நான் எழுதும் கன்னிப்பேய் பட விமர்சனம். அதுக்காக அந்தப்பேய் கன்னி என உனக்கு எப்படித்தெரியும்னு கேட்டுடாதீங்க.. முதன் முதலா ஒரு பேய்ப்படத்துக்கு விமர்சனம் எழுதறேன்.கொஞ்சம் பயமாத்தான் இருக்கு. படிக்கறவங்கள்ல பயப்படும் மனோ பாவம் உள்ளவர்கள் ,ஜேசுதாஸ் பாவம் இல்லாதவர்கள் எல்லாம் எதுக்கும் (அவங்கவங்க)சம்சாரத்தோட கையை பிடிச்சுக்கிட்டே படிங்க.. சம்சாரமே பேய் மாதிரி தான் என் கண்ணுக்குத்தெரியறா என சொல்பவர்கள் தனியாவே படிங்க.. ஹி ஹி
ஃபாரீன்ல இருந்து ஒரு பங்களாவை சேல்ஸ் பண்ணறது சம்மந்தமா ஒரு லேண்ட் புரோக்கர் இந்தியா வர்றார். அந்த பங்களாவுல பேய் இருக்குன்னு கண்டு பிடிக்கிறார். ( அது ஏன் பேய்ங்க எல்லாம் பங்களாவுலயே குடி இருக்கு?குடிசைப்பேய் ஒண்ணு கூட நான் பார்த்ததே இல்லை)வழக்கமா எல்லா பேய்ப்படங்கள்லயும் வர்ற ,மாதிரி அலறல் சத்தம், டபார்னு ஒரு உருவம் ஓடறது, தனி தலை மட்டும் குப்பைக்கூடைல கிடக்கறதுன்னு ஓப்பனிங்க் பில்டப் முடிஞ்சதும் இயக்குநர் கதைக்கு வர்றார்.
அந்த பெண் பேய் தன்னோட ஃபிளாஸ்பேக்கை டைரி மூலமா சொல்லுது.. ( வழக்கமா ஆண் பேய்க்கதைன்னா எவனும் சீண்ட மாட்டான்னு எல்லாருக்கும் ஒரு நம்பிக்கை)
18 வயசு ஃபிகரு..70 மார்க் ( டென்த்லயா? பிளஸ்டூலயா?ன்னு கேட்கற அப்பாவிகளெல்லாம் ஒன் ஸ்டெப் பேக் மேன்).. அம்மா அப்பா ஊர்ல இல்ல.. தனியா இருக்கு.. ( அட்ரஸ் பிளீஸ்..னு யாரும் எஸ் எம் எஸ் பண்ணாதீங்க.. இது கதை..)பியானோ கத்துக்குடுக்கற புரொஃபசர் இப்போ எண்ட்ரி ஆகறார். ( தியேட்டர்ல ஒரு பையனாவது கண்ணை இமைக்கனுமே?)ஆண்டாண்டு காலமா வில்லன் ஹீரோயினை என்ன பண்ணுவானோ அதே மேட்டரை இவனும் பண்ண ட்ரை பண்றான். ( எதுக்கு நடந்ததை டைரக்ட் ஸ்பீச்ல சொல்லாம இண்டைரக்ட் ஸ்பீச்?ல சொல்றென்?ஏன்னா இது ஒரு கண்ணியமான பிளாக்.. ஹி ஹி )
பொதுவாவே ஹீரோ கூட பிரமாதமா ஃபைட் போடற வில்லன்க எல்லாம் ஹீரோயின் கிட்டே தோத்துடுவாங்க.. ( நற நற..)ஹீரோயின் வில்லன் தலைல மடார்னு ஒரு லேம்ப் போஸ்ட்டால ஒரு போடு போடறா.வில்லன் அவுட்.. ( அட போங்கப்பா.. சுவராஸ்யமும் அவுட்..)
வில்லன் ஆவி ஆகிறான்.( ஒரு பாவி ஆவி ஆகிட்டான் அடடே,... ஆச்ச்சரியக்குறி )இப்போ வில்லன் பேயா மாறியும் திருந்தலை... ( அதானே நமக்கு வேணும்..?)
வில்லன் ஹீரோயினை ரேப்பிடறான்.. ( என்ன கண்றாவி தமிங்கிலீஷ் வார்த்தை இது..?)தினத்தந்தி ரசிகர்கள் மட்டும் ரேப்புக்கு முன்னால கதறக்கதற என்ற வார்த்தையை சேர்த்துக்கவும்.இப்போ தான் டைரக்டர் ஒரு காமெடி பண்றார்.. இந்த புனித வேலையை வில்லன் 80 வருஷமா கண்ட்டினியூ பண்றாராம்.நான் தெரியாம தான் கேட்கறேன்.. போர் அடிக்காது? ஒரே பங்களாவுல ஒரே ஃபிகரை மடக்கி வெச்சு எந்த மடையனாவது 80 வருஷம் ரேப் பண்ணிட்டே இருப்பானா?
இதுல தான் இயக்குநர் தன் புத்திசாலித்தனத்தை காட்றார்.பேய்க்கு வயசே ஆகறது இல்லையாம். சேம் ஏஜ்.. ( லாஜிக்கு..?)
ஃபிளாஸ்பேக் முடிஞ்சதும் ஹீரோ கடந்த காலத்துக்குப்போய் அந்த கொலையை தடுக்க ட்ரை பண்றார்.. ( காதுல பூ)ஆனா முடியலை.. அவர் கண் முன்னால அதே சம்பவங்கள் மீண்டும் நடக்குது..
அப்போ தான் ஒரு மத போதகர் ஹீரோயினிடம் நீ இரண்டற கலந்து விட்டால் பேய் கிட்டே வராது.. ( இரண்டற கலக்கனும்னா 2 டைம் கலக்கனுமா? #டவுட்டு )
சரி.. இப்பவாவது சீன் உண்டுன்னு ஆர்வமா பார்க்கறவங்க எல்லாம் டூயட் சீன் பார்த்து கடுப்பாகிடறாங்க..
அப்புறம் பாலமித்ரா, அம்புலிமாமா கதைல வர்ற மாதிரி ஹீரோ ஹீரோயினை எப்படி காப்பாத்தறார்ங்கறது தான் மிச்ச சொச்ச திரைக்கதை..
இயக்குநர் சபாஷ் பெறும் இடங்கள்
1. ஹீரோ முதன் முதலா பங்களாவுல எண்ட்ரி ஆனதும் திடீர்னு ஒரு உள்ளங்கை மட்டும் கண்ணாடிக்கதவுல ரேகை பதிச்சு ஆ என அலறும் சத்தம் எடுக்கப்பட்ட விதம் கிளாசிக்.. தியேட்டர்ல அலறாதவங்க கம்மி..
2. தட்டு முட்டு சாமான்கள் வைக்கப்பட்ட அறைக்குள் ஒரு பெண்ணின் வெட்டப்பட்ட தலையை மட்டும் காட்டும் இடத்தில் எழும் பகீர் உணர்வு.. ஹார்ட் பேஷண்ட்ஸ் இந்தப்படம் பார்ப்பதை தவிர்க்கவும்.
3. திடீர் என தூக்கில் தொங்கியபடி ஊசலாடும் பெண்ணின் பிணம் ( ஒளிப்பதிவு செம)
--
வசனங்களில் பளிச் வசனங்கள்
1. துஷ்ட தேவதையோட அல்லது ஆவியோட பெயரை சொன்னா அதனோட சக்தி அதிகம் ஆகிடும்.. ( இனிமே சம்சாரம் கூட சண்டைன்னா அவ பேரை சொல்லக்கூடாது #நீதி)
2. கண்ணா.. லட்டை மிஸ் பண்ணீட்டே.
3, வம்பு பண்ணனும்னு நினைச்சிருந்தா அப்பவே வம்பு பண்ணி இருப்பனே? என்னை நம்பு.. ( நம்ப முடியாது.. நீ லேட் பிக்கப்போ என்னவோ?)
4. நான் உனக்கும், உன் தலை எழுத்துக்கும் நடுவுல இருக்கேன்.. (நீ என்ன பிரம்மாவோட செகரட்ரியா?#டவுட்டு)
5. பேய்க்கு எழுதப்படிக்கத்தெரியாது... ( ஏன் எல்லா பேய்களும் அன் எஜூக்கேட்டட்டா இருக்க்கு? #டவுட்டு)
6. பொதுவா பேய்ங்களுக்கு விடிகாலைல 3 மணிக்கு பலம் அதிகம் ஆகும், மதியம் 3 மணிக்கு பலவீனம் ஆகிடும்.. ( அப்போ மிட் நைட்ல 12 மணிக்கு பயப்பட வேண்டியது இல்லையா?)
இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்
1. மிக சிறப்பாக திரைக்கதை அமைத்த இயக்குநர் க்ளைமாக்ஸ் ஆவி ஒழிப்பு சீனில் சொதப்பியது... படமே முடிஞ்சாச்சு என நிம்மதிப்பெரு மூச்சு விடும்போது 2வது க்ளைமாக்ஸ் வைத்து போர் அடித்தது..
2. தனிமைல இருக்கற பொண்ணு மாஸ்டர் பியானோ கத்துக்க வர்றார்னு தெரிஞ்சும் அவ்வளவு லோ கட் ஜாக்கெட் போடுவாளா? ( துப்பட்டா கூட போடலை)
3.வில்லன் ஹீரோயின் பின்னால நின்னு 10 நிமிஷம் உரசிட்டு கூந்தலை மோப்பம் பிடிச்சுட்டு நிக்கற வரை ஹீரோயினுக்கு எதுவுமே தோணலையா?( இதை ஏன் கேட்கறேன்னா பெண்களுக்கு முன் ஜாக்கிரதை உணர்வும், விழிப்புணர்வும் ஜாஸ்தி.. டக்குன்னு கண்டு பிடிச்சுடுவாங்களே..?)
4. மத போதகர் புனித நீர் ஜக்கு எடுத்துக்குடுத்து பேய் வந்தா யூஸ் பண்ணிக்குங்க.. ஆனா இது டெம்ப்ரவரி தான்.. பர்மணண்ட் கிடையாது அப்படிங்கறார்.. கடவுளின் பவர்ல கூட அப்படி டெம்ப்ரவரி, பர்மணண்ட் என 2 வித பவர் இருக்குமா?
5. ஹீரோயின் கழுத்துல இருக்கற செயினை கிணத்துல போட்டுட்டா பேய் செத்துடும். செயினை தூக்கி கிணத்துல போட்டாச்சு.. ஆனா அது தண்ணீல விழாம ஒரு கல்லுல இருக்கு. இது ஹீரோ , வில்லன் 2 பேருக்கும் தெரியும்.. அப்போ வில்லன் பேய் முத வேலையா அந்த செயினை பறிக்கத்தானே முயற்சி செய்யும்? ஆனா படத்துல 80 வருஷமா பல தடவை ரேப் பண்ணூன ஹீரோயினை மறுபடி 2756 வது தடவையா ரேப் பண்ண ட்ரை பண்ணிட்டிருக்கே? அது ஏன்?
6. ஹீரோ கடந்த காலத்துல போய் வில்லனை அழிச்சிடறார் ஓக்கே.. ஆனா ஹீரோயின் வேற ஒருவரை கல்யாணம் பண்ணிடறதா காட்றாங்களே அது எப்படி? டைம் மெஷினோட லாஜிக் படி இறந்த காலத்துல போனா எந்த சேஞ்சும் பண்ணிடக்கூடாது என்பது தானே?
மொத்தத்துல படத்துல லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் இது ரசிக்க வேண்டிய பேய்ப்படம் தான். ஆனால் பெண்கள், கர்ப்பிணிகள், பயந்த சுபாவம் உள்ளவர்கள், சிறுவர் , சிறுமியர்கள்,மாணவர்கள் இந்தப்படத்தினை பார்க்க வேண்டாம் என அறிவுறுத்தப்ப்படுகிறார்கள்.
சில ஊர்களில் இது ஆத்மா 3டி என தமிழில் டப் செய்யப்பட்டுள்ளது .
ஈரோட்டில் ஸ்ரீலட்சுமி தியேட்டரில் போட்டிருக்காங்க..
டிஸ்கி 1 - கீரை வகைகளும் சமையல் செய்யும் முறைகளும்
டிஸ்கி 2 -சிட்டுக்குருவி லேகியம் ஏன் கிடைப்பதில்லை?
டிஸ்கி 3 - அழகர் சாமியின் குதிரை - அழகிய கிராமம்+பழகிய காதல் - சினிமா விமர்சனம்

66 comments:
மொத வெட்டு...
அப்ப எஸ்.பி.பி பாவம் உள்ளவர்கள் படிக்கலாமா...
ஜோக் சொன்னா அனுபவிக்கனும் .. ஆராயக்கூடாது.. ஹி ஹி
வரவர அடைப்புக்குறி கமெண்ட்ஸ் அதிகமாக தென்படுகிறதே... திகட்டுகிறது...
காப்பி பேஸ்ட் செய்து பின்னூட்டம் போடும் வசதி இல்லாதது வருத்தம் அளிக்கிறது....
>>Philosophy Prabhakaran said...
வரவர அடைப்புக்குறி கமெண்ட்ஸ் அதிகமாக தென்படுகிறதே... திகட்டுகிறது..
திகட்டுது என்பதற்காக காதலியிடம் முத்தம் வாங்காமல் இருக்கிறோமா?
>>Philosophy Prabhakaran said...
காப்பி பேஸ்ட் செய்து பின்னூட்டம் போடும் வசதி இல்லாதது வருத்தம் அளிக்கிறது....
எனக்கும் அதில் வருத்தம் தான். ஆனால் காலத்தின் கட்டாயம்.. சாரி
அப்புறம் சீன் இருந்திச்சா இல்லையா?
>>ஜீ... said...
அப்புறம் சீன் இருந்திச்சா இல்லையா?
அண்ணே.. நீங்க எதிர்பார்த்த அளவு இல்ல.. நான் எதிர்பார்த்த அளவு இருந்துச்சு# நீதி கம்மியா எதிர்பார்
எல்.கே.ஜி பாப்பா கூட இப்பலாம் பயப்படாம பேய்ப்படம் பார்க்குதுங்க. ஒப்பனிங் சீன்ல கண்ணாடிக் கதவுல , கை நிழல் தெரிஞ்சு, ஆ னு அலறும் போது, அலறாதவங்க கம்மினு சொல்றீங்களே. இது உங்களுக்கே கொஞ்சம் ஓவராத் தெரியல
ஹி ஹி அப்போ நான் தான் ஓவரா பயந்துட்டனோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
கடைசி வரைக்கும் சொல்லவே இல்லையே... இது பேய் படமா, சீன் படமா...?
இது நான் எழுதும் கன்னிப் பேய்பட விமர்சனம்
ஃஃஃஃ
அப்போ அடுத்த பேய்ப்பட விமர்சனத்தை திருமதிப் பேய்படவிமர்சனம் அல்லது முதிர்கன்னி பேய்ப்பட விமர்சனம் அல்லது பேரிளம்பெண் பேய்ப்பட விமர்சனம் னு போடுவீங்களா? #டவுட்டு#
(இதுக்கு பதில் சொல்லலை. அந்த வில்லன் பேயை உங்க மேல ஏவி விட்டுடுவேன் .)
ஒரே பேய்.. ஒரே பிகர 80 வருசமா... ச்சீய்.. கருமோம்..கருமோம்... இந்த படுபயங்கரமான பிட்டு படத்திற்கெல்லாம் ஏன்யா லாஜிக் பாக்குறிங்க?
>>சரியில்ல....... said...
கடைசி வரைக்கும் சொல்லவே இல்லையே... இது பேய் படமா, சீன் படமா...?
hi hi ஹி ஹி 3 சீன்கள் உள்ள பேய்ப்படம்
சரியில்ல....... said...
ஒரே பேய்.. ஒரே பிகர 80 வருசமா... ச்சீய்.. கருமோம்..கருமோம்... இந்த படுபயங்கரமான பிட்டு படத்திற்கெல்லாம் ஏன்யா லாஜிக் பாக்குறிங்க?
லாஜிக் பார்ப்பது ஒரு விமர்சகரின் பிறப்புரிமை.. அதை எந்த நாளும் காப்போம் ஹி ஹி
ராஜி said...
இது நான் எழுதும் கன்னிப் பேய்பட விமர்சனம்
ஃஃஃஃ
அப்போ அடுத்த பேய்ப்பட விமர்சனத்தை திருமதிப் பேய்படவிமர்சனம் அல்லது முதிர்கன்னி பேய்ப்பட விமர்சனம் அல்லது பேரிளம்பெண் பேய்ப்பட விமர்சனம் னு போடுவீங்களா? #டவுட்டு#
(இதுக்கு பதில் சொல்லலை. அந்த வில்லன் பேயை உங்க மேல ஏவி விட்டுடுவேன் .)
அய்யய்யோ.. அப்படியாவது ஏதாவது லேடி பேயா பார்த்து ஏவுங்க ஹி ஹி
ஹீரோயினுக்கு 70 மார்க் சரி. அப்புறம் ஏன் பாதியிலேயே நிறுத்திட்டிங்க?
ம்ம்ம்... கண்டினியூ....
>>சரியில்ல....... said...
ஹீரோயினுக்கு 70 மார்க் சரி. அப்புறம் ஏன் பாதியிலேயே நிறுத்திட்டிங்க?
ம்ம்ம்... கண்டினியூ....
இதுக்கு மேல கண்டினியூவா? கண்டிப்பாங்களே?
சி.பி.செந்தில்குமார் said...
>>சரியில்ல....... said...
ஹீரோயினுக்கு 70 மார்க் சரி. அப்புறம் ஏன் பாதியிலேயே நிறுத்திட்டிங்க?
ம்ம்ம்... கண்டினியூ....
இதுக்கு மேல கண்டினியூவா? கண்டிப்பாங்களே?//
நான் எதிர்பார்த்ததை விட மிக அதிகமாக செந்தில் திருந்தியதால்... நான் கோவமா கெளம்புறேன்..
என்ன கொடுமை சார் இது? திருந்துனாலும் கோவிச்சுக்கறாங்க.. திருந்தலைன்னாலும் கோவிச்சுக்கறாங்க
>>>ஜீ... said...
அப்புறம் சீன் இருந்திச்சா இல்லையா?
அண்ணே.. நீங்க எதிர்பார்த்த அளவு இல்ல.. நான் எதிர்பார்த்த அளவு இருந்துச்சு# நீதி கம்மியா எதிர்பார்<<<
அப்போ நீங்க ஏமாறலை? :-)
@ ji
அண்ணே.. நாங்க எந்த காலத்துல ஏமாந்தோம்? படத்துல சீனே இல்லைன்னாக்கூட இடைவெளை அப்போ போடற வேற பட ட்ரெயிலர்லயாவது சீன் பார்த்து திருப்திப்பட்டுக்குவோம் ஹி ஹி
சிபி அய்யா வணக்கங்க!
யோவ் பிட்டுப்படம்னு போட பம்மிக்கிட்டு பேய்ப்படம் அது இதுன்னு பயங்காட்டிக்கிட்டு இருகீங்க?
விக்கி உலகம் said...
சிபி அய்யா வணக்கங்க!
சும்மா நடிக்காதே.. இப்பத்தானே சேட்டிங்க்ல பேசிக்கிட்டோம்...?எதுக்கு ஃபார்மாலிட்டி..? ஃபிரண்ட்ஸ்க்குள்ள
வில்லன் 80 வருசமா ஹீரோயின ரேப் பண்ணிட்டு இருக்கான்னா, அவளை வெச்சிருக்கான்னு அர்த்தம்... !
>>பன்னிக்குட்டி ராம்சாமி said...
யோவ் பிட்டுப்படம்னு போட பம்மிக்கிட்டு பேய்ப்படம் அது இதுன்னு பயங்காட்டிக்கிட்டு இருகீங்க?
ஹா ஹா பயமா? எனக்கா? ஏஹே ஹே ஹே .. ( படம் பார்த்து கொஞ்சம் பயந்தது உண்மை தான் ஹி ஹி பப்ளிக் பப்ளிக்)
அது 18 வயசு பிகரா? எப்பூடி?
>>பன்னிக்குட்டி ராம்சாமி said...
வில்லன் 80 வருசமா ஹீரோயின ரேப் பண்ணிட்டு இருக்கான்னா, அவளை வெச்சிருக்கான்னு அர்த்தம்... !
வேற போக்கிடம் இல்லாத வில்லன் போல பாவம்.. உங்க அளவுக்கு வசதி வாய்ப்புகள் இல்ல போல..
>>பன்னிக்குட்டி ராம்சாமி said...
அது 18 வயசு பிகரா? எப்பூடி?
அவங்கன்னு சொல்லுங்க.. ஹி ஹி நான் எப்படி வேணாலும் சொல்வேன்.. ஆனா நீங்க சொசயிட்டில கவுரவமான ஆள்./. அப்படி சொல்லலாமா? ஹி ஹி
//////சி.பி.செந்தில்குமார் said...
>>பன்னிக்குட்டி ராம்சாமி said...
வில்லன் 80 வருசமா ஹீரோயின ரேப் பண்ணிட்டு இருக்கான்னா, அவளை வெச்சிருக்கான்னு அர்த்தம்... !
வேற போக்கிடம் இல்லாத வில்லன் போல பாவம்.. உங்க அளவுக்கு வசதி வாய்ப்புகள் இல்ல போல../////
எப்படி 37 பாகமும், 76 பதிவும் போடுற மாதிரியா?
"சி.பி.செந்தில்குமார் said...
விக்கி உலகம் said...
சிபி அய்யா வணக்கங்க!
சும்மா நடிக்காதே.. இப்பத்தானே சேட்டிங்க்ல பேசிக்கிட்டோம்...?எதுக்கு ஃபார்மாலிட்டி..? ஃபிரண்ட்ஸ்க்குள்ள"
>>>>>>>>>
ஒரு விளம்பர உத்தி அதான் ஹிஹி!
//////சி.பி.செந்தில்குமார் said...
>>பன்னிக்குட்டி ராம்சாமி said...
அது 18 வயசு பிகரா? எப்பூடி?
அவங்கன்னு சொல்லுங்க.. ஹி ஹி நான் எப்படி வேணாலும் சொல்வேன்.. ஆனா நீங்க சொசயிட்டில கவுரவமான ஆள்./. அப்படி சொல்லலாமா? ஹி ஹி
////////
எந்த சொசைட்டி? பால் வாங்கற சொசைட்டியா?
>>பன்னிக்குட்டி ராம்சாமி said...
எந்த சொசைட்டி? பால் வாங்கற சொசைட்டியா?
அமலா பால் சொசயிட்டி ஹி ஹி
>>விக்கி உலகம் said...
ஒரு விளம்பர உத்தி அதான் ஹிஹி!
மாட்னான் தக்காளி.. விளம்பரமே எனக்கு பிடிக்காதுன்னு அப்போ சொன்னது சும்மா தமாஷா?
சி.பி.செந்தில்குமார் said...
>>விக்கி உலகம் said...
ஒரு விளம்பர உத்தி அதான் ஹிஹி!
மாட்னான் தக்காளி.. விளம்பரமே எனக்கு பிடிக்காதுன்னு அப்போ சொன்னது சும்மா தமாஷா?
>>>>>>>
விளம்பரம் எனக்கு இல்ல உனக்கு தான் ஹிஹி!
.....
இப்படி ஒரு படம் வந்து அத பாக்க இவ்ளோ கூட்டம் வருதுன்னா என்ன அர்த்தம்...............!
பாவம் இல்லாதவர்கள் எல்லாம் எதுக்கும் (அவங்கவங்க)சம்சாரத்தோட கையை பிடிச்சுக்கிட்டே படிங்க.. ///
எக்கியூஸ் மீ! ஐ ஹாவ் நோ சம்சாரம்! அப்டீனா நான் யாரோட கையப் புடிக்கிறது?
18 வயசு ஃபிகரு..70 மார்க் ( டென்த்லயா? பிளஸ்டூலயா?ன்னு கேட்கற அப்பாவிகளெல்லாம் ஒன் ஸ்டெப் பேக் மேன்).//
ஒன் ஸ்டேப் பேக் குனா, நைன்த் லயா? ( ஹி ஹி ஹி ஹி ... இந்த அப்பாவியை என்ன பண்ணுவீங்க? )
>>ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
பாவம் இல்லாதவர்கள் எல்லாம் எதுக்கும் (அவங்கவங்க)சம்சாரத்தோட கையை பிடிச்சுக்கிட்டே படிங்க.. ///
எக்கியூஸ் மீ! ஐ ஹாவ் நோ சம்சாரம்! அப்டீனா நான் யாரோட கையப் புடிக்கிறது?
வழக்கம் போல உங்க கடைல ஒர்க் பண்ணுதே அந்த ஃபிகர் கையை பிடிச்சுக்குங்க..
>>பன்னிக்குட்டி ராம்சாமி said...
அது 18 வயசு பிகரா? எப்பூடி?
அவங்கன்னு சொல்லுங்க.. ஹி ஹி நான் எப்படி வேணாலும் சொல்வேன்.. ஆனா நீங்க சொசயிட்டில கவுரவமான ஆள்./. அப்படி சொல்லலாமா? ஹி ஹி ///
யோவ் சி பி ஏதாச்சும் நம்பும் படியா சொல்லுங்க!
>>ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
18 வயசு ஃபிகரு..70 மார்க் ( டென்த்லயா? பிளஸ்டூலயா?ன்னு கேட்கற அப்பாவிகளெல்லாம் ஒன் ஸ்டெப் பேக் மேன்).//
ஒன் ஸ்டேப் பேக் குனா, நைன்த் லயா? ( ஹி ஹி ஹி ஹி ... இந்த அப்பாவியை என்ன பண்ணுவீங்க? )
அபாரமான கமெண்ட்.. நண்பா.. நான் இயற்கையை வேண்டுவதெல்லாம் ஜீவன் போல டைமிங்க் சென்சை கொடு என்பதுதான். அட்லீஸ்ட் சாதா சென்ஸ் குடுத்தாக்கூட போதும்ம் ஹி ஹி
அம்மா அப்பா ஊர்ல இல்ல.. தனியா இருக்கு.. ( அட்ரஸ் பிளீஸ்..னு யாரும் எஸ் எம் எஸ் பண்ணாதீங்க.. இது கதை..)//
அப்டீன்னா நிஜமா ஊரில தனியா இருக்குற பொண்ணுங்களோட அட்ரெஸ் வச்சிருக்கிறீங்களா? டவுட்!!
>>ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
அம்மா அப்பா ஊர்ல இல்ல.. தனியா இருக்கு.. ( அட்ரஸ் பிளீஸ்..னு யாரும் எஸ் எம் எஸ் பண்ணாதீங்க.. இது கதை..)//
அப்டீன்னா நிஜமா ஊரில தனியா இருக்குற பொண்ணுங்களோட அட்ரெஸ் வச்சிருக்கிறீங்களா? டவுட்!!
ஐடியா நல்லாருக்கு. ஆனா உதை வாங்க உடம்புல தெம்பில்லை ஹி ஹி
>>ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
18 வயசு ஃபிகரு..70 மார்க் ( டென்த்லயா? பிளஸ்டூலயா?ன்னு கேட்கற அப்பாவிகளெல்லாம் ஒன் ஸ்டெப் பேக் மேன்).//
ஒன் ஸ்டேப் பேக் குனா, நைன்த் லயா? ( ஹி ஹி ஹி ஹி ... இந்த அப்பாவியை என்ன பண்ணுவீங்க? )
அபாரமான கமெண்ட்.. நண்பா.. நான் இயற்கையை வேண்டுவதெல்லாம் ஜீவன் போல டைமிங்க் சென்சை கொடு என்பதுதான். அட்லீஸ்ட் சாதா சென்ஸ் குடுத்தாக்கூட போதும்ம் ஹி ஹி //
ஹா..... ஹா....... உங்ககளுக்கு சாதா சென்ஸ்! எனக்கு சதா சென்ஸ் ( அந்நியன் பிகர் ) ஓகே வா?
விக்கி உலகம் said...
விளம்பரம் எனக்கு இல்ல உனக்கு தான் ஹிஹி!
.....
இப்படி ஒரு படம் வந்து அத பாக்க இவ்ளோ கூட்டம் வருதுன்னா என்ன அர்த்தம்...............!
ஊர்ல யோக்கியன் அதிகம் இல்லைன்னு அர்த்தம் ஹி ஹி
>>ஹா..... ஹா....... உங்ககளுக்கு சாதா சென்ஸ்! எனக்கு சதா சென்ஸ் ( அந்நியன் பிகர் ) ஓகே வா?
ஆஹா ஜீவன் சதா அந்த அந்நியன் சதா நினைப்புலயே இருக்காரே.. அது ஓல்டு ஆச்சே.. சரி ஓல்டு ஈஸ் கோல்டு அப்படின்னு நினைச்ச்ட்டாரோ என்னவோ?
பேய் படமா? எங்க அந்த பேய்? இந்த பதிவுல ஒரு பேய் உருவம் தெரியுதே! கவனிச்சிங்களா?
>>ஹா..... ஹா....... உங்ககளுக்கு சாதா சென்ஸ்! எனக்கு சதா சென்ஸ் ( அந்நியன் பிகர் ) ஓகே வா?
ஆஹா ஜீவன் சதா அந்த அந்நியன் சதா நினைப்புலயே இருக்காரே.. அது ஓல்டு ஆச்சே.. சரி ஓல்டு ஈஸ் கோல்டு அப்படின்னு நினைச்ச்ட்டாரோ என்னவோ?///
ஐயோ சிபி இப்படியா ஓபனா சொல்றது? பாருங்க எப்புடி அழுவுராங்கன்னு ஹன்சிகா!
50 th ok bye
ஆஹா வந்துட்டோம்ல!
3D தொழில் நுட்பம் பற்றி எதுவும் சொல்லவில்லையே.... இந்த படத்தின் 3D-க்கு பின்னால் மிகப்பெரிய உழைப்பு உள்ளது. கடந்த இரண்டு மாதமாக இந்த படத்திற்காக உறக்கமின்றி உழைத்தவர்களில் நானும் ஒருவன்...
நானும் வந்டுட்டேனுல்ல..
சி.பி.செந்தில்குமார் said...
>>சரியில்ல....... said...
கடைசி வரைக்கும் சொல்லவே இல்லையே... இது பேய் படமா, சீன் படமா...?
hi hi ஹி ஹி 3 சீன்கள் உள்ள பேய்ப்படம்/// சீன். சீன் ன்னு சொல்றீங்களே அப்படீன்னா என்ன?
இதுபோன்ற படங்களை -யில் பார்ப்பது ஒரு வித்தியாசமான அனுபவம்னே
சிபி அண்ணே வணக்கம்னே.....
பேய் படத்தை பார்த்துட்டு டவுசர் கிழியாம வந்ததே பெரிய விஷயம்...
நீங்க எழுதின விதம் ரசிக்கும் படியாக உள்ளது
some people have mentioned they could not able to copy comments or contents....2 ways you can do
1)Copy the contents while the page is partially loaded that is while loading.
2)simple....press Ctrl+A and Ctrl+C and you can able to paste it microsoft word or notepad...
அன்பு said...
3D தொழில் நுட்பம் பற்றி எதுவும் சொல்லவில்லையே.... இந்த படத்தின் 3D-க்கு பின்னால் மிகப்பெரிய உழைப்பு உள்ளது. கடந்த இரண்டு மாதமாக இந்த படத்திற்காக உறக்கமின்றி உழைத்தவர்களில் நானும் ஒருவன்...
வணக்கம் சார்.. எங்க ஊர்ல 3டி இல்லை. சாதா எஃப்ஃபக்ட்ல தான் பார்த்தேன்,சாரி சார்..
Blogger !* வேடந்தாங்கல் - கருன் *
சீன். சீன் ன்னு சொல்றீங்களே அப்படீன்னா என்ன?
வித்தார கள்ளீ விறகெடுக்கப்போனாளாம், கத்தாழ முள்ளு கொத்தோட ஏறுச்சாம்..
18 ப்ளஸ்ஸா..தெரியாம வந்துட்டேனே..
ஐயய்யோ..... இதற்கு ஏன் சாரி கேட்கிறீர்கள்...,
3D குறித்த உங்களின் விமர்சனத்தைதான் எதிர் பார்த்தேன். உங்கள் ஊரில் 3D வசதி இல்லாததற்காக வருந்துகிறேன். இந்த படத்தின் 3D அனுபவம் இந்திய சினிமாவிற்கு ( இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ) புதியது. முறையான விளம்பரமின்மையால் மக்களிடம் சென்றடையவில்லை... மற்றபடி கதை... ஹி ஹி ஹி.....
முதலில் பாராட்டு அப்புறம் தலையில் ஒரு குட்டு ' அருமை தங்கள் வலைபூ மிகவும் அருமையாக உள்ளது .இது என்ன 18+
முதலில் பாராட்டு அப்புறம் தலையில் ஒரு குட்டு ' அருமை தங்கள் வலைபூ மிகவும் அருமையாக உள்ளது .இது என்ன 18+
Post a Comment