கரூரைக் கலக்கும் உர ஊழல்...
பொறுக்கித் தின்ற 'பொறுப்பான' அதிகாரிகள் !
பிரச்னை
தமிழக அரசால் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் ரசாயன உரங்களை, கூடுதல் விலைக்கு வெளிமார்க்கெட்டில் விற்று மோசடி செய்த அரசு அதிகாரிகள், அதிரடியாக கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
'டான்பெட்’ என்றழைக்கப்படும் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம், அரசிடம் இருந்து மானிய விலையில் உரங்களைப் பெற்று பல்வேறு கூட்டுறவு அமைப்புகளுக்கு அனுப்பி வருகிறது. அந்த கூட்டுறவு அமைப்புகள், தகுதியுள்ள விவசாயிகளுக்கு உரத்தை மானிய விலையில் வழங்கி வருகின்றன.
இந்த அடிப்படையில் திருச்சியில் உள்ள 'டான்பெட்’ நிறுவனத்திடமிருந்து கரூர் மாவட்டம், தாந்தோன்றிமலை வேளாண்மைப் பொறியியல் சேவை கூட்டுறவு மையத்துக்கு வந்த உர மூட்டைகளை வைத்துத்தான் ஊழல் நடந்திருக்கிறது.
இதுகுறித்து, வழக்கை விசாரித்து வரும் கரூர் வணிகவியல் குற்றப் புலனாய்வுப் பிரிவு துணை கண்காணிப்பாளர் சூர்யகலாவிடம் கேட்டபோது, ''தாந்தோன்றிமலை வேளாண்மைப் பொறியியல் சேவை கூட்டுறவு மையம் மூலம் மானிய உரங்களில் முறைகேடு நடப்பதாக அடிக்கடி தகவல் வந்தது. இதையடுத்து விசாரணை செய்தபோது, 2008 முதல் 2010 வரையிலான காலகட்டத்தில் சுமார் 1 கோடியே 34 லட்சம் ரூபாய் அளவில் முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்தது.
பல இடங்களிலும் பணியாற்றும் உயர்அதிகாரிகள் கூட்டுப்போட்டுக் கொண்டு இந்தக் கொள்ளையை அரங்கேற்றியுள்ளனர்'' என்றவர் கொஞ்சம் விவரமாக சொல்ல ஆரம்பித்தார்.
''675 டன் யூரியா, 235 டன் டி.ஏ.பி. ஆகக்கூடி 910 டன் உரங்களை, தாந்தோன்றிமலை வேளாண்மைப் பொறியியல் சேவை கூட்டுறவு மைய தனிஅதிகாரி செல்லமுத்து, கரூரில் உள்ள தமிழ்நாடு காகித ஆலைக்கும்... சென்னையிலிருக்கும் 'பால்மார் லோரி அண்ட் கோ லிட்’ என்ற நிறுவனத்துக்கும் விற்பனை செய்ததிருப்பதாக ஆவணங்களின் அடிப்படையில் தெரியவந்தது.
அந்த நிறுவனங்கள் விவசாயிகளுக்காக இந்த உரத்தை வாங்கியிருப்பது போல ஆவணங்களில் காட்டப்பட்டுள்ளது. இதற்காக சம்பந்தபட்ட நிறுவனங்களிடமிருந்து பணம் பெறப்பட்டு, தனி அதிகாரி செல்லமுத்து தனியாக துவங்கியிருக்கும் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.
உண்மையில், இந்த நிறுவனங்களுக்கும் அந்த உரங்கள் செல்லவில்லை. கணக்கு மட்டுமே காட்டி பணத்தை வாங்கிச் சுருட்டிக் கொண்டு, வெளிமார்க்கெட்டில் மொத்த உரத்தையும் விற்றுள்ளனர். இதன் மூலமும் பெரும் பணத்தை சுருட்டியுள்ளனர்.
'டான்பெட்’, வேளாண்துறை, காகித ஆலை, பால்மர் லோரி ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகள் கூட்டுச் சேர்ந்து கொண்டு இந்தக் கொள்ளையை நிகழ்த்தியுள்ளனர்.
தனி அலுவலர் செல்லமுத்து, 'டான்பெட்' துணை மேலாளர் பரமசிவம், உதவி வேளாண் இயக்குநர் மீனாட்சிசுந்தரம், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன பொதுமேலாளர் (கொள்முதல் பிரிவு) ராஜகோபாலன், த.நா. காகித ஆலையின் உதவிப்பொது மேலாளர் கல்யாணசுந்தரம் மற்றும் 'பால்மார் லோரி அண்ட் கோ லிட்’ உயர் அதிகாரிகளான முருகன், அனிமேஷ் சத்தோவ் பாத்யா ஆகிய ஏழு பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது'' என்று சொன்னார் சூர்யகலா.
இதுதொடர்பாக நம்மிடம் பேசிய, ஐக்கிய விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வையாபுரி, ''இந்த 910 டன் உர ஊழல் என்பது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போன்றதுதான். தமிழ்நாடு முழுவதும் உள்ள பல கூட்டுறவு சங்கங்கள் ஊழலின் உறைவிடமாகத்தான் செயல்பட்டு வருகின்றன. விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய உரங்கள் மட்டுமல்ல, டிராக்டர்கள் பொக்லைன், போர்வெல் இயந்திரங்கள்கூட விவசாயிகளுக்குக் கிடைப்பதில்லை தனியார் ரியல் எஸ்டேட் நிலங்களை சமன்படுத்த அதிக வாடகைக்கு விடப்படுகிறது.
கூட்டுறவு என்றாலே, கூடி ஊழல் செய்யும் இடமாக மாறிவிட்டது. பணி ஓய்வு பெறும் காலம் வரை ஒரே இடத்தில் வேலை பார்க்கும் வாய்ப்பு கூட்டுறவுச் சங்க அலுவலர்களுக்கு இருப்பதால்... முறைகேடுகள் முற்றிலும் மறைக்கப்பட்டு விடுகின்றன. புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு, அனைத்து கூட்டுறவுச் சங்கங்களையும் ஆய்வு செய்வதுடன், கூட்டுறவுச் சங்கத் தேர்தலையும் உடனடியாக நடத்த வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் விவசாயப் பிரதிநிதிகளின் கண்காணிப்பில் சங்கங்கள் செயல்படும்போதுதான் தவறுகள் கண்டுபிடிக்கப்படும்'' என்று சொன்னார்.
அமராவதி உழவர் இயக்க அமைப்பாளர் இரா. முருகானந்தம், ''உர ஊழலில் ஈடுபட்டுள்ள ஏழுபேரும் சாதாரண கடைநிலை ஊழியர்கள் அல்ல. பொறுப்பான அதிகாரிகள். ரசாயன உரம் மட்டுமல்ல, விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட வேப்பம் பிண்ணாக்கிலும் முறைகேடு நடந்துள்ளது. தனியார் நிறுவனங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட வேப்பம் பிண்ணாக்கு குறித்து விசாரணை செய்தால், பல முறைகேடுகள் வெளிவரும்'' என்றார்.
பசுமை விகடன் இதழில் விவசாயத்தை வைத்து நடத்தப்படும் ஊழல்களையும் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறோம். அந்த வகையில் உர ஊழல் தொடர்பாக பல கட்டுரைகளில் குறிப்பிட்டே வந்திருக்கிறோம். தற்போது, அது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
நன்றி - பசுமை விகடன்
12 comments:
இதென்னையா விகடன்'ல இம்புட்டு வரைட்டி இருக்கா?
சண்டே என்பதால பலரு தூங்குறாங்க போல காலைல
"விகடன்" சிபி வாழ்க!
@விக்கி உலகம்//"விகடன்” சிபி வாழ்க!” ரிப்பீட்டேய்!
குட் மார்னிங் .....
என்னய்யா, கடையிலை ஒருத்தரையுமே காணோம்,
கூட்டம் கம்மியா இருக்கு.
விவசாயிகள் வாழ்வின் பின்னுள்ள பிரச்சினைகளை வலையில் பகிர்ந்து கொண்ட உங்களுக்கு நன்றிகள் சகோ.
இந்த செய்தியினை தொடர்ந்து அம்மா கடும் நடவடிக்கை எடுப்பார் என்று நம்பலாம்!
ம்ம்ம்...ரைட்டு! கூட்டத்தையே காணோம்!
எலேய் உனக்கு விகடன்'ல பார்டைம் ஜாப் தந்துருக்கான்களோ...??
விக்கி உலகம் said...
"விகடன்" சிபி வாழ்க!//
கரக்டு இனி இந்த நாயை இப்பிடித்தான் கூப்பிடனும் சரியா தக்காளி...???
Post a Comment