அ.தி.மு.க. கூட்டணியின் அனல், புனல் இரண்டுமே இப்போது விஜயகாந்த்தான்!
அப்பாவின் 'முரசொலி’ அவரைத் திட்டித் தீர்க்கிறது. 'விஜயகாந்த் மானஸ்தன்!’ என்று தூபம் போட்டார் அண்ணன் அழகிரி. '30, 40 சீட்டுக்காகக் கட்சியை அடமானம் வைக்க மாட்டேன் என்ற முன்னாள் கதாநாயகன் என்ன ஆனார்?’ என்று கேட்டார் தம்பி ஸ்டாலின். தி.மு.க-வின் வெற்றிக் கணக்கை, விஜயகாந்த்தின் கூட்டணிக் கணக்கு முறியடித்து வருகிறதோ என்ற கோபத்தின் வெளிப்பாடுகளாகவே இவர்களின் வாக்குமூலங்களைக் கருத வேண்டி இருக்கிறது.
இதுவரை 'சிங்கிள் சிங்கமாக’ வலம் வந்த விஜயகாந்த், இப்போது கூட்டணிக் காட்டுக்குள். வெளுத்து வாங்கும் வெயிலில் பிரசாரம் போகும் அவரது வேனில் ஓர் இடம் கிடைத்த இடைவேளையில், பல விஷயங்களைப் பேச முடிந்தது.
1. ''முதல் கேள்வியை நானே கேட்கிறேன் சார்! 'தெய்வத்துடனும் மக்களுடனும் தான் கூட்டணின்னு சொன்ன நீங்க, ஏன் ஒரு அணியில் சேர்ந்தீங்க?’ன்னுதானே கேட்கப்போறீங்க?''- உஷாராக எடுத்துக் கொடுக்கிறார்.
''அதுதானே முதல் கேள்வியாக இருக்க முடியும்...''
''இன்றைக்கு என்னோட ஒரே இலக்கு, முதலமைச்சர் நாற்காலியில் கருணாநிதி நீடிக்கக் கூடாது. தி.மு.க. ஆட்சிக் கட்டிலில் தொடரக் கூடாது. அதுக்கு எது சரியான முடிவோ, அதைத்தான் நான் எடுத்திருக்கேன். என்னை தனியா நிறுத்தி, ரத்தம் குடிக்கச் சில நரிகள் தயாராக இருந்தன. அதற்கு நான் தடைபோட்டு விட்டேன். அந்த ஆத்திரத்தில்தான் என் மீது அவதூறு பரப்புறாங்க!
இப்போதும் சொல்றேன்... மக்களோடும் தெய்வத்தோடும்தான் கூட்டணி வைத்து இருக்கேன். சேலத்தில் நடந்த தே.மு.தி.க. மாநாட்டில், 'கூட்டணி சேரலாமா, வேண்டாமா’ என்று கேட்டேன். 'கூட்டணி சேருங்கள்! அப்போதுதான் நம் எண்ணம் நிறைவேறும்’னு எல்லா மக்களும் ஒரே மாதிரி சொன்னாங்க. 'மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’ என்பது அண்ணாவின் மந்திரம். அதைத்தான் நான் செயல்படுத்தி இருக்கேன்!''
கேப்டன் சார்.. யார் உங்களுக்கு 41 சீட் தர்றாங்களோ அவங்க தான் உங்களுக்கு தெய்வமா? அப்போ அய்யா 50 சீட் குடுத்தா என்ன பண்ணுவீங்க? தி முக , அதிமுக ரெண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்னு சொன்னீங்களே அது என்னாச்சு?
2. ''அ.தி.மு.க-வுடன் நீங்கள் கூட்டணி அமைத்தது சந்தர்ப்பவாதம் என்று சொல்லப்படுகிறதே?''
'' 'கருணாநிதி ஒரு தீய சக்தி’ என்று சொல்லி, இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் ஆரம்பித்த கட்சி தான் அ.தி.மு.க. 'கருணாநிதி பல தீய சக்திகளின் ஒட்டுமொத்த உருவம்’ என்று சொல்லி வருபவன் நான். ஒரே கொள்கைகொண்ட இரண்டு கட்சிகள் கூட்டணிவைப்பது எப்படி சந்தர்ப்பவாதம் ஆகும்? இதுதான் சரியான வாதம்!
கருணாநிதி அமைச்சிருக்கிறது கொள்கைக் கூட்டணியா? காங்கிரஸ் கட்சியை 1967-ம் வருஷம் வீட்டுக்கு அனுப்பினார் அண்ணா. நாட்டை நாசமாக்கினதே காங்கிரஸ் கட்சிதான்னு சொன்னார் அண்ணா. இன்றைக்குத் தன் குடும்பத்தைக் காப்பாற்ற, காங்கிரஸ் கட்சி கேட்பதையெல்லாம் தூக்கிக் கொடுக்கிறார் கருணாநிதி.
தி.மு.க-வின் காங்கிரஸ் எதிர்ப்புக் கொள்கை அடமானம் வைக்கப்பட்டதற்குக் காரணம், ஆ.ராசா திஹார் ஜெயிலில் இருக்கிறதுதானே?
டாக்டர் ராமதாஸ் கட்சி ஆரம்பிச்சதில் இருந்து கருணாநிதியைத்தான் ஆதரிச்சுக்கிட்டு இருக்காரா? இந்தக் கூட்டணிக்குள் எத்தனை தடவை வந்தார்... எத்தனை தடவை வெளியே போனாருங்கிற கணக்காவது கருணாநிதிகிட்டயும் ராமதாஸிடமும் உண்டா? 'கருணாநிதி ஆட்சிக்கு எத்தனை மார்க் போடுவீங்க?’ன்னு ராமதாஸிடம் ஒரு நிருபர் கேட்டப்போ, 'முட்டை மார்க் போடுவேன்’னு சொன்னவர் அவர். முட்டை மார்க் போட்ட ராமதாஸும் கருணாநிதியும் மேடையில் சிரிக்கிறது சந்தர்ப்பவாதம் இல்லையா?''
மிஸ்டர் கேப்டன்.. சந்தர்ப்பவாதத்தைப்பற்றி நீங்க பேசாதீங்க.. 30 அல்லது 40 சீட்டுக்காக கட்சியை அடமானம் வைக்க மாட்டேன்னு ஒரு மானஸ்தன் சொன்னதா ஞாபகம்..
'3. 'நீங்கள் மானஸ்தர் என்றும் அ.தி.மு.க கூட்டணிக்கு நிச்சயம் போக மாட்டீர்கள் என்றும் அழகிரி சத்தியம் செய்து வந்தாரே?''
'' 'நீண்ட கால நண்பர்’னு வேற சொல்லியிருக்கார்! சின்ன வயசுல நானும் அவரும் என்ன கோலிக்குண்டு விளையாடினோமா? கபடி ஆடினோமா? சும்மா, மைக் கிடைச்சதும் அடிச்சுவிட்டிருக்கார் அழகிரி.
அ.தி.மு.க-வுடன் தே.மு.தி.க. கூட்டணி போடக் கூடாது. போட்டால், தி.மு.க. அதோட காலிங்கிறது னால, அவங்க என்னென்னவோ முயற்சி பண்ணிப் பார்த்தாங்க. நான் எதுக்கும் அசரலை. விலை பேசினாங்க. நான் மசியலை. உளவுத் துறையைவெச்சு பொய்களை, வதந்திகளைக் கிளப்பினாங்க. நான் எதைப்பத்தியும் கவலையே படலை. அர்ஜுனனுக்குத் தெரிந்தது கிளியின் கழுத்து மட்டுமேங்கிற மாதிரி, எனக்குத் தெரிந்தது எல்லாமே கருணாநிதி மட்டும்தான். கோடிகளைவிட, இந்த மோசடிப் பேர்வழிகள்தான் என் கண்ணுக்குத் தெரிஞ்சாங்க.
கோடிகளை வாங்கினால், நான் மட்டும்தான் சுபிட்சமா இருந்திருக்க முடியும். ஆனா, நான் அந்தப் பாவத்தைச் செய்யலை. மே 13-க்குப் பிறகு, நாடே நல்லா இருக்கப்போகுது!''
ஏன்? நீங்க சினி ஃபீல்டை விட்டு விலகப்போறீங்களா?
4. '' 'அ.தி.மு.க கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஒரே மேடையில் பேசியது உண்டா?’ என்று மு.க.ஸ்டாலின் கேட்கிறாரே?''
'' 'அடுத்த வீட்ல என்ன நடக்குதுன்னு நான் பார்க்க மாட்டேன்’னு அவரோட அப்பா சொல்லி இருக்கார். அதை ஸ்டாலினும் கடைப்பிடிக்கட்டும். சேர்ந்து பிரசாரம் பண்றோமா, தனியா பண்றோமாங்கிறது முக்கியம் இல்லை. ஜெயிக்கிறோம்... அதுதான் எங்க லட்சியம்!''
எலக்ஷனுக்கு முன்னாலயே 2 பேரும் சேரலைன்னா எலக்ஷன் ல ஜெயிச்ச பிறகு அந்தம்மா உங்களை கிட்டே விடும்னு நினைக்கறீங்க?
5. ''தி.மு.க-வினர் சாதனைகளைச் சொல்லி வாக்குக் கேட்கிறார்கள். தங்களால் பயன் அடைந்தவர்கள் வாக்கு அளித்தாலே போதும் என்கிறார்களே?''
''பயனடைந்தவர்கள் பத்துப் பேர்னா... எதுவும் கிடைக்காதவங்க தொண்ணூறு சதவிகி தம் பேராச்சே! அவங்க உதயசூரியனுக்கு எப்படிக் குத்துவாங்க?
இலவச டி.வி. எதுக்குக் கொடுத்தார் கருணாநிதி? டி.வி-க்களின் எண்ணிக்கை அதிக மானால், தன் குடும்பத்துக்கு கேபிள் பணம் கொட்டும். அதுக்காகத்தான். அரசாங்கப் பணத்தைப் பொதுமக்களுக்குக் கொடுத்து, அதைத் தன் குடும்பத்துக்குத் திருப்புற டெக்னிக் அது. 'விஞ்ஞான முறையில் ஊழல் செய்யக்கூடியவர் கருணாநிதி’ன்னு நீதிபதி சர்க்காரியா சும்மாவா சொன்னார்?
இலவச அரிசி கொடுக்குறோம்னு வாங்கிட்டு... கடத்திக்கிட்டு இருக்காங்க. யார் கடத்துறாங்கன்னும் மக்களுக்கே தெரியும்!
கலைஞர் காப்பீட்டுத் திட்டம் மூலமா கோடிக்கணக்கான பணம் குறிப்பிட்ட ஒரு இன்ஷூரன்ஸ் கம்பெனிக்குப் போகுது. அதோட முதலாளி, பல வருஷமா கருணாநிதிக்குக் கூட்டாளி. அரசாங்கப் பணத்தை எப்படித் திருப்பிவிட்டிருக்கார்னு பாருங்க.
இப்படி உள்நோக்கம் இல்லாம, எந்தத் திட்டத்தையும் கருணாநிதி கொண்டுவரலை. கொண்டுவரவும் மாட்டார். 'மக்கள் நலன் மக்கள் நலன் என்றே சொல்லுவார்... தம் மக்கள் நலன் ஒன்றையே மனதில்கொள் வார்’ங்கிற பாட்டு கருணாநிதிக்கு மட்டும் தான் பொருந்தும்.
'அரிசிக் கடத்தலைத் தடுப்பேன்... மணல் கொள்ளையைத் தடுப்பேன்... கந்து வட்டிக் கொடுமையை ஒழிப்பேன்’னு நாங்க சொல்ல வேண்டியதை... ஆட்சி அதிகாரத்தில் இருந்த கருணாநிதி திருவாரூர்லயும் தஞ்சாவூர்லயும் சொல்றார். இதை எல்லாம் தடுக்க வேண்டிய அஞ்சு வருஷமும் அவர் என்ன செஞ்சாராம்?
இந்த அஞ்சு வருஷமா இந்த மூணும் அமோகமா நடந்துச்சுங்கிறதை ஒரு முதல்அமைச்சரே ஏற்றுக்கொள்கிறாரா? இதை ஒழிக்க அவர் போட்ட திட்டங்கள் என்ன? அதிகாரிகளுடன் எத்தனை தடவை ஆலோ சனை செய்தார்? திருவண்ணாமலையில் ஒரு லாரியே எரிஞ்சுபோச்சு. பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, அதை ரேஷன் அரிசின்னார். கூட்டணி சேர்ந்த பிறகு, அவங்க அதைப்பத்திப் பேசவே இல்லை. கருணாநிதியும் ராமதாஸும் சேர்ந்தால், உண்மை செத்துடுமா?
'பள்ளிகள், கோயில்களுக்கு அருகில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை எங்கள் கட்சிப் பெண்களே அடித்து நொறுக்குவாங்க’ என்றார் ராமதாஸ். மதுவிலக்கு வேண்டும் என்று ராமதாஸ் சொன்னார். செய்தாரா கருணாநிதி?
இப்படி இந்த அஞ்சு வருஷத்துல எந்த நல்லதும் நடக்கலை. எந்த முகத்தை வெச்சுக் கிட்டு, ஓட்டு கேட்டு வர்றாங்கன்னே புரியலை!''
என்ன இப்படி சொல்லீட்டீங்க..?நீங்க அரசியலுக்கு வந்ததே அவங்களால தானே.. அது நல்லது இல்லையா? எத்தனையோ நடிகைகளுக்கு கலைமாமணி விருது கிடைச்சது அது நல்லது இல்லையா?கலைஞர் டி வி யே என்னுது இல்லைன்னு கலைஞர் சொல்லீட்டார்.. அது பொது சொத்து ஆகப்போகுது.. அது நல்லது இல்லையா?அவ்வளவு ஏங்க? தப்ஸி, தமனா,அஞ்சலி போன்ற சூப்பர் ஃபிகர்கள் களம் இறங்குனதும் அய்யாவோட ஆட்சில தானே..?
6. ''இதுவரைக்கும் நீங்க போய்ப் பார்த்த இடங்களில் மக்கள் மனோபாவம் எப்படி இருக்கிறது?''
''ஆளும் கட்சிக்கு எதிரான கோபத்தைத்தான் நான் பார்க்கிறேன். மாற்றம் வரணும்னு நினைக்கிறது எல்லார் முகத்துலயும் தெரியுது. இப்படியே விட்டா, தி.மு.க. குடும்பச் சொத்து ஆனது மாதிரி... தமிழ்நாடும் ஒரு குடும்பத்தின் சொத்தா மாறிடும்னு மக்கள் நினைக்கிறாங்க.
முன்பெல்லாம் படிச்சவங்களுக்குத்தான் நிறைய விஷயம் தெரிஞ்சிருக்கும். ஆனா, இப்ப பாமரர்களுக்கும் தெரிஞ்சிருக்கு. 1.76 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல் கிராமத்துப் பாட்டாளிக்கும் நல்லாவே தெரியுது. அதில் அடிச்ச பணத்தைத்தான் நமக்குத் தரப்போறாங்கன்னு மக்களே சொல்றாங்க.
ஈழத் தமிழர்களுக்கு கருணாநிதி செய்த துரோகம்,
அவர் இதுவரைக்கும் போட்டுவெச்சு இருந்த கொள்கைவாதி முகமூடியைக் கிழித்துவிட்டது. 2009 மே மாசத்துக்குப் பிறகு, உண்மையான தமிழர்கள் யாரும் அவரை ஆதரிக்கத் தயாரா இல்லை.
ஸ்பெக்ட்ரம் மோசடி வெளிச்சத் துக்கு வந்த பிறகு, அவர் இதுவரைக்கும் போட்டு வைத்திருந்த நேர்மையாளன் என்ற முகமூடியும் கிழிந்துவிட்டது. 2010 நவம்பர் மாசத்துக்குப் பிறகு நேர்மையான தமிழர்கள் யாரும் அவரை ஆதரிக்கத் தயாரா இல்லை.
எகிப்துல முபாரக் ஓடின மாதிரி, இங்கேயும் நடக்கப்போகுது பாருங்க!'
''மக்கள், மௌனப் புரட்சிக்குத் தயாரா ஆயிட்டாங் கன்றது இந்தக் கூட்டத்தைப் பார்த்தாலே தெரியலையா!''
கூடும் கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறி விடும் என்று நினைத்துத்தான் பலர் மனப்பால், மனபிராந்தி, மன விஸ்கி எல்லாம் குடிக்கறாங்க.. இந்த கூட்டத்தை விட பல மடங்கு கூட்டம் தப்ஸி வந்தாக்கூடத்தான் வரும்.. அதுக்காக தப்ஸி தான் அடுத்த சி எம்னு சொல்லிட முடியுமா? போங்க தம்பி போங்க.. போய் புள்ள குட்டிகளை நல்லா படிக்க வைங்க.. அவங்களாவது நல்ல புத்தியோட வளரட்டும்..
டிஸ்கி -1. இந்த பதிவில் கறுப்பு , வெள்ளை, சிவப்பு என கலர் மாறி மாறி வருவது எதேச்சையானது.. நான் அதிமுகவுக்கு ஆதரவு என யாரும் முத்திரை குத்த வேண்டாம்..
டிஸ்கி 2 - டைட்டிலில் ஜெயலலிதா இருக்கார் ஆனால் பதிவில் அவர் இல்லையே என கேட்பவர்களுக்கு நல்லாட்சி நடக்குது என சிலர் சொல்றாங்க.. ஆனால் அதில் பாதிதானே அதாவது வெறும் ஆட்சி மட்டும் தானே நடக்குது. அதை குறிப்பால் உணர்த்தவே அப்படி டைட்டில்.... ஹி ஹி ( எதையாவது எதுகை மோனையா டைட்டில் வைக்க வேண்டியது.. அப்புறம் அதுக்கு நியாயம் கற்பிக்க யோசிக்க வேண்டியது..)
டிஸ்கி -1. இந்த பதிவில் கறுப்பு , வெள்ளை, சிவப்பு என கலர் மாறி மாறி வருவது எதேச்சையானது.. நான் அதிமுகவுக்கு ஆதரவு என யாரும் முத்திரை குத்த வேண்டாம்..
டிஸ்கி 2 - டைட்டிலில் ஜெயலலிதா இருக்கார் ஆனால் பதிவில் அவர் இல்லையே என கேட்பவர்களுக்கு நல்லாட்சி நடக்குது என சிலர் சொல்றாங்க.. ஆனால் அதில் பாதிதானே அதாவது வெறும் ஆட்சி மட்டும் தானே நடக்குது. அதை குறிப்பால் உணர்த்தவே அப்படி டைட்டில்.... ஹி ஹி ( எதையாவது எதுகை மோனையா டைட்டில் வைக்க வேண்டியது.. அப்புறம் அதுக்கு நியாயம் கற்பிக்க யோசிக்க வேண்டியது..)
39 comments:
hey vada for me
wait i'll read and come back
தி.மு.க-வின் வெற்றிக் கணக்கை, விஜயகாந்த்தின் கூட்டணிக் கணக்கு முறியடித்து வருகிறதோ என்ற கோபத்தின் வெளிப்பாடுகளாகவே இவர்களின் வாக்குமூலங்களைக் கருத வேண்டி இருக்கிறது.
உண்மைதான்! விஜயகாந்த் இப்போ இவங்களோட நம்பிக்கைய தகர்த்திட்டு வர்றார்!!
கேப்டன் சார்.. யார் உங்களுக்கு 41 சீட் தர்றாங்களோ அவங்க தான் உங்களுக்கு தெய்வமா? அப்போ அய்யா 50 சீட் குடுத்தா என்ன பண்ணுவீங்க? தி முக , அதிமுக ரெண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்னு சொன்னீங்களே அது என்னாச்சு?
நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு!!
ஆனா நண்பா கேப்டன் வேட்பாளரை அடித்ததும், வை கோவை ஜெ அவமானப்படுத்தியதும் ஓட்டு எண்ணிக்கையை குறைக்கும்
மிஸ்டர் கேப்டன்.. சந்தர்ப்பவாதத்தைப்பற்றி நீங்க பேசாதீங்க.. 30 அல்லது 40 சீட்டுக்காக கட்சியை அடமானம் வைக்க மாட்டேன்னு ஒரு மானஸ்தன் சொன்னதா ஞாபகம்..
குடிகாரன் பேச்சு மார்னிங் போச்சு!
ஆனா நண்பா கேப்டன் வேட்பாளரை அடித்ததும், வை கோவை ஜெ அவமானப்படுத்தியதும் ஓட்டு எண்ணிக்கையை குறைக்கும்
ம்........ அதுவும் சரிதான்!! ஆனா என்னதான் எதிர்கட்சிகள் ப்ரெஷர் குடுத்தாலும், தி மு க வின் வெற்றி உறுதியுன்னு, சில அ தி மு க ஆதரவாளர்கள் கூட சொல்றாங்களே? எப்புடி? ,
டிஸ்கி எங்கே? எங்கே?
10
ஓகே நான் கெளம்புறேன் தல!! அப்புறமா சந்திக்கலாம்!!
:)
பயபுள்ள என்னமா பொங்கி இருக்கு ஹி ஹி!
மே 13 க்கு அப்புறம் தமிழ்நாடு நல்லாயிருக்கும். ஏன் நீங்க சினிமாவுல நடிக்கிறதை நிறுத்திருங்கிளா? சி.பி.அண்ணே செம காமெடி போங்க! அல்லது ஒரு வேளை தோல்விக்கு முழு பொறுப்பேற்று அரசியலுக்கு கேப்டன் முழுக்கு போடறாரோ என்னமோ?
அந்தம்மா மட்டும் இந்த டைசன் கூட ஒண்ணா பிரசார மீட்டிங் போட்டுது............!
நல்லப் பதிவு செந்தில், சரமாரியான கேள்விகள், அதற்கேற்ற பதில்கள்.
சுவாரசியமா இருக்கு படிக்க...
மக்கள் சிந்தித்து ஓட்டுப் போட்டால் சரி.
இதுபோல ஒரு பதிவு நானும் போட்டிருக்கேன்...
வந்துட்டு போங்க..
// தப்ஸி, தமனா,அஞ்சலி போன்ற சூப்பர் ஃபிகர்கள் களம் இறங்குனதும் அய்யாவோட ஆட்சில தானே..?
இந்த ரணகளத்திலேயும் உங்களுக்கு கிளுகிளுப்பு கேட்குதா
மேட்ச் ஃபிக்ஸிங் IND Vs PAK
http://speedsays.blogspot.com/2011/03/ind-vs-pak.html
மொகலாயில் நடந்த இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிரேயான போட்டியில் ஐ.சி.சி மேட்ச் ஃபிக்ஸிங் செய்துள்ளது
மக்கள் சிந்தித்து ஓட்டுப் போட்டால் சரி.
//நல்லாட்சி நடக்குது என சிலர் சொல்றாங்க.. ஆனால் அதில் பாதிதானே அதாவது வெறும் ஆட்சி மட்டும் தானே நடக்குது.//
சரிதான்!
கேப்டன் காமெடி நடிகராகிவிட்டாரு)))
//கேப்டன் சார்.. யார் உங்களுக்கு 41 சீட் தர்றாங்களோ அவங்க தான் உங்களுக்கு தெய்வமா? அப்போ அய்யா 50 சீட் குடுத்தா என்ன பண்ணுவீங்க? தி முக , அதிமுக ரெண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்னு சொன்னீங்களே அது என்னாச்சு? //
மப்பு தெளியுரதுக்குள்ளே ஓடி போயிரு அடி பின்னி புடுவேன்...
//4. '' 'அ.தி.மு.க கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஒரே மேடையில் பேசியது உண்டா?’ என்று மு.க.ஸ்டாலின் கேட்கிறாரே?''//
அவிங்க எல்லாரும் சின்னபுள்ளை மாதிரி ஒயின்'தான் சாப்புடுறாங்க என் ரேஞ்சுக்கு புல்'லா சாப்புடுறது இல்லை அதான்....
//''இதுவரைக்கும் நீங்க போய்ப் பார்த்த இடங்களில் மக்கள் மனோபாவம் எப்படி இருக்கிறது?'' //
எல்லா நாதாரிங்களும் விஸ்கி, பிராந்தி, வோட்கா கிடைக்குமான்னுதான் எதிர் பாக்குராணுவ போல....
விஜயகாந்த் : ஏய் நான் தமிளன் தமிளன் தமிளன் ஏய் நான் தெளுங்கன் தெளுங்கன்'ன்னு எவனாவது தமிளன் சொன்னாள் ச்சே இந்த ழ இப்பிடி குளப்புதே புள் அடிச்சிட்டு வந்து நோங்கேடுத்து புடுவேன் அக்காங்....
அரசியல் பதிவிலும் விளையாடுஙறீங்க...
என்னோட commentsக்கு பதிலே வரதில்ல CPS !
எம்.ஜி.ஆர் அவர்களைக் கருப்புன்னு கற்பனை பண்ணிப் பார்க்கவே என்னவோ போல இருக்கு சிபி.
அவர் நிறமே தனி !
அந்த அம்மா பேரு வேற தலைப்பிலே இருக்கே, வழக்கம் போல வரும் கவர்ச்சிப் படங்களில் ஒண்ணு அவங்களுதா இருக்கும்னு எதிர் பார்த்தவங்க எல்லாரையும் இப்படி ஒரேயடியா ஏமாத்திட்டீங்களே, இது நியாயமா? :)))
On poll promises and freebies: "Every election is a sort of advance auction sale of stolen goods," said H. L. Mencken (1880-1956), an American Writer.
In case Jaya wins???
after some time..,
The Liquorer repeats the DIALOGUE's
1.''இன்றைக்கு என்னோட ஒரே இலக்கு, முதலமைச்சர் நாற்காலியில் JAYALALITHA நீடிக்கக் கூடாது. ADMK. ஆட்சிக் கட்டிலில் தொடரக் கூடாது. அதுக்கு எது சரியான முடிவோ, அதைத்தான் நான் எடுத்திருக்கேன்.
2,கோடிகளைவிட, இந்த JAYA/SASI மோசடிப் பேர்வழிகள்தான் என் கண்ணுக்குத் தெரிஞ்சாங்க.
கோடிகளை வாங்கினால், நான் மட்டும்தான் சுபிட்சமா இருந்திருக்க முடியும்.
3. இலவச அரிசி கொடுக்குறோம்னு வாங்கிட்டு... கடத்திக்கிட்டு இருக்காங்க. ADMK Cadres கடத்துறாங்கன்னும் மக்களுக்கே தெரியும்!
4. TASMAC மூலமா கோடிக்கணக்கான பணம் குறிப்பிட்ட ஒரு MIDAS கம்பெனிக்குப் போகுது. அதோட முதலாளி, பல வருஷமா JAYALALITH-க்குக் கூட்டாளி. அரசாங்கப் பணத்தை எப்படித் திருப்பிவிட்டிருக்கார்னு பாருங்க.
இப்படி உள்நோக்கம் இல்லாம, எந்தத் திட்டத்தையும் JAYALALITHA கொண்டுவரலை. கொண்டுவரவும் மாட்டார்.
5.'அரிசிக் கடத்தலைத் தடுப்பேன்... மணல் கொள்ளையைத் தடுப்பேன்... கந்து வட்டிக் கொடுமையை ஒழிப்பேன்’னு நாங்க சொல்ல வேண்டியதை... ஆட்சி அதிகாரத்தில் இருந்த JAYALALITHA trichiyilayumயும் சொல்றார். இதை எல்லாம் தடுக்க வேண்டிய அஞ்சு வருஷமும் அவர் என்ன செஞ்சாராம்?
இந்த அஞ்சு வருஷமா இந்த மூணும் அமோகமா நடந்துச்சுங்கிறதை ஒரு முதல்அமைச்சரே ஏற்றுக்கொள்கிறாரா? இதை ஒழிக்க அவர் போட்ட திட்டங்கள் என்ன? அதிகாரிகளுடன் எத்தனை தடவை ஆலோ சனை செய்தார்???
6.இப்படி இந்த அஞ்சு வருஷத்துல எந்த நல்லதும் நடக்கலை. எந்த முகத்தை வெச்சுக் கிட்டு, ஓட்டு கேட்டு வர்றாங்கன்னே புரியலை!''
7. ''ஆளும் கட்சிக்கு எதிரான கோபத்தைத்தான் நான் பார்க்கிறேன். மாற்றம் வரணும்னு நினைக்கிறது எல்லார் முகத்துலயும் தெரியுது. இப்படியே விட்டா, ADMK. Adimai சொத்து ஆனது மாதிரி... தமிழ்நாடும் SASIKALA குடும்பத்தின் சொத்தா மாறிடும்னு மக்கள் நினைக்கிறாங்க.
முன்பெல்லாம் படிச்சவங்களுக்குத்தான் நிறைய விஷயம் தெரிஞ்சிருக்கும். ஆனா, 1996 la irunthu இப்ப பாமரர்களுக்கும் தெரிஞ்சிருக்கு!!
''மக்கள், மௌனப் புரட்சிக்குத் தயாரா ஆயிட்டாங் கன்றது இந்தக் கூட்டத்தைப் பார்த்தாலே தெரியலையா!''
If you admit to publish these comment, I copy this comment as a post in my blog..,
விஜயகாந்த்-சில ரகசியங்கள்- தக்வல்கள்!!!
http://saigokulakrishna.blogspot.com/2011/03/blog-post_30.html
Sai Gokul - வேலைவாய்ப்பு தகவல்கள் said...
சூப்பர் சார்,, தாராளமா போட்டுக்குங்க
ஆகாயமனிதன்.. said...
என்னோட commentsக்கு பதிலே வரதில்ல CPS !
ஃஅண்ணே.. எப்பவும் நான் காலை 8 டூ 10 ஃபிரீ... மாலை 4 டூ 6 ஃபிரீ.. அந்த டைம்ல கடைக்கு வந்தா சுடச்சுட பதில் கிடைக்கும்னே
நல்ல பதிவு, அம்மையாருக்கு இன்னும் ஒரு அடிமை சிக்கிட்டார்.
உஷ் !தொப்புல் பம்பரம் விடும்போது தொந்தரவு செய்யக்கூடாது!
இந்த பேட்டி குடிப்பதற்கு முன்னாள் எடுத்தது என்று நினைக்கிறேன் இதே கேள்விகளை குடித்த பின் ஒரு முறை கேட்டு வாங்கினால் நல்லா இருக்கும் ............
குடிகாரன் பேச்சு.......... விடிஞ்சா போச்சு.......... ரொம்ப ரொம்ப பழைய பழமொழில.....?
////////அஞ்சா சிங்கம் said...
இந்த பேட்டி குடிப்பதற்கு முன்னாள் எடுத்தது என்று நினைக்கிறேன் இதே கேள்விகளை குடித்த பின் ஒரு முறை கேட்டு வாங்கினால் நல்லா இருக்கும் ............//////
என்னது குடிப்பதற்கு முன்னால், குடிப்பதற்கு பின்னாலா? ஆல்வேய்ஸ் ஆன்லைன்யா அவரு.........!
அந்த நிருபர் பொடதில ரெண்டு போடலியா அவரு..
தப்சி அடுத்த சி.எம் இல்லைன்னு சொன்னத வன்மையா கண்டிக்குறேன்
திரு சீபிஎஸ் அவர்களே ஒரு சந்தேகம்... அந்த மரத்துக்கு மரம் தாவுவே அதுக்கு என்ன பேருண்ணு சொல்ல முடியுமா ?
Post a Comment