திரைக்கதை மட்டுமே பக்காவாக ரெடி பண்ணி விட்டால் லோ பட்ஜெட் படங்கள் கூட சூப்பர் ஹிட் ஆகும் என்ற உண்மையை மீண்டும் ஒரு முறை பொட்டில் அடித்தாற்போல் சொல்லி இருக்கிறது மைதானம். சமீப காலமாக வந்த படங்களில் பக்கா ஸ்கிரிப்ட் என தாராளமாக இந்தப்படத்தை சிலாகிக்கலாம்.
படத்தோட ஓப்பனிங்க் ஷாட்லயே கதைக்கு வந்துடற வெகு சில இயக்குநர்களில் இவரும் ஒருவராகி இருப்பதில் மிக்க மகிழ்ச்சி எனக்கு..
4 ஆண் நண்பர்கள்.. அதுல ஒரு ஃபிரண்டோட தங்கை இன்னொரு ஃபிரண்டை லவ் பண்றா.. ஆனா அவளோட லவ்வர்க்கு ஒரு குற்ற உணர்ச்சி.. நண்பன் தங்கையை லவ் பண்றதா? தப்பு தானே? அதனால லவ்வை வெளிப்படுத்தாம இருக்கான்.இந்த சூழல்ல திடீர்னு அவ காணாம போயிடறா..
4 நண்பர்களும் சேர்ந்து தேடறாங்க.. படம் பார்க்கறவங்களுக்கும்,இன்னொரு நண்பனுக்கும் அந்த காதலன் மேல் தான் சந்தேகம்... அவனே அவளை எங்கேயோ ஒளிச்சு வெச்சுட்டானா? என டவுட்..
ஆனா நடந்ததே வேற.. காதலன் அல்லாத இன்னொரு நண்பன் காம வசப்பட்டு தன்னோட வீட்லயே அவளை அடைச்சு வெச்சிருக்கான்கறதோட இண்ட்டர்வல் பிளாக் வருது...
புது முகங்களான அந்த 4 பேரும் உதவி இயக்குநர்களாம். அனைவரும் அண்டர்ப்ளே ஆக்டிங்க்கில் அசத்தி இருக்கிறார்கள்.காதல் கோட்டை இயக்குநர் அகத்தியன் ஹீரோயினுக்கு அப்பாவாக நல்ல நடிப்பை தந்திருக்காரு..
புதுமுகம் ஸ்வாசிகா ஃபேஸ்கட் ஓக்கே.. ஆக்டிங்க்கும் ஓக்கே..டிரஸ்ஸிங்க் சென்ஸூம் ஒக்கே.. ஒரே ஒரு குறை என்னான்னா அவர் காதலனை காதலாக பார்ப்பது காமமாக பார்ப்பது போல் அப்பட்டமா தெரியுது.. காதலையே இன்னும் வெளிப்படுத்தாத ஒரு பெண்ணுக்கு எப்படி காமப்பார்வை வரும்?
ஆனால் அவர் ரூமில் வாய் கட்டப்பட்ட சீனில் வெறும் கண்களாலும், புருவ அசைவுகளாலும் அவர் வெளிப்படுத்தும் ஆக்ரோஷம் அருமை..
4 நண்பர்கள், ஒரு பெண் இதானா ஒன் லைன் என யாரும் சலிக்கத்தேவை இல்லை.. இது புது திரைக்கதை..
கனவா? நிசமா? என்னை கிள்ளி கிள்ளி பார்க்குறேன் பாடல் காட்சியில் ஹீரோ ஹீரோயின் இருவரும் மொப்பட்டில் உலாபோவது செம...
தன் பொண்ணுக்கு திருமணப்பேச்சு வந்ததுமே அப்பா அகத்தியன் விசும்புவது அப்பா மகளுக்கிடையேயான பாசத்தின் புதிய பதிவு.. வெல்டன் டைரக்டர்..
கனவா? நிசமா?பாடல் சரணத்தில் மனம் கவர்ந்த வரி - காதலில் வேதனை தவிர மிச்சம் என்ன நமக்கு?
மைதானத்தில் விளையாடிய வசனங்கள்
1. அவன் என் ஃபிரண்டு.. எப்படி அவன் தங்கயை லவ் பண்ண முடியும்?அது அவனுக்கு செய்யற துரோகம் இல்லையா?
மனசுக்குப்பிடிச்சவளை பக்கத்துல உக்கார வெச்சுட்டே பிடிக்காத மாதிரி காட்றது மட்டும் துரோகம் இல்லையா?
2. வாழ்க்கைல நாம நினைக்கறது எப்பவும் நடக்கறது இல்லை..நடப்பதை ஏத்துக்கனும்..
3. ஊரை அடிச்சு உலையில போட்டவனுக்கே எந்த பிரச்சனையும் வர்றதில்லை.. நமக்கு மட்டும் என்ன பிரச்சனை வந்துடப்போகுது?
4. அவன் ஏன் மூடு அப்செட் ஆனமாதிரியே இருக்கான்?
எப்பவாவதுன்னா பரவால்லை.. எப்பவுமே அப்படித்தான்.. விட்டுத்தள்ளு...
5. உனக்காக எதையும் விட்டுக்குடுப்பேன், ஆனா எதுக்காகவும் உன்னை விட்டுக்குடுக்க மாட்டேன். ( இது ஹீரோயின் கிட்டே வில்லன் சொல்றது)
6. அடடா.. ஏன் புலம்பறீங்க.. எதா இருந்தாலும் பாஸிட்டிவ்வா சிந்திக்கனும்.. நம்ம வம்சத்துலயே போலீஸ் ஸ்டேஷனுக்கு போன முத ஆம்பள நான் தான்.. ஏ ஹே ஹே ஹே
இயக்குநர் விளையாடிய இடங்கள்
1. ஹீரோயினை எந்த இடத்திலும் விகல்பமாக காட்டாதது.. கதை , திரைக்கதை அதற்கு இடம் கொடுத்தும் இயக்குநர் இடம் கொடுக்காதது..
2.அமைதியாக வரும் ஹீரோயின் அப்பா கேரக்டர் மகளை காணோம் என்றதும் செய்யும் ஆர்ப்பாட்டம் கிராமத்து தந்தை கேரக்டரை அப்படியே கண் முன் கொண்டு வந்தது..
3. ஹீரோயினின் அண்ணன் கேரக்டர், காதலன் கேரக்டர் இருவருக்கும் சம வாய்ப்பு கொடுத்து மிகை நடிப்பே இல்லாமல் வேலை வாங்கியது..
4. ட்ரிம் செய்யப்பட்ட போலீஸின் ஹேர் கட் மாதிரி எக்ஸ்ட்ரா வசனம் எதுவும் இல்லாமல் கன கச்சிதமான யதார்த்த வசனங்கள்..
5. அனைத்துக்கேரக்டர்களும் புதுமுகமாக இருந்தாலும் யதார்த்த நடிப்பை வெளிக்கொணர்ந்த விதம்
இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்
1. நண்பனின் வில்லத்தனம் தெரிந்த ஹீரோயின் அவரது வீட்டுக்கு தனிமையில் உள்ளே போக சம்மதித்தது எப்படி?அவரோடு வண்டியில் டபுள்ஸ் போவது எப்படி?
2. வில்லன் விஷம் சாப்பிடுவது அவரை காப்பாற்றுவது உட்பட சில சீன்கள் நாடோடிகள் படத்தை நினைவு படுத்துவது..
3. க்ளைமாக்ஸில் வில்லனுக்கு ஆத்தாவே சாப்பாட்டில் விஷம் வைத்து கொல்வது நந்தா படத்தை நினைவு படுத்துவது..
4. ஹீரோயின் காணாமல் போனதும் ஊருக்குள் தேடும் படலம் இன்னும் எடிட் பண்ணி இருக்கலாம். அநியாயத்துக்கு நீளம்..
5. ஆசைப்பட்டு ஹீரோயினை கடத்தி வந்த வில்லன் அவளை எதுவும் “செய்யாமல்” தனது வீட்டிலேயே வைத்திருப்பது..
6. வில்லன் ஹீரோயின் மேல் கொண்டது காதலா? முறை அற்ற காமமா? என விளக்கி சொல்லாதது..
7. ஹீரோயின் குடும்பத்தில் அடிக்கடி தற்கொலை முயற்சி நடப்பதை காட்டுவது
8. அண்ணன் தங்கையை வில்லன் வீட்டில் இருந்து மீட்டு வரும்போது சொல்லி வைத்த மாதிரி ஊரே திரண்டு வேடிக்கை பார்ப்பது..
ஆனால் இவை எல்லாம் பெரிய மைனஸாக தோன்றாததற்கு முக்கிய காரணம் ஒரு கிராமத்தில் நடக்கும் சம்பவத்தை நேரில் பார்ப்பது போல் படம் எடுத்ததுதான்..நல்ல விளம்பரம் இருந்தால் இந்தப்படம் ஓட வாய்ப்பு உண்டு..
ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 43
குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க்கிங்க் - நன்று
ஈரோடு அண்ணா தியேட்டரில் படம் பார்த்தேன்.
பெண்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்.. ரெகுலரா ஃபிரண்ட் மாதிரி கூட பழகும் ஆண்களால் எந்த மாதிரி எல்லாம் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது
என்ற விழிப்புணர்வை படம் தருகிறது என்பதால் அனைத்து பெண்களும் தங்கள் பெண் குழந்தைகளுடன் காண வேண்டிய படம்..
ஹீரோயின் ஒரு சாயலில் காதல் சந்தியா மாதிரியும் ,இன்னொரு சாயலில் ஆல்பம் பட ஹீரோயின் (தேங்காய் சீனிவாசனின் பேத்தி) மாதிரியும் இருக்கார்
ஈரோடு அண்ணா தியேட்டரில் படம் பார்த்தேன்.
பெண்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்.. ரெகுலரா ஃபிரண்ட் மாதிரி கூட பழகும் ஆண்களால் எந்த மாதிரி எல்லாம் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது
என்ற விழிப்புணர்வை படம் தருகிறது என்பதால் அனைத்து பெண்களும் தங்கள் பெண் குழந்தைகளுடன் காண வேண்டிய படம்..
ஹீரோயின் ஒரு சாயலில் காதல் சந்தியா மாதிரியும் ,இன்னொரு சாயலில் ஆல்பம் பட ஹீரோயின் (தேங்காய் சீனிவாசனின் பேத்தி) மாதிரியும் இருக்கார்
39 comments:
அண்ணே வணக்கம்னே!
மாப்ள காலையிலே சினிமா விமர்சனமா... அடிச்சி ஆடு,,
>.விக்கி உலகம் said...
அண்ணே வணக்கம்னே!
தக்காளி பர்சனல் சேட்டிங்க்ல கெட்ட வார்த்தைல திட்டுவான்.. பப்ளிக்ல நல்லவன் மாதிரி நடிப்பான்.. கலைஞர் கட்சி போல. ஹா ஹா
>>* வேடந்தாங்கல் - கருன் *! said...
மாப்ள காலையிலே சினிமா விமர்சனமா... அடிச்சி ஆடு,,
காலங்காத்தாலே ஒரு வேலை இல்லாம பல கல்லூரிப்பெண் பின்னால் சுற்றும் காதல் மன்னவனே,, கருணே கருணே.. ஏஹே ஹேய்
எனக்கு ஒரு டவுட்டு.......ஏன் தமிழ்மணம் உன் கைய விட்டுருச்சி.........!
அடப்பாவி தமிழ்மணம் ஓட்டு பட்டை வேலை செய்யவில்லை,, அதை முதல்ல பாரு?
>>>விக்கி உலகம் said...
எனக்கு ஒரு டவுட்டு.......ஏன் தமிழ்மணம் உன் கைய விட்டுருச்சி.........!
I DONT KNOW. SOMETHING IS FISHING
புதிய முயற்சிகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் நல்ல விமர்சனம் .....
சி.பி.செந்தில்குமார் said...
>.விக்கி உலகம் said...
அண்ணே வணக்கம்னே!
தக்காளி பர்சனல் சேட்டிங்க்ல கெட்ட வார்த்தைல திட்டுவான்.. பப்ளிக்ல நல்லவன் மாதிரி நடிப்பான்.. கலைஞர் கட்சி போல. ஹா ஹா// ஆரம்பிச்சிடீங்கலா நீங்க..
"அவர் காதலனை காதலாக பார்ப்பது காமமாக பார்ப்பது போல் அப்பட்டமா தெரியுது.. காதலையே இன்னும் வெளிப்படுத்தாத ஒரு பெண்ணுக்கு எப்படி காமப்பார்வை வரும்?"
ஹீ ஹீ என்ன ஒரு ஆராய்ச்சி ?
ரியாஸ் அஹமது said...
புதிய முயற்சிகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் நல்ல விமர்சனம் .....
பெரிய படங்கள்க்கு சன் டி வி இருக்கு.. புதிய சின்ன படங்களுக்கு மக்களின் மவுத்டாக் தானே கிரியா ஊக்கியாய் இருக்கு?
>>udhavi iyakkam said...
"அவர் காதலனை காதலாக பார்ப்பது காமமாக பார்ப்பது போல் அப்பட்டமா தெரியுது.. காதலையே இன்னும் வெளிப்படுத்தாத ஒரு பெண்ணுக்கு எப்படி காமப்பார்வை வரும்?"
ஹீ ஹீ என்ன ஒரு ஆராய்ச்சி ?
உண்மைதான் அது.. ஒரு பெண் முதலில் காதல் பார்வையும் அது ஏற்றுக்கொள்ளப்பட்ட பின் காமப்பார்வையும் பார்க்க ஆரம்பிப்பாள்
good review thala.. expecting movie is good like your review
பாடல்கள் எப்படி இருக்குன்னு சொல்லலியே..?!
இடைவேளையில் செம திருப்பம் போல!!
எந்தப்படம் ரிலீசானாலும் பாசுக்கு தான் முதல் நியூசு குடுப்பாங்களாம் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்!!
கவனிக்க:'எந்தப்படமும்!!
சீனிவாசனுக்கு பேர்த்தியா??
அவங்க புள்ளையோட புள்ளை மாதிரியா??
நல்ல படம் போலத் தெரியுதே..
திரைக்கதை மட்டுமே பக்காவாக ரெடி பண்ணி விட்டால் லோ பட்ஜெட் படங்கள் கூட சூப்பர் ஹிட் ஆகும் என்ற உண்மையை மீண்டும் ஒரு முறை பொட்டில் அடித்தாற்போல் சொல்லி இருக்கிறது மைதானம். சமீப காலமாக வந்த படங்களில் பக்கா ஸ்கிரிப்ட் என தாராளமாக இந்தப்படத்தை சிலாகிக்கலாம்.///
திரைக்கதை நல்ல இருக்கா? ஒ.. அப்டீன்னா படம் ஹிட் தான்!
4 ஆண் நண்பர்கள்.. அதுல ஒரு ஃபிரண்டோட தங்கை இன்னொரு ஃபிரண்டை லவ் பண்றா.. ஆனா அவளோட லவ்வர்க்கு ஒரு குற்ற உணர்ச்சி.. நண்பன் தங்கையை லவ் பண்றதா? தப்பு தானே? அதனால லவ்வை வெளிப்படுத்தாம இருக்கான்.இந்த சூழல்ல திடீர்னு அவ காணாம போயிடறா..
4 நண்பர்களும் சேர்ந்து தேடறாங்க.. படம் பார்க்கறவங்களுக்கும்,இன்னொரு நண்பனுக்கும் அந்த காதலன் மேல் தான் சந்தேகம்... அவனே அவளை எங்கேயோ ஒளிச்சு வெச்சுட்டானா? என டவுட்///
அட ரொம்ப த்ரில்லிங்கா வேற இருக்கும் போல
இது செந்தில்குமார் எழுதிய விமர்சனமா? நம்பமுடியலயே, அடைப்புக்குறிக்குள்ள, செமையா கடிப்பீங்களே! அரசியல் உவமை சொல்வீங்களே! அதெல்லாம் என்னாச்சு தல?நல்ல படம் என்பதால் நோண்டி நொங்கெடுக்காமல் விட்டீர்களா?
நண்பா.. நல்ல படங்களையும், நல்ல ஃபிகர்களையும் நக்கல் அடிக்ககூடாது என்ற கொள்கையோடு இருக்கேன் ஹி ஹி
Blogger மைந்தன் சிவா said...
எந்தப்படம் ரிலீசானாலும் பாசுக்கு தான் முதல் நியூசு குடுப்பாங்களாம் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்!!
கவனிக்க:'எந்தப்படமும்!!
தமிழ்மணம் மகுடம் கிடைச்சதுதுல இருந்தே பய புள்ள ஒரு மார்க்கமாத்தான் இருக்கான்
>>சேலம் தேவா said...
பாடல்கள் எப்படி இருக்குன்னு சொல்லலியே..?!
அது தப்சியின் அழகு போல.. சூப்பர் என அள்ளவும் முடியல.. தேறாது என தள்ளவும் மனம் இல்ல ஹி ஹி
வழக்கம் போல் நல்ல விமரிசனம்!(ஆமா,ஒரு மாதத்தில் எத்தனை படம் பாக்கறீங்க?)
hi hi ஹி ஹி எத்தனை ரிலீஸ் ஆகுதோ அத்தனை
விமர்சனம் வாசித்தேன். படத்தின் முடிவையும் சொல்வதை தவிர்த்து இருக்கலாமே. ஊகிக்க கூடிய முடிவாக இருந்தாலும் , சொல்லாமல் இருப்பது இன்னும் விமர்சன நேர்த்தியைக் கூட்டும் என்பது எனது தாழ்மையான கருத்துங்க.
எந்த பாவிப்பய கண்ணு பட்டுதோ தெரியல இந்த தமிழ்மணம் இப்படி மக்கர் பண்ணுது
கலாட்டா.காம் உங்கள தேடிக்கிட்டு இருக்காங்க..
Yov... Heroine is not new... Goripalayam paarkkalaiyaa...
தேங்காய் சீனிவாசன் பேத்தி பேரு "ஸ்ருதிகா" வரலாறு ரொம்ப முக்கியம்...
சிபி அண்ணே வணக்கம் அண்ணே...
காலையிலேயே தக்காளியை பிளிஞ்சிட்டியே, ஹி ஹி நான் விமர்சனத்தை சொன்னென்...
அண்ணே! விமர்சனம் டாப் டக்கர்.
எனது வலைப்பூவில்:
மதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 1 (200வது பதிவாக)
இப்படி ஒரு படம் வந்துருக்கா...???? ஹி..ஹி...
நமக்கு கொஞ்சம் பொதுஅறிவு கம்மிங்க....
தக்காளி ஒரு படம் விடமாட்டீங்க போல
=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+
ஒரு காதல் கதை
http://speedsays.blogspot.com/2011/05/love-story.html
வசிஷ்ட முனிவரைப் போல எல்லா படத்தையும் குறை சொல்லும் சிபி சாரே பாராட்டுரார்னா?! படம் நல்லாத்தான் இருக்கும்போல.
விளையாடுங்க.. விளையாடுங்க..
Post a Comment