Wednesday, April 13, 2011

பிரமாதமான வாக்குப்பதிவு... புதிய சாதனை... தேர்தல் கமிஷன் அசத்தல்...

தமிழகத்தில் அமைதியான முறையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சுமார் 75 சதவீத வாக்குகள் பதிவாகின.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாற்றில், 1967-க்குப் பிறகு அதிக எண்ணிக்கையிலான வாக்குப்பதிவு நடந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்த சாதனை எனச் சொல்லலாம்.

மதுரையில் திமுக - அதிமுக தொண்டர்கள் இடையே நடந்த மோதலில் இருவர் காயமடைந்தனர். எனினும், மாநிலம் முழுவதும் குறிப்பிடத்தக்க, பெரிய அளவிலான வன்முறைச் சம்பவங்கள் ஏதும் நிகழவில்லை.

வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்ததற்கு மட்டுமின்றி, அரசியல் கட்சிகளை முறைகேடுகள் செய்ய விடாமல் வெகுவாக தடுத்த வகையில், தேர்தல் ஆணையத்தை தமிழக இதுவரை வாக்கு சதவீதம்...வாக்காளர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

குறிப்பாக, தேர்தலில் பணபலத்தை இயன்ற வரையில் இம்முறை தேர்தல் ஆணையம் தடுத்திருப்பது கவனத்துக்குரியது.

விறுவிறு வாக்குப்பதிவு...

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்றது.

மின்னணு வாக்கு எந்திரங்கள் கோளாறு ஏற்பட்ட வாக்குச்சாவடிகளில், வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கின. இதனால், அந்த இடங்களில் வாக்களிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

மக்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர். முற்பகலில் மட்டுமின்றி பிற்பகலிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் கடந்த தேர்தல்களைக் காட்டிலும் மக்கள் அதிக ஆர்வத்துடன் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.

முந்தையத் தேர்தல்களைப் போலவே 49 ஓ போடவிருந்த வாக்காளர்கள் சிலர் சிரமத்துக்கு ஆளானது. தேர்தல் பணியாளர்களுக்கே இதுபற்றிய விழிப்பு உணர்வு இன்னும் முழுமையாக இல்லை. வாக்கு எந்திரத்திலேயே இதற்கான பொத்தான் வேண்டும் என்பது அவர்களின் விருப்பமாக இருக்கிறது.

தீவிர பாதுகாப்பு...

வன்முறையை தடுக்கவும், முறைகேடுகள் நடைபெறாமல் நேர்மையாக தேர்தல் நடைபெறவும் வரலாறு காணாத அளவில் பாதுகாப்பு போடப்பட்டன. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினர் நிறுத்தப்பட்டனர்.

2011 தேர்தல்...
தொகுதிகள் - 234
வேட்பாளர்கள் - 2,748
வாக்காளர்கள் - 4,71,16,687
வாக்குச்சாவடிகள் - 54,314
பாதுகாப்புப் பணிகளில் துணை ராணுவப் படை, ஊர்க்காவல் படையினர் உள்பட ஏறத்தாழ 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டனர். தேர்தல் பணியில் 3 லட்சம் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

வெப் கேமரா கண்காணிப்பு...

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக இந்த தேர்தலில் முதன்முறையாக போலீஸ் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

தமிழகத்தில் பதற்றமானது என கண்டறியப்பட்ட 9,500 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு தேர்தல் ஆணையரால் நேரடியாக கண்காணிக்கப்பட்டது. 

வாக்கு எண்ணிக்கை... 

வாக்குப் பதிவு மாலை முடிந்ததும் அனைத்து வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டன. அவை அனைத்தும் வாக்குகள் எண்ணப்படும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

சென்னையில் 3 இடங்கள் உள்பட தமிழகத்தில் 91 இடங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு, மே 13-ல் தேர்தல் முடிவுகள் வெளியாகிறது.

மேலும் வாக்குப்பதிவு சதவீதம் அதிகமாக அதிகமாக  படித்தவர்கள் வாக்கு அதிகம் பதிவாகுது என அர்த்தம்.. அது தி மு க விற்கு அனர்த்தம்.


60 % வாக்குப்பதிவு நடந்திருந்தால் இழுபறியாக இருந்திருக்கும்.. இப்போ தி மு கவிற்கு ....????????????

45 comments:

M.G.ரவிக்குமார்™..., said...

Its really a glad news.Hope tamilnadu will face a new rule soon.!

shanmugavel said...

//முந்தையத் தேர்தல்களைப் போலவே 49 ஓ போடவிருந்த வாக்காளர்கள் சிலர் சிரமத்துக்கு ஆளானது. தேர்தல் பணியாளர்களுக்கே இதுபற்றிய விழிப்பு உணர்வு இன்னும் முழுமையாக இல்லை. வாக்கு எந்திரத்திலேயே இதற்கான பொத்தான் வேண்டும் என்பது அவர்களின் விருப்பமாக இருக்கிறது.//

அடுத்த தேர்தலிலாவது சீர் செய்ய வேண்டும்.பார்ப்போம்.

காங்கேயம் P.நந்தகுமார் said...

தேர்தல் அமைதியாகவும் அதே சமயம் வாக்கு சதவீதம் அதிகரித்திருப்பது, வாக்களர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

Unknown said...

ஜனநாயகத்தில் நம் மக்கள், இன்னும் நம்பிக்கை இழக்கவில்லை என்பதை காட்டுகிறது.

Unknown said...

49 ஓ வில் வாக்களிப்பதற்கு படிவம் ஏதுமில்லை. வெறுமனே வாக்குச்சாவடியிலுள்ள 17 ஏ பதிவேட்டில் வாக்களிக்க விருப்பமில்லை என்று எழுதி கையொப்பம் இட்டால் போதுமானது. ஏன் இவ்வளவு குழப்புகிறார்கள் என்று தெரியவில்லை.

Unknown said...

அதே கடமை உணர்வோடு உங்கள் பதிவுக்கும் வாக்களித்து விட்டேன்..

காங்கேயம் P.நந்தகுமார் said...

வாக்கு சதவீதம் அதிகம். தி.மு.க விற்கு வெற்றி! வெற்றி! வெற்றி!

வடுவூர் குமார் said...

ஓட்டு போட எனக்கு வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே ஆனது.ஸ்பீக்கர் சத்தம், போஸ்டர்,காம்பவுண்ட் சுவற்றில் எழுதுவது பெருமளவு இல்லை அதுவே நிம்மதியாக இருந்தது.

சி.பி.செந்தில்குமார் said...

பி.நந்தகுமார் said...

வாக்கு சதவீதம் அதிகம். தி.மு.க விற்கு வெற்றி! வெற்றி! வெற்றி!


haa haa ஹா ஹா நல்ல பொழுதை எல்லாம் தூங்கிக்கழித்தவர்கள்.... கனவு முடிஞ்சிது...

செங்கோவி said...

75 சதவீத ஓட்டு என்பது பெரும் சாதனை தான்..பாராட்டுகள்!

காங்கேயம் P.நந்தகுமார் said...

எப்படியோ இந்த தேர்தலில் கள்ள ஓட்டு போட ஆள் கூட்டி வந்த அ.தி.மு.க வினருக்கு நல்ல ஏமாற்றம்

ராவணன் said...

மஞ்சள் துண்டு காலியா?

Anonymous said...

பரவா இல்லேயே !!! 75 சதவீதம் விழுந்துருக்கா ??? நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது !!! மக்களில் நிறைய மாற்றங்கள் தெரியுது .......... !!! இனி யார் வென்றாலும், மக்களுக்கு அஞ்சி ஆட்சி நடத்த வேண்டும் ..... !!!

காங்கேயம் P.நந்தகுமார் said...

எப்படியோ இந்த தேர்தல் எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை. அதைத்தான் தேர்தலுக்கு முன்னே அ.தி.மு.க அரங்கேற்றிவிட்டது. விக்கிரவாண்டி பேரூராட்சி தி.மு.க தலைவர் அர்ச்சுனன் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை. அமைச்சர் முத்தூர் சாமிநாதன் மீது தாக்குதல் இது போதாதா?

சக்தி கல்வி மையம் said...

ரைட்டு, வாழ்க நம் ஜனநாயகம்... தேர்தல் கமிஷனுக்கு ஒரு ஓஓஓஓஓ..

ராஜி said...

தமிழகத்தில் 75 சதவித வாக்குகள் பதிவாயின.
>>
இளைஞர்களுக்கு தனது ஓட்டுரிமைகளின் மீதான விழிப்புணர்வையே இது காட்டுகிறது.

ராஜி said...

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக இந்த தேர்தலில் முதன்முறையாக போலீஸ் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
>>>
அப்படியும் உங்களை மாதிரியான ஆளுங்க குறையத்தான் சொல்வீங்க. அதான் இந்த ஏற்பாடுகள்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அமைதியான தேர்தல், அதிகளவு வாக்களிப்பு - இந்தியாவுக்கே பெருமை செந்தில்!!

Prakash said...

If the higher turnout is more in Towns & City measn ADMK might get more votes. If the higher turnout in Villages and Small Towns means DMK shall get more votes.

District wise % shall give more details. Chennai is recorded 63%, but rural districts polled more than 85%, that means DMK shall win

Rathnavel Natarajan said...

வாக்குப் பதிவு கூடுதலுக்கு காரணம் 'தேர்தல் ஆணையம்' தான். அவர்களது நடவடிக்கையால் மக்களுக்கு பாதுகாப்பு உணர்வு வந்து விட்டது. அவர்களது கூடுதல் பிரச்சாரமும் ஒரு காரணம்.
ஒரு நிம்மதி பெருமூச்சு.

ராஜ நடராஜன் said...

புதிய சாதனை மாறுதலை தரும் என நம்புவோம்.

பகிர்வுக்கு நன்றி.

ராஜ நடராஜன் said...

ஊழல்களையும்,சாதிக்கட்சிகளையும் ஊக்குவித்த திராவிட கழகங்கள் இராணுவ உதவியோடு தேர்தலை நிகழ்த்துமளவுக்கு தமிழகத்தைப் பிற்போக்க்கான மாநிலமாக்கி விட்டார்கள்.

ராஜ நடராஜன் said...

தேர்தல் ஆணையம் மக்களுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கையூட்டுகிறது.தேர்தல் ஆணையத்தை ஊக்கப்படுத்துவோம்.மாற்றங்களை வரவேற்போம்.

நிரூபன் said...

வணக்கம் சகோ,

பயங்கர இறுக்கமான சுற்று மதில் கட்டி வைச்சிருக்கிறீங்க போல இருக்கே(Great wall)

பதிவின் தலைப்பிற்கும், 75% என முதல் வரிகளில் வரும் விடயங்களுக்கும் ஒரு சல்யூட்....

சி.பி.செந்தில்குமார் said...

நிரூபன் said...

வணக்கம் சகோ,

பயங்கர இறுக்கமான சுற்று மதில் கட்டி வைச்சிருக்கிறீங்க போல இருக்கே(Great wall)

பதிவின் தலைப்பிற்கும், 75% என முதல் வரிகளில் வரும் விடயங்களுக்கும் ஒரு சல்யூட்....

ஆம் நண்பா.. பலர் காப்பி பேஸ்ட் பண்றாங்க..

நிரூபன் said...

மாநிலம் முழுவதும், வன் முறைச் சம்பவங்களே இல்லையா? ஆச்சரியமாக இருக்கிறது, அத்தோடு யாரும் திருட்டுத் தனமாக டாஸ்மாக்கை பதுக்கவில்லை என்று நினைக்கிறேன்.

நிரூபன் said...

திமுகவிற்கு எத்தனை வீதம் என்பது கேள்விக் குறி தான். முடிவுகளிற்காக ஒரு மாத காலம் காத்திருக்க வேண்டும்.

தமிழகத்தில் எலக்ரோனிக் வாக்குப் பதிவு பாதுகாப்பாக நடை பெற்றது மகிழ்ச்சியே. இதே நிலமை எங்கள் நாட்டிலும் அறிமுகப்படுத்தப்பட்டால், தமிழகத்தைப் போன்று குடும்ப அரசியலை.........................


மிகுதியை வார்த்தைகளைப் போட்டு யாராவது நிரப்பலாம்.

நிரூபன் said...

சி.பி.செந்தில்குமார் said...
நிரூபன் said...

வணக்கம் சகோ,

பயங்கர இறுக்கமான சுற்று மதில் கட்டி வைச்சிருக்கிறீங்க போல இருக்கே(Great wall)

பதிவின் தலைப்பிற்கும், 75% என முதல் வரிகளில் வரும் விடயங்களுக்கும் ஒரு சல்யூட்....

ஆம் நண்பா.. பலர் காப்பி பேஸ்ட் பண்றாங்க//

ஏன் பாஸ்... உட்கார்ந்து யோசிக்க அவங்களுக்கு டைம் இல்லையா?

Hope said...

நந்தகுமார், உங்களை போல் 4 பேர், வேண்டாம் நீர் ஒருவரே போதும், தமிழ் நாட்டை கலைஞர் தாத்தாவிடமிருந்து யாராலும் பறிக்க முடியாது. நீங்கள் படித்தவராக மட்டும் இருந்தால் போதாது, சிந்திக்கவும் தெரிய வேண்டும்.
இன்று Ytube பார்த்து அதிர்ந்து விட்டேன். ஒன்றா, இரண்டா?இணைத்துள்ளேன், பாருங்கள். நல்லவேளை நான் இந்தியாவில் இல்லை, வரவும் வேண்டாம்.
http://www.youtube.com/watch?v=3Q_rDRw_1wA&feature=related

http://www.youtube.com/watch?v=f7W3JsXhQio&feature=related
எல்லாம் கலைஞர் தாத்தா ஆட்சியில்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஏண்ணே.. தேர்தல் முடிஞ்சிருச்சா?..

சொல்லவேயில்ல.....!!!

டக்கால்டி said...

நான் அங்க இருந்தப்ப லிஸ்ட்ல என் பேரு இல்ல...இப்ப இருக்காம்...எவன் கள்ள ஓட்டு போட்டானோ? அட போங்க ஜி...

சி.பி.செந்தில்குமார் said...

Blogger டக்கால்டி said...

நான் அங்க இருந்தப்ப லிஸ்ட்ல என் பேரு இல்ல...இப்ப இருக்காம்...எவன் கள்ள ஓட்டு போட்டானோ? அட போங்க ஜி...

களீப்புடன் இருக்க வேண்டிய இந்நன்னாளில் சலிப்பு எதற்கு நண்பா..?

சி.பி.செந்தில்குமார் said...

பட்டாபட்டி.... said...

ஏண்ணே.. தேர்தல் முடிஞ்சிருச்சா?..

சொல்லவேயில்ல.....!!!

ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

Hope said...

நந்தகுமார், உங்களை போல் 4 பேர், வேண்டாம் நீர் ஒருவரே போதும், தமிழ் நாட்டை கலைஞர் தாத்தாவிடமிருந்து யாராலும் பறிக்க முடியாது. நீங்கள் படித்தவராக மட்டும் இருந்தால் போதாது, சிந்திக்கவும் தெரிய வேண்டும்

அவர் பக்கா டி எம் கே.. எங்க ஊர்க்காரர் தான்

Pranavam Ravikumar said...

Now wait till May 13th..! Lets see.. Thanks for the post.

வைகை said...

சி.பி.செந்தில்குமார் said...
Hope said...

நந்தகுமார், உங்களை போல் 4 பேர், வேண்டாம் நீர் ஒருவரே போதும், தமிழ் நாட்டை கலைஞர் தாத்தாவிடமிருந்து யாராலும் பறிக்க முடியாது. நீங்கள் படித்தவராக மட்டும் இருந்தால் போதாது, சிந்திக்கவும் தெரிய வேண்டும்

அவர் பக்கா டி எம் கே.. எங்க ஊர்க்காரர் தான்//

ரைட்டு.... காது கிழியுது....சொம்பு சத்தம்..கொஞ்சம் மெதுவா..ம்ம்ம்..அப்பிடிதான்..இன்னும் மெதுவா...சரி..சரி..தண்ணி குடிச்சிட்டு வாங்க..

வைகை said...

எல்லோருமே சொன்னாங்க... சூப்பரான ஏற்பாடுகள்... ஹேட்ஸ் ஆஃப் பிரவீன் குமார் சார்!

சி.பி.செந்தில்குமார் said...

@வைகை

தமிழன் விழித்துக்கொண்டானா? ஆச்சரியம் தான்

Jerry Eshananda said...

Hello sipi...congrats..i feel highly professonal touch in almost all the posts...keep rocking.

Jerry Eshananda said...

திரும்பவுமா..சந்தோசம் பாதி..ஆச்சரியம் மீதி....

ரஹீம் கஸ்ஸாலி said...

சதவீதம் வாக்குப்பதிவு நடந்திருந்தால் இழுபறியாக இருந்திருக்கும்...இப்போ தி.மு.க.விற்கு..../////
வாக்குப்பதிவின் சதவிகிதம் உயர்ந்தால் தி.மு.க.விற்கு சாதகமான அம்சம்தான். பணம் வாங்கியவர்களெல்லாம் வாக்களித்து விட்டார்கள் என்று அர்த்தம் அதற்கிடையில் அவசரப்பட்டா எப்படி இன்னும் ஒரு மாசம் காத்திருங்கள்...

Thirumalai Kandasami said...

சிபி ஜி ,,விகடன் பகுதியில் இருந்து cut ,copy ,paste செய்யும் நீங்கள் ,அதை பற்றி எதுவும் சொல்லாமல்,உங்கள் சொந்த பதிவு மாதிரி போட்டு அதை இன்ட்லியிலும் இணைத்து வோட்டு வாங்குவது கண்டிக்கத்தக்கது...நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே..

http://therthal.vikatan.com/index.php?eid=914

Thirumalai Kandasami said...

தொடர்ந்து cut ,copy ,paste செய்வதால், நீங்கள் உங்கள் தனித்தன்மையை இழந்து விட்டதாக எண்ணி வருந்துகிறேன்..

சி.பி.செந்தில்குமார் said...

சாரி சார்.. லேபிள்ல எப்பவும் ஜூ வி அல்லது ஆ வி என போடுவேன்.. இப்ப மிஸ் ஆகிடுச்சு.. கரெக்ட் பண்ணிட்டேன்.

எலக்‌ஷன் டைம் என்பதால் அப்படி.. இனி சரி பண்ணிடலாம்.. நன்றி

tpi said...

eleaction resultuku appuram raja mathairi dmk leaders ellam "pulai" jailthan. aagaveythan munnadiyea puthusa jail katti dmk vachirukanga.