Thursday, March 17, 2011

ஆணவத்தால் ஆடிய ஆரணங்கே... தனக்குத்தானே ஊதிக்கொண்டீர்கள் சங்கே

http://inthiya.in/ta/wp-content/uploads/2011/03/vijayakanth-dmdk-jayalaitha-aiadmk-join-hands.jpg 

அரசியலில் புதுத்திருப்பம்.வை கோவை அவமானப்படுத்திய அம்மா பாடம் கற்க வேண்டிய தருணம் வந்து விட்டது.3 வது அணி உருவானால் கலைஞருக்கு கொண்டாட்டம். தமிழனுக்கு இருந்த ஒரே நம்பிக்கையும் போச்சு.எம்ஜிஆரையே மதிக்காதவர் தான் இந்த ஜெ.கூட்டணிக்கட்சித்தலைவர்களை இவரைப்போல் கேவலப்படுத்தியவர்கள் யாரும் இலர்..

1. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலர் பரதன்: தொழில் துறையைச் சேர்ந்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப் போவதாக திரிணமுல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தொழில் துறையினருடன், எதிர்க்கட்சியினர் தொடர்பு வைத்துள்ளது, வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இவ்வளவுதானா? நான் கூட நீரா ராடியா கூட வர்த்தகத்தொடர்போன்னு நினைச்சு பயந்துட்டேன்.. 

--------------------------------------------------
 
2. சர்வதேச ஆடிட்டிங் நிறுவனமான கேபிஎம்ஜி: கடந்த இரண்டு ஆண்டுகளாக நாட்டில் அதிகரித்து வரும் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் நாட்டின் நம்பகத்தன்மை, குறிப்பாக சர்வதேச அளவில், பொருளாதார வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களில் பதட்ட சூழலை உருவாக்கியுள்ளது.

அப்போ 2 வருஷத்துக்கு  முன்னால மட்டும் இவனுங்க யோக்கியமா நடந்திருப்பாங்கன்னு அர்த்தம் இல்லை.. அப்போ வெளில தெரியலை. இப்போ வெட்ட வெளிச்சம் ஆகிடுச்சு.. அவ்வளவுதான்
-----------------------------------------------


3. இந்திய கம்யூ., மாநிலச் செயலர் தா.பாண்டியன்: காங்., - தி.மு.க., கூட்டணியின் தவறான கொள்கைகளை முறியடிக்கும் வகையில், அ.தி.மு.க., தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. எங்கள் கூட்டணி, மக்கள் ஆதரவு பெற்ற மகத்தான கூட்டணி.

எங்கே.. அம்மா இந்த  வை கோவை கேவலப்படுத்தி ஆப்பு வெச்சுக்கிட்டாங்களே..3வது அணி உருவானா அம்மாவுக்கு சங்கு... கலைஞருக்கு நுங்கு.

----------------------------------------------------
http://rajkanss.files.wordpress.com/2008/11/pg2a.jpg?w=480&h=654
4. தமிழக காங்., தலைவர் தங்கபாலு: கடந்த தேர்தலில் நாங்கள் 48 இடங்களில் போட்டியிட்டோம்; தற்போது, 63 இடங்களில் போட்டியிடுகிறோம். 2004 லோக்சபா தேர்தலில், இந்தக் கூட்டணியில், 10 தொகுதிகளில் போட்டியிட்டோம்; 2009 லோக்சபா தேர்தலில், 16 இடங்களைப் பெற்றோம். இப்படி, காங்கிரசுக்கு முன்னேற்றம் ஏற்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆமாமா.. செம முன்னேற்றம் தான்.. அப்பவெல்லாம் காங்கிரஸ்ல 4 கோஷ்டிதான் இருந்தது.. இப்போ 32 கோஷ்டி இருக்கே.. கட்சி எம்பூட்டு வளர்ந்திருக்கு...

----------------------------------------

5. தி.மு.க., செய்தித் தொடர்பாளர் இளங்கோவன்: கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிகளைப் பகிர்ந்துள்ளது, புதிய அனுபவத்தைக் கொடுத்துள்ளது. தொகுதிகள் பற்றிய புதிய நிலவரத்தை அறியவும், இதன் மூலம் வாய்ப்பு கிடைத்துள்ளது. லாப, நஷ்ட கணக்கில் தொகுதிகளை பிரித்துக் கொள்ளவில்லை; விட்டுக் கொடுத்து தொகுதிகளைப் பிரித்துக் கொண்டுள்ளோம்.

அண்ணே.. விட்டுக்குடுத்துன்னு மொட்டையா சொன்னா மக்களுக்கு என்ன புரியும்? தன்மானத்தை விட்டுக்குடுத்துன்னு விளக்கமா சொல்லுங்க...

---------------------------------

6. நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் கார்த்திக்: அ.தி.மு.க.,வுடன் பேச்சு நடத்தியதில், நாங்கள் கோரிய தொகுதிகளைக் கொடுக்க அவர்களுக்கு மனமில்லாதது தெரிந்தது; அ.தி.மு.க., கூட்டணியிலிருந்து விலகிக் கொள்வதே சுயமரியாதைக்கு ஏற்றதென முடிவெடுக்கப்பட்டது; இதனால், அ.தி.மு.க., கூட்டணியிலிருந்து எங்கள் கட்சி விலகிக் கொள்கிறது.

உள்ளத்தை அள்ளித்தா படம் தான் உங்க மாஸ்டர் பீஸ் காமெடின்னு எல்லாரும் நினைச்சுட்டு இருந்தாங்க.. இப்போ இந்த பேட்டியால அந்த ரெக்கார்டையே உடைச்சுட்டீங்க..மானங்கெட்டுப்போய் 3 சீட் கேட்டிருப்பீங்க.. அந்தம்மா ஒரு சீட் மட்டும் தர்றேன்னு கேவலப்படுத்தி இருக்கும்..

----------------------------------
http://inthiya.in/ta/wp-content/uploads/2011/02/ramados-jayalalitha.jpg
7. தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி: பா.ஜ., ஆளும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் குறுகிய காலத்தில், மிகப் பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளன. அப்படியொரு வளர்ச்சியை, தமிழகத்தில் கொண்டு வர பா.ஜ., பாடுபடும் என்பதால், தேர்தலில் எங்களுக்கு உறுதியான வெற்றி கிடைக்கும். குறுகிய காலத்திற்குள், தமிழகத்தை ஆளும் நிலையை அடைவோம்.

குறுகிய காலம்னா எவ்வளவு ? குத்து மதிப்பா 2000 வருஷம் ஆகுமா?

----------------------------------

8. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் பேட்டி: தேர்தலில், எல்லா விதிமுறை மீறல்களுமே கைது செய்யக் கூடியவை அல்ல. வன்முறையில் ஈடுபடுவது மாதிரியான சில வகை மீறல்களுக்குத்தான் வழக்கு தொடரப்படுகிறது. அந்த வழக்கு விசாரணை முடிய வெகு நாட்களாகக் கூடும். அதில், தேர்தல் கமிஷன் தலையிட முடியாது.

விதியை மீறல்னாலே அது குற்றம் தானே.. அப்புறம் என்ன இதுக்கோசரம் சட்டம் இயற்றனும்?

---------------------------------------------

9. தமிழக தலைமைத் தேர்தல் முன்னாள் அதிகாரி நரேஷ் குப்தா பேட்டி: ஒரு ஓட்டை விற்பது, ஐந்து வருடங்களை விற்பதற்குச் சமமான வேதனை. அந்த ஐந்து வருட ஆட்சியில் தவறு ஏதும் நிகழ்ந்தால், ஓட்டை சரியாகப் பயன்படுத்தாத நாம் தான் அதற்குப் பொறுப்பு.

பேசாம ஆட்சியில் பங்குன்னு கூட்டணிக்கட்சிகள் நெருக்கற மாதிரி ஊழலில் பங்குன்னு வாக்காளர்களும் பாண்ட் பேப்பர்ல அரசியல் வாதிகளோட ஒரு ஒப்பந்தம் போட்றலாமா?

-----------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiI1_DtXARCcMSIp11ALSXgifyAozubfEpUph0V2LZ4VIRPPF79fCRufFxo0fXLK-nHoyA4doPTc1p_SPlL7KIrr-rFts6KiawvZYLPgduH464U-MFFJPeLU0-4m69pGYEqZCuEl_bQkes/s1600/njk.jpg
10. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் தாவூத் மியாகான் பேட்டி: கடந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வுக்கு ஆதரவு அளித்தோம். ஆனால், அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. எனவே, தி.மு.க., கூட்டணிக்கு கொடுத்த ஆதரவை ரத்து செய்து, அடுத்த கட்டமாக அ.தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு கொடுக்க முடிவு செய்துள்ளோம்.

அம்மா மட்டும் அப்படியே உங்களை மதிச்சு சோபால உட்கார வெச்சுட்டாலும்..

----------------------------------------

11. சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் பேட்டி: "ஸ்பெக்ட்ரம்' பற்றி தொழில் நுட்ப ரீதியாகத் தெரியாவிட்டாலும், அதிகளவு பணத்தை கொள்ளையடித்து விட்டனர் என மக்களுக்கு தெரிந்துள்ளது. இந்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப, விலைவாசி ஒன்றே போதும். இவர்கள் கொண்டுவந்த நலத்திட்டங்களால் கட்சிக்காரர்கள் தான் பயனடைந்துள்ளனர்.

வேற யார் பயனடையனும்னு எதிர்பார்க்கறீங்க..?  கஷ்டப்பட்டு கொள்ளை அடிக்கறாங்க.. உங்களுக்கு எல்லாம் ஒரு பங்கா குடுக்க முடியும்?

43 comments:

தமிழ் உதயம் said...

கருத்து ஒவ்வொன்றும் நறுக், நறுக் ன்னு இருக்கு.

sathishsangkavi.blogspot.com said...

நறுக்குன்னு நாலு வார்த்தை...

சி.பி.செந்தில்குமார் said...

செருக்குடன் இருப்பவருக்கு நறுக்கென்று தான் கேட்க வேண்டி இருக்கே..

Unknown said...

முடியல முடியல இந்த அரசியல் வியாதிங்க தொல்ல மச்சி ஹிஹி!

ஆனா உன் பதில்கள் அருமை

சி.பி.செந்தில்குமார் said...

பதில்கள் அருமை தான்.. ஆனால் தமிழர் நலனுக்கு மதில்கள் போல் குறுக்கே நிற்கும் தமிழ்நாட்டின் 2 வது தீய சக்தியை என்ன செய்வது?

சக்தி கல்வி மையம் said...

ha..ha..ha...

சக்தி கல்வி மையம் said...

FOOD said...

வந்தேன், ஓட்ட போட்டேன், வரேன். நன்றி --- என்ன உணவு போட்டோ மாத்திட்டு இருக்காரு?

சி.பி.செந்தில்குமார் said...

FOOD said...

வந்தேன், ஓட்ட போட்டேன், வரேன். நன்றி

இப்படியே தமிழன் கருத்து சொல்ல யோசிச்சா...

சி.பி.செந்தில்குமார் said...

வேடந்தாங்கல் - கருன் said...

FOOD said...

வந்தேன், ஓட்ட போட்டேன், வரேன். நன்றி --- என்ன உணவு போட்டோ மாத்திட்டு இருக்காரு?

அண்ணனுக்கு போர் அடிச்சா மாத்திடுவாரு

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இப்போது தான் சூடுப்பிடிக்கிறது தமிழக அரசியல் களம்..
பொருத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று..

settaikkaran said...

அரசியல் சூடு அட்ரா சக்க-யையும் கிளப்பி விட்டிருச்சா தல? :-)

settaikkaran said...

அதென்னமோ, காசிக்குப் போயும் கங்கையிலே குளிக்காத மாதிரியிருக்குது, உங்க இடுகைக்கு வந்து நமீதா, அஞ்சலி படம் பார்க்காதது...!

settaikkaran said...

ஆனா, மேட்டர் சூப்பர்! கெளப்புங்கோ...!

சமுத்ரா said...

கார்டூன்கள் அருமை..

சி.பி.செந்தில்குமார் said...

>># கவிதை வீதி # சௌந்தர் said...

இப்போது தான் சூடுப்பிடிக்கிறது தமிழக அரசியல் களம்..
பொருத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று..


பொறுத்திருந்து

ரஹீம் கஸ்ஸாலி said...

இன்று ஓட்டு மட்டுமே ....மன்னிக்கவும்

சி.பி.செந்தில்குமார் said...

FOOD said...

இல்லீங்கண்ணா, நம்ம வாசகர் வட்டத்திலிருந்து தோரணை ஓவரா இருக்குன்னு அட்வைசு. அதான் சாதரணமா மாத்திட்டேன்.

அண்ணன் அதுக்குள்ள வட்டம், மாவட்டம்னெல்ல்லாம் பேச ஆரம்பிச்சுட்டாரு.. பதிவர் சங்கம் ஆரம்பிப்பாரோ #டவுட்டு

சி.பி.செந்தில்குமார் said...

>>சேட்டைக்காரன் said...

ஆனா, மேட்டர் சூப்பர்! கெளப்புங்கோ...!

எந்த மேட்டர் படமும் போடலையே...ஓ சரி.. பதிவில் எழுதபட்ட மேட்டரா.. சாரி.. நான் கொஞ்சம் டியூப்லைட்

சி.பி.செந்தில்குமார் said...

>>சேட்டைக்காரன் said...

அதென்னமோ, காசிக்குப் போயும் கங்கையிலே குளிக்காத மாதிரியிருக்குது, உங்க இடுகைக்கு வந்து நமீதா, அஞ்சலி படம் பார்க்காதது...!

அடடா.. சேட்டை அண்ணன் நமீதாவை கங்கா நதி கூட ஒப்பிட்டுட்டாரு.. பிரச்சனையை கிளப்பறவங்க , அண்ணனுக்கு எதிர் பதிவு போடறவங்க போடலாம்.. ஹி ஹி

Thirumalai Kandasami said...

தன் தலையில் தானே மண்ணை வாரி போட்ட கதை இது தானோ?
மண்டையில் மூளையும் ,இதயத்தில் ஈரமும் உள்ள எவனும் இந்த அம்மாவுக்கு ஓட்டு போடா மாட்டான்.
எனக்கு மூளை இல்லை ஆனால் இதயத்தில் ஈரம் உண்டு,உங்களுக்கு ?

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ரஹீம் கஸாலி. food என்னங்க ஆளாளுக்கு போட்டோ மாத்திக்கிட்டு இருக்காங்க...

யாராவது ஜோசியர் சொன்னாங்களா..

இதெல்லாம் நல்லநேரம் சதீஷ் தான் காரணமா?

சி.பி.செந்தில்குமார் said...

FOOD said...
சாரிங்கண்ணா,
அரசியல் அப்படின்னா அரசு ஊழியர் வாய திறக்கபடாது.

அடடா.. பிரதமர் வாய் திறக்காததன் ரகசியம் இதானா?

Thirumalai Kandasami said...

திருக்குவளை தீய சக்தியின் வெற்றி ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டு விட்டது ..

சி.பி.செந்தில்குமார் said...

>Thirumalai Kandasami said...

தன் தலையில் தானே மண்ணை வாரி போட்ட கதை இது தானோ?
மண்டையில் மூளையும் ,இதயத்தில் ஈரமும் உள்ள எவனும் இந்த அம்மாவுக்கு ஓட்டு போடா மாட்டான்.
எனக்கு மூளை இல்லை ஆனால் இதயத்தில் ஈரம் உண்டு,உங்களுக்கு ?

சுயேட்சைக்குபோட்டாலும் ஆணவத்துக்குப்போட மாட்டேன்

சி.பி.செந்தில்குமார் said...

Thirumalai Kandasami said...

திருக்குவளை தீய சக்தியின் வெற்றி ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டு விட்டது

கலைஞருக்கு அடுத்த பொற்காலம் ஸ்டார்ட் ஆகிடுச்சு.. தமிழனுக்கு மறுபடியும் கற்காலம்.. அட போங்கப்பா

நிரூபன் said...

சம கால அரசியலை வைத்துப் பல பேரைச் சாடியுள்ளீர்கள். ரசித்தேன். அதிலும், அந்த காற்றுப் போன டயர்.. செம கூத்து. உங்க முன் சில்லைக் கழற்றி, பின்னாலை போடுங்கோ.
ரசித்தேன். நீங்களா இந்த ஓவியத்தை வரைந்தது., நிறையக் கருத்தாளம் பொதிந்துள்ள ஓவியம் அது.

சி.பி.செந்தில்குமார் said...

அண்ணே வரைஞ்சது நான் இல்ல..பெண் சர்வாதிகாரியை அறைஞ்சது மட்டும் நான்

காங்கேயம் P.நந்தகுமார் said...

மூன்றாவது அணி உருவானால் அம்மாவிற்கு சங்கு! கலைஞருக்கு நொங்கு! சூப்பர் தல!

அஞ்சா சிங்கம் said...

இந்த அம்மா எந்த காலத்திலேயும் திருந்தாது கட்சிக்காரன் உண்மையில் பாவம்............

காங்கேயம் P.நந்தகுமார் said...

சாமி சிரிச்சு சிரிச்சு வயிறே புண்ணாகி விடும் போல் உள்ளது. குறுகிய காலம்னா எவ்வளவு? குத்து மதிப்பா 2000 வருஷம் ஆகுமா?

சி.பி.செந்தில்குமார் said...

மக்கள் தான் பாவம்

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
Anonymous said...

ம்..போட்டு தள்ளுங்க

Thenammai Lakshmanan said...

ஒரு ஓட்டை விற்பது, ஐந்து வருடங்களை விற்பதற்குச் சமமான வேதனை. அந்த ஐந்து வருட ஆட்சியில் தவறு ஏதும் நிகழ்ந்தால், ஓட்டை சரியாகப் பயன்படுத்தாத நாம் தான் அதற்குப் பொறுப்பு.

// உண்மைதான் சரியா சொல்லி இருக்கார் நரேஷ் குப்தா..

ஜெய்லானி said...

மக்கள் திருந்தாத வரை ஒன்னும் செய்ய முடியாது

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

" எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் " amma's mind voice speaking!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

FOOD said...
சாரிங்கண்ணா,
அரசியல் அப்படின்னா அரசு ஊழியர் வாய திறக்கபடாது.

அடடா.. பிரதமர் வாய் திறக்காததன் ரகசியம் இதானா?

ஹி.....ஹி......ஹி.....



முடியல!


உங்களுக்கு - வாய்திறக்க!

எனக்கு - வாய் மூட!



( அட சிரிச்சுங்க )

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

செந்தில் சமூக அக்கறையுள்ள பதிவு எழுதி இருக்கார் என்றும் இதில் நடிகைகள் படம் இல்லை என்றும் இத்தால் அனைவருக்கும் அறியத்தருகிறேன்! ( யாரது ' அம்மாவும் நடிகைதானே ' அப்டீன்னு சவுண்டு குடுக்கிறது? அட போங்கப்பா ஐயா வோட நடிப்புக்கு முன்னால அம்மாவின் நடிப்பெல்லாம் தூசி )

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அதென்னமோ, காசிக்குப் போயும் கங்கையிலே குளிக்காத மாதிரியிருக்குது, உங்க இடுகைக்கு வந்து நமீதா, அஞ்சலி படம் பார்க்காதது...!

' இதில் நமிதாவை சேர்த்துக்கல ' சேட்டைக்கரனை மென்மையாக கண்டிக்கிறேன்! ( வன்மையா கண்டிச்சா மட்டும் என்னாகப் போகுது? நடக்கிறது தான் நடக்கும்! அடுத்த முதல்வரும் ஐயாதானே! )

செங்கோவி said...

அம்மா மட்டும் அப்படியே உங்களை மதிச்சு சோபால உட்கார வெச்சுட்டாலும்..// எப்படிய்யா இப்படி கமெண்ட் அடிகிறீரு..கலக்கல்..அப்புறம் அம்மாவோட அந்த படம் கிடைக்கலியா..ஹி..ஹி!

பாலா said...

சூப்பரு...

நான் கார்த்திகேயன்/naaan.karthikeyan said...

இத விட்டு தள்ளுங்க அடுத்த வாரம் 25 தேதி சூப்பர் படங்களா வெளிவருது . வாங்க எது எந்த எந்த தியேட்டரில் வருதுன்னு விசாரிப்போம். யாருக்காவது தெரிந்தால் என்னக்கு மெயில் பண்ணுங்க . சிபி சார் அடுத்த வாரம் ஆபிசுக்கு லீவு கொடுத்துடுங்க மொத்தம் நாலு படம் வருது எல்லாமே செம ஹாட்

திங்கள் சத்யா said...

//குறுகிய காலம்னா எவ்வளவு ? குத்து மதிப்பா 2000 வருஷம் ஆகுமா?//

//வேற யார் பயனடையனும்னு எதிர்பார்க்கறீங்க..? கஷ்டப்பட்டு கொள்ளை அடிக்கறாங்க.. உங்களுக்கு எல்லாம் ஒரு பங்கா குடுக்க முடியும்?//

பிரம்மாதம் பாஸ்!