Saturday, February 12, 2011

தம்பிக்கோட்டை - சந்தானம் காமெடி + மசாலா - சினிமா விமர்சனம்

படத்தோட டைட்டிலையும், போஸ்டர் டிசைனையும் பார்த்து இந்தப்படம் தேறாதுன்னு நினைச்சுட்டு உள்ளே போனா ஷாக் சர்ப்பரைஸ்.. சந்தானம் காமெடி படத்தோட முதல் பாதியை காப்பாத்திடுது....

உன்னைப்போல் ஒருவன் கமல் மாதிரி கெட்டப்ல சந்தானம் மொட்டை மாடில நின்னுக்கிட்டு  சிம் மாத்தி மாத்தி ஃபிகருங்களோட கடலை போடறது  நல்ல ஓப்பனிங்க்....

ஹீரோ சித்திரம் பேசுதடி,அஞ்சாதே நரேன்.. பாக்க பாவமா இருக்கார்...(சம்பளம் சரியா தர்லை போல)விஷால் கால்ஷீட் கிடைக்காம இவரைப்பிடிச்சுட்டாங்களோன்னு யோசிக்க வைக்குது கதையோட ஒன்லைன்.

காலேஜ் படிக்கற ஹீரோ சொந்த ஊரை விட்டு வேற ஒரு ஊருக்கு போறாரு ( மலைக்கோட்டை உல்டா)அங்கே ஹீரோயினை பார்க்கறாரு. லவ் பண்றப்ப ஒரு தாதா ,தாதாவோட தங்கை ( இவரும் ஒரு தாதாவே) 2 பேரையும் சமாளிச்சு எப்படி கைப்பிடிக்கறாரு? அப்படிங்கறதுதான் திரைக்கதை.. ( திமிரு உல்டா)...

இந்தக்கதை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா? அப்படிங்கற மாதிரி ஃபிளாஷ்பேக்ல பிரபு 4 சீன் வர்றார்..

அக்கா கேரக்டர்ல மீனாவைப்பாக்க சங்கடமா இருக்கு.( நமக்கு பொண்ணுங்களைப்பார்த்தாலே ஒரு இரக்கம் வந்துடுது.. ஹி ஹி )அக்கா தம்பி பாசத்தை போட்டு பிழி பிழின்னு பிழிஞ்சு எடுத்திருக்காரு டைரக்டரு.
ஹீரோயின் பூனம் பஜ்வா.. (இதுவரை ஏனோ தானோன்னு விமர்சனம் படிக்கறவங்க நிமிந்து உக்கார்றாங்க  # ஞான திருஷ்டி)).பசுமையான இலை தழைகளோட கொத்தா வாங்குன ஊட்டி கேரட் மாதிரி அவ்வளவு ஃபிரஷ்...(சைட் அடிக்கறப்பக்கூட சைடு டிஷ் ஞாபகம் ).. பார்ட்டி நல்ல ஃபிகர்தான்.. ( நாம எந்தக்காலத்துல பொண்ணுங்களை குறை சொல்லி இருக்கோம்? # ஷெல்ஃப் ஷொட்டு)

ஹீரோ - ஹீரோயின் சந்திக்கற முத சீன்ல ஹீரோயின் தடுக்கி விழுந்து ஹீரோ மேல படர்ந்து கிஸ் அடிச்சுடறாரு...( நல்லா யோசிக்கறாங்கய்யா சீனு). நரேன் பூனம் பஜ்வாவிடம் தனது காதலை வெளிப்படுத்தும் சீன் செம செயற்கை.அதே போல் ஹீரோயின் அறிமுக காட்சியில் வரும் பாடலில் டான்ஸ் மாஸ்டர் இன்னும் மெனக்கெட்டிருக்கலாம்.

ஹால் டிக்கெட்டை தொலைத்த ஹீரோயின் காட்டும் பதட்டம்,டென்ஷன் எல்லாம் ஓவர் ஆக்‌ஷன். ( நாமதான் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரே தொலைஞ்சாலும் கண்டுக்காத ஆள் ஆச்சே...). ஆனால் அந்தக்காட்சியில் கோட்டை விட்டவர் கோயிலில் சிவப்பு  - சிவப்பு கலர் காம்பினேஷனில் தேவதையாக வரும் சீனில் மனதை அள்ளி சரிக்கட்டி விடுகிறார்.( அந்த ஷாட்டில் நல்லா டைட் க்ளோஷப் ஷாட் வெச்சிருக்கலாம் # ஜஸ்ட் மிஸ்ஸு.)
பெண் தாதாவாக வரும் சங்கீதா ஓவரோ ஓவர் ஆக்டிங்க்.10 சொர்ணாக்கா, 15 நீலாம்பரி கலந்தவனு பில்டப்பு வேற. ஆனா அவர் சேலையை கிராமங்களில் ஆண்கள் லுங்கியை தூக்கிக்கட்டுவது போல் கெண்டைக்கால் தெரிய தூக்கிக்கட்டுவது செம கிளு கிளு (நீ பார்க்கும் மொக்கைப்படத்தில் கூட எதிர்பாராத விதமாக சக்க சீன் இருக்கலாம் மிஸ் பண்ணிடாதே # மனசாட்சி )

இந்த பட விமர்சனத்துக்கு தேவையே இல்லாத ,ஆனா நமக்கு(!!??) தேவையான ஒரு சீன்.தாதா சங்கீதா காலை வேலைக்காரப்பொண்ணு அமுக்குது. அப்போ , “ஏய்.. முழங்காலுக்கு மேலே வராதே.. என் புருஷனே அங்கே எல்லாம் வந்ததில்லை...  ( தியேட்டர்ல ஹீரோ அறிமுக சீனுக்கு கூட எவனும் கை தட்டலை.. இந்த சீனுக்கு செம அப்ளாஸ்)

ஹீரோவோட பேரு படத்துல அழகிரின்னு வெச்சதுல ஏதாவது உள்குத்து இருக்கான்னு தெரியல. ஆனா இந்த கான்செப்ட் ஒர்க் அவுட் ஆகிடுச்சுன்னா இனி ஆளாளுக்கு அழகிரி,ஸ்டாலின், உதய நிதி,அப்படி இறங்கிடுவாங்களோன்னு பயம்.
மாமூல் மசாலாப்படத்தில் பார்த்த மால் வசனங்கள் ( காமெடி)

1. ஏன் எல்லாப்பொண்ணுங்களுக்கும் எஸ் எம் எஸ் அனுப்பிட்டு இருக்கே?

சந்தானம் - பேச ஆசைதான். ஆனா செல்லுல பேலன்ஸ் இல்லை.10 பைசாதான் இருக்கு.

2.  டேய்.. உன்னைப்பார்த்தா என் வயிறு எரியுது..

சந்தானம் - ஏன் ..ராவா குடிச்சியா?

3. டே.. நல்லா கேட்டுக்கோ.. நான் எழுதியே தர்றேன்.. நீ ஃபெயில் தான்.

சந்தானம்  - சார்..நீங்க எழுதிக்குடுத்தா நான் கண்டிப்பா ஃபெயில் தான் ஆவேன். நான் வேற நல்ல ஆள் வெச்சுக்கறேன்.

4. காலேஜ் லெக்சரர் - ராமாயணத்துல மொத்தம் ஆறு காண்டம் இருக்கு..

சந்தானம் - டே மாப்ளை நேத்து நீ வாங்கிட்டு வந்த காண்டம் பாக்கெட்ல 3 தாண்டா இருந்தது.. கடைக்காரன் உன்னை ஏமாத்தீட்டானா?

5. பேங்க், போஸ்ட் ஆஃபீஸ் இங்கே தான் லஞ்ச் டைம் போகக்கூடாது.. ஆனா ஃபிரண்ட் வீட்டுக்கு சாப்பாட்டு டைம் தான் போகனும்.. அதான் நம்ம ஃபிரண்ட்ஷிப் ரூல்ஸ்..

6. சந்தானம்  - ஏம்மா.. அக்கா.. உன் தம்பி போருக்கா போறான்..?இங்கே இருக்கற ஊருக்கு டூருக்குத்தானே போறான்.. எதுக்கு ஆரத்தி எல்லாம் எடுத்து ஓவர் பில்டப் தர்றே,..?

7. போலீஸ் பாதுகாப்போட பெட்ஷீட் போர்த்தி படுத்திருக்கற அந்த ஆள் யாரு?

 டேய்.. அது டெட் பாடிடா...

அய்யய்யோ.. யார்டா அது ..பட்டப்பகல்ல கொலை பண்ணுனது?

சந்தானம்  - மாலைக்கண் வியாதிக்காரனா இருப்பான்..

8. வில்லன் - என் மேல இன்னும் 19 கேஸ் நிலுவைல இருக்கு.. வக்கீல் சரி இல்லை. பேசாம வக்கீலைப்போட்டுத்தள்ளீட்டு அதை 20 கேஸ் ஆக்கிடலாமா?

9. சின்ன வீட்டுக்கு இருக்கற மரியாதை பரம்பரை வீட்டுக்கு இருக்கறதில்லையே அது ஏன்?   ( அது மரியாதை இல்லை.. கிளு கிளுப்பு # படத்துல வராத பிட்டு)

10.வில்லன் - இந்தாங்க கோயிலோட சாவி.. பொழுது சாஞ்சா உடனே என் கைக்கு சாவி வந்தாகனும்.

சந்தானம்  - ஏன் உங்களுக்கு காக்கா வலிப்பு நோய் இருக்கா?

11. இதோ இங்கே உக்காந்து பிச்சை எடுத்துட்டு இருக்கே இந்தப்பொண்ணு தான் கோயிலோட ரிசப்ஷனிஸ்ட்..இந்தப்பொண்ணைத்தாண்டி ஒரு பய உள்ளே வந்துட முடியாது..அதோ காசை எண்ணிட்டு இருக்கே ஒரு தறுதல.. அவன் தான் கேஷியர்.. பிச்சைக்கார நாயிங்களா..

12, ஆர்த்தி  - என்னால இப்போ கோயிலை விட்டு வெளில வர முடியாது...

சந்தானம்  - ஏன்?

 ஏன்னா இப்போ சுண்டல் தர்ற நேரம்.

13.சந்தானம்  - அதென்னடா எல்லாப்படத்துலயும் நீங்க வில்லனோட பொண்ணையே லவ் பண்ரீங்க.. ஊர்ல எத்தனை பொண்ணுங்க இருக்கு...?

14.  ஒரு வருஷம் உன் பின்னாலயே சுத்துனேன் நாய் மாதிரி.. 

நான் என்ன வோடஃபோன் கனெக்‌ஷனா?

15. சந்தானம்  - நீ கனகா மடில படுக்கனும்கறதுக்காக நான் கவர்மெண்ட் ஹாஸ்பிடல்ல நான் படுக்க முடியாது.. 

16. லவ் பண்றவனை ஃபிரண்டா வெச்சுக்கிட்டா அவன் தூக்க மாத்திரை சாப்பிட்டுத்தான் படுக்கனும் இல்லைன்னா தூங்க விடமாட்டானுங்க..

17. சந்தானம்  - என்னது முருகரை விநாயகர் கும்பிடுது?

ஆர்த்தி - 108 தடவை ஸ்ரீராம ஜெயம் எழுதி ஆஞ்சநேயர் மேல சாத்தறேன்..

சந்தானம் - அதை எழுதுனதுக்கு பிட் எழுதி இருந்தாக்கூட பாஸ் ஆகி இருப்பே..?

18. திருவிழாங்கற கான்செப்ட் ஏன் வந்துது தெரியுமா?

ஊர்ல மாசாமாசம் ரேப் நடக்கும். ஊர்ப்பெருசுங்களுக்கு அது பொறுக்கல.. இனி வருஷம் ஒரு தடவை மட்டும் தான் அதெல்லாம் நடக்கனும்கறதுக்காகத்தான் திருவிழாவையே கண்டு பிடிச்சானுங்க..

19..சந்தானம்  -  மேடம் .. உங்க செயினை விட்டுட்டு போறீங்களே...

ஆர்த்தி - விளையாடாதீங்க.. அது யானையைக்கட்டற சங்கிலி.

20.ஆர்த்தி - அவங்கப்பாவுக்கு மேட்டர் தெரிஞ்சா பிரச்சனை ஆகிடும்.

சந்தானம் - ஏன் ? உங்கப்பனுக்கு தெரிஞ்சா ஒண்ணும் சொல்ல மாட்டானா?

ஆர்த்தி -  தோலை உரிச்சிடுவார்.

சந்தானம்  - அப்போ சாத்துக்குடிப்பழம் 2 கிலோ வாங்கித்தர்றேன்...உக்காந்து உரிச்சுத்தர சொல்லுங்க..
அப்புறம் படத்தோட க்ளைமாக்ஸ் நெருங்கறப்ப வர்ற தம்பிக்கோட்டை கனகா தாலி கட்ட வரவா பாட்டு அப்படியே அச்சு அசல் கில்லி பட அப்படி போடு பாட்டு நடனத்தின் காப்பி..

ஒரு சீன்ல கரண்ட் போயிடுது.. உடனே எல்லாரும் மெழுகுவர்த்தி பற்ற வைத்து போற மாதிரி வருது.. அவ்வளவு பெரிய மாளிகைல எமர்ஜென்சி லைட்டே இருக்காதா? ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள் படமெங்கும் விரவி இருக்கின்றன,

வித்தியாசமான படம் விரும்பும் தமிழ்ப்பட ரசிகர்களுக்கு இந்தப்படம் சாதா.மற்றபடி மாமூல் மசாலாப்படம்னா ஓக்கே என்பவர்களுக்கு இந்தப்படம் இருக்கும் தோதா.. ( மனசுக்குள்ள இவனுக்கு டி ஆர்-னு நினப்பு) 

படம் ஏ பி செண்ட்டர்ல தலா ஒரு மாசம் ஓடிடும். சி  செண்ட்டர்ல 15 நாட்கள் ஓடிடும்.

எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 40

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்கிங்க் - ஓக்கே

டிஸ்கி 1 - படத்துல முக்கிய கேரக்டர்களா வர்ற பிரபு - மீனா ஸ்டில்ஸ் ஏன் போடலை? ஏன்னா அட்ரா சக்க யூத்துங்களுக்கு மட்டும் இடம் தரும் ஹி ஹி

டிஸ்கி 2

பிரகாஷ்ராஜ்-ன் பயணம் - ஹைஜாக்





தமிழ்வாணன் -ன் நந்தி - கிராமத்துக்காதல் -
 


 

16 comments:

ரஹீம் கஸ்ஸாலி said...

போடறா மொத வெட்ட....

Unknown said...

என்னா பாஸ்.....பொண்ணுங்க பத்தி நெறைய விமர்சனம் பண்றீங்க(அதாங்க ஹீரோயின்ச பாத்து நீங்க விடுற ஜொள்ளு...) ஆனா ஹீரோ பத்தி ரொம்ப கம்மியாவே விமர்சனம் பண்றீங்க தல.......பாவம் ஆண்கள் ஹி ஹி!!

karthikkumar said...

அப்போ படம் பாக்கலாமா

King Viswa said...

முக்கியமான வசனங்களாகிய "வில்லனுக்கு நீ கட்ட வேண்டியது பாடை இல்லைடா, நீ கட்ட வேண்டியதே வேறடா, நீ கட்ட வேண்டியதே வேறடா" மற்றும் "இது தம்பி கோட்டை இல்லை, என்னோட தம்பியோட கோட்டைடா" என்றும் மீனா பேசும் அக்மார்க் பஞ்ச வசனங்களை போடாமல் விட்டதை கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன்.

இருந்தாலும், ஒரே ஒரு பாட்டில் மட்டுமே வந்தாலும் அந்த பாட்டின் பல ஸ்டில்களை போட்ட எங்கள் பூனம் பாஜ்வா ரசிகர் மன்ற தலைவரை ஆதரித்து உள் நடப்பும் செய்கிறேன்.



கிங் விஸ்வா
தமிழ் காமிக்ஸ் உலகம் - புதிய காமிக்ஸ் கதைகளுடன்,புதிய வடிவில் தினமலர் சிறுவர்மலர்

Senthil said...

as usual! fast!!

gud review!

senthil, doha

ம.தி.சுதா said...

சந்தானத்தக்காகவே பார்க்கலாம் போல இருக்கே... அதை விட அப்படியே நீங்க தந்தத தான் அதிசயமாயிருக்கு..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
தாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..

ம.தி.சுதா said...

மீண்டும் ஒரு கலக்கல் சீபிஎஸ்..

Ram said...

தப்பி கூட படத்துக்கு போக மாட்டன்..

Riyas said...

//
ஹீரோயின் பூனம் பஜ்வா.. (இதுவரை ஏனோ தானோன்னு விமர்சனம் படிக்கறவங்க நிமிந்து உக்கார்றாங்க //

கரெக்ட்... எப்புடி சி.பி.. இப்படியெல்லாம் கிரேட்..

Anonymous said...

//வித்தியாசமான படம் விரும்பும் தமிழ்ப்பட ரசிகர்களுக்கு இந்தப்படம் சாதா.மற்றபடி மாமூல் மசாலாப்படம்னா ஓக்கே என்பவர்களுக்கு இந்தப்படம் இருக்கும் தோதா//

>>> சாதா.. தோதா..!! நடக்கட்டும். அது என்ன மாமூல் மசாலா??? சொல்லியே தீரணும்!

goma said...

நல்லாத்தான் விமரிசிக்கிறீர்...
ஓகே வா இல்லையான்னு தெரிஞ்சுக்கலாம்

'பரிவை' சே.குமார் said...

nala vimarsanam.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

:)

Unknown said...

விமர்சனத்தை எழுதும் போது பல படங்களோட நினைவு வந்திருக்கு போல..

Unknown said...

இந்த வாரம் தமிழ்மண ஓட்டுப்பட்டையை வைத்து பார்க்கலாமே..(என்னதான் நடக்குதுனு)

King Viswa said...

சொல்ல மறந்த ஒரு விஷயம் - இந்த படம் வியாழன் அன்றே ரிலீஸ் ஆக வேண்டியது. அன்று போய் டிக்கெட் வாங்க வேண்டியது, தியேட்டரில் தான் சொன்னார்கள் - இல்ல சார் நீங்க வேணா பருவம் படம் பாருங்க என்று சொன்னார்கள். அதுக்கு சும்மா ஸ்கரீன பார்ப்பேன் என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன். மறுநாள் தான் படம் ரிலீஸ் ஆகியது.

கிங் விஸ்வா

தமிழ் காமிக்ஸ் உலகம் - புதிய காமிக்ஸ் கதைகளுடன்,புதிய வடிவில் தினமலர் சிறுவர்மலர்