Monday, March 14, 2011

ஆட்சியை கலைப்பது கவர்னர் உரிமை-ஆட்சியை கலாய்ப்பது பதிவர் கடமை

http://thenaali.com/cpanel/Editor/images/articles/thenaali%20choice/thenaali%20cartoon/cartoon_feb_17.jpg 

1. பத்திரிகைச் செய்தி: சுப்ரீம் கோர்ட்டுக்கு விரைவில் பதிலளிக்க வேண்டிய சூழ்நிலை சி.பி.ஐ.,க்கு ஏற்பட்டிருக்கிறது. அதனால், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக, தி.மு.க., எம்.பி.,யும், முதல்வர் கருணாநிதியின் மகளுமான கனிமொழியிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.

சும்மா கண் துடைப்பு விசாரனை பண்ணுனா நாங்க நம்பிடுவோமாக்கும்?முதல்ல கலைஞர் டி விக்கு சீல் வெச்சு விசாரனை பண்ற வழியைப்பாருங்க...


-------------------------------------------

2. "டிவி' நிகழ்ச்சி தொகுப்பாளரான அரவாணி ரோஸ்: தி.மு.க., அரசில் எந்த திருநங்கைக்கும் அரசு பணி வழங்கப்படவில்லை. அ.தி.மு.க., ஆட்சியின் போது திருநங்கையர்கள் மூன்று பேருக்கு ஜெயலலிதா அரசு பணி வழங்கினார். கருணாநிதிக்கு எதிராக என்னை நிறுத்தினால் போட்டியிடுவேன்.

அதுவுமே அம்மா எதேச்சையா குடுத்திருப்பாரு..அல்லது கலைஞர் ஆட்சியில் இல்லாதது என் ஆட்சியில் நடந்ததுன்னு காட்ட குடுத்திருப்பாரு.. எப்படியோ நல்லது நடந்தா சரிதான்.


-------------------------------------------

3. அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா: கபட நாடகம் நடந்து முடிந்தாகிவிட்டது. இறுதியாக, குட்டு வெளிப்பட்டு விட்டது. அனைவருக்கும் தெரியும் வண்ணம் உண்மை வெளிவந்து விட்டது. "ஸ்பெக்ட்ரம்' ஊழல் மூலம் கிடைத்த பணத்தை, தங்களுக்குள் பங்கு போட்டுக் கொண்ட தி.மு.க., - காங்கிரஸ், தங்கள் வேறுபாட்டைப் போக்கி, தமிழக சட்டசபை தேர்தல் தொகுதிப் பங்கீட்டை முடித்துள்ளன.

ஏம்மா ,சும்மா நடிக்காதீங்க.. 50 சீட்டுக்கு ஓக்கே சொல்லி இருந்தா அவங்க கூட நீங்க கூட்டணி வெச்சிருப்பீங்க.. பச்சைக்கலர் டிரஸ் போட்டுட்டு ஏன் இப்படி பச்சோந்தி மாதிரி பேசறீங்க?


------------------------
http://inthiya.in/ta/wp-content/uploads/2011/02/kanimozhi-rasa-cartoon.jpg
4, பா.ஜ., மாநில துணைத் தலைவர் எச்.ராஜா பேட்டி: குரல் வளையை நசுக்குவது போல காங்கிரஸ் நடந்து கொண்ட பிறகும், அக்கட்சியுடன் தி.மு.க., கூட்டணி அமைத்துள்ளது. ஊழலின் ஊற்றுக்கண்ணாக உள்ள காங்கிரஸ் செய்த ஊழலில் நான்கில் ஒரு பங்கு தி.மு.க.,விற்கும் உண்டு.

 என்னது? வெறும் 25 % தானா? எங்க தானைத்தலைவர் அந்த அளவுக்கு இறங்கி வர மாட்டாரே.. அட்லீஸ்ட் பாதிக்குப்பாதியாவது வாங்கி இருப்பாரே,...


-------------------------------------------

5. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அகில இந்திய பொதுச் செயலர் பிரகாஷ் கராத் பேச்சு: இந்திய மக்கள் முன் இப்போது மிகப் பெரிய இரு பிரச்னைகள் உள்ளன. ஒன்று மிகப் பெரிய ஊழல், மற்றொன்று விலைவாசி உயர்வு. இந்த இரு பிரச்னைகளுக்கு காரணம், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசும், மாநிலத்தில் தி.மு.க., அரசும் தான்.

பிரச்சனை  என்ன?ன்னு எல்லாருக்கும் தெரியுது.. ஆனா அதுக்கான தீர்வு என்ன?ன்னு தான் யாருக்கும் தெரியல...

-------------------------------------------

6. முன்னாள் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா பேட்டி:பணத்திற்கும், பிரியாணிப் பொட்டலத்திற்கும், மது பானத்திற்கும் ஓட்டுகளை அடகு வைக்கும் நிலை இனியும் தொடரக்கூடாது. "என் ஓட்டு விற்பனைக்கல்ல' என்பதை ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் மக்கள் புரிய வைக்க வேண்டும்.

 அது சரி.. இதையும் ஓ சி ல குடுத்து எங்களை வேடிக்கை பார்க்க சொல்றீங்களா?வந்த வரை லாபம்னு வாங்கி போட்டுட்டு போய்ட்டே இருக்க வேண்டியதுதான்.

--------------------------------------------
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjL4EwVTbqM3pj2a1mwqJSLSRleRya6cAr7Dr9byyS4upk3VTKVAtha58gs7yKAHLuX82VxrHxzFRlCz3jn0fRngyXpRDVVLCbJDuRUhuIxcW2gZkBr_MPjv56-mLMnb1VglkfvPe3pcBg/s400/image009.jpg
7. புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி பேட்டி:சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் போட்டியிட இரண்டு தொகுதிகள் கேட்டோம். ஆனால், ஒரு தொகுதி மட்டும் தருவதாகக் கூறினர். எனவே, தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேறி, 40 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளோம்.

ஹா.. ஹா.. ஹா.. இருங்க என்னால சிரிப்பை அடக்க முடியல... எங்க தலைவர் ஒரு சீட் பிச்சை போட்டதை வாங்காம இப்படி சுய மரியாதை அது இதுன்னு ஏன் சார்  உடம்பை கெடுத்துக்கறீங்க? எங்க அண்ணன் ராம் தாசை பார்த்தீங்களா? எவ்வளவு கேவலப்படுத்தினாலும் ஒண்ணுமே தெரியாத மாதிரி , எதுவுமே நடக்காதது மாதிரி சிரிச்சுட்டே போஸ் குடுப்பாரு.. நீங்க இன்னும் வளரனும் தம்பி...

----------------------------------------
8. இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலர் டி.ராஜா பேச்சு: ஆண்களுக்கும், பெண்களுக்கும் சம உரிமை வழங்கப்படாத எந்த ஒரு நாகரிகமும் மனித நாகரிகமாகவே ஏற்றுக் கொள்ளப்படாது. அதனால், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவதில் இன்னும் கால தாமதம் கூடாது. மேலும், அதை தள்ளிப் போடுவதை அனுமதிக்க முடியாது. விரைவில், மசோதா நிறைவேறிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது.

ஆமாங்க ..அப்படித்தான் கடந்த 25 வருஷமா எல்லாரும் நம்பறாங்க... இன்னும் 25 வருஷம் நம்புனா என்ன ஆகிடும்?

---------------------------------------
9. பா.ஜ., செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் பேச்சு: நிதி நிலை அறிக்கையில், கறுப்புப் பணம் தொடர்பான எந்த விவரத்தையும், அரசு அறிவிக்கவில்லை. குறைந்தபட்சம் வெளிநாட்டில் எவ்வளவு கறுப்புப் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது, எத்தனை பேர் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர், என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பன போன்ற விவரங்களையாவது அரசு வெளியிட வேண்டும்.

அது சரி.. அதை வெளியிட்டா எங்களுக்கு எப்படி வருமானம் வரும்?னு காங்கிரஸ் கேட்குமே..?


10. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்மூத்த தலைவர் பிருந்தா கராத் பேச்சு: விலை உயர்வு என்பது சட்டப்பூர்வமாக அறிவிக்கப்படாத வரி போல் உள்ளது. இந்த பட்ஜெட் பணக்காரர்களுக்கும், கம்பெனிக் காரர்களுக்கும் தான் பயனுள்ளதாக இருக்கும். மருத்துவமனைகள், ரத்த பரிசோதனை மையங்களுக்கு கூட, இந்த பட்ஜெட்டில், 5 சதவீத சேவை விதிக்கப்பட்டுள்ளது.நோய் வந்தால் கூட வரி விதிக்கப்படும் என்பது கொடுமையானது.

ஏழைகளுக்கும் தேர்தல் சமயங்களிலே ஏதாவது நல்லது செய்வாங்க , கவலைப்படாதீங்க... 

டிஸ்கி - சனி ஞாயிறு நெட் பக்கம் வராதவர்களுக்காக  என் முன் தினப்பதிவுகள்

1. சினேகா-வின் பவானி - சினிமா விமர்சனம்

2. WORLD INVASION - ஹாலிவுட் சினிமா விமர்சனம்

3. பிரகாஷ்ராஜ்-ன் அன்வர் - கோவை குண்டு வெடிப்பு பின் புலக்கதை - சினிமா விமர்சனம்

4. ஆ...!! அனுஷ்காவா அப்படி. ? .ம்ஹூம் ..இருக்காது. நான் நம்ப ... 

 

 

49 comments:

சி.பி.செந்தில்குமார் said...

வாங்க சார்.. நேத்து நான் பிளாக்ச் பக்கமே வர்லை.. சாரி.. இன்னைக்கு வர்றேன்

வைகை said...

ஏழைகளுக்கும் தேர்தல் சமயங்களிலே ஏதாவது நல்லது செய்வாங்க , கவலைப்படாதீங்க... //

அதுக்குதான் வோட்டுக்கு பணம் கொடுக்கம்ல...

வைகை said...

ஆமாங்க ..அப்படித்தான் கடந்த 25 வருஷமா எல்லாரும் நம்பறாங்க... இன்னும் 25 வருஷம் நம்புனா என்ன ஆகிடும்? //

அதவிடுங்க சிபி.. நீங்க மகளிர் இட ஒதுக்கீட ஆதரிக்கிறீர்களா இல்லையா?

வைகை said...

எதுவுமே நடக்காதது மாதிரி சிரிச்சுட்டே போஸ் குடுப்பாரு.. நீங்க இன்னும் வளரனும் தம்பி...//

அப்பறம் அந்த மணமகன் மணமகள விட்டீங்க... ஹி ஹி

வைகை said...

சும்மா கண் துடைப்பு விசாரனை பண்ணுனா நாங்க நம்பிடுவோமாக்கும்?முதல்ல கலைஞர் டி விக்கு சீல் வெச்சு விசாரனை பண்ற வழியைப்பாருங்க//


இத பண்ணுனா.. அப்புறம் நீங்க நாளைய இயக்குனர் விமர்சன பதிவு போடமுடியாது.. ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

வைகை said...

ஆமாங்க ..அப்படித்தான் கடந்த 25 வருஷமா எல்லாரும் நம்பறாங்க... இன்னும் 25 வருஷம் நம்புனா என்ன ஆகிடும்? //

அதவிடுங்க சிபி.. நீங்க மகளிர் இட ஒதுக்கீட ஆதரிக்கிறீர்களா இல்லையா?

100% ஆதரிக்கறேன்.. என் பிளாக்ல கூட எப்பவும் மகளிர் ஃபோட்டோஸ் இருக்குமே..( ஆனா கமெண்ட்ஸ்ல மகளிர் கூட்டம் தான் இருக்காது,.. ஹி ஹி )

சி.பி.செந்தில்குமார் said...

வைகை said...

சும்மா கண் துடைப்பு விசாரனை பண்ணுனா நாங்க நம்பிடுவோமாக்கும்?முதல்ல கலைஞர் டி விக்கு சீல் வெச்சு விசாரனை பண்ற வழியைப்பாருங்க//


இத பண்ணுனா.. அப்புறம் நீங்க நாளைய இயக்குனர் விமர்சன பதிவு போடமுடியாது.. ஹி ஹி

ஹா ஹா நல்ல எண்ணம்...

ராஜி said...

உள்ளே வரலாமா?

ரஹீம் கஸ்ஸாலி said...

வைகோ பற்றி ஜெயலலிதா அடிக்கும் போட்டோ கமென்ட் சூப்பர்

சி.பி.செந்தில்குமார் said...

>>ராஜி said...

உள்ளே வரலாமா?

உத்தரவின்றி உள்ளே வா(ங்க)

சி.பி.செந்தில்குமார் said...

ரஹீம் கஸாலி said...

வைகோ பற்றி ஜெயலலிதா அடிக்கும் போட்டோ கமென்ட் சூப்பர்

ம் ம் இன்னும் போகப்போகப்பாருங்க...செம காமெடியா இருக்கும் அம்மாவோட அணுகுமுறை

ராஜி said...

ஐயோ அரசியலா? அது சாக்கடையாச்சே! ரொம்ப நாறுமே! எல்லாருமா சேர்ந்து சுத்தம் செஞ்சு வைங்க. நான் அப்பாலிக்கா வரேன்

ராஜி said...

பதிவு அருமை, சூப்பர்,Nice, marvellous,(ஆனால், எனக்குதான் ஒரு மண்ணும் புரியலை- உங்க பதிவை சொல்லலை. அரசியல் என்றுமே எனக்கு விளங்காதது)

தமிழ் 007 said...

இப்போ கவர்ச்சி குறைந்து அடிக்கடி அரசியல் வாடை அடிக்கிறதே!

தேர்தல் நெருங்குவதாலா?

தமிழ் 007 said...

கமென்ட் எல்லாம் சூப்பர்.

சி.பி.செந்தில்குமார் said...

>>தமிழ் 007 said...

இப்போ கவர்ச்சி குறைந்து அடிக்கடி அரசியல் வாடை அடிக்கிறதே!

தேர்தல் நெருங்குவதாலா?

இல்லை.. நிறைய பேர் என்னை உதைக்க நெருங்குவதால்.. ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

>>ராஜி said...

ஐயோ அரசியலா? அது சாக்கடையாச்சே! ரொம்ப நாறுமே! எல்லாருமா சேர்ந்து சுத்தம் செஞ்சு வைங்க. நான் அப்பாலிக்கா வரேன்

நோகாமல் நோம்பு கும்பிட நினைக்கும் தமிழச்சி வாழ்க

சி.பி.செந்தில்குமார் said...

>>ராஜி said...

பதிவு அருமை, சூப்பர்,Nice, marvellous,(ஆனால், எனக்குதான் ஒரு மண்ணும் புரியலை- உங்க பதிவை சொல்லலை. அரசியல் என்றுமே எனக்கு விளங்காதது)

பல சமயங்களில் பெண்களின் உணர்வுகளும்,எண்ணங்களும் கூட ஆண்களுக்கு புரிவதில்லை.. ஆனாலும் ஆண்கள் பெண்களை ஒதுக்குவதில்லை..

செங்கோவி said...

வைகோ கமெண்ட் சூப்பர் தல!

ராஜி said...

பெண்கள் வீட்டை ஒழுங்கா கவனிச்சு பிள்ளைகளை நல்லவர்களாக, நேர்மையானவர்களாகவும் வளர்த்தாலே போதும். நாடு சுபிட்சமடையும். ஆகவே பெண்களுக்கு முதல்ல வீட்டை திருத்தும் பணி முடியட்டும் அப்புறமா நாட்டை திருத்த வரோம்ங்க

சி.பி.செந்தில்குமார் said...

ராஜி said...

பெண்கள் வீட்டை ஒழுங்கா கவனிச்சு பிள்ளைகளை நல்லவர்களாக, நேர்மையானவர்களாகவும் வளர்த்தாலே போதும். நாடு சுபிட்சமடையும். ஆகவே பெண்களுக்கு முதல்ல வீட்டை திருத்தும் பணி முடியட்டும் அப்புறமா நாட்டை திருத்த வரோம்ங்க


வீட்டை நல்ல முறையில் நிர்வகித்தாலே போதும்.. திருத்த வேண்டியது நாட்டைத்தான்

சி.பி.செந்தில்குமார் said...

>> Delete
Blogger செங்கோவி said...

வைகோ கமெண்ட் சூப்பர் தல!

அண்ணன் சொன்னா அப்பீல் ஏது?

டக்கால்டி said...

பதிவரை கலைப்பதும் பின்னூட்டமிடுபவரின் கடமையே

சி.பி.செந்தில்குமார் said...

Blogger டக்கால்டி said...

பதிவரை கலைப்பதும் பின்னூட்டமிடுபவரின் கடமையே

ம்க்கும்.. ரொம்ப முக்கியம்

பாரி தாண்டவமூர்த்தி said...

///சும்மா கண் துடைப்பு விசாரனை பண்ணுனா நாங்க நம்பிடுவோமாக்கும்?முதல்ல கலைஞர் டி விக்கு சீல் வெச்சு விசாரனை பண்ற வழியைப்பாருங்க...///

இது நடக்கும்னு எனக்கு தோணல பாஸ்.....

Unknown said...

படங்களுக்கான ஜோக்குகளை ரொம்ப ரசிச்சேங்க சி.பி.. அதிலயும் ரெண்டாவது படத்துக்கான ஜோக் செம.. :-)

சசிகுமார் said...

எப்பவும் போல பதிவு நச் செந்தில், இதில் கனிமொழி கைது செம சூப்பர்

Unknown said...

காமடி கபடியில் பின்னும் சிபிக்கு வாழ்த்துக்கள்

காங்கேயம் P.நந்தகுமார் said...

நீங்க விடிய விடிய தூங்காம எக்ஸாமுக்கு படிக்கிறது மாதிரி உங்க போஸ்டுக்கு பிரிப்பெர் பண்ணிட்டு ஆபிசுல போயி நல்லா குறட்டை விடறதா ஆபிஸ் ல எல்லோரும் சொல்றாங்க! இது உண்மையா?

காங்கேயம் P.நந்தகுமார் said...

கனிமொழியும் தயாளு அம்மாவும் 1.2.3 எண்ணூவாங்களோ? http:tamil444news.blogspot.com

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

put up some colourful diskies

சி.பி.செந்தில்குமார் said...

>>ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

put up some colourful diskies

hi hi ஹி ஹி நாங்க திருந்திட்டமே

சி.பி.செந்தில்குமார் said...

>>Pari T Moorthy said...

///சும்மா கண் துடைப்பு விசாரனை பண்ணுனா நாங்க நம்பிடுவோமாக்கும்?முதல்ல கலைஞர் டி விக்கு சீல் வெச்சு விசாரனை பண்ற வழியைப்பாருங்க...///

இது நடக்கும்னு எனக்கு தோணல பாஸ்.....

நடக்கும் ந்ன்பார் நடக்காது.. நடக்காது என்பார் நடந்து விடும்

சி.பி.செந்தில்குமார் said...

>>பதிவுலகில் பாபு said...

படங்களுக்கான ஜோக்குகளை ரொம்ப ரசிச்சேங்க சி.பி.. அதிலயும் ரெண்டாவது படத்துக்கான ஜோக் செம.. :-)

பொதுவா ஃபர்ஸ்ட்டை விட செகண்ட் நல்லாருக்கும்.. அது மனித மனோவியல்.. ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

>>சசிகுமார் said...

எப்பவும் போல பதிவு நச் செந்தில், இதில் கனிமொழி கைது செம சூப்பர்

நன்றி சசி.. நல்ல வேளை உங்க கமெண்ட்ல கைது கட் ஆகி இருந்தா...

சி.பி.செந்தில்குமார் said...

>>விக்கி உலகம் said...

காமடி கபடியில் பின்னும் சிபிக்கு வாழ்த்துக்கள்

தக்காளி... அந்த மேட்டர் பதிவு என்னய்யா ஆச்சு?

சி.பி.செந்தில்குமார் said...

>>பி.நந்தகுமார் said...

நீங்க விடிய விடிய தூங்காம எக்ஸாமுக்கு படிக்கிறது மாதிரி உங்க போஸ்டுக்கு பிரிப்பெர் பண்ணிட்டு ஆபிசுல போயி நல்லா குறட்டை விடறதா ஆபிஸ் ல எல்லோரும் சொல்றாங்க! இது உண்மையா?

ஹி ஹி பப்ளீக் பப்ளிக்

சி.பி.செந்தில்குமார் said...

>>பி.நந்தகுமார் said...

கனிமொழியும் தயாளு அம்மாவும் 1.2.3 எண்ணூவாங்களோ? http:tamil444news.blogspot.com

ஆட்சி மாற்றம் நடக்கும் , காட்சி மாற்றம் அரங்கேற்றம்

'பரிவை' சே.குமார் said...

ஹி... ஹி... எல்லாம் சூப்பர்.

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
கவிதை வீதி... // சௌந்தர் // said...

தேர்வை முடித்து விட்டு வந்து விட்டேன்...

கலாய்ப்பது என்றால் என்ன?

Anonymous said...

ஆகா... அரசியல் செய்திகள் உங்களுக்கு எப்படி தான் கிடைக்கிறதோ!

சி.பி.செந்தில்குமார் said...

>>># கவிதை வீதி # சௌந்தர் said...

தேர்வை முடித்து விட்டு வந்து விட்டேன்...

கலாய்ப்பது என்றால் என்ன?


இப்போ நீங்க இப்படி கமெண்ட் போட்டீங்களே.. இதான் கலாய்ப்பது..

Arul Kumar P அருள் குமார் P said...

நீங்க அ.இ.அ .தி .மு .க க்கு தான் ஒட்டு போடா போறீங்கனு நினைக்குறேன்...! கொஞ்சம் பொறுங்க cps . ஒட்டு விலை போக போக தான் ஏறும்..! நடுவுல இந்த எலக்சன் கமிசன் வந்து கெடுத்து வைக்காமல் இருந்தா சரி...!

MANO நாஞ்சில் மனோ said...

//சும்மா கண் துடைப்பு விசாரனை பண்ணுனா நாங்க நம்பிடுவோமாக்கும்?முதல்ல கலைஞர் டி விக்கு சீல் வெச்சு விசாரனை பண்ற வழியைப்பாருங்க...//

எஸ்.... அதை செய்யுங்க முதல்ல....

MANO நாஞ்சில் மனோ said...

பச்சை கலரு சிங்குச்சா மஞ்ச கலரு சிங்குச்சா...

MANO நாஞ்சில் மனோ said...

//ஹா.. ஹா.. ஹா.. இருங்க என்னால சிரிப்பை அடக்க முடியல... எங்க தலைவர் ஒரு சீட் பிச்சை போட்டதை வாங்காம இப்படி சுய மரியாதை அது இதுன்னு ஏன் சார் உடம்பை கெடுத்துக்கறீங்க? எங்க அண்ணன் ராம் தாசை பார்த்தீங்களா? எவ்வளவு கேவலப்படுத்தினாலும் ஒண்ணுமே தெரியாத மாதிரி , எதுவுமே நடக்காதது மாதிரி சிரிச்சுட்டே போஸ் குடுப்பாரு.. நீங்க இன்னும் வளரனும் தம்பி...//

ஹா ஹா ஹா ஹா ஹா போ போ போயி வீட்ல பெரியவங்க யாரும் இருந்தா வரசொல்லு....

நிரூபன் said...

அரசியல் அலசலும், நகைச்சுவைகளும் அருமை.

Unknown said...

//டிஸ்கி - சனி ஞாயிறு நெட் பக்கம் வராதவர்களுக்காக என் முன் தினப்பதிவுகள்//
என் முன்பதிவு!