ஆ.ராசா கைது: சிபிஐ நடவடிக்கை
புதுடெல்லி, பிப்.2,2011
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவை சிபிஐ அதிகாரிகள் இன்று கைது செய்தனர்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக, ஆ.ராசாவிடம் 4-வது நாளாக இன்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்த முறைகேட்டில், ராசா தொடர்புடையதற்கான போதுமான ஆதாரங்களைத் திரட்டிய நிலையில், அவரை சிபிஐ கைது செய்தது.
முன்னதாக, ஆ.ராசாவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் திங்கட்கிழமை விசாரணை நடத்தினர். அவரிடம் கடந்த டிசம்பர் 24 மற்றும் 25-ம் தேதிகளில் இரண்டு தடவை சி.பி.ஐ. விசாரணை நடத்தியுள்ளது.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்கு முந்தைய சூழ்நிலைகள், பண விவகாரம் ஆகியவை குறித்து விரிவாக விசாரணை நடத்தப்பட்டது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், சில தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு சாதகமாக நடந்து கொண்டதாக கூறப்படுவது குறித்து ராசாவிடம் விசாரிக்கப்பட்டுள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கிளை நிறுவனங்களில் ஆ.ராசா குடும்பத்தினரின் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் சிபிஐ விசாரித்தனர்.
இதன் தொடர்ச்சியாக, ராசாவின் கோதரர் ஏ.கே.பெருமாளிடம் சிபிஐ நேற்று விசாரணை நடத்தினர்.
இதனிடையே, 2001-ம் முதல் 2009-ம் ஆண்டு வரை ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பான நடைமுறைகள் குறித்து ஆராய்வதற்காக தொலைத் தொடர்புத் துறையால் அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி சிவராஜ் வி பாட்டீல் தலைமையிலான ஒருநபர் குழு,மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கபில் சிபலிடம் அறிக்கையை தாக்கல் செய்தது. அதில், ஆ.ராசாவின் நிர்வாகத்தின் மீதே குறைகூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் நேரத்தில் இந்த கைது பெரிய அரசியல் திருப்பத்துக்கு அடி கோலும் என சொல்லப்படுகிறது.
இந்த தகவலை எனக்கு அனுப்பி வைத்த ஆனந்த விகடனில் பணியாற்றும் நண்பருக்கு நன்றி..
44 comments:
என்ன சொல்றிக? உண்மையாகவா?
நம்பாதவங்க என் டி டி வி பார்க்கவும்.. கலைஞர் டி வி, சன் டி வி பார்த்தா தெரியாது..ஹி ஹி
super
தினமலர் கண்டேன் இ பேப்பர் மூலம் - செய்தி உறுதியாகிறது அடுத்து என்ன நடக்கும்?
வச்சிடாண்டா ஆப்பு - டெல்லி போய் திருப்பிய நிலையில் இந்த ஆப்பு - இனி என்னாகும்
ini அப்ரூவர் ஆவார். எல்லாருக்கும் ஆப்புதான் .கலைஞர்,சோனியா உட்பட ..உப்பு தின்னவன் தண்ணியை குடிச்சே ஆகனும்
உங்க ஆனந்தவிகடன் நண்பருக்கு ஏதும் பிரச்சினை வராதா சித்தப்பா... ஹி ஹி
செஞ்சோற்று கடன் தீர்க்க
சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா.....ராசா....
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா!
வஞ்சகன்.....கலைஞரடா.....ராசா...
வஞ்சகன்.....கலைஞரடா!!!
@ வைகை
ROFL
ஹி ஹி செமையா :)
காமெடி கீமெடி பண்ணலியே...
கோவை நேரம் said...
காமெடி கீமெடி பண்ணலியே...
என்ன கொடுமை சார் இது.. ஒரு மொக்கை பதிவர் சீரியஸ் பதிவு போட்டா நம்ப மாட்டேங்கறாங்களே..?
Delete
Blogger karthikkumar said...
உங்க ஆனந்தவிகடன் நண்பருக்கு ஏதும் பிரச்சினை வராதா சித்தப்பா... ஹி ஹி
February 2, 2011 3:32 PM
இதுவரைக்கும் வர்லை.. நீங்க வாய் வெச்ச முஹூர்த்தம் ...? பார்ப்போம்
வேட்டை ஆரம்பிச்சுருச்சுரோய்
//வைகை said...
செஞ்சோற்று கடன் தீர்க்க
சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா.....ராசா....
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா!
வஞ்சகன்.....கலைஞரடா.....ராசா...
வஞ்சகன்.....கலைஞரடா!!!
அருமை அருமை
வைகை said...
செஞ்சோற்று கடன் தீர்க்க
சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா.....ராசா....
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா!
வஞ்சகன்.....கலைஞரடா.....ராசா...
வஞ்சகன்.....கலைஞரடா!!!
உங்க கவிதை டாப்.. அதுல ஒரு சின்ன திருத்தம். வஞ்சகன் அல்ல வஞ்சகர்.. ஹி ஹி மரியாதை
Blogger Speed Master said...
வேட்டை ஆரம்பிச்சுருச்சுரோய்
இனி பேப்பர்காரங்களுக்கு கொண்டாட்ட்ட்ம்தான்.. போயஸ் தோட்டத்துல ஸ்வீட்ஸ் விநியோகமாம்.
வைகை கலக்கறாரே..
ஒருவேளை இவரின் டெல்லி பயணம் பலிகடா ஆக்கதானோ?? விரைவில் தி மு க சார்பில் செய்திவரும் ராசா நீக்கப்பட்டார் என்று
பகிர்வுக்கு நன்றி ஐயா... :))
மனசாட்சி said...
ஒருவேளை இவரின் டெல்லி பயணம் பலிகடா ஆக்கதானோ?? விரைவில் தி மு க சார்பில் செய்திவரும் ராசா நீக்கப்பட்டார் என்று
அதுக்கு கனி மொழியை கன்வின்ஸ் பண்ணனும். பாவம் கலைஞர்
Blogger மாணவன் said...
பகிர்வுக்கு நன்றி ஐயா... :))
ஐயாவா? ம் ம்
உண்மையா..?!!
இதோ இப்பவே போயி NDTV பாக்குறேன்..!
வெங்கட் said...
உண்மையா..?!!
இதோ இப்பவே போயி NDTV பாக்குறேன்..!
பாருங்க.. ஜெயா டி வி லயும் போட்டாச்சு
T.V.ராதாகிருஷ்ணன் said...
Present
கருத்தை சொல்லனும்.. அட்டெண்டன்ஸ் போட்ட்டுட்டு தப்பிச்சா எப்படி சர்?
வினை விதித்தவன் வினை அருத்தே ஆக வேண்டும்...
சட்டம் தன்கடமையை செய்யட்டும்..
அட நல்ல செய்தி சொல்லி இருக்குறீங்க
ஸ்வீட் எடு கொண்டாடு
வெங்கட் said...
உண்மையா..?!!
இதோ இப்பவே போயி NDTV பாக்குறேன்..!//
பார்த்தா மட்டும் இங்கிலீஷ் விளங்கிடும் இவருக்கு..
தேர்தல் நேரம் என்பதால் கனிமொழி எல்லாம் கண்ணுக்கு தெரியாது - அஞ்சா நெஞ்சன் கோபிச்சிக்குவாறு - இப்ப தேவை மகனே தவிர மகள் அல்ல
good news
இவ்வளவு வெள்ளந்தியா இருக்கீங்களே தல! கைதானது உண்மைதான். ஆனா, இதை வைச்சு தி.மு.கவும் காங்கிரஸும் எப்படி அரசியல் ஆதாயம் தேடப்போகுதுன்னு உங்களுக்குத் தெரியாதா என்ன?
பொறுத்திருந்து பாருங்க! இது முதல்காட்சிதான்! :-)
குப்புற விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலன்னு இதையும் எப்படி சமாளிப்பாரு பாருங்க நம்ம (ராசா)தந்திரி..!!
ரொம்ப லேட் ஆனா decision .....சும்மா கண் துடிப்பு ......பாப்போம் போர்த்து இருந்து ...........இன்னும் என்ன வெல்லாம் நடக்க போகிறதோ
கலைஞர்: பாவம் தமிழ் நாட்டு மக்கள். இவ்வளவு ஏமாற்றியும் நம்மை நம்புறாங்களே. சோனியா அம்மா சரியத்தான் சொன்னாங்க இவனுங்க எல்லாம் இளிச்சவாயனுங்கனு. நான் டெல்லி போய் வந்ததும் தெரியும். ஆனாலும் கைதுன்னதும் என்னமா சிரிக்கிறானுக. ஏமாளிப்பயலுக.
இன்னொரு நாடகம் ,,,
@VAIGAI
Really SUPER...
see this link http://vijayfans-vinu.blogspot.com/2011/02/blog-post_8889.html
see this link http://vijayfans-vinu.blogspot.com/2011/02/blog-post_8889.html
தலைவரே... ராசா அரெஸ்ட் ஆனதை ராசாவே போன் பண்ணிச்சொன்ன மாதிரி ஹாட் நியூஸா இருக்கே..!!
செம போஸ்ட் போட்ருக்கீங்க....
பட்டைய கெளப்புது.....
வெடிங்க..வெடிங்க...
எல்லோரும் வெடிச்சுக்கிட்டே இருங்க..
நாமெல்லாம் நேர்மையா கஷ்டபட்டு உழைக்கிற காசை எவெவன்லாம் தின்னு ஏப்பம் உடறான் பாருங்க..
இந்த கைது ஒரு கண் துடைப்புங்கறத எத்தனை தமிழ் ஜனங்களுக்கு புரிஞ்சுக்கற அறிவு இருக்கப்போவுதுங்கற தைரியம்தானே ?
இனி கூட்டணி பேச்சுவார்த்தை 'விட்டுகுடுத்து' சுமுகமா நடக்கும் போலிருக்கே..!
சுடச்சுட செய்தி கொடித்திருக்கிரீர்கள் என்று தெரிகிறது...
நீங்க பதிவு போட்ட அப்புறம் தான் டிவியிலே போட்டாங்களாமே...
அட்ரா சக்கை !!!!!!!!அட்ரா சக்கை!!!!
From CBI Charge sheet it’s clear that,
1.There’s NO 1.7 L Crore 2G scam.
2.No revenue loss to Government. (Instead of getting the License fee fixed and recommended by TRAI from abc company, they collected the same License fee amount from xyz company). Hence there is NO revenue loss to the Govt. What Kabil Sibel said and explained is correct.
3.Raja and his aides have done a procedural misconduct. (Not Followed First Come First basis on who has applied for License as recommended by TRAI, instead they followed First Come basis on who has paid the License Fee), for that only they’ve been arrested. They’ve not under priced or reduced the Spectrum fee. Spectrum was sold by the price defined by TRAI & Telecom Policy.
4.I already mentioned in my initial comments that there might be some deviation done by Raja to favor few Companies in awarding 2G license by adjusting First Come First policy and Spectrum related issue is NOT a Scam or Revenue Loss as the Spectrum Fee and other procedures are followed as recommended by TRAI and Telecom Policy. There might be some bribe involved to do this favor for these companies, but that might not be such a huge amount of 1.7 L Crores.
சேதி ரொம்ப சூடா இருக்கு, என்னென்ன உள்குத்து இருக்கோ இந்த கைதுல?
Post a Comment