Thursday, March 24, 2011

கலைஞரின் அந்தரங்கத்தை அம்பலப்படுத்திய ஆனந்த விகடன்- தி மு க அதிர்ச்சி + தொண்டர்கள் கிளர்ச்சி


ட்சித் தலைவராக கருணாநிதியைத் தேர்ந்தெடுத்தது லட்சக்கணக்கான தொண்டர்கள்!ஆட்சி முதல்வராக கருணாநிதியை அமரவைத்து அழகு பார்த்தது கோடிக்கணக்கான மக்கள்!
( ஓஹோ உப்பு தின்னவன் தண்ணியை குடிக்கனும்னு சொல்றீங்களா?) 


ஆனால், உண்மையில் கட்சியையும் ஆட்சியையும் கைக்குள் வைத்து, பவர் பாலிடிக்ஸைப் பக்குவமாகச் செய்துவருபவர்கள் யார் யார் தெரியுமா?
'திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றும் சங்கர மடம் அல்ல. எனக்குப் பின்னால் என் மகன். அவருக்குப் பின்னால் அவரது மகன் என்று பட்டத்துக்கு வருவதற்கு! இந்தக் கட்சியில் பொதுக்குழு, செயற்குழு இருக்கிறது. அதுதான் அனைத்தையும் தீர்மானிக்கும்’ என்பது கருணாநிதி அடிக்கடி சொல்லும் வார்த்தைகள். ஆனால், கட்சியின் பொதுக்குழு, செயற்குழுவை மிஞ்சியதாக இருக்கிறது இந்த ஹோம் கேபினெட்!

(அது ஹோம் கேபினேட்  இல்லை.. பங்களா கேபினேட்)

கருணாநிதியின் தலைமையில் தி.மு.க. வந்த பிறகு நடந்த இரண்டு முக்கியமான பிரிவுகளும் அவரது மகன்களுக்காகவே நடந்தன என்பதுதான் அரசியல் வரலாறு அறிந்தவர்கள் கருத்து. இன்று லட்சக்கணக்கான தொண்டர்களைக்கொண்ட கட்சியின் தலைமை அலுவலகத்துக்குள் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் புகுந்து, மணிக்கணக்கில் இரண்டு முறை விசாரணை நடத்தி முடித்ததற்கும் இதே குடும்பமே காரணமானது. 'ஒரு தாயின் வயிற்றில் பிறக்க முடியாத காரணத்தால் தனித் தனி தாயின் வயிற்றில் பிறந்த அண்ணன் தம்பிகள் நாம்’ என்றார் அண்ணா. ஆனால், இன்று ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் மட்டும்தான் கழகம் என்று ஆகிவிட்டது!

(நல்ல வேளை அண்ணா இப்போ இல்ல.. இருந்தா கலைஞர் அண்ணா என் கனவுல அதை சொன்னார், இதை சொன்னார்னு பீலா விட முடியாம போய் இருக்கும்)


42 ஆண்டுகளாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இருக்கிறார் கருணாநிதி. 'தலைமை நாற்காலியைப் பெரியாருக்காகக் காலியாக வைத்திருக்கிறேன். பொதுச் செயலாளர் பதவி மட்டும்தான் இனி தி.மு.க-வில் இருக்கும்’ என்ற அண்ணாவின் முழக்கம்தான், அவரைக் கடற்கரை ஓரத்தில் புதைக்கும்போது ஓரமாகத் தூக்கிப் போடப்பட்ட முதல் கொள்கை.
(அப்படி புதைத்துவிட்டுத்தான் வதைத்துகொண்டு இருக்காங்களா?)

அடுத்த தலைவர் நாவலர் நெடுஞ்செழியனா, கலைஞர் கருணாநிதியா என்ற சண்டை வந்தபோது, தலைவராக கருணாநிதியும் ,பொதுச் செயலாளராக நெடுஞ்செழியனும் உட்கார வைக்கப்பட்டார்கள். அதில் இருந்து 10-வது முறையாக பொதுக்குழு மூலமாகத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார் கருணாநிதி.

(உட்காரவே முடியலைன்னாலும் சிம்மாசனத்தை மட்டும் விட மாட்டேங்கறாரே... )


1980-ல் கட்சிக்குள் மெதுவாகத் தனது மகன் ஸ்டாலினை கருணாநிதி அழைத்து வந்தார். இளைஞர் அணிச் செயலாளர் என்ற பொறுப்பு தரப்பட்டது. பொதுவாகவே, கட்சியில் துணை அமைப்புகள் சும்மா ஒப்புக்குத்தான் இருக்கும். ஆனால், ஸ்டாலின் வந்த பிறகு இளைஞர் அணி, தலைமைக் கழகத்துக்கு இணையான அணியாக மாற்றப்பட்டது. அறிவாலயம் கருணாநிதிக்கு என்றால்... அன்பகம் ஸ்டாலினுக்கு.

 (ஆஹா.. நல்லதொரு குடும்பம்.. பல்கலை கலகம் இல்லா கழகம்)


இளைஞர் அணியில் மாவட்ட அமைப்பாளர்கள்... கட்சியின் மாவட்டச் செயலாளர்களாகவே வலம் வந்தார்கள். அதன் பிறகு அமைச்சரவையில் ஸ்டாலின் ஆட்களுக்குப் பிரதிநிதித்துவம் தரப்பட்டது. வேட்பாளர் தேர்வில் கோட்டா வந்தது. ஸ்டாலின் துணைப் பொதுச் செயலாளர் ஆனார். அதன் பிறகு பொருளாளர் பதவி கிடைத்தது. அடுத்து அமைச்சர், துணை முதலமைச்சராகவும் ஆனார். இன்று, ஆட்சியும் கட்சியும் இவரது கண் அசைவில் தான் நடக்கின்றன.

 (எல்லோரும் இந்நாட்டு மன்னர்.. ஆனால் மன்னரின் வாரிசுகள் எல்லோரும்னு திருத்திக்கோணும் போல... )_


கருணாநிதியின் மருமகனாகவும் மனசாட்சியாகவும் இருந்த முரசொலி மாறனின் மறைவுக்குப் பிறகு, அவரது இரண்டாவது மகன் தயாநிதியை மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் நிறுத்தினார்கள். உடனேயே கேபினெட் அமைச்சராக்கப்பட்டார். டெல்லி அரசியல் இவரது கட்டுப்பாட்டுக்கு வந்தது. இவரது அண்ணன் கலாநிதி மாறன் நடத்தி வந்த நாளிதழில் ஒரு கருத்துக்கணிப்பு வெளியானதைத் தொடர்ந்து குடும்பத்துக்குள் குழப்பம். நேரடி அரசியலில் இறங்காமல் அதே சமயம், தென் மாவட்டத்து அரசியலைத் தனது ஆளுகைக்குள் வைத்திருந்த மு.க.அழகிரியின் செல்வாக்கை அந்தக் கருத்துக் கணிப்பு குறைத்து மதிப்பிட்டு இருந்தது. கலாநிதி, தயாநிதி ஆகியோருக்கும் அழகிரிக்குமான மோதலில், கருணாநிதி மகன் பக்கம்தான் நின்றார். 

( தந்தை மகனுக்காற்றும் உதவி..?)

தயாநிதி, கட்சியைவிட்டு நீக்கப்பட்டார். இனி, டெல்லியைக் கவனிக்க யார் என்ற கேள்வி எழுந்தபோது, கருணாநிதி தனது மகள் கனிமொழியை மாநிலங்களவை உறுப்பினராக ஆக்கினார். அடுத்து வந்த நாடாளுமன்றத் தேர்தலில் அழகிரியும் நிற்க... குடும்பக் கோபங்கள் தணிந்து தயாநிதியும் மறுபடி நுழைய... ஒரே குடும்பத்தில் இருந்து ஐந்து பேர் கட்சியின் முக்கியப் பதவிகளைப் பிடித்தார்கள்.
இன்றைய நிலையில் தி.மு.க-வின் ஐம்பெரும் தலைவர்கள் இவர்கள்தான்!

(ஐம்பெருங்காப்பியங்கள் மாதிரி அவ்வளவு சீக்கிரம் இவங்களை அழிக்கவே முடியாது போல இருக்கே..?)


குடும்பத் தலைவர் ஒருவர் அரசியலில் இருந்தால், அவரை நம்பி மற்றவர்கள் அமைதியாக இருப்பார்கள். ஆனால், இங்கே எல்லோருமே தலை எடுத்து வலம் வருகிறார்கள். 

 ( தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன் மாதிரி ....)


ராஜாத்தி அம்மாளைப் பார்க்க அவரது சி.ஐ.டி. காலனி வீட்டிலோ அல்லது அவர் ஆழ்வார்பேட்டைப் பகுதியில் நடத்தி வரும் ராயல் ஃபர்னிச்சர் கடையிலோ எப்போதும் கூட்டம் இருக்கும். அவரது கோட்டாவில் அமைச்சராக வந்தவர் பூங்கோதை.

( ராசாத்தி உங்களை நம்பி  இந்த கோதைப்பொண்ணு இருக்குதுங்கோ.. ஒரு வார்த்தை சொல்லீட்டாக்கா , மினிஸ்டர் போஸ்ட் கிடைக்குமுங்கோ..)


ஊழல் வழக்கில் சிக்கிய ஒருவரைக் காப்பாற்ற பூங்கோதை முயற்சித்ததாகத் தகவல் கசிந்து, அவரது பதவியையே பறித்தார் கருணாநிதி. அப்படிப்பட்ட பூங்கோதை மறுபடியும் கேபினெட்டுக்குள் நுழைத்ததும்... அழகிரி குறித்து நீரா ராடியாவிடம் தரக்குறைவாக கமென்ட் அடித்த பூங்கோதைக்கே ஆலங்குளம் தொகுதியில் மீண்டும் போட்டியிட அனுமதி வாங்கித் தந்ததும், ராஜாத்தியின் ராஜ்யத்தை ஊருக்குச் சொல்லும்.

( போயஸ்க்கு ஒரு சசிகலா... கோபாலபுரத்துக்கு ஒரு ராஜாத்தி ...?)
கனிமொழிக்குத் தரப்படும் முக்கியத்துவம் கருணாநிதியின் இன்னொரு மகளான செல்வியைச் சினம்கொள்ளவைத்தது. அவரே அப்பாவுக்காகப் பிரசாரம் செய்வதும், தொகுதி மக்களிடம் குறை கேட்கப் போவதுமாக எப்போதாவது செய்கிறார்.

(ஹூம்.. ஒரு செல்வியோட அக்குறும்பையே தமிழ்நாடு தாங்கலை... இதுல இன்னொரு செல்வியா? )

கருணாநிதியின் கடைசி மகனான தமிழரசு, சேப்பாக்கம் தொகுதியைக் கவனித்துக்கொள்கிறார். மதுரையில் அழகிரிக்கு இணையான மரியாதை அவரது மனைவி காந்திக்குத் தரப்படுகிறது. தனித் தனி கட் அவுட்டுகளில் காந்தி சிரிக்கிறார். அவரது மகள் கயல்விழி, தி.மு.க-வின் பிரசாரக் குழுச் செயலாளர். அவரது கணவர், வெங்கடேஷ் தென் மாவட்ட மந்திரிகளைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். செல்வி மகள் எழிலரசியின் கணவர் டாக்டர் ஜோதிமணி, இப்போது வளர்ந்து வரும் முக்கிய மான அதிகார மையம்!

( சொந்தம் எப்போதும் தொடர் கதை தான் ,. முடிவே இல்லாதது...)

இந்த ஐந்து ஆண்டு காலத்தில் சினிமாக்காரர்கள் சின்னாபின்னமானதைப்போல வேறு யாரும் ஆகவில்லை!
திரைத் துறையில் இருந்துதான் கருணாநிதி அரசியலுக்கு வந்தார் என்பதும், அவரது மேகலா பிக்சர்ஸ் கதைகளும் பழைய விஷயங்கள். கடந்த 20 ஆண்டுகளாக இந்தத் துறையில் சன் டி.வி. கால் பதித்து புதிய படங்களை வாங்கினார்கள். 'அவர்களுக்கு விற்பனை செய்யப்படாத படங்களை ரேட்டிங் குறைத்துக் காண்பிக்கிறார்கள் என்ற புகார்கள் எழுந்தன. குடும்பத்துக்குள் குழப்பம் ஏற்பட்ட சமயத்தில் கருணாநிதியே 'கலைஞர் டி.வி.’ என்ற தனிக் கடையைத் தொடங்கினார். படங்கள் வாங்குவதில் சன் - கலைஞர் தொலைக்காட்சிகளுக்குள் போட்டி கிளம்பியது. இதில் பல தயாரிப்பாளர்கள் மூளை குழம்பிப் போனார்கள்.

(இளைஞன் படு டப்பா ஆகியும் கூட இன்னும் கலைஞர் டி வி யில் வெற்றிகரமா ஓடிட்டிருக்கறதா சொல்றாங்களே.. அதுதான்யா அண்டப்புளுகு ஆகாசப்புளுகு)
அடுத்து படத் தயாரிப்புகளில் வாரிசுகள் குதித்தார்கள். ரெட் ஜெயன்ட் மூவீஸ் ஆரம்பித்தார் ஸ்டாலினின் மகன் உதயநிதி. க்ளவுட் நைன் தொடங்கினார் அழகிரியின் மகன் துரை தயாநிதி. பெரிய நடிகர்களை இவர்கள் குத்தகைக்கு எடுக்க ஆரம்பித்தார்கள். கால்ஷீட் கொடுக்காத நடிகர்களை மிரட்டுவது வரை நிலவரம் கலவரம் ஆனது. தியேட்டர்களை மொத்தமாகக் குத்தகைக்கு எடுப்பதும்... தங்கள் படத்தை ரிலீஸ் பண்ண, மற்ற படங்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்துவதுமான சோகக் கதைகளை எந்தத் தயாரிப்பாளர்களாலும் சொல்ல முடியவில்லை.

 ( சொல்ல மறந்த சோகக்கதை..?)

பாராட்டு விழாக்களுக்கு நடிகர்களை வரவழைக்க மிரட்டுவதை மேடை ஏறி அஜீத் சொன்னார். விஜய் கஷ்டம் ஊர் அறிந்தது. காலம் காலமாக தி.மு.க-காரராக அறிமுகமான அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன், ஜெயலலிதா வைப் போய்ப் பார்த்தார். பல தயாரிப்பாளர்கள் ரகசியமாகப் போய் ஜெயலலிதாவை சந்தித்துத் திரும்பினார்கள்.

(வாலி, வைரமுத்து மாதிரி ஜால்ரா அடிக்க யாராலும் முடியலையே... )


தமிழரசுவின் மகன் அருள்நிதி, 'வம்சம்’ படத்தில் நடித்து ஹீரோ ஆனார். கருணாநிதியின் அக்கா மகன் அமிர்தம் கலைஞர் டி.வி -யைக் கவனித்து வருகிறார். அவருக்கு உதவியாக அவரது மகன், குணாநிதியும் இருக்கிறார்.
கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவின் மகன் மு.க.முத்து. அவரது மகன் அறிவுநிதி, சினிமா வில் பாடுகிறார். சென்னையில் திடீரென அவரது கட்-அவுட்கள் முளைக்கும். அதை கருணாநிதி குடும்ப உறுப்பினரே கிழித்துவிட்டார். 'நான் கலைஞரின் மூத்த பேரன். அந்த அந்தஸ்தை வேறு யாரும் பறிக்க முடியாது’ என்று இவர் சொல்லி வருவது, சினிமா எடுக்க வேண்டிய கிளைக் கதைகளில் ஒன்று!

(சிங்கம் ஒன்று புறப்பட்டதே. அதுக்கு நல்ல காலம்.. நமக்கு கெட்ட காலம்.. )


டந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வரை தயாளுவை எந்த மீடியாக்களும் சீண்டியது இல்லை. முக்கியமான கூட்டங்களுக்கு மட்டும் வருகை தரும் அவர், இரண்டு ஆண்டுகளாக எதிலும் கலந்துகொள்ளவில்லை. 

உடல்நிலையைக் காரணம் காட்டி அமைதியானார். கலைஞர் டி.வி-க்கான பங்குகளில் 60 சதவிகிதம் அவருக்கு உண்டு என்பதுகூட சிறு தகவலாகத்தான் இருந்தது. ஆனால், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொடர்புடைய ஷாகித் பால்வாவிடம் கலைஞர் டி.வி. 214 கோடிகளை வாங்கியது என்பதை சி.பி.ஐ. தனது அறிக்கையில் சொன்னதுமே, தயாளு அகில இந்தியா முழுவதும் அறியப்பட்டார். 'இத்தனை வருஷம் சும்மா இருந்த என்னை இப்படி மாட்டிவிட்டுட்டீங்களே’ என்று கருணாநிதியிடம் வருத்தப்படத்தான் முடிந்தது தயாளுவால். நிச்சயம் அவரிடம் விசாரித்துதான் ஆக வேண்டும் என்று சி.பி.ஐ. அடம்பிடிக்க.... தயாளு சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு அழைத்து வரப் பட்டார். இதோடு சி.பி.ஐ. விடுகிறதா என்பது தெரிய வில்லை. முழு க்ளைமாக்ஸை மார்ச் 31 அன்று பார்க்கலாம்!

( ஜெயில் பாட்டு ஓ வந்ததென்ன கிழ மானே  சுச்சூச்சுசூ...அதைக்கேட்டு பெயில் தந்ததென்ன ....)


இவருக்கு நேர் மாறானவர் ராஜாத்தி! எப்போதும் சர்ச்சைகள் இவரை வளைய வரும். சர்க்காரியா கமிஷன் விசாரணையிலேயே அவர் பெயர் வந்தது. இப்போது ஸ்பெக்ட்ரம் தரகர் நீரா ராடியாவுடன் ராஜாத்தியும் அவரது ஆடிட்டர் ரத்னமும் பேசியதும், வோல்டாஸ் கட்டடத்தைக் கை மாற்றித் தரும் விவகாரத்தில் ராஜாத்தியின் உதவியாளர் சரவணன் சம்பந்தப்பட்டதும்... முற்றுப்புள்ளி வைக்கப்படாத பெரிய ரகசியங்கள். ராடியா கைதானால் இவர்களுக்கும் சிக்கல் வரலாம்!

 (ராடியா ராடியா நீராராடியா......சகுனி போல் வளரும் ராடியா....உள்ளே தள்ள சி பி ஐ இல்லையா...?)

 கருணாநிதிக்கு ஏற்பட்ட முதல் அவமானம் - அவரது மகன் முத்து, ஜெயலலிதாவைச் சந்தித்தது. வறுமையில் தான் வாடுவதாகச் சொல்லி 5 லட்சம் பணத்தைப் பெற்றுக்கொண்டார்!

(நான் அடைந்ததிலேயே மிகச்சிறந்த அவமானம் என் மகன் தான்...கலைஞர் )


 மதுரை கவுன்சிலர் லீலாவதி கொலையில் சிலர் கைது செய்யப்பட்டதும், அவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதும் நடந்தது. தண்டனைக் கைதிகளான அவர்கள் முன்கூட்டியே விடுதலை ஆனது வரை சர்ச்சை தொடர்ந்தது!

(ஃபிரீயா விடு ஃபிரீயா விடு மாமூ.. நேர்மைக்கு இல்லை கேரண்டி... )

 தென் மாவட்டத்தில் தன்னுடைய பேச்சைக் கேட்காமல் அழகிரி தன்னிச்சையாகச் செயல்பட்டதாகச் சொல்லி, அவரைக் கட்சியைவிட்டே 2000-ம் ஆண்டில் நீக்கினார் கருணாநிதி. ஆட்சி மாறி கருணாநிதி கைது செய்யப்பட்ட பிறகுதான் மீண்டும் அழகிரி குடும்பத்துக்குள் சேர்த்துக்கொள்ளப்பட்டார்!

(ஒரு தாதா தாத்தாவை வென்ற கதை...? )


 தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன் கொலை வழக்கில் அழகிரி சேர்க்கப்பட்டு, கைது செய்யப்பட்டார். அந்த வழக்கு விசாரணையின் இறுதியில் அழகிரி விடுதலை செய்யப்பட்டார். இன்று வரை தென் மாவட்டங்களில் மறக்க முடியாத குற்றச்சாட்டு இது!

(கொலை கொலையா தந்திரிக்கா,, கோர்ட்டை கோர்ட்டை சுத்திவா...)


 ஸ்டாலினுக்கு மிக நெருக்கமாக இருந்த அண்ணா நகர் ரமேஷின் தற்கொலை இன்று வரை மர்மம் உடைபடாத ரகசியம். அந்தத் தற்கொலைக்குப் பரிகாரமும் செய்யப்படவில்லை. பச்சைக் குழந்தைகள் மூவரும் மனைவியுமாக ரமேஷ§டன் இறந்த ஐந்து மரணங்களுக்கான குற்றவாளிகளை ஆட்சியில் இருந்த ஐந்து ஆண்டுகளில் இவர்கள் கண்டுபிடிக்கவும் இல்லை. தண்டிக்கவும் இல்லை!

(உன் குத்தமா? என் குத்தமா? யாரை நான் குத்தம் சொல்ல...)


 மதுரை தினகரன் நாளிதழில் வெளியான கருத்துக் கணிப்பைத் தொடர்ந்து அந்த அலுவலகம் எரிக்கப்பட்டது. வினோத்குமார், கோபிநாத், முத்துராமலிங்கம் ஆகிய மூவரது மரணங்கள் தொடர்பான வழக்கு அப்பீலில் இன்று வரைக்கும் இருக்கிறது!

(கொடூரக்குற்றங்கள்....அந்தரத்தில் நிற்கும் நீதி..? )


 மத்திய அமைச்சர் பதவியை அழகிரி, தயாநிதி மாறன், கனிமொழி ஆகிய மூவருக்கும் வாங்குவதற்காக கருணாநிதி டெல்லிக்குச் சென்று காத்திருந்ததும்... அதைவைத்து ஆங்கில, இந்தி மீடியாக்கள் கமென்ட் அடித்ததும் நடந்தது. அதுவரை மரியாதைக்குரிய மனிதராக டெல்லி மீடியாக்களில் சொல்லப்பட்ட கருணாநிதி, முதன்முதலாக ஏளனம் செய்யப்பட்டார்!

( காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி.. )



  சென்னையில் உள்ள பிரபல ஓட்டல்களில் ஏதாவது பேரனை வைத்து ஏதாவது ஒரு புகார் எழுந்து அடங்குவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. போலீஸாரும் ஹோட்டல் அதிபர்களும் கை பிசைந்து நிற்கிறார்கள்!

( வேர் ஈஸ் த பார்ட்டி.. அட உங்க வீட்ல பார்ட்டி... )


கனிமொழியும் ஸ்பெக்ட்ரம் தரகர் நீரா ராடியாவும் பேசிய தொலைபேசி உரையாடல்கள் இன்று வரை இரண்டு தரப்பாலும் மறுக்கப்படவில்லை!

(ஹலோ ஹலோ சுகமா? ஆமா நீங்க நலமா? )


 ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், கலைஞர் டி.வி-யும் கருணாநிதியின் மனைவி தயாளு, மகள் கனிமொழி ஆகியோரும் சிக்கி இருக்கிறார்கள். இந்தச் சிக்கலில் இருந்து அவர்கள் எப்போது விடுபடுவார்கள் என்பது சி.பி.ஐ-க்கே தெரியாது!

 யாருக்கு ஜாமீன்?யாருக்கு பெயில்? யாருக்கும் புரியல...

டுத்து புதிய வாரிசுகள் மெள்ள உள்ளே நுழைகிறார்கள். செல்வியின் மகள் எழிலரசி வீணை கற்றுக்கொண்டது பாராட்டத்தக்க அம்சம். அதற்காக, கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அவரது கச்சேரி கட்டாயப்படுத்தி சேர்க்கப்பட்டது. 

( வந்தாள் எழிலரசியே.. இனி என்றும் அவர் ஆட்சியே... )


ஸ்டாலின் மருமகள் கிருத்திகா, ஒரு பத்திரிகையாளராக வலம் வருகிறார். அவரது குறும்படங்கள் பெரிதாகக் காட்டப்படுகின்றன. ஸ்டாலின் மகள் செந்தாமரை, சென்னை வேளச்சேரி பகுதியில் சன் ஷைன் என்ற பெயரில் பள்ளியைத் தொடங்கி, கல்வித் துறைக்குள் நுழைந்திருக்கிறார். அவரது கணவர், சபரீசன் பெயர் அவ்வப்போது சர்ச்சை களில் அடிபடும். 

தமிழரசுவின் மகள் பூங்குழலியும் அவரது கணவரும் அடுத்து வளர்ந்து வருகிறார்கள். கடைசியாக கனிமொழியின் மகன் ஆதித்யன் பற்றிச் சொல்லியாக வேண்டும்.
சில மந்திரிகள் அவருடன் கிரிக்கெட் விளையாடி காக்கா பிடிக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!

( தட்டான் தட்டான் தண்ணிக்குள்ள.. ச்சூ ச்சூ மாரி.. கேப்பமாரி...)

62 comments:

ராஜேஷ், திருச்சி said...

எப்படியாச்சும் அம்மாவை ஆட்சி ல வர வெக்கணும்னு விகடன் குழுமம் என்னவெல்லாமோ தகிடுதத்தம் செஞ்சது.. ஜூ வி , ஆ வி எல்லாம் தி மு க விற்கு எதிரா கிளம்புச்சு.. கடைசில அம்மா சொதப்பினாங்க , அப்புறம் கதாநாயகி வந்து விகடனுக்கு பேதி புடிங்கிடுச்சு.. சோ , குடும்பத்தை இழுத்து எதாச்சும் பண்ணமுடியும்னு பார்க்குது.. இவ்ளோ பேசிட்டு வெக்கம் கேட்டு சன் டி வி ஸ்லாட் ல தானே பொழுதை ஒட்டுது விகடன்.. போனா போடும் விடுங்க

காங்கேயம் P.நந்தகுமார் said...

பத்திரிக்கையை மேலும் பிரபலப்படுத்த தேர்தல் நேரத்தை பயன்படுத்தும் பத்திரிக்கை. அதையும் மெனக்கெட்டு எழுதியிருக்கும் உங்களையும் நினைத்தால் சிரிப்புதானே வருது. அடுத்த பதிவாவது நல்லதா போடுனே! படிக்கிற மாதிரி! ஹி...ஹி...

Prakash said...

Sun TV podura pichila irrukura Vikatanuku ithu thevaiya.

Aside, MK's family members contest elections, gets the vote from people and comes to power.

What about Sasi & Co, Sasi's onnuvitta chitthappa & renduvitta periyappa marumagan ellam domination in ADMK. Cho is Political Neera Radia, For that DMK & MK family is far better.

ராஜகோபால் said...

அப்பாடா ஆடி முடிச்சுடானுங்க ஆஸ்ட்ரேலியா 260/6 , இந்தியா தோக்கும்மா இல்ல ஆஸ்ட்ரேலியா தோக்கும்மா!

ராஜி said...

எலேய் எடுறா அந்த ஆட்டோவை. விடுடா சிபி வீட்டுக்கு

Prakash said...

At least MK is having control over all, but JJ is not even have any control in relesing Candidate List. She is not even having grip on the party.

Unknown said...

டேய் என்னடா ஆச்சி உனக்கு நல்லாத்தானே இருந்தே!

Unknown said...

சொன்னா கேளு குடும்பத்த விட்டு வெளி யூறு வரேன்னு சொன்னா எங்க யாவது போஸ்டிங்கு போட்டு தாரேன்!

சி.பி.செந்தில்குமார் said...

நான் ஒரு டம்மி பீஸ்னு தெரிஞ்சு ஆளாளுக்கு மிரட்றாங்களே...

ராஜ நடராஜன் said...

சிபி!அரசியல் ஆக்டோபஸ்...எனது பதிவின் தலைப்பு!நீங்க வர்ணம் பூசியது டாலடிக்கத்தான் செய்யுது:)

Unknown said...

மச்சி சீரியஸா பேசும்போது சிப்பு பண்ணாதே!

சி.பி.செந்தில்குமார் said...

என்னை சீரியஸ்ஸா பார்க்கரதுல எம்புட்டு ஆசைய்யா உனக்கு

Unknown said...

நீ திருந்த மாட்டே விடு நான் கெளம்பறேன்!

பொன் மாலை பொழுது said...

இதில் அந்தரங்கம் எங்கிருந்து வந்தது? இவைகள் அனைத்தும் எல்லோரும் அறிந்த செய்திகளே! அந்தரங்கம் என்று அச்சடித்தால் இந்த நேரத்தில் இன்னமும் சில நூறு பிரதிகள் விற்கும்.அவ்வளவுதான்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அப்படியே மன்னார்குடி...குடும்ப விபரம்; கப்டன் குடும்ப விபரம் அறிய ஆவல்.

MANO நாஞ்சில் மனோ said...

//அது ஹோம் கேபினேட் இல்லை.. பங்களா கேபினேட்) //

நீர் சோடா பாட்டல் எறி வாங்காமல் அடங்க மாட்டீர் ஒய்...

MANO நாஞ்சில் மனோ said...

//உட்காரவே முடியலைன்னாலும் சிம்மாசனத்தை மட்டும் விட மாட்டேங்கறாரே...//

சரி சரி மேட்டருக்கு வாரும்....

சி.பி.செந்தில்குமார் said...

என்னது? மேட்டரா?

MANO நாஞ்சில் மனோ said...

//போயஸ்க்கு ஒரு சசிகலா... கோபாலபுரத்துக்கு ஒரு ராஜாத்தி ...?)//

ஆத்தாடியோ.....!!!

பொ.முருகன் said...

நான் தான் முன்னமே எழுதியிருக்கிரேனே. அவரது குடும்பம் ஒன்னு விடாம ஒட்டுப்போட்டாலே அவரது கட்சி தனி மெஜாரிட்டியில வந்துரும்னு.

MANO நாஞ்சில் மனோ said...

//(இளைஞன் படு டப்பா ஆகியும் கூட இன்னும் கலைஞர் டி வி யில் வெற்றிகரமா ஓடிட்டிருக்கறதா சொல்றாங்களே.. அதுதான்யா அண்டப்புளுகு ஆகாசப்புளுகு)//

இது ஊருக்கே தெரியுமே மக்கா....

MANO நாஞ்சில் மனோ said...

//சி.பி.செந்தில்குமார் said...
என்னது? மேட்டரா?//

யோவ் மெதுவா பேசும் ஒய்....பிள்ளைங்க பயந்துற போராயிங்க...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

என் தல ஏதாவது குடும்ப சீரியல...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இப்படி உண்மை எல்லாம் வெளியில சொல்லக்கூடாது...

குரங்குபெடல் said...

Well Attack

MANO நாஞ்சில் மனோ said...

//இத்தனை வருஷம் சும்மா இருந்த என்னை இப்படி மாட்டிவிட்டுட்டீங்களே’ என்று கருணாநிதியிடம் வருத்தப்படத்தான் முடிந்தது தயாளுவால். நிச்சயம் அவரிடம் விசாரித்துதான் ஆக வேண்டும் என்று சி.பி.ஐ. அடம்பிடிக்க.... தயாளு சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு அழைத்து வரப் பட்டார். இதோடு சி.பி.ஐ. விடுகிறதா என்பது தெரிய வில்லை. முழு க்ளைமாக்ஸை மார்ச் 31 அன்று பார்க்கலாம்!//

அவ்வ்வ்வ்வ்வ்வ் எப்பிடி இருந்த நான் இப்பிடி ஆயிட்டேனே....

MANO நாஞ்சில் மனோ said...

//சில மந்திரிகள் அவருடன் கிரிக்கெட் விளையாடி காக்கா பிடிக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!//

ஹா ஹா ஹா இதான் மக்கா ஃபைனல் டச்.....

ராஜேஷ், திருச்சி said...

யாரப்பா அது சசி, விஜயகாந்து பற்றி எழுத சொல்வது.... ???
பார்பன பத்திரிகை பார்பன ஜெ வின் உ பி ச , புது + டெம்போரவரி கூட்டாளி கேப்டன் பற்றி எழுதாது.. நாளையே உ பி ச , கேப்டன் பிறந்தால் அவர்களை கேவலபடுத்தி பக்கம் பக்கமாக எழுதும்


பொழைப்பு ஓட சண் டி வி கலநிதியோடத திருப்பி திருப்பி நக்கி பிழைக்கணும் .. ஆட்சி நு வந்தா பார்பன அம்மாக்கு ஜால்ரா அடிக்கணும்.. சபாஷ் குடுமி விகடனாரே

Unknown said...

கலைஞர் பிரைவேட் லிமிடெட் சார்ந்த அனைவரையும் சிபிஐ ரேஞ்சுக்கு அம்பலப்படுத்தியுள்ளது விகடன். பெரிய டீமே இந்த வேலையில் இறங்கியுள்ளது நன்றாக தெரிகிறது. நீங்களும் கமெண்ட்களை அள்ளிவிட்டு விகடன் டீமில் இணைந்து விட்டீர்கள்.. வாழ்த்துக்கள் தல...

Unknown said...

தொடர்ந்து விகடன் வாசித்து வருபவர்களுக்கு நன்றாக, விகடனின் தற்போதைய திமுக எதிர்ப்பு மிக அதிக அளவில் இருப்பதாகவே தெரிகிறது. இந்த வார தலையங்கம் கூட தற்போதைய நிகழ்வுகளை வைத்து தேர்தலில் முடிவெடுக்கக்கூடாது என்று ஐந்து வருட கலைஞரின் தவறுகளை சுட்டிக்காட்டுகிறது. இன்னும் கொஞ்சம் நடுநிலையோடு எழுதலாம் என்பது விகடன் பற்றிய பொதுவான கருத்தாக உள்ளது.

Unknown said...

இந்த முறை நீங்கள் படங்களை இணைத்த விதம் வித்தியாசமாக இருக்கிறது. நிறைய தெளிவாகவும்.. என்ன ரகசியமோ?

சி.பி.செந்தில்குமார் said...

ஆனந்த விகடன் தி மு கவுக்கு எதிராக எழுத பர்சனல் காரணங்கள் உண்டு..ஆனால் பொய்யாக எதையும் எழுதவில்லை..அதிக முனைப்பா எழுதறாங்க.. அவ்வளவுதான்.... படங்கள் நன்றாக அமைய காரணம் .. பெரிய இட மேட்டர்... ஹி ஹி

ம.தி.சுதா said...

/////நல்ல வேளை அண்ணா இப்போ இல்ல.. இருந்தா கலைஞர் அண்ணா என் கனவுல அதை சொன்னார், இதை சொன்னார்னு பீலா விட முடியாம போய் இருக்கும்////

சிபி உங்க கிட்ட இரந்த இப்படி ஒர விளக்கமான தரமான பதிவை நான் எதிர் பார்க்கவே இல்ல உண்மையில் அருமையாக என் விரப்பம் போல் படங்களுடன் காட்டியுள்ளிர்கள்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவுலகில் சமூகபதிவாளனாக என்னை முத்திரை குத்திய முக்கிய சாதனை
இனி வரும் பொழுதுகளில் தங்கள் தளத்திற்கு வாரம் ஒரு தடவையே வர முடியும் என்பதை மன வருத்தத்துடன் அறியத் தருகிறேன்...

சி.பி.செந்தில்குமார் said...

>>சிபி உங்க கிட்ட இரந்த இப்படி ஒர விளக்கமான தரமான பதிவை நான் எதிர் பார்க்கவே இல்ல



அப்போ இத்தனை நாளா தரங்கெட்ட பதிவைத்தான் போட்டேனா? செம லொள்ளுய்யா உமக்கு.. ஹா ஹா

ம.தி.சுதா said...

யோவ்... ஒரு இந்திய அரசியல் சாராத ஒருவனின் பாராட்டை பெறுவமென்றில்லாமல்.. உமக்கு எல்லாம் ஜாஸ்தி தான் போய்யா ஹ..ஹ..ஹ..

ம.தி.சுதா said...

உம்மளோட 18 பதிவு படிச்சும் கருத்தோ வாக்கோ இடல ஒட்டு மொத்தமா போடப் போனன்.. அது தான் தாமதம்...

Anonymous said...

ஒரு மனிதனுக்கு எய்ட்ஸ் வரலாம், கேன்சர் வரலாம்.. ஆனால் ரெண்டுமே வந்தா என்னாகும்.... தமிழ்நாட்டின் நிலை அப்படித்தான்.... பீகாருக்கு ஒரு நித்திஸ்குமார் அளவுக்குக் கூட தமிழ்நாட்டில் ஆரும் இல்லே !!!

Aysha said...

Can vikatan dare to write about maran(kd) brothers?

Anonymous said...

Post ரொம்ப Lengthஆ இருக்கு...

Anonymous said...

என்ன செந்தில் அண்ணே... தூங்க போய்டீங்களா...

டக்கால்டி said...

Right...

செங்கோவி said...

அண்ணே, விகடனுக்கு டீட்டெய்ல் கலெக்ட் பண்ணிக் கொடுத்ததே நீங்க தான்னு பேசிக்கிறாங்களே..உண்மையாண்ணே?

Unknown said...

என்ன யாரையும் காணோம்

Unknown said...

சாதிக்க வந்த தோசைக்கரண்டி சீ பாசக்கரண்டி சிபிக்கு வாழ்த்துக்கள்

நிரூபன் said...

'திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றும் சங்கர மடம் அல்ல. எனக்குப் பின்னால் என் மகன். அவருக்குப் பின்னால் அவரது மகன் என்று பட்டத்துக்கு வருவதற்கு! இந்தக் கட்சியில் பொதுக்குழு, செயற்குழு இருக்கிறது. அதுதான் அனைத்தையும் தீர்மானிக்கும்’ என்பது கருணாநிதி அடிக்கடி சொல்லும் வார்த்தைகள்.//

இந்தச் செயற் குழுவையெல்லாம் ஹோம் குழு தானே மேற்பார்வை செய்யுது. பொதுக் குழு, செயற் குழு எல்லாம் திமுக வை பொறுத்த வரை (Generation) பரம்பரை குழு தானே?

நிரூபன் said...

சகோ, நீங்க ரொம்பப் பெரிய ஆளப்பா, உள்ளூரிலை இருந்து கொண்டே, நம்ம ஊரு மேட்டரிலை கை வைக்க நாம குலை நடுங்கிக் கிட்டு இருக்கும் போது, நீங்க ஜனநாயக வாதி என்பதை உங்க நாட்டிலை இருந்தே நிரூபித்து விட்டன.

திமுக குடும்ப அரசியலை போட்டு மாங்கு, மாங்கென்ற மாங்க இதனை விட வேறோர் வழியும் இல்லை என்றே தோன்றுது.

படத் தெரிவுகள் எல்லாம் சூப்பரோ, சூப்பர். கலக்கல் சகோ.

பூங்குழலி said...

ஒரு பக்கம் இதே ஆனந்த விகடன் தளபதியும் நானும் ன்னு ஸ்டாலின் என்ன சாப்பிட்டார் ,எப்படி பல் விளக்குனார் ன்னு எழுதுறாங்க ..இன்னொரு பக்கத்தில இது .இதுல ஒன்னும் புதுசா இல்ல ..ஏற்கெனவே வெளியான செய்திகளை தொகுத்திருக்காங்க ....இதேல்லாம் படிச்சிட்டு நொந்துக்கிரத தவிர வேற வழி இல்ல ...

Anonymous said...

ஒரிடத்தில் சேம்சைடு கோல் போட்டுவிட்டீர்கள். அதை நீக்கினால், இது ஒரு பிரமாதமான anti-Karunanithi attack.

ஜெயலலிதாவிடம் நடிகர்களும், படத்தயாரிப்பாளர்களும் தியேட்டர் அதிபர்களும் ஓடிப்போய் உதவிகேட்டிருக்கிறார்கள். அவரும் சரியென்று இருப்பாரில்லையா? அதிமுகவுக்கு உழையுங்கள் பின்னர் உதவி செய்வேன் என்றிருப்பார். எனவே அவர்கள் காத்திருப்பார்கள்.

பெங்களூரு தொழிலதிபர்கள் ஜெயாவின் உதவியோடு வைக்கொவை கடாசி விட்டார்கள்.

ஆக ஜெயா ஒரு பெரும் பணமுதலைக்ளுக்காக ஆட்சியைப் பிடிக்கத்துடிக்கிறார்.

ஜெயாவுக்கு பதிவு எழுதும் நீங்கள் இப்படி முதுகில் குத்தலாமா ?

செய்வன திருந்தச்செய் !

Anonymous said...

ஏன் கலானிதி மாறன் தம்பதியர்; த்யானிதி மாறன் தம்பதியர் படங்கள் வரவைல்லை.

அவர்கள் ஜாதிகளும் குறிப்படவேண்டும்.

செய்வன திருந்தச்செய் ! என்பது மூதுரை.

தமிழ்க்காதலன் said...

அப்பாடா.... தலை சுத்துது செந்தில், எம்மாடி.... எம்பூட்டு பெரிய குடும்பம். முடியல... யார் யார் யார்யாருக்கு என்ன உறவுன்னு புரிஞ்சுக்கவே ஒரு வாரம் ஆகும் போல. எப்படிய்யா சமாளிக்கிறாங்க..? குடும்பக் கட்டுப்பாடு அப்படின்னு ஒன்னு இருக்குறது எல்லாம் நம்ம மாதிரி விவரம் புரியாதவங்களுக்குத்தானா..?

அதுசரி... இந்தியாவின் அனைத்து துறைகளிலும் இவங்களுக்கு பினாமியும், நேரடித்தொடர்பும் இருக்குன்னு எல்லாருக்கும் தெரிஞ்சிருந்தாலும் சட்டப்படி ஒன்னும் பண்ண முடியாதுன்னு வேடிக்கைப் பார்க்கத்தானே முடியுது. சட்டம் அவ்வளவு இளைத்துவிட்டது. புத்திசாலித்தனம் என்பதா..? இல்லை குள்ளநரித் தனம் என்பதா..?

தமிழகம் தாங்கமுடியா அளவுக்கு இவங்க குடும்ப (பிரிவேட் லிமிடெட்) பின்புலம் உள்ளது. எல்லாத்திலும் இவங்களே முன்னணி அப்படின்னு இருந்தா இங்கே சனநாயகம் இருக்கு அப்படின்னு எவன் நம்புவான்..?

ஆக கலிகாலம் தமிழ்நாடு தப்பிக்குமா.... பார்ப்போம்.

அடுத்து ஒரு ஆளைத் தேர்ந்தெடுக்க ஒருத்தரும் நல்லவங்களா இல்லையப்பா...

நேர்மையான அரசியல் என்பது இந்தியாவில் கனவில் கூட நடக்காது போல..

Jayadev Das said...

பன்னி கூட குட்டிகளை கொஞ்சம் கம்மியாத்தான் போடும், இது அதைவிடப் பெரிய கூட்டமாயில்ல இருக்கு. கருணாநிதி, தயாநிதி, கலாநிதி, உதயநிதி, துரை தயாநிதி, அருள்நிதி, குணாநிதி, அறிவுநிதி- நிதி...நிதி.. எத்தனை நிதிங்கதாண்ட வருவீங்க? தமிழ நாட்டு மொத்த நிதியும் இங்கேயே உள்ளே போய் புகுந்துகிச்சி, தமிழன் கடைசி வரைக்கும் ஆண்டியாவே இருக்க வேண்டியதுதான்.

\\ரெட் ஜெயன்ட் மூவீஸ்\\ - \\க்ளவுட் நைன்\\ நீங்கதான்டா தமிழை உசிரக் குடுத்து வளர்க்கிறவனுங்க, அதுக்க இந்த பெயர்களே சாட்சி.

\\நான் அடைந்ததிலேயே மிகச்சிறந்த அவமானம் என் மகன் தான்...\\ மானமா??... கிலோ என்ன விலைங்க?? அது எந்த கடையில கிடைக்கும்???

\\ரமேஷ§டன் இறந்த ஐந்து மரணங்களுக்கான\\ \\வினோத்குமார், கோபிநாத், முத்துராமலிங்கம் ஆகிய மூவரது மரணங்கள் \\ இறைவன் இதையும் பார்த்துக்கிட்டுத்தான் இருக்கானா?

\\அதுவரை மரியாதைக்குரிய மனிதராக டெல்லி மீடியாக்களில் சொல்லப்பட்ட கருணாநிதி\\ ஹா...ஹா..ஹா.. மரியாதை, இவருக்கு...??? ஹே...ஹே...ஹே...

\\இந்தச் சிக்கலில் இருந்து அவர்கள் எப்போது விடுபடுவார்கள் என்பது சி.பி.ஐ-க்கே தெரியாது!\\ இன்னுமா இந்த ஊரு சி.பி.ஐ எல்லாம் நம்புது?? ஹா...ஹா..ஹா.. சி.பி.ஐ கேசு புடிக்கப் போவுதா??? நல்ல தமாஷ்.

R.Gopi said...

தலைவா...

இந்த சிச்சுவேஷனுக்கு பொருத்தமா ஒரு சாங் போட்டுடுவோமா?

“சொந்தம் எப்போதும் தொடர்கதை தான், முடிவே இல்லாதது”

Unknown said...

if DMK is winning this election, person like you has to relocate either Andhra or Karnataka

Unknown said...

CP Anne, sonthamaa eppo ezhuthuveenga

Ganesh Marees said...

திமுகவுக்கு ஆதரவா சன், கலைஞர், ராஜ், வின் தொலைக்காட்சிகளும்.. தினகரன், தினமலர், முரசொலி, குங்குமம் இப்படி நிறைய பத்திரிக்கைகளும் இருக்கு...

அவஙக செய்யும் தப்ப தைரியமா ஒரு பத்திரிக்கை சுட்டிகாமிசிருக்கு..

அத பாராட்டுறத விட்டுடு....

Unknown said...

ஆத்தாடி மு . க சாதாரண ஆளு இல்ல ஜித்தன்தான் ஆமா எதுக்கும் கொஞ்சம் ஜாக்கரதையா இருங்க ஆட்டோ வந்தாலும் வரும்

Devendrakulam said...

DMK, ADMK, and any ...MK...in Tamil Nadu should be eliminated....

Tamils have been ruled by rude non-tamilians all these days ....

DK fell under the feet of Jeya...Karuana nidhi fell under the feet of Sonia..This old man still wants to enjoy sex...

priyums said...

There is no single person who comments like a decent citizen of India. Ithu oru pecha - "He took a bribe of 1000, he only took 1000. Vikatan is under DMK" appadi all TN people have become dadas. Do we even talk about their election promises. What kind of people have we become today. "Nalla ozhukam ennanu yarukumey theriyalai". Ofcourse DMK is super corrupt bad..alternative is ADMK for now. Accept it. But When ADMK makes mistakes (the one bad part being sasikala alliance), dont keep watching. There were number of schemes implemented by Jaya. Law and Order was fine. People forget all that. If you want all this to get better - dont just comment stand in election or Atleast VOTE.

Daniel said...

God bless the family. Nothing wrong in the family business as long as they are talented and doing some yeomen service for the public. Kings were praised for the family involvement in social life. Known devils are better than unknown angels.

Anonymous said...

இந்த வூட்டு ஆம்பளைங்க யாரும் வேட்டி சட்டையே போட மாட்டாங்களா? எல்லாம் ஒரே கோட்டு சூட்டுதான்போல இருக்கு!

நல்ல தமிழ் குடும்பம்!

Narasimman S P said...

@ராஜேஷ், திருச்சி Super

Unknown said...

விகடன் துணிச்சல் பாரட்டிற்குரியது..,
அவங்க சேவை தொடரட்டும்..,