Friday, February 04, 2011

யுத்தம் செய் - சஸ்பென்ஸ் த்ரில்லர் - சினிமா விமர்சனம்

http://www.tamilnow.com/movie/images/yutham-sei.jpg

காதல் கதையை எந்த அளவு அழகியல் ரசனையோடு சொல்ல முடியுமோ அதே மாதிரி ஒரு க்ரைம் இன்வெஸ்டிகேஷன் ஸ்டோரியையும் மென்மையாக சொன்னதற்காகவே  இயக்குநர் மிஷ்கின் பாரட்டுக்கு உரியவர் ஆகிறார்.சாஃப்ட் ஹீரோ என பெயர் எடுத்த யதார்த்த நாயகன்  சேரன் இந்த படத்தில் அண்டர் ப்ளே ஆக்டிங்க்கின் எல்லை வரை சென்று அடக்கி வாசித்திருக்கிறார்.

படத்தோட கதை என்ன?சொல்றக்கு தர்மசங்கடமா இருந்தாலும் முடிஞ்சவரை கவுரவமான வார்த்தைகளில்  சொல்றேன்.பெண் சுகத்தை அனுபவிக்க முடியாத 60 வயசு கிழ போல்ட்டுங்க ஆள் வெச்சு பெண்களை கடத்திட்டு வந்து குடோன்ல தங்களோட அடியாளை விட்டு ரேப் பண்ண சொல்லி லைவ் ஷோ பார்க்கறாங்க. அவங்க காரியம் முடிஞ்சதும் கொலை பண்ணிடறாங்க.. பாதிக்கப்பட்ட ஒரு பொண்ணோட பெற்றோர் அந்த கும்பலை பழி வாங்கறாங்க..

கேட்கறதுக்கு சங்கடமா இருக்கற கதையோட ஒன்லைனை இயக்குநர் முடிஞ்சவரை ரொம்ப டீசண்ட்டா சொல்லி இருக்கார்..வெல்டன் ஒர்க்.


படத்தோட ஓப்பனிங்க் ஷாட்ல இருந்தே தன்னோட ஃபேவரைட் டாப் ஆங்கிள் ஷாட்ஸ்,ஒயிடு ஆங்கிள் ஷாட், சிம்பாலிக் ஷாட்னு இயகுநர் அசத்தறார்.சேரன் அறிமுக காட்சி எந்த பில்டப்பும் இல்லாம சாதாரணமா இருக்கறதே நல்லாருக்கு.. ஆனா அவரால ஒரு சி பி சி ஐ டிக்கான தோரணை, பாடி லேங்குவேஜ் இதெல்லாம் மெயிண்ட்டெயின் பண்ண முடியல.உயரம் கம்மி,எக்சசைஸ் பாடி இல்லை.. இருந்தும் இவரைக்களம் இறக்கியது துணிச்சல்தான்




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi7coTQrjvLNBH5oGH8bibFpZN41QkoIBUbG4cXKjhlKGbrCN3c7dl9LxPuHlqkCS3XBhAwF7pH_yuUebbzEhk10APpuU8twGXU92I5DDhYsMhqVZdEkkHaL3Vr9DQah7JOSnMqpZYGHmdL/s1600/Yutham-Sei-Poster-3.jpg
சேரன் மேலதிகாரியையோ,சக ஆஃபீசர்ஸையோ மதிக்காம தெனாவெட்டா நடக்கறது விக்ரம் பட கமல் நடிப்பை ஞாபகப்படுத்துது...அப்படி அவர் நட்ந்துக்க காரணம் தன்னோட தங்கை கடத்தப்பட்டதுதான் என்பதை இன்னும் அழுத்தமாக சொல்லி இருக்கலாம்.

அதே போல் ஒரு போலீஸ் ஆஃபீசருக்குண்டான டிரஸ்ஸிங்க்சென்ஸ் என்ன?என்பதை சேரன் சரியாக அப்சர்வ் பண்ணாமல்  இருக்கிறார்
(அன் யூனிஃபார்ம்ல இருக்கறப்ப கட்டம் போட்ட சட்டை போடறது, சட்டையின் முதல் பட்டனை கழட்டி விட்டிருக்கறது...இப்படி..)

படம் போட்ட முதல் 25 நிமிஷங்களுக்கு பின்னணி இசை ஒரு ஆர்ட் ஃபிலிமுக்குண்டான இசை தான். இயக்குநரின் அபார தன்னம்பிக்கை அசர வைக்கிறது.


போலீஸ் என்கொயரி நடத்தும்போது சேரனின் பாடி லேங்குவேஜ் அழகு..அவர் என்கொயரியில் உதவி செய்த சிறுமிக்கு கை கொடுத்து நெகிழ்வது பரவசமான காட்சி.


http://mimg.sulekha.com/tamil/yudham-sei/yudham-sei_m.jpg
எல்லாவற்றையும் விட முக்கியமாக சிலாகித்து சொல்ல வேண்டிய விஷயம் இடைவேளைக்கு முன் வரும் அந்த ஃபைட் சீன் தான்.. நடை பாதை (பாலம்)யில் சேரன் நடந்து வர்றார்.. வில்லன் குரூப் கத்திகளுடன் வர சாதாரணமாக சமாளிக்கும் அந்த சீன் ஃபைட் மாஸ்டர், இயக்குநர்,ஹீரோ,ரீ ரெக்கார்டிங்க் என கலக்கலான காக்டெயில் உழைப்பு.அதுவரை ஒரு இறுக்கத்துடன் செல்லும் படம் அப்போதுதான் முதல் அப்ளாஸை அள்ளுகிறது.

வீட்டுக்குள் கூட சேரன் ஷூ போட்டுட்டே சுத்தறது ஏன்?னு தெரியல.அப்புறம் சில சீன்களில் பிரவுன் கலர் ஷூ போட்டு வரும் சேரன் அடுத்த ஷாட்டில் பிளாக் கலர் ஷூ போட்டு வர்றார். கண்ட்டினியூட்டி மிஸ்ஸிங்க்..

பிரமாதமாக எதிர்பார்க்கப்பட்ட கன்னித்தீவுப்பொண்ணா? கட்டழகு கண்ணா? பாட்டு செம டப்பாங்குத்து... அந்த பாட்டுக்கான டான்ஸ் மூவ்மெண்ட்,குதூகல இசை எல்லாம் கலக்கலாக இருந்தும் அந்தப்பாடல் வலுக்கட்டாய இடைச்செருகல் என்பதால் ஆடியன்சை பிரமாதமாக கவரவில்லை.அது திரைக்கதையின் இறுக்கத்துக்கு கிடைத்த வெற்றி.

அந்தப்பாட்டில் குரூப் டான்சர்கள் டீசண்ட்டாக புடவையில் வருவதும்,அவர்கள் கூந்தலோரம் ஒரு பெரிய பூ சூடி வருவதும் வித்தியாசம்.

அதே போல் என்கொய்ரியின் போது சேரன் டான்ஸ் கிளாசில் டீச்சரிடம் விசாரணை செய்கையில் பின்புலத்தில் தெரியும் ஃபிகர்கள் செம ஃபிரஸ்..( இந்த களேபரத்துலயும் உனக்கு கிளு கிளுப்பு கேட்குது?)

வழக்கமாக ஆங்கில படத்திலும் சரி, தெலுங்கு,தமிழ்ப்படங்களிலும் சரி..வில்லன் குரூப் ஜீப்களில் வந்து இறங்கும்போது காது ஜவ்வே கிழிஞ்சிடும்..ஆனால் இதில் சைலண்ட்டாக காண்பித்தே டெம்ப்போவை ஏற்றுகிறார்கள்.

ஒய். ஜி மகேந்திரனுக்கு வித்தியாசமான ரோல். கேரக்டருக்காக மொட்டை அடிச்சு நல்லா நடிச்சிருக்கார்.அவரது மனைவியாக வருபவர் க்ளைமாக்சில் கத்திக்குத்து பட்டதும் காட்டும் துடிப்பும், ரீ ஆக்‌ஷனும் அபாரம்.

ராஜேஷ் குமார் மாலை மதியில் எழுதிய வானவில்லுக்கு 1000 நிறங்கள் நாவலில் இருந்து சில சீன்கள் சுடப்பட்டுள்ளது. ( ராஜேஷ்குமாரே  எந்த ஆங்கில நாவலில் இருந்து சுட்டரோ?) குறிப்பாக ஒய் ஜி மகேந்திரன் தன் குடும்பத்தில் உள்ளது போலவே உயரம் எடை உள்ள அநாதை பிணங்களை ரெடி பண்ணீ கொளுத்திப்போடும் இடம்..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhb8F1TVr_PLW0nfugqv6FoS1mLqXcOYcJK4hR6IlZnowK00yu2BVoMIJk7EaSb7UW6kPhhrl8Yfulied6UYIPBmSWXidoXRSEMnzdunZTh96B15uDHuoHWvdvifkzTEKEM9efzDw39FjM/s1600/yaavarukkum.blogspot.com.jpg
வசனத்துக்கு வேலையே இல்லாத இந்தப்படத்திலும் ஆங்காங்கே தென்பட்ட வசன முத்துக்கள்

1.  அந்தப்பொண்ணு காணாம போயிட்டா....

இல்லை ஊரை விட்டு ஓடிப்போயிட்டா.. காதலனோட போறவ சொல்லீட்டா போவா?


2. கடைசில போலீஸ் விசாரனைல அவன் உண்மையை ஒத்துக்கிட்டான்.

ஒத்துக்கிட்டானா? ஒத்துக்க வெச்சீங்களா?

ம் , ஜட்ஜ்மெண்ட் கொடுத்த ஜட்ஜை போய் கேளுங்க...


3.   அந்தப்பொண்ணுக்கு என ஆச்சு?

ஏம்மா பொண்ணு , உனக்கு எதும் ஆகலையேன்னு சந்தோசப்படு.

4. நான் ஒரு போலீஸ்காரன். இன்னொரு போலீஸ்காரன் கிட்டே தோக்க மாட்டேன்..( அப்போ திருடன் கிட்டே தோத்தா பரவால்லியா?)


5. என் பொண்ணுக்கு என்ன ஆச்சு?

நீங்க பெத்த குழந்தைக்கு குழந்தை பெத்துக்கற உறுப்பு சிதைஞ்சு போச்சு...

6. வன்முறைன்னா என்னன்னே தெரியாத அந்த குடும்பம் வேட்டைக்கு தயார் ஆச்சு..


7. அமைதியான சூழல்ல வாழ்ந்த அந்த குடும்பத்தை அசிங்கமான இடத்துல புதைக்க வேண்டியதா போச்சே..

8. வாழ்க்கைன்னா என்ன? நரகம் தான் வேற எதுவும் இல்ல..(LIFE IIS NOTHING BUT HELL)

9. என் கண்ணுக்கு  அதெல்லாம் தெரியல. எனக்கு என் தங்கை வாழ்க்கைதான் முக்கியம்.

உன் சுயநலத்துக்காக சட்டத்தை அடகு வைக்க சொல்றியா?

10.கொஞ்சூண்டு அறிவை வெச்சுக்கிட்டு இவ்வளவு தப்பு பண்ண ஒருத்தனால முடிஞ்சா  இவ்வளவு அறிவை வெச்சு நாங்க எவ்வளவு பண்ணலாம்?

இயக்குநர் சறுக்கிய இடங்கள்

1. க்ளைமாக்சில் கத்தியால் வில்லனை 4 தடவை இப்படியும் அப்படியும் வெட்டுவது போல் வரும் சீனில் ரத்தம் பக்கெட்டில் இருந்து வருவது போல் வ்ந்துட்டே இருக்கு..

2. ஒரு சீனில் சேரனுக்கு முன் 3 போலீஸ் ஆஃபீசர்ஸூம் கை கட்டி நிக்கறாங்க..

3 ஒரு சீனில் அண்டர் கிரவுண்டில் காலை 6 மணீக்கு கூட்ட வரும் பெண் டெட் பாடியை பார்த்து அளறும் சீனில் மஞ்சள் வெயில் பிரகாசமாக அவ்வளவ் வருமா?

4. ஆரம்ப அறிமுக சீனில் சேரன் தன்னுடன் ஜூனியராக வரும் 2 ஆஃபீசர் பர்சனல் ஃபைலை குப்பைத்தொட்டியில் போடும் சீன்.

இயக்குநர் சபாஷ் வாங்கும் இடங்கள்

1. ஒரு ஆக்‌ஷன் திரில்லர் படத்துக்கு காதல், டூயட், காமெடி எல்லாமே அநாவசியமே என்பதை உணர்ந்து கலக்கலாய் திரைக்கதை அமைத்தது.

2.பல சந்தர்ப்பங்களில் ஃபைட் சீன் வைக்கும் வாய்ப்பு இருந்தும் அவற்றை தவிர்த்து விட்டு  ஒரே ஒரு சீனில் மட்டும் ஃபைட் வைத்தது..

3.பின்னணி இசை புலனாய்வுப்படத்துக்கு எந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்ந்து வேலை வாங்கியது.

4. பெண்களும் பார்க்கும்படி பாலியல் பலாத்கார கொலைக்கதையை எடுத்தது


சி செண்ட்டர் ரசிகர்களுக்கு படம் அவ்வளவாக பிடிக்காது. ஏ செண்ட்டர்களில் 70 நாட்கள் ஓடும் ( ஏப்ரல் 14).. பி செண்டர்களில் 40 டூ 50 நாட்கள் ஓடும்.

எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் விமர்சனம் மார்க் - 42

..எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க்கிங்க் - ஓக்கே

டிஸ்கி -

தூங்கா நகரம் - சினிமா விமர்சனம்

38 comments:

karthikkumar said...

VADAI

karthikkumar said...

முதல் காட்சி பாக்கலாம்னு இருந்தேன் சித்தப்பா. ஆனா இங்க straike நடந்திட்டு இருக்கு சாயங்காலம் தான் முதல் காட்சியே வரும் வெயிட் பண்ணிட்டு இருக்கேன் ஹி ஹி

எல் கே said...

ஹ்ம்ம் ஹ்ம்ம்

Arun Prasath said...

சுட சுட... ஆமா தூங்க நகரம் எப்டி இருக்கு?

Unknown said...

இதுவும் சுட்ட படம்தான்..

ஆனால் நீங்க விமர்சனம் பண்ணியிருக்கும் விதமே நல்லாயிருக்கு..

படம் நல்லாயிருக்கும் போது கண்டிப்பாகப் பார்க்க வேண்டியதுதான்..

Rafeek said...

செம ஃபாஸ்ட்.நல்ல விமர்சனம்,
அது சரி உங்க இளைஞன் விமர்சன லிங்க் மட்டும் ஏன் வேலை செய்யவில்லை?

சசிகுமார் said...

படம் எப்படா ரிலீசாகும் என்று கழுகு பார்வை பார்த்துகொண்டு இருக்கீங்களோ

பன்னிக்குட்டி ராம்சாமி said...

உங்க விமர்சனம் ரொம்ப மெருகேறிடுச்சு சிபி. இனியும் இந்த விகடன் ரேட்டிங்லாம் போடனுமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////அதே போல் என்கொய்ரியின் போது சேரன் டான்ஸ் கிளாசில் டீச்சரிடம் விசாரணை செய்கையில் பின்புலத்தில் தெரியும் ஃபிகர்கள் செம ஃபிரஸ்..( இந்த களேபரத்துலயும் உனக்கு கிளு கிளுப்பு கேட்குது?)////

அப்போ மத்த ஃபிகர்ஸ்லாம் உங்களுக்கு ‘பரிச்சயம்’ போல?

Speed Master said...

எப்படிங்க உங்களுக்கு நேரம் கிடைக்குது

Senthil said...

Waiting since morning for yr review!!
gud review!!
but u didnt mentioned this is copied
from 'memories of murder'

senthil
doha

Anonymous said...

சேரன் தவிர யார் நடித்திருந்தாலும் படம் செம ஹிட்

Philosophy Prabhakaran said...

சொல்றதுக்கே கஷ்டமா இருக்கு... என்னை மிகவும் ஏமாற்றமடைய வைத்த விமர்சனம்... சுத்தமா பிடிக்கலை... கதையை அநியாயமா உடைச்சிருக்கீங்க... ஒட்டுமொத்த பதிவுலகத்தினருடைய சுவாரசியமும் கெட்டுவிட்டது...

Philosophy Prabhakaran said...

முடிஞ்சா பதிவோட இரண்டாவது பத்தியை சீக்கிரமா உல்டா பண்ணுங்க...

Philosophy Prabhakaran said...

// எல்லாவற்றையும் விட முக்கியமாக சிலாகித்து சொல்ல வேண்டிய விஷயம் இடைவேளைக்கு முன் வரும் அந்த ஃபைட் சீன் தான்.. //

அதைத்தான் அஞ்சாதே படத்துலையே காட்டிட்டாங்களே...

Philosophy Prabhakaran said...

// வீட்டுக்குள் கூட சேரன் ஷூ போட்டுட்டே சுத்தறது ஏன்?னு தெரியல.அப்புறம் சில சீன்களில் பிரவுன் கலர் ஷூ போட்டு வரும் சேரன் அடுத்த ஷாட்டில் பிளாக் கலர் ஷூ போட்டு வர்றார். கண்ட்டினியூட்டி மிஸ்ஸிங்க்.. //

பயங்கரமா நோட் பண்ணியிருக்கீங்க...

Philosophy Prabhakaran said...

// அந்தப்பாடல் வலுக்கட்டாய இடைச்செருகல் என்பதால் ஆடியன்சை பிரமாதமாக கவரவில்லை //

என்ன சொல்றீங்க... அவனவன் ரீப்பிட்டு கேட்டு தியேட்டர் ஆபரேட்டரை கெட்ட வார்த்தைல திட்டுறான்...

Philosophy Prabhakaran said...

// ராஜேஷ் குமார் மாலை மதியில் எழுதிய வானவில்லுக்கு 1000 நிறங்கள் நாவலில் இருந்து சில சீன்கள் சுடப்பட்டுள்ளது. ( ராஜேஷ்குமாரே எந்த ஆங்கில நாவலில் இருந்து சுட்டரோ?) //

ஓஹோ இதெல்லாம் வேற நடந்திருக்கா...

Philosophy Prabhakaran said...

வசனத்தொகுப்பில் ஐந்தாவது வசனத்தை தயவு செய்து நீக்கவும்...

Philosophy Prabhakaran said...

//
எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் விமர்சனம் மார்க் - 42

..எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க்கிங்க் - ஓக்கே //

என்னுடைய கணிப்பு 45, நன்று...

வைகை said...

அமீரின் நடனத்தைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை...

வைகை said...

கேட்கறதுக்கு சங்கடமா இருக்கற கதையோட ஒன்லைனை இயக்குநர் முடிஞ்சவரை ரொம்ப டீசண்ட்டா சொல்லி இருக்கார்///

நல்லவேளை....நான் கேட்க்காம படிச்சேன்....

settaikkaran said...

அதானே பார்த்தேன். பிரபாகரன் எழுதிட்டாரு, இன்னும் தல எழுதாமலா இருக்கப்போறாருன்னு நினச்சேன். பார்க்கணும்...கூடிய சீக்கிரமே...!

ஜி.ராஜ்மோகன் said...

சுடச்சுட விமர்சனம் ! ரொம்ப சூப்பர் !

ரஹீம் கஸ்ஸாலி said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

உங்க விமர்சனம் ரொம்ப மெருகேறிடுச்சு சிபி. இனியும் இந்த விகடன் ரேட்டிங்லாம் போடனுமா?
அதே....ரிபீட்டு

Unknown said...

வணக்கங்களும், வாழ்த்துக்களும் பின்னே வாக்குகளும்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தூங்கா நகரம் விமர்சனம் ஆப்புறம் அந்த பிட்டு பட விமர்சனம் இன்னும் 24 மணி நேரத்தில் வரலைன்னா பன்னிகுட்டி தீக்குளிப்பார் . ஹிஹி

அன்புடன் நான் said...

சிபிக்கு... பாராட்டுக்கள்.

யுத்தம் செய் குழுவுக்கு வாழ்த்துக்கள்.

காட்டுவாசி said...

மாமே.......

நம்ம சாருவ பத்தி ஒன்னும் சொல்லலியே

மத்தபடி விமர்சனம் தூள்!!!

'பரிவை' சே.குமார் said...

விமர்சனம் தூள்.

ILA (a) இளா said...

//சொல்றேன்.பெண் சுகத்தை அனுபவிக்க முடியாத 60 வயசு கிழ போல்ட்டுங்க ஆள் வெச்சு பெண்களை கடத்திட்டு வந்து குடோன்ல தங்களோட அடியாளை விட்டு ரேப் பண்ண சொல்லி லைவ் ஷோ பார்க்கறாங்க//
இதை சுந்தர்C படத்துல(யோ.. எங்கேயோ) பார்த்தாச்சே. அதே கதையா?

goma said...

டைட்டிலிருந்து ஃப்ரேம் வாரியாக சொல்லி விட்டீர்...திருடாத விசிடி யில் பார்த்தமாதிரி இருந்துச்சுங்கோ..
இருந்தாலும் பார்ப்போம்

Admin said...

உங்க விமர்சனம் பார்த்தாட்சு இனி படம் பார்த்தால் சரிதான்.

Unknown said...

அப்ப படம் நல்லா இருக்குன்னு சொல்றீங்க.....

ஹேமா said...

சிபி...உங்க விமர்சனம் பாத்தே தீர்மானிச்சுடலாம் படம் பாக்கலாமா வேணாமான்னு.ஆனா காசு போட்டுப் படம் எடுக்கிறவங்க பாவம் !

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

இன்னும் பாக்கலைங்க... உங்க விமர்சனம் நல்லா இருக்கு..

காதர் அலி said...

ராஜேஸ்குமார்,சுபா.ப.பிரபாகர்,இவர்களை எல்லாம் காப்பி அடிக்க ,மிஸ்கின் ஆரம்பிச்சிட்டாரா.

ஜெயந்த் கிருஷ்ணா said...

இன்னைக்கு படத்துக்கு போறேன் பாஸ்..