர் ஞாபகம் இல்லையா ,புது பதிவர் என்ற இளக்காரம் தானே ,டயலாக் மனப்பாடமாக எழுதும் நீங்கள் அவர் பெயரைஏன் ஞாபகமாக வைத்து எழுதவில்லை ,நாம் ஒரு பிரபல பதிவர் புது பதிவர் பெயர் நமக்கெதற்கு என்ற மமதை . ( நாங்களும் கொளுத்தி விடுவோம்ல )

கோவை நேரம் said...

பதிவுலகின் நம்பர் ஒன் நீங்கள் தான்.உங்களின் வளர்ச்சியை கண்டு பொறுக்காதவர்களின் சீண்டல்கள் தான் அனைத்தும்.காய்ந்த மரத்தில் தானே கல்லடி படும்.மென் மேலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

Unknown said...

SIR NEENGATHAAN ANTHA C.P SENTHILKUMAR.CHENNIMALIYA?.SIR, UNGA JOKESLAM PADICHIRUKKIREN,PATHIRUKIYILATHAAN,YOU HAVE EXPERIENCE EVEN BEFORE THE BLOGS POPULARIZED,ITHAI UNGALIDAM KETKALAM ENA IRUNTHEN.KEEP WRITTING,WE ARE WITH YOU.

Unknown said...

அண்ணே இதுல நீங்க ஒரு முக்கியமா விசயத்த சொல்ல மறந்துட்டீங்க ,அதான்னே உங்களுக்கு இப்ப நாப்பத்திஆறு வயசாகுதுன்னு சொன்னீங்களே ,

செல்வா said...

முதல் எனக்கு உங்ககிட்ட பிடிச்சது யார் என்ன சொன்னாலும் அவுங்க திருப்பி சண்டைக்குப் போகாம உங்க வேலையைப் பார்த்துட்டு போறதுதான்!

ஏன்னா என்னோட கேரக்டரும் அதுதான். அடுத்தவங்க என்னவோ சொல்லிட்டுப் போகட்டும். நம்ம வேலைய நாம செய்வோம்!

அடுத்தவங்க சொல்லுறதுல நம்ம முன்னேற்றத்துக்கு தேவையானத எடுத்துக்க்கும்வோம், தேவையில்லாதத விட்டுருவோம்! சண்டை என்பது எப்பொழுதும் பிரச்சினையின் தீர்வல்ல என்பது என்னோட கருத்து.

உங்களை பத்தி சொல்லும்போது இப்பவும் நான் சொல்லுறது " அவர் ப்ளாக் எப்படியோ , அவர் பழகுறதுக்கு ரொம்ப ரொம்ப நல்லவர் அப்படிங்கிறதே.காரணம் சண்டைக்குப்போகத உங்களோட பண்பு!

நீங்க கலக்குங்க அண்ணா :-)

ஷர்புதீன் said...

உங்க பேர கெடுக்க அந்த மூணு பேரு மட்டும்தான் இருக்காங்களா., அப்ப நானு.....

:-(

காங்கேயம் P.நந்தகுமார் said...

அண்ணே பதிவர் சந்திப்பு பாகம் 3 படித்தேன். யாரோ என்னமோ சொல்லட்டும் நீங்க எழுதுங்க நான் படிக்கிறேன். அதே சமயம் அவ்வப்போது குட்டு வைப்பேன். அது தானே விமர்ச்சனத்திற்கு அழகு. அதே சமயம் நிறை இருப்பின் பாராட்ட செய்வேன். காபி பேஸ்ட்டோ டீ போஸ்ட்டோ எங்களுக்கு தேவை அதிலுள்ள கருத்து தான்.

காங்கேயம் P.நந்தகுமார் said...

அண்ணே பதிவர் சந்திப்பு பாகம் 3 படித்தேன். யாரோ என்னமோ சொல்லட்டும் நீங்க எழுதுங்க நான் படிக்கிறேன். அதே சமயம் அவ்வப்போது குட்டு வைப்பேன். அது தானே விமர்ச்சனத்திற்கு அழகு. அதே சமயம் நிறை இருப்பின் பாராட்ட செய்வேன். காபி பேஸ்ட்டோ டீ போஸ்ட்டோ எங்களுக்கு தேவை அதிலுள்ள கருத்து தான்.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இவ்வளவு கேள்விகளா கேட்டாங்க..

இந்த சூடு தணியத்தான் குற்றாளம் போனீர்களா...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நீங்கள் சொல்லக்கூடிய பதிலும் நியமாகத்தான் இருக்கிறது..

nellai ram said...

photo`s super!

அம்பாளடியாள் said...

இத்தகவல் வாசிக்கும்போது சுவாரஸ்சியமாக இருந்தது. தாங்கள் மென்மேலும் வெற்றிபெற
எனது வாழ்த்துக்கள்!..

Mahan.Thamesh said...

அண்ணே உங்கள் மீதான குற்ற சாட்டுக்களுக்கு நீங்கள் வழங்கிய பதில்கள் அத்தனையும் சிறப்பு
உங்கள் பாணியில் இனி வெளுத்து வாங்குங்கன்ன

செங்கோவி said...

கலக்கலான உரை..அருமையாகப் பேசி இருக்கிறீர்கள்..யார் வேணா, என்ன வேணா சொல்லிட்டுப் போகட்டும்..உங்களுக்குச் சரின்னு தோணுறதைப் பண்ணுங்க.முக்கியமா கில்மா விமர்சனங்களை நிறுத்திடாதீங்க...எங்களுக்கு உங்களை விட்டா வேற யாரு இருக்கா?

செல்ல நாய்க்குட்டி மனசு said...

சாப்பிடும் போது வயிற்ருக்குள் தோன்றும் அழுகை !! வாஹ்!!

குறையொன்றுமில்லை. said...

ஆர்வமுடன் பதிவு எழுதுபவர்களுக்கு
இவ்வளவு பிரச்சினைகளா. ஆனாலும்
திடமான மனதுடன் போராடி முன்னிலையில் இருக்கீங்க சார்.
வாழ்த்துக்கள்.

cheena (சீனா) said...

அன்பின் சிபி - மனதில் இருந்தவை அனைத்துமே வெளியே வந்த வுடன் - அப்பாடா என்றிருக்குமே ! ம்ம்ம் - தவறில்லை - விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டும். - அதற்காக தொடர்ந்து தாக்குபவர்களைப் பொறுத்துக் கொள்ள வேண்டியதில்லை. தான் செய்வது தனக்குச் சரியெனப் படும் போது - எதிர்ப்புகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். தொடர்ந்து செல்லலாம் - துணிந்து செல்லலாம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

ராஜி said...

அர்த்தமுள்ள, ஆழமுள்ள, அவசியமான பதில்களைத்தான் சொல்லி இருக்கிங்க சிபிசார்.

நான் கூட முதல்லலாம் வெறும் அரசியல் பதிவு, சினிமா விமர்சனம், 18+ பட விமர்சனம் வர தளமாச்சே ன்னு தவிர்த்திடுவேன். அப்புறம், உங்க "புதிய பதிவர்களுக்கு பயனுள்ள யோசனைகள்" அப்படின்ற தலைப்புல ஒரு பதிவு படிச்சென். அப்புறமும் எப்பவாவது வருவேன், படிப்பேன், கருத்தெல்லாம் சொன்னதில்லை. கருத்திட ஒரு தயக்கம், பெண்ணென்ற காரணத்தினால் உங்க தளத்தில வந்து கருத்திட்டால் தவறாக நினைப்பார்களோ என்ற ஒரு எண்ணம்தான்.

படிக்காதவன் படத்துல ஒரு வசனம் வரும், என்னைப் போல பசங்களை பார்த்தாலெல்லாம் பிடிக்காது, பார்க்க, பார்க்கத்தான் பிடிக்கும்னு. அதுப்போல உங்கள் தளம் படிக்க படிக்க பிடித்துப் போனது. அப்புறம் கட்டாய வருகையும், கருத்தும் வாடிக்கையாகிடுச்சு

என்கிட்ட கூட சிலப்பேர் சிபிசார் தன் பிளாகுல 18+ பட விமர்சனம் போடுறார்,கவர்ச்சி படம் போடுறார் ஜொள் ஜோக் லாம் போடுறார்னு சொல்லி மறைமுகமா என்னை போகதீங்கனு சொன்னாங்க. நான் பதிலுக்கு, அது அவரோட தளம் என்ன போடனுமினு அவருக்கு தெரியும் அவருக்கு அதுக்கு முழு உரிமையும் இருக்கு. எனக்கு அங்கு போய் படிக்க இஷ்டமிருக்கு, உங்களுக்கு இஷ்டமில்லையா நீங்க போகாதீங்கனும், ஒரே வீட்டில்தான் கழிவறையும் இருக்கு, பூஜையறையும் இருக்கு. எதில் நாம் அதிக நேரம் செலவிடுறோமிங்கறதுதான் முக்கியம், அதுப்போல தேவையானதை எடுத்துக்கிட்டு தேவையில்லாததை அங்கேயே விட்டுட்டு வந்துடுவேன்னு சொன்னேன்.
என் நண்பர்களின் சிரிப்பைக் கண்டு என் துயரை நான் மறக்கிறேன், என் நண்பர்களின் துயரைக் கண்டு, என் சிரிப்பையே மறக்கிறேனு சார்லி சாப்ளினின் ஃபேமசான வரிகள் உங்களுக்கு எவ்வளவு கச்சிதமாக பொருந்துது என்பது நிதர்சன உண்மை.

பதிவுலகில் இருப்பவர்களை சந்தோஷப்படுத்தத்தான் நீங்க பல்வேறு பிரிவுகளில் எழுதுறீங்க. ஆனால், அதே பதிவுலகத்தில் இருப்பவர்கள்தான் தாக்குறாங்கனு நினைக்கும்போது கண்டிப்பா உங்க மனசு கஷ்டப்படும், அவர்களை ஒதுக்கி தள்ளிவிட்டு உங்கள் எழுத்துக்களை ரசிக்கும் கூட்டத்திற்காக "உங்கள் பாணியிலியே" தொடர்ந்து எழுதுங்க. வெற்றி நிச்சயம் உங்களைத் தேடி வரும். வாழ்த்துக்கள்.

Philosophy Prabhakaran said...

// ஆபாசமான வர்ணனையோ... //

அடப்பாவி, இதெல்லாம் அடுக்குமா... திரும்பவும் அந்த பத்தொன்பது பதிவுகளையும் படித்துப்பாருங்கள்... அவற்றில் எவ்வளவு கேவலமான சொற்கள்... குறிப்பாக பல கை பட்ட பரிமளா, வயசுக்கு வந்த வளர்மதின்னு பெண்களை கேவலப்படுத்தும் வார்த்தைகள் ஏராளம்...

Philosophy Prabhakaran said...

// நான் எத்தனையோ நல்ல போஸ்ட் போட்டேன்... //

எல்லோருக்கும் அப்படித்தான்... எல்லோரும் அப்படித்தான்... நான் ஏன் எழுதினோம் என்று வருத்தப்படும் என்னுடைய சில கேவலமான பதிவுகள்தான் இன்றுவரை அதிகபட்ச ஹிட்ஸ் வாங்கி இருக்கிறது...

Philosophy Prabhakaran said...

// இப்படி குறை சொல்றவங்களை தனி மெயில்ல நீங்க அந்தமாதிரி படங்களை பார்ப்பீர்களா? ன்னு கேட்டா ஹி ஹி பார்ப்பேன் . ஆனா பப்ளிக்கா வெளிய சொல்லமாட்டேன்... அப்படிங்கிறார்... //

இந்த சொற்றொடரை எழுதுவதற்கு மன்னிக்கவும்... எல்லோருக்கும் எந்திரிக்கும்... அதற்காக பொதுவெளியில் அம்மணமாகவா அலைவது...???

Philosophy Prabhakaran said...

நடிகைகளின் படங்களை பிரசுரிப்பதில் தவறில்லை... (எல்லைமீறிய ஆபாசம் இல்லாமல்) ஆனால் காலேஜ், ஸ்கூல் பெண்களின் புகைப்படங்களை கூகிள் கொடுத்தாலும் பிரசுரிக்க வேண்டாம்...

goma said...

சி.பி.ஜோக் சக்கரவர்த்தி
எல்லா கேள்விக் கணைகளையும் எம் ஜி.ஆர் மாதிரி சுழட்டி சுழட்டி அடித்து நொறுக்கியிருக்கிறீர்களே....
[கடைசி ஃபோடோவில் ,அம்ர்ந்திருக்கும் மூவரில் நடுவராக இருக்கும் என் அண்ணன் [நிஜ அண்ணன்]வடிவேல்முருகன் [வெடிவால் சகாதேவன் ]என்ன பேசினார் ?அதைச் சொல்லவே இல்லையே

Unknown said...

நண்பா...உனக்கு ஞாபகம் இருக்கும்னு நினைக்கிறேன்....இந்தபதிவுலகத்துல நாம ஒரு சின்ன மன சங்கடமான கருத்தின் மூலமா தான் நண்பர்கள் ஆனோம்....

பதிவுகள் அவரவர் விருப்பம்....என்னைபொறுத்தவரை
அடுத்தவரின் தனிமையை தீண்டாதவரை எல்லோரும் நல்லவரே...
உன்னோட தில்லான பதில் எனக்கு நிரம்ப பிடிச்சிருக்கு...நீ உன் பணியை தொடர்...

"போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே..."
நன்றி!

உலக சினிமா ரசிகன் said...

நண்பரே...யாருக்காகவும் உங்கள் ஸ்டைலை மாற்றாதீர்கள்.
அவன் இவன் படத்துக்கு காட்டமாக கமெண்ட் போட்டதுக்கு பதிலே அளிக்காமல் கடந்து போன நாகரீகம் என்னை நெகிழ வைத்தது.

R. Gopi said...

சுவாரஸ்யம்

Paleo God said...

செந்தில் உண்மையான விமர்சனம் நம்மை மேன்மையுறச் செய்வதாக இருக்கும். தவறு செய்தால் அதை ஏற்றுக்கொள்வது உயர்வுக்கு வழி. புறம் சொல்பவர்களைப் பற்றி கவலைப் படவேண்டியதில்லை. உங்களுக்கென்று ஒரு நண்பர் வட்டம் இருக்கும்போது அவர்களுக்காக உங்களுக்குத் தெரியவரும் நல்ல விஷயங்களைப் பகிர்வது உங்கள் பொறுப்பு.

வாழ்த்துகள். :)

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
Mohamed Faaique said...

இயற்கை காட்சிகளா போட போரீங்களா??????? இதை மறுபரிசீலனை செய்ய மாடீங்களா?????

Anonymous said...

திரும்ப தவளை தன் வாயால் கெட்டது

Anonymous said...

எப்பவும் போல எழுதுங்க...அதை விட்டுட்டு ஒவ்வொருத்தனுக்கும் பயந்தா பொழப்பு கிழிஞ்சிரும்