பொதுவாக தமிழ் சினிமா திருநங்கைகளை காமெடிக்காகவும்,டப்பாங்குத்துப்பாடல் காட்சிக்கு மட்டுமே உபயோகித்து வந்த சூழ்நிலையில் முதன் முதலாக ஒரு திரு நங்கை எப்படி உருவாகிறார் என்பது முதற்கொண்டு அவரது முழு வாழ்க்கையை பதிவு செய்யும் முதல் தமிழ்ப்படம் என்ற அளவில் இந்தப்படம் முக்கியத்துவம் பெறுகிறது.. ஆனால்.......
சிலம்பாட்ட வீரரின் குடும்பத்தில் 3 பெண்குழந்தைகள் ஒரு ஆண் குழந்தை. ஆனால் வீரனாக தான் வளர்க்க விரும்பும் ஆண் குழந்தை சின்ன வயதிலேயே பெண் தன்மையுடன் வளர்வது கண்டு கோபம் அடைந்த தந்தை அவனை வீட்டை விட்டு துரத்தி விடுகிறார்.அவன் மும்பை போய் முறைப்படி திரு நங்கை ஆகிறான்.அதற்குப்பிறகு அவனை சமூகம் எப்படி வஞ்சிக்கிறது,அவன் என்ன செய்கிறான்,அவன் வாழ்க்கை திசை எப்படி பயணப்படுகிறது என்பதை வலி நிறைந்த திரைக்கதை மூலம் சொல்லி இருக்கிறார்கள்.
சிலம்பாட்ட வீரர்+ மனைவி இருவர் நடிப்பும் செம யதார்த்தம்.இருவரும் 3 குழந்தைகளையும் வீட்டிலேயே வைத்துக்கொண்டு கண்களாலேயே காதல் மொழி பேசுவது செம கிளு கிளு.. அதுவும் சிக்கன் பீஸின் எலும்புத்துண்டை மனைவி வாயில் வைத்து உறிஞ்சும்ப்போது கணவர் குறும்புப்பார்வை பார்க்கிறாரே.. அக்மார் கே பாக்யராஜ் பாணி டச்சிங்க் சீன்... அந்த சீனில் மனைவியாக வருபவரின் முக பாவனைகள் அழகு கவிதை..
சிலம்பாட்ட வீரர் தனது மகனுக்கு சிலம்பம் கற்றுத்தரும்போது அவரது மகன் பரத நாட்டிய ஸ்டெப் போடுவதும் கொஞ்சம் கொஞ்சமாக தனது மகன் பெண்ணியல்புக்கு போவதை கண் கூடாக உணர்வதும் அழகிய படப்பிடிப்பு.
அதேபோல் ஹீரோவிடம் ஆசையாகப்பேச ஆரம்பிக்கும் 17 வயது ஹீரோயின் தனது முகத்தில் காதல் 60 % +காமம் 40 என உணர்ச்சிக்கலவையாக இருக்கும்போது தன் காதலன் பெண் தன்மை உள்ளவன் என அவன் வாய்ச்சொல்லாலேயே உணரும்போது சடார் என அவரது முக உண்ரவுகள் மாறி ஒரு அசூயை+ அருவெறுப்புடன் பார்ப்பது அட்டகாசமான நடிப்பு..
ஆனால் ஹீரோ தன்னை விட்டு சென்று விடக்கூடாது என்பதற்காக ஹீரோயின் கிட்டத்தட்ட ஹீரோவை ரேப் பண்ணுவது போல் காட்டி இருக்க தேவை இல்லை. அது ஒரு பெண்ணுக்கு 20 வயசுக்குப்பின்னே மனோ பலம் வரும். 16 அல்லது 17 வயசுப்பெண்ணுக்கு வெட்கமும், தயக்கமும் தானே வரும்?
ஹீரோ மும்பைக்கு போனதும் கொஞ்சம் அந்நியத்தன்மை தலை தூக்குகிறது. ஹிந்தியில் ஏகப்பட்ட வசனங்கள் வரும்போது சப் டைட்டிலாக தமிழ் வசனங்களை திரையில் ஓட விட்டிருக்கலாம்.
பரத நாட்டிய வர்ஷினி டீச்சராக வரும் ஃபிகர் நல்லாத்தான் இருக்கு. ஆனால் எடிட்டிங்க் அல்லது ஃபுட்டேஜ் பிராப்ளமோ என்னவோ அவரை திடீர்னு காணோம்.
படத்தில் பரத நாட்டியம் கற்றுக்கொள்ளும் ஆண் பெண் தன்மை அடைவான் என்ற கருத்து மறை முகமாக சொல்லப்படுவதை தவிர்த்திருக்கலாம்.எத்தனையோ பரத நாட்டிய கலைஞர்கள் ஆண்கள் மிகச்சிறப்பாக வாழ்கிறார்களே? அவர்கள் அசைவில் ஒரு நளினம் வரலாம்.. அவ்வளவு தான்.
டி வி சீரியல்களில் ஒரு பாத்திரம் கால்ஷீட் பிராப்ளம் என்றால் உடனே இனி இவருக்குப்பதில் இவர் நடிப்பார் என டைட்டில் கார்டு போட்டு டகார் என ஆள் மாற்றுவது போல் படத்தின் மெயின் கேரக்டராக வரும் திரு நங்கை கேரக்டர் ஹீரோவை வளர்ந்த ஆளாக காட்டும்போது வேறொரு பெண்ணை காட்டுவது திரைக்கதையின் மைனஸ்.. ஹீரோவின் மேல் தோன்ற வேண்டிய அனுதாபம் மிஸ் ஆகிறது..
படத்தில் மனதை தொட்ட வசனங்கள்
1. எங்கம்மா சொன்னதுக்காக உங்களை கட்டிக்கிட்டேன். என்ன சுகத்தை கண்டேன்? 4 குழந்தைகளைத்தவிர.. ( ஏம்மா? குழந்தையே ஒரு சுகம் தானே?)
2. டேய்.. ஏண்டா இப்படி இருக்கே? கோழையா 100 வருஷம் வாழறதை விட வீரனா ஒரு வருஷம் வாழ்ந்தா போதும்.. ஆம்பளையா நடந்து குடும்ப கவுரவத்தை காப்பாற்று..
3. ஏண்டி.. சும்மா புலம்பறே.. நான் வீரண்டி.. என்னை கட்டிக்கிட்டதுக்கு சந்தோஷப்படு....
அப்போ வீரனைக்கட்டிக்கிட்டதுக்காக ஒரு பொண்ணூ வாழ்க்கை பூரா கோழை போல வாழனுமா? ( ஆஹா செம கேள்வி..)
4. மகளே.. இப்படி ஆம்பளை ஆசை பிடிச்சு அலையாதேம்மா.. அப்புறம் ஆம்பளை வளர்த்த புள்ள அதனால தான் இப்படின்னு ஊர்ல தப்பா பேசுவாங்க..
5. எங்களை மாதிரி திரு நங்கைகளுக்கு நல்ல படியா வாழனும்னு ஆசை இருக்கு. ஆனா அதுக்காக அரசாங்கமும் , மக்களும் எங்களுக்கு செய்ய வேண்டியது நிறைய இருக்கு..
6. அம்மா.. எனகு ஆணா இருக்க பிடிக்கலை.. உடம்புக்குள்ள ஒரு முள் செடி முளைச்ச மாதிரி நரம்பெல்லாம் தெறிக்கற மாதிரி இருக்கு.. ( சபாஷ்.. அவர்கள் வலியை உணர்த்தும் நுட்பமான வசனம்)
7. எனக்கு அழுகையே வராது..ஏன்னா சின்ன வயசுல இருந்தே அதை முழுங்கி முழுங்கி வளர்ந்துட்டேன்..
8. என்னை மாதிரி தனியா இருக்கறவங்களுக்கு புத்தகங்கள் தானே துணை..
9. அளவுக்கதிகமான காதல் என் கண்னை மறைச்சிடுச்சு..என் கால் கூட என் சொல் பேச்சு கேட்க மாட்டேங்குது..
10. என்னதான் தோஷ நிவர்த்தி என்றாலும் என் புருஷன் இன்னொரு பொண்ணு கூட படுத்துட்டு வர்றதை எப்படி ஒத்துக்க முடியும்?( அதானே.. அதே பொண்டாட்டி வேற ஒரு ஆண் கூட படுத்துட்டு வந்தா தோஷம் சரி ஆகிடும்னா ஒத்துக்குவாங்களா?)
11. என்ன சார்.. இப்படி சொல்லீட்டீங்க? நீங்க தானே அவரை எனக்கு அறிமுகம் பண்ணீ விட்டீங்க?
அதுக்கு? நீங்க அவரை லவ் பண்ணுவீங்கன்னு எப்படி தெரியும்?
12. மன வலிகளை இசையால மட்டும் தானே கரைக்க முடியும்?
13. ஆணோ, பெண்ணோ காதல் தோல்வி ஏற்பட்டா மறுபடி வேற காதல், வேற வாழ்க்கை என சீக்கிரம் மாறிக்கலாம். ஆனா எங்களை மாதிரி திரு நங்கைகளுக்கு இது ரொம்ப பெரிய வலி..
இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்
1. களஸ்தர தோஷம் என்பதற்க்குப்பரிகாரமாக கணவன் வேறொரு திருநங்கைக்குத் தாலி கட்டி 2 நாட்கள் (இரவுகள்) இருந்தால் தோஷம் சரி ஆகி விடும் என ஒரு வசனம் வருகிறது.. அது ரொம்ப தப்பு..
பரிகாரம் 1
லக்னதிற்கு 7 வது இடம் களத்திர ஸ்தானம் எனப்படும். இவ்வாறு 7 ஆம் இடத்தில் சூரியன் , செவ்வாய் , சனி , சுக்கிரன் , ராகு , கேது இருந்தாலும் 7 ஆம் அதிபதி பலம் குன்றி இருந்தாலும் களத்திர தோஷமாகும்.
இதற்க்கு அந்த கிரகத்தை பிரீத்தி செய்ய விரதங்கள்// வழிபாடுகள் செய்வது தோஷத்தை நிவர்த்திகும்.,
இதற்க்கு அந்த கிரகத்தை பிரீத்தி செய்ய விரதங்கள்// வழிபாடுகள் செய்வது தோஷத்தை நிவர்த்திகும்.,
பரிகாரம் 2 - வாழை மரத்துக்கு தாலி கட்டி அதை வெட்டி விட்டால் அதுவும் தோஷ நிவர்த்தியே.. இது சில செவ்வாய் தோஷத்துக்கும் செய்வார்கள் .
2. ஒரு ஆண் திரு நங்கையிடம் ஐ லவ் யூ என்று சொல்லும்போது அவள் அதை அவ்வளவு ஈஸியா நம்பி விடுவாளா?எப்படி திருமணத்துக்கு சம்மதிகிறாள்?
3. கேரளாவில் உள்ள மலையாளிகள்( பெண்கள்) பொதுவா தினமும் அதிகாலையில் எழுந்து தலைக்கு குளித்து நெற்றியில் சந்தன கீற்று வைப்பார்கள். படத்தில் ஒரு முக்கிய கேரக்டர் அதை ஃபாலோ பண்ணவே இல்லையே?
4. திருநங்கையாக வரும் ஹீரோ தனக்கு பிடிக்காத இடத்தில் வாழும்போது ஒரு கார் வருது.. ஒரு இடத்துக்கு போலாம்னு கூப்பிடறாங்க..நைட் 10 மணீக்கு தவறான நோக்கத்துக்குத்தான் கூப்பிடறாங்க என அவருக்கு தெரியாதா?
5. ஹீரோயின் 16 வயசுப்பொண்ணு என்பதால் அந்த டூயட் சீனை இன்னும் கண்ணியமாக எடுத்திருக்கலாமே? எதற்கு கவர்ச்சி உடை? 20 வயசு பெண் என்றால் ஓக்கே..
6. ஹீரோவுக்கு திருநங்கை மாற்ற பூஜை சம்பந்தப்பட்ட சீன்களில் உண்மையை பதிவு செஞ்சது ஓக்கே.. இன்னும் கண்ணியமாக காமெரா கோணங்களை வைத்திருக்கலாமே?
இந்தப்படம் ஒரு ஆர்ட் ஃபிலிம் என்ற அளவில் தான் பேசப்படும்..
எல்லா செண்ட்டர்களிலும் இது 10 நாள் தான் ஓடும்
ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 39
குமுதம் எதிர்ப்பார்ப்பு ரேங்க்கிங்க் - ஓக்கே
ஈரோடு ஸ்ரீநிவாசாவில் ஓடுது
எச்சரிக்கை-1 - இந்தப்படம் மனோ ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதால் 25 வயதுக்கு உட்பட்டவர்கள், கர்ப்பிணிப்பெண்கள், மென்மையான மனம் படைத்த பெண்கள்,(பெண்மை என்றாலே மென்மைதானே?)மாணவ மாணவிகள், தனிமையில் இருக்கும் ஆண்கள்,மேன்சனில் குடி இருக்கும் பிரம்மசாரி ஆண்கள்,மனதளவில் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது..
எச்சரிக்கை 2 - வழக்கமாக காமெடி பதிவுகளில் கும்மும் நண்பர்கள் இந்த போஸ்ட்டில் கும்ம வேண்டாம் என அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஏனெனில் அது திருநங்கைகளை கேலி செய்வதாக நம்மையும் மீறி நடந்து விடலாம்..

60 comments:
hehe!
வணக்கம் அண்ணே....
வடை போச்சே அண்ணே....
மனோ இன்னைக்கு வாழ்க்கைலயே முதல் முறையா பதிவை படிச்சுட்டு கருத்து சொல்வாரு மக்களே,.,, ஹி ஹி
டேய் நாயே எச்சரிக்கையில என் பெயரை ஏன் போட்டேடா....ஹி ஹி ஹி ஹி...
//சி.பி.செந்தில்குமார் said...
மனோ இன்னைக்கு வாழ்க்கைலயே முதல் முறையா பதிவை படிச்சுட்டு கருத்து சொல்வாரு மக்களே,.,, ஹி ஹி///
அதான் என் பெயரை போட்டு நாரடிச்சிட்டியே, நாசமாபோவ.....
சிபி உண்மையிலேயே அருமையான விமர்சனம்.......கதை மாந்தர்களின் மனதில் மனித உள்ளங்களின் பரிவர்த்தனையை பிரதிபலிக்கிறது நன்றி சிபி கும்ம மாட்டேன்!
உன் விமர்சனம் சூப்பர்டா மக்கா.....
எச்சரிக்கை படித்தேன்! அப்டீன்னா யார்தான் படம்பார்ப்பாங்க?
உன் விமர்சனம் சூப்பர்டா மக்கா.....////////
என்னது விமர்சனம் சூப்பரா? அந்தாள் நம்மள கொலையா கொல்லுது நீ சூப்பர் என்கிறே ?
( இந்தக் கமெண்டில் இரட்டை அர்த்தம் இருக்கு கண்டு புடியுங்க )
MANO நாஞ்சில் மனோ said...
//சி.பி.செந்தில்குமார் said...
மனோ இன்னைக்கு வாழ்க்கைலயே முதல் முறையா பதிவை படிச்சுட்டு கருத்து சொல்வாரு மக்களே,.,, ஹி ஹி///
அதான் என் பெயரை போட்டு நாரடிச்சிட்டியே, நாசமாபோவ.....
சாரி... மனோ ரீதியான என்ற வார்த்தை எதேச்சையா வந்துடுச்சு.. அடுத்த முறை நாஞ்சில் மனோ ரீதியா என சொல்ரேன் ஹி ஹி
விக்கி உலகம் said...
சிபி உண்மையிலேயே அருமையான விமர்சனம்.......கதை மாந்தர்களின் மனதில் மனித உள்ளங்களின் பரிவர்த்தனையை பிரதிபலிக்கிறது நன்றி சிபி கும்ம மாட்டேன்!
புரிதலுக்கு நன்றி நண்பா
// சி.பி.செந்தில்குமார் said...
MANO நாஞ்சில் மனோ said...
//சி.பி.செந்தில்குமார் said...
மனோ இன்னைக்கு வாழ்க்கைலயே முதல் முறையா பதிவை படிச்சுட்டு கருத்து சொல்வாரு மக்களே,.,, ஹி ஹி///
அதான் என் பெயரை போட்டு நாரடிச்சிட்டியே, நாசமாபோவ.....
சாரி... மனோ ரீதியான என்ற வார்த்தை எதேச்சையா வந்துடுச்சு.. அடுத்த முறை நாஞ்சில் மனோ ரீதியா என சொல்ரேன் ஹி ஹி//
எலேய் கொன்னியா உனக்கு மைனஸ் ஓட்டு போடாம நீ அடங்கம்மாட்டே ராஸ்கல்....
>>ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
எச்சரிக்கை படித்தேன்! அப்டீன்னா யார்தான் படம்பார்ப்பாங்க?
திருநங்கைகள், ஃபிலிம் இன்ஸ்டிடூட் ஸ்டூடண்ட்ஸ், 25 வயதுக்கு மேற்பட்ட மன ரீதியில் பக்குவம் அடைந்தவர்கள் பார்ப்பார்கள் நண்பா
MANO நாஞ்சில் மனோ said...
// சி.பி.செந்தில்குமார் said...
MANO நாஞ்சில் மனோ said...
//சி.பி.செந்தில்குமார் said...
மனோ இன்னைக்கு வாழ்க்கைலயே முதல் முறையா பதிவை படிச்சுட்டு கருத்து சொல்வாரு மக்களே,.,, ஹி ஹி///
அதான் என் பெயரை போட்டு நாரடிச்சிட்டியே, நாசமாபோவ.....
சாரி... மனோ ரீதியான என்ற வார்த்தை எதேச்சையா வந்துடுச்சு.. அடுத்த முறை நாஞ்சில் மனோ ரீதியா என சொல்ரேன் ஹி ஹி//
எலேய் கொன்னியா உனக்கு மைனஸ் ஓட்டு போடாம நீ அடங்கம்மாட்டே ராஸ்கல்....
இப்பத்தான் விக்கி புலம்புனான். நீ தானா அது?
// ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
உன் விமர்சனம் சூப்பர்டா மக்கா.....////////
என்னது விமர்சனம் சூப்பரா? அந்தாள் நம்மள கொலையா கொல்லுது நீ சூப்பர் என்கிறே ?
( இந்தக் கமெண்டில் இரட்டை அர்த்தம் இருக்கு கண்டு புடியுங்க )///
அந்த நாதாரி அப்பிடியாவது அடங்குவானான்னு பார்க்கத்தான் அந்த பிட்டு ஹே ஹே ஹே....
//சி.பி.செந்தில்குமார் said...
விக்கி உலகம் said...
சிபி உண்மையிலேயே அருமையான விமர்சனம்.......கதை மாந்தர்களின் மனதில் மனித உள்ளங்களின் பரிவர்த்தனையை பிரதிபலிக்கிறது நன்றி சிபி கும்ம மாட்டேன்!
புரிதலுக்கு நன்றி நண்பா///
டாய் இங்கேயும் டபுள் மீனிங் பேசுறியா....???
//இப்பத்தான் விக்கி புலம்புனான். நீ தானா அது?//
டேய் அடங்குய்யா, மிதிச்சி புடுவேன்....
இன்னைக்கு வெள்ளிக்கிழமையா?
ஹே ஜாலி ஜாலி மூணு சப்பாத்தி காலி காலி.....
// ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
உன் விமர்சனம் சூப்பர்டா மக்கா.....////////
என்னது விமர்சனம் சூப்பரா? அந்தாள் நம்மள கொலையா கொல்லுது நீ சூப்பர் என்கிறே ?
( இந்தக் கமெண்டில் இரட்டை அர்த்தம் இருக்கு கண்டு புடியுங்க )///
அந்த நாதாரி அப்பிடியாவது அடங்குவானான்னு பார்க்கத்தான் அந்த பிட்டு ஹே ஹே ஹே....///
ஐயோ சி பி கோவிச்சுக்கப் போறார்! நான் அவர சொல்லல
//வேடந்தாங்கல் - கருன் *! said...
இன்னைக்கு வெள்ளிக்கிழமையா?//
நீ தண்ணி கிண்ணி அடிச்சிருக்கிய்யாய்யா....
//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
// ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
உன் விமர்சனம் சூப்பர்டா மக்கா.....////////
என்னது விமர்சனம் சூப்பரா? அந்தாள் நம்மள கொலையா கொல்லுது நீ சூப்பர் என்கிறே ?
( இந்தக் கமெண்டில் இரட்டை அர்த்தம் இருக்கு கண்டு புடியுங்க )///
அந்த நாதாரி அப்பிடியாவது அடங்குவானான்னு பார்க்கத்தான் அந்த பிட்டு ஹே ஹே ஹே....///
ஐயோ சி பி கோவிச்சுக்கப் போறார்! நான் அவர சொல்லல//
அப்போ நானா...???

யோவ் இது வேற! நம்மளையெல்லாம் விமர்சனம் பண்ணுறவர்!
மிஸ்டர் ஜீவனுக்கு இந்த ஆண்டின் சிறந்த மறைமுக நையாண்டிக்காரர் விருது அளிக்கப்படுகிரது
//சி.பி.செந்தில்குமார் said...
மிஸ்டர் ஜீவனுக்கு இந்த ஆண்டின் சிறந்த மறைமுக நையாண்டிக்காரர் விருது அளிக்கப்படுகிரது////
கும்ம கூடாதுன்னு பதிவுல சொல்லிட்டு நீ வந்து கும்மி லந்து குடுக்குறியே பரதேசி....
மிஸ்டர் ஜீவனுக்கு இந்த ஆண்டின் சிறந்த மறைமுக நையாண்டிக்காரர் விருது அளிக்கப்படுகிரது///
அட நீங்க வேற சி பி, நான் இன்னிக்கு மூணு மைனஸ் ஒட்டு வாங்கிட்டு உக்காந்திருக்கேன்!
அது சரி சி பி, நம்ம பதிவுலகத்துல யாராவது திருநங்கைகள் இருப்பாங்களா? சீரியாசா கேட்கிறேன்!
நானும் பாக்கறேன் இந்த பதிவுல கும்மக்கூடாதுன்னு சிபி தம்பி ஏன் கும்மிட்டு இருக்க!
யோவ் இது வேற! நம்மளையெல்லாம் விமர்சனம் பண்ணுறவர்!//
ஹே ஹே ஹே ஹே ஹே அப்பிடியா....
//சி.பி.செந்தில்குமார் said...
மிஸ்டர் ஜீவனுக்கு இந்த ஆண்டின் சிறந்த மறைமுக நையாண்டிக்காரர் விருது அளிக்கப்படுகிரது////
கும்ம கூடாதுன்னு பதிவுல சொல்லிட்டு நீ வந்து கும்மி லந்து குடுக்குறியே பரதேசி....
யோவ் யாரை திட்டுறே? என்னையா? சி பி யையா?
>>MANO நாஞ்சில் மனோ said...
//சி.பி.செந்தில்குமார் said...
மிஸ்டர் ஜீவனுக்கு இந்த ஆண்டின் சிறந்த மறைமுக நையாண்டிக்காரர் விருது அளிக்கப்படுகிரது////
கும்ம கூடாதுன்னு பதிவுல சொல்லிட்டு நீ வந்து கும்மி லந்து குடுக்குறியே பரதேசி....
தனிபட்ட கும்மி ஓக்கே.. பதிவின் கருத்துக்கள் பற்றிய கும்மி தான் வேணாம்னேன்
//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
மிஸ்டர் ஜீவனுக்கு இந்த ஆண்டின் சிறந்த மறைமுக நையாண்டிக்காரர் விருது அளிக்கப்படுகிரது///
அட நீங்க வேற சி பி, நான் இன்னிக்கு மூணு மைனஸ் ஒட்டு வாங்கிட்டு உக்காந்திருக்கேன்! //
ஓட்டை வடையிலும் இன்னொரு ஓட்டைய போட்ட புண்ணியவான் வாழ்க....
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
மிஸ்டர் ஜீவனுக்கு இந்த ஆண்டின் சிறந்த மறைமுக நையாண்டிக்காரர் விருது அளிக்கப்படுகிரது///
அட நீங்க வேற சி பி, நான் இன்னிக்கு மூணு மைனஸ் ஒட்டு வாங்கிட்டு உக்காந்திருக்கேன்!
எந்த அளவு மைன்ஸ் ஓட்டு வருதோ அந்த அளவு பெரிய ஆள் ஆகிட்டு வர்றீங்கன்னு அர்த்தம்
யார்ரா அந்த நாதாரி என் பதிவுல வந்து மைனஸ் ஓட்டு போட்ட பன்னாட!
//தனிபட்ட கும்மி ஓக்கே.. பதிவின் கருத்துக்கள் பற்றிய கும்மி தான் வேணாம்னேன்///
ராஸ்கல் இதுக்கு இப்பி ஒரு ஆங்கிள் வச்சிருக்கியா ஹா ஹா ஹா ஹா நீ கில்லாடிய்யா...
// விக்கி உலகம் said...
யார்ரா அந்த நாதாரி என் பதிவுல வந்து மைனஸ் ஓட்டு போட்ட பன்னாட!///
யோவ் எனக்கு ரெண்டு பேர் மேல சந்தேகம், ஒன்னு சிபி அல்லது கருண், நல்லா திட்டும் ஒய்....
தரமாகவும் அதிக பொறுப்புணர்வுடனும்
எழுதப்பட்ட விமர்சனம் இது
எனவே இறுதியில் வைக்கப்பட்ட வேண்டுகோள் சரியே
தரமான பதிவு தொடர வாழ்த்துக்கள்
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
மிஸ்டர் ஜீவனுக்கு இந்த ஆண்டின் சிறந்த மறைமுக நையாண்டிக்காரர் விருது அளிக்கப்படுகிரது///
அட நீங்க வேற சி பி, நான் இன்னிக்கு மூணு மைனஸ் ஒட்டு வாங்கிட்டு உக்காந்திருக்கேன்!
எந்த அளவு மைன்ஸ் ஓட்டு வருதோ அந்த அளவு பெரிய ஆள் ஆகிட்டு வர்றீங்கன்னு அர்த்தம்///
அப்படியா நண்பா! நான்கூட இன்னிக்கு பீல் பண்ணிட்டு இருந்தேன், போயும் போயும் நம்மள எதிரியா கருதுராங்களே னு! நீங்க சொன்னதுக்கப்புறம் தெம்பு வந்திரிச்சு!
//எந்த அளவு மைன்ஸ் ஓட்டு வருதோ அந்த அளவு பெரிய ஆள் ஆகிட்டு வர்றீங்கன்னு அர்த்தம்//
அண்ணே எந்த அளவுன்னு ஸ்கேல் வச்சி அளந்து பார்த்து சொல்லுங்கண்ணே....
அடச்சேய் கொய்யால ஓடிட்டான்ய்யா சிபி....
மனோ இருக்கேன்
//மனோ இருக்கேன்//
பாத்ரூமிலா....
சிபி சார் என்னும் மோதிரக் கையால குட்டுப்பட்ட படமா? அப்ப படம் நல்லதான் இருக்கும்போல. ஆனால் இதுப்போன்ற தரமான படங்களை எத்தனை பேர் பார்ப்பாங்க.
voted.
நறுக்குன்னு நாலு ஒட்டு குத்திட்டு கிளம்பியாச்சு பாஸ்...
நான் வெள்ளிக்கிழமை மாலைதான் விமர்ச்சனம் போடுவீங்கன்னு ஏமாந்துட்டேன்.
நான் வெள்ளிக்கிழமை மாலைதான் விமர்ச்சனம் போடுவீங்கன்னு ஏமாந்துட்டேன்.
நான் வெள்ளிக்கிழமை மாலைதான் விமர்ச்சனம் போடுவீங்கன்னு ஏமாந்துட்டேன்.
நான் இந்த படத்தை பார்க்கப்போவதாக இல்லை... இருந்தாலும் மிக பொறுப்புடன் விமர்சனம் செய்த சிபிக்கு வாழ்த்துக்கள்... ///எல்லாப்பயளுவளும் இங்க தான் இருக்கிங்களா? அங்க நான் ஒருத்தன் கடைய திறந்து வச்சிட்டு உக்காந்திருக்கேன்.. ஒரு பய எட்டி பாத்திங்களா? ப்ளடி ராஸ்கல்ஸ்... எல்லாரும் கெளம்புங்கையா ...
நர்த்தகி படம் இன்னும் பார்க்கவில்லை விமர்சனம் பகிர்ந்தமைக்கு நன்றி சகா
நல்ல விமர்சனம்..பரிகாரமும் அருமை.(நன்றி:சதீஷ்குமார்-னு போடலியா?)
தமிழ்மணத்தைக் காணோம்..அப்போ அது ஒர்க் ஆகுறவரை நாம கடையைத் திறக்கக் கூடாது..
வீரனாக தான் வளர்க்க விரும்பும் ஆண் குழந்தை சின்ன வயதிலே பெண் தன்மையுடன் வளர்வது கண்டு கோபம் அடைந்த தந்தை அவனை வீட்டை விட்டு துரத்தி விடுகிறார்..
மிகவும் கொடுமையான விஷயம் தான் சகோ....இன்னும் இவர்கள் சமூகத்தாலும், நம்மைப் போன்றோராலும் அங்கீகரிக்க படவில்லை என்பதே வருத்தமான விஷயம்..முடிந்த வரை அனைவரும் மனிதத்தோடு நடப்போம்
இந்த பதிவில் ஐந்தாவது வசனமாய் குறிபிட்டுள்ள வசங்கள் தான் தற்போது சமுகத்தில் நடந்தேறி வருகின்ற ஒன்று...திருநங்கைகள் ஒதுக்கப் பட்டவர்கள் அல்ல..நம்மோடு ஒன்றி வாழ வேண்டியவர்கள்...இயற்க்கை அளித்த தவறுக்கு இவர்களை தண்டித்தல் மிகவும் வருத்தப் படவேண்டிய செயல்...பல நேரங்களில், ரயில் பயணங்களில் இவர்களைப் போன்ற பலரை நான் சந்தித்திருக்கிறேன்...அனைவரும் மாறவேண்டும்..
எச்சரிக்கை 2 என்னை கவர்ந்தது..வழக்கமாக நான் படித்த அளவில் உங்கள் பதிவில் நகைச்சுவை அதிகம் இருக்கும்...இந்த பதிவும் விமர்சனம் சார்ந்த ஒன்றாய் இருந்தாலும், தன்னோடு ஒட்டி வாழும் உறவுகள் விமர்சிக்க படக்கூடாதென்ற உங்கள் உள்ளம் புரிகிறது..முடிந்தவரை மனிதனாய் மனிதத்தோடு வாழ்வோம்...நம்மோடு சேர்ந்து சுற்றிய சமுகத்தையும் நலமாய் வைப்போம்...விமர்சனமே இருந்தாலும் நான் மிகவும் ரசித்தேன்... வாழ்த்துக்கள் சகோ...தவறுதலாய் சொல்லி இருந்தால் மன்னிக்கவும்
பரத நாட்டியம்.அதனால் ஏற்படும் பெண்தன்மை.இது என்னவோ உண்மையென்றும்
உங்கள் கருத்து ஏற்று கொள்ள முடியாத போலவும் தோன்றுகிறது.
என்னதான் சீறிப்பாய்ந்து சில படங்களிலும் சண்டைபோட்டாலும் கமலிடம்
ஒரு பெண்ணின் நளினம் இருக்கும்.ஆனால் என்றாவது,எங்காவது,யாராவது
ரஜினியிடம் இதை கண்டதுண்டா?சந்திரமுகியில் வேட்டையனாக கம்பீரமாக
விறுவிறுவென்று நடந்துவரும் ரஜினியை பாருங்கள்.
ஆண்மையின் கம்பீர நடை அது.வரலாறு படத்தின் அஜீத் கேரக்டரை நினைவூட்டுகிறேன்.
பற்றாக்குறைக்கு இருக்கவே இருக்கிறார் டான்ஸ் மாஸ்டர் ரவிசங்கர்.
அவ்வளவு நல்ல படமா?
திருநங்கைகள் என்று குறிப்பிடுவதே ஒரு பெருந்தன்மை.அவர்களையும் மதிப்போம் எங்களைப்போலவே 1
தமிழ் சினிமா வரலாற்றில் இந்தப் படம் ஒரு மைல் கல்லாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
தல உண்மையிலேயே அருமையான விமர்சனம்
Post a Comment