Tuesday, March 29, 2011

என்னது? பவுன் போட்டு பொண்ணு கட்டிட்டு போகனுமா?

Hilarious political cartoon images
1. ம.தி.மு.க., கொள்கை விளக்க அணிச் செயலர் நாஞ்சில் சம்பத்: 2016ம் ஆண்டு பொதுத் தேர்தலில் வைகோவை முதல்வராக்க, இந்தத் தேர்தலில் குறிப்பிட்ட தொகுதியில் வெற்றி பெற வேண்டுமென கனவு கண்டோம். அந்தக் கனவை கல்லெறிந்து கலைத்துவிட்டனர்.

அண்ணன் 10 சீட்டுக்கே தகிந்தினந்தோம் போட்டுட்டு இருந்தாரு.. அதுக்குள்ள 234 தொகுதிக்கு ஆசப்பட்டா எப்படி? கணக்கு போட்டுக்குங்க.. இன்னும் 50 வருஷம் கழிச்சு வேணா ம தி மு கவுக்கு 25 சீட் கிடைக்கும். ஆனா அது வரை கட்சி இருக்கனும்..

----------------------------

2. தலைமைத் தேர்தல் கமிஷனருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்: இந்தத் தேர்தலிலும் ஓட்டுக்காக பணமும், பொருளும் வழங்க, தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியினர் திட்டமிட்டுள்ளனர். பணம் எடுத்துச் செல்ல, "108' ஆம்புலன்சை பயன்படுத்தப் போவதாக, தகவல்கள் வருகின்றன. இது குறித்து தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதல் உதவி வாகனத்தை மக்களுக்கு முதல் போட உதவியா கொண்டு போறாங்க.. அதுல என்ன தப்பு இருக்கு?கோடிக்கனக்குல பணத்தை அடிப்பாங்க .. அதை விட்டுடுங்க.. ஏதோ எங்களுக்கு 2000 குடுக்கறது உங்களுக்கு பிடிக்காதே..


--------------------------------------------

http://www.movieinf.com/wp-content/images/2009/07/Hansika-Motwani1.jpg
3. சேலம் மாவட்ட தேர்தல் அதிகாரி: சாதாரண சாப்பாடு 35 ரூபாய், அசைவம் 80 ரூபாய், சைவ பிரியாணி 20 ரூபாய், வெரைட்டி ரைஸ் 15, உப்புமா 18, இட்லி இரண்டு 12 ரூபாய், சப்பாத்தி இரண்டு 18 ரூபாய், பூரி செட் 18, பொங்கல் 18, ரோஸ்ட் 20, புரோட்டா 20, வடை 15, மினரல் வாட்டர் 14, மட்டன் பிரியாணி 100, சிக்கன் பிரியாணி 80, வாட்டர் பாக்கெட் 2, டீ 5, காபி 8, கூல் டிரிங்ஸ் 10, ஆம்லெட் 10 ரூபாய் என, உணவு வகைகளுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முக்கியமான ஒண்ணை விட்டுட்டியே நைனா.....சரக்கு..?


---------------------------------------------

4. அ.தி.மு.க., எம்.பி., சிவசாமி பேச்சு: ஒரு நாட்டின் வளர்ச்சி, அனைத்து நாடுகளுடனும் நல்லுறவு வைத்துக் கொள்வதில் தான். ஆனால், அண்டை நாடுகளுடன் நம் உறவு திருப்திகரமாக இல்லை. இந்திய அரசு தன் வெளிநாட்டுக் கொள்கையை கூர்ந்து கவனித்து மாற்றிக் கொள்ள வேண்டியது.

எனக்கென்னமோ ஒரு நாட்டோட வளர்ச்சி ஓட்டோட ரேட்டை வெச்சுத்தான்னு தோணுது.. போன எலக்‌ஷன்ல ரூ 2000. இப்போ ரூ 10,000 என பேசிக்கிறாங்க.. அப்போ 5 மடங்கு வளர்ந்திருக்கு...அடி வாங்குன கைப்புள்ள தமிழனுக்கே இவ்வளவுன்னா அடி குடுக்கற கலைஞருக்கு எவ்வளவோ..?
--------------------------------------------------
http://rianai.com/wp-content/uploads/2009/10/Hansika_Motwani_11-500x750.jpg
-5. ராஷ்ட்ரீய லோக்தளம் தலைவர் அஜித் சிங் பேட்டி: அணு ஒப்பந்தத்தை எங்கள் கட்சி கடுமையாக எதிர்த்தது. இந்த விவகாரத்தில், அரசுக்கு எதிராக வெளிப்படையாக ஓட்டளித்தோம். எனவே, அரசுக்கு ஆதரவளிக்க எங்கள் கட்சி எம்.பி.,க்கள் லஞ்சம் பெற்றதாக வெளியான தகவல் அடிப்படையற்றது.

ஓஹோ உங்க எம் பிக்கள் யாருக்கும் கொடுக்காம  எல்லாத்தையும் நீங்களே சுட்டுட்டீங்களா? இது ரொம்ப தப்பு.. எல்லாரும் சரி சமமா பிரிச்சுக்கனும்.. அது தானே நல்ல இந்தியனுக்கு அடையாளம்..?

----------------------------------
6. பா.ஜ., தேசிய செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் பேட்டி: தமிழகத்தில் ஓட்டு வங்கியைக் கருத்தில் கொள்ளாமல், தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் பா.ஜ., தனித்துப் போட்டியிடுகிறது. தென் மாநிலங்களில், கர்நாடகாவிற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் கட்சியை வலுப்படுத்த தனிக்கவனம் மேற்கொள்ளப்படும்.

 உங்க கட்சி ஆளுங்க தினமும் பேரீட்சை சாப்பிட்டாலும் கட்சி வளர்ச்சி அடையாது...ஏன் இந்த  வேண்டாத வேலை..?

------------------------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjtOYasLEDrghHumtsCvnbBIxJzp_reCPVrV09ykzRsoJDNpWbSsPEm0vMALrexfhWOTBzVU42E0YHAsPeqLN2x-n8e-vqmb_co0TIR0FsSkkMnJoU13BOO3bh3l7PsoZ14xYZi57dbrqg/s1600/HansikaMotwani01.jpg

7. ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் பேச்சு :இந்தியாவில், ஆண்களுடன் ஒப்பிடும் போது, பெண்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதே நிலை நீடித்தால் சமூகத்தில், வேண்டாத விளைவுகள் ஏற்படும்.

ஆமாமா.. ஏற்கனவே சில  பொண்ணுங்க பண்ற அல்டாப்பு தாங்கல... இதுல அவங்களோட பிறப்பு விகிதம் இன்னும் குறைஞ்சிட்டா  அப்புறம் அவங்க ஓவரா ஆடுவாங்க.. பவுன் போட்டு கட்டிட்டு போக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுடும்..

------------------------------------------------------

8. சமூக சேவகி மேதா பட்கர் பேச்சு: அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் ஒரே மேடையில் நிறுத்தி கேள்வி கேட்கும் முறையைக் கொண்டு வரவுள்ளோம். எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்கள் சரியாக செயல்படாத போது, அவர்களை திரும்பப் பெறுவதற்கான உரிமையும் மக்களுக்கு கொடுக்க வேண்டும்.

எங்க ஆளுங்களுக்கு லஞ்சம் கேட்கத்தான் தெரியும்.. கேள்வி கேட்டா பதில் சொல்லத்தெரியாதே...அப்புறம் ரிட்டர்ன் பெறும் உரிமையை மக்களுக்கு குடுத்துட்டா வாரா வாரம் எலக்‌ஷன் வைக்க வேண்டி வந்துடுமே..எவன் இங்கே யோக்கியனா இருக்கான்?

--------------------------------------------------
டிஸ்கி 1 - நடிகைகள் போஸ் குடுக்கறப்ப நேரா நிமிர்ந்து நிக்காம ஏன் கூன் விழுந்த மாதிரி இருக்காங்க?ன்னு ரொம்ப நாளா எனக்கு ஒரு சந்தேகம் உண்டு.. ஹன்சிகா மோத்வானியின் முத ஸ்டில்லை பார்த்ததும் அது க்ளியர் ஆகிடுச்சு.. அப்புறம் அவங்க லிப்ஸ்டிக்,இமைகளின் மேல் போட்ட வண்ணப்பூச்சு,சுடி எல்லாமே ஒரே கலர்ல இருக்கறதைப்பாருங்க..இது தான் மேட்சுக்கு மேட்ச்..ஹி ஹி

டிஸ்கி 2 - திருப்பூர் ஜோதிஜி அண்ணன் எலக்‌ஷன்ல நிக்கறதை முன்னிட்டு கிஃப்டா குடுத்த திருப்பூர் பனியன் தான் மேடம் போட்டிருக்காங்க 2 வது ஸ்டில்லுல...தொடர்ந்து அவர் எல்லா நடிகைகளுக்கும் இதே டைப்ல (ஹி ஹி மாடல் நல்லாருக்குல்லா?)பனியன் வழங்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

டிஸ்கி 3 - மேடத்தோட 3 வது ஸ்டில் பெண்களுக்கான விழிப்புணர்வு ஃபோட்டோ.. இள நரை வந்தாlலோ, கிழ நரை வந்தாலோ கறுப்பு மருதாணி தான் தலைக்கு போடனும்.. விவரம் தெரியாம சிவப்பு மருதாணி போட்டா இப்படித்தான் தலை செம்பட்டை ஆகிடும்..இந்த அரிய தகவல் தெரிவிச்சதுக்காக எனக்கு யாராவது அழகு டிப்ஸ் அழகேசன் விருது கொடுத்தா கூச்சமே இல்லாம வாங்கிக்குவேன்.. ( விருது வாங்க எதுக்கு கூச்சம்?)

66 comments:

Unknown said...

அடி வாங்குன கைப்புள்ள தமிழனுக்கே இவ்வளவுன்னா அடி குடுக்கற கலைஞருக்கு எவ்வளவோ..

>>>>>>

இத்தான்யா டாப்பு ஹிஹி!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

2nd vadai

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

2nd vadai

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

2nd vadai

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

அடி வாங்குன கைப்புள்ள தமிழனுக்கே இவ்வளவுன்னா அடி குடுக்கற கலைஞருக்கு எவ்வளவோ..

>>>>>>

இத்தான்யா டாப்பு ஹிஹி!!

தக்காளிக்கு டாப்னா பிடிக்கும் போல...

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

2nd vadai

7 நிமிஷம் லேட்டா வந்துட்டு...

வைகை said...

ராஷ்ட்ரீய லோக்தளம் தலைவர் அஜித் சிங் பேட்டி: அணு ஒப்பந்தத்தை எங்கள் கட்சி கடுமையாக எதிர்த்தது. //

எந்த அனுவோட ஒப்பந்தம்யா?

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
2nd vadai//

வெளங்கும்!

சி.பி.செந்தில்குமார் said...

வைகை said...

ராஷ்ட்ரீய லோக்தளம் தலைவர் அஜித் சிங் பேட்டி: அணு ஒப்பந்தத்தை எங்கள் கட்சி கடுமையாக எதிர்த்தது. //

எந்த அனுவோட ஒப்பந்தம்யா?


சுஹாசினியோட தங்கச்சி காஃபி வித் அனு

வைகை said...

ஹன்சிகா மோத்வானியின் முத ஸ்டில்லை பார்த்ததும் அது க்ளியர் ஆகிடுச்சு..//

எனக்கு இன்னும் கிளியர் ஆகல...

Unknown said...

கும்மரத்துக்கே பதிவு போடும் விகடகவி ஹிஹி!

வைகை said...

சி.பி.செந்தில்குமார் said...
வைகை said...

ராஷ்ட்ரீய லோக்தளம் தலைவர் அஜித் சிங் பேட்டி: அணு ஒப்பந்தத்தை எங்கள் கட்சி கடுமையாக எதிர்த்தது. //

எந்த அனுவோட ஒப்பந்தம்யா?


சுஹாசினியோட தங்கச்சி காஃபி வித் அனு//

அப்பா..சிபிய கோர்த்து விட்டாச்சு.. இதை பார்த்துட்டு அணு மான நஷ்ட வழக்கு போட்டா நான் பொறுப்பில்லை!

சி.பி.செந்தில்குமார் said...

வைகை said...

சி.பி.செந்தில்குமார் said...
வைகை said...

ராஷ்ட்ரீய லோக்தளம் தலைவர் அஜித் சிங் பேட்டி: அணு ஒப்பந்தத்தை எங்கள் கட்சி கடுமையாக எதிர்த்தது. //

எந்த அனுவோட ஒப்பந்தம்யா?


சுஹாசினியோட தங்கச்சி காஃபி வித் அனு//

அப்பா..சிபிய கோர்த்து விட்டாச்சு.. இதை பார்த்துட்டு அணு மான நஷ்ட வழக்கு போட்டா நான் பொறுப்பில்லை!


அனுமானமா நீங்களே அப்படி ஒரு முடிவுக்கு வந்துட்டா எப்படி?

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

கும்மரத்துக்கே பதிவு போடும் விகடகவி ஹிஹி!

தக்காளி மாதிரி சமூக விழிப்புணர்வு பதிவு எல்லாம் எனக்கு போடத்தெரியாது.. யோவ்.. பதிவு மொக்கைன்னா ஸ்ட்ரைட்டா சொல்றதுக்கென்ன?

Unknown said...

என்னய்யா நீ நல்லவிதமா சொன்னாலும் திட்ற ஹூம் ஹூம்!

சி.பி.செந்தில்குமார் said...

வைகை said...

ஹன்சிகா மோத்வானியின் முத ஸ்டில்லை பார்த்ததும் அது க்ளியர் ஆகிடுச்சு..//

எனக்கு இன்னும் கிளியர் ஆகல...

நந்தலாலா மிஸ்கின் மாதிரி லாங்க் ஷாட்ல கவனமா இருந்தா எப்படி தெரியும்?எப்படி க்ளியர் ஆகும்?ஜம்பு கர்ணன் மாதிரி க்ளோஷப் ஷாட்ல கேமராவை வைங்க.. ( வைகை அந்த அரியர்ஸ் 4 இருந்ததே அதை க்ளியர் பண்ணீட்டீங்களா?)

சி.பி.செந்தில்குமார் said...

>>விக்கி உலகம் said...

என்னய்யா நீ நல்லவிதமா சொன்னாலும் திட்ற ஹூம் ஹூம்!

நீ அம்மா மாதிரியா.. நல்லத சொன்னாலும் எங்களுக்கு நம்ப முடியலையே..?இப்போ கலைஞரும் இலவசம்கறாரு.. அம்மாவும் இலவசம், வெற்றி இலை வசம்கறாங்க.. ஆனா மக்கள் கலைஞரைத்தானே நம்பறாங்க?

Unknown said...

இல வசமா இலை வசமா!
இல்லை வசமா ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

>>விக்கி உலகம் said...



இல வசமா இலை வசமா!
இல்லை வசமா ஹிஹி!


யோவ்,, எனக்கு பயமா இருக்கு.. டி ஆர் ஆகிடாத

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
நிரூபன் said...

2016ம் ஆண்டு பொதுத் தேர்தலில் வைகோவை முதல்வராக்க, இந்தத் தேர்தலில் குறிப்பிட்ட தொகுதியில் வெற்றி பெற வேண்டுமென கனவு கண்டோம். அந்தக் கனவை கல்லெறிந்து கலைத்துவிட்டனர்//

வணக்கம் சகோ, வைகோவிற்கு வாலாட்டத் தெரியவில்லை. அது தான் கல்லெறிந்து கலைத்து விட்டனரோ?

நிரூபன் said...

முதல் உதவி வாகனத்தை மக்களுக்கு முதல் போட உதவியா கொண்டு போறாங்க.. அதுல என்ன தப்பு இருக்கு?கோடிக்கனக்குல பணத்தை அடிப்பாங்க .. அதை விட்டுடுங்க.. ஏதோ எங்களுக்கு 2000 குடுக்கறது உங்களுக்கு பிடிக்காதே..//

ரொம்ப நல்லவங்க சகோ, கோடியாய் அடிச்சாலும் ஒரு சின்ன அமவுண்டை தாறாங்க இல்ல...
அவ்............

நிரூபன் said...

பதிவிற்கு நடுவிலை இருக்கிற பொண்ணிற்கும், தேர்தலுக்கும் என்ன சம்பந்தம்?
இவதான் தேர்தல் இலவசமோ?

நிரூபன் said...

முக்கியமான ஒண்ணை விட்டுட்டியே நைனா.....சரக்கு..?//

இது ரகசியமான விடயம். காதோடு காதாகப் பேச வேணும்..உஸ் சத்தம் போட்டு ஊரைக் கூட்டியா சொல்லுறது.

சி.பி.செந்தில்குமார் said...

நிரூபன் said...

பதிவிற்கு நடுவிலை இருக்கிற பொண்ணிற்கும், தேர்தலுக்கும் என்ன சம்பந்தம்?
இவதான் தேர்தல் இலவசமோ?

என்னை எப்படி வேணும்னாலும் திட்டிக்குங்க அண்ணே.. ஆனா ஃபிகரைப்பற்றி ஒரு வார்த்தை தப்பா பேசுனாலும் நான் மனுஷனா இருக்க மாட்டேன்.. ஹி ஹி

நிரூபன் said...

உங்க கட்சி ஆளுங்க தினமும் பேரீட்சை சாப்பிட்டாலும் கட்சி வளர்ச்சி அடையாது...ஏன் இந்த வேண்டாத வேலை..?//

என்னது பேரீட்சை சாப்பிட்டால் கட்சி வளருமா?
நமீதாவை கொண்டு வந்து குத்தாட்டம் போட வைச்சால் ஓட்டு தானா வந்து சேரும். கட்சியும் ஓகோண்ணு வளரும்!

சி.பி.செந்தில்குமார் said...

நிரூபன் said...

முதல் உதவி வாகனத்தை மக்களுக்கு முதல் போட உதவியா கொண்டு போறாங்க.. அதுல என்ன தப்பு இருக்கு?கோடிக்கனக்குல பணத்தை அடிப்பாங்க .. அதை விட்டுடுங்க.. ஏதோ எங்களுக்கு 2000 குடுக்கறது உங்களுக்கு பிடிக்காதே..//

ரொம்ப நல்லவங்க சகோ, கோடியாய் அடிச்சாலும் ஒரு சின்ன அமவுண்டை தாறாங்க இல்ல...
அவ்............

ஆமா.. பேங்க்கை கொள்ளை அடிக்கப்போறவங்க காவல் காக்கும் நாய்க்கு பிஸ்கெட் போடற மாதிரி..

நிரூபன் said...

இதுல அவங்களோட பிறப்பு விகிதம் இன்னும் குறைஞ்சிட்டா அப்புறம் அவங்க ஓவரா ஆடுவாங்க.. பவுன் போட்டு கட்டிட்டு போக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுடும்..//

பவுண் போட்டு என்னாத்த கட்டிட்டு போக வேணும்?

சி.பி.செந்தில்குமார் said...

நிரூபன் said...

உங்க கட்சி ஆளுங்க தினமும் பேரீட்சை சாப்பிட்டாலும் கட்சி வளர்ச்சி அடையாது...ஏன் இந்த வேண்டாத வேலை..?//

என்னது பேரீட்சை சாப்பிட்டால் கட்சி வளருமா?
நமீதாவை கொண்டு வந்து குத்தாட்டம் போட வைச்சால் ஓட்டு தானா வந்து சேரும். கட்சியும் ஓகோண்ணு வளரும்!

கூடும் கூட்டமெல்லாம் ஓட்டாக மாறி விடும் என்றே பகல் கனவு காண்கின்றனர்..

நிரூபன் said...

நடிகைகள் போஸ் குடுக்கறப்ப நேரா நிமிர்ந்து நிக்காம ஏன் கூன் விழுந்த மாதிரி இருக்காங்க?ன்னு ரொம்ப நாளா எனக்கு ஒரு சந்தேகம் உண்டு.. ஹன்சிகா மோத்வானியின் முத ஸ்டில்லை பார்த்ததும் அது க்ளியர் ஆகிடுச்சு.. அப்புறம் அவங்க லிப்ஸ்டிக்,இமைகளின் மேல் போட்ட வண்ணப்பூச்சு,சுடி எல்லாமே ஒரே கலர்ல இருக்கறதைப்பாருங்க..இது தான் மேட்சுக்கு மேட்ச்..ஹி ஹி//

தேர்தலை நோண்டி நொங்கெடுத்துப் போட்டு, இப்ப நடிகைகள் போட்டோவிலையும் ஒரு ஆராய்ச்சி வேறை... சகோ ரொம்ப பெரிய ஆளய்யா நீங்க.

சி.பி.செந்தில்குமார் said...

நிரூபன் said...

2016ம் ஆண்டு பொதுத் தேர்தலில் வைகோவை முதல்வராக்க, இந்தத் தேர்தலில் குறிப்பிட்ட தொகுதியில் வெற்றி பெற வேண்டுமென கனவு கண்டோம். அந்தக் கனவை கல்லெறிந்து கலைத்துவிட்டனர்//

வணக்கம் சகோ, வைகோவிற்கு வாலாட்டத் தெரியவில்லை. அது தான் கல்லெறிந்து கலைத்து விட்டனரோ?

ஆம்.. மிஸ் ஜெயலலிதாவின் மிஸ்கால்குலேஷன்.. ஒவ்வொரு தொகுதியிலும் 3000 டூ 4000 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் அ தி மு க தோற்கும்.. அப்ப அடிச்சுக்குவார்...

நிரூபன் said...

திருப்பூர் ஜோதிஜி அண்ணன் எலக்‌ஷன்ல நிக்கறதை முன்னிட்டு கிஃப்டா குடுத்த திருப்பூர் பனியன் தான் மேடம் போட்டிருக்காங்க 2 வது ஸ்டில்லுல...தொடர்ந்து அவர் எல்லா நடிகைகளுக்கும் இதே டைப்ல (ஹி ஹி மாடல் நல்லாருக்குல்லா?)பனியன் வழங்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.//

ஆத்தாடி,.... நம்ம கோடை எப் எம்மிலை போடுற திருப்பூர் பனியன் ஜட்டி விளபரத்தை நினைவூட்டியிருக்கிறீர்கள்.
கூர்ந்து....................................................கவனிக்கிறீங்களே!

சி.பி.செந்தில்குமார் said...

நிரூபன் said...



தேர்தலை நோண்டி நொங்கெடுத்துப் போட்டு, இப்ப நடிகைகள் போட்டோவிலையும் ஒரு ஆராய்ச்சி வேறை... சகோ ரொம்ப பெரிய ஆளய்யா நீங்க.

மருந்து தர்றப்ப தேன் தடவி தர்ற மாதிரி.. ஆனா நான் தடவலை...

சி.பி.செந்தில்குமார் said...

நிரூபன் said...



கூர்ந்து....................................................கவனிக்கிறீங்களே

நான் என்ன கூர்மதியனா?

நிரூபன் said...

மேடத்தோட 3 வது ஸ்டில் பெண்களுக்கான விழிப்புணர்வு ஃபோட்டோ.. இள நரை வந்தாlலோ, கிழ நரை வந்தாலோ கறுப்பு மருதாணி தான் தலைக்கு போடனும்.. விவரம் தெரியாம சிவப்பு மருதாணி போட்டா இப்படித்தான் தலை செம்பட்டை ஆகிடும்..இந்த அரிய தகவல் தெரிவிச்சதுக்காக எனக்கு யாராவது அழகு டிப்ஸ் அழகேசன் விருது கொடுத்தா கூச்சமே இல்லாம வாங்கிக்குவேன்.. ( //

இன்று முதல் எங்கள் பதிவுலக இளவலிற்கு அழகு குறிப்பு அழகன் எனும் பட்டத்தையும் விருதினையும் சிலோன் ரசிகர்கள், வாசகர்கள் சார்பில் வழங்கிப் பெரு மகிழ்வடைகிறோம்.

அண்ணன் செந்தில், அழகுக் குறிப்பு அழகன் வாழ்க!

நிரூபன் said...

சகோ, அழகுக் குறிப்பு அழகேசன் வாழ்க....!

அட நம்ம விருதை முன் மொழிய யாராவது வாங்களேன்!

சி.பி.செந்தில்குமார் said...

நிரூபன் said...

சகோ, அழகுக் குறிப்பு அழகேசன் வாழ்க....!

அட நம்ம விருதை முன் மொழிய யாராவது வாங்களேன்!

hi hi ஹி ஹி இதுக்கெல்லாம் யாரும் வர மாட்டாங்க.. நானே முன் மொழிஞ்சு நானே வ்ழி மொழிஞ்சு வெட்கம் இல்லாம வாங்கிக்கறேன்,. ஹி ஹி

Unknown said...

அழகேசன் அல்ல...அழகு கேசன் ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

>>விக்கி உலகம் said...

அழகேசன் அல்ல...அழகு கேசன் ஹிஹி!

என் ஹேர்ஸ்டைல் கொஞ்சம் கேவலமாத்தான் இருக்கும்.. இப்படியா பப்ளிக்கா அவமானப்படுத்தறது?

பாலா said...

விருது தான.... குடுத்துட்டா போச்சு.... :)))

சி.பி.செந்தில்குமார் said...

>>பாலா said...

விருது தான.... குடுத்துட்டா போச்சு.... :)))

அட.. நீங்க தானா? நான் கூட அமலா பாலா என நினைத்தேன்

தமிழ் 007 said...

என்ன தல!

தாப்ஸி மாதிரி வருமான்னு சொன்னீங்க இப்போ நீங்களே...ஹிஹிஹி...ஹிஹிஹி...

நாங்க சொன்னா அது சரியாத்தான் இருக்கும் தல.

சி.பி.செந்தில்குமார் said...

தமிழ் 007 said...

என்ன தல!

தாப்ஸி மாதிரி வருமான்னு சொன்னீங்க இப்போ நீங்களே...ஹிஹிஹி...ஹிஹிஹி...

நாங்க சொன்னா அது சரியாத்தான் இருக்கும் தல.

பழையன் கழிதலும் புதியன புகுதலும்...

test said...

//அண்ணன் 10 சீட்டுக்கே தகிந்தினந்தோம் போட்டுட்டு இருந்தாரு.. அதுக்குள்ள 234 தொகுதிக்கு ஆசப்பட்டா எப்படி? கணக்கு போட்டுக்குங்க.. இன்னும் 50 வருஷம் கழிச்சு வேணா ம தி மு கவுக்கு 25 சீட் கிடைக்கும். ஆனா அது வரை கட்சி இருக்கனும்//
ஹா ஹா ஹா சூப்பர் பாஸ்!

சரியில்ல....... said...

Super. Wait I ll cum with ma computer....

சசிகுமார் said...

செந்தில் வழக்கம்போல உங்கள் கிண்டல் கேலி நையாண்டிகளுடன் பதிவு மிக அருமை

Speed Master said...

a

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

மூணு டிஸ்கி, மூணு ஸ்டில்லு சூப்பர்!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

மேடத்தின் ரெண்டாவது படத்துல, கைய கொஞ்சம் மடக்கியிருக்க கூடாதா?

Unknown said...

//ரிட்டர்ன் பெறும் உரிமையை மக்களுக்கு குடுத்துட்டா வாரா வாரம் எலக்‌ஷன் வைக்க வேண்டி வந்துடுமே//

cps
இது நல்லால்ல...
நல்லாவே இல்ல...
சொல்லிட்டேன் சொல்லிட்டேன்...
(மச்சி ஏன்னு கேளேன்...)

சக்தி கல்வி மையம் said...

50..

சி.பி.செந்தில்குமார் said...

கருண் இன்னைக்கு பதிவு போடலையா?

கவிதை வீதி... // சௌந்தர் // said...

வழக்கம் போல இன்னிக்கும் கலக்கல்..
வாழ்த்துக்கள்..

குறையொன்றுமில்லை. said...

ஆமா, இந்தப்பதிவுக்கும் இந்த பொண்ணுங்களோட படத்துக்கும் என்னங்க
சம்மந்தம். ஒன்னுமே புரியலியே.ஒரு வேளை
என்னைப்போல ஆலுங்களுக்கெல்லாம் இதெல்லாம் புரியாதோ?

MANO நாஞ்சில் மனோ said...

//அண்ணன் 10 சீட்டுக்கே தகிந்தினந்தோம் போட்டுட்டு இருந்தாரு.. அதுக்குள்ள 234 தொகுதிக்கு ஆசப்பட்டா எப்படி? கணக்கு போட்டுக்குங்க.. இன்னும் 50 வருஷம் கழிச்சு வேணா ம தி மு கவுக்கு 25 சீட் கிடைக்கும். ஆனா அது வரை கட்சி இருக்கனும்//

போட்டு தாக்கேய்.....

MANO நாஞ்சில் மனோ said...

//முக்கியமான ஒண்ணை விட்டுட்டியே நைனா.....சரக்கு..?
//

சரக்கை முதல்ல இறக்கு....

MANO நாஞ்சில் மனோ said...

//எனக்கென்னமோ ஒரு நாட்டோட வளர்ச்சி ஓட்டோட ரேட்டை வெச்சுத்தான்னு தோணுது.. போன எலக்‌ஷன்ல ரூ 2000. இப்போ ரூ 10,000 என பேசிக்கிறாங்க.. அப்போ 5 மடங்கு வளர்ந்திருக்கு...அடி வாங்குன கைப்புள்ள தமிழனுக்கே இவ்வளவுன்னா அடி குடுக்கற கலைஞருக்கு எவ்வளவோ..?//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஆ ராசா.....

MANO நாஞ்சில் மனோ said...

//உங்க கட்சி ஆளுங்க தினமும் பேரீட்சை சாப்பிட்டாலும் கட்சி வளர்ச்சி அடையாது...ஏன் இந்த வேண்டாத வேலை..?//

அப்போ பேரீட்சை துன்னா வளர்ச்சி வந்துருமா??? சரி வைகோ அண்ணனை பார்த்தா இந்த தகவலை உடனே சொல்லணுமே...

MANO நாஞ்சில் மனோ said...

//ஆமாமா.. ஏற்கனவே சில பொண்ணுங்க பண்ற அல்டாப்பு தாங்கல...//

குஷ்புகான், கனிமொழி,ஜெயலலிதா பாட்டி இவங்களைதானே சொல்றீங்க...

Anonymous said...

அருமை ! பதிவிற்கு இடையிடையில் இருக்கும் பெண்களைச் சொன்னேன். இப்படி போட்டுவைப் போட்டாப் பதிவை யார்ப் படிப்பா ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பர்ஸ்ட்டு படத்துல இருக்கற ஹன்சிகா ரொம்பவே மெலிஞ்சிட்ட மாதிரி இருக்காரே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////முக்கியமான ஒண்ணை விட்டுட்டியே நைனா.....சரக்கு..?////////

சரக்கு ரேட்டை கெவர்மெண்ட்டுல இருந்தே ஸ்ட்ரெயிட்டா வாங்கி இருப்பாங்க....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////அடி வாங்குன கைப்புள்ள தமிழனுக்கே இவ்வளவுன்னா அடி குடுக்கற கலைஞருக்கு எவ்வளவோ..?/////////

குடும்பத்துக்குலாம் போக மஞ்ச துண்ட தவிர ஒண்ணும் மிஞ்சலியாம்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// ஹன்சிகா மோத்வானியின் முத ஸ்டில்லை பார்த்ததும் அது க்ளியர் ஆகிடுச்சு.. ///////

எனக்கு ஆகல.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////தொடர்ந்து அவர் எல்லா நடிகைகளுக்கும் இதே டைப்ல (ஹி ஹி மாடல் நல்லாருக்குல்லா?)பனியன் வழங்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்./////////

ஏண்ணே இத விட சின்னதா ஒண்ணு போடுவாங்களே, அதுவே நல்லாத்தானே இருந்துச்சு.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நேத்து நாங்கள்லாம் தப்சில இருந்து ஹன்சிக்காவுக்கு மாறுறோம்ன உடனே ஹன்சிக்கா ஸ்டில்சா? நடக்கட்டும் நடக்கட்டும்........