மேஜிக் ரியலிசம் எனும் அலிபாபாவும் அற்புத விளக்கும் கான்செப்ட் இந்த வார கலைஞர் டி வி யில் ஞாயிறு காலை 10 .30 மணிக்கு நாளைய இயக்குநர் நிகழ்ச்சில கொடுத்தாங்க. லட்டு மாதிரி சப்ஜெக்ட்.ஆனா கலந்துக்கிட்ட 4 கதைகள்ல சந்தேகத்துக்கு இடமே இல்லாம எஸ் ராமகிருஷ்ணன் கதை தான் கலக்கி முதல் பரிசை தட்டிச்சென்றது.அது கடைசில......
1. தேய் மச்சி தேய் - இயக்கம் ராஜேஷ் குமார் ( எழுத்தாளர் ராஜேஷ் குமார் அல்ல)
க்ரெடிட் கார்டு யூஸ் பண்றது ரொம்ப டேஞ்ஜர்,கைல இருக்கற காசுக்கு தக்கபடி செலவு பண்ணி சிக்கனமா இருக்கனும்கற சாதாரன படிப்பினையை தரும் கதை. ஃபேண்ட்டசி எனும் தளத்துக்கு இவர் எடுத்துக்கிட்ட தீம் ரொம்ப சுமார்தான்.
2 நிமிஷத்துல கிட்டத்தட்ட 120 ஷாட்ஸ்ஸை ஸ்பீடா காண்பிக்கறாங்க. விழலுக்கு இறைத்த நீர். டைம் மிஷின் மாதிரி மினி ரிமோட் கிடைக்கப்பெற்றவன் இப்படி அல்ப சொல்பமா ஒரு ஷாப்பிங்க் மட்டும் தானா போவான்? கற்பனை எல்லைகளை இன்னும் விஸ்தாரப்படுத்தனும்.....பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்..
2. கைக்குள் சொர்க்கம் - ரமேஷ்
ஆட்டையைப்போட்டுட்டு வந்த ஒரு செல்ஃபோன்ல தற்செயலா கால் (CALL) சொர்க்கத்துக்கு போகுது... என்ன வேணும்னாலும் கேட்கலாம்.ரொம்ப சாதாரண ஆசைகளை நிறைவேத்திக்கறாரு ஹீரோ.க்ளைமாக்ஸ்ல ஃபோனுக்கு சொந்தக்காரர் வந்து அந்த ஃபோனை பிடுங்கிகறார். லாஜிக்கே இல்லை.
கதைல குறிப்பிட்டு சொல்ற மாதிரி கிராஃபிக்ஸ் ஒர்க் மட்டும் தான் நல்லாருந்தது.அதுவும் செல் ஃபோன் எண் அப்படியே வளைஞ்சு வானத்துக்கு போற சீன் அழகு. எதிர்பார்த்த மாதிரியே அந்த பட கிராஃபிக்ஸ் ஒர்க்கிற்கு பரிசு கிடைச்சுது.
3. வானவில் - கல்யாண்
இது கொஞ்சம் அம்புலிமாமா கதை டைப்பா இருந்தது.பணக்கார வீட்டுப்பசங்க விளையாடறதை ஏக்கத்தோட பார்க்கறான் ஏழைச்சிறுவன்.. அவனோட ஆசை ,லட்சியம் எல்லாமே பிரியா கூட விளையாடனும், அவ்வளவுதான்.குளத்துல இருக்கற மீன், “ நான் தான் தேவதை ,உனக்கு என்ன வேணும்”னு கேக்கறப்பக்கூட பிரியா கூட விளையாடனும்கற அதே பல்லவியைதான் பாடறான்.அவனுக்கு அந்த சான்ஸ் கிடைக்குது.
பிரியா கிட்டே தேவதை பற்றி சொல்றான். அவ நம்பாம ஆற்றங்கரைக்கு வந்து பார்க்கறா.அப்போ இருட்டிடுது. தேவதை வர்ல.( தேவதைங்களுக்கு இருட்டுன்னா பயம் போல..?)உடனே நீ பொய் சொன்னே.. தேவதைனு யாரும் கிடையாதும்ன்னு அந்த பிரியா சொல்லீட்டு போயிடறா..அவ்வளவுதான் கதை.ரொம்ப சுமாரான திரைக்கதை.
4. கொக்கரக்கோ - அருண்
மத்த 3 படங்களும் சொதப்புனதுக்கு வட்டியும் முதலுமா இந்தப்படம் செம கலக்கு கலக்கிடுச்சு. எஸ் ராம கிருஷ்ணனின் கதையைப்படிக்கறப்ப இருந்த அதே பாதிப்பு, உற்சாகம்,பர பரப்பு , சஸ்பென்ஸ் இந்தப்படத்துல அட்சரம் பிசகாம அப்படியே கொண்டு வந்தது இயக்குநரின் சாமார்த்தியம்.
சரவெடி சண்முகம்னு ஒரு அரசியல்வாதி - ஒரு மேடைல அவருக்கு சேவல் டாலர் செயினை பரிசா போடறாங்க. அப்போதிருந்து அவருக்கு பேச்சு வர்றதில்லை.. வாயைத்திறந்தா கொக்கரக்கோன்னு தான் சத்தம் வருது.அதை வெச்சு நடக்கற காமெடி கூத்துக்கள் தான் திரைக்கதை. க்ளைமாக்ஸ்ல அவர் மனம் நொந்துபோய் பீச்ல உக்காந்திருக்கறப்ப ஒரு திருடன் வந்து அவர் கிட்டே இருக்கற செயினை பறிச்சிட்டுப்போயிடறான்.இப்போ இவருக்கு பேச்சு வந்துடுது, திருடனுக்கு கொக்கரக்கோ குரல் வந்துடுது.
சரவெடி சண்முகமா வர்ற வரோட நடிப்பு, பாடிலேங்குவேஜ்,வசன உச்சரிப்பு எல்லாமே பிரமாதம்.கலக்கீட்டார் மனுஷன்.இந்தப்படத்துல கவனிக்க வேண்டிய விஷயம் என்னன்னா படத்துல வர்ற எல்லா கேரக்டரும் சீரியஸா இருப்பாங்க.. ஆனா பார்க்கற ஆடியன்ஸ் சிரிச்சிட்டு இருப்பாங்க.ரொம்ப ரேர் (RARE) இந்த மாதிரி கான்செப்ட் கிடைக்கறது. கிட்டத்தட்ட எஸ் வி சேகரின் ஃபார்முலா..
ஜட்ஜா வர்ற ஹாய் மதன் பேசறப்ப தான் ஒரு அறிவு ஜீவிங்கறது எல்லாருக்கும் தெரியனும்கறது மாதிரி பேசறாரோன்னு டவுட்டா இருக்கு. சாதாரணமா பேசுனா தேவல. (நிறைய கமல் படம் பார்ப்பார் போல)
பிரதாப் போத்தன் - சொல்லவே வேண்டாம். வளரும் கலைஞர்களை ஊக்குவிக்கனும், அவங்க மூஞ்சில அடிக்கற மாதிரி கமெண்ட் தரக்கூடாதுங்கற அடிப்படை நாகரீகம் கூட தெரியாம எடுத்த எடுப்புலயே உங்க படம் எனக்கு பிடிக்கலை, மோசம்னு தடாலடியா அவர் சொல்றதும் , படைப்பாளிகள் மேடைலயே கண் கலங்கறதும் பார்க்கறவங்க மனசை பாதிக்கற மாதிரி இருக்கு.
என்னோட கருத்து என்னன்னா இந்த 2 பேரையுமே தூக்கிட்டு கே பாலச்சந்தர்,கிரேசி மோகன் போன்றவர்களை ஜட்ஜ் ஆக்கினால் ரொம்ப நல்லாருக்கும்.
இயக்குநர் கே பாலச்சந்தர் கருத்து சொல்றப்ப நல்லாருந்தா அருமைங்கறார். நல்லாலைன்னா ரொம்ப நாசூக்கா இதப்படத்தை இன்னும் நல்லா பண்ணி இருக்கலாம்னு இதமா சொல்றார்.
ஒரு படைப்பாளியை மேடைலயே அவமானப்படுத்தறதுக்கு இவங்க 2 பேருக்கும் சம்பளம் கொடுத்து ஏன் வெச்சிருக்கனும்?ஹாய் மதனைக்கூட ஒரு கணக்குல சேர்த்துக்கலாம். ஆனா பிரதாப் போத்தனின் அநாகரீகமான கமெண்ட்ஸ் வன்மையா கண்டிக்கத்தக்கது.
31 comments:
Very good - keep it up
இந்த மாதிரி நெறையப் பேரு இருக்காங்க. திருத்த முடியாது
எனக்கு கொக்கரக்கோ படம்தான் பிடிச்சது .. செம காமெடி ..
parattugal
//ஒரு படைப்பாளியை மேடைலயே அவமானப்படுத்தறதுக்கு இவங்க 2 பேருக்கும் சம்பளம் கொடுத்து ஏன் வெச்சிருக்கனும்?ஹாய் மதனைக்கூட ஒரு கணக்குல சேர்த்துக்கலாம். ஆனா பிரதாப் போத்தனின் அநாகரீகமான கமெண்ட்ஸ் வன்மையா கண்டிக்கத்தக்கது.//
//என்னோட கருத்து என்னன்னா இந்த 2 பேரையுமே தூக்கிட்டு கே பாலச்சந்தர்,கிரேசி மோகன் போன்றவர்களை ஜட்ஜ் ஆக்கினால் ரொம்ப நல்லாருக்கும்.//
இந்தக் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்( என்னோட கருத்து எனனன்னா எல்லாத்தையும் தூக்கிட்டு பேசாம நமீதா-வை ஜட்ஜ் ஆக்கினால் ரொம்ப நல்லா இருக்கும்)
நானும் வந்துட்டேன் உள்ளே ஹா ஹா ஹா....
:))
மதன்,என்னை பொறுத்தவரை சரியாக தான் செய்கிறார். அவர் சுட்டி கட்டும் குறைகள் 95 % சரியாக தான் இருக்கும்.அதுவும் குறைகளை நாசுக்காய் சொல்வர்(கொஞ்சம்,இதை திருத்திக்குங்க ,,அடிக்கடி சொல்லுவார் ) . மேலும் ,கடைசியில் அவர் தோற்றவருக்கு ஆறுதலும் அழகாய் சொல்வாரே.
என்ன கொஞ்சம் ஹாலிவுட் பட கதை அதிகமாய் சொல்லுவார்.
நான் இந்த நிகழ்ச்சியில் விரும்பி பார்ப்பதே "மதனின் விமர்சனம் தான்". பிரதாப் பற்றி நீங்கள் சொல்லுவதை,நான் ஏற்கிறேன்.
*இந்தப்படத்துல கவனிக்க வேண்டிய விஷயம் என்னன்னா படத்துல வர்ற எல்லா கேரக்டரும் சீரியஸா இருப்பாங்க.. ஆனா பார்க்கற ஆடியன்ஸ் சிரிச்சிட்டு இருப்பாங்க.*
இது கூட, மதன் சொன்னது தான்
/ஒரு படைப்பாளியை மேடைலயே அவமானப்படுத்தறதுக்கு இவங்க 2 பேருக்கும் சம்பளம் கொடுத்து ஏன் வெச்சிருக்கனும்?ஹாய் மதனைக்கூட ஒரு கணக்குல சேர்த்துக்கலாம். ஆனா பிரதாப் போத்தனின் அநாகரீகமான கமெண்ட்ஸ் வன்மையா கண்டிக்கத்தக்கது.//
////////////////////////////
ஆமோதிக்கிறேன்
படைப்பாளிகள் வளர என் வாழ்த்துகள்ம் வாக்குகளும்..
இன்றை பதிவும் அருமை..
பிரதாப்போத்தன் ஜட்ஜ்ங்கறதே செம காமெடி... இதுல கமென்ட் வேற கொடுக்கறாராம்... ஹி.ஹி..ஹி...
நானும்பார்த்திருக்கின்றேன். போத்தன் குட் கொம்ட் பண்ணியது மிக குறைவு என்பதுடன், வழரத்துடிப்போருக்கு ஒரு சீனியராக அவரது பதில்கள், கொமன்ட்கள் சிறப்பானதாக இல்லை என்றே கூறவேண்டும். அத்தோடு சைக்கோ சம்பந்தமான கதைகள் நன்றாக இருப்பதாக அவர் சொல்வதை கவனித்திருப்பீர்களே!
*பிரதாப்போத்தன் ஜட்ஜ்ங்கறதே செம காமெடி*
நானும் முதலில் அப்படி தான் நினைத்தேன். அவர் இயக்கிய படங்களின் படங்களின் பட்டியல் பார்த்தேன்.
நீங்களும் பாருங்களேன்.
Prathab
http://enathupayanangal.blogspot.com
நல்லா அலசி இருக்கீங்க..........
குறும்படமெடுக்க என்ன தேவை பணமா............அறிவாளித்தனமா......இல்ல பொது அறிவு இருந்தா போதுமா.....
பதில் சொல்லுங்க தலைவரே.........
//இயக்குநர் கே பாலச்சந்தர் கருத்து சொல்றப்ப நல்லாருந்தா அருமைங்கறார். நல்லாலைன்னா ரொம்ப நாசூக்கா இதப்படத்தை இன்னும் நல்லா பண்ணி இருக்கலாம்னு இதமா சொல்றார்//
இளம் படைப்பாளிகளை ஊக்குவித்தாலே அவர்களிடமிருந்து நல்ல படைப்புகள் நிச்சயம் வரும்...மேடையிலேயே திட்டுவது என்பது அநாகரிகம்தான்.
இவைகளை பார்த்ததில்லை....கவனத்தில் கொண்டுவருவதற்கு நன்றி
இந்த மாதிரியான நிகழ்ச்சிகளை பார்க்கும் கெட்ட பழக்கம் என்னிடம் இல்லை நண்பா! நான் சீரியல் மட்டும்தான் பார்ப்பேன்!! அஞ்சலி வாழ்க, இளவரசி வாழ்க, மலர் மேடம் வாழ்க!!
( ஏன் சீரியல்ல நடிக்கிற ஆம்பளைங்கள வாழ்த்த மாட்டியா? )
ஜட்ஜா வர்ற ஹாய் மதன் பேசறப்ப தான் ஒரு அறிவு ஜீவிங்கறது எல்லாருக்கும் தெரியனும்கறது மாதிரி பேசறாரோன்னு டவுட்டா இருக்கு. சாதாரணமா பேசுனா தேவல. (நிறைய கமல் படம் பார்ப்பார் போல)
விகடனின் ஹாய் மதனில் இப்பவெல்லாம் இவரு சொல்லுற பதில்கள் சில சமயத்துல வெளங்க மாட்டேங்குது!!
இப்போ இந்தியாவுல நேரம் ராத்திரி ரெண்டு மணி! நண்பா தூங்குறியா? நல்லாத்தூங்கு! இன்னிக்கு கனவுல கலா மாஸ்டர் வர வாழ்த்துக்கள்!!
விடிஞ்சா வெள்ளிக்கிழமை! நல்ல நாள்!! மங்களகரமான நாள்! இன்னிக்கு ஏதாச்சும் ஏழரை குடுக்கணுமே! ம்..... என்ன பண்ணலாம்? ஓகே இப்புடி செஞ்சிடுவோம்!
சி பி ..... நீ அதுக்கு சரிவர மாட்டே!
சேச்சே என்னோட நண்பன பத்தி நான் அப்படி நினைப்பேனா? நண்பா சத்த முன்னாடி நானும், பன்னிக்குட்டி ராமசாமியும் சாட்டிங்க்ல பேசிக்கிட்டோம்! உன்னப்பத்தி தான் மச்சி பேசினோம்!!
நண்பேண்டா!
சிபி...நடுவர்களும் கொடுத்த பாத்திரத்தை சரிவரச் செய்ய முயற்சிக்கறார்களோ !
present sir,
// என்னோட கருத்து என்னன்னா இந்த 2 பேரையுமே தூக்கிட்டு கே பாலச்சந்தர்,கிரேசி மோகன் போன்றவர்களை ஜட்ஜ் ஆக்கினால் ரொம்ப நல்லாருக்கும். //
அதெல்லாம் வேணாம்... இவங்களே நல்லா பண்றாங்க...
// பிரதாப் போத்தன் - சொல்லவே வேண்டாம். வளரும் கலைஞர்களை ஊக்குவிக்கனும், அவங்க மூஞ்சில அடிக்கற மாதிரி கமெண்ட் தரக்கூடாதுங்கற அடிப்படை நாகரீகம் கூட தெரியாம எடுத்த எடுப்புலயே உங்க படம் எனக்கு பிடிக்கலை, மோசம்னு தடாலடியா அவர் சொல்றதும் , படைப்பாளிகள் மேடைலயே கண் கலங்கறதும் பார்க்கறவங்க மனசை பாதிக்கற மாதிரி இருக்கு. //
பாலச்சந்தர் வந்தாலும் ஒரு கட்டத்துக்கு மேல பொறுமையிழந்து இதைத்தான் செய்வார்...
வேணும்னா யூகி சேதுவை வரச் சொல்லலாம்...
படைப்பாளிகள் மேடைலயே கண் கலங்கறதும் பார்க்கறவங்க மனசை பாதிக்கற மாதிரி இருக்கு.//
TRP Rating எப்புடி நைனா ஏறும்?
// பிரதாப் போத்தன் - சொல்லவே வேண்டாம். வளரும் கலைஞர்களை ஊக்குவிக்கனும், அவங்க மூஞ்சில அடிக்கற மாதிரி கமெண்ட் தரக்கூடாதுங்கற அடிப்படை நாகரீகம் கூட தெரியாம எடுத்த எடுப்புலயே உங்க படம் எனக்கு பிடிக்கலை, மோசம்னு தடாலடியா அவர் சொல்றதும் //
நல்லா இல்லன்ட்றத, நல்லா இல்லன்னுதான் சொல்லனும்.
Stricta இருந்தாதான் நல்ல படங்கள் கிடைக்கும். He is Perfect.
பிரதாப் போத்தனின் அநாகரீகமான கமெண்ட்ஸ் வன்மையா கண்டிக்கத்தக்கது...............///////
உண்மை வழிமொழிகிறேன்
Post a Comment