கலைஞர் டி வி ல வர்ற உருப்படியான புரோகிராம்னா அது நாளைய இயக்குநர் நிகழ்ச்சிதான்.வளரும் இளம் இயக்குநர்களை ஊக்குவிக்கும்படியா குறும்படங்கள் வாரா வாரம் 4 போட்டு பரிசும் தர்றாங்க.கடந்த 3 வாரங்களா பிரபல எழுத்தாளர்களின் சிறுகதைகளை மையமா வெச்சு குறும்படங்கள் வர்றது வரவேற்கத்தக்க விஷயம்.
1. மழைக்காலங்கள் ( சுபா) - இயக்கியது அருண்குமார்
ஒரு மனிதனின் வாழ்வில் பல்வேறு கால கட்டங்களில் சந்திக்கும் மழைக்காலத்தை பற்றி கவிதையா சொல்ல முயன்றிருக்கிறார்.கதையா படிக்கறப்ப இருந்த பாதிப்பு குறும்படத்துல வர்லை. பொதுவா இது சகஜமா நடக்கறதுதான்.ஏன்னா எழுத்தாளணின் பேனா எழுதிய விஷயங்களை படிக்கிற வாசகன் தன் கற்பனைக்கேற்றபடி இந்த சம்பவத்தை நினைச்சுப்பாத்துக்கறான்.. அதுவே திரையில் பார்க்கும்போது அவன் நினைச்ச பிம்பத்துக்கும், இயக்குநர் காட்டற பிம்பத்துக்கும் ஒரு இடைவெளி வந்துடுது.அதனாலதான் கதைகள் படங்களாக ஆகும்போது இயக்குநர் இரண்டு மடங்கு எச்சரிக்கையுடன் பணி ஆற்ற வேண்டி இருக்கு.பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் அருண்.
2.மஹா என்கிற மாடு ( சுஜாதா) -இயக்கியது திருப்பூர் ராம்
அமரர் சுஜாதா எழுதுன குதிரை என்ற ஹாஸ்யக்கதையை கையில் எடுத்துக்கிட்ட நண்பர் திருப்பூர் ராம் அடிப்படையில் ஒரு கவிஞர்.கவிதைல கலக்குனவர் காமெடிக்கதைல கை வரிசை காட்டுனது பாராட்டப்பட வேண்டியது.
மூலக்கதைல ஹீரோவை குதிரை ஒண்ணு கடிச்சிடும்.அதனால அவன் சந்திக்கிற பிரச்சனைகளை காமெடியோட சொல்லி இருப்பாரு சுஜாதா.ராம் இந்த கதைல குதிரைக்குப்பதிலா மாடு கடிக்கற மாதிரி கதையை கொண்டு போயிட்டாரு.
ரசித்த வசனங்கள்
1. டாக்டர்.. என்னை ஒரு மாடு கடிச்சிடுச்சு.. கடிச்சுட்டு முறைச்சுது..
உங்க சதை டேஸ்ட்டா இல்லையோ என்னவோ..?
2. வாடா .. ஜூஸ் கடைக்குப்போலாம்..
சரி.. எனக்கு அருகம்புல் ஜூஸ் குடு...
அடப்பாவி மாடு கடிச்சதுல இருந்து நீ மாடாவே மாறிட்டு வர்றே....
3. சரி,, மாடு கடிச்ச ராசி எப்படி இருக்குதுன்னு போய்பார்ப்போம்..யோவ்.. கிளி ஜோசியரே...எனக்கு ஒரு சீட் எடுத்து ராசிபலன் சொல்லுய்யா..
பரவால்ல .. உங்களுக்கு கோமாதா சீட்டு வந்திருக்கு.
மறுபடியும் மாடா... எஸ்கேப்.....
இந்தக்கதைல மாடு கடிச்சவரோட நண்பனா வர்றவரோட நடிப்பு நல்லாருந்தது.மாடு கடிச்ச நபரோட நடிப்பு ஓவர் ஆக்டிங்க்.இயக்குநர் ஒவ்வொரு சீன்லயும் தடுமாறி இருக்கறது அப்பட்டமா தெரியுது.ஒரு சீன் முடிக்கறப்ப நாம இந்த சீனை பக்காவா எடுத்துட்டோம்னு நம்பிக்கை வரனும். ஆனா ராம் ஏனோ சுஜாதா கதைங்கறதால டென்ஷன் ஆகிட்டார் போல..
ஆனா ஒரு ஆச்சரியம் இந்த படத்துக்குத்தான் முதல் பரிசு கிடைச்சது.
3. குகை ( பி கே பி ) - இயக்கியது மணிவண்ணன்
தொல்பொருள் ஆராய்ச்சியாளர் தனது நண்பனும், பி ஏவுமான வில்லனை கூட கூட்டிட்டு போறார். போற வழில ஏற்படற வாக்குவாதத்தால வில்லன் ஹீரோவை போட்டுத்தள்ளிடறான்.மறுபடி ரிட்டன் ரயில்ல வர்றப்ப மற்ற ஃபிரண்ட்ஸ் மூலம் தான் கொலை செஞ்சவன் தன்னை நல்ல நண்பனா நினைச்சான் அப்படிங்கற மேட்டர் தெரிஞ்சு குற்ற உணர்ச்சி தாங்காம தற்கொலை பண்ணிக்கறான்.இதுதான் கதை. கதைல பெரிய மைனஸ் நம்பகத்தன்மை கொஞ்சம் கூட இல்லை.
பாராட்ட வேண்டிய ஒரே விஷயம் இந்த 5 நிமிஷ குறும்படத்துக்காக இயக்குநர் ராஜஸ்தான் பாலைவனம் போய் படம் பிடிச்சதுதான்.பொதுவாவே தமிழ் சினி ஃபீல்டுல ஒரு பழக்கம் உண்டு. கதை சரி இல்லைன்னா படம் பூரா ஃபாரீன் லொக்கேஷன்ஸ்ல எடுத்து மைனஸ்ஸை பிளஸ் ஆக்க ட்ரை பண்ணுவாங்க.அதைத்தான் நம்ம மணியும் பண்ணி இருக்கார். ஆனா எடுபடலை.
4. அதே முகம் ஆசை முகம் ( சுஜாதா) - இயக்கியது ரங்கநாதன்
2 வெவ்வேறு கால கட்டங்களில் நடக்கும் கதைகள் எந்தப்புள்ளில எப்படி இணையுதுன்னு சொல்ற மேஜிக் ரியலிச கதை.ஒரிஜினல் சிறுகதையின் தலைப்பு ஒரு கதையில் இரு கதைகள்.
சரித்திர காலத்தில் நடக்கும் கதையில் இளவரசியாக நடிப்பவர் சுமார் ஃபிகர்தான். கலக்கலான ஃபிகராக போட்டிருக்கலாம்.( சம்பளம் ஓவரா கேட்டிருப்பாரோ?)அவர் ஷகீலா ரேஞ்சுக்கு லோ கட் டிரஸ்ஸில் வருவது பாத்திரத்தின் கண்ணியத்தையே குறைத்து விட்டது.அதே போல் லிப்ஸ்டிக்கும் ஓவர் டோஸ்.
2வது கதையில் வரும் இளஞ்சோடிகளின் வாக்குவாதம் அழகு கவிதை.
பளிச் வசன மின்னல்
டியர்.. உன் எண்ணங்கள்ல வண்ணம் (கலர் ) இல்லை.. எல்லாம் பிளாக் & ஒயிட்டாவே இருக்கு.. எனக்கு நீ சரிப்பட்டு வரமாட்டே..
இயக்குநர் ரொம்ப மெனக்கெட்டு பண்ணி இருந்தார்.இதுக்குத்தான் முதல் பரிசு கிடைக்குனு நினைச்சேன்.ஆனா ஹாய் மதன் 2 கதையும் எந்தப்புள்ளில இணையுதுன்னு நீங்க காட்டவே இல்லைன்னு காரணம் சொன்னார். அவர் சுஜாதாவோட ஒரிஜினல் கதையை படிக்கல போல.
அப்படி காட்ட வேண்டிய அவசியம் இல்ல. ஏன்னா அப்படி ஒரு சம்பவம் நடக்க சான்ஸ் இல்ல. சும்மா பார்வையாளரை திகைப்பில் ஆழ்த்த கணடறியப்பட்ட உத்தி அது.
சரி விடுங்க , ரசனை என்பது மனிதனுக்கு மனிதன் மாறுபடும் தன்மை உடையது.
TASTE DIFFER FROM PERSON TO PERSON.
29 comments:
vadai,bondaa,bajji
//சரி விடுங்க , ரசனை என்பது மனிதனுக்கு மனிதன் மாறுபடும் தன்மை உடையது//
கடைசில பன்ச் ஒண்ணு குடுத்திருக்கீங்க!
யு டயுபில கிடைக்குமான்னு பாக்கணும்! :-)
யார் அந்த சுஜாதா எந்த பட நடிகை
/கலைஞர் டி வி ல வர்ற உருப்படியான புரோகிராம்னா அது நாளைய இயக்குநர் நிகழ்ச்சிதான்//
இன்னொன்னு வருது அண்ணா .. வெற்றிச் சரித்திரம் .. அதுவும் உருப்படிதான் ..
//எழுத்தாளணின் பேனா எழுதிய விஷயங்களை படிக்கிற வாசகன் தன் கற்பனைக்கேற்றபடி இந்த சம்பவத்தை நினைச்சுப்பாத்துக்கறான்.. அதுவே திரையில் பார்க்கும்போது அவன் நினைச்ச பிம்பத்துக்கும், இயக்குநர் காட்டற பிம்பத்துக்கும் ஒரு இடைவெளி வந்துடுது.//
பெரிய பெரிய விசயமெல்லாம் பேசுறீங்க ..
//ஆனா ஒரு ஆச்சரியம் இந்த படத்துக்குத்தான் முதல் பரிசு கிடைச்சது.//
காமெடி இருந்ததால இருக்கலாம் ..
//பாராட்ட வேண்டிய ஒரே விஷயம் இந்த 5 நிமிஷ குறும்படத்துக்காக இயக்குநர் ராஜஸ்தான் பாலைவனம் போய் படம் பிடிச்சதுதான்.//
அட பாவமே .. இருந்தாலும் பெரிய ஆளுதான் ..
நல்ல தொகுப்பு....
//அப்படி காட்ட வேண்டிய அவசியம் இல்ல. ஏன்னா அப்படி ஒரு சம்பவம் நடக்க சான்ஸ் இல்ல. சும்மா பார்வையாளரை திகைப்பில் ஆழ்த்த கணடறியப்பட்ட உத்தி அது.
/
அடடா .. நீங்க ஒரு எழுத்தாளர் .. ஹி ஹி ஹி
சுஜாதா கதைன்னா ஸ்வாரஸ்யத்துக்கு பஞ்சம் இல்லை
முதல் தடவையா இங்க வரேன். நானும் ஒரு ப்ளாக் ஆரம்பிச்சிருக்கேங்க. உங்க வாழ்த்தையும் கருத்தையும் வரவேற்கிறேன் நண்பா.
எதிர்பார்ப்புடன் ஆவலாய்.. இந்த மழலை.
Nice....
நாளைய இயக்குனர்கள் கண்டிப்பாக தமிழ் சினிமாவை புதிய கோணத்தில் உலகத்தரத்திற்கு கொண்டுச் செல்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது..
விமர்சனமும் அருமை...
ok
சுஜாதா கதைகளை படமா எடுக்கிறேன் பாடமா எடுக்கிறேன்னு சொல்லிட்டு அதன் உயிரோட்டத்தை கெடுக்காமல் இருந்தால் சரிதான்....
ஆஹா ஓஹோ
சுஜாதா ஒரு சரித்திரம்னு சொல்லுவேன்.....
நானும் தொடர்ந்து பார்க்கும் மிகவும் பிடித்த நிகழ்ச்சியில் இதுவுமொன்று !
நல்ல தொகுப்பு....
நானும் பார்த்து வியக்கிற ப்ரோக்ராம்...ம்ம்
என்ன ஆச்சி தல பட விமர்சனத்தில் இருந்து குறும்படம் விமர்சனத்துக்கு இறங்கிடீங்க .......
அடுத்து என்ன விளம்பர பட விமர்சனமா ?
அதுல வசனம் இருக்காதே என்ன செய்வீங்க?
சி.பி.செந்தில்குமார் :- நீயெல்லாம் திரை விமர்சனம் எழுத ஆரம்பிச்சிட்ட அப்புறம் நாங்க வேற என்ன தாண்டா பண்றது ...
-----------------------------------------------------------------------------------------------------------------------
சாரி தல உங்க பதிலையும் நானே டைப் பண்ணீட்டேன் .............
இது வரை இந்த நிகழ்ச்சியை பார்த்ததில்லை இனி பார்க்க போகிறேன் , அவ்வளவு அழகான விளக்கம்
நன்றி
ஜேகே
mmm interesting.first i ve voted then im going to watch da programmes in net.
Good Programme, Good review...
//>>>பைத்தியங்கள் பல விதம். அதில் நிறைய பேர்கள் தமிழில் பதிவும் எழுதுகிறோம்.
ennaiththaanee sonningka.. hi hiஎன்னைத்தானே சொன்னீங்க.. ஹி ஹி//
-----------சி.பி.செந்தில்குமார் சொன்னது
சத்கியமாக இல்லை. என்னையே நான் சொல்லிகொண்டேன் சற்று பொதுவாக.
உங்களையெல்லாம் அப்டி சொல்ல முடியுமா சாரே!! நீங்க எல்லாம்" டாக்டர்" பட்டம் வேறு வெச்சிருக்கீங்க !
மற்றபடி டி. வி க்கும் நமக்கும் ஆகாது நைனா :)))) அதுக்கு முந்தி குந்திகினா அந்த எடத்திலே எரிச்சல் வந்துகினு......வேண்டாம்.
Late attendance...
இதுவும் வெளங்கிருச்சு............
படங்கள் சூப்பர்.... (அப்போ கவித.....?)
நாளைய இயக்குனரில் வரும் பல குறும்படங்கள் முழுநீள சினிமாப் படங்களைவிட சுவாரசியமாக இருக்கின்றன.
Post a Comment