கடந்த முறை இலவச கலர் டிவி வழங்கப்பட்டதைப் போல, இம்முறை தாய்மார்களுக்காக இலவச கிரைண்டர் அல்லது மிக்ஸி வழங்கப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தார்.
தாய்மார்கள் தங்கள் விருப்பம் போல் கிரைண்டரையோ அல்லது மிக்ஸியையோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக தேர்தல் அறிக்கையை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அரங்கத்தில் சனிக்கிழமைதி.மு.க. தலைவரும் முதல்வருமான கருணாநிதி வெளியிட்டு அதனை வாசித்தார்.
அதன் முக்கிய அம்சங்கள்:
* கல்வியை மாநில அரசின் பட்டியலில் கொண்டு வர வலியுறுத்துவோம்.
* கிராமத்து மாணவர்கள் பயன்பெறும் வகையில் பொது நுழைவுத் தேர்வை எக்காலத்திலும் நடத்த அனுமதியோம்.
* மத்திய அரசில் இருந்து மாநில அரசுக்கு கிடைத்து வருகின்ற வரி வருவாய் நியாயமான முறையில் கிடைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
* செம்மொழியாயான தமிழை மத்திய ஆட்சிமொழியாக்க மத்திய அரசை வலியுறுத்துவோம். அனைத்து நீதிமன்றங்களிலும் தமிழை நீதிமன்ற மொழியாக்க நடவடிக்கை.
* மத்திய அரசு நடத்தும் தேர்வுகளை தமிழில் எழுத வலியுறுத்துவோம்.
* திருக்குறளை தேசிய நூலாக்க பாடுபடுவோம்.
* ஈழத்தமிழர்களுக்கு இலங்கையில் ஆட்சியில் பங்கு கிடைக்க மத்திய அரசை வலியுறுத்தக் கூறுவோம்.
* வேளாண் உற்பத்தியை அதிகரிக்க சிறப்புத் திட்டம்.
* விளைநிலங்களை வேறு பயன்பாட்டுக்கு செல்லாத வகையில் பாதுகாப்போம்.
* நகர்புறங்களில் நுகர்வோர் சந்தை அமைக்கப்படும்.
* படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும்.
* வறுமைக் கோட்டுக்கு கீழேயுள்ள குடும்பங்களை குறிப்பிட்ட காலங்களுக்கு பொருளாதார ஏற்றம் பெற நடவடிக்கை.
* அரசு கல்லூரிகளில் படிக்கும் பி.சி., எம்.பி.சி. எஸ்.சி, மாணவர்களுக்கு இலவச லேப்டாப்
* மகளிர் சுய உதவி கடன் தொகை ரூ.4 லட்சமாக உயர்த்தப்படும். இதில், ரூ.2 லட்சம் மானியம்.
* மீனவர் நலனுக்கு சிறப்பு காப்பீடு திட்டம் கொண்டுவரப்படும்.
* தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வை காண மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம்.
* திருச்சி, மதுரையில் மன நல மருத்துவமனைகள் அமைக்கப்படும்.
* மதுரையில் காசநோய் மருத்துவமனை.
* மருத்துவ கட்டண ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்படும்.
* எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் மருத்துவம், கல்வி உள்ளிட்ட வசதிகள்.
* நடக்க முடியாத முதிய நோயாளிக்கு வீட்டிலேயே மருத்துவர் மூலம் சிகிச்சை பெற சிறப்பு நடவடிக்கை.
* தரமான இலவசக் கல்வியை அனைவருக்கும் வழங்கும் வகையில் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்.
* அரசு பள்ளி மாணவர்களுக்கு மூன்று சீறுடை.
* அரசுக் கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் வேலைவாய்ப்புகளை வழங்கும் படிப்புகளை அறிமுகம் செய்து, கல்வித் தரத்தை உயர்த்துவோம்.
* தமிழகத்தில் பல்கலைக்கழகமே இல்லாத மாவட்டம் இல்லை என்ற நிலையை எட்டுவோம்.
* தமிழகத்தில் வெளிநாட்டு மொழிகளை கற்றுத் தர ஏற்பாடு.
* சேது கால்வாய் திட்டத்தை முடிக்க தொடர்ந்து பாடுபடுவோம்.
* முல்லைப் பெரியாறு, காவிரி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றுக்கு தீர்வு கண்டு தமிழக உரிமைகளுக்கு தொடர்ந்து வலியுறுத்துவோம்.
* மாநகர போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க கோவை, மதுரை நகரில் புல்லட் ரயில் இயக்க நடவடிக்கை.
* சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை மாமல்லபுரம் வரை நீட்டிப்போம்
.
* மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து. 60 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு அரசு உள்ளூர் பேருந்தில் கட்டணமில்லா பயணம்
.
* முதியோர், ஆதரவற்ற பெண்கள், விதவைகள், மாற்றுத் திறனாளிக்கு மாத உதவித் தொகை ரூ.750 ஆக உயர்த்தப்படும்.
* தலித் கிறிஸ்தவர்கள் ஆதிதிராவிடர் பிரிவில் இடம்பெற மத்திய அரசை வலியுறுத்துவோம்.
* சிறுபான்மையினருக்கு சிறப்புக் கல்வித் திட்டம்.
* திருநங்கைகள் சுய உதவிக் குழு அமைக்கப்படும்.
* சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி வர்த்தகர்கள் ஈடுபட அனுமதி இல்லை
.
* கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் ரூ.75 ஆயிரம் மானியம் இனி ரூ.1 லட்ச ரூபாயாக உயர்த்தப்படும்.
* கலைஞர் காப்பீடு திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
* அரசு அலுவலகங்களில் லஞ்சம் ஊழல் இல்லாத அளவுக்கு துரிதமான கண்காணிப்பு பணி.
* புதிய சென்னை துணை நகரம் உருவாக்குவோம்.
* பரம ஏழைகளுக்கு ரூ.1 அரிசி இனி இலவசமாக வழங்கப்படும். வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள பரம ஏழைகளுக்கு மாதந்தோறும் 35 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும்.
* இலவச வண்ணத் தொலைக்காட்சி திட்டம் தொடரும்.
* தாய்மார்களுக்காக இலவச கிரைண்டர் அல்லது மிக்ஸி வழங்கப்படும். இவை இரண்டில் ஏதாவது ஒன்றை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
கலைஞர் அறிவித்த இந்த கவர்ச்சி திட்டங்கள் அ தி மு க வட்டத்தில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது
கலைஞர் அறிவித்த இந்த கவர்ச்சி திட்டங்கள் அ தி மு க வட்டத்தில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது
38 comments:
கலைஞரின் "கதாநாயகி" முற்றிலும் இலவசமாக கடைகளில் கிடைக்கும். மக்களே சண்டை போடாமல் வரிசையில் நின்று வாங்கவும்.
எனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - இரண்டு
///தாய்மார்களுக்காக இலவச கிரைண்டர் அல்லது மிக்ஸி வழங்கப்படும். இவை இரண்டில் ஏதாவது ஒன்றை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.///
அப்ப, ரெண்டு குடும்ப தலைவிகள் இருந்தா? ஒருத்தருக்கு கிரைண்டர், இன்னொருத்தருக்கு மிக்ஸி.. எப்புடி நம்ம கலைஞர் திட்டம்..
எனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - இரண்டு
போற போக்கைப்பார்த்தா அய்யா அடுத்த சி ம் ஆகிடுவார் போல
மச்சி சரக்கு கொண்டாந்து ஊட்டுலையே வாயில ஊத்திட்டு போவாங்களா இலவசமா டவுட்டு!
//கலைஞர் அறிவித்த இந்த கவர்ச்சி திட்டங்கள் அ தி மு க வட்டத்தில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது //
அவசரப்பட வேண்டாம் அ.தி.மு.க தேர்தல் அறிக்கை வெளியானப்பின்பு பாருங்க.
///சி.பி.செந்தில்குமார்/// இல்லை...
சி எம் செந்தில்குமார்
எப்புடி?
எனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - இரண்டு
THOPPITHOPPI said...
//கலைஞர் அறிவித்த இந்த கவர்ச்சி திட்டங்கள் அ தி மு க வட்டத்தில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது //
அவசரப்பட வேண்டாம் அ.தி.மு.க தேர்தல் அறிக்கை வெளியானப்பின்பு பாருங்க.
அய்யா அளவு அம்மாவால பொய் சொல்ல முடியுமா?அதுவும் கவர்ச்சியா?
இந்த இலவசங்கள காட்டி மக்களை கொன்னு போட முடிவு பண்ணியாச்சி........எதிர் தரப்பு இன்னும் இழுத்துக்குனே இருக்கு ஹிஹி!
விக்கி உலகம் said...
மச்சி சரக்கு கொண்டாந்து ஊட்டுலையே வாயில ஊத்திட்டு போவாங்களா இலவசமா டவுட்டு!
தக்காளிக்கு லொள்ள பாரு
>>விக்கி உலகம் said...
இந்த இலவசங்கள காட்டி மக்களை கொன்னு போட முடிவு பண்ணியாச்சி........எதிர் தரப்பு இன்னும் இழுத்துக்குனே இருக்கு ஹிஹி!
ஆனா மக்கள்ட்ட விழிப்புண்ர்வெல்லாம் வராது போல...
>>தமிழ்வாசி - Prakash said...
///சி.பி.செந்தில்குமார்/// இல்லை...
சி எம் செந்தில்குமார்
எப்புடி?
பிளாக்ல எழுதறது பிடிக்கலை..?
விழிப்புணர்வு வரணும்னா நம்ம டாகுடர வச்சி ஒரு படம் நடிச்சி குடுக்க சொல்லுவோமா ஹிஹி!
எனக்கு ஒரு விஷயம்தான் இன்னும் புரியல உண்மைல நாட்டப்பத்தி கவலைப்படுற பல பேரு ஓட்டப்பத்தி கவலைப்படுறதில்ல அப்புறம் என்ன ....துக்கு...........
///பிளாக்ல எழுதறது பிடிக்கலை..? ///
என்ன எழுதறது பிடிக்கல? விவரமாக
எனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - இரண்டு
சாகரவரைக்கும்(தமிழன்) கலைஞர் தான் முதல்வர்
இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும்
//அய்யா அளவு அம்மாவால பொய் சொல்ல முடியுமா?அதுவும் கவர்ச்சியா? //
இதில் பொய் சொல்ல என்ன இருக்கு? உங்க வீட்டுக்கு டிவி கிடைக்கவில்லையோ?
இந்த அறிவிப்புக்களை பார்த்து, அம்மாவும் அள்ளிவீச கூடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.(வாக்குறுதிகளை).
இனிவரும் நாட்களில் தமிழக வாக்காளர்களின் காதில்(???) தேனாறும் பாலாறும் ஓட போகிறது என்பதும் சர்வநிச்சயம்.(Why blood, same blood)
தல எத வச்சு இத கவர்ச்சி திட்டம்னு சொல்லுறீங்க?
ஒரு தாப்ஸி படமோ அல்லது ஹன்சிக மோத்வானி படமோ இல்லை. அட்லீஸ்ட் ஒரு நமீதா படங்கூட இல்லை இதப் போய் கவர்ச்சி திட்டமுன்னா எப்படி!
நீங்களே ஒரு நியாயத்தை சொல்லுங்க!
முக்கிய அறிவிப்பு :
சில மணி நேரமாக எந்த தளத்திலும் இன்ட்லி ஓட்டுப்பட்டையை காணவில்லை.
கண்டுபிடித்து தருபவர்களுக்கு 12 கள்ள ஓட்டுக்கள் இலவசமாக குத்தப்படும்.
///கலைஞர் அறிவித்த இந்த கவர்ச்சி திட்டங்கள் அ தி மு க வட்டத்தில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது///
என்ன இருந்தாலும் நம்ம முதல்வர் ராஜதந்திரம் அவுங்களுக்கு வருமா ?
பசியோடு இருப்பவனுக்கு மீனை கொடுக்கதீர்கள். மீன் பிடிக்க கற்றுக்கொடுங்கள் என்ற புகழ்பெற்ற வாசகத்துக்கு எந்த ஒரு தமிழக கட்சியும் செவி சாய்க்காதுப் போல. கடைசி வரை தமிழன் அடுத்தவரிடம் கையேந்திக்கொண்டேதான் இருக்க வேண்டும் என்பது அவன் தலைவிதிப் போல.
* செம்மொழியாயான தமிழை மத்திய ஆட்சிமொழியாக்க மத்திய அரசை வலியுறுத்துவோம். அனைத்து நீதிமன்றங்களிலும் தமிழை நீதிமன்ற மொழியாக்க நடவடிக்கை.
///
இந்த ஐந்து வருடம் சாதிக்காததை இனிவரும் ஐந்து வருடங்களில் சாதிக்கப் போறாங்களாம். எல்லோரும் நம்புவோம். நம்பிக்கைதானே வாழ்க்கை.
டாஸ்மாக்கை ரேசன் கடையோட இணைச்சு விட்ரலாம்... ஓட்டு பிச்சுக்கிட்டு விழுகும்........
ஏற்கனவே ஒரு லட்சம் கோடிக்கு கடன், இதுல இவ்வளவு இலவசம் கொடுத்தா எல்லாரும் நடுத்தெருவுல தான் நிக்கனும்....
//அய்யா அளவு அம்மாவால பொய் சொல்ல முடியுமா?அதுவும் கவர்ச்சியா?// கவர்ச்சியா..அது அந்தம்மாக்கு சுட்டுப் போட்டாலும் வராதே!
நண்பர்களே,
பழைய தளம் கிடைத்து விட்டது...சிரமத்துக்கு மன்னிக்கவும். யார் அழிக்க முயன்றார் என்ற விவரத்தை கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறேன். இதைப் பற்றி விளக்கமாக ஒரு இடுகையில் சொல்கிறேன்.
நன்றி,
டக்கால்டி
மிக்ஸி, கிரைண்டர்லாம் கூட எதுக்குங்க? அப்படியே இட்லி, தோசை, சட்னியா கொடுத்துட்டா நாங்க பாட்டுக்கு மானாட, மயிலாட பார்த்துக்கிட்டு இருப்போம்ல
தி.மு.க. 234 தொகுதிகளில் 60%சதவீதம் தொகுதியை கைப்பற்றும் நிலமை தற்போது தேர்தல் அறிக்கையால் 80% மாக மாறியுள்ளது. கூட்டணி கட்சிகளை மதிக்க தெரியாத ஜெ. படு தோல்வி அடைவது நிச்சயம். பதவிக்கு ஆசைப்பட்டு கொள்கை கொள்கை என்று டூபாக்கூர் விட்ட விஜயகாந்தில் சுயரூபம் மக்கள் உணர்ந்து விட்டனர். தோல்வி பயத்தில் இருக்கும் ஜெ, அவசர அவசரமாக தேர்தல் அறிக்கையை தயார் செய்கிறார். இதில் எத்தனை புழுகு மூட்டையை அவிழ்த்து விடப்போகிறாரோ? அண்ணா நாமம்! ஜெயலலிதா நாமம்!
ராஜி said...
//பசியோடு இருப்பவனுக்கு மீனை கொடுக்கதீர்கள். மீன் பிடிக்க கற்றுக்கொடுங்கள்//
// மிக்ஸி, கிரைண்டர்லாம் கூட எதுக்குங்க? அப்படியே இட்லி, தோசை, சட்னியா கொடுத்துட்டா நாங்க பாட்டுக்கு மானாட, மயிலாட பார்த்துக்கிட்டு இருப்போம்ல//
அன்பு நண்பர்களே !
வாசிங்க நம்ம தேர்தல் கதாநாயகியையும் !
http://aagaayamanithan.blogspot.com/2011/03/2011.html
அவங்க ஃப்ரிட்ஜ் தராங்களாம்
விஜயகாந்த் பசு மாடு கொடுக்கறாராம்
இவனுங்க.. மிக்ஸி.. கிரைண்டரை வைச்சே.. அடுத்த அஞ்சு வருசத்தையும் ஓட்டிடுவானுங்க..
இந்தக் காசு எல்லாம் நம்மகிட்ட இருந்துதான் புடுங்கறாங்கன்னு எப்போதான் புரிஞ்சுக்குவோமோ..
மக்களோட வாழ்க்கைத் தரத்தை உயர்த்தறேன்னு சொன்னா பரவாயில்ல.. பரம ஏழைகளுக்கு இலவச அரிசியாம்.. ம்ஹும்.. ஒன்னும் சொல்றதுக்கு இல்ல..
தேரோடும் சென்னையிலே
தேனொழுகும் சென்னையிலே
ஆரடித்தாரோ?
ஆரடித்தாரோ?
தேரோடும் சென்னையிலே
தேனொழுகும் சென்னையிலே
ஆரடித்தாரோ?
ஆரடித்தாரோ?
அவசரப்பட வேண்டாம் அ.தி.மு.க தேர்தல் அறிக்கை வெளியானப்பின்பு பாருங்க.
//ராஜி said...
//பசியோடு இருப்பவனுக்கு மீனை கொடுக்கதீர்கள். மீன் பிடிக்க கற்றுக்கொடுங்கள்//
// மிக்ஸி, கிரைண்டர்லாம் கூட எதுக்குங்க? அப்படியே இட்லி, தோசை, சட்னியா கொடுத்துட்டா நாங்க பாட்டுக்கு மானாட, மயிலாட பார்த்துக்கிட்டு இருப்போம்ல//
இவங்கள முதலில் கருணாநிதிக்கு இலவச கொள்கைப் பரப்பு செயலாளர் பதவிக்கு அனுப்பி வையுங்க.
மெய்யாலுமே நாங்க அரைப்பதேயில்லை.அத்தனையும் உடனடிக் கலவைதான்:)
arasiyala ithellaam sagajamappa!
ஒரு வேல கட்சியில குஷ்பு இருக்கறதால இது கவர்ச்சி திட்டமா இருக்குமோ# டவுட்டு.
அதி மு க வுக்கு சில ஐடியாக்கள் . ஒன்னு. நீங்க ஆட்சிக்கு வந்தா சீ(ச )ன் படங்களுக்கு இலவச டிக்கெட் , வா ரதுக்கு இரண்டு படம் ரிலீஸ் , இலவாஸ் இன்டர்நெட் இணைப்புடன் வீட்டுக்கு ஒரு கம்ப்யூட்டர் , முன்னணி ப்லோக்கேர்களுக்கு புதியதாக அமைய இருக்கும் சட்ட மேலவையில் பங்கு ,போன் செய்தால் டாஸ்மார்க் சரக்கு வீட்டுக்கு வரும், தினமும் மூன்று வேலை சாப்பாடு வீட்டுக்கு வரும் சண்டே மட்டும் சிக்கன் அல்லது மட்டன் அல்லது மீன் என இது போன்ற திட்டங்களை நம்ம அமலா பாலை வைத்து அறிவிச்சுடுங்க . 500 தொகுதிகளிலும் நீங்கதான்டாப்பு
Post a Comment