நேற்று பங்குனித்தேர்த்திருவிழா...வழக்கமா தைத்தேர்க்கு இருக்கற உற்சாகமும், மக்கள் கூட்டமும் இதுல 4 மடங்கு கம்மியா இருந்தது.சென்னிமலையோட மக்கள் தொகை 1,76,000 .அதுல வெறும் 500 பேர் வந்தாக்கூட தேரை இழுக்கலாம்.. ஆனா காலைல 6 மணில இருந்து வேட்டு வெச்சு 7 மணிக்குத்தான் கூட்டம் சேர்ந்தது.வேட்டு சத்தம் கேட்டு அங்கங்கே மனித தலைகள் தெரிய ஆரம்பித்தன.
தைத்தேர்க்கு வெளியூர் ஆட்கள் நிறைய வருவாங்க.. கூட்டம் செமயா இருக்கும்.. ஆனா இந்த தேர்க்கு ஏன் கூட்டம் வர்றது இல்லைன்னு தெரியல..பல வருடங்களாவே அப்படித்தான் இருக்கு..
மக்களிடையே பக்தி குறைந்து வருவதும், அவர்களிடையே கடவுள் பற்றிய உண்மையான நம்பிக்கை அருகி வருவதும் வருத்தமான விஷயங்கள்.ஏன்னா தனி மனித ஒழுக்கத்துக்கும், சமூக முன்னேற்றத்துக்கும் ஆன்மீகம் தெரிஞ்சோ தெரியாமயோ ஒரு காரணியா இருக்கு.
எப்படின்னா ஒரு ஸ்கூல்ல ஹெச். எம் .கண்டிஷனா இருந்தா அந்த ஸ்கூல் ஸ்டூடண்ட்ஸ் பங்க்சுவாலிட்டியா இருப்பாங்க.. ஒரு ஆஃபீஸ் அல்லது கம்பெனியின் மேனேஜர் கண்டிப்பானவரா இருந்தா அங்கே வேலை செய்யறவங்களும் ஒழுங்கா வேலை செய்வாங்க..அதே போல் முன்பெல்லாம் கடவுள் பற்றிய பயம் அதிகமா இருந்தது. தப்பு பண்ணுனா சாமி கண்ணை குத்திடும் என்று பயமுறுத்தி வெச்சிருந்தாங்க..
மனசாட்சிக்கு பயப்படாதவன் கூட சாமிக்கு பயப்பட்டான்.சாமி சும்மா விடாது.. தண்டனை உண்டுன்னு பயந்தான்.சின்ன வயசுல நோட் புக்கோ,பேப்பரோ மிதி பட்டா சரஸ்வதி சாமியை அவமானப்படுத்திட்டே.. உனக்கு இனி படிப்பே வராதுன்னு சொல்வாங்க..காசை,அல்லது பணத்தை தெரியாம மிதிச்சாக்கூட லட்சுமி சாமியை அவமானப்படுத்தீட்டே.. உன் கிட்டே செல்வம் தங்காது.. உன் கிட்டே லட்சுமி சேர மாட்டா அப்படிம்ப்பாங்க..
ஆனா இந்தக்கால பசங்க கிட்டே பக்தியையோ,உண்மையான ஆன்மீகத்தையோ பார்க்க முடியல..இப்ப இருக்கற தலை முறைகள்ல எத்தனை பேருக்கு தேவாரம், திருவெம்பாவை, திருப்பாவை, கந்த சஷ்டி தெரியும்?
கடவுள் நம்பிக்கை இல்லாதவங்க கூட புராணங்கள், பக்தி இலக்கியங்கள் படிப்பது தப்பில்லை.இப்போ இருக்கற ஆட்கள்ல எத்தனை பேர் திரு நீறை நெற்றி நிறைய இட்டுக்கறாங்க..?அது சும்மா கம கமன்னு வாசம் வீசுமே.. தலை வலியை காணாம போகச்செய்யுமே..நிறைய பேரு பவுடர் அடிச்சுட்டு ஒரு துளி கீற்று பவுடரை திருநீறு மாதிரி இட்டுக்கறாங்க..
கோயிலுக்குள்ள இளைஞர்களைப்பார்க்கறது அரிதாகி விடுகிறது..ஒரு அசாதாரணமான அமைதி கோயில்ல இருக்கும். பல கஷ்டங்கள், குடும்ப பிரச்சனைகள், ஆஃபீஸ் தலை வலிகள் எல்லாத்துக்கும் ஒரு அரு மருந்தா கோவில் விசிட் நமக்கு கை கொடுக்கும்.
நீங்க சாமியே கும்பிட வேண்டாம்.சும்மா வந்துட்டு போங்க.. 10 நிமிஷம் அமைதியா உட்கார்ந்து பாருங்க..ஒரு மாற்றம் தெரியும்.. மனசுல ஒரு நிம்மதி இருக்கும்.சாமி கும்பிடறவங்க பெரும்பாலும் அவங்களுக்கு என்ன தேவை என்பதை கோரிக்கையா வைக்கிறான்.அதற்கான காணிக்கையை உண்டியல்ல போடறான்.. இதுக்குப்பெயர் பக்தியா?
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதியை
யாம் பாட கேட்டே யும் வாள் தடங்கன்,
,மாதே வளருதியோ வன் செவியோ நின் செவி தான்
மாதேவன் வார்க்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்
வீதி வாய்க்கேட்டலுமே விம்மி விம்மி மெய் மறந்து
போதார் அமளியின் கண் நின்றும் புரண்டிங்கன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்....
இந்தப்பாட்டு திருவெம்பாவைல வருது..மார்கழி மாசத்துல விடியற்காலைல 5 மணிக்கு எழுந்து பச்சைத்தண்ணில குளிச்சு ,நெற்றில பட்டை இட்டுக்கிட்டு வெறும் வேட்டி மட்டும் கட்டி சட்டை இல்லாம குளிர்ல ஈஸ்வரன் கோயிலை சுற்றி வருவாங்க..பாட்டு பாடிக்கிட்டே ..( திருவெம்பாவை)
பாட்டுக்கு அர்த்தம் புரியனும்னு அவசியம் இல்லை.. கேட்டாலே புண்ணியம்னு சொல்வாங்க..
ஒண்ணும் வேணாம் காலைல எழுந்ததும் சுப்ரபாதம் பாட்டு டேப்ல போட்டு கேளுங்க.. மனசுல ஒரு எழுச்சி தோணும்.. மன அமைதி கிடைக்கும்.
அப்புறம் மனிதனின் மிருக குணங்களை இறைவனின் சந்நிதானம் அடக்க வல்லது. குறிப்பா சைவம் மட்டும் சாப்பிடறவங்க இதை உணர முடியும்.ஒரு உயிரை கொன்று அதன் சதைகளை விரும்பி சாப்பிடும்போது யோசிச்சுப்பாருங்க....நாம இறந்தா அதை சவம் என சொல்றோம்.. ஆனா விலங்கு இறந்தா மட்டன் ஆகிடுது.. அதுவும் டெட் பாடிதான்.. டெட் பாடியை சாப்பிடறோம்னு அருவெறுப்பு மனுஷனுக்கு வரனும்.
நான் ஏன் சைவத்தை பற்றி இந்த அளவு சொல்றேன்னா மனிதனோட உணவுப்பழக்க வழக்கம் அவனோட கேரக்டரை தீர்மானிக்குது..அசைவத்தை தவிர்க்க முடியாதவங்க அதை குறைக்கலாம்..
சபரி மலைக்கு மாலை போடறவங்க மாலை கழுத்துல இருக்கற வரை உத்தமனா இருப்பதும், மாலை கழுத்தை விட்டு இறங்குனதும் பண்ணாத அட்டூழியம் எல்லாம் பண்ணுவதும் நகைக்க வைக்கும் உண்மைகள்.
கோயில் பிரசாதங்கள் செம டேஸ்ட்டாக இருபதற்கு முக்கிய காரணம் அதை சமைப்பவர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடவும் ,பக்தியோடவும் சமைக்கறதுதான்.இந்த வித்யாசத்திற்கு இன்னொரு உதாரணம் சொல்றேன்.நம்ம அம்மா சமையலை விட மனைவியோட சமையல் டேஸ்ட் கம்மியா தான் இருக்கும் இதுக்கு என்ன காரணம்?
1. கிட்டத்தட்ட 25 வருஷங்களா நாம அம்மா கைப்பக்குவத்தை சாப்பிட்டு பழகிட்டோம்.
2.மனைவி சமைக்கும்போது சில சமயங்களில் ஏதானும் சண்டை போட்டுக்கிட்டு வேண்டா வெறுப்பா சமைக்கலாம். அந்த வெறுப்புண்ர்வு கூட சமையலில் வந்து விடுமாம்.
கட்டுரை எங்கேயோ ஆரம்பிச்சு இங்கே வந்து நிக்குது..கடவுள் இருக்காரா? இல்லையா? முன் ஜென்மம் என்பது உண்மையா?பொய்யா?கர்ம வினைப்பயன் என்பது என்ன? ஜாதகம் என்பது உண்மையா? வரும் வாரங்களில் பார்ப்போம்.
90 comments:
VADAI ENAKKU
வடைதான் கிடைக்கல கொஞ்சம் விபூதியாச்சும் கொடுங்கப்பா!
பிரசாதம் எனக்கே அப்படி போட்டிருந்தா மேட்சிங்கா இருந்திருக்கும்.. டிஸ்கில சொல்லி இருந்திருக்கனுமோ//#டவுட்டு
என்னங்க இப்படி கலக்குறிங்க..
பக்தி பரவசம் அடைந்தேன்..
அரோகரா அரோகரா அரோகரா.. ( பதிவின் ரிசல்ட்டை சொல்லலை.. ஹி ஹி )
ஜாதகம் என்பது உண்மையா? //
கிழிஞ்சது ..என்ன பொழக்கவே விட மாட்டீங்களா
///////
கோயில் பிரசாதங்கள் செம டேஸ்ட்டாக இருபதற்கு முக்கிய காரணம் அதை சமைப்பவர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடவும் ,பக்தியோடவும் சமைக்கறதுதான்/////////
பிரசாதம் பற்றி ஒரு பதிவே போடுவிங்க போல..
உங்க வீட்லேயும் சமையல் டேஸ்ட் கம்மியா பாஸ்..
உங்கள் பக்தி பதிவிலும் ஒரு கில்மா படம்..பரவ்சம் அடைந்தேன்
உங்க வீட்லேயும் சமையல் டேஸ்ட் கம்மியா பாஸ்..//
எல்லா வீட்லியும்தான்..இல்லைனா இதெல்லாம் நமீதா படம் போட்டு பொழப்பு ஓட்டுமா ஹிஹி
/////
ஆர்.கே.சதீஷ்குமார் said...
ஜாதகம் என்பது உண்மையா? //
கிழிஞ்சது ..என்ன பொழக்கவே விட மாட்டீங்களா////
பயப்படாதீங்க பாஸ்..
ஏதோ தெரியாம சொல்லிட்டாரு..
அரோகரா அரோகரா அரோகரா.. ( பதிவின் ரிசல்ட்டை சொல்லலை.. ஹி ஹி //
அதான் ஜெயிச்சிடுச்சே
>>ஆர்.கே.சதீஷ்குமார் said...
ஜாதகம் என்பது உண்மையா? //
கிழிஞ்சது ..என்ன பொழக்கவே விட மாட்டீங்களா
கவலைப்படேல். அணுகவும் சதீஷ் ஆஃபீஸ் என லிங்க் குடுத்துடுவோம்.. ஹி ஹி
# கவிதை வீதி # சௌந்தர் said...
பிரசாதம் பற்றி ஒரு பதிவே போடுவிங்க போல..
உங்க வீட்லேயும் சமையல் டேஸ்ட் கம்மியா பாஸ்..
ஹி ஹி பப்ளிக் பப்ளிக்
////////
ஆர்.கே.சதீஷ்குமார் said...
உங்கள் பக்தி பதிவிலும் ஒரு கில்மா படம்..பரவ்சம் அடைந்தேன்/////////
வேலை வச்சி உன் கண்ணை குத்தனும்..
பாவங்க செந்தில் பக்தியா பதிவு போட்டா கூட இப்படி சொல்றீங்க..
>>ஆர்.கே.சதீஷ்குமார் said...
உங்கள் பக்தி பதிவிலும் ஒரு கில்மா படம்..பரவ்சம் அடைந்தேன்
உம்மாச்சி கண்ணை குத்திடும் ஜாக்கிரதை. அது கில்மா இல்லை.. வேல்மா
>>ஆர்.கே.சதீஷ்குமார் said...
உங்க வீட்லேயும் சமையல் டேஸ்ட் கம்மியா பாஸ்..//
எல்லா வீட்லியும்தான்..இல்லைனா இதெல்லாம் நமீதா படம் போட்டு பொழப்பு ஓட்டுமா ஹிஹி
என்னை கேவலப்படுத்திய பதிவர்கள் இதுவரை 19.. இப்போ நீ 20.. ஹி ஹி
>>ஆர்.கே.சதீஷ்குமார் said...
அரோகரா அரோகரா அரோகரா.. ( பதிவின் ரிசல்ட்டை சொல்லலை.. ஹி ஹி //
அதான் ஜெயிச்சிடுச்சே
அது எப்படி இப்போவே தெரியும்? 2 மணி நேரம் ஆகட்டும்
படிச்சுட்டு வர்ரதுக்குள்ள இவ்ளோ டிராபிக்கா?
!* வேடந்தாங்கல் - கருன் *! said...
படிச்சுட்டு வர்ரதுக்குள்ள இவ்ளோ டிராபிக்கா?
பி ஜே பி கட்சி செயற்குழு மாதிரி வெறும் 4 பேரை வெச்சு ஈ ஓட்டிட்டு இருக்கேன் .. நக்கலா.. சரி... தமிழன் எதையும் தாங்கறான்.. இதை தாங்க மாட்டானா/?
பதிவு அருமை. ஆன்மீகத்துலயும் என்னால் கலக்கமுடியும் னு நிருபிச்சிட்டீங்க. வாழ்த்துக்கள்
சி.பி.செந்தில்குமார் said...
!* வேடந்தாங்கல் - கருன் *! said...
படிச்சுட்டு வர்ரதுக்குள்ள இவ்ளோ டிராபிக்கா?
பி ஜே பி கட்சி செயற்குழு மாதிரி வெறும் 4 பேரை வெச்சு ஈ ஓட்டிட்டு இருக்கேன் .. நக்கலா.. சரி... தமிழன் எதையும் தாங்கறான்.. இதை தாங்க மாட்டானா/?
--- நக்கல் எல்லாம் கிடையாது... ஆன்மீப் பதிவிற்கு இதுவே அதிகம்.. நான் போட்டிருந்தால் எனக்கு நானே கமென்ட் போட்டுக்க வேண்டியதுதான்..
ராஜி said...
பதிவு அருமை. ஆன்மீகத்துலயும் என்னால் கலக்கமுடியும் னு நிருபிச்சிட்டீங்க. வாழ்த்துக்கள்
சக்தியை நோக்க சரவண பவணா....
>>>>--- நக்கல் எல்லாம் கிடையாது... ஆன்மீப் பதிவிற்கு இதுவே அதிகம்.. நான் போட்டிருந்தால் எனக்கு நானே கமென்ட் போட்டுக்க வேண்டியதுதான்..
உங்க கிட்டே மட்டும் ஒரு உண்மையை சொல்றேன்.. அந்த 4 ல 2 நம்ம பினாமிங்க .. ஹி ஹி
உங்க கிட்டே மட்டும் ஒரு உண்மையை சொல்றேன்.. அந்த 4 ல 2 நம்ம பினாமிங்க .. ஹி ஹி -----
இதெல்லாம் சும்மா தம்பி... கன்டிப்பாக இந்தப் பதிவு வெற்றியடையும்..
!* வேடந்தாங்கல் - கருன் *! said...
உங்க கிட்டே மட்டும் ஒரு உண்மையை சொல்றேன்.. அந்த 4 ல 2 நம்ம பினாமிங்க .. ஹி ஹி -----
இதெல்லாம் சும்மா தம்பி... கன்டிப்பாக இந்தப் பதிவு வெற்றியடையும்..
அடைந்தால் சந்தோஷம்.. அடையா விட்டால் படிக்காதவர்களுக்கு தோஷம்
சென்னிமலை என்பது ஈரோடா? (அ) பக்கத்தில் இருக்கிற டவுனா?
ஈரோடு மாவட்டம். 26 கி மீ தூரத்தில் உள்ள கிக் கிராமம்.. சாரி குக்கிராமம்.. அதாவது இங்கே எல்லா ஆண்களுக்கும் குக் தெரியும்.. ஹி ஹி
எல்லாம் சரி...நையாண்டி மேளம் அடிச்சதை பற்றி ஏன் எழுதவில்லை.(எங்க கவலை எங்களுக்கு)
கிக் கிராமம்.--- கள்ளச் சாராயம் காய்ச்சுவாங்களோ?
நல்ல முயற்சி,
வைகை வேடந்தாங்கல் பக்கம் வந்து நாளாச்சே ஏன்?
ஆனா இந்த தேர்க்கு ஏன் கூட்டம் வர்றது இல்லைன்னு தெரியல..பல வருடங்களாவே அப்படித்தான் இருக்கு..///
சொந்த ஊரில் முருகனை வைத்துக்கொண்டு பழனிக்கு நடந்து செல்பவர்களை என்ன செய்வது?
கோயிலுக்குள்ள இளைஞர்களைப்பார்க்கறது அரிதாகி விடுகிறது.//
இது நல்ல விஷயம் சிபி!
>>நையாண்டி மேளம் said...
எல்லாம் சரி...நையாண்டி மேளம் அடிச்சதை பற்றி ஏன் எழுதவில்லை.(எங்க கவலை எங்களுக்கு)
adadaa.. அடடா.. சாரி.. ஒண்ணூம் கவலைப்படாதீங்க.. நாட்டுப்புறக்கலைகள்,புராதான இசைக்கருவிகள் பற்றி தனிப்பதிவு போட்டுடலாம்
>>>சொந்த ஊரில் முருகனை வைத்துக்கொண்டு பழனிக்கு நடந்து செல்பவர்களை என்ன செய்வது?
வைகை.. அது தப்பில்லை.. ஒவ்வொரு தலத்துக்கும் ஒரு பெருமை உண்டு,,,ஆனா வாக்கிங்க் போவதும் நல்லதுதான்.. போகட்டும்
வைகை said...
கோயிலுக்குள்ள இளைஞர்களைப்பார்க்கறது அரிதாகி விடுகிறது.//
இது நல்ல விஷயம் சிபி!
நன்றி வைகை
Thirumalai Kandasami said...
நல்ல முயற்சி,
திருவினை ஆக்கினால் மகிழ்ச்சி
!* வேடந்தாங்கல் - கருன் *! said...
கிக் கிராமம்.--- கள்ளச் சாராயம் காய்ச்சுவாங்களோ?
லொள்ளு பண்ணூனா உதைப்பாங்க.. கிக் = உதை .. ஹி ஹி
லொள்ளு பண்ணூனா உதைப்பாங்க.. கிக் = உதை .. ஹி ஹி ---
ஓகோ... அந்தகிக்கோ... நான் எஸ்கேப்பு...
லைவ் டெலிகாஸ்டுக்கு மிக்க நன்றி நண்பரே
Blogger |கீதப்ப்ரியன்|Geethappriyan| said...
லைவ் டெலிகாஸ்டுக்கு மிக்க நன்றி நண்பரே
வாங்க நண்பா.. நன்றி
பெற்றோரின் மனைவியின் கட்டாயத்தால் வருவதன் பெயர் பக்தி அல்ல,ஒருவனுக்கு கடவுள் நம்பிக்கை வருவதற்கு கூட கடவுள் மனது வைக்க வேண்டும்.அது எப்போவேண்டுமானாலும் வரும்.
நான் நல்ல நேரம்-ஆர் கே எஸ் ப்ளாக்குக்கு வந்துட்டுட்டேனா?!!!தொடருமா?!!!
இந்த ஆன்மீக பதிவைப் பொறுத்த வரை பிரசாதம்(வடைக்கு பதிலா)
முதல் பின்னூட்டக்காரருக்கு மட்டுமல்ல.எல்லா வாசகர்களுக்குமே.
(ஐ மீன் படிச்சுட்டு பின்னூட்டமே போடாம போறவங்களுக்குமே சேர்த்துதான்)
ஆனால்,தாங்கள் பதிவில் கூறியிருப்பது போல் மக்களுக்கு
பக்தி குறைந்து விட்டதா?கோவிலில் கூட்டம் குறைவு என்பதில்
எனக்கு சற்று உடன்பாடு இல்லை.ஏனெனில் இப்பொழுதுள்ள
மக்களுக்கு கஷ்டங்கள் தாங்கும் மனப்பக்குவம் இல்லை.அதனால் எந்த கோவில்
சென்றாலும் கூட்டம்தான்.ஆனால் அவர்கள் வருவது பக்திக்காக என பொதுவாக
சொல்ல முடியாது.பாதிக்கு மேல் தங்கள் கஷ்டம் தீர்க்க இறைவனை நாடி
வருகிறார்கள்.அது தவறு.
முன்பெல்லாம் அவன் பாத்துப்பான் என கஷ்டத்தை புறந்தள்ள மனிதர்களுக்கு
மனதிடம் இருந்தது.இறை தரிசனத்துக்காக பக்தி செய்தனர்.இப்பொழுது அது இல்லை.எந்த உபன்யாசம்,கோவில் சென்றாலும்
கூட்டம்தான்.உதாரணமாக குமுதம் ஜோதிடத்தில் ஏ ஆர் ஆர் அவர்கள் இந்த கஷ்டம் நீங்க இந்த கோவில்
பிரசித்தி என போட்டால் போதும்.அந்த வாரமே அந்த கோவிலில் கூட்டம் பின்னும்.
இம்மாதிரி இல்லாமல் இறை வழிக்காக, தனி மனித ஒழுக்கத்துக்காக பக்தி செய்தல் சிறப்பு.
அருமையான பகிர்வு.நன்றி
பின்னூட்டம் கொஞ்சம் பெருசா போச்சு.ப்ளீஸ் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க எல்லாரும்
//ஆனா இந்தக்கால பசங்க கிட்டே பக்தியையோ,உண்மையான ஆன்மீகத்தையோ பார்க்க முடியல..இப்ப இருக்கற தலை முறைகள்ல எத்தனை பேருக்கு தேவாரம், திருவெம்பாவை, திருப்பாவை, கந்த சஷ்டி தெரியும்?//
உண்மைதான்.ஆனால் அவற்றை நாம் இளைய தலைமுறைக்கு
கொண்டு செல்லும் விதத்தில்தான் இந்த விஷயம் இருக்கிறது.
அடுத்த தலைமுறைக்கு இவ்ற்றை கற்றுத் தர இது நம்மில் எத்தனை
பேருக்கு தெரியும் என்பது மிக முக்கியம்.அப்படியே தெரிந்தாலும் நாம் இதை தினசரி
வாழ்வில் கடைப்பிடித்தாலன்றி நம் குழந்தைகள் அறிய வாய்ப்பில்லை.
உதாரணமாக நாம் அடிக்கடி கேட்கும் சினிமா பாடல் நம் மனதில் ஒட்டிக் கொள்வது
போல் நான் தினமும் சொல்லிக் கொண்டோ கேட்டுக் கொண்டோ இருந்தால் நம் குழந்தைகளையும்
இது சென்றடையும் அல்லவா?
ராஜியின் விளக்கமான பின்னூட்டத்துக்கு நன்றி..
>>>தினமும் சொல்லிக் கொண்டோ கேட்டுக் கொண்டோ இருந்தால் நம் குழந்தைகளையும்
இது சென்றடையும் அல்லவா?
தினமும் காலை ஒரு மணி நேரம் பக்திபாடல்களை கேட்டல் நலம்.. நமக்கும் நம் சந்ததிகளுக்கும்
|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...
பெற்றோரின் மனைவியின் கட்டாயத்தால் வருவதன் பெயர் பக்தி அல்ல,ஒருவனுக்கு கடவுள் நம்பிக்கை வருவதற்கு கூட கடவுள் மனது வைக்க வேண்டும்.அது எப்போவேண்டுமானாலும் வரும்.
கடவுள் நம்பிக்கை வராட்டி பரவால்லை.. மனித நேயம் வளர்ந்தாலும்,பழி வாங்கல் உணர்ச்சி குறைந்து அன்பு தழைத்தாலும் போதும்
>>|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...
நான் நல்ல நேரம்-ஆர் கே எஸ் ப்ளாக்குக்கு வந்துட்டுட்டேனா?!!!தொடருமா?!!!
500 பேர் இந்த பதிவைப்படிச்சுட்டா தொடரும்.. சப்போஸ் 499 பேர் மட்டும் படிச்சா நானே ரிப்பீட் ஆடியன்சாகி 50 ஸ்கோர் பண்ணிடுவோம் இல்ல..ஹி ஹி
welldone senthil.i'll come later and write in tamil.
நன்றி நண்பா...
கந்தனுக்கு அரோகரா., முருகனுக்கு அரோகரா... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா...
சிபிக்கு............?
சங்கவி said...
கந்தனுக்கு அரோகரா., முருகனுக்கு அரோகரா... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா...
சிபிக்கு............?
கோவிந்தா கோவிந்தா.. ஹி ஹி
சிறப்பான பதிவு......!
//////நம்ம அம்மா சமையலை விட மனைவியோட சமையல் டேஸ்ட் கம்மியா தான் இருக்கும் இதுக்கு என்ன காரணம்?////////
ஆமா சிபி, ஆனா அது ஏன்....?
>>பன்னிக்குட்டி ராம்சாமி said...
சிறப்பான பதிவு......!
வசிஷ்டர் வாயால் ...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////நம்ம அம்மா சமையலை விட மனைவியோட சமையல் டேஸ்ட் கம்மியா தான் இருக்கும் இதுக்கு என்ன காரணம்?////////
ஆமா சிபி, ஆனா அது ஏன்....?
ஹி ஹி சொன்னா சாப்பாடு கிடைக்காது எனக்கு ஹி ஹி அப்புறம் மெஸ்தான்
நன்றி ராஜேஷ்
//தனி மனித ஒழுக்கத்துக்கும், சமூக முன்னேற்றத்துக்கும் ஆன்மீகம் தெரிஞ்சோ தெரியாமயோ ஒரு காரணியா இருக்கு.//
நம்பிக்கை போதும். தனிமனித ஒழுக்கம் கூடும்; சமூகம் அத்துடன் முன்னேறும். நம்பிக்கை குறைஞ்சிட்டிருக்கு.
//எத்தனை பேருக்கு தேவாரம், திருவெம்பாவை, திருப்பாவை, கந்த சஷ்டி தெரியும்?//
கந்த சஷ்டி கவசம் கூட சமீபத்துலே எழுதப்பட்டதுதான். (அதிகபட்சம் நாற்பது வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டது) திருப்பாவை முப்பதுதான். திருப்புகழ் கொஞ்சம் தெரிஞ்சுக்கலாம். தமிழ் ஆர்வத்துக்கும் நல்லது.
//நீங்க சாமியே கும்பிட வேண்டாம்.சும்மா வந்துட்டு போங்க.. 10 நிமிஷம் அமைதியா உட்கார்ந்து பாருங்க..ஒரு மாற்றம் தெரியும்..//
தல, என் அலுவலகம் பக்கத்துலே தான் காளிகாம்பாள் கோவில் இருக்குது. கூட்டமில்லாத நாட்களிலே போய் பிரத்யங்கரா சந்நிதி முன்னாலே கண்ணை மூடிட்டு ஒரு அரைமணி நேரம் உட்கார்ந்திட்டு வருவேன். அது போதும்.
//சபரி மலைக்கு மாலை போடறவங்க மாலை கழுத்துல இருக்கற வரை உத்தமனா இருப்பதும், மாலை கழுத்தை விட்டு இறங்குனதும் பண்ணாத அட்டூழியம் எல்லாம் பண்ணுவதும் நகைக்க வைக்கும் உண்மைகள்.//
கரெக்ட்! :-)
ஆன்மீகத்தை டச் பண்ணியிருக்கீங்க! மங்களம் உண்டாகட்டும் தல..!
>>சேட்டைக்காரன் said...

m m ம் ம் இப்போ பகுத்தறிவாளர்னு சொல்றது ஒரு ஃபேஷன் ஆகிடுச்சு அண்ணே
பிரசாதம் பற்றிய உங்கள் விளக்கம் சூப்பர் பாஸ்! :-)
>சேட்டைக்காரன் said...
//எத்தனை பேருக்கு தேவாரம், திருவெம்பாவை, திருப்பாவை, கந்த சஷ்டி தெரியும்?//
கந்த சஷ்டி கவசம் கூட சமீபத்துலே எழுதப்பட்டதுதான். (அதிகபட்சம் நாற்பது வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டது) திருப்பாவை முப்பதுதான். திருப்புகழ் கொஞ்சம் தெரிஞ்சுக்கலாம். தமிழ் ஆர்வத்துக்கும் நல்லது.
ஆம்.. அதே போல் புராணக்கதைகள், இலக்கியங்கள் வாசிப்பும் வேண்டும்...
>>சேட்டைக்காரன் said...
//நீங்க சாமியே கும்பிட வேண்டாம்.சும்மா வந்துட்டு போங்க.. 10 நிமிஷம் அமைதியா உட்கார்ந்து பாருங்க..ஒரு மாற்றம் தெரியும்..//
தல, என் அலுவலகம் பக்கத்துலே தான் காளிகாம்பாள் கோவில் இருக்குது. கூட்டமில்லாத நாட்களிலே போய் பிரத்யங்கரா சந்நிதி முன்னாலே கண்ணை மூடிட்டு ஒரு அரைமணி நேரம் உட்கார்ந்திட்டு வருவேன். அது போதும்.
அப்போ அண்ணனைப்பார்க்கனும்னா அங்கே வந்தா போதும்.. ஓக்கே.. மைண்ட்ல வெச்சுக்கறேன்
>>சேட்டைக்காரன் said...
//சபரி மலைக்கு மாலை போடறவங்க மாலை கழுத்துல இருக்கற வரை உத்தமனா இருப்பதும், மாலை கழுத்தை விட்டு இறங்குனதும் பண்ணாத அட்டூழியம் எல்லாம் பண்ணுவதும் நகைக்க வைக்கும் உண்மைகள்.//
கரெக்ட்! :-)
ஆன்மீகத்தை டச் பண்ணியிருக்கீங்க! மங்களம் உண்டாகட்டும் தல..!
நன்றி அண்னே
good subject
Blogger ஜீ... said...
பிரசாதம் பற்றிய உங்கள் விளக்கம் சூப்பர் பாஸ்! :-)
அது என் சொந்தக்கருத்து அல்ல.. ராம கிருஷ்ண பரம ஹம்சரும், கிருபானந்த வாரியாரும் சொன்னது...
shanmugavel said...
good subject
March 21, 2011 7:37 PM
பரவால்லையே ஆதரவு கூடிட்டே இருக்கே.. நன்றி நண்பா...
//ஒரு உயிரை கொன்று அதன் சதைகளை விரும்பி சாப்பிடும்போது யோசிச்சுப்பாருங்க....நாம இறந்தா அதை சவம் என சொல்றோம்.. ஆனா விலங்கு இறந்தா மட்டன் ஆகிடுது.. அதுவும் டெட் பாடிதான்.. டெட் பாடியை சாப்பிடறோம்னு அருவெறுப்பு மனுஷனுக்கு வரனும்.//
//1. கிட்டத்தட்ட 25 வருஷங்களா நாம அம்மா கைப்பக்குவத்தை சாப்பிட்டு பழகிட்டோம்.
2.மனைவி சமைக்கும்போது சில சமயங்களில் ஏதானும் சண்டை போட்டுக்கிட்டு வேண்டா வெறுப்பா சமைக்கலாம். அந்த வெறுப்புண்ர்வு கூட சமையலில் வந்து விடுமாம்.//
கிளாமரா மட்டுமல்ல...
தெய்வீகமா பதிவு போடவும் முடியும்ன்னு நிருபிச்சுடீங்க CPS !
நீங்க ஒரு சகலகலா பதிவர் தான் !
பக்தா இத்தன நாள் போட்ட பதிவுகளுக்கு இன்று தான் என்னை கண்டு தோஷம் கழிக்க தோன்றியதோ!.........உன் பக்தியை மெச்சினோம்!
ஆகாயமனிதன்.. said...
கிளாமரா மட்டுமல்ல...
தெய்வீகமா பதிவு போடவும் முடியும்ன்னு நிருபிச்சுடீங்க CPS !
நீங்க ஒரு சகலகலா பதிவர் தான் !
நன்றி சார்..
>> Delete
Blogger விக்கி உலகம் said...
பக்தா இத்தன நாள் போட்ட பதிவுகளுக்கு இன்று தான் என்னை கண்டு தோஷம் கழிக்க தோன்றியதோ!.........உன் பக்தியை மெச்சினோம்!
கூற்றாயினவாறு விளக்ககளீர் , கொடுமை பல செய்தன நான் அறியேன்.. ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும்...
ஆட்டை கடிச்சு மாட்டை கடிச்சு கடைசியில ஆமாங்க கடைசியில நம்ம சதீஷ்சை சாடுவது போல் உள்ளதே?
>>பி.நந்தகுமார் said...
ஆட்டை கடிச்சு மாட்டை கடிச்சு கடைசியில ஆமாங்க கடைசியில நம்ம சதீஷ்சை சாடுவது போல் உள்ளதே?
haa haa wait and c
அண்ணே நல்லா உத்து பார்த்துட்டேன். உங்க நெற்றியிலே விபூதியை கானோம்? தேவாரம் திருவாசகம் திருப்பாவை திருவெம்பாவை எல்லாம் தெரிந்து கொள்ள அது என்ன பாட புத்தகத்திலா வருகிறது? கோயில் பிரசாதத்திற்கு ஓர் அருமையான விளக்கம் அனுபவமோ?
முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா.
//.மனைவி சமைக்கும்போது சில சமயங்களில் ஏதானும் சண்டை போட்டுக்கிட்டு வேண்டா வெறுப்பா சமைக்கலாம். அந்த வெறுப்புண்ர்வு கூட சமையலில் வந்து விடுமாம்.//
.
மனைவிக்கு சமைக்கும்போது??????
அடுத்து திண்டல், சிவன்மலையை பற்றிய தகவல்களை உங்களிடம் எதிர்பார்கிறேன்.
சென்னிமலை அருமையான ஊருங்க...அருமையான மக்கள்..என்றென்றும் மறக்க முடியாது...
தலைவரே பங்குனி உத்திரம் லைவ் நிகழ்வின் தொகுப்பு என்று படித்து பார்த்தால்...அதை விட்டுட்டு வேற டாபிக் ஜம்ப் ஆயிடீங்களே!!!
//டக்கால்டி:அடுத்து திண்டல், சிவன்மலையை பற்றிய தகவல்களை உங்களிடம் எதிர்பார்கிறேன்.//
சிவன்மலையில் 'சங்கு' வைத்து பூஜை
http://aagaayamanithan.blogspot.com/2010/11/blog-post_24.html
என்னய்யா இது...சிபி தளத்தையும் யாரோ ஹேக் பண்ணீட்டாங்க போல!
சிபி...நம்பவே முடியல !
மிக நல்ல பதிவு .. அருமை தல...
நல்ல பதிவு நண்பா !
உண்மைவிரும்பி
மும்பை
Post a Comment