இந்த வார ஆனந்த விகடன்ல அட்டைல விஜய் ஃபோட்டோ + பேட்டி மேட்டர் பார்த்ததும் ஆஹா மாட்டிடுச்சுய்யா பதிவுக்கு ஒரு மேட்டர்னு துள்ளிக்குதிச்சேன்.புக் வாங்கி பார்த்தா விஜய் கேப்டன் ரேஞ்சுக்கு பொங்கி இருந்தார்.. வழக்கமா 2 லைன்ல திருக்குறள் மாதிரி பதில் சொல்றவர் இப்போ லியாகத் அலிகான் வசனம் எழுதிக்கொடுத்த மாதிரி நீள நீளமா பேசி இருக்கார்.. ( யார் இந்த லியாகத் அலிகான்? # கேப்டனோட ஆஸ்தான வசனகர்த்தா)
அதனால விஜய்யை ரசிக்கறவங்க பேட்டியை ரசிக்கவும்.. காமெடியை ரசிக்கறவங்க கமெண்ட்டை ரசிக்கவும்.
1.;முதல்ல எம் ஜி ஆர், அடுத்து ஜெயலலிதா,அப்புறம் கேப்டன், அந்த வரிசைல அடுத்து நான்..ஒரே ஒரு கேள்வி கேட்டார்னு தூக்கி எறியப்பட்டவர் எம் ஜி ஆர்,அவரோட இறுதி ஊர்வலத்துல கீழே தள்ளி விடப்பட்டவர் ஜெ, கல்யாண மண்டபம் இடிக்கப்பட்ட கேப்டன், அந்த வரிசைல காவலன் ரிலீஸ்க்கு முட்டுக்கட்டை போட்ட கூட்டம்..
இதுல எம் ஜி ஆருக்கு 136 படம் நடிச்ச அனுபவம் இருக்கு...அதுல பாதிப்படம் மக்களுக்கு உபயோகமான கருத்துக்கள் உள்ள படம்.. கேப்டன் படங்கள்ல 125 ல 60 படங்கள்ல ஏழைகள் பற்றி அரசியல் பற்றி பேசி இருக்காரு... நீங்க சங்கவிக்கு சோப்பு போட்டீங்க..படத்துல வில்லனுக்கு ஆப்பு வெச்சீங்க.. சீர்திருத்த கருத்து சொன்னீங்களா?
2. டிஷ்யூம் டிஷ்யூம் படங்களை இனி மேல் தொடர்ந்து தர மாட்டேன்..இனிமே வருஷத்துக்கு 2 படம் பண்ணுவேன்.. அதுல காவலன் மாதிரி கல கல காமெடி படம் ஒண்ணு, ஜிவு ஜிவுன்னு வேலாயுதம் மாதிரி ஆக்ஷன் படம் ஒண்ணு
எனக்கென்னவோ வேலாயுதம் ஜிவு ஜிவுவா? ஜவ்வான்னு டவுட்டா இருக்கு..
3;இதுவரைக்கும் என் படங்கள் ரிலீஸ் டைம்லயோ, அல்லது ரிலீஸ் பண்றதுலயோ எந்த பிரச்சனையும் வந்ததில்லை..காவலன தான் ஃபர்ஸ்ட் டைம்
உங்க படங்கள் ரிலீஸ் ஆகறப்ப எந்த பிரச்சனையும் வராது.. ரிலீஸ் ஆன பிறகு நாங்க அதை பார்க்கறப்பதான் பிரச்சனை.ஹி ஹி
4. என் படத்தை வராம தடுக்கறவங்க அவங்க டி வி சேனல்ல மட்டும் என் படங்களை தொடர்ந்து ஒளி பரப்பறாங்களே.. ஏன்?. என் முகத்தை அழிக்கக்கூட என் முகமேதான் மறுபடி தேவைப்படுது.
இப்போ எப்படி உங்க பேட்டியை நக்கல் அடிச்சே நான் ஒரு பதிவைத்தேத்துன மாதிரி..விஜய்யை பிடிக்கல பிடிக்கலன்னு சொல்லிச்சொல்லியே ஆளாளுக்கு விஜய் பதிவு போடற மாதிரியா?
5தியேட்டர் அதிபர்களை காவலன் படத்தை திரையிட வேணாம்னு ஓப்பனா மிரட்டுனாங்க..எல்லாத்தடைகளையும் மீறி படம் ரிலீஸ் ஆச்சு. மக்கள் கூட்டம் கூட்டமா வந்தாங்க..
வந்தாங்க.. ஓக்கே திரும்பி பத்திரமா வீட்டுக்கு போய் சேர்ந்தாங்களா?
(ஆனா அதுல ஒண்ணு வேணா உண்மை.. ஈரோட்ல அபிராமில ரிலீஸ் பண்ணக்கூடாதுன்னு மிரட்டல் வந்தது.. ஓனர் எதுக்கு வம்புன்னு சிறுத்தையை ரிலீஸ் பண்ணீட்டு தேவி அபிராமில காவலன் போட்டுட்டார்.)
6. ;முன்பெல்லாம் பொங்கல்,தீபாவளி வந்தா 8 ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் ஆகும்..தியேட்டரே திருவிழா மாதிரி இருக்கும். இப்போ அப்ப்டி இல்லை.. 3 படம்தான் ரிலீஸ் ஆகுது...
பின்னே என்ன?. முன்பெல்லாம் ஒரு படம் ஒரு தியேட்டர்ல ரிலீஸ் ஆகும்..இப்போ ஒரே ஊர்ல 4 தியேட்டர்ல ரிலீஸ் பண்ணி ஒரே வாரத்துல ரிசல்ட் வெளில தெரியறதுக்குள்ள வசூலை அள்ளிடனும்னு நினைக்கறாங்களே..
7ஒரு படத்தை தயாரிக்க எவ்வளவு கஷ்டப்படறாங்க தெரியுமா?அத்தனை அவமானங்களையும்,கேவலங்களையும் தாண்டித்தான் காவலனை ரிலீஸ் பண்ணுனேன்...
படத்தை தயாரிக்க எல்லாரும் சிரமப்படறாங்க ஓக்கே.. ஆனா அதை பார்க்க ரசிகர்கள் கூடத்தான் ரொம்ப கஷ்டப்படறாங்க...
8. நடிகனாகனும்னு ஆசைப்பட்டேன்,நான் நினைச்சதை விட மிகப்பெரிய இடத்துல உக்கார வெச்சிருக்காங்க இந்த ஜனங்க
இந்தத்தமிழங்க எப்பவும் இப்படித்தாங்க நீங்க அவங்களை நம்பி அரசியல்ல இறங்கி உள்ளதும் போச்சுடா... அப்படின்னு புலம்பாதீங்க..
9.யார் பேச்சையும் கேட்டு எதிலும் உடனடியாக இறங்கிட மாட்டேன்
என் பேச்சை நானே கேக்க மாட்டேன்னு ஒரு படத்துல பஞ்ச் டயலாக் பேசுனீங்க.. உங்க பேச்சையும் கேக்க மாட்டீங்க.. அடுத்தவங்க பேச்சையும் கேக்க மாட்டீங்கன்னா எப்படி..?
10.;யாருக்கு எப்போ எப்படி வெற்றி தோல்வியை தரனும்னு தீர்மானிக்கறது கடவுள்.சாதாரண மாமிச உடம்புள்ள எந்த மனித ஜென்மத்தாலயும் இதைத்தடுக்க முடியாது..
கலைஞரைத்தான் தாக்குறீங்கன்னு எங்களுக்கு புரியுது..எதுக்கும் பார்த்துக்குங்க..வேலாயுதம் ரிலீஸ் அப்பவும் பிரச்சனை பண்ணிடப்போறாங்க...
நிறையப்பேரு என்ன சொல்றாங்கன்னா இந்த பேட்டியை படிச்சு கலைஞர் கோபப்பட்டு கூப்பிட்டு மிரட்டுனா அடுத்த வாரமே நான் அந்த அர்த்தத்தில் பேட்டி அளிக்கவில்லைன்னு விஜய்யும், பிரிண்ட் போனப்ப ஒரு தவறு நேர்ந்து விட்டதுன்னு விகடனும் சால்ஜாப்பு சொல்லிடுவாங்க.. அப்படின்னு...
27 comments:
அட பாவம் உடுங்க அய்யா . அறியா புள்ளைய போட்டு இந்த பாடு படுத்தாதீங்க!விகடனுக்கு என்னா ?? எந்த குப்பயாவது
ஜனங்க படிசாவனும்.
வணக்கங்களும்,வாக்குகளும்...
//இப்போ எப்படி உங்க பேட்டியை நக்கல் அடிச்சே நான் ஒரு பதிவைத்தேத்துன மாதிரி..விஜய்யை பிடிக்கல பிடிக்கலன்னு சொல்லிச்சொல்லியே ஆளாளுக்கு விஜய் பதிவு போடற மாதிரியா?
//
விஜய புடிகலன்னு யாருயா சொன்னது அவரு நடிகறதும் பேசறதும் தான்யா புடிக்கல
அடங்க மாட்டீங்களா தம்பி?
விஜய்யை பிடிக்கல பிடிக்கலன்னு சொல்லிச்சொல்லியே ஆளாளுக்கு விஜய் பதிவு போடற மாதிரியா//
நானா உங்க போதைக்கு ஊறுகாய்?அந்த எருமைமாடு என்ன படம் நடிச்சுது...என்ன தமிழனுக்கு கிழிச்சிரு பில்டப் பேட்டி கொடுக்குது...அரசியலுக்கு வரப்போகுதாம்மா வாடி தக்காளி ரெடி
இதெல்லாம் தமிழ்நாட்டின் தலைவிதி!
என்ன கொடுமை சார் இது. எம்.ஜி.யார் ஒன்னும் நேரடிடா கட்சி ஆரம்பிக்கல....முதல்ல காங்கிரஸ், அப்புறம் தி.மு.க(இருமுறை பரங்கிமலை எம்.எல்.ஏ. , மற்றும் கட்சியின் பொருளாளர்), அப்புறம்தான் கட்சி. ஜெயலலிதா கூட எடுத்தவுடன் தலைவி ஆகிடல...முதலில் அண்ணா.தி.மு.க- கொள்கை பரப்பு செயலாளர் பின்னர் நாடாளுமன்ற மேல்சபை உறுப்பினர். அப்புறம்தான் கட்சி தலைவி...இதையெல்லாம் அந்தாளுட்ட சொல்லுங்க சி.பி.அண்ணே....
விஜயின் கோ.ப.சே சிபி வாழ்க
ஹி ஹி ஹி.. விஜய் சார் சீக்கிரம் அரசியலுக்கு வாங்க.. எனக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்ல ஆனா எனக்கும் சினிமாவுக்கும் சம்பந்தம் இருக்கு.. தினமும் படம் பாக்குறோம்ல.. அதனால விஜய் அரசியலுக்கு போனா நான் தப்பிச்சுப்பன்.. யாராச்சும் கூட்டிட்டுபாங்கலம்பா
” பாவம்ணே.. பரிதாபமாத்தான் இருக்கு.. இவங்கள்லாம் யார் மேலயோ இருக்கற கோவத்த வெளிப்படுத்த அரசியலுக்கு வந்துட்டு இருக்கறவங்கள் இம்சை பண்ணிட்டு....
தமிழ் மக்கள காப்பாத்த வேண்டிய தலையெழுத்து யார் யார் கைக்கெல்லாம் போவுது பாருங்க....
உண்மைலயே தமிழன் மானங்கெட்டவன்ங்கிறத இவங்களெல்லாம்தான் நிரூபிக்கறாங்க
ஏம்பா ஒரு பயபுள்ள சம்பாதிச்ச எதோ கொஞ்சம் குயந்த பசங்களுக்கு செலவுசெய்ய விடமாட்டீங்க போல.........சும்மா பில்டப்ப கெளப்பி அந்த புள்ளைய செலவு செய்யவிடாம செய்யரதுலையே எல்லோரும் முன்நிலையில இருக்காங்கப்பா அய்யோ அய்யோ!!
அந்த மனுஷன் என்னையா உங்களுக்கு எல்லாம் கொடும செய்ஞ்சாறு ஆனா ஊனா எம்ஜிஆராயும் உங்களையும் இணைச்சி பேசி அவர ஏன்யா அசிக்கபடுத்துறீங்க!!
விஜய வம்புக்கு இழுக்கலேன்ன தூக்கமே வராது போலருக்கு.. ஆனா உங்க மேட்டர் உண்மை தான்.
// எனக்கென்னவோ வேலாயுதம் ஜிவு ஜிவுவா? ஜவ்வான்னு டவுட்டா இருக்கு.. //
அது ஆசாத் படத்தோட ரீமேக்... படுமொக்கை...
// யார் பேச்சையும் கேட்டு எதிலும் உடனடியாக இறங்கிட மாட்டேன் //
நாமளும் அவர் பேச்சை கேட்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம்...
காம்ப்ரமைஸ் ஆயிட்டாங்க போல நேற்றிரவு கலைஞர் டிவியில் விஜய் நேர்காணல் ஒளிபரப்பானதே...
இந்தவார விகடனில்
உங்கள் கடி வாசித்தேன் ....
முருங்கைக்காய் பாக்கியராஜ்....
வாழ்த்துக்கள்
அண்ணே நீங்க விசை ரசிகரா ?
Dear Senthilkumar,
i am prakash from salem. iam fan of your blogs. this vijay blog matter published in narumugai website. All the best for ur writing future.
Yours Lovingly
R.Prakash
கலைஞர் டிவியும் கேள்வி கேட்டு ஒளிபரப்பு செய்திருக்கிறதே...என்ன திடீர்னு...
ஒரு படத்துக்கே விஜய் இப்படி புலம்புறாரு. அரசியல்ல எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கப்போவுது. ஒவோன்னுதுக்கும் இப்படிதான் பேட்டி கொடுதுக்குட்டே இருப்பாரோ...?
நன்றி நண்பரே.. நானும் தங்களின் வாசகன் தான். இந்த செய்தி என் www.narumugai.com தளத்தில் வெளியிட்டுள்ளேன். ஆட்சோபணை இருப்பின் நீக்கிவிடுகிறேன்..
பேட்டியே காமெடி.. இதுல கமெண்ட் வேறயா????
முடியலங்க...
>>> இதே போல் எங்கள் தலைவர் ஜே.கே. ரித்தீசை கிண்டல் அடிக்கும் எண்ணம் இருந்தால்.... ஐ.நா. சபை கோர்ட் அருகே ஒண்டிக்கு ஒண்டி சண்டைக்கு வருமாறு அண்ணன் சி.பி. செந்தில் அவர்களை கேட்டுக்கொள்கிறோம்.......இவண், ரித்தீஷ் ரத்தவெறி ரசிகர் மன்றம், அல்பேனியா.
டாகுடரு விசய் வாளுக.......
Post a Comment