Saturday, May 07, 2011

சகல கலா டாக்டர் டாக்டர்.. அகில உலக அழகி நர்ஸூ நர்ஸூ

''முதுகு வலிக்கு டாட்டா!''

நம்பிக்கை கொடுக்கும் டாக்டர் டிப்ஸ்..


முதுகு வலி... பைக் ஓட்டுபவர்களைப் பயமுறுத்தும் பூதம். இரண்டு-மூன்று ஆண்டுகள் தொடர்ந்துஅதிக நேரம், அதிக தூரம் பைக் ஓட்டுபவர்களுக்கு, இந்தப் பிரச்னை தவிர்க்க முடியாததாக இருக்கிறது. கார், பஸ் ஓட்டும் டிரைவர்களும் முதுகு வலிக்குத் தப்புவது இல்லை!

நம்முடைய முதுகு, வாகனத்தில் உட்காரும் வசதிக்காக உருவானது அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
அதனால், தொடர்ந்து பைக் ஓட்டுபவர்களுக்கு முதுகு வலி தவிர்க்க முடியாததாக ஆகிவிடுகிறது. 'முதுகு வலியில் இருந்து விடுபட வழியே இல்லையா?’ என்று கேட்பவர்களுக்கு, சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையின் மூளை மற்றும் முதுகெலும்பு அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் கே.ஸ்ரீதர், ஆறுதலாக சில ஐடியாக்கள் வழங்குகிறார்.

''தொடர்ந்து பைக், கார் ஓட்டுபவர்களுக்கு முதுகு வலி பிரச்னைகள் வருவதற்கான சாத்தியம் அதிகம். இதற்குக் காரணம், பைக் மற்றும் கார்கள் அல்ல. நம் ஊர்சாலைகள்தான்! குண்டும் குழியுமான மோசமான சாலைகளில் பயணிக்கும்போது முதுகுத் தண்டில் வலி ஏற்படும். அதிக தூரம் பைக் ஒட்டுவதோடு, கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்தே வேலை பார்ப்பவர்கள் என்றால், இந்தப் பிரச்னை இன்னும் அதிகரித்துவிடும். பொதுவாக, ஸ்கூட்டர்கள் ஓட்டுவது (குறைந்த தூரப் பயணங்களுக்கு) ஓரளவுக்கு முதுகு வலித் தொல்லைகளில் இருந்து காப்பாற்றும்.

அதேபோல், புல்லட் போன்ற எடை அதிகமான பைக்குகளை ஓட்டும்போது பைக் அதிர்வுகளும், குதிப்பதும் குறைவாக இருக்கும். இதனால், முதுகு வலி பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புகள் குறைவு. முதுகு வலிப் பிரச்னைகளில் இருந்து தப்பிக்க, எடை அதிகமான பைக்கைப் பயன்படுத்தலாம்.

அடி முதுகுக்கு என்று தனியாக விற்பனை செய்யப்படும் 'லம்பர் சப்போர்ட்’ பெல்ட்டை அணிந்து கொண்டும் பைக் ஓட்டலாம். முதுகு வலி வராமல் தடுப்பதற்கு 'பேக் எக்ஸர்ஸைஸ்’ நிறைய இருக்கின்றன. யோகாவும் செய்யலாம்!'' எனச் சொல்லும் டாக்டர் ஸ்ரீதர், மேற்கொண்டு கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்களையும் இங்கே பட்டியல் போடுகிறார்...


பர்ஸைக் கவனியுங்கள்!

பர்ஸில் தேவையில்லாத பல்வேறு விஷயங்களை வைத்துக்கொண்டு தடிமனான பர்ஸோடு பலரும் பயணிக்கிறார்கள். பின் பக்கம் பர்ஸ் கனமாக இருப்பதால், கார் ஓட்டும்போதோ அல்லது பைக் ஓட்டும்போதோ நம்மை அறியாமலேயே பர்ஸ் இருக்கும் பக்கத்துக்கு எதிர்ப் பக்கமாக சாய்ந்து உட்காருவோம். இது நாளடைவில் முதுகு வலியை ஏற்படுத்தும். அதனால், பர்ஸின் தடிமனைக் குறைவாக வைத்துக் கொள்ளுங்கள்.


பெல்ட்டின் இறுக்கத்தைத் தளர்த்துங்கள்!

மிகவும் இறுக்கமான பேன்ட், பெல்ட் அணிந்துகொண்டு பைக் ஓட்டுவதை நிறுத்துங்கள். பேன்டும், பெல்ட்டும் இறுக்கமாக இருக்கும்போது, நம்மால் சரியான பொசிஷனில் உட்கார்ந்து பைக் ஓட்ட முடியாது. இது, முதுகுவலிப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். அதனால், நீண்ட தூரப் பயணங்கள் செய்யும் போது, எப்போதுமே இறுக்கமான உடைகள் அணிந்துகொண்டு வாகனம் ஓட்டாதீர்கள். வாகனம் ஓட்டும்போது இடுப்பில் இறுக்கம் இல்லாமல் ரிலாக்ஸாக உட்கார்ந்து ஓட்டப் பழகுங்கள்.

அடி முதுகுக்கு சப்போர்ட் தேவை!

அடி முதுகு (லம்பர்) பகுதிக்கு எப்போதுமே சப்போர்ட் தேவை. லேட்டஸ்ட் கார்களில் 'லம்பர் சப்போர்ட்’ கொண்ட இருக்கைகளே வந்துவிட்டன. அதேபோல், அலுவலகத்தில் உட்காரும்போதும் முதுகுக்குத் தொல்லை தராத, வசதியான இருக்கையில் உட்கார வேண்டியது முக்கியம்.

அடி முதுகுக்கு சப்போர்ட்டாக சின்ன தலையணையைக் கூட பின்பக்கமாக வைத்துக் கொள்ளலாம். அல்லது பெரிய டவலை முக்கோண வடிவில் மடித்து பின் பக்கம் சப்போர்ட்டாக வைத்துக் கொள்ளலாம்.

பிரேக் வேண்டும்!

தொடர்ந்து பைக் அல்லது கார் ஓட்டுவதை நிறுத்துங்கள். தொடர்ந்து 2 மணி நேரத்துக்கு மேல் வாகனம் ஓட்டுவது என்பது வாகனத்துக்கும், ஓட்டுபவருக்கும் நல்லதல்ல!

2 மணி நேரத்துக்கு ஒருமுறை வாகனத்தை நிறுத்திவிட்டு கை, கால்களை நீட்டி மடக்கி ரிலாக்ஸ் செய்யுங்கள். அதேபோல், நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருந்தால், அடிக்கடி கால்களை நீட்டி மடக்குவது நல்லது.

சரியான பாதைகளைத் தேர்ந்தெடுங்கள்!

குண்டும் குழியுமான மோசமான சாலைகள் வழியாகத்தான் பயணிக்கப் போகிறோம் என்றால், முடிந்தவரை அந்த வழியைத் தவிர்த்துவிடுவது நல்லது. குண்டும் குழியுமான சாலைகள்தான் முதுகு வலித் தொல்லைகள் ஏற்பட முக்கியக் காரணம். கார் ஓட்டுபவர்களைப் பொறுத்தவரை டிரைவரின் சரியான உயரத்திற்கேற்ப ஸ்டீயரிங் பொசிஷனை மாற்றி வைத்துக்கொள்வது நல்லது!

உடற்பயிற்சி தேவை!
 
தினமும் அரைமணி நேரம் நடப்பது, முதுகுவலி உள்பட பல்வேறு வலிகள் நம்மை நெருங்காமல் பார்த்துக் கொள்ளும். ஸ்டீம் தெரபி, மசாஜ் ஆகியவை முதுகு வலிக்கு நிவாரணமாக அமையும்.  நீச்சல் பயிற்சி செய்வதும் நல்லது!

நன்றி - டாக்டர் விகடன்

21 comments:

காங்கேயம் P.நந்தகுமார் said...

Unknown said...

hehe!

காங்கேயம் P.நந்தகுமார் said...

Unknown said...

திரு சிபி உங்க இந்தப்பதிவு ரொம்ப பயனுள்ளதா இருக்கு நன்றி!

Anonymous said...

ஆனந்த விகடனுக்கு நன்றி ஹிஹி

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அந்தப் பொண்ணு நல்லா ஓட்டும் போல இருக்கே பைக்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

( பதிவை முழுமையாகப் படிக்காமல் ஒருவர் கமென்ட் போட்டால் எப்படி இருக்கும்? ) அண்ணே! கலக்கீட்டீங்க! எப்படியண்ணே உங்களால மட்டும் இவ்வளவு தகவல்கள திரட்ட முடிஞ்சது?

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ம்.... தேவையான தகவல்கள் தான்...

வாழ்த்துக்கள்..

suresh said...

Thanks for your information

suresh said...

அண்ணே! கலக்கீட்டீங்க! எப்படியண்ணே உங்களால மட்டும் இவ்வளவு தகவல்கள திரட்ட முடிஞ்சது?

NKS.ஹாஜா மைதீன் said...

பயனுள்ள தகவல்கள்....பகிர்வுக்கு நன்றி...

சிராஜ் said...

போட்டோ நல்ல செலக்ட் பண்றீங்க

காங்கேயம் P.நந்தகுமார் said...

நன்றி சி.பி.

காங்கேயம் P.நந்தகுமார் said...

சி.பி. தற்போது எங்கே இருக்கிறார்?

காங்கேயம் P.நந்தகுமார் said...

சி.பி. ரொம்ப பிஸி

காங்கேயம் P.நந்தகுமார் said...

சி.பி அண்ணனுக்கு சதாரண வைரஸ்காய்ச்சல்தான் . யாரும் பயப்படவேண்டாம்.

MANO நாஞ்சில் மனோ said...

களவாணி பயலே.....

MANO நாஞ்சில் மனோ said...

பைக் ஓட்டுற எல்லாருக்கும் பயனுள்ள பதிவுடே மக்கா...

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
a said...

அவசிய தகவல்கள்....

நான் வாகனத்தில் செல்லும் போது பர்ஸை முன் பாக்கெட்டிற்க்கு மாற்றிக்கொள்வதுண்டு....

செங்கோவி said...

பைக் ஓட்டுற ஃபிகரு யாருண்ணே?