தலைமைச் செயலகத்தை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்திலிருந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட பொதுநல வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த மனுவில், ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டடத்தில் இருந்து தலைமைச் செயலகத்தை மீண்டும் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
அதற்கான பணிகள் நடந்து வருவது பற்றிய புகைப்படங்களும் பத்திரிகைகளில் வெளியாகி உள்ளன.
அதற்கான பணிகள் நடந்து வருவது பற்றிய புகைப்படங்களும் பத்திரிகைகளில் வெளியாகி உள்ளன.
அரசினர் தோட்டத்தில் ரூ.1000 கோடியில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து தலைமைச் செயலகத்தை மீண்டும் கோட்டைக்கு மாற்றுவது சட்ட விரோதம்.
அதுமட்டுமல்ல. மீண்டும் கோட்டைக்கு மாற்றுவதால் மக்களின் வரிப்பணம் வீணாகும் நிலை ஏற்படும். கோட்டைக்கு மீண்டும் தலைமைச் செயலகத்தை மாற்றுவதற்கு புதிய அரசு சரியான காரணங்களை தெரிவிக்க வேண்டும்.
தனிப்பட்ட நபர்களின் விருப்பு, வெறுப்புகளுக்காக மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதை அனுமதிக்கக் கூடாது. எனவே தலைமைச் செயலகத்தை அரசினர் தோட்டத்திலிருந்து கோட்டைக்கு மாற்றுவதற்கு தடை விதித்து, முதல்வர் ஜெயலலிதா, தலைமைச் செயலர், பொதுப் பணித் துறைச் செயலர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் தனது மனுவில் கோரியிருந்தார்.
இம்மனுவை இன்று விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் ராஜேஷ்வரன், வாசுகி ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச், அடுத்த மாதம் 15-ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி தமிழக அரசின் தலைமை செயலாளர், பொதுப்பணித்துறைச் செயலாளர், அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
மேலும், இந்த இட மாற்றத்துக்கு உத்தரவு பிறப்பித்தது யார்? ஆளுனரா? அல்லது வேறு யார் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
முன்னதாக, தலைமைச் செயலக இடமாற்ற பணிக்கு தடை விதிக்கும்படி வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி விடுத்த கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.
கலைஞர் இட்ட சட்டங்கள் , அவர் அமைத்த திட்டங்கள் எதுவும் உபயோகிக்கக்கூடாது என்பது ஜெவின் நினைப்பு. ஆனால் பொது மக்களின் வரிப்பணம் வீணாகும்போது அவர் தன் பிடிவாதத்தை தளர்த்தத்தான் வேண்டும்.
அதே போல் 108 ஆம்புலன்ஸ் திட்டம் கைவிடப்படும் என தெரிகிறது. வேண்டுமானால் பெயரை மாற்றிக்கொள்ளலாம். ஆனால் மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டம் அது . தொடர வேண்டும் என்பதே நடு நிலையாளர்கள் அவா.. செய்வாரா? ஜெ?
32 comments:
me the firstu
வடை
நீதிக்கு தலை வணங்குவோம்!
********************
இதையும் படியுங்களேன்.
திருந்தவே மாட்டார்களா?!
நன்றி.
அடடா வடை மிஸ் ஆகிருச்சே....
அடேய் உன் ஓட்டையாவது உனக்கு போடுறா வெண்ணை...
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சிபி!
பாராளுமன்றக் கட்டிடம் கூட வட்டமாகத்தான் இருக்குது.
ஆனால் அதை யாரும் எண்ணைச்சட்டியென்றோ,தண்ணித்தொட்டியென்றோ சொல்வதில்லை!ஏன்?
ஜெயலலிதா மாறுவது கஷ்ட்டமாசசே...!!!!!???
>>MANO நாஞ்சில் மனோ said...
ஜெயலலிதா மாறுவது கஷ்ட்டமாசசே...!!!!!???
மக்கள் மாத்திடுவாங்க..
ம்ம்ம்... அப்போ மம்மி (அப்பிடியே) ரிட்டர்ன்ஸ்? :-)
// சி.பி.செந்தில்குமார் said...
>>MANO நாஞ்சில் மனோ said...
ஜெயலலிதா மாறுவது கஷ்ட்டமாசசே...!!!!!???
மக்கள் மாத்திடுவாங்க..//
அது அஞ்சி வருஷம் கழிச்சி மக்கா...
இப்போது ஆட்சி நடத்துவது சுலபமல்ல,அனைவருக்கும் பதில் சொல்ல வேண்டும் என்பதையே இந்நிகழ்வு உணர்த்துகிறது. ஆரம்பமே வெகு ஜோர்.
IIIIII கச்சேரி ஆரம்பம்டியோய்...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. ?
இதற்குதானே ஆசைப்பட்டாய் செந்தில்குமாரா!
என்னமோ திமுக வை , ராணுவ ஆட்சி அது இதுனு கறிச்சு கொட்டுனீங்க. ஆட்சிக்கு வந்த 3நாளிலேயே அம்மா தன் வேலையை காட்ட ஆரம்பிச்சுட்டாங்களே.
Blogger ராஜி said...
இதற்குதானே ஆசைப்பட்டாய் செந்தில்குமாரா!
பாலகுமாரன் ரசிகை போல..
ஹலோ என்னவோ நான் தான் ஆட்சிப்பொறுப்பை அவங்க கிட்ட கொடுத்த மாதிரி பேசறீங்க?
>> Delete
Blogger ராஜி said...
என்னமோ திமுக வை , ராணுவ ஆட்சி அது இதுனு கறிச்சு கொட்டுனீங்க. ஆட்சிக்கு வந்த 3நாளிலேயே அம்மா தன் வேலையை காட்ட ஆரம்பிச்சுட்டாங்களே.
ம் ம் பார்ப்போம்.. என்ன நடக்குதுனு?
திமுகவை தாக்கி பதிவை போட்டீங்க பலர் கண்டும் காணாமல் போணாங்க. சிலர் மிரட்டி இருப்பாங்க. ஆனால் இனி ஜெ வை தாக்கி பதிவு போட்டு பாருங்க. அப்புறம் அடுத்த வேளை சாப்பாட்டை உங்க மனைவிதான் ஊட்டிவிடனும் சிபி சார்
வழக்கு போட்டாத்தான் எங்க கெத்து தெரியும்!
புயலுக்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கின்றன ......
Dog tail never change
One more..
முந்தைய திமுக அரசு மாணவர்கள் நலன் கருதி கொண்டுவந்த சமச்சீர் கல்வி புத்தகங்களை அழிக்க அதிமுக அரசு உத்தரவிட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=54208
வந்தேன் ,படித்தேன், வாக்களித்தேன், சென்றேன்..
சென்றமுறை ஜெயலலிதா புதிய சட்டசபை கட்டவேண்டும் என்று முயற்சிசெய்த போது இந்த கருணாநிதி கும்பல் எப்படியெல்லாம் தடையாக இருந்தது என்று தெரியாமல் எழுதப்பட்ட பதிவு இது.
அப்படி ஒரு இழிவான எண்ணம் கொண்ட கருணாநிதி கும்பல் கட்டியதை யாரும் ஏற்கவில்லை.
1000 கோடி பெரிதா? இல்லை கருணாநிதி குடும்பத்தால் அடிக்கப்பட்ட 1,76,000 கோடி பெரிதா?
அந்த 1000 கோடியிலும் 500 கோடியைச் சுருட்டிய கருணாநிதி கும்பல் சிறைக்குச் செல்வது உறுதி.
இந்தமுறை கருணாநிதியை கைது செய்தால் கை கால்களில் விலங்கு மாட்டி தெருத்தெருவாக இழுத்துச் செல்லவேண்டும். அதுவே தமிழக மக்களின் விருப்பம்.
கருணாநிதிக்கு இதைவிட அவமானங்கள் காத்துக்கொண்டிருக்கின்றன.
ஆரம்பிச்சுட்டாங்களா..108 ஆம்புலன்ஸ் திட்டத்தினை நிறுத்தினால் கடும் அதிருப்தியைச் சந்திக்க நேரும்.
Nalla pathivu.... Kalakkal.
From my iPod
108 மூலம் இன்று எத்தனையோ உயிர்கள் காக்கப்படுகிறது. அந்த உயிர்களின் மதிப்பு அம்மாவுக்கு தெரியுமா?
Ennathan nadakum nadakatumay...
ஜெயலலிதா ஆட்சியில் ஏதாவது சென்னையில் குறிப்பிடும் படி கட்டப்பட்டிருக்கிறதா? என்றால் இல்லை! கலைஞர் கட்டியதுதான் என்றாலும் மக்கள் வரிப்பணத்தில்தானே? அதை ஏன் ஜெயலலிதா நிராகரிக்க வேண்டும்? அப்படி பார்த்தால் தி.மு.க ஆட்சி காலத்தில் சென்னையில் 7 மேம்பாலங்கள் கட்டப்பட்டன. அதில் ஜெயலலிதாவும், அ.தி.மு.க அமைச்சர்களும் பயணிக்காமல் இருப்பார்களா? மேலும் தற்போது கடந்த ஆட்சியில் கொண்டுவந்த சமச்சீர் கல்வி திட்டத்தையும் மாற்றுவதாக தகவல்! ஜெயலலிதாவின் சொந்த வெறுப்புக்காக மக்கள் வரிப்பணம் வீணாகும் போது கவலையாய் இருக்கிறது. நாசவேலைகளை விட்டுவிட்டு ஆக்கபூர்வமான செயல்களில் அரசு ஈடுபட்டால் நல்லது.
108 ஆம்புலன்ஸ் திட்டம் கயாலான் கடைக்கு போகிறதா? நன்றி வாக்களித்த தமிழக மக்களுக்கு! (ஸ்பெஷாலா நம்ம சி.பி.அண்ணனுக்கு)
தொடங்கிட்டாங்கப்ப திரும்ப
//எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சிபி!
பாராளுமன்றக் கட்டிடம் கூட வட்டமாகத்தான் இருக்குது.
ஆனால் அதை யாரும் எண்ணைச்சட்டியென்றோ,தண்ணித்தொட்டியென்றோ சொல்வதில்லை!ஏன்?//
ராஜ நடராஜன்,
அது 1927 வருசக் கட்டிடம். நாடு சுதந்திரம் அடைவதற்கு முன் வெள்ளையர் ஆட்சி காலத்தில் கட்டியது.
ஆனால் இப்போ நாம் பேசிக்கிட்டு இருப்பது தமிழ் மொழி, கலை கலாச்சாரம் பண்பாடு எல்லாம் தன் உயிர்மூச்சுன்னு சொல்லிக்கிட்டு இருந்த 'பச்சைத்தமிழன்' இப்போ கட்டியது இல்லையோ!!!!!!
கொஞ்சமாவது நம் கட்டிடக்கலையின் பிரதிபலிப்பு இல்லையே என்ற வருத்தம்தான்:(
அது ஒருபுறம் இருக்க....... அங்கே இருக்கும் மீன் தொட்டி ஒருவாரமா சுத்தம் செய்யாம தண்ணீர் மாற்றாமல் இருக்காம். பாவம்.......அந்த மீன்கள்:(
அம்மா காட்டுல மழை பெய்யும்ன்னு கனவு காணதடியோய் இந்த அஞ்சி வருசமும் கலைஞரின் நல்லத் திட்டங்களுக்கு ஆப்பு வைக்க நெனச்சா நம்ம நீதி மன்றமும், நம்ம கிருஸ்ணமூர்த்தியும் சும்மா விட மாட்டாங்க... சொல்லிபுட்டேன் ஆமா
Post a Comment