Saturday, April 02, 2011

கலைஞர் மற்றும் தி மு க வி ஐ பி களின் சொத்து மதிப்பை வெளியிட்ட ஜூனியர் விகடன்,அரசியல் வானில் அதிர்ச்சி அலை

தேர்தல் வந்தால்தான், அரசியல்வாதிகளின் சொத்துப் பட்டியல்கள்
 
http://tamizharivu.files.wordpress.com/2008/10/kalaignar.gif
வெளிச்சத்துக்கு வருகின்றன. 'வேட்பு மனுவோடு சொத்துப் பட்டியலையும் தாக்கல் செய்ய வேண்டும்!’ என்பது தேர்தல் கமிஷனின் விதி. ஆகவே, போன தேர்தலில் கணக்குக் காட்டியவர்கள், இப்போது மீண்டும் சொத்துகளைத் தூசு தட்டி இருக்கிறார்கள்.
 
கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் இவர்களின் சொத்துக் கணக்கு எந்த அளவுக்குக் குவிந்திருக்கும்? ஆடம்பர பங்களா, சொகுசு கார்கள், வெளிநாட்டுப் பயணங்கள், நிலங்கள், தொழிற்சாலைகள் என்று ஏகமாகக் குவித்து இருப்பார்கள். ஆனால், வேட்பு மனுக் கணக்குகளில் இவை எதுவும் இடம் பெறாது. சொத்துக் கணக்கில் இடம்பெறுவது எல்லாமே கண்துடைப்புத்தான்!
 
'ஏன், அடுத்த தேர்தல் வரைக்கும் இவர்கள் காத்திருக்க வேண்டும்? ஒவ்வோர் ஆண்டும் சொத்துக் கணக்கைத் தன்னிச்சையாகவே தாக்கல் செய்யலாமே?’ என்று பலரும் கேட்கத்தான் செய்கிறார்கள். ஜெயலலிதா இது குறித்துக் கேள்வி எழுப்பியதும், கருணாநிதி மட்டும் உடனே தனது சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்தார்.

'சபாநாயகர், முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் ஒவ்வோர் ஆண்டும் தங்களது சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் போடப்பட்டு பல ஆண்டுகளாக கும்பகர்ணத் தூக்கத்தில் இருக்கிறது!

அண்ணா மறைவுக்குப் பிறகு முதல்வரான கருணாநிதி, 1969-ல் ஆகஸ்ட் 27-ம் தேதி, 'சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் சொத்துக் கணக்கை வெளி​யிடுதல்’ தொடர்பாக அரசின் தீர்மானத்தை நிறைவேற்றினார்.


''எம்.எல்.ஏ-க்களாகவும், அமைச்சர்களாகவும் இருக்கும் மக்கள் பிரதிநிதிகள் பொது நலத்துக்காகத்தான் பாடுபட வேண்டும். நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ தாங்கள் நலம் பெறுவதற்காக அந்தப் பதவிகளை வகிக்கவில்லை என்று மக்கள் நம்பிக்கை​கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு இருக்கிறது!'' என்று சொல்லி  அந்த தீர்மானத்தை முன்மொழிந்தார் அன்றைய முதல்வர் கருணாநிதி.

இதன்படி பங்குகள், பங்கிருப்பு, பங்குச் சான்றிதழ்கள், கூட்டு வணிக சொத்து, ஈட்டுறுதி ஆவணங்கள், வங்கி இருப்புகள், மோட்டார் வண்டிகள், பொறுப்புரிமை விவரங்கள், அணிகலன்கள், தங்கம், விலை மதிப்புள்ள கற்கள் என்று ஒவ்வோர் ஆண்டும் எம்.எல்.ஏ-க்கள் தங்கள் சொத்துக் கணக்கை சட்டசபைக்கு அனுப்பிவைக்க வேண்டும்.


தீர்மானம் கொண்டுவரப்பட்ட 1967-69-ம் ஆண்டில் 234 எம்.எல்.ஏ-க்களில் 165 பேர் மட்டுமே சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்தனர். அதிலும், தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் 90 பேர்தான். அதன் பிறகு அடுத்தடுத்த ஆண்டுகளில் அது கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகிவிட்டது.

1989, 1996, 2006-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகும், கருணாநிதி முதல்வராக இருந்தும் அவர் போட்ட தீர்மானத்தை அவரே தூக்கி எறிந்துவிட்டார். 'தேர்தலில் நிற்க முடியாமல் போய்விடுமோ?’ என்று அஞ்சியே இப்போது அனைவரும் சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்து இருக்கிறார்களே தவிர, விருப்பத்துடன் அல்ல.


'சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது சொத்துக் கணக்கை வெளியிடுதல்’ தீர்மானத்தைக் கருணாநிதி கொண்டுவந்தபோது சொன்ன வார்த்தைகள் என்ன தெரியுமா?

''அனைவரும் நேர்மையான முறையில் கணக்குகளைக் காட்டுகிறோம் என்று உறுதியை அளிக்கிறோம். அதற்கு ஊனம் ஏற்படாமல் எல்லோரும் நடந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது!'' என்று சொன்னார். உபதேசம் மக்களுக்குத்தானோ?



தேர்தல் ஆணையத்தின் இணையத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள வேட்பாளர்களின் சொத்துப் பட்டியலில் இருந்து அமைச்சர்களின் சொத்துப்பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில் டாப் 1 இடத்தில் முதல்வர் கருணாநிதி இருக்கிறார்.

அவருக்கு அடுத்த இடத்தில் அமைச்சர் நேருவும் அவருக்கு அடுத்தடுத்த இடங்களில் பொங்கலூர் பழனிசாமி, பூங்கோதை, உபயதுல்லா, பொன்முடி ஆகியோர் இருக்கிறார்கள்.


கடந்த தேர்தலில் 26.52 கோடியாக இருந்த கருணாநிதியின் குடும்ப சொத்து இந்த தேர்தலில் 44 கோடியாக உயர்ந்திருக்கிறது. 1.50 கோடியாக இருந்த ஸ்டாலின் சொத்து 2.11 கோடியாக ஆகியிருக்கிறது. வீரபாண்டி ஆறுமுகம், துரைமுருகன், பொன்முடி, நேரு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், பரிதி இளம்வழுதி, சுப.தங்கவேலன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், சுரேஷ் ராஜன், பெரியகருப்பன், தங்கம் தென்னரசு, உபயதுல்லா, மைதீன்கான், வெள்ளக்கோவில் சாமிநாதன், பூங்கோதை, கீதா ஜீவன், தமிழரசி, கே.பி.பி.சாமி, மதிவாணன், ராமச்சந்திரன் ஆகியோர் கடந்த தேர்தலில் காட்டிய சொத்து மதிப்பைவிட இரண்டு மடங்குக்கு மேல் இந்த தேர்தலில் காட்டி இருக்கிறார்கள்.

நேரு கடந்த தேர்தலில் 2.83 கோடி ரூபாய் சொத்துக் கணக்கை காட்டியிருந்தார். இந்த தேர்தலில் இது 17.77 கோடியாக உயந்திருக்கிறது. எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்தின் சொத்து 1.04 கோடியில் இருந்து 6.14 கோடியாக உயர்ந்திருக்கிறது. 20.78 லட்சமாக இருந்த சுரேஷ் ராஜனின் சொத்து 3.21 கோடியாக அதிகரித்து இருக்கிறது. கடந்த தேர்தலில் 62 லட்சம் சொத்து கணக்கை காட்டிய பரிதி இந்த தேர்தலில் 6.49 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துமதிப்பு காட்டி இருக்கிறார். வெள்ளக்கோவில் சாமிநாதனின் சொத்து 86 லட்சத்தில் இருந்து 4.85 கோடியாகவும் பூங்கோதையின் சொத்து 1.35 கோடியில் இருந்து ஒரேடியாக 15.43 கோடியாகவும் எகிறியது.

40 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

vadai

சி.பி.செந்தில்குமார் said...

எதுக்கு 2?

MANO நாஞ்சில் மனோ said...

கொய்யால இன்னைக்கும் வடை போச்சே...

MANO நாஞ்சில் மனோ said...

ஒரு வடை போதாதா மக்கா ரெண்டு ரெண்டு வடையா....

சி.பி.செந்தில்குமார் said...

MANO நாஞ்சில் மனோ said...

கொய்யால இன்னைக்கும் வடை போச்சே.


manoo மனோ.. இது கண்ணியமான பிளாக்.. கவுரவமானவங்க வந்து போற இடம்.. டீசண்சியை மெயின்ட்டெயின் பண்ணவும்.. ஹி ஹி

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இவங்கிட்ட இம்புட்டுதான் இருக்கா..

சி.பி.செந்தில்குமார் said...

MANO நாஞ்சில் மனோ said...

ஒரு வடை போதாதா மக்கா ரெண்டு ரெண்டு வடையா....

ரமேஷூக்கு எல்லாமே ரெண்டாம்

சி.பி.செந்தில்குமார் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...

இவங்கிட்ட இம்புட்டுதான் இருக்கா..

கணக்கில் காட்டப்பட்டதே இம்புட்டுன்னா...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இன்னும் சரியா கணக்கு பண்ணுங்க..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

மேட் ஆரம்பிச்சாச்சி..
ஓட்டுப்போட்டுட்டு கிளம்பிட்டேன்..

MANO நாஞ்சில் மனோ said...

//'சபாநாயகர், முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் ஒவ்வோர் ஆண்டும் தங்களது சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் போடப்பட்டு பல ஆண்டுகளாக கும்பகர்ணத் தூக்கத்தில் இருக்கிறது//

உண்மையை சொன்னாள் நாறி போகுமே அதான் உறங்கிட்டு இருக்கு...

MANO நாஞ்சில் மனோ said...

//என்று சொல்லி அந்த தீர்மானத்தை முன்மொழிந்தார் அன்றைய முதல்வர் கருணாநிதி//

அது அப்போ இது இப்போ...

MANO நாஞ்சில் மனோ said...

//தேர்தல் ஆணையத்தின் இணையத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள வேட்பாளர்களின் சொத்துப் பட்டியலில் இருந்து அமைச்சர்களின் சொத்துப்பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில் டாப் 1 இடத்தில் முதல்வர் கருணாநிதி இருக்கிறார்.//

முதல்வர் டாப்புல இல்லைனா மரியாதை இல்லையே....

MANO நாஞ்சில் மனோ said...

ஆமா இம்புட்டு பணத்தையும் எங்கிட்டு வச்சிருக்காணுக....?

சக்தி கல்வி மையம் said...

நானும் கேப்ள வந்துட்டேனில்ல..

சி.பி.செந்தில்குமார் said...

kகேப்ள வந்தார் விக்கியோட மாப்ளே

Sathish said...

India vs Srilanka World Cup Final Match Live here... Watch it and Enjoy

http://goo.gl/ZF9g5

http://goo.gl/ICQvh

http://goo.gl/n3EoE

Dont miss it and tell your friends..

Unknown said...

இவ்ளோ பணம் இருக்கா? அப்ப சரி எலக்சனப்ப பணத்த கூட்டி கேட்கணும் :-)

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
சி.பி.செந்தில்குமார் said...

Sathishkumar said...

India vs Srilanka World Cup Final Match Live here... Watch it and Enjoy
நன்றி சதீஷ்.. உங்க கடமை உணர்ச்சியை பாராட்டி 3 டி சி டி சித்தோட்டுகு அனுப்பறேன்

சி.பி.செந்தில்குமார் said...

இரவு வானம் said...

இவ்ளோ பணம் இருக்கா? அப்ப சரி எலக்சனப்ப பணத்த கூட்டி கேட்கணும் :-)

ரூ 10000 ஃபிக்சட் ரேட்..

Thenammai Lakshmanan said...

சொத்துக் கணக்கை பார்த்தால் இந்தக் கோடிக்கும் அந்தக் கோடிக்குமா தலை சுத்துது சாமி..::))

செந்தில்குமார் என் குமுதம் கவிதைகளை பார்த்து படித்து பாராட்டியமைக்கு நன்றி நண்பரே..:))

சி.பி.செந்தில்குமார் said...

இராஜராஜேஸ்வரி said...

இந்த பட்டியலில் டாப் 1 இடத்தில் முதல்வர் கருணாநிதி இருக்கிறார்.//
முதல் அமைச்சர் அல்லவா??

முதல்வரே,, முதல்வா..

சி.பி.செந்தில்குமார் said...

தேனம்மை லெக்ஷ்மணன் said...

சொத்துக் கணக்கை பார்த்தால் இந்தக் கோடிக்கும் அந்தக் கோடிக்குமா தலை சுத்துது சாமி..::))

செந்தில்குமார் என் குமுதம் கவிதைகளை பார்த்து படித்து பாராட்டியமைக்கு நன்றி நண்பரே..:))

நன்றியை நாங்க தான் சொல்லனும் மேடம்.. நம்ம பதிவர்களை பெருமைப்படுத்தீட்டீங்க.. சாதனை பண்ணி

சி.பி.செந்தில்குமார் said...

FOOD said...

நானும் வந்திட்டேன்ல. வளர்க உங்கள் அரசியல் விழிப்புணர்வு பணி.

vaangkayyaa வாங்கய்யா வாத்தியார் அய்யா

சக்தி கல்வி மையம் said...

test

Prakash said...

As usual another half-baked report by Vikatan who is having personal enmity with DMK.

Can they list what is Jaya and former ADMK minister’s property values in 2001, 2006 and 2011?

Five years ago if a value of land is 5 Lacks, in 2011 defiantly there will be a raise in present asset value. There is time value of money concept in financial management, they need to read that.

In last five years, my salary has increased 240% and purchased new properties. If a common individual like myself have grown financially in a time period, what is the big surprise that people in political power have grown financially.

காங்கேயம் P.நந்தகுமார் said...

ஆவியும் ஜுவியும் பொட்டியை வாங்கி கொண்டு எழுதுகின்றன என்பது அனைவருக்கும் நன்கு புரிந்துவிட்டது. இது தெரியாம நீங்க வேற டைம் வேஸ்ட் பண்ணிக்கிட்டு... அண்ணா எலக்சன் முடிஞ்சாதான் உங்க கிட்ட இருந்து நல்ல போஸ்டை எதிர்பார்க்க முடியும் என்று நம்புகிறேன்.

நிரூபன் said...

ஏன், அடுத்த தேர்தல் வரைக்கும் இவர்கள் காத்திருக்க வேண்டும்? ஒவ்வோர் ஆண்டும் சொத்துக் கணக்கைத் தன்னிச்சையாகவே தாக்கல் செய்யலாமே?’ என்று பலரும் கேட்கத்தான் செய்கிறார்கள். ஜெயலலிதா இது குறித்துக் கேள்வி எழுப்பியதும், கருணாநிதி மட்டும் உடனே தனது சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்தார்.//

வணக்கம் சகோ, உள்ளூரிலை கொஞ்சத்தைப் பதுக்கி வைத்துக் கொண்டு, வெளியூரிலை அதிக முதலீடுகளை வைத்திருக்கிறவர் தான் எப்பவுமே முன்னுக்கு வருவானாம். அந்த அடிப்படையிலை தான் இங்கே கலைஞரும் முதலாவதாக வந்திருக்கிறார்.

நிரூபன் said...

கலைஞரின் சொத்துக்கள் மட்டும் ஐந்து வருடத்தினுள் டபுள் மடங்காக மாறியிருக்கிறது. (2006-2011)

நிரூபன் said...

இவ்வளவையும் பதுக்கி வைத்து, போகப் போற நேரத்திலை கலைஞர் என்னய்யா பண்ணுறாரு?
மக்கள் திலகத்தைப் போல ஏழைகள் எல்லாருக்கும் வாரி வழங்கினால் தமிழ் நாடு ஒளிரும் தானே?
கலைஞர் பின்னர் கலைஞர் உலகம் என்று தான் அழைக்கப்படுவார்.

ஜெய்லானி said...

இதுல எத்தனை உண்மை எத்தனை பொய்யின்னு தெரியலையே.!!

அதுவும் ஸ்டாலின் கணக்கை பார்தாலே பொய்யின்னு தெரியலையா...!! :-))

Anonymous said...

கடுமையான உழைப்பு போல இருக்கு....படம் ஸ்கேன் பண்ணினதா ,சுட்டதா..செலவு பண்ர ஆளை தெரியாதா..எங்க இருந்து சுட்டதுன்னு கண்டுபிடிக்குறண்டி,,,ம்...நாடு கெட்டு போச்சு...நாசமா போச்சு..என்ன ஒரு வில்லத்தனம்..?

Anonymous said...

நாளகு டாப்20 வரும்னு விழுந்து விழுந்து டைப் பண்றிங்களா..போங்க தம்பி..போய் பொழப்ப பாருங்க

Anonymous said...

அதுவும் ஸ்டாலின் கணக்கை பார்தாலே பொய்யின்னு தெரியலையா...!! :-))//
அண்ணா காலத்துலியே ஏமாத்த ஆரம்பிச்சிட்டாங்க..எம்.ஜி.ஆர் காலத்துலியே ஒழுங்கா கணக்கு காட்டாதவங்க...இப்ப போயி அதிர்ச்சி அலையாம்...இப்ப போயி சொத்து கணக்கு அது இதுனுட்டு நமீதா பத்தி பதிவு போடுப்பா தம்பி...

பூங்குழலி said...

கஷ்டப்பட்டு உழைச்சு சம்பாதிச்ச பணம் ..அத போய் குறை சொல்றீங்களே

செங்கோவி said...

//இது கண்ணியமான பிளாக்.. கவுரவமானவங்க வந்து போற இடம்.// அய்யோ..ஆண்டவா..இதையெல்லாம் படிக்கணும்னு தெரிஞ்சுருந்தா, நான் ஸ்கூலுக்கே போயிருக்க மாட்டனே.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இதுக்கு எதுக்குண்ணே இம்புட்டு ஜெர்க்கு....? இதெல்லாம் இல்லேன்னாத்தான் ஷாக்காகனும்.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////சி.பி.செந்தில்குமார் said...
MANO நாஞ்சில் மனோ said...

கொய்யால இன்னைக்கும் வடை போச்சே.


manoo மனோ.. இது கண்ணியமான பிளாக்.. கவுரவமானவங்க வந்து போற இடம்.. டீசண்சியை மெயின்ட்டெயின் பண்ணவும்.. ஹி ஹி ///////

இத நாங்க நம்பனும்னா மொதல்ல லத்திகா படத்துக்கு விமர்சனம் எழுதுங்க பார்க்கலாம்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ஆர்.கே.சதீஷ்குமார் said...
அதுவும் ஸ்டாலின் கணக்கை பார்தாலே பொய்யின்னு தெரியலையா...!! :-))//
அண்ணா காலத்துலியே ஏமாத்த ஆரம்பிச்சிட்டாங்க..எம்.ஜி.ஆர் காலத்துலியே ஒழுங்கா கணக்கு காட்டாதவங்க...இப்ப போயி அதிர்ச்சி அலையாம்...இப்ப போயி சொத்து கணக்கு அது இதுனுட்டு நமீதா பத்தி பதிவு போடுப்பா தம்பி...///////

இது நியாயம்........!