Sunday, February 27, 2011

DRIVE ANGRY - ஹாலிவுட் சினிமா விமர்சனம் - 18 +

http://www.traileraddict.com/content/summit-entertainment/drive_angry.jpg
தமிழனின் காதில் பூ சுற்றும் உரிமையும், திறமையும் நமது தன்மானத்தமிழர் டாக்டர் கலைஞருக்கும், புரட்டுத்தலைவி ஜெவுக்கும் மட்டும் தான் உண்டு என நாம் நம்பி வந்த இந்த கால கட்டத்தில் அவர்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் விதத்தில் காதில் பூவை மட்டும் அல்ல ,பூக்கூடையையே வைக்கும் கதை ,திரைக்கதையுடன் களம் இறங்கி இருக்கிறார்கள்  அதுவும் ரசிக்கும் விதத்தில்.

பொதுவாக தமிழனுக்கு ஒரு பழக்கம் உண்டு... தமிழில் இந்த மாதிரி நம்ப முடியாத கதை வந்தால் கேக்கறவன் கேனயனா இருந்தா கே ஆர் விஜயா கொண்டைல கே டி வி தெரியுதுன்னு சொல்வாங்களே என எள்ளி நகையாடுவான்.அதுவே ஹாலிவுட்ல வந்தா மம்மியைக்கண்ட ஓ பன்னீர் செல்வம் மாதிரி பம்மிக்கிட்டே படத்தை ரசிப்பாங்க...

சரி .. படத்தோட கதை என்ன? தன்னோட பெண்ணை கொலை செய்த வில்லன் குரூப்பை பழி வாங்குற அப்பாவோட கதை தான்.. இதுல காதுல பூ மேட்டர் என்ன>ன்னு கேக்கறீங்களா? பொண்ணோட அப்பாவும் இறந்துடறாரு. நரகத்துல எம கிங்கரர்கள் அஜாக்கரதையா இருந்தப்ப தப்பி பூலோகத்துக்கு வந்துடறாரு.(ராம்தாஸ் திடீர்னு கலைஞர் கூட்டணிக்கே வந்த மாதிரி).பழி வாங்கும் படலத்தினை முடிச்சுட்டு பேத்தியை (மழலை) ஹீரோயின் கைல ஒப்படைச்சுட்டு  மறுபடி கார்ல (புஷ்பக விமானம்!!!) பேக் ட்டூ பெவிலியன் கணக்கா போயிடறாரு.


http://www.onlinemovieshut.com/wp-content/uploads/2010/08/Untitled-1.jpg
ஆனா இந்த சாதாரண கதைக்கு திரைக்கதை அமைத்த விதம், காட்சிகளில்,ஒளிப்பதிவில் காட்டி இருக்கும் பிரம்மாண்டம் இதை ஒரு வெற்றிப்படமாக்கி இருக்கு.ஓப்பனிங்க் சீன்ல பார்ல வேலை செய்யற  2 ஃபிகர்கள்ட்ட பேசி தகவல் கறக்கற இடம் செம ஜாலி. அப்போ ஒரு லிப் டூ லிப் சீனும் உண்டு.

அஜால் குஜால் ரசிகர்களை திருப்திப்படுத்தற மாதிரி ஒரு கலக்கலான டாப்லெஸ் சீனும் உண்டு.. எஞ்ஜாய்.

அர்னால்டு ஸ்வார்ஜெனேகர் நடிச்ச த டெர்மினேட்டர் 2 ஜட்ஜ்மெண்ட் டே படத்தோட பாதிப்புகள் பல இடத்துல வர்றதை டைரக்டர் தவிர்த்திருக்கலாம்.ஹீரோ நிக்கோலஜ் கேஜ் நல்லா பண்ணி இருக்காரு.. ஜீன் கிளாடு வாண்டம் பண்ண வேண்டிய கேரக்டர்.

http://static.igossip.com/photos_2/january_2011/Drive_Angry_3D_amber_heard.jpg
ஹீரோயின் நல்ல ஃபிகர் தான். அவர் ஓனரிடம் சண்டை போட்டுட்டு உடனே ரிசைன் பண்ணுவது, காதலன், காதலி வரமாட்டாங்கற நம்பிக்கைல வேற ஒரு ஃபிகர் கூட அவ வீட்லயே ஜல்சா பண்ணிட்டு இருக்கறது, அவளைப்பார்த்ததும் சண்டை  போடறது எல்லாமே டிராமா மாதிரி இருந்தாலும் ரசிக்கற மாதிரி இருக்கு. ( ஆமா.. சீன் இருக்குல்ல.. ரசிக்காம..?)

அதுக்குப்பிறகு ஹீரோயின் காதலனை கழட்டி விட்டுட்டு ஹீரோ கூட சேர்ந்து பயணப்படறது முதல் ஆக்‌ஷன் அதகளம்.படம் செம ஸ்பீடு... படம் லாஜிக் ஓட்டைகளையும் , திரைக்கதை சொதப்பல்களையும் மீறி விறுவிறுப்பா போகுதுன்னா டைரக்டரின் சாமார்த்தியமான டைரக்‌ஷன் தான்.

ஹீரோவின் பேத்தி ( 2 மாச அட்டுக்குழந்தை)யை நர பலி கொடுக்க வில்லன் குரூப் முயல்வது.. அதை ஹீரோ தடுப்பது எல்லாம் ராமநாராயனன் படம் மாதிரி இருக்கு.

கடைசில ஹீரோ வில்லனை கொன்னு பழி வாங்குன பிறகு வில்லனோட மண்டை ஓட்டுல ரத்தம் குடிக்கற சீன் ரொம்ப கொடூரம். எப்படி சென்சார்ல விட்டாங்களோ?

நரகத்துல இருந்து கடவுளோட தூதுவனா வர்றவரு (!!!???) ஒவ்வொரு முறை போலீஸ் சூழும்போதும் பதட்டப்படாம ஒரு காய்னை தூக்கி மேலே வீசுவதும், அது கீழே வரும்போது FBI  ID CARD டாக வருவதும் கொள்ளை அழகு. செம ஸ்டைலிஸ்ஸான சீன் அது.( கோலிவுட் உல்டா டைரக்டர்ஸ் நோட் டவுன் ப்ளீஸ்)


http://collider.com/wp-content/uploads/Amber-Heard.jpg

வேகமாக போகும் படத்தில்  வந்த விவேகமான வசனங்கள்

1. ஹீரோ - இது என் பர்ஸ்.. உன் கைக்கு எப்படி வந்தது?


ஹீரோயின் - இது என்ன கேள்வி? திருடுனேன்.

2.   ஹீரோயின் - அவனை உங்களுக்கு முதல்லயே தெரியுமா?

 ஹீரோ - ம் , அவனோட அக்கா எனக்கு ஃபிரண்டு....

ஹீரோயின் - ஓஹோ, அதான் உங்களை முறைச்சு முறைச்சு பார்த்தானா?

3.  வண்டியை நிறுத்து.......

ஸாரி.. எனக்கு வேலை இருக்கு... 

டேய்.. இது போலீஸ் உத்தரவு...... துப்பாக்கிக்காவது மரியாதை குடுங்கடா...

4. அடக்கடவுளே......

ஆமா.. நிஜமாவே நான் கடவுள் தான். இன்றைய ட்ரெண்டுக்குத்தக்கபடி கெட்டப் மாத்திக்கிட்டேன்.

5.  அய்யய்யோ.. நான் பயத்துலயே செத்துடுவேன் போல இருக்கே...

கவலைப்படாதே.. உனக்கு 72 வயசு வரை ஆயுள் கெட்டி... உனக்குப்பக்கத்துல கவலை இல்லாம தெனாவெட்டா நிக்கறானே.. அவனுக்கு இன்னும் 4 நாள் தான் ஆயுள்....

6. மனைவிக்கு நல்ல கணவனா நடந்துக்காதவன் கூட தன்னோட மகளுக்கு ஒரு நல்ல அப்பாவா நடந்துக்கற அதிசயத்தை நாம தினம் பார்த்துட்டுதான் இருக்கோம்.

7. நமக்குப்பிரியமானவங்களுக்கு நடக்கர கொடுமையை நாம நேர்ல பார்த்துடா அந்த காட்சி காலாகாலத்துக்கும் நம்ம மனக்கண்ல வந்துட்டு வந்துட்டு போறதை தடுக்க முடியாது...

ஈரோடு வி எஸ் பி தியேட்டர்ல 3டி எஃப்ஃபக்ட் இல்லாம பார்த்தேன். ஆனா போஸ்டர்ல 3 டி அப்படின்னு போட்டிருக்கு. ஒரு வேளை சென்னைல அப்படி இருக்கலாம்.ஆக்‌ஷன் பட பிரியர்கள், ஒரு சீன் இருந்தாலும் அந்தப்படத்தை மிஸ் பண்ணிடக்கூடாது என்ற லட்சியம் (!!!??) உள்ளவர்கள் பார்க்கலாம்.







ஆரானின் காவல் -ஹாலிவுட் ரேஞ்ச் - சினிமா விமர்சனம்



    22 comments:

    தமிழ் 007 said...

    ஹாலிவுட் வடை எனக்குத்தான்

    தமிழ் 007 said...

    NICE GIRLS

    தமிழ்வாசி பிரகாஷ் said...

    அண்ணே! உங்க நக்கல் கேள்வியை கேளுங்க

    வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்
    கேள்விகள் கேட்கப் போவது நீங்கள் தான். சீனா பதிலளிக்க காத்திருக்கிறார். மேலும் விபரங்களுக்கு மேற்கண்ட LINK- ஐ பார்க்கவும்.

    தமிழ் 007 said...

    //பொதுவாக தமிழனுக்கு ஒரு பழக்கம் உண்டு... தமிழில் இந்த மாதிரி நம்ப முடியாத கதை வந்தால் கேக்கறவன் கேனயனா இருந்தா கே ஆர் விஜயா கொண்டைல கே டி வி தெரியுதுன்னு சொல்வாங்களே என எள்ளி நகையாடுவான்.அதுவே ஹாலிவுட்ல வந்தா மம்மியைக்கண்ட ஓ பன்னீர் செல்வம் மாதிரி பம்மிக்கிட்டே படத்தை ரசிப்பாங்க...//

    தமிழனை நல்லா புரிஞ்சு வச்சிருக்கீங்க தல.( இருந்தாலும் இப்படி நாலு பேரு முன்னாடி வச்சு அசிங்கப்படுத்தி இருக்கக் கூடாது)

    Jana said...

    ஹீரோயின் - அவனை உங்களுக்கு முதல்லயே தெரியுமா?

    ஹீரோ - ம் , அவனோட அக்கா எனக்கு ஃபிரண்டு....

    ஹீரோயின் - ஓஹோ, அதான் உங்களை முறைச்சு முறைச்சு பார்த்தானா?


    ஹி..ஹி..ஹி..
    இன்றே இந்தப்படம் பார்த்துடுவன்.

    Thirumalai Kandasami said...

    //பொதுவாக தமிழனுக்கு ஒரு பழக்கம் உண்டு... தமிழில் இந்த மாதிரி நம்ப முடியாத கதை வந்தால் கேக்கறவன் கேனயனா இருந்தா கே ஆர் விஜயா கொண்டைல கே டி வி தெரியுதுன்னு சொல்வாங்களே என எள்ளி நகையாடுவான்.அதுவே ஹாலிவுட்ல வந்தா மம்மியைக்கண்ட ஓ பன்னீர் செல்வம் மாதிரி பம்மிக்கிட்டே படத்தை ரசிப்பாங்க...//


    Super ..

    King Viswa said...

    என்னடா இன்னும் வரலையேன்னு பார்த்தேன்.

    ஒக்கே, நீங்க ஸ்பீடுதான்.


    கிங் விஸ்வா
    தமிழில் தமிழ் காமிக்ஸ் உலகம் - வாண்டுமாமாவின் மகத்தான படைப்பு - புலி வளர்த்த பிள்ளை

    Anonymous said...

    //புரட்டுத்தலைவி ஜெவுக்கும்//

    என்ன அண்ணே இது??

    Anonymous said...

    ஹீரோயினை வர்ணிக்க ஒரு பத்தி போயிடுது

    அஞ்சா சிங்கம் said...

    //////////சரி .. படத்தோட கதை என்ன?////////////////////

    அதுல்லாம் நமக்கு எதுக்கு தல ...........

    'பரிவை' சே.குமார் said...

    vimarsanam arumai...

    ரஹீம் கஸ்ஸாலி said...

    i am present

    ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

    I am in the area!

    ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

    நரகத்துல இருந்து கடவுளோட தூதுவனா வர்றவரு (!!!???) ஒவ்வொரு முறை போலீஸ் சூழும்போதும் பதட்டப்படாம ஒரு காய்னை தூக்கி மேலே வீசுவதும், அது கீழே வரும்போது FBI ID CARD டாக வருவதும் கொள்ளை அழகு. செம ஸ்டைலிஸ்ஸான சீன் அது.( கோலிவுட் உல்டா டைரக்டர்ஸ் நோட் டவுன் ப்ளீஸ்)


    i wanna c it

    செங்கோவி said...

    வீட்டுக்குப் போறீங்களா..இல்லே, தியேட்டர்கள்லயே தங்கிடுதீங்களா?

    MANO நாஞ்சில் மனோ said...

    ஒரு மண்ணும் புரியலையே மக்கா...

    Unknown said...

    நல்ல விமர்சனம் சிபி அப்படியே அந்த சீசன் டிக்கட்டு கேட்டனே இன்னும் வரல பாத்துக்கங்க அருவா அருவா!

    Riyas said...

    //பொண்ணோட அப்பாவும் இறந்துடறாரு. நரகத்துல எம கிங்கரர்கள் அஜாக்கரதையா இருந்தப்ப தப்பி பூலோகத்துக்கு வந்துடறாரு//

    அடடா..இப்பிடியுமா..?
    நீங்க லக்கிமேன் படம் பார்க்கல்லயா அதுலயும் செம காமெடி..

    வழமை போல் சூப்பர் சி.பி

    Unknown said...

    எச்சரிக்கை/வார்னிங்!
    ************************
    இனி வரும் காலங்களில் சி பி கவர்ச்சி நாயகிகளின் படங்களை "பெருசாக"
    போடுவாராயின் அவரின் வீட்டு சுவரில் அதை விட "பெரிய"சைஸ் படம் எங்கள் ஆதரவாளர்களால் மாட்டப்படும் என்பதை
    தெரிவித்துக்கொள்கிறோம்.
    _______________________________
    இப்படிக்கு-௦கவர்ச்சி படங்களை பார்த்து கடுப்பாவோர் சங்கம்!

    Unknown said...

    ஹிஹி விடுங்க பாஸ்..இவனுங்க இப்பிடி தான் கேளம்புவாங்க...நீங்க போடுங்க நாங்க இருக்கம் பாஸ் பார்க்க!

    Unknown said...

    ஏன் பாஸ் "பிரபல மொக்கை பதிவர்" என்ற பெயர் பிடிக்கலையா?

    ஹேமா said...

    சிபி....எப்பவும்போல.உங்க 300 ஆவது பதிவைத் தாண்டினதுக்கும் வாழ்த்து !