Friday, April 22, 2011

கோ - பொலிட்டிகல் ஆக்‌ஷன் த்ரில்லர் - சினிமா விமர்சனம்

http://picasamusic.com/musicimg/KO.jpg

பாலைவன ரோஜாக்கள்,ஊமை விழிகள், சொல்வதெல்லாம் உண்மை போன்ற பட வரிசையில் லேட்டஸ்ட் பிரஸ் ரிப்போர்ட்டர் ஓரியண்ட்டட் ஸ்டோரி லைனில் சுபாவின் கதைக்கருவை  வைத்து கே வி ஆனந்த்  களம் இறங்கி இருக்கும் படம் தான் தலைவன் என்ற அர்த்தம் உள்ள கோ படம்.

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இரண்டுமே மாறி மாறி ஊழல் பண்ணும் கட்சி என்பதால் ஒரு மாற்று சக்தி வேண்டும் என சில இளைஞர்கள் முன் வந்து ஒரு அமைப்பை ஏற்படுத்தி போராடுகிறார்கள்...ஆட்சி மாற்றம் வருகிறது.. பின் நடக்கும் சுவராஸ்யமான சம்பவங்கள் தான் கதை.. 
கேட்கும்போது மறுபடியும் ஒரு அரசியல் படமா ? என யாரும் சலித்துக்கொள்ள தேவை இல்லை.. நீட் ஆக்‌ஷன் கம்ர்ஷியல் தான்.

படத்தில் முதலில்  நம் மனதைக்கவர்வது பியா தான்.துறு துறுப்பான நடிப்பு,இயல்பான முக பாவனைகள்,செம்பருத்திப்பூ மலர்ந்த மாதிரி உதட்டில் தக்க வைத்த சிரிப்பு என சர்வசாதாரணமாக நம் மனதில் சப்பணம் போட்டு அமர்ந்து விடுகிறார்.அவரது ஹேர் ஸ்டைல் செம அழகு..
http://www.southdreamz.com/wp-content/uploads/2010/05/Piya-Bajpai.jpg

 இரண்டாவது படத்தின் ஒளிப்பதிவு.. கே வி ஆனந்தின் ஒளிப்பதிவு பாடல் காட்சிகளில் இயற்கை அழகை அள்ளுகிறது.. ஆக்‌ஷன் காட்சிகளில் நம்மையும் உடன் அழைத்து செல்லும் லாவகமான கேமரா கோணங்கள்,பல இடங்களில் வெல்டன் சொல்ல வைக்கிறது.

3 வது கதைக்களன் . பத்திரிக்கை ஆஃபீஸ்-ல் நடப்பதை நம் கண் முன் கொண்டு வந்திருக்கும் ஆர்ட் டைரக்‌ஷன்.ஆரம்பக்காட்சிகளில் குப்பத்தில் குடிசைகளில் கேமரா புகுந்து புறப்பட்டு படம் பிடிக்கும்போது ஒரு படத்துக்கு ஆர்ட் டைரக்‌ஷன் எவ்வளவு முக்கியம் என நிரூபிக்கிறது..

அடுத்தது ஜீவா.. பிரஸ் ரிப்போர்ட்டரை கண் முண் நிறுத்துகிறார்.. தன்னை சுற்றி எது நடந்தாலும் அவர் உடனே கேமராவை கையில் எடுப்பது அருமை..ஒரு பத்திரிக்கையாளனுக்கு கேமரா மூன்றாவது கை மாதிரி என்ற லைனை கேட்ச் பண்ணி , கேரக்டரை உள் வாங்கி நடித்திருக்கிறார்.

அடுத்து அஜ்மல்.. இவரது அண்டர்ப்ளே ஆக்டிங்க் நல்லாவே ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.. ஆனால் கட்சியின் இளைஞர் படைத்தலைவர் என்ற அளவில் காட்டத்தான் அவர் ஒர்த். அதை மீறி ஒரு கட்சிக்கே தலைவராக காட்டுவதும் சி எம்மாக காட்டுவதும் குருவி தலையில் பனங்காய் கதை தான்.
http://narumugai.com/wp-content/uploads/2010/11/ko-karthika.jpg
ஹீரோயின் கார்த்திகா.. ராதாவின் மகள்.ஆள் நல்ல உயரம் தான்.. ஆனால் இவர் தமிழ் சினி ஃபீல்டுக்கு சரிப்பட்டு வர மாட்டார். அவரது புருவங்கள் மகா மைனஸ்.. செயற்கையாக வரையப்பட்ட வளைந்த வில் போன்ற புருவங்கள்  பிளஸ் என நினைத்து விட்டார்கள் போல.. அது அவரது முகம் எப்போதும் கோபமாக இருப்பது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது. மேலும் அவர் முகம் ஒரு ட்ரை ( DRY SKIN)ஸ்கின் என்பதால் மேக்கப் போடும்போது பக்கா செயற்கை காட்டுகிறது.. பாப்பாவுக்கு நடிப்பும் வர லேது..  ஸாரி டூ சே திஸ்... 

படத்தில் சுவராஸ்யமான வசனங்கள்

 1.  ரேஷன் கார்டுல என்ன விசேஷம்?

நாங்க ஆட்சிக்கு வந்தா ரேஷன் கார்டுக்கு 5 லிட்டர் சாராயம் தருவோம்.

2.  மிஸ்டர் டாக்டர் பிரகாஷ்.. நீங்க ஜெயில்ல இருந்து ரிலீஸ் ஆனதும் 10 பேஷண்ட்டை மொத்தமா ஒரே சமயத்துல போட்டுத்தள்ளுனது எப்படி?ங்கறதை விளக்குவீங்களா?

3. தீ விபத்து நடந்தப்ப  எப்படி தப்பிச்சீங்க?

என் கிட்டே  4 வாட்டர் பாக்கெட் இருந்தது.. அதை என் மேல பீய்ச்சி அடிச்சுக்கிட்டேன்.

4. ஜீவா - அர்னாட்ஷா(!!) என்ன சொல்லி இருக்கார்னா நல்ல ஃபிகரா ,டாப்பா இருக்கற பொண்ணுங்களுக்கு டாப் சரியா இருக்காதாம் .. ( மூளை....)

5. பியா - நான் அந்தப்பொண்ணு கிட்டே பேச்சு குடுத்தேன்.. ஒரே நைட்ல ரூ 30,000 சம்பாதிக்கறாளாம்.. சில சமயம் ரூ 50000 கூட கிடைக்குமாம்.சரி.. ஒரு ஆர்வத்துல கேட்கறேன்.. எனக்கு எவ்வளவு கிடைக்கும்?

 ஜீவா - ம் ம் ஒரு நூத்தம்பது ரூபா?

பியா - அடப்பாவி.. அடி வாங்கப்போற.. சரி இவளுக்கு... 

ஜீவா- ஆள் ஹைட் ஜாஸ்தி.. அதுக்காக சும்மா அனுப்பிட முடியுமா..ஏதோ போட்டு குடுத்து அனுப்பலாம்.

கார்த்தி.-- அடச்சே.. என்ன பேச்சு இதெல்லாம்..
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi8Xp2c2yWUqjKqi5fFVhCBYUU8BC9cAF_7_dCwya5Fwq2v4D1zAvRan3D4uddlouU3my50w8k2ECZlcpauuqRsodeEsdfObCP0O06_RmS-nRwi2MjGQzQWuPwBX_QmxhX8ZSiSCV1wXRc_/s1600/piaa_bajpai_hot_photo_shoot_pics_images_04.jpg
6.  வில்லன் - தமிழ்ப்பேப்பர்ல தாண்டி வேலை செய்யறீங்க? எதுக்கு இங்கிலீஷ்ல பேசறீங்க?

7. நான் யாருன்னு உனக்குத்தெர்யுமா?

அல்லக்கை

என்ன சொன்னே?

 சாரி,.. அண்ணனோட கை.. 

8.  ஜீவா - ஏய்.. அதெல்லாம் போகட்டும்.. நீ கடிச்சியே ஒருத்தனை.. அல்சேஷன் நாய் பிச்சை வாங்கனும்.. 

பியா - !!!!!!!!!!!!!!!!

9. பிரஸ்னா பாசிட்டிவ் மேட்டர்க்கு அதிக முக்கியத்துவம் தரக்கூடாது.. நெகட்டிவ் மேட்டர் தான் எடுபடும்.. ஒரு கள்ளக்காதல், ஒரு கொலை,இப்படித்தான் நியூஸ் எடுக்கனும்.. 


10. சார்.. பிரஸ்னா கேவலமா நினைக்காதீங்க.. பத்திரிக்கைக்காரங்களால தான் ஆட்சியே மாறுது.. ( ஆமா.. கருத்துக்கணிப்புன்னு எதையாவது போட்டு மக்களை குழப்பறதே இவங்க தானே?)

11.  பியா - தூங்காம கண்ணை மூடிக்கிட்டே கனவு காண்பதும் ஒரு சுகம் தான்.. 

12. நான் ஏன் அவனை லவ் பண்றேன்னா பொண்ணுங்க தானா வந்து பேசுனா பசங்க அடுத்த நிமிஷமே மேல கை போட நினைப்பாங்க.. ஆனா அவன் அப்படி இல்லை...அவன் ஒரு ஜெம்..  ( இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்னு நினைச்சிருக்கலாம்.. அதுக்குள்ள அவசரப்பட்டுட்டியே பொண்ணு.. )

13. டேய்.. எதுக்குடா கொதிக்கறீங்க? அரிசி மூட்டை இருந்தா அங்கே நாலஞ்சு எலிங்க இருக்கத்தான் செய்யும்.. ஆட்சின்னு ஒண்ணு இருந்தா அங்கே ஊழல் இருக்கத்தான் செய்யும்.. ( நாலஞ்சுன்னா ஓக்கே ஒண்ணே முக்கால் லட்சம் கோடின்னா நாட் ஓக்கே)
14. நிருபர் - சி எம் சார்.. உங்களுக்கும், இந்த கொள்கைப்பரப்புச்செயலாளர்க்கும் ஏதோ கனெக்‌ஷன்னு பேசிக்கறாங்களே?

பிரகாஷ்ராஜ் - அவ எம் பொண்ணு மாதிரி.. 

நிருபர் - அப்போ அவங்கம்மாவுக்கும் உங்களுக்கும் கனெக்‌ஷன்னு நியூஸ் போட்டுக்கலாமா/ சார்?   ( எம் ஜி ஆர் - ஜெ நேரடி அட்டாக் )

15. இந்த மாதிரி ஆளுங்கட்சிக்கு எதிரா நியூஸ் போட எவ்வளவு வாங்குனீங்க?

சார்.. நீங்க தான் சொன்னீங்க.. எங்க  நல்லாட்சில எதிர்க்கட்சியே கிடையாதுன்னு.. அப்புறம் எப்படி?

16.  டியர்.. உன் மன்சுல நான் இல்லைன்னா ஏன் உன் கண்ணு கலங்குது?

17. பியா - அடேய்.. நீ என்னை லவ் பண்ணலைன்னாலும் பரவாயில்லை.. ஆனா போற வர்றவளை எல்லாம் லவ் பண்றியே அதைத்தான் என்னால தாங்கிக்க முடியல..  ( ஆஹா என்ன ஒரு உயர்ந்த உள்ளம் )




18. இந்த உலகத்துல பழமையான தொழில் ரெண்டே ரெண்டு தான்.. 

1. அரசியல் 2. விபச்சாரம்,.

ஆனா இப்போ அரசியலே விபச்சாரமா போச்சு.. 

19 தம்பிங்களா.. அரசியல்னா சும்மா இல்ல.. சுறா, திமிங்கலம் எல்லாம் பசியோட உலாவற இடம்.. ஜாக்கிரதையா இருக்கனும்.. இல்லைன்னா ஆளைப்போட்டுத்தள்ளிடும்.. ( சரி விடுங்க,. தெரியாம சுறா பார்த்துட்டோம்.. அதையே சொல்லிக்காண்பிச்சுட்டு)


20. நம் தலைவர் ஒரு பாயும் புலி.. நடமாடும் சிங்கம்.. அதனால் தான் நடிகை ஷமீதா ஸ்ரீயை தன் கூடவே வைத்திருக்கிறார்.. ( இந்த இடத்துல நமீதாவை அட்டாக்)

 21. ஷமீதா - ஹாய் மச்சான்ஸ்.. உங்க எல்லாருக்கும் தெரியும்.. எனக்கு ரொம்பப்பெரிய..... மனசுன்னு.. ( நல்ல வேளை.. )

 22 - சி எம் - என்னடா நான் பேசறப்ப கூட்டமே இல்லை..?

தலைவரே .. ஷமீதா போனதும் கூட்டமும் போயிடுச்சு.. நீங்க அவங்க பேசறதுக்கு முன்னாமே பேசி இருக்கனும்..

 அட.. வெளக்கெண்ணெய்.. அதை நீ முதல்லியே சொல்லி இருக்கனும். 

23  இந்தகாலத்துல இளைஞர்கள் எல்லாம் ஐ டி ல ஒர்க் பண்ணத்தான் விரும்பறாங்க.. ஃபாரீன்ல வேலை கிடைச்சா உடனே நாட்டை அம்போன்னு விட்டுட்டு ஓடிடறாங்க.. 

. ஏன்.. உனக்கு விசா கிடைக்கலைங்கற கோபத்துல பேசறியா?
 http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-1234.jpg

 இயக்குநருக்கு பாராட்டு போகும் இடங்கள் (ALL CREDITS GO TO DIRECTER)
1. காலேஜ் ஃபிளாஸ்பேக் காட்சியில்  வரும் கனவில் தூங்கு  பாடல் காட்சியில் அஜ்மல், ஆடு இரண்டு பேரும் ஒரே கிளை இலையை ஆளுக்கு ஒரு முனையில் வைத்து தின்பது...
 
2. அதே பாடல் காட்சியில் காலேஜ் ஃபிகர்களாக வருபவர்கள் நிஜமான காலேஜ் ஃபிகர்ஸாக இருப்பது...

3.  கார்த்திகா தனிமையில் ரூமில் இருக்கும்போது சடார் என ஒரு உருவம் வருவதை சர்ப்பரைஸ் ஷாட்டாக எடுத்தது.. ( தியேட்டரில் பாதிப்பேர் வீல் என கத்தி விட்டார்கள்)

4.  ஒரு சேஸிங்க் சீனில் உயரமான பில்டிங்க்ல இருந்து ஜாக்கிசான் போல பைப்பில் சறுக்கிக்கொண்டே ஜீவா வரும் சீனை டூப் இல்லாமல் ,கட் ஷாட் இல்லாமல் லெங்க்த்தி ஷாட்டாக எடுத்தது..( வெல்டன் ஜீவா)

5. சூப்பர் ஹிட் சாங்கான என்னமோ ஏதோ பாட்டுக்கான லொக்கேஷன், பாடல் படமாக்கப்பட்ட விதம்,கண்ணியமான டான்ஸ் மூவ்மெண்ட்ஸ்.( THE PICTURAISATION OF THE SONG IS SO LOVELY)

இயக்குநருக்கு சில கேள்விகள் ( மைனஸ்)

 1.  படத்தின் ஆதார இடமான மேடையில் குண்டு வெடிக்கும் சீனை பிரம்மாண்டமாக எடுக்காமல் சொதப்பியது ஏன்? அதை லாங்க் ஷாட்டில் துக்ளியூண்டு காட்டி தப்பிச்ட்டீங்களே.. 

2. மொத்தப்படத்திலும் மனித நேயத்தை புகழ்ந்து விட்டு பாடல் காட்சியில் திருநங்கைகளை கிண்டல் செய்யும் ஷாட் எதற்கு?

3. என்னதான் ஒரு நிருபர்க்கு கடமை கண்ணாக இருந்தாலும் விபத்து நடந்தாலும் சரி.. கலவரம் நடந்தாலும் சரி.. ஜீவா  மக்களை காப்பாற்றாமல்
ஃபோட்டோ எடுத்துட்டு இருப்பது ஏன்?

4. படம் செம ஃபாஸ்ட்டா போய்ட்டிருக்கறப்ப எதுக்கு அந்த வெண்பனியோ பெண்மணீயோ மெலோடி பாட்டு? அதுவும் செகண்ட் ஆஃப்ல...?

5. தீவிரவாதிகளை பார்க்க சி எம் தான் மட்டும் தனியே போய்ப்பார்க்க வேண்டிய அவசியம் என்ன? மாட்டிக்கவா?

6. ரிப்போர்ட்டர்க்கான டிரஸ் கோட் படத்தில் ஹீரோ, ஹீரோயின் டாரும் மெயிண்ட்டெயின் பண்ணலையே..? ( ஹீரோ காலர் இல்லாத பனியனுடனும், ஹீரோயின் முதுகில் ஜன்னல் வைத்த ஜாக்கெட்டுடனும் சுத்தறாங்களே?)

7. செகண்ட் ஆஃப்ல வைத்த ட்விஸ்ட் ஓக்கே.. ஆனா அதுக்கான காரணத்தை ஃபிளாஸ்பேக்ல சொல்லி இருக்கனும்.. 

இந்தப்படம் ஏ செண்ட்டர்களில் 50 நாட்கள், பி செண்ட்டர்களில் 30 நாட்கள், சி செண்ட்டர்களில் 15 நாட்கள் ஓடும்

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 42

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க்கிங்க் - நன்று

 ஈரோடு வி எஸ் பி, சண்டிகா , ஸ்ரீ கிருஷ்ணா என 3 தியேட்டர்ல படம் ரிலீஸ் ஆகி இருக்கு.

டிஸ்கி 1 - இந்தப்படத்தின் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டை விமர்சனத்தில் யாரும் வெளியிட வேண்டாம் என பிரஸ் மீட்டில் இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார்.. எனவே விமர்சனம் செய்யும் அன்பர்கள் அதை ஃபாலோ பண்ணுங்க..

 டிஸ்கி 2 - இந்தப்படத்தின் கதைக்களன் பத்திரிக்கைத்துறை என்பதாலும், பிரசஸ்காரங்க நினைச்சா எதையும் சாதிக்க முடியும் என்ற கான்செப்ட் என்பதாலும்  இந்தப்படத்துக்கான பத்திரிக்கை விமர்சனங்கள் கொஞ்சம் ஓவர் பில்டப்போடே இருக்கலாம்.. 

61 comments:

நர்மதன் said...

வடை

MANO நாஞ்சில் மனோ said...

அடடடா வடை போச்சே....

செங்கோவி said...

தொடர்ந்து மொக்கைப் படங்களையே பார்த்த நமக்கு இது எவ்வளவோ பெட்டராத் தாண்ணே தெரியுது!

நர்மதன் said...

விமர்சனம் வழமைபோல் அருமை

சி.பி.செந்தில்குமார் said...

?? MANO நாஞ்சில் மனோ said...

அடடடா வடை போச்சே....

ஃபர்ஸெ நைட்டுக்கே பத்து மணீ நேரம் லேட்டாப்போன ஆள் தான்யா நீர்.. ஹி ஹி

MANO நாஞ்சில் மனோ said...

ஹலோ நர்மதன், எனக்கு வடையில பாதி வேணும்....

நர்மதன் said...

இப்படம்,தேர்தலுக்கு முன்னர் வந்திருக்கலாம்

சி.பி.செந்தில்குமார் said...

நர்மதன் said...

விமர்சனம் வழமைபோல் அருமை

நன்றி .. 7 நிமிசத்துல படிச்சுட்டீங்களா? அபாரம்..

நர்மதன் said...

@ MANO நாஞ்சில் மனோ

better luck next time

சி.பி.செந்தில்குமார் said...

செங்கோவி said...

தொடர்ந்து மொக்கைப் படங்களையே பார்த்த நமக்கு இது எவ்வளவோ பெட்டராத் தாண்ணே தெரியுது!

அண்னனை எதிர்த்துப்பேச முடியுமா?

test said...

வந்துட்டேன்!

சி.பி.செந்தில்குமார் said...

நர்மதன் said...

இப்படம்,தேர்தலுக்கு முன்னர் வந்திருக்கலாம்

ம்ஹூம்.. வந்திருந்தால் பெரிய மாற்றம் வராது.. மாறாக குழப்பம் வரும்..

நர்மதன் said...

@சி.பி.செந்தில்குமார்

நாங்க ரொம்ப ஸ்பீடு

MANO நாஞ்சில் மனோ said...

//சி.பி.செந்தில்குமார் said...
?? MANO நாஞ்சில் மனோ said...

அடடடா வடை போச்சே....

ஃபர்ஸெ நைட்டுக்கே பத்து மணீ நேரம் லேட்டாப்போன ஆள் தான்யா நீர்.. ஹி ஹி////


ஹி ஹி ஹி ஹி பப்ளிக் பப்ளிக்....

MANO நாஞ்சில் மனோ said...

//சி.பி.செந்தில்குமார் said...
நர்மதன் said...

விமர்சனம் வழமைபோல் அருமை

நன்றி .. 7 நிமிசத்துல படிச்சுட்டீங்களா? அபாரம்..///


இதுல பெரிய உள்குத்தே இருக்கு ஏன்னா நான் இன்னும் படிக்கவும் இல்லை ஓட்டும் போடலை.....

MANO நாஞ்சில் மனோ said...

இருங்க போயி படிச்சிட்டு ஃபார்மாளிட்டி எல்லாம் முடிச்சிட்டு வாரேன்....

நர்மதன் said...

ஒட்டு போட்டாச்சு பாஸ்............. போயிட்டு வரேன்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நானும் வந்துட்டேன்! படிச்சுட்டு வர்றேன்

MANO நாஞ்சில் மனோ said...

படிச்சாசி ஓட்டும் போட்டாச்சு இனி...?

MANO நாஞ்சில் மனோ said...

விமர்சனம் நல்லாவே இல்லை....கி கி கி கி கி.......

MANO நாஞ்சில் மனோ said...

எம்ஜிஆர் ஜெ நேரடி அட்டாக்.......சூப்பர்.....

சுதர்ஷன் said...

நல்ல விமர்சனம் ..என்னை போலவே வசனங்களை ரசிச்சிருகீங்க நச் என்ற வசனங்கள் ...

இது கோ பற்றிய எனது பார்வை
ஆனந்த் அன் கோ வின் "கோ" -திரைவிமர்சனம்

சுதர்ஷன் said...

எனக்கென்னமோ சோனா வை பாத்தா குஸ்பு மாதிரியே தோணுது :-)

test said...

கலக்கல் பாஸ்! :-)

செங்கோவி said...

34 வயசு சிபிக்கு 32 வயசு செங்கோவி எப்படி அண்ணன் ஆக முடியும்?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

வழக்கம் போல அசத்திட்டீங்க செந்தில்! கார்த்திகா பற்றி சொன்னது சிந்திக்க வைக்கிறது! அப்போ அவரது எதிர்காலம் அவ்வளவு தானா?

சி.பி.செந்தில்குமார் said...

>>செங்கோவி said...

34 வயசு சிபிக்கு 32 வயசு செங்கோவி எப்படி அண்ணன் ஆக முடியும்?

hi hi அண்ணே.. வயசை விடுங்க.. டேலண்ட் அடிப்படைல தான் நான் மரியாதை தருவேன். ஹி ஹி

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

இயக்குனர் பிரஸ் மீட்டிங் ல சொன்ன விஷயத்த எல்லோரும் பின் பற்றனும் னு கேட்டுக்கிட்ட உங்க பெருந்தன்மை வாழ்க!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

Another media oriented film ? i will definitely see it.

சி.பி.செந்தில்குமார் said...

>> ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

வழக்கம் போல அசத்திட்டீங்க செந்தில்! கார்த்திகா பற்றி சொன்னது சிந்திக்க வைக்கிறது! அப்போ அவரது எதிர்காலம் அவ்வளவு தானா?

அவருக்கு நிகழ் காலமே கிடையாது.. ஹி ஹி ஹிந்தில ட்ரை பண்ணலாம்.

geethappriyan said...

நண்பா,
படத்தை இவ்வளவு அழகா கவனித்து,பாராட்டி,இயக்குனருக்கும் தனியாக க்ரெடிட் கொடுத்தமைக்கு சபாஷ். நல்ல விமர்சனம்.

சி.பி.செந்தில்குமார் said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

இயக்குனர் பிரஸ் மீட்டிங் ல சொன்ன விஷயத்த எல்லோரும் பின் பற்றனும் னு கேட்டுக்கிட்ட உங்க பெருந்தன்மை வாழ்க!!

நண்பா.. நம்மை மதிச்சு ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.. மதிக்கலைன்னா எப்படி?

சி.பி.செந்தில்குமார் said...

ஜீ... said...

கலக்கல் பாஸ்! :-)

நன்றி ஐயா ஹி ஹி

ரஹீம் கஸ்ஸாலி said...

m...mm

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger |கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

நண்பா,
படத்தை இவ்வளவு அழகா கவனித்து,பாராட்டி,இயக்குனருக்கும் தனியாக க்ரெடிட் கொடுத்தமைக்கு சபாஷ். நல்ல விமர்சனம்.

நன்றி நண்பா.. வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம்

செங்கோவி said...

அடப் பாவிகளா..கொஞ்சமாவது நியாயத்தோட பேசுங்கய்யா!

சௌந்தர் said...

டிஸ்கி 1 - இந்தப்படத்தின் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டை விமர்சனத்தில் யாரும் வெளியிட வேண்டாம் என பிரஸ் மீட்டில் இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார்.. எனவே விமர்சனம் செய்யும் அன்பர்கள் அதை ஃபாலோ பண்ணுங்க..///

அவர் என் கிட்ட சொல்லவே இல்லை அதனால நான் சொல்வேன் சொல்வேன் சொல்வேன் .....

உங்க விமர்சனமே படம் பார்த்த மாதரி இருக்கு....

Ram said...

ஹி ஹி.. படம் பாக்கலாம்னு சொல்றீங்க.. சரி சரி.. இதில் படத்துக்கு விமர்சனம் செய்ததை விட கார்த்திகாவுக்கும், பியாவுக்கும் அதிக விமர்சனம் நடந்திருக்கே.! அப்பவே சொன்னேன் தோழிகிட்ட சி.பி., திருந்தமாட்டார்னு அது உண்மையாயிடுச்சு.. ஹி ஹி.. கோ அப்படினா தலைவன்னு ஒரு தமிழ் வாத்தியாரா நடந்துகிட்டது பாராட்டுக்குரியது..

பாலைவன ரோஜாக்கள், ஊமை விழிகள் பத்தி எல்லாம் பக்காவா பேசி உங்களுக்கு 50 வயசு ஆகுதுன்னு காட்டி கொடுத்துட்டீங்க..

இரண்டாவது பத்தியில் இரண்டு கட்சியுமே ஊழல் பண்றாங்கன்னு நம்ம திராவிட கழகங்களை சாடியிருப்பது பாராட்டத்தக்கது..

யார் யாரோ சி.எம்., ஆகுறாங்க அஜ்மல் படத்துல சி.எம்., ஆகுறது உங்களுக்கு பொறுக்கலையா.?

கார்த்திகாவுக்கு ட்ரை ஸ்கின் முதல்கொண்டு நோட் செய்த விதம் பாராட்டத்தக்கது..

இதை கமர்சியல் படம்னு சொல்லிபுட்டு இத்தன குறைகள சொல்றீங்களே.! கமர்ஷியல் படத்துல குறை இல்லாம இருக்குமா.?

Anonymous said...

விமர்சனம் எழுத ஆரம்பிச்சு அடுத்த பேராவுல நுழையும் போதே பியா பத்தின நாலு பேரா ஜொள்ளு ஆறு... கொடுமைடா சாமி

Anonymous said...

விமர்சனம் நல்லாருக்கு ...கொஞ்சம் தரம் அதிகமா இருக்கு

சென்னை பித்தன் said...

நல்ல விமரிசனம்.எப்படி வசனம் எல்லாம் நினைவில் வைத்துக் கொள்கிறீர்கள்?

நிரூபன் said...

சினிமா விமர்சனத்தினை விட, கார்த்திகா மீதான கண்ணோட்டம் தான் அதிகமாக இருக்கே....

நிரூபன் said...

ரேஷன் காட்டில என்ன விசயம்,

ஹி...ஹி..
இலவசங்களை பற்றி இரு நையாண்டி,

தமிழக கட்சிகள் இரண்டையும் கலாய்க்கும் வகையில் வசனம் அமைந்துள்ளது.

நிரூபன் said...

மேடையில் குண்டு விழும் இடத்தை பிரமாண்டமா எடுக்க காசிற்கு எங்கே போவது?
கொஞ்சம் விவகாரமான படங்களைத் தான் எதிர்பார்க்கிறீங்க போல இருக்கே.

கருப்பசாமி பார்த்திபன் said...

விமர்சனம் அருமை அதுவும் குறிப்பாக நடிகைகளின் நடிப்பையும்
அழகையும் ஆராய்ந்து சொல்லிய(ஜொள்ளிய)விதம் அருமை.நானும் இன்று தான் பதிவுலகத்தில் காலடி எடுத்து வைத்துள்ளேன்.(எனது முதல்
தலைப்பு) என்று ஆரம்பித்துள்ளேன் ஆதரவு தரவும்.
செந்நெல்குடி பார்த்திபன்
சிங்கப்பூர்.

நிரூபன் said...

விமர்சனம், வழமை போல உங்களின் தனி பாணியாய், வசனங்கள், இசை, தொழில்நுட்பம், நடிப்பு எனப் பல அம்சங்களை அலசிய தரமான விமர்சனமாக அமைந்திருக்கிறது.

கார்த்திகா மேல ஒரு கண் போல இருக்கே.

Unknown said...

GO Wel'Come விமர்சனம் from CP
'அட்ராசக்க அட்ராசக்க'

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இனி நான் சொல்றதுக்கு ஒன்னும் இல்லை...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

வந்தமா.. அட்னஸை போட்டமா...
ஓட்டை போட்டாமான்னு கிளம்பியாச்சி..

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
Unknown said...

சி பி படிக்கும் போது கூட இவ்வளவு நோட்ஸ் எடுத்திருக்க மாட்டார்!!
என்னமா டீடெயிலா போட்டு தாக்குறார் பாருங்க நண்பர்களே!!
அங்க நிக்கிறார் சி பி!!
வேணாம் சார் சத்தே உக்காருங்க..
பியா கண்ணில சிக்கிட்டான்களா??
கொஞ்சம் ஓட்டுங்களேன் அவங்கள பத்தி??
கோ படம் பரவாயில்லை மானத்தை காப்பாத்தும்!!
கார்த்திகா-ஹிஹி

yeskha said...

எல்லாப் பெருமையும் சுபாவுக்கே போய்ச்சேரும்.... இன்னும் நிறைய படங்கள் அவர்கள் செய்ய வேண்டும்.. சின்ன வயசாயிருக்கும் போது இது மாதிரி ராஜேஷ் குமார் வந்தா எப்படி இருக்கும்னு ஆசைப்பட்டேன்..

Unknown said...

திரு. கடமை உணர்ச்சி நண்பருக்கு உங்க விமர்சனம் அருமை....இதுக்கு முன்னாடி விமர்சனம் போட்ட நண்பர்கள் இந்த விமர்சனத்த பாத்துட்டு காதுல புகை வர்றது கேக்குது...ஹிஹி!

சரியில்ல....... said...

சிபி ப்ளாக் வழியா ஒரு ப்ளாக்பஸ்டர் மூவி விமர்சனம்.. கலக்குங்க பாஸ்..

டக்கால்டி said...

Parthuduren Boss

கோவை நேரம் said...

இனியும் படம் பார்க்கணுமா....உங்க விமர்சனம் படிச்சாலே பார்த்த மாதிரி இருக்கிறது ....

காங்கேயம் P.நந்தகுமார் said...

கோ
ஒரு
மசாலா
படம்
என்பதை
உங்கள்
விமர்ச்சனம்
தெள்ளத்தெளிவாய்
உணர்த்தியது.

banuchandar said...

appo padam guaranteeya parkumpadi irukka?

முத்துசிவா said...

//இந்த ப்டத்தின் க்ளைமாக்ஸை யாரிடமும் கூற வேண்டாம்//

ஆனாலும் உங்களுக்கு ரெம்ப கிசும்புண்ணே.... க்ளைமாக்ஸ டைரக்டர் சொல்ல வேண்டாம்னு சொன்னாருன்னு க்ளைமாக்ஸ் தவற மத்த எல்லாத்தையும் சொல்லிட்டீங்களேண்ணே.. ஹிஹி

Unknown said...

good one

உலக சினிமா ரசிகன் said...

நண்பரே..தங்கள் பதிவில் நக்சலைட் போராளிகளை கோ படத்தில் மோசமாக சித்தரித்தமைக்காக கண்டித்துள்ளீர்கள்.அதற்க்காக எனது நன்றி.கோ படத்தின் மூலக்கூறுகளை என் பதிவில் எடுத்துரைத்துள்ளேன்.வந்து பாருங்கள்.கோ படத்தை பாருங்கள்