Saturday, March 19, 2011

மோகன்லால்-ன் கிறிஸ்டியன் பிரதர்ஸ் - சினிமா விமர்சனம்


மலையாளப்படமா? ஆஹா.. என நினைப்பவரகள் ஒன் ஸ்டெப் பேக் மேன்.. இது டீசண்ட்டான மலையாளப்படம்.. ( அட போங்கப்பா.) கேரளா கேப்டன் மோகன்லால் நடிச்ச செமத்தியான மசாலா படம்.. டீசண்ட்டான படம்னு சொன்னதும் யாரும் வருத்தப்பட வேண்டாம்.. கனிகா (ஃபைவ் ஸ்டார்),காவ்யா மாதவன்,லட்சுமிராய்  என 3 ஃபிகர்கள் உண்டு.. (இப்பத்தான் முகத்துல பல்பு எரியுது)

தமிழ் சினிமா மாதிரியே கேரளா சினிமாவும் கெட்டு சீரழியுதுன்னு சொல்றது சரியாத்தான் இருக்கு.. ஹீரோவுக்கு ஏகப்பட்ட பில்டப்.. அவர் வர்றப்ப எல்லாம் ஏய்.. தகிட தகிட தகிட என பில்டப் மியூசிக் போடும்போதும் சரி.. ஃபைட் சீனில் காதை கிழிக்கும்படி ரீ ரிக்கார்டிங்கும் சரி  கொலையாக்கொன்னெடுக்கிறாங்க..

யாராவது மோகன்லால் ரசிகர்கள் இருந்தா மன்னிச்சிடுங்கப்பா..(டெயிலி மன்னிப்பு கேட்கறதே நமக்கு பிழைப்பா போகிடுச்சு)கிட்டத்தட்ட 58 வயசான ஹீரோ 21 இளம் பிள்ளை சுப்பையா பாவு  மாதிரி இருக்கற லட்சுமி கூட டூயட் பாடும்போது மனசுக்கு கஷ்டமாத்தான் இருக்கு.. ஹூம் என்ன பண்றது? (இளம்பிள்ளை சுப்பையா பாவு பற்றி அறிய சேலம் மாவட்ட நெசவாள மக்களை தொடர்பு கொள்ளவும் ஹி ஹி)
படத்தோட இயக்குநர் ஜோஷி ஏற்கனவே தமிழ்ல சத்யராஜை வெச்சு ஏர்போர்ட் குடுத்தவர்தான்.இவர் படத்துல வேகமா ஜீப் வந்து கிரீச்சிட்டு நிற்கும் காட்சிகள் அதிகமா இருக்கும்.. நீங்க வேணா நோட் பணி பாருங்க..இந்த படத்துல 17 சீன் அப்படி வருது.. கஷ்ட காலம்டா சாமி..

படத்தோட கதை என்ன?ஒரு மினிஸ்டரோட பொண்ணு கடத்தப்படறா(ங்க).ஒரு கோடி ரூபா பணயத்தொகை..( ரொம்ப கம்மியா இருக்கே..?)மும்பை மாஃபியா கேங்க் கூட தொடர்பு உள்ள மோகன்லால் அவளை மீட்டுட்டு வர ரூ ஒரு கோடியே 10 லட்சம் ஃபீஸ் கேட்கறாரு..( நம்ம நக்கீரன் கோபால் மாதிரி)மீட்டுட்டு வர்றப்ப வில்லனை யாரோ ஷூட் பண்ணிடறாங்க.அது யாரு? ஏன் கொலை பண்றாங்க.. இதை எல்லாம் திரைக்கதை திருப்பங்களோட தாளிச்சு பிழிஞ்சு சொல்லி இருக்காங்க..

கேரளாவுல இது சந்தேகம் இல்லாத ஹிட்தான்.. எல்லா கமெர்ஷியல் அயிட்டங்களும் இருக்கு.3 ஹீரோயின்களுக்கும் தலா ஒரு பாட்டு இருக்கு.. ( சும்மா நாங்க 10 லட்சம் குடுத்துடுவமா?)

காவ்யா மாதவன் கேரளா குழாப்புட்டு மாதிரி இருக்கார்.. ( தொட்டு பார்த்தியா?ன்னு கேட்கக்கூடாது.. சும்மா ஒரு உத்தேசமா சொல்றது தான்)லட்சுமி ராய் அகர்வால் ஸ்வீட்ஸ் கோதுமை அல்வா மாதிரி நெகு நெகுன்னு இருகார்.. ( நெகமம் கந்த சாமி மன்னிக்க)கனிகா நல்லா அழகா இருந்தாலும் இந்த 2 யூத்துங்க முன்னால எடுபடல...(அடடா...ஜஸ்ட் மிஸ்)

நம்ம சித்தப்பா சரத் குமார் ஒரு கெஸ்ட் ரோல்ல கம்பீரமா வர்றார்.. வந்த வரை நல்லா பண்ணி இருக்கார்..


உத்தேசமா புரிஞ்சதுல நல்ல வசனங்கள்

1.  என்ன அநியாயம்ங்க இது..? 3 கோடி ரூபா மினிஸ்டர்க்கு தர்றீங்க.. அவரோட பி ஏ.. எனக்கு 3 % தர இப்படி யோசிக்கறீங்க?

2. சார்.. இந்த ஃபோட்டோக்களை பாருங்க.. ஏதாவது ஒரு பொண்ணை செலக்ட் பண்ணுங்க..

ஏம்ப்பா.. வேலைக்காரிக்குக்கூட இப்படி செலக்‌ஷன் பண்ணனுமா?

நீங்க சம்பளமே தர வேண்டியதில்லை.. தாலி மட்டும் கட்டீட்டா போதும்..

3.  இந்த ரகசியத்தை 3 வது ஆள் யார் கிட்டேயும் சொல்லீடாதீங்க..

ஹூம்.. 4 வது ஆளே மாடில நின்னு கேட்டுட்டான்.. கோவிந்தா..

என்ன சொன்னீங்க?

இல்லை.. அந்த ஈஸ்வரன் மேல இருந்து கேட்டுட்டு இருக்கான்னு சொல்ல வந்தேன்..

4. நீங்க யாரு? 

நான் மினிஸ்டரோட வுட் பீ

அவர் அப்படிப்பட்ட ஆள் இல்லையே...

சாரி.. மினிஸ்டரோட மகளோட வுட் பீ.. ஹி ஹி உளறீட்டேன்..


5. குட் மார்னிங்க் சார்...

இப்போ மணி என்ன?

சரி குட் ஈவினிங்க்.. இப்போ அதுவா முக்கியம்?

இயக்குநருக்கு சில கேள்விகள் ( தைரியமா  என்ன வேணாலும் கேட்கலாம்.. ஏன்னா அவருக்கு தமிழ் தெரியாது... எனக்கு மலையாளம் தெரியாது  ஹி ஹி )

1. மோகன் லால் அடிக்கடி டேய் ஆம்பளையா இருந்தா என் மேல கை வெச்சு பார்டா அப்படின்னு கேவலமான பஞ்ச் டயலாக்கை படம் பூரா 8 தடவை சொல்றார்.. வில்லன் பாட்டுக்கு சும்மா இருந்தாக்கூட எதுக்கு இப்படி தூண்டி விட்டு அடி வாங்கனும்? வேண்டுதலா..?

2. பணயத்தொகை ரூ ஒரு கோடி ஒரு பேக்ல தரப்படுது.. அந்த அசமஞ்சம் வில்லன் அதே பேக்லயே அதை வெச்சிருப்பானா? மாத்திக்க மாட்டான்..? அதுல ரகசிய ஒட்டுக்கேட்கும் கருவி இருக்கான்னு பார்க்க மாட்டானா?

3. பாஸ்போர்ட்டை யாராவது கோட் பாக்கெட்ல மேலே பிக் பாக்கெட் அடிக்க ஈஸியா இருக்கற மாதிரி வைப்பாங்களா?

4. வில்லனோட ஆட்கள் திலீப்பை சுற்றி வளைக்கறப்ப உன் பாஸ்போர்ட் எங்கே?ன்னு கேட்கவே இல்லை.. அவங்களே கை விட்டு எடுத்துக்கறாங்க.. அது எப்படி?

ஈரோட்ல சண்டிகா தியேட்டர்ல இந்தப்படம் பார்த்தேன். இங்கே ஒரு வாரம் ஓடும், கேரளாவுல 50 நாள் ஓடும்.


Cast:Mohanlal, Suresh Gopi, Dileep, Sarath Kumar, Lakshmi Rai, Kanika, Lakshmi Gopalswamy, Saikumar, Biju Menon, Vijayaraghavan, Suresh Krishna, Kunchan, Anand, Suraj Venjaramood, Shobha Mohan
Direction:Joshy
Production: A.V. Anoop, Maha Subair
Music:Deepak Dev

47 comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

vada

Unknown said...

விமர்சனத்தின் ஊடே கிண்டலும் நையாண்டியும் விளையாடுது...

சி.பி.செந்தில்குமார் said...

ஒரு வடையே வடை சாப்பிடுதே.. அடடே ஆச்சரியக்குறி

சி.பி.செந்தில்குமார் said...

FOOD said...

அண்ணன் முந்திட்டாருல

விடுங்க.. முதல்ல அண்ணன்.. அடுத்து சின்ன அண்னன்..

சி.பி.செந்தில்குமார் said...

>>FOOD said...

மலையாளப்படமா? ஆஹா.. என நினைப்பவரகள் ஒன் ஸ்டெப் பேக் மேன்.. இது டீசண்ட்டான மலையாளப்படம்.. ( அட போங்கப்பா.) கேரளா கேப்டன் //மோகன்லால் நடிச்ச செமத்தியான மசாலா படம்.. டீசண்ட்டான படம்னு சொன்னதும் யாரும் வருத்தப்பட வேண்டாம்.. கனிகா (ஃபைவ் ஸ்டார்),காவ்யா மாதவன்,லட்சுமிராய் என 3 ஃபிகர்கள் உண்டு.. (இப்பத்தான் முகத்துல பல்பு எரியுது)//
ஆரம்பமே அட்டகாசம்.

ஹி ஹி நன்றி.. ரன்னிங்க் ரேஸ்ல ஜெயிக்கறமோ இல்லையோ ஓப்பனிங்க் கலக்கிடனும்.. அப்பத்தான் 4 பேர் பார்ப்பாங்க.. ஹி ஹி

Unknown said...

//வில்லனோட ஆட்கள் திலீப்பை சுற்றி வளைக்கறப்ப உன் பாஸ்போர்ட் எங்கே?ன்னு கேட்கவே இல்லை.. அவங்களே கை விட்டு எடுத்துக்கறாங்க.. அது எப்படி?//

ஒரு வேளை சென்சார்ல கட் பண்ணி இருப்பாங்களோ?

சி.பி.செந்தில்குமார் said...

>>FOOD said...

நம்ம சித்தப்பா சரத் குமார் ஒரு கெஸ்ட் ரோல்ல கம்பீரமா வர்றார்.. //
சித்தி கோவிச்சுக்க மாட்டாங்களா ? # டவுட்டு

சரத்தோட முத சம்சாரம் மாயா கூட கோவிச்சுக்க மாட்டாங்க..

Unknown said...

// ரன்னிங்க் ரேஸ்ல ஜெயிக்கறமோ இல்லையோ ஓப்பனிங்க் கலக்கிடனும்.//


ரெண்டுமே நடந்தாச்சு, கவலைப்படாதே சகோதரா...

சி.பி.செந்தில்குமார் said...

>>பாரத்... பாரதி... said...

விமர்சனத்தின் ஊடே கிண்டலும் நையாண்டியும் விளையாடுது...

அவை இரண்டும் என் உடன் பிறப்பே..போர் அடிக்காமல் படிக்க அது இருப்பது சிறப்பே,,,

சி.பி.செந்தில்குமார் said...

பாரத்... பாரதி... said...

//வில்லனோட ஆட்கள் திலீப்பை சுற்றி வளைக்கறப்ப உன் பாஸ்போர்ட் எங்கே?ன்னு கேட்கவே இல்லை.. அவங்களே கை விட்டு எடுத்துக்கறாங்க.. அது எப்படி?//

ஒரு வேளை சென்சார்ல கட் பண்ணி இருப்பாங்களோ?

ம்க்கும்.. எதை கட் பண்ணனுமோ அதையே இவங்க கட் பண்றதில்லை..

தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணே! உங்க கிட்டயிருந்து சுத்த மலையாளத்தை எதிர்பாக்கல.... ம்ம்க்ஹும்....


எனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - இரண்டு

சி.பி.செந்தில்குமார் said...

பாரத்... பாரதி... said...

// ரன்னிங்க் ரேஸ்ல ஜெயிக்கறமோ இல்லையோ ஓப்பனிங்க் கலக்கிடனும்.//


ரெண்டுமே நடந்தாச்சு, கவலைப்படாதே சகோதரா...

பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்ன மாதிரி நன்றி அண்ணே

சி.பி.செந்தில்குமார் said...

தமிழ்வாசி - Prakash said...

அண்ணே! உங்க கிட்டயிருந்து சுத்த மலையாளத்தை எதிர்பாக்கல.... ம்ம்க்ஹும்....

EXPECT THE UN EXPECTED. ஹி ஹி

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ai........ vada for me. please wait.....

i am working here.... i'll come later...

ராஜகோபால் said...

"மினிஸ்டரோட மகளோட வுட் பீ.. "

இத யாரு சொன்னது

சக்தி கல்வி மையம் said...

நீங்க ஏன் லத்திகா படம் பார்க்கல...

சி.பி.செந்தில்குமார் said...

ராஜகோபால் said...

"மினிஸ்டரோட மகளோட வுட் பீ.. "

இத யாரு சொன்னது

திலீப்.. மினிஸ்டர் மகள் காவ்யா மாதவனோட லவ்வர்

சி.பி.செந்தில்குமார் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

நீங்க ஏன் லத்திகா படம் பார்க்கல...

மன்னிச்சுக்குங்க.. ஹீரோயின் ஃபிகர் சரி இல்லைன்னா பார்க்கமாட்டேன் ஹி ஹி அதுவும் இல்லாம ஹீரோ சகிக்கல..

Unknown said...

தல மலையாளபடத்த ஐ மீன் டீசண்டான மலையாளபடத்தை கூட விட்டு வைக்கல, நாந்தான் லத்திகா படம் பார்த்து நொந்துட்டேன், உங்களுக்கு முன்னாடி விமர்சனம் போட்டு உங்களையே ஜெயிச்சுட்டேன்ல, எப்படி :-)

சக்தி கல்வி மையம் said...

சி.பி.செந்தில்குமார் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

நீங்க ஏன் லத்திகா படம் பார்க்கல...

மன்னிச்சுக்குங்க.. ஹீரோயின் ஃபிகர் சரி இல்லைன்னா பார்க்கமாட்டேன் ஹி ஹி அதுவும் இல்லாம ஹீரோ சகிக்கல..
--- தானைத் தலைவர் பவர்ஸ்டார் படத்தை கின்டல் பன்றீங்களா?

தமிழ் 007 said...

வந்துட்டேன்!
பாத்துட்டேன்!
போட்டுட்டேன்!
போயிட்டேன்!

சி.பி.செந்தில்குமார் said...

>>இரவு வானம் said...

தல மலையாளபடத்த ஐ மீன் டீசண்டான மலையாளபடத்தை கூட விட்டு வைக்கல, நாந்தான் லத்திகா படம் பார்த்து நொந்துட்டேன், உங்களுக்கு முன்னாடி விமர்சனம் போட்டு உங்களையே ஜெயிச்சுட்டேன்ல, எப்படி :-)


ayyayyoo அய்யய்யோ தோத்துட்டனா.. அய்யகோ.. நான் என் செய்வேன்

Unknown said...

ஆனா தல படம் பார்க்க போகறதுக்கு முன்னாடி நல்லா யோசிக்சுக்கோங்க, சொல்லிபுட்டேன் ஆமா :-)

சி.பி.செந்தில்குமார் said...

>>தமிழ் 007 said...

வந்துட்டேன்!
பாத்துட்டேன்!
போட்டுட்டேன்!
போயிட்டேன்!

இவர் நல்லவர் ஆச்சே.. டபுள் மீனிங்க்ல எல்லாம் கமெண்ட் போட மாட்டாரே

சி.பி.செந்தில்குமார் said...

>>> Delete
Blogger இரவு வானம் said...

ஆனா தல படம் பார்க்க போகறதுக்கு முன்னாடி நல்லா யோசிக்சுக்கோங்க, சொல்லிபுட்டேன் ஆமா :-)


இவ்வளவு தூரம் எச்சரிச்சும் போவேனா?

சி.பி.செந்தில்குமார் said...
This comment has been removed by the author.
Unknown said...

present ஆபிசர்

Unknown said...

ஏன் நண்பா இந்த நாதாரி எப்பவும் தமிழன கலாய்கரதையே தொழிலா வச்சிருக்கு இது படத்த போட்டு இருக்கியே!

சி.பி.செந்தில்குமார் said...

யோவ்.. தக்காளி.. எதுக்கு இப்ப பிரச்சனை பண்றே.. சினிமாவை சினிமாவா மட்டும் பார்க்கவும்

Unknown said...

சினிமா தான்யா எல்லா விஷயத்துக்கும் முன்னோடி ஹி ஹி!

சி.பி.செந்தில்குமார் said...

நீ அடங்க மாட்டே.. வா உன் பிளாக் போலாம் ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...


--- தானைத் தலைவர் பவர்ஸ்டார் படத்தை கின்டல் பன்றீங்களா?

சாரி கருண்.. நீங்க அவர் ரசிகர்னு தெரியாது

Unknown said...

நீர் நான் சொல்வது தவறு என்று நினைத்தால் இதோடு நிறுத்திக்கொள்கிறேன் நண்பா!

சி.பி.செந்தில்குமார் said...

என்ன மேட்டர் விளக்கமா சொல்லய்யா

shanmugavel said...

//தமிழ் சினிமா மாதிரியே கேரளா சினிமாவும் கெட்டு சீரழியுதுன்னு சொல்றது சரியாத்தான் இருக்கு.. //

தமிழ்நாட்டுக்கு வந்து வந்து அவங்களும் கத்துக்குனாங்க போல

சி.பி.செந்தில்குமார் said...

shanmugavel said...


தமிழ்நாட்டுக்கு வந்து வந்து அவங்களும் கத்துக்குனாங்க போல

haa haa ஹா ஹா எப்படியோ தமிழன் முன்னோடியா இருந்தா சரி.. ஊழல்லயும்..கேவலமான சினிமாவுலயும்

Unknown said...

சொல்லுங்க ஆப்பீசர் கேட்டுக்கறேன் ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

ஏதோ மோகன்லால் மேட்டர் சொன்னியே விளக்கம் பிளீஸ்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

மளையாள படன்னு வந்தா..
மளையாளத்தில் இது மாதிரி படம் கூட வருதா..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தமிழ், தெலுங்கு, மளையாளம், இந்தி, இங்லீஸ் எந்த படமும் விடுறது இல்லையா..

கலக்குங்க நண்பரே..

Unknown said...

அந்தாளு அவரோட படத்துல தமிழன தாக்குரமாதிரி நெறைய விஷயங்கள் வேணும்னே வைப்பான்யா அதத்தான் சொன்னேன் ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

haa haa ஹா ஹா தாக்கற மாதிரிக்கே பதட்டமா? இலங்கைல உண்மையாவே தமிழன் தாக்கப்பட்டான். இன்னும் கலைஞரும் காங்கிரசூம் ஆட்சி பண்ணிட்டுத்தான் இருக்காங்க.. தமிழனுக்கு சகிப்புத்தன்மை ஜாஸ்தி

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

SUPER REVIEW AS USUAL YOUR STYLE .THE WAY OF PRESENTATION MADE LAUGH A LOT.SUPER.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

I COULDN'T UNDERSTAND NAKKEERAN GOPAL MATTER

Senthil said...

lakshmi gopalaswamy and lakshmiroy

still u publishes.

u didnt mentioned abt lakshmi gopalaswamy .

so 4 figures??

davuttu

senthil, doha

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////தமிழ் சினிமா மாதிரியே கேரளா சினிமாவும் கெட்டு சீரழியுதுன்னு சொல்றது சரியாத்தான் இருக்கு.. ஹீரோவுக்கு ஏகப்பட்ட பில்டப்.. அவர் வர்றப்ப எல்லாம் ஏய்.. தகிட தகிட தகிட என பில்டப் மியூசிக் போடும்போதும் சரி.. ஃபைட் சீனில் காதை கிழிக்கும்படி ரீ ரிக்கார்டிங்கும் சரி கொலையாக்கொன்னெடுக்கிறாங்க../////

பின்னே டாகுடருக்கு சிலை வெச்சவனுங்க எப்படி இருப்பானுங்க? இனி மலையாள சினிமா நல்லா வெளங்கிரும்....

செங்கோவி said...

அது என்னதுய்யா இலம்பிள்ளை..இதுக்காக நாங்க ஈரோடுக்கா வர முடியும்..சொல்லும்யா..சரிப்பட்டு வராது, சரிப்பட்டு வராதுன்னு சொல்றாங்க..எதுக்கு சரிப்பட்டு வராதுன்னு சொல்ல மாட்டேங்கிறாளே..காவ்யா ம்!..லட்சுமி ம்ம்!