Tuesday, April 12, 2011

கலைஞரின் அர்த்த(மற்ற) சாஸ்திரம் VS ஆனந்த விகடனின் பிரம்மாஸ்திரம்...



 

 

டந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில், ஈட்டி முனையாகப் பாய்ந்து வந்த பல கேள்விகளுக்கு, முதல்வர் கருணாநிதி பதில் சொல்ல முடியாமல் பரிதவித்து நின்றதற்குப் பல காரணங்கள்! அதற்கான வேரைத் தேடினால், திசை மாறிப்போன ஒரு பரிதாபப் பயணத்தின் கதைதான் கிடைக்கும்!


தி.மு.கழகத்துக்கு அறிஞர் அண்ணா தொடக்க விழா கண்டபோது, அவரைச் சுற்றி மெத்தப் படித்தவர்களுக்குப் பஞ்சம் இல்லை. இருப்பினும், கால ஓட்டத்தில் 'செயல் வீரர்’ என்று அண்ணாவால் அடையாளம் காட்டப்பட்டார் கருணாநிதி. பேச்சும் எழுத்துமே மூச்சாகக் கழகம் வளர்ந்தபோது, அதோடு சேர்த்து ஓய்ச்சல் இன்றி ஊர் ஊராகப் போய் நேரடியாகத் தொண்டர்களைப் பார்த்து தட்டிக் கொடுப்பதிலும் கூடுதல் நேரம் செலவிட்டார் கருணாநிதி.


ஐம்பெரும் தலைவர்களாக இருந்தவர்களைத் தாண்டி, அண்ணாவுக்கு அடுத்து தலைமை நாற்காலியைத் தனதாக்கிட கருணாநிதிக்குப் பக்கத் துணையாக நின்ற மூன்று தகுதிகள் - நிர்வாகத் திறமை, விரைந்து முடிவெடுக்கும் ஆற்றல்... இதோடு, சொல்லில் அஞ்சாமை!




ஐந்து முறை முதல்வர், பத்தாம் முறை தி.மு.க. தலைவர் என்று அரிய பெருமையுடன் திசை விலகாது தொடர்ந்த கருணாநிதியின் பொது வாழ்க்கைப் பயணம், கடந்த ஐந்து ஆண்டுகளில் நம்ப முடியாத அளவுக்கு அலை பாய்ந்தது.

'கழகம் ஒன்றும் சங்கர மடம் அல்ல!' என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்லும் அவர், ஒட்டுமொத்தக் கட்சியையும் தன் குடும்பச் சொத்தாக மாற்றிக் காட்டியது இந்த ஐந்து ஆண்டுக் காலத்தில்தான்!

மதுரையில், ஒரு கும்பல் பத்திரிகை அலுவலகத்தைத் தீயில் பொசுக்கி, மூன்று அப்பாவி உயிர்களைச் சாம்பலாக்கியபோது, அந்த அராஜகக் கும்பலை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டியவர், 'சர்வே வேண்டாம் என்றேன். சொன்னால் கேட்டால்தானே?' என்று வன்முறைக்கு சப்பைக்கட்டு கட்டிய விபரீதம் நிகழ்ந்தது.




  a
இலைமறை காயாக அதுவரை தென்பட்ட அவருடைய குடும்பப் பாசம், அந்தக் கணத்தில் இருந்துதான் அச்சமூட்டும் வகையில் சலங்கை கட்டி ஆடத் தொடங்கியது!

காவிரிக்கும், முல்லைப் பெரியாறுக்கும், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கும் டெல்லிக்குப் போகாத கருணாநிதி... தன்னுடைய மகன், மகள், பேரனுக்குப் பதவிகள் வாங்குவதற்காக ஒரு வார காலம் தலைநகரில் முகாமிட்டுத் தடாலடிப் பேரம் பேசியபோது... இந்திய அளவில் எழுந்த எந்த விமர்சனங்களும் அவர் காதில் விழவில்லை.

நினைத்ததைச் சாதித்துக்கொண்டு திரும்பியபோது, குற்ற உணர்வுக்குப் பதிலாக, வெற்றிக் களிப்பே அவர் முகத்தில் தாண்டவம் ஆடியது!


.
 
ஈழத் தமிழர்கள் ஈசல் கூட்டம்போல் நசுக்கிக் கொல்லப்பட்டபோது, அவர் காட்டிய மௌனமோ, 'வீழ்வது தமிழனாக இருப்பினும்... வாழ்வது நாமாக இருக்கட்டும்!' என்று சொல்லாமல் சொல்லும்படி அமைந்தது. மேடைகளில் மட்டும் இன்றி... அச்சிலும், தொலைக்காட்சியிலும், இணைய தளங்களிலும், குறுஞ்செய்திகளிலும் இந்த அளவுக்குக் கடுமையாக ஒரு தலைவர் எங்காவது விமர்சனத்துக்கு ஆளாகி இருப்பாரா?

வரலாற்றின் பக்கங்களில் தேடினாலும் விடை கிடைக்காது! அந்த விமர்சனங்களின் வலியைவிட, இலங்கைப் பிரச்னையில் மத்திய அரசுக்கு இணக்கமாகப் போவதால் கிடைக்கும் சுகம் கூடுதலாக இருந்தது. அதுவே, கேள்விகளுக்குப் பதில் தராமல் தடுத்தது!


 

  a

1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் நாட்டுக்கு இழப்பீடு ஏற்படுத்தியதாக மத்திய அமைச்சர் ஆ.ராசாவை நோக்கி நாடே கொந்தளித்தபோது... 'தகத்தகாய கதிரவன்' எனப் பட்டம் சூட்டி கருணாநிதி உச்சி முகர்ந்த காட்சி... குடும்பப் பாசத்தோடு சேர்ந்து 'வேறு' சில நிர்பந்தங்களுக்கும் அவர் கடன்பட்டு இருப்பதாகவே காட்டியது.

முன் ஏர் கொண்ட பலவீனங்களைப் பயன்படுத்திக்கொண்டன பின் ஏர்கள். மாநில மந்திரிகள் பலர் மீதும் இந்த ஆட்சியில் அடுக்கடுக்கான அதிர்ச்சிப் புகார்கள். குடும்பப் பாசத்துக்கும், அதிகார துஷ்பிரயோகத்துக்கும், வாரிசு வளர்ச்சிக்கும், கொண்டாட்டக் குதூகலத்துக்கும் தி.மு.க-வின் மந்திரிகளும் விதிவிலக்கு அல்ல.

விலைவாசி ஏற்றத்தால் தவித்துத் தள்ளாடிய மக்களுக்கு ஆரோக்கியமான நிரந்தரத் தீர்வைப் பெற்றுத் தருவதற்குப் பதிலாக, 'இலவசங்கள் இருக்கையில் எதிர்காலம் பற்றி ஏன் கவலை' என்று மயக்க மருந்து கொடுத்தே தன் கடமையைக் கழித்துக்கொள்ளப் பார்த்தது தி.மு.க. அரசு.





 
 

 a

'பசித்தவனுக்கு மீன் கொடுப்பதற்குப் பதிலாக, மீன் பிடிக்கக் கற்றுத் தருவோம்' என்ற பொன்மொழி தமிழ்நாட்டில் வீண் மொழியாகிப் போனதுதான் மிச்சம்! 'மீனுக்கு நாங்களே மசாலாவும் தடவி, அதை உங்கள் வீட்டுக்கே தேடி வந்து ஊட்டிவிடுகிறோம்' என்று சொல்லி... அதையே தன் சாதனையாகவும் காட்டிக்கொண்டது ஆளும் அரசு!

விவசாயம் அற்றுப்போய்விட்டது... விவசாயக் கூலிகள் நம்பிக்கை இழந்து நடுவீதிக்கு வந்துவிட்டார்கள் என்ற கதறல்களைக் காதில் போட்டுக்கொள்ளவில்லை. மாறாக, 'வேலை பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் கூலி உறுதி' என்று வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கவர்ச்சி காட்டி- மத்திய அரசின் நற்சான்றிதழோடு - கொடுத்தது ஒரு காசு, கணக்கிலே வேறு காசு என்று அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கூட்டுக் கொள்ளை அடிக்க வாய்ப்பு உண்டாக்கிக் கொடுத்தது இந்த அரசின் தனி 'சாதனை'!




 

 
  a
உழைத்துதான் பிழைப்பேன் என்று தறி நெசவையும் மற்ற ஆலைகளையும் நம்பி இருந்த தொழிலாளர்களையும் வேலையை விட்டுத் துரத்தியது மாளாத மின்வெட்டு! விவசாயம் துவங்கி, துணி சாயம் வரை இந்த மின்வெட்டால் இருண்டுபோன குடும்பங்கள் எத்தனை எத்தனை!

இல்லாதவர்களுக்கு இலவசங்களைத் தருவதில் தவறில்லை... ஆனால், விலைவாசியை உச்சத்துக்குக் கொண்டுசென்று, உழைப்பவர்களை இலவசத்தால் வெட்டியாக வீட்டுக்குள் முடக்கிவைத்து, தெருவுக்குத் தெரு மதுக் கடைகளை நிரப்பி, உயர்கல்வியைக் கைக்கெட்டாத உயரத்துக்குக் கொண்டுசென்று, எதிர்காலச் சந்ததியையும் சுயமாகச் சிந்திக்க முடியாத மந்த நிலையிலேயே ஆழ்த்தி வைக்கும் தந்திரத்துக்குப் பெயரா மக்கள் நலத் திட்டம்?

'உங்களுக்காகவே ஐந்து முறை முதல்வராக உழைத்தேன். ஆறாம் முறையும் உங்களை வைத்து வண்டியை இழுக்க வாய்ப்பு கொடுங்கள்' என்று பிரசார மேடைகளில் வாக்கு கேட்கிறார் முதல்வர் கருணாநிதி.



 


வண்டியை இழுக்க இன்னொரு வாய்ப்பு கொடுத்தாலும், அந்தப் பயணம் தனக்கு அல்ல... பாதை போட்டுக் கொடுக்க மட்டுமே தன்னைப் பயன்படுத்திக்கொள்வார் என்பதைத் தமிழக வாக்காளன் மறந்துவிடலாமா?

35 comments:

shanuk2305 said...

vandikoo motor mattura alavukkoo correct pannikoovaar

rajamelaiyur said...

Che. . Vadaiya miss paneten.

rajamelaiyur said...

Dmk puttukum . .

rajamelaiyur said...

Yanka vaydanthankal la kaannum?

ராஜி said...

பசித்தவனுக்கு மீன் கொடுப்பதற்குப் பதிலாக, மீன் பிடிக்கக் கற்றுத் தருவோம்' என்ற பொன்மொழி தமிழ்நாட்டில் வீண் மொழியாகிப் போனதுதான் மிச்சம்! 'மீனுக்கு நாங்களே மசாலாவும் தடவி, அதை உங்கள் வீட்டுக்கே தேடி வந்து ஊட்டிவிடுகிறோம்' என்று சொல்லி... அதையே தன் சாதனையாகவும் காட்டிக்கொண்டது ஆளும் அரசு!

>>>
Nice punch

ராஜி said...

மீண்டும் தங்களுக்கே உரிய (Cut, Copy&Paste))பாணியில் ஒரு பதிவா?

பாட்டு ரசிகன் said...

காலையில் என்ன ஒரு அசத்தல்..

ராஜி said...

Thanks Sir

Unknown said...

நண்பரே தேர்தல் விஷயங்க போடக்கூடாதுன்னு தடை இருக்கே தெரியுமா!

பாட்டு ரசிகன் said...

மீன் பிடிக்க கற்றுக் கொடுக்கலாம் அப்படி கற்றுகொடுத்து விட்டால் தமிழன் தலைநிமிர்ந்துக் கொள்வானே..
நாம் எப்போதும் அரசியல்வாதிகளுக்கு அடிமையாகவே இருக்க வேண்டும்..

என்ன கொடுமை..

வைகை said...

ஆனந்த விகடன் தலையங்கத்த போடறதுக்கா... ராத்திரி அவ்வளவு நேரம் யோசிக்கணும்? ( பன்னிகுட்டியிடம் சொன்னது!)

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

நண்பரே தேர்தல் விஷயங்க போடக்கூடாதுன்னு தடை இருக்கே தெரியுமா!


அப்படியா?

சி.பி.செந்தில்குமார் said...

வைகை said...

ஆனந்த விகடன் தலையங்கத்த போடறதுக்கா... ராத்திரி அவ்வளவு நேரம் யோசிக்கணும்? ( பன்னிகுட்டியிடம் சொன்னது!)

ஹா ஹா .. யாரப்பா அது ஒட்டுக்கேட்டது?

வைகை said...

எப்பிடியிருந்தாலும் மக்களுக்கு நல்லது நடந்தா சரி!

சி.பி.செந்தில்குமார் said...

Raja=Theking said...

Yanka vaydanthankal la kaannum?

கடலை சாகுபடியில் அண்ணன் பிஸியா இருக்காராம்.. முடிச்சுட்டு வந்துடறேன்னார்.. மேட்டரையா? கடலையையா?னு தெரில..

சி.பி.செந்தில்குமார் said...

வைகை said...

எப்பிடியிருந்தாலும் மக்களுக்கு நல்லது நடந்தா சரி!

டவுட் தான்

Unknown said...

யூத்து அவர்களே நீங்க எப்ப இந்த மாதிரி நல்ல அரசியல்வாதி ஆகப்போறிங்க!

Unknown said...

ஓருவர் உழைப்பில் ஒரு நூற்றாண்டுக்கு அவர் குடும்பம் வளப்படும் எனபதற்கு இதுவே சாட்சி ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

யூத்து அவர்களே நீங்க எப்ப இந்த மாதிரி நல்ல அரசியல்வாதி ஆகப்போறிங்க!

ஏன்? என்னைத்தாக்கி பதிவு போட ஆசையாக்கும்?

ராஜி said...

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

யூத்து அவர்களே நீங்க எப்ப இந்த மாதிரி நல்ல அரசியல்வாதி ஆகப்போறிங்க!

ஏன்? என்னைத்தாக்கி பதிவு போட ஆசையாக்கும்?
>>>>>>>>>>

இல்லைனாலும் மட்டும் உங்களைத் தாக்கி யாரும் பதிவு போட மாட்டாங்களாக்கும்.

ராஜி said...

விகடன் வாங்கும் செலவை மிச்சம் பண்ணும் சிபி வாழ்க வாழ்க

விகடன் வாங்கும் செலவை மிச்சம் பண்ணும் சிபி வாழ்க வாழ்க

விகடன் வாங்கும் செலவை மிச்சம் பண்ணும் சிபி வாழ்க வாழ்க

விகடன் வாங்கும் செலவை மிச்சம் பண்ணும் சிபி வாழ்க வாழ்க

சக்தி கல்வி மையம் said...

தன்னுடைய மகன், மகள், பேரனுக்குப் பதவிகள் வாங்குவதற்காக ஒரு வார காலம் தலைநகரில் முகாமிட்டுத் தடாலடிப் பேரம் பேசியபோது... இந்திய அளவில் எழுந்த எந்த விமர்சனங்களும் அவர் காதில் விழவில்லை. --- எப்படி விழும்?

சக்தி கல்வி மையம் said...

நான் ரொம்ப லேட்டு..

சக்தி கல்வி மையம் said...

25..

சசிகுமார் said...

வாவ் சூப்பர் தல இது போன்ற பதிவுகளை தான் உங்களிடம் இருந்து எதிர்பார்த்தேன். சூப்பர் செந்தில்

மர்மயோகி said...

இந்த ஆபாச விகடன் மக்களுக்கு நல்லது செய்யவா இதெல்லாம் எழுதுகிறான் என்ற நினைக்கிறீர்கள்..
அவனுக்கும் கருணாநிதி குடும்பத்துக்கும் ஏதோ தகராறு..அதற்கும் முன்பு இவன்தான் கலைஞர் கலைஞர் என்று வாய்கிழிய புகழ்ந்து கொண்டிருந்தான்..
இவன் சம்பாத்தியத்திற்கு நீங்கள் மேலும் விளம்பரம் செய்து வால் பிடிப்பது அருவருப்பாக உள்ளது..

பெம்மு குட்டி said...

Wow i put my first vote for you for this article .............

Anonymous said...

ananda vikadanin 25 varuda vasan naan,viyabarathukkaga en muthaliidam soram pona ,en vazkaiil vilaiyadia oru pathirikai oru arasialvathiai vida kevalamanathu,it means aaaaaaaavi,and juuuuuuuuuuvi are not definitly 4th estate

jothi said...

அன்பு நண்பர் விஷ்ணு அவர்களுக்கு உங்கள் கருத்துக்கள் அருமை , ஆனால் உங்களை போன்ற அதிகம் படித்த , உலக ஞானம் உள்ள , அதிபுத்திசாலி மேதாவி அறிவிஜீவிகள் , இந்த ஊழல் சாக்கடையை இறங்கி சுத்தம் செய்ய தயாரா ? , இந்த ஊழல், கொள்ளைக்காரன் , திருடன் ,ரவுடி கருணாநிதி ஆட்சியை அகற்றி விரட்ட நான் ரெடி , அப்புறம் இந்த நாட்டில் நல்ல ஆட்சி அளிக்க , மக்கள் கடனில்லாமல் வாழ, பசி பஞ்சம் நோய் இல்லாமல் வாழ , அணைத்து பொருட்களும்
இப்போது உள்ள விலையை விட குறைவாக பெற்று வாழ , நாட்டில் சட்டம் ஒழுங்கு நல்ல முறையில் நடக்க , அணைத்து அரசு அலுவலகங்களும் லஞ்சம் இல்லாமல் நடக்க , அனைவர்க்கும் நல்ல தரமான கல்வி , மருத்துவம் , வேலை கிடைக்க
யார் வந்தால் நல்லது , அப்படிப்பட்ட ஒரு கட்சி எது , அப்படிப்பட்ட நல்ல ஆட்சியை நடத்தும் உத்தம தலைவர் யார் என்று தயவு செய்து தகுந்த விளக்கத்துடன் , தகுந்த ஆதாரத்துடன் என்னை போன்ற முட்டாள் பாமரனுக்கு சொன்னால் , இந்த ஊழல் கருணாநிதியை வீட்டுக்கு மட்டும் அல்ல , எகிப்து போன்று இந்த நாட்டை விட்டே அனுப்ப தயார் .
உங்களால் இந்த நாட்டை நல்வழி படுத்த முடியுமா ?
ஒரு நல்ல தலைவரை அடையலாம் காட்ட முடியுமா ?
அப்படிப்பட்ட ஒரு நல்ல தலைவரின் தொண்டர்களை இந்த உலகத்திற்கு நீங்கள் காட்டுவீர்களா ?

நாங்கள் உங்களைபோல் ஞாயம் மட்டுமே பேசிக்கொண்டு இருக்கும் அறிவுஜீவிகள் அல்ல , உங்களைவிட நன்றாக யோசித்து , வேறு நல்ல வழி இல்லாததால் , இப்போது இந்த நாட்டில் உள்ள திருட்டு கட்சியில் , திருட்டு தலைவர்களில் , யார் குறைவாக கொள்ளையடித்து அதே சமையம் ஓரளவிர்ககவாவது மக்களுக்கு நல்லது செய்வதால்தான் கருணாநிதியை ஆதரிக்கிறோம் புரிந்துக்கொண்டு, இந்த மாதிரி வெட்டி வியாக்கியானம் பேசிக்கொண்டு இர்ராமல் , ஒன்று நல்ல தலைவரை , கட்சியை அடையாளம் காட்டுங்கள் அல்லது இந்தமாதிரி வாய்க்கு வந்ததை பேசி , கைக்கு வந்ததை எழுதுவதை இதோடு தயவுசெய்து நிறுத்திவிடுங்கள் .

arivuindia said...

marmayohi/jyothi,
yen ivlo kovam... katturaiyil iruppathu nijamaa illaiyaa. viyakyanangal etharkku.
enakku kalaignar pidikkamal ponathirkku irandu kaaranangal.
1) avarathu kavithaikal (ex: ... ennai thookki kadalil pottalum....)
2) rajini, kamal padam release anaal atharkku ticket vaangave kastapadum enakku. antha kudumbathu bayilvaankal padathaiye vaangumbothu en vayitrerichal.

Prakash said...

யாரை திருப்தி படுத்த அம்மா வைகோவை பதினெட்டு மாதம் பொடாவில் வைத்தார்

யாரை திருப்தி படுத்த அம்மா 1000 கோடி வாங்கிக்கொண்டி வைகோவின் அரசியலை நிர்மூலப்படுதினார்

தர்மபுரியில் 3 மாணவிகளை எரித்து கொன்றது யார்?

போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று சொன்னது யார்?

பிரபாகரனை கைது செய்து , தூக்கில் இட வேண்டும் என்று சட்டசபையில் திர்மானம் போட்டது யார்?

தொட்டில் குழந்தை முதல் சுடுகாடு கூரை வரை ஊழல் செய்தது யார்?

30௦ வயது வளர்ப்பு மகனை தத்தெடுத்து , கோடியில் திருமணம் செய்து பின் கஞ்சா கேஸ் போட்டது யார்?

செரீனா மீது கஞ்சா கேஸ் போட்டது யார்?

டி என் சேஷனை விமான நிலையம் முதல் ஹோட்டல் வரை அடித்தது யார்?

சந்திரலேகா மீது திராவகம் விசியது யார்?

சுப்ரமணிய சாமிக்கு ஆபாச ஷோ காட்டியது யார்?

வக்கீல் சண்முகசுந்தரத்தை தாக்கி முடக்கி போட்டது யார்?

மத்திய அமைச்சர் அருணாசலம் பயணம் செய்த விமானத்தில் ஜாதி காரணம் காட்டி ஏறாமல் இருந்தாது யார்?

ராஜிவின் மரணத்தில் வெற்றி பேரு.. பின் அவரை கொச்சை படுத்தியது யார்?

கட்சியை சசிகலா குடும்பத்திடம் அடகு வைத்திருப்பது யார்?
௧.௫ லட்சம் அரசு ஊழியரை ஒரே கையெழுத்தில் வீட்டுக்கு அனுப்பியது யார்?

பெண்களை இரவு உடை கூட அணிய விடாமல் கைது செய்யதது யார்?
பத்திரிக்கையாளர்களை சென்னை பிச் ரோடில் அடித்து உதைத்தது யார்?
கண்ணகி சிலையை ஒழித்து வைத்தது யார்?

சீரணி அரங்கத்தை இடித்தது யார்?
மதமாற்ற தடை சட்டம், ஆடு கோழி பலி தடை சட்டம் கொண்டு வந்தது யார்?

ஒரு ரூபாய் சம்பளத்தில் கோடிகளை சேர்த்துவைத்து யார்?
பொது மக்களுக்கு வழி விடாமல் எஸ்டேட் வெளி போட்டு அடைத்தது யார்?

பஞ்சமி நிலத்தை ஆக்ரமித்த கம்னிஸ்ட் புகார் சொன்னது யார் மேலே?

சென்னாரெட்டி தவறாக நடந்து கொண்டார் என்று சொன்னது யார்?

மக்களிடம் இநருந்து தன்னை அந்நிய படுத்தி , ஹெலிகாப்ட்டர் பயணம், கூடுக்குள் பிரசாரம் செய்வது யார்?

சுனாமி வந்த நேரத்தில் மதியம் 1 மணிக்கு மேல் தான் வெளிய தூங்கி எழுந்து போயஸ் தோட்டத்தின் வெளியே வந்து .. சுனாமிய , என்ன என்று கேட்ட முதல்வர யார்?

சசிகலா, நடராஜன், திவாகரன், தினகரன், மகாதேவன், சுதாகரன் , இளவரசி, வெங்கடேஷ்.. வைகுண்டராஜன் , இன்னும் பலர் பலர்.. இவர்கள் எல்லாம் யார்?

ராஜ நடராஜன் said...

பின்னூட்ட கருத்து சொல்லுங்கய்யா.கடை கடையா வெட்டி ஒட்டிகிட்டு:)

சென்னை பித்தன் said...

நாளை நமதே!

ராவணன் said...

///Prakash said...


சசிகலா, நடராஜன், திவாகரன், தினகரன், மகாதேவன், சுதாகரன் , இளவரசி, வெங்கடேஷ்.. வைகுண்டராஜன் , இன்னும் பலர் பலர்.. இவர்கள் எல்லாம் யார்? ///

அய்யா லாடு பிராகாசு,

இவர்களெல்லாம் யார் என்பது இருக்கட்டும்.......அது யாரு?

அந்த பொம்பள..அது பேரு ஆங்.. கனிமொழி நாடார் யாரு?

அக்கப்போரு said...

அண்ணே எவன் வேணா வரட்டும் ஆனா இவய்ங்க மட்டும் வரக் கூடாது . அதுக்காகவே இந்த தடவ மெட்ராஸ்ல இருந்து ஊருக்குப் போறேன் ஓட்டுப் போட. பஸ் டிக்கட் போக வர 1500 . ஆனாலும் பரவால்ல. செத்துப் போன பார்வதியம்மாளோட சமாதில நான் ஏத்துற ஒரு தீபமா தி.மு.க. கூட்டனிக்கு எதிரா நான் போடுற இருக்கட்டும்.