![http://tv.burrp.com/images/s/t/6/t66b2mgg_1093_1_150.jpg](http://tv.burrp.com/images/s/t/6/t66b2mgg_1093_1_150.jpg)
கலைஞர் + கலைஞர் டி வி நிர்வாகம் தெரிஞ்சோ தெரியாமலோ செஞ்ச உருப்படியான ஒரே நல்ல காரியம் நாளைய இயக்குநர் நிகழ்ச்சிதான்.27.2. 2011 அன்னைக்கு வானம் மேகமூட்டமா இருந்தது.. என்னடான்னு பார்த்தா பிரதாப் போத்தன் எல்லாரையும் ஊக்குவிக்கும்படியா பேசுனாரு.வழக்கமா “பப்ளிக்கா மட்டம் தட்டும் இவர் பாராட்டுனது ஆச்சரியம். ஆனா பாராட்டறப்பக்கூட அவர் ஏன் சிடு சிடுன்னு இருந்தாரோ தெரியல.. பாவம் அவரோட குடும்பம்...
1. எதையும் தாண்டி புனிதமானது. - அருண்ராஜ்
ரன் லோலா ரன், தமிழில் 12 B ஆகிய படங்களில் வந்த KNOT தான்.ஒரு செகண்ட் லேட்டா கிளம்பி இருந்தா மனிதனின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? என்பதை அலசும் படம்.
7 நிமிடங்களில் இந்த கதையை இவ்வளவு அழகான திரைக்கதை ஆக்க யாராலயாவது முடியுமா?ன்னு பிரமிப்பா இருக்கு.ஒரு லவ் ஜோடி.. ஆக்சிடண்ட்ல மாட்டி பொண்ணோட உயிர் போயிடுது... ஹாஸ்பிடல்ல அந்த பையனைப்பார்த்து இன்னொரு பொண்ணு லவ் பண்றா...
இன்னொரு டிராக்ல அந்த ஆக்சிடெண்ட் நடக்காம இருந்தா....அதே பொண்ணு அவனை சந்திக்கவே இல்லை...
ஆக்சிடெண்ட் நடந்திருந்தா அவனை லவ் பண்ற பொண்ணு நீ இல்லாம நான் இல்லைங்கறா.. அதே ஆக்சிடெண்ட் நடக்காம இருந்தா அந்த பொண்ணு அவனை சந்திக்கவே இல்லை...
காதல் என்பது சந்திப்புகளில் வருவது..., நிகழ்வுகள் என்பது தற்செயலானதா? விதிப்படியா? போன்ற பிரமாதமான அலசல்களோட காட்சிப்படுத்தும் திறமை இந்த குறும்பட இயக்குநருக்கு கிடைச்சிருக்கு.
![https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCJVT62g6sO5-4ZpYF4aaC81A7zHq47G1DkFwlFeg5lnY7mKv-X0cl1tILaGWWtyQ8Tvc2DvaBcaKiNRE5qz7Kw9B0PWTU3-7maaVIPuPt9bnfmcDaAjOMUL4fnBTy0r0UIgUxKT8wQgA/s400/keerthi-sneha.jpg](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCJVT62g6sO5-4ZpYF4aaC81A7zHq47G1DkFwlFeg5lnY7mKv-X0cl1tILaGWWtyQ8Tvc2DvaBcaKiNRE5qz7Kw9B0PWTU3-7maaVIPuPt9bnfmcDaAjOMUL4fnBTy0r0UIgUxKT8wQgA/s400/keerthi-sneha.jpg)
இந்தப்படத்தில் கண்ட (கேட்ட) வசனங்கள்
1. THERE IS NO PAST IN LOVE ( காதல்ல ,முடிஞ்சு போன காதல்னு எதுவுமே கிடையாது)
2. லவ்வுல ரெண்டே வகை தான்.1. நாம லவ் பண்றது நிஜம். 2. கடைசி வரை லவ்வே பண்ணாம இருக்கறது..
3.காதல்ங்கறது நாம யார் கூட வாழ ஆசைப்படறோம்கறதுல இல்ல...நாம யார் இல்லாம வாழ முடியாதுன்னு நினைக்கறோமோ.. அது தான்.
இந்தப்படத்துக்கான ஒளிப்பதிவு, எடிட்டிங்க் எல்லாம் பக்கா.. இதுல 2 ஹீரோயின். நானும் பல படங்கள்லயும் ,குறும்படங்கள்லயும் பார்த்துட்டேன்.முதல் ஹீரோயினை விட 2வது ஹீரோயின் அழகா ,ஃபிகரா இருக்காங்க.. ஆனா அவங்களுக்கான காட்சிகள் கம்மி ..இது ஏன்? ( ஒரு ஆதங்கத்துல கேக்குறேன்.. ஹி ஹி )
![http://vannitube.com/wp-content/uploads//2010/10/2029.jpg](http://vannitube.com/wp-content/uploads//2010/10/2029.jpg)
கே பாலச்சந்தர் சொன்ன கமெண்ட் - காலம் தான் எல்லாவற்றையும் முடிவு செய்கிறது,, காதலையும் கூட .
ஹாய் மதன், பிரதாப் போத்தன் 2 பேரும் காமெடி பண்ணுனாங்க.. படம் பிரமாதமான KNOT. இன்னும் அழுத்தமா சொல்லி இருக்கலாம் அப்படின்னு ஒரு கருத்து சொன்னாங்க...ஒரு வேளை ஹீரோவை ஹீரோயின் டச் பண்ணாம விட்டதை சொல்றாங்களோ என்னவோ.. இந்தப்படத்துக்குத்தான் முதல் பரிசு குடுத்திருக்கனும்.ம்ஹூம்... தர்லை.சாகித்ய அகாடமி விருதுல இருந்து எம் பி பதவி வரை சர்ச்சையில் தான் ஓடும்போல.
2. உயிர் - ராஜேஷ்
டைட்டிலைப்பார்த்ததும் சாமி டைரக்ட் பண்ணி சங்கீதா அண்ணியா நடிச்ச உயிர் கதைதான் ஞாபகம் வந்தது. நல்ல வேளை. கதை வேற.
ஒரு ஆக்சிடெண்ட் நடக்குது. 4 பேர் மரணத்தின் வாசலில் இருக்காங்க.. அவங்க உடல் ரோட்ல இருக்கு.ஆனா அவங்களோட ஆத்மா வான் லோகத்தில் சென்று விவாதம் செய்யுது.. 4 பேர்ல ஒருத்தருக்கு மட்டும்தான் உயிர் பிழைக்க வாய்ப்பு இருக்கு.
ஒரு வயசான ஆள் நான் விலகிக்கறேன்னு அந்த கால சக்கரத்துல இருந்து குதிச்சிடறார்.அடுத்து ஒரு பணக்காரி மீதி இருக்கற 2 பேரையும் ஜெ கணக்கா விலை பேசறா.. கோபம் வந்த மெக்கானிக் கேரக்டர் அவளைப்பிடிச்சு தள்ளி விட்டுடறார்.மீதி இருக்கற 2 பேர்ல ஒரு கட்டத்துல மெக்கானிக் கீழே விழுந்துடறார். மிச்சம் இருக்கற ஒருத்தர் மட்டும் உயிர் பிழைக்கறார்.
இதை டைரக்ட் பண்ணுன ராஜேஷ் அடிப்படைல சுஜாதா ரசிகர் போல.. அதே மாதிரி காட்சிப்படுத்துதல்ல பூர்ணம் விஸ்வநாதன் பாணியை கையாண்டிருக்கார்.மனிதனின் மரணத்துக்குப்பிறகு என்ன நடக்குது? விபத்தில் சிக்கும் மனிதர்களில் சிலர் இறந்துடறாங்க.. சிலர் பிழைச்சிக்கறாங்க.அது என்ன சூட்சுமம்?என்பது தான் கதையின் கரு.
வித்தியாசமான சிந்தனைதான்.ஆனா மியூசிக்கல் சேர் ஃபார்முலாவுல 4 உயிர்களும் விண்வெளில வாதாடுவதில் நம்பகத்தன்மை குறைவு.இந்தப்படத்துக்குத்தான் முதல் பரிசு கிடைச்சது.கே பி, ஹாய் மதன், பிரதாப் 3 பேரும் இந்த படத்தை ஆஹா ஓஹோன்னு புகழ்ந்தாங்க.
![http://lh3.ggpht.com/_xDJKOay4yj4/SEIR-O0wAyI/AAAAAAAAACQ/tHcEJv83Ldg/madhan.jpg](https://lh3.ggpht.com/_xDJKOay4yj4/SEIR-O0wAyI/AAAAAAAAACQ/tHcEJv83Ldg/madhan.jpg)
ஆனா என்னைப்பொறுத்தவரைக்கும் ஒரு படம் பரிசு வாங்க
1. வித்தியாசமான சிந்தனை 2. மனித மனங்களுக்கு ஒரு படிப்பினை 3. அனைவருக்கும் புரியும் வகையில் எளிமை 4.காட்சிப்படுத்துவதில் புத்திசாலித்தனம்
இந்த நான்கும் முக்கியம்னு நினைக்கறேன்.முதல் பாயிண்ட்டும், 4வது பாயிண்ட்டும் உயிர் படத்துல இருந்துது.ஆனா 4 பாயிண்ட்ஸூமே எதையும் தாண்டி புனிதமானது. படத்துல இருந்துது.
3.மறுபடியும் - கார்த்திக் பாலாஜி
சுபா எழுதுன மாலைமதி நாவலான பொன் ஜிதா வின் மையக்கருவை சுட்டு எடுத்த படம்.ஒரு சயிண்ட்டிஸ்ட் ஆராய்ச்சில செத்துப்போன மனிதனை உயிர்ப்பிக்கும் மருந்தை கண்டுபிடிக்கறாரு. ஆக்சிடெண்ட்டில் இறந்து போன ஒரு ஆளை உயிர் கொடுத்து எழுப்பி (!!??) விடறாரு.. செத்துப்போன ஆள் உயிரோட வர்றதைப்பார்த்த அவனது காதலி,குடும்பம் எல்லாருமே பயந்து ஓடறாங்க...அவன் மறுபடி ஒரு ஆக்சிடெண்ட்ல மாட்டி மறுபடியும் செத்துடறான். இப்படி செத்து செத்து விளையாடற காமெடி வேணாம்னு டாக்டர் அந்த ஆராய்ச்சியையே கை விட்டுடறாரு...
ஒரு நல்ல கதை மோசமான திரைக்கதையால் எப்படி நாசமாப்போகும்ங்கறதுக்கு நல்ல உதாரணம் இந்தப்படம்.
கே பி யின் கமெண்ட் - BIRTH IS BEAUTIFUL THING & ALSO DEATH IS BEAUTIFUL THING
இன்னோரு சந்தோஷமான மாற்றம்,இந்தப்படத்து டைரக்டரை மதன் தனியா கூப்பிட்டு சில பர்சனல் அட்வைஸ் பண்ணுனாரு...நிறைகளை உரத்து சொல், குறைகளை மெதுவாக ,தனியாக சொல் என்ற பாலிஸி போல.. குட்.
( நாம் பதிவுலகில் கமெண்ட் போடறப்ப பாசிட்டிவ் கமெண்ட்டை பப்ளிக்கா போட்டுட்டு குறை இருந்தா தனி மெயில்ல சொல்ற மாதிரி..) சிலர் இருக்கங்க மைனஸ் பாயிண்ட்டை கமெண்ட்டா போட்டுட்டு பாராட்டை மெயில் பண்ணுவாங்க..
கலைஞர் டி வில விமர்சனப்போட்டியும் இருக்கு.அடுத்த வாரத்து;ல இருந்து அனுப்பறவங்க அனுப்பலாம். ஞாயிறு காலை 10.30 ட்டூ 11.30.முகவரி
J V MEDIA
194,G3,GOLDEN NEST,3RD MAIN ROAD,SRI SAI NAGAR,VIRUKAMPAAKKAM,CHENNAI -92
டிஸ்கி -1 : இதே பதிவை காப்பி பண்ணி பேஸ்ட் பண்ணிடாதீங்க.. நான் ஏற்கனவே அனுப்பிட்டேன் நேத்தே..பரிசு ரூ 8000 மதிப்புள்ள எலக்ட்ரானிக் சாதனம்.
டிஸ்கி 2 : இந்த 3 படங்களை இயக்கிய இயக்குநர்கள் அல்லது அவர்கள் நண்பர்கள் படம் சம்பந்தப்பட்ட ஸ்டில்ஸ்,அல்லது டைரக்டர் ஸ்டில் அனுப்புனா இதே பதிவை எடிட் பண்ணி அட்டாச் பண்ணிடறேன்...
62 comments:
முத போண்டா? :-)
அண்ணே.. அந்த திரும்பிப்பார்க்கிறேன் மேட்டர்...?
முதல் போட்டோ நல்லாயிருக்கு
ஹி ஹி
அது சரி.. இனிமே கஷ்டப்பட்டு எதையும் டைப் பண்ணப்போறதில்லை. கூகுள்ல போய் 4 ஃபோட்டோ மட்டும் போடறேன் ஹி ஹி
அண்ணே..விமர்சனம் நல்லாயிருக்கு..
யாரது என்னை அண்ணன்னு கூப்பிடறது? இந்தப்பதிவுலகத்துக்கு நான் கடைக்குட்டித்தம்பி.. ஹி ஹி
//சி.பி.செந்தில்குமார் said...
அது சரி.. இனிமே கஷ்டப்பட்டு எதையும் டைப் பண்ணப்போறதில்லை. கூகுள்ல போய் 4 ஃபோட்டோ மட்டும் போடறேன் ஹி ஹி
இது நல்லாயிருக்கே
// சி.பி.செந்தில்குமார் said...
யாரது என்னை அண்ணன்னு கூப்பிடறது? இந்தப்பதிவுலகத்துக்கு நான் கடைக்குட்டித்தம்பி.. ஹி ஹி
ஆமாம் இவர் பதிவுலகத்தில் அறிஞர் அண்ணாவின் கடைக்குட்டித்தம்பி
அப்ப இவர் வயசென்ன கண்டுபிடியுங்க பார்ப்போம்
என்றும் 16
இரண்டாவது ஷோவும் அவுஸ்ஃபுல்லா..
மச்சம்யா..
சி.பி.செந்தில்குமார் said...
என்றும் 16
/////////////////////
நம்பிட்டோமாக்கும். இப்படியே எங்களை எல்லாம் ஏமாத்துங்க சிபி சார்
HI THAMBI......
FIRST AND FOURTH PHOTOS ARE BORE...
SECOND AND THIRD ARE JORE
கலைஞர் எது சொன்னாலும் தமிழன் நம்புறான்.. நான் எது சொன்னாலும் நம்ப மாட்டேங்கறானே... ஹி ஹி
போரு.. ஜோரு// இதை வெச்சு ஒரு ஜோக் ரெடி பண்ணிடறேன்.. நன்றி நாராயணா..
.காதல்ங்கறது நாம யார் கூட வாழ ஆசைப்படறோம்கறதுல இல்ல...நாம யார் இல்லாம வாழ முடியாதுன்னு நினைக்கறோமோ.. அது தான்.
/////////////////////////////////
அட இது நல்லா இருக்கே
வணக்கம் பாஸ்..
வேடந்தாங்கல் - கருன் said...
இரண்டாவது ஷோவும் அவுஸ்ஃபுல்லா..
மச்சம்யா..
அங்கே மட்டும்.. என்ன? செம கூட்டம் தான்
//கடைக்குட்டித்தம்பி//
தம்பிய பார்க்கும் போது ....கடையில உட்காந்து போற வர குட்டிகளை சைட் அடிக்கற தம்பி மாதிரி தெரியுதே ....:)
அட ...சென்னிமலை அடி வாரத்துல ஒரு டி கடைகாரர் இப்படி தான் உங்களை பத்தி சொன்னாருங்க அண்ணா ...:)
//அன்னைக்கு வானம் மேகமூட்டமா இருந்தது.. என்னடான்னு பார்த்தா பிரதாப் போத்தன் எல்லாரையும் ஊக்குவிக்கும்படியா பேசுனாரு.//
ஹிஹி அப்ப மழை தான்
மைந்தன் சிவா said...
வணக்கம் பாஸ்..
யோவ்.. நான் என்ன கொள்ளைக்கூட்டமா நடத்திட்டு இருக்கேன்?
NAALAYA IYAKKUNAR.........
NEENGALUM THAANE
SENTHIL....?
Delete
Blogger தனி காட்டு ராஜா said...
//கடைக்குட்டித்தம்பி//
தம்பிய பார்க்கும் போது ....கடையில உட்காந்து போற வர குட்டிகளை சைட் அடிக்கற தம்பி மாதிரி தெரியுதே ....:)
அட ...சென்னிமலை அடி வாரத்துல ஒரு டி கடைகாரர் இப்படி தான் உங்களை பத்தி சொன்னாருங்க அண்ணா ...:)
மறுபடியும் அண்ணாவா>/ >?
கோயிலில் அமர்ந்து சைட் அடிக்கும் பழக்கம் என் பரம்பரைக்கே கிடையாது.. ஹி ஹி
//
கே பி யின் கமெண்ட் - BIRTH IS BEAUTIFUL THING & ALSO DEATH IS BEAUTIFUL திங்//
அடடா பாஸ் கருத்து சொல்றார்லே!!
எவனாச்சும் கெளம்பிடுவாங்களே மினாஸ் ஒட்டு போட!!
ஓட்ட வட நாராயணன் said...
NAALAYA IYAKKUNAR.........
NEENGALUM THAANE
SENTHIL....?
இதுவரை எந்த புரொடியூசரும் மாட்டலை பாவம்.. ஹி ஹி
மைந்தன் சிவா said...
//
கே பி யின் கமெண்ட் - BIRTH IS BEAUTIFUL THING & ALSO DEATH IS BEAUTIFUL திங்//
அடடா பாஸ் கருத்து சொல்றார்லே!!
எவனாச்சும் கெளம்பிடுவாங்களே மினாஸ் ஒட்டு போட!!
March 1, 2011 5:26 PM
சும்மா இருக்கறவனை தூண்டி விடரது இதானா?
டைட்டிலைப்பார்த்ததும் சாமி டைரக்ட் பண்ணி சங்கீதா அண்ணியா நடிச்ச உயிர் கதைதான் ஞாபகம் வந்தது.
//////////////////////////////
எனக்கென்னவோ நல்லா ஏமாந்தேன் நு ஒரு வர்த்தைய சேர்த்து இருக்கலாம் நு தோணுது
//பரிசு ரூ 8000 மதிப்புள்ள எலக்ட்ரானிக் சாதனம்.//
அது குடும்பஸ்தனுக்கு உதவலாம்...உங்களுக்கு எதுக்கு பாஸ் அதெல்லாம்?
அப்பிடியே எனக்கு அனுப்பிடுங்க பார்சல் பண்ணி
ஓட்ட வட நாராயணன் காணவில்லை..
இதே பதிவை காப்பி பண்ணி பேஸ்ட் பண்ணிடாதீங்க.
////////////////////////
ஆமாம் இது பெரிய கம்ப ராமாயணம். இதை நாங்க cut, copy and paste செய்யப்போறமாக்கும்
//என்றும் 16 //
//மறுபடியும் அண்ணாவா //
என்றும் 12 ... ஹி ..ஹி...என் மனசோட வயச சொன்னேன் ...இப்ப நான் உங்களை அண்ணா -நு கூப்பிடலாம் தானே ...:)
//கோயிலில் அமர்ந்து சைட் அடிக்கும் பழக்கம் என் பரம்பரைக்கே கிடையாது.. ஹி ஹி//
அண்ணா ...உங்க கிட்ட மட்டும் அல்ல ...உங்க பரம்பரைகிட்ட இருந்தே கத்துக்க வேண்டிய விஷயம் நெறைய இருக்கு ...:)
தனிக்காட்டு ராஜா என்னை வாடா போடா என கூப்பிடாமல் அண்ணன் என தொடர்ந்து அழைத்து என்னை அவமானப்படுத்டுவதால் அவரது பதிவுக்கு மைனஸ் ஓட்டு போட அவரது தளத்திற்கு விரைந்து செல்கிறேன்.. ஹி ஹி
WHAT KARUN?
//தனிக்காட்டு ராஜா என்னை வாடா போடா என கூப்பிடாமல் அண்ணன் என தொடர்ந்து அழைத்து என்னை அவமானப்படுத்டுவதால் அவரது பதிவுக்கு மைனஸ் ஓட்டு போட அவரது தளத்திற்கு விரைந்து செல்கிறேன்.. ஹி ஹி//
ஹா..ஹா ...நான் பதிவு எழுதறத விட்டே ரொம்ப நாள் ஆச்சே ...பாசத்திற்கும் நேசத்திற்கும் உரிய அருமை அண்ணாவே :))
//சி.பி.செந்தில்குமார் said...
அண்ணே.. அந்த திரும்பிப்பார்க்கிறேன் மேட்டர்...?//
அடுத்த இடுகை அதுதான் தல..! :-)
>>தனி காட்டு ராஜா said...
//தனிக்காட்டு ராஜா என்னை வாடா போடா என கூப்பிடாமல் அண்ணன் என தொடர்ந்து அழைத்து என்னை அவமானப்படுத்டுவதால் அவரது பதிவுக்கு மைனஸ் ஓட்டு போட அவரது தளத்திற்கு விரைந்து செல்கிறேன்.. ஹி ஹி//
ஹா..ஹா ...நான் பதிவு எழுதறத விட்டே ரொம்ப நாள் ஆச்சே ...பாசத்திற்கும் நேசத்திற்கும் உரிய அருமை அண்ணாவே :))
கதை விடாதீங்க.. விஜய் மேட்டர் காமெடி பார்த்தேன். தமிழ்மணத்துல, இண்ட்லில இணைக்காம இருந்துச்சு ,இணைச்சு மைனஸ் ஓட்டு போடறப்ப. ஸ்லிப் ஆகி ப்ளஸ் ஓட்டாகிடுச்சு.. அடடா... ஜஸ்ட் மிஸ்ஸு.. ஹூம்..
சேட்டைக்காரன் said...
//சி.பி.செந்தில்குமார் said...
அண்ணே.. அந்த திரும்பிப்பார்க்கிறேன் மேட்டர்...?//
அடுத்த இடுகை அதுதான் தல..! :-)
ரைட்டுண்ணே,.. எங்களுக்கெல்லாம் அது ஒரு படிப்பினையாக, பாடமாக ஊக்குவிக்கும் கிரியா ஊக்கியாக அது இருக்கும்...
Delete
Blogger வேடந்தாங்கல் - கருன் said...
ஓட்ட வட நாராயணன் காணவில்லை..
அவருக்கு கடைக்கு வர்ற ஃபிகரை கரெக்ட் பண்ணவே நேரம் போறதில்லை..
எல்லோருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு!
இனிமேல் யாரும் "நாளைய இயக்குனர்" பற்றி விமர்சனம் எழுதி அனுப்பி நேரத்தை வீணாக்க வேண்டாம். ஏனென்றால் சி.பி. தனது விமர்சனத்தை ஏற்கனவே அனுப்பி விட்டார் எனவே பரிசு அவருக்குத்தான்.
இதையும் மீறி அனுப்புகிறவர்களுக்கு ஒரு வெஞ்சன கிண்ணி கூட கிடைக்காது.
எதுக்கு இந்த கொலை வெறி>?
//தமிழ்மணத்துல, இண்ட்லில இணைக்காம இருந்துச்சு ,இணைச்சு மைனஸ் ஓட்டு போடறப்ப. ஸ்லிப் ஆகி ப்ளஸ் ஓட்டாகிடுச்சு.. அடடா... ஜஸ்ட் மிஸ்ஸு.. ஹூம்..//
எதுக்கு இந்த கொலை வெறி?
Blogger தனி காட்டு ராஜா said...
//தமிழ்மணத்துல, இண்ட்லில
தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும், மீண்டும் தர்மம் வெல்லும்.. ஹி ஹி
அண்ணே...நீங்க சொல்லற சூது பத்தி எல்லாம் எனக்கு தெரியாது..ஏன்னா நான் சூது வாது தெரியாம நமிதா ரசிகனா வளர்ந்துட்டேன் ....:)
அப்பாடா.. மாட்டிக்கிட்டீங்க.. நான் நேத்து வந்த தாப்ஸி ரசிகன்.. அப்போ நீங்க என்னை விட 10 வயசு மூத்தவரு. பெரிய அண்ணன்.. ஹி ஹி
///தமிழ்மணத்துல, இண்ட்லில
தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும், மீண்டும் தர்மம் வெல்லும்.. ஹி ஹி//
இதான் இததான் நானும் சொல்ல வந்தேன்....ஹிஹி
//நான் நேத்து வந்த தாப்ஸி ரசிகன்.. அப்போ நீங்க என்னை விட 10 வயசு மூத்தவரு. பெரிய அண்ணன்.. ஹி ஹி//
அண்ணே ...நேத்து தான் கோபி புராணம் -நு சொல்லி ஒரு புத்தகம் ஒரு 2 பக்கம் படிச்சேன் ...அதுல என்ன சொல்லி இருந்தாங்கனா ...
பெரும்பாலான சின்ன வயசு பசங்களுக்கு ....வயசான ஆண்டிகளை பிடிக்குமாம் ...வயசு ஏற ஏற ....அவங்களுக்கு வயசு குறைவான பொண்ணுகளை பிடிக்குமாம் ...:))
ஹையா....நானும் வந்துட்டேன். வோட்டும் போட்டுட்டேன்
//அது சரி.. இனிமே கஷ்டப்பட்டு எதையும் டைப் பண்ணப்போறதில்லை. கூகுள்ல போய் 4 ஃபோட்டோ மட்டும் போடறேன் ஹி ஹி//
அந்த நாலும் பொம்பளை போட்டோவா இருக்கணும். இல்லைன்னா சாத்தி புடுவேன் சாத்தி....
//சி.பி.செந்தில்குமார் said...
யாரது என்னை அண்ணன்னு கூப்பிடறது? இந்தப்பதிவுலகத்துக்கு நான் கடைக்குட்டித்தம்பி.. ஹி ஹி//
இல்லை நீங்கதான் அண்ணன்....
//நேத்தே..பரிசு ரூ 8000 மதிப்புள்ள எலக்ட்ரானிக் சாதனம்.//
கிடைக்க வாழ்த்துக்கள்..
//கலைஞர் எது சொன்னாலும் தமிழன் நம்புறான்.. நான் எது சொன்னாலும் நம்ப மாட்டேங்கறானே..//
படம் ஒன்னும் தேறலையே..நான் போய்ட்டு நாளைக்கு வர்றேன்!
பகிர்வுக்கு நன்றி பதார்த்தத்துக்கும் நன்றி
பிரதாப் போத்தன் எல்லாரையும் ஊக்குவிக்கும்படியா பேசுனாரு.///
அவரு ஏன் எல்லோரையும் ஊக்கு விக்க சொல்றாரு?.
அருமையான பகிர்வு பகிர்வுக்கு நன்றி நண்பரே
உங்க இடுகைல எனக்கு பிடிச்சதே இந்த குறும் படங்கள் பற்றிய அலசல்கள் தான். அதுவும் இம்முறை அபாரமாக எழுதி இருக்கிறீர்கள்..தொடருங்கள்...
Those are all fantacy stories, not a science fixtion... anyhow good luck for your competetion.
Kesavan Markkandan said...
Those are all fantacy stories, not a science fixtion... anyhow good luck for your competetion
ஏற்கனவே ஃபேண்ட்டசி கதைகள் என முறை டைட்டில் இட்டதால் ஒரு வித்தியாசத்திற்கு அபடி மாற்றினேன் சார்
டக்கால்டி said...
உங்க இடுகைல எனக்கு பிடிச்சதே இந்த குறும் படங்கள் பற்றிய அலசல்கள் தான். அதுவும் இம்முறை அபாரமாக எழுதி இருக்கிறீர்கள்..தொடருங்கள்...
நன்றி சார்
வைகை said...
பிரதாப் போத்தன் எல்லாரையும் ஊக்குவிக்கும்படியா பேசுனாரு.///
அவரு ஏன் எல்லோரையும் ஊக்கு விக்க சொல்றாரு?.
ஹி ஹி ,ஐ லை யுவர் டைமிங்க் கமெண்ட்
சும்மா கலக்கு கலக்குன்னு கலக்குறீங்க போங்க...! நீங்க ஒரு ஜட்ஜ்ஜா போக முழுக்க முழுக்க தகுதி உள்ளது.
//ஒரு படம் பரிசு வாங்க
1. வித்தியாசமான சிந்தனை 2. மனித மனங்களுக்கு ஒரு படிப்பினை 3. அனைவருக்கும் புரியும் வகையில் எளிமை 4.காட்சிப்படுத்துவதில் புத்திசாலித்தனம்//
முழுக்க முழுக்க உண்மை. இந்த 4 பாய்ன்ட்ட தான் பிரதாப் போத்தனும், மதனும் கொஞ்சம் வித்தியாசமான கோணத்துல அணுகுகிறார்கள்.மிக நன்றாக அலசி இருகிறீர்கள். அபாரமாக எழுதுகிறீர்கள் . வாழ்த்துக்கள் .
( ஒரு நாள் விட்டுட்டு பார்த்தா...மூணு பதிப்பு வந்துருச்சு ...ஆனாலும் நீங்க நொம்ப வேகம் சார்...!)
விமர்சனங்கள் இண்ட்ரஸ்டிங் சிபி...!
அது என்ன எலக்ட்ரானிக் சாதனம்?
Post a Comment