Wednesday, March 23, 2011

செய்யும் ஊழலில் 25 % மக்களுக்கு.. உங்கள் வாக்கு..எங்களுக்கே

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQSZCnKTKLcApdb8J-a8I52obAnmKsKt36qF0B5NZJZ_a6h1Qh08Zp3u_a71OYzEQGYU2yjbJn8_14vjnKY6mZXjORl3ua_l7VUtpHGwuYUwoabkiToFgragkS__lK7Q4tP0ur7EjMXbM/s1600/PM.JPG

1. இந்திய தேசிய லீக் கட்சியின் தேசிய தலைவர் முகமதுசுலைமான் பேச்சு: எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தேர்தலில் போட்டியிடும் போது, மற்ற கட்சிகளின் சின்னத்திலேயே நிற்க வைக்கின்றனர். இதில், எங்களுக்கு உடன்பாடில்லை; அதனால், சட்டசபை தேர்தலில் நாங்கள் தனித்து நிற்கிறோம்.

தம்பி டீ இன்னும் வர்லை.. ஹா ஹா என்னது? தனியா நிக்கறீங்களா? ஹய்யோ ஹய்யோ.. நீங்க ஒருத்தர் மட்டும் தனியா நின்னா பயமா இருக்காது?

------------------------------------------

2. அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் தலைவர் சேதுராமன்: தி.மு.க., அரசை வீட்டுக்கு அனுப்புவதே எங்கள் ஒரே நோக்கம். அதற்காக எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஒட்டு மொத்தமாக தமிழக மக்களின் நலன் கருதி தேர்தலில் எந்த பிணக்கும் இன்றி பணியாற்றுவோம். மூன்றாவது அணி என்ற பேச்சுக்கே இடமில்லை.

எந்த பிணக்கும் இன்றி பணியாற்றுவது போல எந்த கணக்கும் இன்றியும் பணியாற்றினால் தேவல... ஏன்னா கணக்குப்பார்த்து வேலை செஞ்சுதான் தமிழன் நாசமா போயிட்டு இருக்கான்...

-------------------------------------------------

3. மாவட்டச் செயலர்களிடம் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்: மாவட்டச் செயலர்கள் என்ன முடிவை எடுக்கச் சொன்னாலும், அதற்கு நான் தயாராக இருக்கிறேன். எதைச் செய்தாலும் நாம் சரியாகச் செய்ய வேண்டும். ஒரு நாள் நிதானமாக யோசித்துவிட்டு, முடிவு எடுக்கலாம்.

இப்போ கடைசியா என்ன சொல்றீங்க? 41 போதுமா? அல்லது இன்னும் 4 வேணும்னு பிரச்சனையை கிளப்பப்போறீங்களா? பார்த்துக்குங்க.. அம்மாவுக்கு கோபம் வந்துட்டா உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணா கதை ஆகிடும்..


----------------------------------------------------
http://www.tamilhindu.com/wp-content/uploads/dinamanicartoon260211.jpg
4. டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம்: டாஸ்மாக் பணியாளர்கள் உழைப்பால், ஆண்டுக்கு, 14 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் வருகிறது. ஏழு ஆண்டுகளில், 12 ஆண்டு உழைப்பைச் செலுத்திய டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து, அரசுப் பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்குவதாக அனைத்துக் கட்சிகளும் தேர்தல் வாக்குறுதி வழங்க வேண்டும்.


வாக்குறுதிதானே,..? அதுல எந்தக்குறையும் அய்யா வைக்க மாட்டார். வாரி வழங்கிடுவார்.. ஆனா நிறைவேத்தறது எப்போன்னு கேட்கக்கூடாது...

-----------------------------------------

5. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் பேட்டி : தி.மு.க., சின்னத்தில் மட்டும் நாங்கள் நின்றதில்லை; காங்கிரஸ் கூட்டணியில் நின்ற போது, கை சின்னத்தில் நின்றோம். அ.தி.மு.க., கூட்டணியில் இருந்தபோது, இரட்டை இலை சின்னத்தில் நின்றோம்.


மொத்தத்துல சொந்தக்கால்ல நின்னு உங்களுக்கு பழக்கம் இல்ல...

----------------------------------------

6. சமூக சேவகி மேதா பட்கர் பேச்சு: ஊழல் புரியாத கட்சி என்று எதுவும் இல்லை. ஊழலை முற்றிலுமாகத் தடுப்பதற்கு, ஊழல் தடுப்பு ஆணையம் ஒன்று அமைக்க வேண்டும். ஏற்கனவே இருக்கும் ஆணையத்தால், ஊழலை சரிவரத் தடுக்க முடியவில்லை. எனவே, புதிய விதிமுறைகளுடன் ஆணையம் அமைக்க வேண்டும்.

புதிய விதி முறைன்னா எப்படி? புரியும் ஊழலில் மக்களுக்கு 50 % கொடுத்துடனும்னா? பட் இந்த டீலிங்க் நல்லாருக்கு.. 

-------------------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiojZkLhJd0WzO_-aZBnLZwvD5mFWJf-AdudNxalF9G-4ORvBghDjPWt83ffvdpnCCawJ8oeYGM-wi0bt0B_bLyZ5QGCX7X5TEKgCrtZhpsrSp12gXF__lPzGAwDKbBeU50VqZBtjr3-lw2/s1600/tamilmakkalkural_blogspot_viji.jpg
7. இந்திய தேசிய லீக் தேசிய தலைவர் முகமது சுலைமான் பேட்டி: காங்கிரஸ் ஆட்சியில் தான், பாபர் மசூதி இடிப்பு வழக்கில், அநீதியான சட்ட விரோத தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை, தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் வரவேற்றன. இதன் காரணமாக, எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைத்துக் கொள்ளாமல், நாங்கள், 20 தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறோம்.

யாரும் உங்களை தடுக்க மாட்டாங்க. தாராளமா தனித்து போட்டி இட்டுக்கொள்ளுங்க.. ஆனா அண்ணே... பயமா இருக்காது ..கட்சி ஆஃபீஸ்ல சிங்கிள் மேனா இருக்க..? 

-----------------------------------------------


8. கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு பேட்டி: கொ.மு.க.,வுக்கு, ஏழு சீட்டுகள் ஒதுக்கியது தவறு என்பதை தேர்தல் முடிவுகள் தி.மு.க.,வுக்கு உணர்த்தும். கொங்கு மண்டல மக்களின் கோரிக்கைகளின் பட்டியல் பெரியது. ஆனால், எந்த கோரிக்கைகளுக்காக, கொ.மு.க., போராடியிருக்கிறது? போராடுவதாக அறிக்கைகள் மட்டுமே தருவர்.

தனியரசுன்னு பேர் வெச்சிருக்கீங்களே. நீங்க தனியா போட்டி போட்டு தனியா ஆட்சி அமைக்கலாமே.. ஏன் கண்ட நாய்ங்க பின்னால அலையறிங்க..?

---------------------------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhyoUE_slgsRqLQ_1qZYGeRXMS3PjxDcSij7b9xIdxJ4qnJoH3p4X2iCBSYmfYzznLwOo_CkPJd0J6Ya-oKswJCFnjc9kWclQd54wW83QSXd-sf5UAoUmeEn6ZeeKDYONb8N-GBcAwjqOU/s400/cartoon_385.jpg
9. மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் பாட்டீல் பேச்சு: என் தாய் மொழியான மராத்தியில் படித்தவன் நான். இதனால், எனக்கு இந்தி, ஆங்கிலம் சரியாக தெரியாது. 2008ல், மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நடந்த போது, இதன் பாதிப்பை உணர்ந்தேன். அப்போது, செய்தியாளர்கள் இந்தியில் கேட்ட கேள்விகள் எனக்கு சரியாக புரியவில்லை. இதனால், தவறாக பதில் அளித்தேன். மற்ற மொழிகளையும் கற்க வேண்டிய அவசியத்தை அப்போது உணர்ந்தேன்.

நீங்க இப்போ தான் உணர்ந்தீங்களா? நாங்க தலைவர் கலைஞரின் பேரன்கள் ஹிந்தி படிக்க டியூஷன் போன பின்னும் அதை உணராம தமிழ் தமிழ் என தள்ளாடிட்டு இருக்கோம்..

-------------------------------

10. பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பேட்டி:
எம்.ஜி.ஆர்.,ஆட்சிக்காலத்திலேயே சென்னை தி.மு.க.,வின் கோட்டை என்றவர்கள், இப்போது சென்னையில் ஏழு தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்துள்ளனர். இது கூட்டணி தர்மம் அல்ல. தேர்தலில் கிடைக்கப் போகும் தோல்வி பயம் தான்.


என்னது? தோல்வி பயமா? ஏ ஹே ஹே ஹே ... ஓட்டுக்கு ரூ 10000 கொடுக்கும் அளவு அவங்க கிட்டே பணம் இருக்கு. பணம் இருக்க பயம் ஏன்?

---------------------------------------------------------

36 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

உண்மையை வெளியில் சொல்லாதிங்க..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஐ.. வடை எனக்கே..

சி.பி.செந்தில்குமார் said...

லஞ்ச் டைம் ல வடை /... ம் ம்

Ponchandar said...

"செய்யும் ஊழலில் 25 % மக்களுக்கு.. உங்கள் வாக்கு..எங்களுக்கே" - இப்படி பப்ளிக்கா பேச பிடாது. ஏதாவது ஒரு கட்சி உண்மையிலே இதை தேர்தல் வாக்குறுதில சேஎத்துடும்

சி.பி.செந்தில்குமார் said...

அப்படி சொன்னா லாபம் மக்களுக்கே.. ஹா ஹா

Anonymous said...

டும்டும்...டும்டும்...
ரொம்ப கம்மியா இருக்கு 50% உயர்த்துங்க...

சி.பி.செந்தில்குமார் said...

ஓவரா ஆசப்படாதீங்க.. கேப்டன் மாதிரி கொடுக்கறதை வெச்சு பொழச்சுக்கனும்

Unknown said...

//தனியரசுன்னு பேர் வெச்சிருக்கீங்களே. நீங்க தனியா போட்டி போட்டு தனியா ஆட்சி அமைக்கலாமே.. ஏன் கண்ட நாய்ங்க பின்னால அலையறிங்க..?//


தனியரசையும் தாக்கியாச்சு அப்படியே ஒட்டுமொத்த அரசியல்வாதிகளையும் திட்டுனா மாதிரி ஆச்சு....
நடத்துங்க பாஸ்..

சக்தி கல்வி மையம் said...

காலையில யாரு பதிவு போட்டது?

சக்தி கல்வி மையம் said...

அப்ப மூனாவது ஷோவை எதிர்பார்க்களாம்?

Unknown said...

//கேப்டன் மாதிரி கொடுக்கறதை வெச்சு பொழச்சுக்கனும்//


காசு வாங்கிட்டு நெஹ்ராவுக்கு ஓவர் கொடுத்த கேப்டன் அப்படினு அந்த கேப்டன் பக்கமும் லைட்டா பந்து வீசுறமாதிரி இருக்குது?

சி.பி.செந்தில்குமார் said...

பாரத்... பாரதி... said...

//தனியரசுன்னு பேர் வெச்சிருக்கீங்களே. நீங்க தனியா போட்டி போட்டு தனியா ஆட்சி அமைக்கலாமே.. ஏன் கண்ட நாய்ங்க பின்னால அலையறிங்க..?//


தனியரசையும் தாக்கியாச்சு அப்படியே ஒட்டுமொத்த அரசியல்வாதிகளையும் திட்டுனா மாதிரி ஆச்சு....
நடத்துங்க பாஸ்..

நீங்களா ஒண்ணை சொல்றீங்க..என்னை மாட்டி விடறீங்களே..ஹி ஹி

சக்தி கல்வி மையம் said...

நான் இப்பதான் வந்தேன்... ஆன்லைன்ல ஏன் கூட்டம் கம்மியா இருக்கு?

சி.பி.செந்தில்குமார் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

காலையில யாரு பதிவு போட்டது?

ஹி ஹி நாந்தான்.. கரண்ட் கட் கருண்

சக்தி கல்வி மையம் said...

நான் போய் சாப்பிட்டு வரேன்..

தமிழ்வாசி பிரகாஷ் said...

நான் கொஞ்சம் அலவன்ஸ் எக்ஸ்ட்ரா கிடைக்குமான்னு எதிர்பாக்கறேன்...கெட்டு சொலுங்க நண்பா...


எனது வலைபூவில் இன்று: தனபாலு...கோபாலு.... அரட்டை மூணு!

சி.பி.செந்தில்குமார் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

அப்ப மூனாவது ஷோவை எதிர்பார்க்களாம்?

இப்பவெல்லாம் 3 வது அணிக்கு மதிப்பில்லையே ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

>>>!* வேடந்தாங்கல் - கருன் *! said...

நான் இப்பதான் வந்தேன்... ஆன்லைன்ல ஏன் கூட்டம் கம்மியா இருக்கு?


நிறைய இடங்கள்ல கரண்ட் நஹி

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger தமிழ்வாசி - Prakash said...

நான் கொஞ்சம் அலவன்ஸ் எக்ஸ்ட்ரா கிடைக்குமான்னு எதிர்பாக்கறேன்...கெட்டு சொலுங்க நண்பா...

ஹா ஹா ஓக்கே

Unknown said...

haa haa haa.. கலக்கல் சி.பி..

எங்கேயிருந்து இந்தப் படங்களைப் பிடிக்கறீங்க.. எல்லாம் டாப்..

Thirumalai Kandasami said...

எங்க தொகுதி பரமத்தில நிக்கும் அண்ணன் தனியரசுவையே தாக்கி பேசிடிங்க இல்ல?,,இன்னக்கி நைட்டே அண்ணனுக்கு போன் பன்னி சொல்லிறேன்..

MANO நாஞ்சில் மனோ said...

//ஒரு நாள் நிதானமாக யோசித்துவிட்டு, முடிவு எடுக்கலாம்.//

என்ன சொல்ல வர்றாருன்னு புரியுதா..??? அதாவது ஒரு நாள் தண்ணி அடிக்காமல் நிதானமா யோசிக்க சொல்றாரப்பூ....

சி.பி.செந்தில்குமார் said...

பதிவுலகில் பாபு said...

haa haa haa.. கலக்கல் சி.பி..

எங்கேயிருந்து இந்தப் படங்களைப் பிடிக்கறீங்க.. எல்லாம் டாப்..

நன்றி பாபு.. பாடங்களை படிக்கத்தான் கஷ்டப்பட்டேன்.. படங்களை பார்க்கவும் , பிடிக்கவும் இஷ்டப்பட்டேன்

MANO நாஞ்சில் மனோ said...

//புதிய விதி முறைன்னா எப்படி? புரியும் ஊழலில் மக்களுக்கு 50 % கொடுத்துடனும்னா? பட் இந்த டீலிங்க் நல்லாருக்கு..//

மக்கா மக்கா என் பங்கு சரியா எனக்கு வந்துரனும்...

சி.பி.செந்தில்குமார் said...

Blogger Thirumalai Kandasami said...

எங்க தொகுதி பரமத்தில நிக்கும் அண்ணன் தனியரசுவையே தாக்கி பேசிடிங்க இல்ல?,,இன்னக்கி நைட்டே அண்ணனுக்கு போன் பன்னி சொல்லிறேன்..

ஏன் பகல்ல பேசுனா எடுக்க மாட்டாரா?

சி.பி.செந்தில்குமார் said...

MANO நாஞ்சில் மனோ said...

//புதிய விதி முறைன்னா எப்படி? புரியும் ஊழலில் மக்களுக்கு 50 % கொடுத்துடனும்னா? பட் இந்த டீலிங்க் நல்லாருக்கு..//

மக்கா மக்கா என் பங்கு சரியா எனக்கு வந்துரனும்...

என் கிட்டே கேட்டா..? டி வி டி தான் தருவேன்.. ஹி ஹி

MANO நாஞ்சில் மனோ said...

//நீங்க இப்போ தான் உணர்ந்தீங்களா? நாங்க தலைவர் கலைஞரின் பேரன்கள் ஹிந்தி படிக்க டியூஷன் போன பின்னும் அதை உணராம தமிழ் தமிழ் என தள்ளாடிட்டு இருக்கோம்..//

ஹே நான் நல்லா இந்தி மராட்டி எல்லாம் பேசுவேன் எனக்கு ஒரு சீட் தந்துருங்க....

MANO நாஞ்சில் மனோ said...

//சி.பி.செந்தில்குமார் said...
MANO நாஞ்சில் மனோ said...

//புதிய விதி முறைன்னா எப்படி? புரியும் ஊழலில் மக்களுக்கு 50 % கொடுத்துடனும்னா? பட் இந்த டீலிங்க் நல்லாருக்கு..//

மக்கா மக்கா என் பங்கு சரியா எனக்கு வந்துரனும்...

என் கிட்டே கேட்டா..? டி வி டி தான் தருவேன்.. ஹி ஹி//

எது வருத்தகறி டிவிடி'யா அவ்வ்வ்வ்வ்வ்வ்.....

MANO நாஞ்சில் மனோ said...

//சி.பி.செந்தில்குமார் said...
லஞ்ச் டைம் ல வடை /... ம் ம்//

போண்டா பஜ்ஜி வெட்டு குத்து அருவா கோடாலி கடப்பாரை கத்தி பிச்சுவா டீ காப்பி குண்டு இப்பிடியெல்லாம் இனி கேளுங்க ஹே ஹே ஹே ஹே...

சி.பி.செந்தில்குமார் said...

மங்கயருடன் மனோ கில்மா டி வி டி.. ஹி ஹி

நிரூபன் said...

எந்த பிணக்கும் இன்றி பணியாற்றுவது போல எந்த கணக்கும் இன்றியும் பணியாற்றினால் தேவல... ஏன்னா கணக்குப்பார்த்து வேலை செஞ்சுதான் தமிழன் நாசமா போயிட்டு இருக்கான்...//

அப்ப கால்குலேட்டரை எல்லோருக்கும் இலவசமாக கொடுக்க சொல்லிட்டா பிரச்சினை முடிந்து விடுமெல்லோ?

Unknown said...

பங்குக்கு நன்றி ஹி ஹி!

நிரூபன் said...

என்னது? தோல்வி பயமா? ஏ ஹே ஹே ஹே ... ஓட்டுக்கு ரூ 10000 கொடுக்கும் அளவு அவங்க கிட்டே பணம் இருக்கு. பணம் இருக்க பயம் ஏன்?//

இப்படியும் ஐயா சொன்னால் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லைத் தானே?
உங்களின் சம கால அரசியல் நையாண்டிக் கருத்துக்களை ரசித்தேன். உங்கள் கருத்துக்களுக்கு ஏற்றார் போல நீங்கள் இணைத்திருக்கும் கார்ட்டூன்களும் எம்மைச் சிரிக்க வைக்கின்றன.

Unknown said...

//9. மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் பாட்டீல் பேச்சு: என் தாய் மொழியான மராத்தியில் படித்தவன் நான். இதனால், எனக்கு இந்தி, ஆங்கிலம் சரியாக தெரியாது. 2008ல், மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நடந்த போது, இதன் பாதிப்பை உணர்ந்தேன். அப்போது, செய்தியாளர்கள் இந்தியில் கேட்ட கேள்விகள் எனக்கு சரியாக புரியவில்லை. இதனால், தவறாக பதில் அளித்தேன். மற்ற மொழிகளையும் கற்க வேண்டிய அவசியத்தை அப்போது உணர்ந்தேன்.

நீங்க இப்போ தான் உணர்ந்தீங்களா? நாங்க தலைவர் கலைஞரின் பேரன்கள் ஹிந்தி படிக்க டியூஷன் போன பின்னும் அதை உணராம தமிழ் தமிழ் என தள்ளாடிட்டு இருக்கோம்.. //

100% 100% 100%

காங்கேயம் P.நந்தகுமார் said...

இந்திய தேசிய லீக் மற்றும் விஜயகாந்த் நக்கல் செம தூக்கல் போங்க! ஆமா எப்பூடி!

thaniyarasu said...

dei pichcha s.p.senthilkumaar yen thalaivar annan Thaniyarasu avargala paththi comment adikka unakku yennadaa thaguthi irukku